Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Sunday, May 3, 2020
Thursday, May 9, 2019
மனித குல வழிகாட்டி திருறைக் குர்ஆன்
மனிதர்கள் சரியான வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக மனிதர்களால் பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்காது. உதாரணத்திற்கு பணம் சம்பாதிக்க எளிய வழிகள் என்று புத்தகம் எழுதியிருப்பார்கள். அந்த புத்தகம் அனைத்து வகையான மனிதர்களுக்கும் பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டுமா? நிச்சயமாக காட்டாது. அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள் யாசகம் கேட்கக்கூடிய மக்களுக்கு பொருந்தாததாக இருக்கும். பரம ஏழைகளுக்கு பொருந்தாததாக இருக்கும். குறிப்பிட்ட அளவு பொருளாதாரத்தை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக அந்த புத்தகம் அமைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல், புத்தகத்தில் சொல்லப்பட்ட அடிப்படையில் செயல்பட்ட அத்தனை பேரும் வெற்றி பெறுவார்களா என்றால் அதுவும் கேள்வி குறிதான். சில குறிப்பிட்ட மக்கள் தோல்வியை தழுவியிருப்பார்கள். இப்படி ஒவ்வோரு புத்தகங்களையும் ஆய்வு செய்தால் அது சிலவகையான மக்களுக்கு மட்டும் பொருந்தி போகக்கூடியதாகவும், பலதரப்பட்ட மக்களுக்கு பொருந்தி போகாததாகவும் இருக்கும்.
ஆனால் திருமறைக்குர்ஆன் என்பது அப்படிப்பட்டதல்ல. இது அனைத்து வகையான மக்களுக்கும் பொருந்திப் போகக்கூடிய ஒரு வேதம். ஒரு மனிதன் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருநதாலும், வெள்ளையாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் நெட்டையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அத்தனை வகையான மக்களுக்கும் இந்த திருமறை பொருந்திப் போகும்.
உதாரணத்திற்கு நோன்புடைய சட்டங்களை எடுத்துப் பார்ப்போம்.
திருமறைக்குர்ஆன் ஒருவருடத்திற்கு ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்குமாறு நமக்கு கட்டளையிடுகிறது. அதாவது ஒருமாதம் தொடர்ச்சியாக ஃபஜ்ர் பாங்கிலிருந்து மஃரிப் பாங்கு வரை உண்ணவும் பருகவும் கூடாது என்று கட்டளையிடுகிறது. அனைத்து மக்களாலும் உண்ணாமலும் பருகாமலும் இந்த நோன்பை நோற்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நோன்பு நோற்க முடியாத சில மக்களும் இருப்பார்கள். சிலர் பயணத்தில் இருப்பார்கள் அல்லது நோயாளியாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு திருமறை கூறும் கட்டளை வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதுதான். (பார்க்க ஆதாரம் : அல்குர்ஆன் 2:184)
திருமறைக்குர்ஆன் ஒருவருடத்திற்கு ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்குமாறு நமக்கு கட்டளையிடுகிறது. அதாவது ஒருமாதம் தொடர்ச்சியாக ஃபஜ்ர் பாங்கிலிருந்து மஃரிப் பாங்கு வரை உண்ணவும் பருகவும் கூடாது என்று கட்டளையிடுகிறது. அனைத்து மக்களாலும் உண்ணாமலும் பருகாமலும் இந்த நோன்பை நோற்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நோன்பு நோற்க முடியாத சில மக்களும் இருப்பார்கள். சிலர் பயணத்தில் இருப்பார்கள் அல்லது நோயாளியாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு திருமறை கூறும் கட்டளை வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதுதான். (பார்க்க ஆதாரம் : அல்குர்ஆன் 2:184)
இப்படி திருமறையில் சொல்லப்பட்ட எந்த கட்டளையாக இருந்தாலும் அறிவுரையாக இருந்தாலும் அது அனைத்து வகையான மக்களுக்கும் பொருந்துவதாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், இந்த திருமறையை அனைத்து வகையான நிலையிலும் நம்மால் படிக்க முடியும். நாம் துக்கத்தில் இருக்கும் போது படித்தால் நம்முடைய துக்கத்தை போக்கக்கூடிய சில வழிமுறைகளை இதில் காணலாம். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது படித்தால் நம்முடைய சந்தோஷம் எல்லை மீறாமல் சரியான முறையில் அமைவதற்குண்டான வழி வகைகள் இருக்கும். ஆனால் மனிதர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்கள் , துக்கத்தில் இருப்பவர்கள் மட்டும் படிக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இன்னும் சில புத்தகங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் போது மட்டும் படிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அனைத்து வகையான நிலையிலும் படிப்பதற்கு ஏற்ற ஒரு புத்தகமாக இந்த திருமறைக்குர்ஆன் மட்டுமே திகழ்கிறது.
