ஏக இறைவனின் திருப்பெயரால்…
இஸ்லாமிய திருமணச் சட்டம்
புத்தகமாக டவுன்லோடு செய்ய - இஸ்லாமிய திருமண சட்டம்
பாகம் 1 - திருமணம் ஒரு வழிபாடு
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம். இறைவனால் தேர்வு செய்யப்பட்ட உண்மையான மார்க்கம்.
மார்க்கம் என்றால் வழித்தடம் என்று பொருள். சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழித்தடமாக இஸ்லாம் இருப்பதால் அதை மார்க்கம் என்றே அழைக்கிறோம்.
இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் வழிகாட்டுதல்கள் உள்ளன.
இறைவன் மனிதர்களைப் படைத்ததோடு அவனை அவன் போக்கில் நடந்துகொள்ளுமாறு விட்டுவிடவில்லை. மாறாகஇ அவன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்கின்ற அனைத்து விஷயங்களையும் திருக்குர்ஆன் மூலம் இறைவன் அறிவித்திருக்கிறான். மேலும் நபியவர்கள் மூலம் நடைமுறை முன்மாதிரியாகவும் அவற்றை நமக்குக் காண்பித்திருக்கிறான்.
அந்தவகையில் திருக்குர்ஆன் திருமணம் பற்றிய பல்வேறு சட்டங்களைக் கூறி அது தொடர்பாக வழிகாட்டியிருக்கிறது.
மேலும் நபியவர்கள் திருமணத்தை ஒரு இபாதத் என்று கூறியிருக்கிறார்கள். சில மதங்களில்இ ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாமோஇ ‘திருமணம் செய்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று அறிவிக்கிறது. அந்த அளவிற்கு இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.
1) திருமணம் என்பது நபிவழி எனும் சுன்னத்தாகும்
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் (எவ்வாறு இருக்கும்? என்பது) குறித்து கேள்வி கேட்டனர்.
அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோதுஇ அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.
பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)இ 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர்இ '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால்இ எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார்.
இன்னொருவர்இ 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார்.
மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் திருமணம் முடித்துக்கொள்ளமாட்டேன்'' என்று கூறினார்.
(அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நபியவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்தார்கள். அவர்களிடத்தில் அம்மூவர் கூறிய கூற்றுக்கள் தெரிவிக்கப்பட்டது.)
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ (அந்தத் தோழர்களிடம்) வந்துஇ 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே!
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட நான்தான் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன்.
ஆயினும்இ நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன்.
(இரவின் சில பகுதிகளில்) தொழுகவும் செய்கிறேன். (இரவின் சில பகுதிகளில்) உறங்கவும் செய்கிறேன்.
மேலும்இ நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன்.
(இதுதான் எனது சுன்னத் எனும் வழிமுறை) ஆகவேஇ (இதுபோன்ற) என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5063.
மேற்கூறிய நபிமொழியில் இரண்டு விஷயங்களை நபியவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அவை :
திருமணம் என்பது நபிவழியைச் சார்ந்தது. ஆகவே அது ஒரு இபாதத் ஆகும். மற்ற மற்ற நபிவழியைப் பேணி நடந்தால் நமக்கு நன்மைகள் வாரி வழங்கப்படுவதைப் போன்று திருமணம் செய்வதன் மூலமும் நன்மைகள் வாரி வழங்கப்படும்.
அதைப்போல் ஒரு மனிதர் திருமணம் முடிக்க அனைத்து தகுதிகளையும் பெற்று வேண்டுமென்றே திருமணம் முடிக்காமல் இருந்தால் அவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.
ஆக ஒரு மனிதன் திருமணம் செய்தால்தான் அவன் முஸ்லிமாகக் கருதப்படுவான்.
2) அனைத்து நபிமார்களும் திருமணம் செய்தவர்களே
அதனால்தான் இறைவன் அனைத்து நபிமார்களைக் குறித்துக் கூறும்போதுஇ ‘அவர்கள் அனைவரும் திருமணம் முடித்தவர்கள்’ என்று அறிவிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
(நபியே!) உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும்இ பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்.
