பெயர்
இவரது பெயர் அப்து அம்ரு (அம்ரின் அடிமை) என்பதாகும். இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருடைய பெயரை மாற்றி அப்துர் ரஹ்மான் (ரஹ்மானின் அடிமை) என்று வைத்தார்கள். அப்துர் ரஹ்மான் என்ற பெயரில் நிறைய ஸஹாபாக்கள் இருப்பதால் இவர;கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்றே பிரபலமானார்கள்.
பெற்றோர்
தந்தை - அவ்ஃப் இப்னு அப்து அவ்ஃப் இப்னு அப்து இப்னு அல்ஹாரிஸ் இப்னு ஸுஹ்ரி இப்னு கிலாப்.
இவரது தாயார் ஸிஃபா பின்து அவ்ஃப் இப்னு அப்து இப்னு அல்ஹாரிஸ் இப்னு ஸுஹ்ரி இப்னு கிலாப்.
குலமும் கோத்திரமும்:
இவர்கள் குறைஷி குலத்தில் ஸுஹ்ரி கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
துணைவியர் தொடர;பான செய்திகள் :
- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியின் துணைவியர்களில் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் ரலியும் ஒருவர்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு வருட காலமாக உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்துவந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது மாதவிடாயன்று; இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே நீ (மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்!'' என்று கூறினார்கள். ஆகவே உம்மு ஹபீபா ரலியவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர;களின் மைத்துனியான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் ரலியை அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி திருமணம் முடித்திருந்ததால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘சகோதரன்’ (சகல) என்ற உறவு முறையை பெருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் ரலியவர;கள் நபிகள் நாயகத்தின் துணைவியரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியின் சகோதரியாவார்கள்.
- உம்மு ஹகீம் பின்த் காரிழ்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இடம் "நீங்கள் விரும்பிய ஒருவருக்கு என்னை மணமுடித்துவையுங்கள்' என்று கோரிய) உம்மு ஹகீம் பின்த் காரிழ் என்ற பெண்மணியிடம் "(மணமகனைத் தேர்ந்தேடுக்கும்) உன்னுடைய அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அப்பெண், "ஆம் (ஒப்படைக்கிறேன்)''. என்று சொன்னார். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "நானே உன்னை மணந்துகொள்கிறேன்'' என்றார்கள். . (புகாரி)
முந்திய நபித்தோழர்
ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரர்களுள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களும் ஒருவர். அபூபக்கர் ரலியவர்களின் பிரச்சாரத்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆரம்பகட்டத்தில், மக்காவில் இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ஆகவே நபிகள் நாயகம் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை இரகசியமாகவே செய்தார்கள். அர்கம் என்ற நபித்தோழரின் வீட்டில்தான் ஆரம்பக்கட்ட போதனைகள் நடைபெற்றன. இஸ்லாத்தின் முதல் பிரச்சாரக் கேந்திரமாக அர்கம் ரலியின் வீடுகள்தான் அமைந்திருந்தது.
ஆனால் அர;கம் ரலியின் வீடு இஸ்லாமிய பிரச்சார கேந்திரமாக அமைவதற்கு முன்னாலையே அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார;கள். ஆரம்ப கட்டத்தில் இஸ்லாத்தை எற்றுக் கொண்டவர;களில் ஒருவராக திகழ்ந்தார;கள். நன்மைகளில் முந்திக் கொண்டவராக மாறிப் போனார;கள்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் முந்திக் கொண்ட ஸஹாபாக்கள் பிந்திய ஸஹாபாக்களை விடச் சிறந்தவர;களாவார;கள். இதை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அழகாக சொல்லிக் காட்டுகிறான்
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர;ஆன் 9:100)
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் முந்திக் கொண்டதால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று மகத்தான சொர;க்கத்திற்குள் நுழைகின்ற அந்தஸ்தையும் பெற்றார;கள்.