அதே போல் இந்த திருமறைக்குர்ஆன் என்பது அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்கிச் சொல்லக்கூடியதாகவும் அமைந்திருக்கும். உதாரணமாக ஒழுக்கக்கேடான விஷயங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்ற கட்டளையை எடுததுக் கொள்வோம். திருக்குறள் போன்ற நூல்கள் ஒழுக்கமாக நடக்க வேண்டும். ஒழுக்கமாக நடந்தால் என்ன பலன் என்பன போன்றவற்றைத்தான் கூறும்.
உதாரணமாக ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரிலும் ஓம்பப் படும்.
உயிரிலும் ஓம்பப் படும்.
ஆனால் திருமறைக்குர்ஆன் ஒழுக்கமாக இருங்கள் என்ற கட்டளையை இடும். ஒழுக்கமாக நடந்தால் என்ன சிறப்பு என்பதை சொல்லும். ஒழுக்கமாக நடக்காவிட்டால் கிடைக்கும் தண்டனையை சொல்லும் அதேபோல் நாம் என்ன செய்தால் நம்மிடத்தில் ஒழுக்கம் வரும். என்ன செய்தால் ஒழுக்கம் இல்லாமல் ஆகும் என்பதையும் சேர்த்து சொல்லும். அதுமடடுமில்லாமல் எதுவெல்லாம் வெட்கக்கேடான செயல்கள் என்பதையும் கூறும். இப்படி எந்த விஷயத்தை திருமறை பேசினாலும் அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறும். இது திருமறையை தவிர வேறு எந்த நூல்களிலும் காண முடியாது.
உதாரணத்திற்கு ஒழுக்கத்துக்கான ஆதாரம் :
ஒழுக்கத்தை தரும் செயல்கள் :
1) தொழுகை - அல்குர்ஆன் 29:45
2) பார்வையை தாழ்த்துதல் - அல்குர்ஆன் 24:30
3) சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்தல் - அல்குர்ஆன் 24:31
4) பாவமன்னிப்பு கோரல் - அல்குர்ஆன் 3:135
2) பார்வையை தாழ்த்துதல் - அல்குர்ஆன் 24:30
3) சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்தல் - அல்குர்ஆன் 24:31
4) பாவமன்னிப்பு கோரல் - அல்குர்ஆன் 3:135
ஒழுக்கத்தை இல்லாமலாக்கும் செயல் :
1) விபச்சாரத்தின் அருகில் நெருங்குதல் - அல்குர்ஆன் 17:32
2) பெண்கள் தம் அலங்காரத்தை வெளிப்படுத்துதல் - அல்குர்ஆன் 24:31
3) வறுமையை கண்டு அஞ்சுதல் - அல்குர்ஆன் 2:268
2) பெண்கள் தம் அலங்காரத்தை வெளிப்படுத்துதல் - அல்குர்ஆன் 24:31
3) வறுமையை கண்டு அஞ்சுதல் - அல்குர்ஆன் 2:268
ஒழுக்கங்கெட்ட செயல் :
1) விபச்சாரம் - அல்குர்ஆன் 17:32
2) ஓரினச் சேர்க்கை - அல்குர்ஆன் 27:55-56
3) தந்தை மணமுடித்த பெண்ணை மணப்பது - அல்குர்ஆன் 4:22
2) ஓரினச் சேர்க்கை - அல்குர்ஆன் 27:55-56
3) தந்தை மணமுடித்த பெண்ணை மணப்பது - அல்குர்ஆன் 4:22
இன்னும் இதுபோன்ற ஏராளமான சான்றுகளை திருமறையில் நம்மால் காண முடியும்.
மனிதர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் சில குறிப்பிட்ட தலைப்புகளை கொண்டதாக இருக்கும். எந்த ஒரு புத்தகமும் மனிதனுடைய வாழ்க்கை முழுவதற்கும் ஏற்ற அனைத்து போதனைகளையும் சொல்வதாக இல்லை. திருமறைக்குர்ஆன் மட்டும்தான் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தைப் பற்றியும் பேசுகிறது.