அல் குர்ஆன் - 13 : 38
நபிமார்களின் பொதுவான நடைமுறைகளில் திருமணம் ஒன்றாகும் என்பது இதன்மூலம் தெரிகிறது. ஆகவே திருமணம் என்பது நபிவழி மட்டுமல்ல. அது நபிமார்களின் வழியும் கூட.
3) முதல் மனிதர் துணைவியோடுதான் பூமிக்கு அனுப்பப்பட்டார்
அதைப்போல் அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்கும்போது முதல்மனிதராக ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். அவர்களை மட்டும் படைத்து அப்படியே விட்டுவிடாமல் அவர்களுக்கு துணையாக ஹவ்வா அலை அவர்களையும் படைத்தான்.
ஆதம் நபியை பூமிக்கு அனுப்பி வைக்கும்போது தனிமனிதராக அனுப்பாமல் ‘கணவன் மனைவி’ என்றொரு குடும்பமாகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
மனிதச் சமூகம் ஒரு குடும்பத்திலிருந்து பிறந்து பல குடும்பங்களாக பல்கிப் பெருக வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஆகவேதான் அல்லாஹ் திருமணத்தை ஒரு வழிபாடாக அமைத்துத் தந்திருக்கிறான்.
4) திருமணத்தை வலியுறுத்திய நபிகளார்
ஆகவேதான் திருமணத்தை நபியவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில்இ திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும்.
யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.
ஸஹீஹ் புகாரி : 1905.
மேற்கூறிய நபிமொழியில் ‘திருமணம் செய்வதற்கான வசதிகளைப் பெற்றவர் திருமணம் செய்யட்டும்’ என்று கட்டளை வாக்கியமாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இது ‘திருமணம் வலியுறுத்தப்பட்ட ஒரு காரியம்’ என்பதை குறிக்கிறது.
5) நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்
ஆகவேதான் நபித்தோழர்களும் திருமணம் விஷயத்தில் பிறரை ஆர்வமூட்டுபவர்களாக இருந்துள்ளனர்.
அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்கள் :
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்துஇ 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள்.
அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள்.
திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள்.
நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள்இ நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால்இ நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5065.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :
என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி)இ 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான்இ 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில்இ இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5069.
எனவே திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு காரியமாகும். ஆகவேதான் அவற்றை நபியவர்களும் சஹாபாக்களும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்:
“எனது வாழ்நாளில் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதி இருந்துஇ நான் மரணமடைந்துவிடுவேன் என்று முன்னரே எனக்குத் தெரிந்துஇ திருமணம் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் எனக்கு இருக்கும் என்றால் திருமணம் செய்யாமல் இருப்பதன் மூலம் ஏற்படும் சோதனைக்குப் பயந்து நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்!”
இப்னு மஸ்ஊத் ரலி ஸஹாபாக்களில் அறிஞராக இருந்தவர்கள். அதிகமான மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் இந்த கூற்று இஸ்லாத்தில் திருமணம் வலியறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.
மேலும் திருமணம் முடிக்காமல் இருப்பதை நபியவர்கள் தடையும் செய்திருக்கிறார்கள்.
6) திருமணம் முடிக்காமல் இருப்பது பாவம்
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள் :
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள (அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள்.
அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
ஸஹீஹ் புகாரி : 5073இ 5074.
நபியவர்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அதைப்போல் ஆண்மை நீக்கம் செய்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. ஏனெனில் திருமணம் செய்தால்தான் அவன் உண்மையான முஸ்லிமாக இருப்பான்.
இதுமட்டுமில்லாமல் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அல்லாஹ்வும் வலியுறுத்தியுள்ளான்.
7) திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை
அல்லாஹ் கூறுகிறான் :
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும்இ உங்கள் ஆண் - பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வசதியளிப்பான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் - 24 : 32
நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் அடிமைகளுக்குக் கூட திருமணம் முடித்து வைக்குமாறு இறைவன் வலியுறுத்தியுள்ளான். தற்காலத்தில் அடிமை முறை இல்லை. ஆனால் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் நம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் முடிக்கும் வயது வந்துவிட்டால் அவர்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் முதலாளிகள் ஈடுபட வேண்டும். அதற்கான பொருளாதாரத்தை கொடுத்து உதவ வேண்டும். அது நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரும்.
அதைப்போல் இவ்வசனத்தில் இன்னொரு விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான். அதாவது இன்று நிறையபேர் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றால் நிறைய பொருளாதாரம் தேவைப்படும் என்று கூறி திருமணத்தை தள்ளிபோடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ திருமணம் முடித்தால் பொருளாதாரத்ததை அருளாக வழங்குவதாகக் குறிப்பிடுகிறான். ஆகவே இதுபோன்ற சாக்குபோக்குகளைக் கூறி திருமணத்தைத் தள்ளிப்போடுவது சரியல்ல.
8) அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்
ஆகவேதான் அல்லாஹ் திருமணம் முடிப்பவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் :
"மூன்று நபர்களுக்கு உதவுவதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ளான்.
இறைப்பாதையில் போராடுபவர்இ
விடுதலைப் பத்திரம் எழுதியபின் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பும் அடிமைஇ
கற்பைப் பாதுகாப்பதற்காக திருமணம் செய்ய விரும்புவர்."
திர்மிதீ 1655இ இப்னு மாஜா 2516
தனது கற்பைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் திருமணம் செய்தால் அவனுக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ் திருமணம் செய்வதை வலியுறுத்துகிறான்.
9) திருமணம் தீவிரமானது
முத்தாய்ப்பாக நபியவர்கள் திருமணம் செய்வதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது :
மூன்று விஷயங்கள் உள்ளது. அவற்றை தீவிரமானதாகக் கருதினால் தீவிரமானதாக இருக்கும். நகைச்சுவையாகக் கருதினாலும் தீவிரமானதாகத்தான் இருக்கும். அவை : திருமணம்இ விவாகரத்துஇ விவாகரத்து செய்த பின் மீண்டும் (மனைவியை) அழைத்துக் கொள்ளுதல்.
இப்னு மாஜா 2039.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாவது:
"மூன்று செயல்களை வினையாகச் செய்வதும் வினைதான்; விளையாட்டாகச் செய்வதும் வினைதான். அவை: 1. திருமணம் 2. மணவிலக்கு 3. மணவிலக்கு அளிக்கப் பட்டுக் காத்திருப்பில் இருக்கும் பெண்ணைத் திரும்ப அழைத்தல்.
அபூதாவூது 2194 (தமிழில் 1875)இ திர்மிதீ 1184
திருமணம் செய்வது நமது ஈமானையும் கற்பையும் பாதுகாக்கும் அம்சமாக இருப்பதால் அவற்றிற்கு தீவிரத்துவம் காட்ட வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது. ஆகவே திருமணம் விஷயத்தில் நாம் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.
10) உலக நன்மை
அதைப் போல் திருமணம் செய்வதால் உலகியல் நன்மைகளும் ஏற்படும். இதைப்பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1959 ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை (வுhந Pநழிடந'ள நேறள pயிநச என்ற பத்திரிகையில்) பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா சபை) ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகின்றது:
'திருமணம் செய்து வாழ்பவர்கள் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களைவிட நீண்ட நாள்கள் உயிர் வாழ்கின்றார்கள். அவ்வாறு திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் விதவைகள்இ மணவிலக்குப் பெற்றவர்கள்இ பிரம்மச்சாரிகள் யாராக இருந்தாலும் சரியே'இ
அறிக்கை மேலும் இவ்வாறு கூறுகிறது: 'உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் அதிகமானோர் சிறுவயதிலேயே திருமணம் செய்யத் துவங்கியுள்ளனர். ஆயினும் திருமணம் செய்து வாழ்பவர்களின் ஆயுட்காலம் நீண்டு கொண்டே செல்கிறது'.
