161) நாம் நல்லுணர்வை எதன் மூலம் பெற முடியும்?
நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
திருக்குர்ஆன் 16:90
திருக்குர்ஆன் 16:90
162) உறுதிப்பட்ட பாதம் எப்போது சறுகிப் போகும்?
உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும்.
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும். திருக்குர்ஆன் 16:94
163) யாரிடத்தில் இருப்பது தீர்ந்துவிடும்?
உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தோருக்கு அவர்கள் செய்து வந்த நல்லவற்றின் காரணமாக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம். திருக்குர்ஆன் 16:96
164) யாருடைய முயற்சிக்கு நன்றி செலுத்தப்டும்?
நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். திருக்குர்ஆன் 17:19
165) மிகப் பெரிய தகுதிகளையும் சிறப்புகளையும் கொண்டது எது?
"அவர்களில் சிலரை விட சிலரை எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப் பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும் கொண்டது.
திருக்குர்ஆன் 17:21
திருக்குர்ஆன் 17:21
166) ஷைத்தானின் உடன்பிறப்புகள் யார்?
விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 17:27
167) யாசகம் கேட்பவருக்கு எதையேனும் கொடுக்க முடியாத நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
(உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:28
திருக்குர்ஆன் 17:28
168) அழகிய முடிவு எது?
அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. திருக்குர்ஆன் 17:35
169) இறைவனின் வெறுப்பிற்குரியது எது?
இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.
திருக்குர்ஆன் 17:38
திருக்குர்ஆன் 17:38
170) நமக்கும் காபிர்களுக்கும் இடையே மறைக்கப்பட்ட திரையை ஏற்படுத்த என்ன வழி?
நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம். திருக்குர்ஆன் 17:45
No comments:
Post a Comment