திருமறைக் குர்ஆன் இறைவனைப்பற்றி பேசுகிறது இறைவணக்கத்தைப் பற்றி பேசுகிறது இம்மையைப் பற்றி பேசுகிறது மறுமையைப் பற்றி பேசுகிறது அரசியலைப் பேசுகிறது ஆன்மிகத்தைப் பேசுகிறது அறிவை பேசுகிறது. அறிவியலைப் பேசுகிறது புவியியலைப் பற்றி பேசுகிறது வரலாற்றைப் பற்றி பேசுகிறது மண்ணைப் பற்றி பேசுகிறது விண்ணைப்பற்றி பேசுகிறது. இல்லறத்தைப் பற்றி பேசுகிறது சொத்து பத்துகளைப் பேசுகிறது சொந்த பந்தங்களைப் பேசுகிறது. இரவைப் பேசுகிறது பகலைப் பேசுகிறது பறவைகளைப்பற்றி பேசுகிறது விலங்கினங்களைப்பற்றி பேசுகிறது. நிலம் நீர் காற்று ஆகாயம் தீ என ஐம்பலன்களைப் பற்றியும் பேசுகிறது. ஏழைகளைப் பேசுகிறது பணக்காரர்களைப் பேசுகிறது. அண்டை வீட்டாரை பேசுகிறது. நாடோடிகளை பேசுகிறது. வழிப்போக்கர்களைப் பேசுகிறது. நல்லவர்களைப் பேசுகிறது தீயவர்களைப் பேசுகிறது. நற்குணங்களைப் பேசுகிறது தீய குணங்களைப் பேசுகிறது நன்மையைப் பேசுகிறது தீமையைப் பேசுகிறது. விதியை பேசுகிறது மதியைப் பேசுகிறது நிம்மதியைப் பேசுகிறது. கனவுகளை பேசுகிறது உணவுகளை பேசுகிறது. உணர்வுகளை பேசுகிறது. உண்மைகளைப் பேசுகிறது பொய்களைப் பேசுகிறது. ஆணைப் பற்றி பேசுகிறது பெண்ணைப் பற்றி பேசுகிறது. ஒரு மனிதனின் சிறுபருவம் இளமைப்பருவம் முதுமைப் பருவம் என அனைத்து பருவத்தைப் பற்றியும் பேசுகிறது. ஒரு ஆண் மகனாக சகோதரனாக நண்பனாக தந்தையாக கணவனாக மாமனாராக மருமகனாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் ஒரு பெண் மகளாக சகோதரியாக தோழியாக மனைவியாக தாயாக மாமியாராக மருமகளாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்கிச் சொல்கிறது.
திருமறைக்குர்ஆனில் பேசப்படாத எந்த விஷயங்களும் இல்லை எனுமளவுக்கு அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறது.
ஒருமனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை
காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து மறுநாள் காலை தூங்கி எழுகின்ற வரை அவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக தெளிவாக விளக்கி திருமறை நமக்கு சொல்லித்தருகிறது.
காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து மறுநாள் காலை தூங்கி எழுகின்ற வரை அவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக தெளிவாக விளக்கி திருமறை நமக்கு சொல்லித்தருகிறது.
இதுமட்டுமில்லாமல், இன்னோரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக மனித குலத்தைப் படைத்த இறைவன் தேர்ந்தெடுத்த புனிதர் தான் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தூய்மையான வாழ்க்கையைப் பற்றி முஸ்லிமல்லாத மக்களும் பெருமைப்பட பேசியிருக்கிறார்கள். "தி 100" என்ற புத்தகத்தில் மைக்கேல் ஹெச் ஹார்ட் என்பவர் உலகத்தின் மிகச் சிறந்தவர்கள் பட்டியலில் நபிகள் நாயகத்திற்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார். அதற்கு இவர் கூறும் காரணங்களில் ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான் அரசியலிலும் ஆன்மிகத்திலும் வெற்றிப் பெற்ற மனிதர் எனக்குறிப்பிடுகிறார்.
உலக மக்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு தகுதியானவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் அல்லாத மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை புனிதமானது. தூய்மையானது. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நபி (ஸல்)அவர்களிடத்தில் சிறந்த முன்மாதிரி இருக்கிறது. அரசியல் ஆன்மிகம் இல்லறம் மூன்றிலும் வெற்றி கொடியை நாட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள்.