இதே போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர;களும் முந்திய ஸஹாபாக்களை பெருமைப்படுத்தி சொல்லிக்காட்டுகிறார;கள்.
(நபித்தோழர்களான) காஹ்ல்லித் பின் அல் வலீத் (ரஹ்ல்லி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்ல்லிலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காஹ்ல்லிலிலித் (ரஹ்ல்லிலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரஹ்ல்லிலி) அவர்களை) ஏசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது'' என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம்4968
இன்று காலித் பின் வலீத் ரலி அவர;களை தெரியாத எந்த முஸ்லிமும் கிடையாதுஇ என்று சொல்லுமளவுக்கு பிரபலமாகியிருக்கிறார;கள். அப்படிப்பட்ட காலித் பின் வலீத் ரலி அவர;களுக்கும் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர;களுக்கும் இடையில் சிறிது பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது காலித் பின் வலீத் ரலியவர;கள் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;களை திட்டிவிடுகிறார;கள். இதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல் அவர;கள் காலித் பின் வலீத் ரலியை கண்டிக்கிறார;கள்.
ஏனென்றால் காலித் பின் வலீத் ரலியவர;கள் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர;கள். ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு தான் இஸலாத்தில் இணைந்தார;கள். ஆனால் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;களோ ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர;கள்.
அதனால் தான் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர;கள் இரு கையளவு செய்த தர;மத்தை காலித் பின் வலீத் ரலி உஹது மலையளவு தங்கத்தை தர;மமாக கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் கூறினார;கள். ஆனால் காலித் பின் வலீத் ரலியின் வரலாற்றை தெரிந்த நம்மில் பலருக்கு அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியன் பெயரே தெரியாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விசயம்.
திறமைசாலி :
அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் மிகச் சிறந்த திறமைசாலியாக இருந்தார;கள். உலக விஷயங்களை நன்கு அறிந்தவர;களாக, வியாபாரத்தில் தேர;ச்சியடைந்தவராக, முன்மாதிரி வணிகராக திகழ்ந்தார;கள். அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;களின் வியாபார நுணுக்கத்திற்கான சான்றுகள் இதோ!
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.
சஅத் (ரஹ்ல்லிலி) "நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' எனக் கூறினார்.
அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், "உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) புரிவானாக! , "இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீது ஏதும் (இங்கு) இருக்கிறதா?'' எனக் கேட்டேன். அவர், "கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது!'' என்றார். நான் அங்கே சென்று ற்ல்ஹட்ஞ்ட்ன்ந்; ய்ழ்ஹ;ஓ பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்சத்க்;. மறுநாளும் தொடர்ந்து சென்றேன். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்சத்க்;.)
சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்சத்க்;. (ஸ்க்ஓ முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "நீ மண முடித்து விட்டாயா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்!'' என்றேன். "யாரை?'' என்றார்கள். " ஓர் அன்ஸாரிப் பெண்ணை!'' என்றேன். "எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?'' என்று கேட்டார்கள். " ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பாரக்கல்லாஹு லக்க'' (அல்லாஹ் உங்களுக்கு வளத்தை வழங்குவானாக) என்று (வாழ்த்துக்) கூறிவிட்டு, "ஓர் ஆட்டையேனும் (அறுத்து வஹ்ல்லிமா-) மணவிருந்தாக அளிப்பாயாக!'' என்றார்கள். (நூல் : புகாரி 2048, 2049, 3780, 3781, 5148)
இந்த சம்பவத்தில் ஏராளமான படிப்பினைகள் அடங்கியிருக்;கின்றன. நாம் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பார;ப்போம்.
