Showing posts with label இப்றாகிம் நபியின் பிரார்த்தனை. Show all posts
Showing posts with label இப்றாகிம் நபியின் பிரார்த்தனை. Show all posts

Tuesday, October 16, 2018

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 8



பிள்ளைகளுக்காக


أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ "


தமிழில் : அவூது பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மதின் 
வமின் குல்லி ஐனின் லஅம்மதின்

அர்த்தம் : இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். 

'அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' 

எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள். 

ஸஹீஹ் புகாரி 3371

Wednesday, October 10, 2018

இப்ராகிம் நபியன் பிரார்த்தனைகள் - 7



ஞானம், நல்லோருடன் வாழ்வு, நற்பெயர் :


رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

தமிழில் : ரப்பி ஹப்லி ஹுக்மன் வ அல்ஹிக்னி பிஸ்ஸாலிஹீன் வஜ்அல்லீ லிஸான ஸித்கின் ஃபில் ஆஹிரீன்

என் இறைவா! எனக்கு ஞானதை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
திருக்குர்ஆன்  26:83,84

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 6



இன்பமான சொர்க்கத்தை வேண்டல் :


சொர்க்கம் என்பது மிக முக்கியமானது. சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதைத்தான் ஒரே இலடசியமாக கொண்டு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சொர்க்கத்தை அல்லாஹ்விடத்தில் நாம் கேட்க வேண்டும். பல வகையான சொர்க்கம் உள்ளது. இந்த துஆவில் நயீம் என்ற இன்பம் நிறைந்த சொர்க்கத்தை இப்ராகிம் நபியவரகள் கேட்டிருக்கிறார்கள்.

رَبِّ اجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

தமிழில் : ரப்பிஜ் அல்னி மின் வரஸதி 
.ஜன்னதின் னயீம்

இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!
திருக்குர்ஆன்  26:85

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 5



மறுமை நாளில் இழிவிலிருந்து பாதுகாப்பு  :


மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில், அனைத்து மனிதர்களின் முன்னிலையிலும் நாம் நிற்க வேண்டும். அந்த நேரத்தில் அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தினால் அது மிகப் பெரும் இழிவாக  அமைந்துவிடும். அப்படிப்பட்ட மறுமை நாளின் இழிவிலிருந்து நாம் பாதுகாப்பு கோர வேண்டும்.

رَبَّنَا لَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

தமிழில் : ரப்பனா லா து(க்)ஹ்ஸினி 
.யவ்ம யுப்அஸுன்

(மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!
திருக்குர்ஆன்  26:87

Tuesday, October 9, 2018

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 4



மறுமை நாளின் மன்னிப்பு :


இவ்வுலகில் நாம் செய்த அனைத்து செயல்களும் ஒன்றுவிடாமல் இறைவனுடைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறிது முதல் பெரிது வரையிலான அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் செய்த செயல்களுக்காக இறைவன் நம்மை பிடித்தால் நம்முடைய நிலைமை மோசம்தான். 

ஆகவே மறுமை நாளில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று துஆ கேட்பது அவசிமாகிறது.

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

தமிழில் :ரப்பன ஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன 
யவ்ம யகூமுல் ஹிஸாப்

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! திருக்குர்ஆன்  14:41

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 3



குஃப்ரிலிருந்து பாதுகாப்பு :


இறைமறுப்பின் பக்கம் செல்லாதவாறு நம்மை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மை மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரையையும் இறை மறுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டும். சிலை வணக்கம் என்பது நம்மை நிரந்த நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடியது.

رَبِّ جْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ

தமிழில் :  ரப்பிஜ்னுப்னி வ பனிய்ய 
.அன்னஃபுதுல் அஸ்னாம்

"இறைவா! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!''  திருக்குர்ஆன்  14:35

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 2




உண்மையான முஸ்லிமாக வாழ :


இறுதி வரையிலும் உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். அதற்கு இறைவனுடைய நாட்டம் மிகவும் அவசியம். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடந்தால்தான் சுவர்க்கம் செல்ல முடியும். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடப்பதற்கு நாம் மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரைக்கும் சேர்த்தாக இந்த துஆ அமைந்திருக்கிறது.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

தமிழில் : ரப்பனா வஜ்அல்னா 
முஸ்லிமைனி லக வமின் துர்ரியதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனா ஸிகனா வதுப் அலைனா இன்னக 
.அன்த்த தவ்வாபுர் ரஹீம்

"எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. திருக்குர்ஆன்  2:128

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

தமிழில் : ரப்பிஜ் அல்னி முகீமஸ் ஸலாதி வமின் துர்ரியதி. ரப்பனா வதகப்பல் 
.துஆ

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
திருக்குர்ஆன்  14:40

நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை இறுதி வரையிலும் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த துஆ அவசியமானது. அது மட்டுமில்லாமல் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்காகவும் இந்த பிரார்த்தனை அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

இப்ராகிம் நபியின் பிரார்த்னைகள் - 1



வணக்க வழிபாடுகள் ஏற்றுக் காெள்ளப்பட :

நம்முடைய வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட இந்த துஆவை நாம் கேட்கலாம். இந்த துஆ இப்ராஹிம் நபியவர்களும் இஸ்மாயில் நபியவர்களும் கஃபத்துல்லாஹ்வை புணர் நிர்மாணம் செய்ததற்கு பிறகு கேட்ட துஆ. 

நம்முடைய வணக்கவழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது. நமமுடைய வணக்க வழிபாடுகளில் எவ்வளவு பிழைகளை செய்திருக்கிறோம் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை முடித்ததற்குப் பிறகு இந்த துஆவை கேட்பது சிறந்ததாக இருக்கும்.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

தமிழில் : ரப்பனா தகப்பல் மின்னா
. இன்னக அன்தஸ் ஸமீவுல் அலீம்

"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'.
திருக்குர்ஆன்  2:127

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...