உண்மையான முஸ்லிமாக வாழ :
இறுதி வரையிலும் உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். அதற்கு இறைவனுடைய நாட்டம் மிகவும் அவசியம். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடந்தால்தான் சுவர்க்கம் செல்ல முடியும். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடப்பதற்கு நாம் மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரைக்கும் சேர்த்தாக இந்த துஆ அமைந்திருக்கிறது.
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
தமிழில் : ரப்பனா வஜ்அல்னா
முஸ்லிமைனி லக வமின் துர்ரியதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனா ஸிகனா வதுப் அலைனா இன்னக
.அன்த்த தவ்வாபுர் ரஹீம்
"எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. திருக்குர்ஆன் 2:128
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
தமிழில் : ரப்பிஜ் அல்னி முகீமஸ் ஸலாதி வமின் துர்ரியதி. ரப்பனா வதகப்பல்
.துஆ
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
திருக்குர்ஆன் 14:40
திருக்குர்ஆன் 14:40
நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை இறுதி வரையிலும் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த துஆ அவசியமானது. அது மட்டுமில்லாமல் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்காகவும் இந்த பிரார்த்தனை அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.
No comments:
Post a Comment