- மக்காவில் இருக்கும் போதே அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் பணக்காரராகத்தான் இருந்தார;;கள். மிகச் சிறந்த வியாபாரியாகவும் திகழ்ந்தார;கள். இருந்தாலும் இஸ்லாத்திற்காக தன்னுடைய சொத்துக்களையும் சொந்தங்களையும் மக்காவில் விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்து மதினா வந்திருக்கிறார;கள். சொத்துக்களை வைத்திருப்பதும் சொந்தங்களுடன் இருப்பதும் ஹராமான காரியம் அல்ல. இவைகள் இஸ்லாத்தில் ஹலால் தான். இருந்தபோதிலும் இஸ்லாத்திற்காக ஹலாலான விஷயங்களை துறந்து வந்திருக்கிறார;கள். ஆனால் நம்மால் இன்று ஹராமான சின்ன சின்ன விஷயங்களை கூட விடமுடியவில்லை. தினம் தினம் ஏராளமான ஹராமான செயல்களை செய்து வருகிறோம். நாமெல்லாம் ஒரு கனம் ஸஹாபாக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார;த்து ஹராமான விஷயங்களிலிருந்து விலகி நம்மை நாம் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இரண்டாவதாக கவனிக்க வேண்டிய விசயம், தனக்காக தன்னுடைய அன்சாரித் தோழர; சொத்துக்களை தியாகம் செய்ய முன்வரும் போது அவருடைய சொத்துக்காகவும் குடும்பத்திற்காகவும் அருள் வேண்டி பிரார;த்தனை செய்கிறார;கள். நாமும் நமக்கு யாரேனும் உதவி செய்தால் அவர;களுக்காக பிரார;த்தனை செய்ய வேண்டும். இது மிகச் சிறந்த நல்ல பழக்கம். இது மனிதர;களுக்கிடையே அன்பையும் பாசத்தையும் ஏற்படுத்தும்.
- மூன்றாவதாக கவனிக்க வேண்டியது,‘சுயமரியாதை’. தனக்காக தன்னுடைய அன்சாரித் தோழர; சொத்துக்களை தரும் போது அவற்றை வாங்காமல் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க முன்வருகிறார;கள். இந்த இடத்தில் அன்சாரித் தோழர; கொடுத்ததை வாங்கினால் எந்த தவறும் இல்லை. ஏனெனில் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் இஸ்லாத்திற்காகத்தான் மக்காவிலுள்ள அனைத்து சொத்துக்களையும் துறந்து, ஒன்றுமில்லாமல் மதினா வந்திருக்கிறார;கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர;களும் வாங்குவதற்கு அனுமதித் தந்திருக்கிறார;கள். இருந்தபோதிலும் அப்துர;ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் சுயமரியாதையுடன் நடந்து கொள்ள முன்வருகிறார;கள். தன்னுடைய உழைப்பைக் கொண்டே தன்னுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார;கள். இதைப் போன்றே நாமும் சுயமரியாதையுடன் நடந்து கொள்ள உறுதி எடுத்துக்; கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக ‘வியாபாரத்திறமை’. தன்னுடைய சொந்த நாடல்லாமல் வேறொரு நாட்டிற்கு வந்தும் அங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து, வியாபார நுணக்கங்களை தெரிந்து வியாபாரம் செய்கிறார;கள். ஒவ்வொரு நாளும் இலாபங்கள் பெற்று, திருமணம் செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதித்திருக்கிறார;கள். இது அவர;களுடைய புத்திசாலித்தனத்தையும் வியாபாரத்திறமையையும் பறைசாற்றுகிறது.
- அடுத்ததாக திருமணம் முடித்து நறுமணம் தேய்த்து வருகிறார;கள். திருமணத்திற்காக நல்ல ஆடைகளை அணியலாம், நல்ல நறுமணங்களை தேய்க்கலாம் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
- அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் திருமணக் கொடையாக (மஹராக) பேரீச்சங் கொட்டையின் எடையளவுக்கு தங்கத்தை கொடுத்திருக்கிறார;கள். ஆனால் இன்று நம்முடைய சமுதாயத்தில் ஆண் பெண்ணிற்கு மஹர; கொடுப்பதற்கு பதிலாக பெண்ணிடமிருந்து பிச்சையாக வரதட்சணை வாங்கும் பழக்கும் உள்ளது. இன்னும் சில பேர; சம்பிரதாயத்திற்காக 101. 501 என்று மஹர; கொடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர;. இதுவும் தவறான போக்காகும். மணப் பெண் கேட்கும் தொகையைத் தான் மஹராக கொடுக்க வேண்டும். மக்காவிலிருந்து மதினா வந்து சம்பாதித்த அப்துர; ரஹ்மான் அவர;களே பேரீத்தம் கொட்டையின் எடையளவு தங்கத்தை கொடுத்திருக்கிறார;கள் என்றால் நம்முடைய நிலைமை எப்படி இருக்க வேண்டும்?