திருமறைக்குர்ஆனும் நபிகள் நாயகத்தைப்பற்றி கூறும் போது
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (திருக்குர்ஆன் 68:4) என்று பெருமைப்பட சொல்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறந்த குணத்திற்கும் அரசியல் ஆன்மிகம் மற்றும் இல்லற வாழ்க்கை
வெற்றி பெற்றதற்கும் என்ன காரணம்? அவர்களால் இதை எவ்வாறு செய்ய முடிந்தது?
வெற்றி பெற்றதற்கும் என்ன காரணம்? அவர்களால் இதை எவ்வாறு செய்ய முடிந்தது?
புகாரியில் வரும் செய்தியை பாருங்கள் :
நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி தாபிஈன்களில் ஒருவர் கேட்கும் போது ஆயிஷா ரலியவர்கள், நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று பதில் அளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி தாபிஈன்களில் ஒருவர் கேட்கும் போது ஆயிஷா ரலியவர்கள், நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று பதில் அளித்தார்கள்.
( பார்க்க முஸ்லிம் 1357)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக அமைந்ததற்கு காரணம் அவர்கள் திருமறை அடிப்படையில் வாழ்ந்ததுதான்
Wednesday, October 10, 2018
Sunday, September 23, 2018
திருமறைக்குர்ஆனின் வசனங்கள் எப்படிப்பட்டது?
அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மிகப்பெரும் அற்புதமாக திருமறைக் குர்ஆனை தந்திருக்கிறான். அந்த திருமறையின் வசனங்கள் எந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள். அப்படிப்பட்ட திருமறையின் வசனங்களைப் பற்றிய சிறிய தகவல்களை இந்த கட்டுரையின் வாயிலாக அறிவோம்.
வசனங்கள் எப்படிப்பட்டது
1) தெளிவானது
இந்த திருமறையின் வசனங்களை அல்லாஹ் மிகத் தெளிவானதாக ஆக்கியிருக்கினான்.
وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ
தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை
.மறுக்க மாட்டார்கள்
திருக்குர்ஆன் 2:99
குற்றம் புரிபவர்களுக்கு இந்த திருமறை குழப்பத்தைத்தான் தரும். திருந்த நினைப்பவர்களுக்கு, திருந்தி வாழ்பவர்களுக்கு இந்த திருமறை தெளிவானதாக விளங்கும். நேர்வழியும் வழிகேடும் தெளிவாகத் தெரியும்.
அதேபோல் இந்த திருமறைக்குர்ஆன் அரபி மாெழியை தாய்மாெழியாகக் கொண்ட நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்டதால் அரபி மாெழியில் இந்த திருமறையை அல்லாஹ் அருளினான். அப்பாேதுதான் இந்த தெளிவான வசனங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
அலிஃப், லாம் ரா. இது தெளிவான வேதத்தின் வசனங்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம்
.அருளினோம்
திருக்குர்ஆன் 12:2
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَّقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ ۖ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَٰئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ
இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?'' என்று கூறியிருப்பார்கள். "இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நோய் நிவாரணமுமாகும்'' என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் அடைப்பு உள்ளது. இது அவர்களுக்குக் குருட்டுத் தனமாகவும் தெரிகிறது. அவர்கள் தொலைவான இடத்திலிருந்து
.அழைக்கப்படுகின்றனர்
திருக்குர்ஆன் 41:44
2) நன்மை தீமை பிரித்து காட்டும்
இந்த திருமறை நன்மையையும் தீமையையும் தெளிவாக பிரித்துக்காட்டும்.
مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ ۗ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ
முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்
திருக்குர்ஆன் 3:4
3) ஞானமிக்கது
இந்த திருமறையை அறிவுப்பூர்வமாகவும் இறைவன் அமைத்திருக்கிறான். சாதாரண மனிதர்கள் முதல் அறிஞர்கள் வரை படித்த அனைவரையும் கவரக்கூடியதாக அமைந்திருக்கிறது. திருமறை குர்ஆன் முழுக்க ஞானத்தால் நிரம்பியிருக்கிறது.
ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ
(முஹம்மதே!) நாம் உமக்குக் கூறும் இச்செய்தியானது (நமது) வசனங்களும்
.ஞானமிக்க அறிவுரையுமாகும்
திருக்குர்ஆன் 3:58
الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ
இது ஞானம்மிக்க வேதத்தின்
.வசனங்கள்
திருக்குர்ஆன் 10:1
4) உண்மையை உள்ளடக்கியது
இந்த திருமறையை தெளிவானதாகும் ஞானமிக்கதாகவும் மட்டுமில்லாமல் உண்மையைக் கொண்டதாகவும் அமைத்திருக்கிறான். ஒரு சிறிய பொய் கூட இந்த திருமறையில் அமைக்கப்படவில்லை.