1958ஆம் ஆண்டு உலகம் முழுவது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஐ.நா சபையால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: 'திருமணம் செய்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்கள்இ திருமணம் செய்யாமல் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும்.
இதன் அடிப்படையில் ... திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேபோன்று பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்று கூறலாம். கர்ப்ப காலங்களிலும் பிரசவ வேளைகளிலும் ஏற்படும் ஆபத்துகள் முன்பைவிட இப்போது மிகவும் குறைந்துள்ளன.
(பார்க்க ஃபிக்ஹுஸ் ஸுன்னா தமிழாக்கம் 6 வதுஇ பாகம்)
திருமணம் செய்வது தகுதிவாய்ந்த முஸ்லிம்கள்மீது கட்டாயக்கடமை என்று அல்லாஹ் அறிவித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் திருமணம் முடிப்பதை கட்டாயமாக்குவதற்காக அல்லாஹ் திருமணத்தையும் ஆயுளையும் ஒன்றிணைத்துள்ளான்.
ஆகவே இதன்மூலமும் இறைவன் திருமணம் செய்வதை அனைவர் மீதும் கடமையாக ஆக்கியிருக்கிறான்.
பாகம் 2 - திருமணத்தின் நோக்கம்
இஸ்லாம் ஏன் திருமணத்தை இந்த அளவிற்கு வலியுறுத்துகிறது? என்பதை அறிந்து கொள்வதற்கு திருமணத்தின் நோக்கமாக இஸ்லாம் எதை குறிப்பிடுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏகத்துவத்தை நிலை நிறுத்துதல்
இஸ்லாத்தின் முதலாவது கடமை லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை நிலைநிறுத்துவதுதான்.
அல்லாஹ் ஒருவன்தான். அவனுக்கு இணையில்லை. அவன் தனித்தவன் என்பதுதான் இஸ்லாத்தின் முதல் அழைப்புப் பணி.
இத்தகைய ஏகத்துவத்தை திருமணம் மெய்ப்பிக்கிறது.
அல்லாஹ் தன்னைப் பற்றி சூரா இஹ்லாஸில்இ (112)
அல்லாஹ் ஒருவன்தான்
அவன் தேவையற்றவன்
அவன் யாரையும் பெறவில்லை
அவன் யாருக்கும் பிறக்கவில்லை
அவனுக்கு நிகராக யாருமில்லை
என்று கூறியிருக்கிறான். மேற்கூறியவற்றை திருமணம் உண்மைப்படுத்துகிறது.
ஏனெனில் திருமணத்தின் மூலம் ஒரு மனிதன்இ
என்னால் தனித்து வாழமுடியாது. எனக்குத் துணை வேண்டும் என்கிறான்.
எனக்கு இல்லறத் தேவைகளும் இன்னபிற தேவைகளும் உள்ளன என்பதை திருமணத்தின் மூலம் தெரிவிக்கிறான்.
என்னை என் தாய் திருமணத்தின் மூலம் பெற்றெடுத்தால். தாயில்லாமல் நான் வந்திருக்கமாட்டேன்.
திருமணத்தின் மூலம் எனக்கு சந்ததி தேவை என்பதை அறிவிக்கிறோம்.
ஆகவே திருமணம் என்பது ஏகத்துவத்தை நிலைநாட்டும் ஒரு அற்புத விஷயமாகும்.
அதுமட்டுமில்லாமல் அல்லாஹ் மட்டும்தான் தனித்தவன் என்பதை பறைசாற்றுவதற்காகவே அவன் மனிதர்களை ஜோடியாகப் படைத்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
"மேலும்இ ஆண் பெண் ஜோடிகளை அவனே படைத்தான்."
(திருக்குர் ஆன் 53:45)
(முதல் மனிதரான ஆதம்) அவரிலிருந்து (ஹவ்வா என்ற துணைவியார் மூலம்) ஆண்இ பெண் எனும் இணையை (அல்லாஹ்வே) உருவாக்கினான்.