இந்த ஹதீஸிருந்து நமக்கு கிடைக்கும் பாடங்கள் இவ்வளவுதான் என்று எண்ணிவிடக்கூடாது. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய விஷயங்களை மட்டும்தான் பகிர;ந்துள்ளேன். ஒவ்வொருவரும் சிந்தித்தால் இதிலிருந்து இன்னும் ஏராளமான படிப்பினைகளைப் பெறலாம்.
பணக்காரர;:
அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் சிறந்த வியாபாரியாக இருந்தார;கள் என்பதைப் பார;த்தோம். அவர;களின் வியாபார நுணுக்கத்தின் காரணமாக பிற்காலத்தில் மதினாவிலேயே மிகச்சிறந்த பணக்காரராக மாறினார;கள். அதறடகான ஆதாரம் இதோ,
உமர் பின் கத்தாப் (ர-) அவர்கள், (ஸகாத் கால்நடைகüன்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு "ஹுனை' என்றழைக்கப்படும் தமது அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள்.
அப்போது, "ஹுனையே! உன் கையை முஸ்-ம்களுக்கு அநீதியிழைப்பதி-ருந்து காத்துக்கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.
சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியü.
(ந்ல்ச்ஞ்; ய்ஞ்ன்ல்ஹ செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் உஸ்மான் பின் அஃப்பான் ன்ஹ்ல் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் அவர்கüருவரும் (தம் பிழைப்பிற்குத் தமது) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்து, "விசுவாசிகüன் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டுவிடவா?'' என்று கேட்பார்கள். ஆகவே, (முஸ்-ம்கüன் பொதுநிதியி-ருந்து) தங்கத்தையும் வெள்üயையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலத்தி-ருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்கüன் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள்.
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டி-ருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்கமாட்டேன்'' என்று கூறினார்கள். (நூல் : புகாரி 3059)
அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் 'சமுதாயத்திலே மிகப் பெரிய செல்வந்தர;” என்று சொல்லுமளவுக்கு பிற்காலத்தில் மதினாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்திருக்கிறார;கள். மிகப்பெரிய கால்நடைச் செல்வங்களையும் தோப்புகளையும் துறவுகளையும் வைத்திருந்திருக்கிறார;கள். மதினாவில் பணக்காரர;கள் என்றால் 'அது உஸ்மான் ரலியவர;களையும் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;களையும் தான் குறிக்கும்” என்கின்ற அளவிற்கு அவர;களின் வாழ்க்கைத்தரம் உயர;ந்திருக்கிறது.
பேணுதல் :
பெரும்பாலும் செல்வந்தராக இருப்பவர;களிடத்தில் பெருமையும் ஆணவமும் குடி கொண்டுவிடும். ஆனால் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் அப்படிப்பட்டவர;களாக இருக்கவில்லை. பொருளாதாரத்தில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்த அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் நன்மையை பெறுவதிலும் மிகப் பெரிய செல்வந்தராக இருந்திருக்கிறார;கள். மார;க்கத்தைப் பின்பற்றுவதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார;கள். மிக்க பேணுதலுள்ள மனிதராக இருந்திருக்கிறார;கள். அந்த சம்பவத்தைப் பாருங்கள்
நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலிஹ்ல்லி) இடத்தில் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலிஹ்ல்லி) "என்னைவிடச் சிறந்தவரான முஸ்அப் பின் உமைர் (ரலிஹ்ல்லி) கொல்லப்பட்டபோது அவரது உடலிண்ஹ் சஞ்ட்ன்;த்;ஓற்த்ஜ்;எ ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. அவரது உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரது தலைமறைக்கப்பட்டால் அவரது கால்கள் வெளியில் தெரிந்தன; கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது.