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
இவை உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். அதை (முஹம்மதே!) உமக்குக் கூறுகிறோம். நீர் தூதர்களில் ஒருவர்
திருக்குர்ஆன் 2:252, 3:108
Friday, September 14, 2018
திருமறையால் உயர்வோம்
திருமறையால் உயர்வோம்...
அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்களே
♦அல்லாஹ் தன்னுடைய படைப்பாற்றல் மூலம் ஏராளமான படைப்பினங்களை படைத்திருக்கிறான். அவற்றில் உயிருள்ள படைப்பினங்களும் உயிரற்ற பல படைப்பினங்களும் அடங்கும். அல்லாஹ் படைத்த எண்ணற்ற படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பினமாக மனித சமுதாயம் விளங்குகிறது. இதை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
ஆதமுடைய மக்களை மேன்மைப்படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.
திருக்குர்ஆன் 17:70
அலலாஹ் இந்த வசனத்தில் அதிகமான படைப்புகளை விட மனிதர்களை சிறப்பித்திருப்பதாக சொல்லிக்காட்டுகிறான்.
அதே போல் மனிதர்களிலும் பல்வேறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட மனித சமுதாயத்தில் சிறந்தவர்கள் யார்? என்பதை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
திருக்குர்ஆன் 98:7
யார் நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கிறார்களோ அப்படிப்பட்ட முஸ்லிம்கள் தான் மனித சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதே போல் முஸ்லிமாக வாழக்கூடியவர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளில் கூறும் போது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 5028
முஸ்லிமாக வாழக்கூடிய நாம் நம்முடைய தகுதிகளையும் அந்தஸ்துகளையும் உயர்த்தி சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம் திருமறையை அனுதினமும் படிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
[சிந்தனைக்குறிய விஷயம் : ஒட்டுமொத்த படைப்பினங்களில் சிறந்தவர்களான மனிதப்படைப்பில் நாம் இருக்கிறோம்.
மனித இனங்களில் சிறந்தவர்களான முஸ்லிம் என்ற தரத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிறந்தவர்களாக விளங்கக்கூடிய திருமறைக் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக நாம் இருக்கிறோமா?]
♦ இரண்டாவதாக கவனிக்க வேண்டிய விஷயம்
அல்லாஹ் இந்த உலகத்தை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12. உலகம் படைக்கப்பட்டது முதல் மற்ற மாதங்களைப் போல் ரமளான் என்ற ஒரு மாதமும் சாதாரண மாதமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் ரமளான் அல்லாஹ்வால் எப்போது சிறப்பிக்கப்படுகிறதென்றால், அது திருமறை அருளப்பட்டதற்கு பிறகுதான். சாதாரண மாதமாக இருந்தது அல்லாஹ்வின் அருள் பொங்கும் மாதமாக மாறியது. திருமறை இறக்கப்பட்ட காரணத்தினால் தான். சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல் மூடப்பட்டு ஷைத்தான் விளங்கிடப்பட்டது திருக்குர்ஆன் அருளப்பட்டதற்குப் பிறகுதான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. திருக்குர்ஆன் 2:185
அதே போல் திருமறைக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் வரையிலும் ரமளானின் அனைத்து நாட்களும் ஒரே மாதிரியான நாட்களாகத்தான் இருந்தது. திருமறைக் குர்ஆன் ரமளானின் ஒரு இரவில் அருளப்பட்ட காரணத்தினால் அந்த இரவே மகத்துவமிக்க இரவாக, கண்ணியமிக்க இரவாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆயிரம் மாதங்களை விடச் சிறநததாக அங்கீகரிக்கப்படுவதற்கு காரணம் திருமறை அருளப்பட்டதுதான்.
இதை அல்லாஹ் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
திருக்குர்ஆன் 97:1,3
[சிந்தனைக்கு : திருமறை அருளப்பட்டதால் ஒருமாதம் சிறப்பிற்குரிய மாதமாக மாற்றப்பட்டதென்றால், ஒரு இரவு கண்ணியமிக்க இரவாக மாற்றப்பட்டதென்றால் நாம் நம்முடைய உள்ளத்தில் திருமறையை இறக்கினால் நம்முடைய வாழ்வும் சிறப்பிற்குரிய வாழ்வாக, கண்ணியமிக்க வாழ்வாக மாற்றப்படாதா?]