அல் குர்ஆன் - 75 : 39
அல்லாஹ் மனித சமுதாயத்தை ஜோடியாகப் படைத்ததாக மேற்கண்ட வசனங்களில் தெரிவிக்கிறான்.
மனிதனை மட்டுமல்லாமல் அனைத்து படைப்புகளும் ஜோடிகளாகத்தான் படைக்கப்பட்டுள்ளது என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
மேலும்இ நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்!"
(திருக்குர் ஆன் 51:49)
பூமி விளையச் செய்வதிலும்இ அவர்களிலும்இ அவர்கள் அறியாதவற்றிலும் ஒவ்வொரு இணைகளையும் படைத்தவன் தூயவன்.
அல் குர்ஆன் - 36 : 36
இறைவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்துமே ஜோடியாகத்தான் படைக்கப்பட்டுள்ளன.
ஆக ஒரு படைப்பு தனது ஜோடியுடன் இணைந்துதான் இவ்வுலகில் செயல்பட முடியும். அவ்வாறுதான் அவன் படைப்புகளை அமைத்துள்ளான்.
அந்த அடிப்படையில் எலக்ட்ரானும் புரட்டானும் இணைந்துதான் அணு உருவாகும். நேர்மின்னூட்டமும் எதிர்மின்னூட்டமும் இணைந்துதான் மின்சாரம் வெளிப்படும். இவ்வாறு உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பாெருட்களும் ஜோடி ஜோடியாக இணைந்தே செயல்படுகிறது. எந்த பொருளாலும் தனித்து இயங்க முடியாது. அதுபோலத்தான் மனித சமூகமும் ஜோடியாக இணைந்து செயல்பட வேண்டும். அவற்றால் தனித்த செய்படமுடியாது.
இது இறைவன் மட்டும்தான் தனித்தவன் என்பதை தெளிவாக அறிவிக்கிறது
அவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்து படைப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஜோடியாகவே செயல்பட முடியும். எதனையும் சாராமல் தனித்து செயல்படும் ஆற்றல் எந்த படைப்புகளுக்கும் இல்லை. அது படைப்பாளனான அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தானதாகும்.
அவற்றை உணர்த்தவே அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்துள்ளான். இது இறைவனின் ஏற்பாடுகளில் முக்கியமானதாகும்.
அத்தகைய இறைவனின் ஏற்பாட்டை பறைசாற்றும் நிகழ்ச்சிதான் திருமணமாகும்.
சமூக உருவாக்கம்
திருமணத்தின் அடுத்த முக்கியமான நோக்கம் சமூகத்தை உருவாக்குவதாகும். இறைவன் மனிதர்களை சமூகமாக படைத்திருக்கிறான். அந்த சமூகம் நிலைக்க வேண்டுமானால் திருமணம் அவசியம்.
அல்லாஹ் கூறுகிறான் :
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே (ஆதம் எனும்) ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிலிருந்து (ஹவ்வா எனும்) அவரது ஜோடியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்இ பெண்களையும் (திருமணத்தின் மூலம்) பரவச் செய்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கொள்கிறீர்கள். இரத்த உறவுகளையும் (துண்டிப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
அல் குர்ஆன் - 4 : 1
மேற்கூறிய வசனத்தில் ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்திருப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். இது திருமணத்தின் மூலம்தான் முறையாக நடைபெறும்.
அதனால்தான் அதன் தொடர்ச்சியில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் இரத்த உறவுகளை துண்டிப்பதை அஞ்சிக்கொள்ளுமாறும் இறைவன் தெரிவிக்கிறான்.
விபச்சாரத்தின் மூலமாக பிறக்கும் குழந்தை உறவற்ற அநாதையாக நிற்கும். முறையான திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையே ரத்த உறவுகளைப் பெற்றிருக்கும்.
அதைப்போல் மனிதன் ரத்த உறவுகளான சொந்தங்களை பெற்றுக் கொள்வதைப் போல் திருமணத்தின் மூலமாக பந்தங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் இறைவனின் அருட்கொடைதான்.