மேலும் ஹம்ஸா (ரலிஹ்ல்லி) அவர்களும் (ஸ்ரீஷஓஞ்; சஞ்ட்ன்ல்ஹ்;) கொல்லப்பட்டார்கள். அவரும் என்னைவிடச் சிறந்தவர்தாம் (அவரும் அது போலவே பற்றாக் குறையுள்ள சிறிய சால்வையாலே கஃபனிடப்பட்டார்.)
பிறகு "(அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு உலகின் வசதி வாய்ப்புகள் நமக்கு வழங்கப்பட்டன.
நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டதோ என்று நாம் அஞ்சுகிறோந்;'' என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள். (புகாரி 1274, 1275)
சொர;க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களில் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியும் ஒருவராவார;. இருந்த போதிலும் அல்லாஹ்வை அதிகமாக அஞ்சக்கூடியவராகஇ நரகத்தை நினைத்து பயப்படக்கூடியவராக இருந்திருக்கிறார;கள். பேணுதலான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார;கள். மிகப் பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் ஆடம்பர உணவை தவிர;த்து வாழ்ந்திருக்கிறார;கள். இதில் நமக்கு மிக முக்கியமான படிப்பினை இருக்கிறது.
நம்முடைய நிலைமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்பது நமக்கு தெரியாது. நாம் செய்த அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்தில் ஏற்கப்பட்டுவிட்டனவா? இல்லையா? என்பதும் நமக்கு தெரியாது. நாம் செய்த அமல்களோ மிகவும் குறைவானதுதான். நாம் நம்முடைய அமல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதிகமாக நரகத்தை அஞ்சி அழக்கூடியவர;களாக இருக்க வேண்டும்.
அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் எப்படி தன்னுடைய தோழர;களை நினைத்து தன்னை திருத்திக் கொள்ள முனைந்தார;களோ அது போல நாமும் ஸஹாபாக்களை நினைத்து நம்முடைய வாழ்க்கைகளை சீர;படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுமட்டுமில்லாமல் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியின் பேணுதலான வாழ்க்கைக்கு சாயிப் பின் யஸீத் ரலியவர;கள் அறிவிக்கும் செய்தியில் இன்னொரு சான்றும் உள்ளது.
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ர-), சஅத் பின் அபீவக்காஸ் (ர-), மிக்தாத் பின் அஸ்வத் (ர-) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ர-) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்கüல் ஒருவரும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்டதில்லை.
ஆனால், தல்ஹா (ர-) அவர்கள் உஹுதுப் போரின் நாள் குறித்து அறிவித்ததை நான் கேட்டிருக்கின்றேன். (நூல் : புகாரி 2824)
ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர;களாயிருந்தும் நிறைய நபிமொழிகளை அறிவிக்காதவர;களாக அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி இருந்திருக்கிறார;கள். காரணம் நபிகள் நாயகத்தின் மீது தவறை சொல்லி விடக்கூடாது என்பதுதான்.
நம்மிடத்திலும் இந்த பேணுதல் இருக்க வேண்டும். இன்று முகநூல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ஹதீஸ் என்ற பெயரில் பல தவறான கருத்துகள் வருகின்றன. அதனையும் நம்முடைய மக்கள் ஹதீஸா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தாமல் சேர; செய்து பரப்பிவிடுகின்றனர;. நாம் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். மார;க்கத்தைப் பரப்புவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதே போல் இஸ்லாத்தை கடைப்பிடிப்பதிலும் மிகப் பேணுதலான மனிதராக அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் இருந்திருக்கிறார;கள்.