♦ மூன்றாவதாக கவனிக்க வேண்டியது :
திருமறையை இறைவன் சாதாரண ஒரு மனிதரின் மீது அருளாமல் மனித குலத்தில் மிகச் சிறந்தவரான முத்தக்கீனுள் இமாமான (இறையச்சவாதிகளுக்கெல்லாம் தலைவரான) நபிகள் நாயகத்தின் மீது இறக்கியிருக்கிறிான்.
அதே போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் இந்த குர்ஆனை கொண்டு வந்து கொடுத்தது சாதாரண வானவர் அல்ல. வானவர்களின் தலைவரான ரூஹுல் குதூஸ் (பரிசுத்த ஆவி) என்ற அழைக்கப்டும் ஜிப்ரீல் (அலை) அவரகள் தான் கொண்டு வந்தார்கள்.
[சிந்தனைக்கு : திருமறைக்குர்ஆன் மிகச்சிறந்த மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கிது. திருமறையை கொண்டு வந்தவர் வானவர்களில் மிகசசிறந்தவர். அப்படி யென்றால் நாம் திருமறையை படித்தால் நாமும் சிறந்தவர்களாக மாட்டோமா?]
♦ அடிமையையும் அரசனாக்கும் திருக்குர்ஆன்
முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 692
அடிமையாக இருந்த ஸாலிம் இளம் வயதுக்காரராகவும் இருந்தார். அவரைவிட சிறந்த, வயதில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க அவர்கள் அத்தனை பேருக்கும் ஸாலிம் (ரலி) அவர்களால் தலைமையேற்று தொழவைக்க முடிந்ததென்றால் அது திருக்குர்ஆன் மூலம் கிடைத்த அந்தஸ்துதான்.
அதேபோல் இன்னொரு செய்தி,
ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். (இக்காலகட்டத்தில்) உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (நாஃபிஉ (ரலி) அவர்களிடம்) "நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "இப்னு அப்ஸா யார்?" எனக் கேட்டார்கள். நாஃபிஉ (ரலி) அவர்கள், "எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்" என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "அவர் (இப்னு அப்ஸா) இறை வேதத்தை அறிநதவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர்" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் "அறிந்துகொள்க: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; வேறு சிலரைத் தாழ்த்துகிறான்" என்று உங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)" என்று சொன்னார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1487
மக்கா நகரம் மிகவும் முக்கியமான நகரம். முக்கியமான மனிதர்கள் வசிக்கும் நகரம். அப்படிப்பட்ட மக்கா விற்கு அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆட்சியாளராக இருக்கிறார் என்றால் அது திருமறையின் மூலமாகத்தான். இந்த திருமறையைக் கொண்டே அல்லாஹ் சில மக்களை உயர்த்துவான் என்பது இதிலிருந்து புரிகிறது.
அதேபோல் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்த எத்தனையோ பேர் திருமறையை ஏற்காததால். படிக்காததால் தாழ்ந்தவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதையும் நம்மால் கடந்த கால வரலாறுகளில் பார்க்க முடிகிறது.
நம்முடைய உயர்வும் தாழ்வும் திருமறையை நாம் கையாள்வதைப் பொறுத்தே அமையும். நம்முடைய செல்வத்தைப் பொறுத்து அல்ல.
♦ கப்ரில் முன்னுரிமை
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை.
ஸஹீஹ் புகாரி : 1343
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரில் முதன் முதலாக குர்ஆனை கற்றறிந்தவரை வைக்கிறார்கள். இதன் மூலம் மறுமையில் முதலாவதாக சொர்க்கம் செல்லும் அந்தஸ்தை குர்ஆனை கற்றவர் பெறுவார் என்பது விளங்குகிறது.
இவ்வுலகில் மட்டுமில்லாமல் மறுமையிலும் குர்ஆனை கற்றவரின் சிறப்புகள் உயரும்.
Subscribe to:
Posts (Atom)
சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்
சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... முன்னுரை இப்பூவுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான அடையாளம் இருக்கும். ஜப்பான்காரனு...
-
ஏக இறைவனின் திருப்பெயரால்... வரலாற்று ஆய்வாளர்கள், ஒரு மனிதனுடைய வரலாறுகளை எழுதும்போது அதை அவனுடைய பிறப்பிலிருந்து ஆரம்பிப்பா...
-
இஸ்லாமும் குளிர்காலமும் அல்லாஹ் இந்த உலகத்தை அற்புதமான முறையில் படைத்திருக்கிறான். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமான முறையில் வடிவமைத்திருக்கி...