அல்லாஹ் கூறுகிறான் :
அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர்வழி உறவுகளையும்இ திருமணவழி உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கிறான்.
அல் குர்ஆன் - 25 : 54
சொந்தபந்தங்களை பெற்றுத்தரும் ஒரு அற்புதமான விஷயமாக திருமணம் இருப்பதை இந்த வசனம் அழகாக சுட்டிக்காட்டுகிறது.
உறவுகளை மட்டுமல்லாமல் நம்முடைய சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் திருமணம் துணை செய்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ்இ உங்களிடமிருந்தே உங்களுக்கு மனைவியரை ஏற்படுத்தினான். உங்கள் மனைவியர் மூலமாக உங்களுக்குப் பிள்ளைகளையும்இ பேரப் பிள்ளைகளையும் ஏற்படுத்தினான். உங்களுக்குத் தூயவற்றை உணவாக அளித்தான். அவர்கள் பொய்யானதை நம்பிஇ அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கின்றனரா?
அல் குர்ஆன் - 16 : 72
இவ்வாறு திருமணத்தின் மூலம் ரத்த சொந்தங்களும் திருமண பந்தங்களும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நமக்குக் கிடைப்பார்கள். அதன்மூலம் சமூக உருவாக்கம் நடைபெறும்.
எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் ஓரினச் சேர்க்கையைத் தடுத்துள்ளது. ஏனெனில் ஓரினச் சேர்க்கையால் சமூக உருவாக்கம் தடைபடும்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட லூத் நபியின் சமூகத்தை மிகக் கொடூரமாக இறைவன் அழித்தான்.
அல்லாஹ் கூறுகிறான் :
அவர்கள்மீது (கல்) மழையைப் பொழிந்தோம். எச்சரிக்கப் பட்டோருக்கான அம்மழை மிகவும் கெட்டது.
அல் குர்ஆன் - 27 : 58
ஆகவே திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் சமூக உருவாக்கமும் ஒன்றாகும் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
அன்பு கருணை அமைதி பெறுவதற்காக
திருமணத்தின் அடுத்த முக்கிய நோக்கம் மன அமைதி பெறுவது.
அல்லாஹ் நினைத்திருந்தால் ஆதம் நபிக்கு துணையாக ஆண் நண்பர்களையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு படைப்பையோ படைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்களுக்கு துணையாக ஹவ்வா என்ற பெண்ணைப் படைத்தான். இதன் பின்னால் மிகப்பெரும் நுட்பமான காரணம் உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
நீங்கள் மனைவியரிடம் மனநிம்மதி பெறுவதற்காக அவர்களை உங்களிலிருந்தே உங்களுக்காகப் படைத்திருப்பதும்இ உங்களுக்கிடையில் அன்பையும்இ கருணையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன.
அல் குர்ஆன் - 30 : 21
மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
''அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும்இ அதிலிருந்தே அதனுடைய துணையையும் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!"
(திருக்குர்ஆன் 7 :189)
ஆதம் நபிக்கு துணையாக ஹவ்வா அலை படைக்கப்பட்டது அவர் மன அமைதி பெற வேண்டும் என்பதற்குத்தான். இந்த மன அமைதி ஆதம் நபிக்கு மட்டும் உரியது அல்ல. மாறாக அனைத்து மனிதர்களுக்கும் உரியது.
ஆதம் நபி எவ்வாறு ஹவ்வா அலை மூலமாக மன அமைதி பெற்றார்களோ அதைப்போன்று திருமணத்தின் மூலமாக நாமும் மன அமைதி பெறலாம். பெற வேண்டும். அதற்குத்தான் திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்தியிருக்கிறது.
கற்பைப் பாதுகாப்பதற்காக
திருமணத்தின் மற்றொரு நோக்கம் கற்பை பாதுகாப்பதாகும். ஏனெனில் கற்புதான் மனிதனின் மிகப்பெரும் சொத்து. ஆகவே அதை சரியாகப் பேணி பாதுகாக்க வேண்டும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்:
நாங்கள் (பொருளாதார வசதி வாய்ப்புகள்) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம்இ “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில்இ அது (மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். (திருமணம் முடிப்பதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில்இ நோன்பு (தவறான இச்சையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5066.