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பாரசீகர்களும் ரோமர்களும் உங்களால் வெற்றி கொள்ளப்படும்போது, நீங்கள் எத்தகைய மக்களாய் இருப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்ல்லிலி) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ (அதன்படியே நடந்துகொள்வோம்) அதன்படியே கூறுவோம் (அதாவது நன்றி கூறி அவனைப் போற்றுவோம்)'' என்று விடையளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறொன்றும் செய்யமாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். பின்னர் "நீங்கள் ஒருவருக்கொருவர் (சுயநலத்துடன்) போட்டி போட்டுக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் குரோதம் கொள்வீர்கள். அல்லது இவற்றைப் போன்றதைச் செய்வீர்கள்'' என்று கூறிவிட்டு, "பிறகு ஏழை முஹாஜிர்களை நோக்கிச் சென்று, அவர்களில் சிலருக்குச் சிலர்மீது அதிகாரத்தை வழங்குவீர்கள்'' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம்5669
மிகப் பெரிய சாம்ராஜ்யங்களான பாரசீகத்தையும் ரோமையும் முஸ்லிம்களாகிய நீங்கள் வெற்றிக் கொண்டால் என்ன செய்வீர;கள்? என்று ஸஹாபாக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் கேட்கும் போதுஇ அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் முந்திக் கொண்டு 'அல்லாஹ் எங்களுக்கு கற்றுத் தந்தது போலத்தான் நடந்து கொள்வோம்இ அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்” என்று கூறுகிறார;கள். ஆணவமோ, அகம்பாவமோ கொள்ளமாட்டோம். பணிவுடன்தன் நடப்போம் என்பதை உணர;த்திக் காட்டுகிறார;கள்.
ஏனெனில் மக்காவை வெற்றி பெறும் போது அல்லாஹ் நபியவர;களுக்கு இதைத்தான் கட்டளையிட்டான். மக்காவிற்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் வெற்றி வீரராக நுழையும்போது இறைவனுக்கு நன்றி செலுத்தியவராகவே நுழைந்தார;கள். ஆணவமோ, அகம்பாவமோ கொள்ளவில்லை. பணிவைத்தான் வெளிப்படுத்தினார;கள்.
ஆகவே அதைப் போன்றுதான் தானும் நடந்துகொள்வேன் என்று அப்துர;ரஹ்மான் அப்னு அவ்ஃப் ரலி கூறுகிறார;கள். இது இஸ்லாத்தை பின்பற்றுவதில் அவர;களுக்கு இருந்த ஆர;வத்தை காட்டுகிறது.
நோயாளியை நலம் விசாரித்தல்:
நோயாளியை நலம் விசாரிக்கும் பண்பு இஸ்லாத்தில் மிக முக்கியமான பண்பாகும். இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும். நலம் விசாரிக்கும் பண்பு நம்முடைய நேசத்தை அதிகரிக்கச் செய்யும். அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் நபிகள் நாயகத்துடன் தன் தோழரை நலம் விசாரிக்கச் சென்றிருக்கிறார;கள்.
சஅத் பின் உபாதா (ரஹ்ல்லிலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்ல்லிலி) சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்ல்லிலி) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்ல்லிலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், " என்ன? இறந்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர். பின் நபி (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்ôலை பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான்.
அறிவிப்பவர; : இப்னு உமர; (ரலி) நூல்: புகாரி 1304
அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் நபிகள் நாயகத்துடன் சேர;ந்து தன் தோழரை நலம் விசாரிக்கச் சென்றிருக்கிறார;கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றான நோயாளியை நலம் விசாரிப்பதையும்; கடைபிடித்திருக்கிறார;கள்.
ஆனால் இன்று நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும் பழக்கம் குறைந்து வருகிறது. இது வருத்தத்திற்கு உரிய செய்தி. நோயாளியை நலம் விசாரிக்கும் பழக்கத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும்.
மேலும் இந்த சமபவத்திலிருந்து அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் நபிகள் நாயகத்துடன் தான் அதிகமாக இருப்பார;கள் என்பதும் விளங்குகிறது.
இஸ்லாத்தை கற்பதற்கு வெட்கம் இவருக்கு தடையாக இருந்ததில்லை:
கல்வி கற்பவரிடத்தில் வெட்கம் குடி கொண்டால் அவரால் சரியாக கற்க முடியாது. கற்பதற்கு வெட்கம் ஒருநாளும் தடையாக இருக்கக்கூடாது. யாரிடத்தில் முறையான, சரியான கல்வி உள்ளதோ அவரைத் தேடிச் சென்று கற்க வேண்டும். அவர; தன்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் அவரிடத்தில் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக் கூடாது. இதுதான் சிறந்த கல்வியாளனுக்கான அடையாளம். இந்த பண்புகள் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியிடம் மிகுதியகவே இருந்தன.
ஆதற்கான சான்றுகள் இதோ,
இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:
நான் முஹாஜிர்கüல் சிலருக்குக் குர்ஆனை ஓதிக்கொடுத்துவந்தேன். அவர்கüல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ர-) அவர்களும் ஒருவராவார்..(புகாரி 6830)
இப்னு அப்பாஸ் ரலியவர;கள் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியை விட வயதில் மிகவும் சிறியவர;கள். இப்னு அப்பாஸ் அவர;களுடைய வயதை ஒத்த பிள்ளைகள் அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலிக்கு உண்டு.
தன் பிள்ளையின் வயதை ஒத்த இப்னு அப்பாஸிடம் சென்று மார;க்கத்தை கற்கவா? அவரைவிட மார;க்கத்தில் நானே முந்தியவன். இப்னு அப்பாஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னமே நான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறேன். அப்படியிருக்கையில் நான் ஏன் அவரிடம் சென்று மார;க்கத்தை கற்க வேண்டும்? என்றெல்லாம் அப்துர;ராஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;கள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
மார;க்கத்தை கற்றுக் கொள்வதற்கு வயது தடையில்லை. தனக்கு தெரியாதது இப்னு அப்பாஸிற்கு தெரிந்திருக்கிறது. இது ஒன்றே இப்னு அப்பாஸிடம் கற்றுக் கொள்வதற்கு போதுமான காரணங்கள். இது புரிந்திருந்ததினால்தான் மிகவும் சிறிய வயதினராக இருந்த போதிலும் வெட்கப்படாமல் இப்னு அப்பாஸ் ரலியிடம் குர;ஆனை கற்றிருக்கிறார;கள். இது இஸ்லாத்தின் மீது அவர;களுக்கு இருந்த ஆர;வத்தை காட்டுகிறது.
இன்று நம்மிலும் பல பேர; திருக்குர;ஆனை ஓதத் தெரியாதவர;களாக இருக்கிறோம். நமக்கு அதிகமாக வயசாகிவிட்டது. நாம் இப்போது குர;ஆனை ஓதக் கற்றுக் கொண்டால் மற்றவர;கள் என்ன நினைப்பார;கள்? என்று வெட்கப்பட்டு கற்காமலேயே விட்டு விடுகிறோம். குர;ஆனை ஓதத் தெரியவில்லையே என்றுதான் வெட்கப்பட வேண்டுமே தவிர குர;ஆனை கற்றுக் கொள்வதற்கு நாம் வெட்கப்படக்கூடாது. குர;ஆனை கற்றுக் கொள்வதற்கு பெருமைப்பட வேண்டும்.
இது அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியவர;களின் வாழ்விலிருந்து பெறப்படும் மிக முக்கிய படிப்பினை. அதேபோன்று அவர;களிடமிருந்து பெற வேண்டிய இன்னொரு முக்கிய படிப்பினைதான் வாக்குறுதியை நிறைவேற்றும் தன்மை.
Super
ReplyDeleteSuper
ReplyDelete