மேற்கூறிய நபிமொழியில் திருமணம் செய்யுமாறு இளைஞர்களுக்கு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவ்வாறு திருமணம் செய்வது பார்வையைக் கட்டுப்படுத்தும் என்றும் கற்பை பாதுகாக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஆக இதுவும் திருமணத்தின் மிக முக்கியமான நோக்கமாகும்.
இதனால்தான் திருக்குர்ஆன் திருமணத்திற்கு 'இஹ்சான்' (احصان) எனும் வார்த்தையை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளது.
(حصن) 'ஹிஸ்ன்' என்றால் கோட்டை என்று பொருள். இஹ்சான் என்றால் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பது என்று பொருள்.
ஹிஸ்னுல் முஸ்லிம் (முஸ்லிமின் கோட்டை) என்ற புத்தகத்தை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது பிரார்த்தனையைக் கற்றுத்தரும் புத்தகமாகும். நாம் பிரார்த்தனை எனும் கோட்டைக்குள் இருப்பதன் மூலம் ஷைத்தானிடமிருந்தும் தீங்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாக்கலாம் என்ற கருத்தில்தான் அந்த ஆசிரியர் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.
ஆகவேதான் திருமணம் செய்யும் ஆணுக்கு 'முஹ்ஸின்' என்று கூறப்படும். அதாவது கற்பை பாதுகாத்துக் கொண்டவன் என்று அர்த்தம்.
அதைப்போல் திருமணம் செய்யும் பெண்ணிற்கு 'முஹ்ஸினா' என்று கூறப்படும். அதாவது திருமணம் எனும் கோட்டைக்குள் அடைந்து தனது கற்பை பாதுகாத்துக் கொண்டவள் என்பது இதன் அர்த்தமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ حِلٌّۭ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّۭ لَّهُمْ ۖ وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلْمُؤْمِنَـٰتِ وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَـٰفِحِينَ وَلَا مُتَّخِذِىٓ أَخْدَانٍۢ ۗ وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَـٰسِرِينَ⭘
இன்றைய தினம்இ தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் வழங்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதியாகும். இறைநம்பிக்கை கொண்ட (முஹ்ஸனாத் எனும்) ஒழுக்கமான பெண்களையும்இ உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிலுள்ள (முஹ்ஸனாத் எனும்) ஒழுக்கமான பெண்களையும் விபச்சாரமாகவோஇ கள்ளக் காதலாகவோ இல்லாமல் அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதும் (அனுமதிக்கப்பட்டுள்ளது.) இறைநம்பிக்கையை யார் மறுக்கிறாரோ அவரது நற்செயல்கள் அழிந்து விடும். அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் இருப்பார்.
அல் குர்ஆன் - 5 : 5
மேற்கூறிய வசனத்தில் திருமணம் செய்வதற்கு தகுதியான பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் முஹ்ஸனாத் என்ற வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதிலிருந்து திருமணத்தின் நோக்கம் கற்பைப் பாதுகாப்பதுதான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
பாகம் 3 - திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டவர்கள்
ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய வேண்டும் என்பது இறைவன் விதித்த ஏற்பாடு. அதற்காக ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்றோ? ஒரு பெண் எந்த ஆணை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்றோ? இஸ்லாம் விட்டுவிடவில்லை. இதில் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நாம் மோசமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் நமது எதிர்காலம் மோசமானதாக ஆகிவிடும். அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் சிலரை திருமணம் செய்யக்கூடாது என்று தடுத்திருக்கிறது.
கொள்கை அடிப்படையிலும்இ ஒழுக்கங்கெட்ட செயல்களின் அடிப்படையிலும் சில ஆண்களையும் சில பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது என்று இஸ்லாம் தடுத்துள்ளது.
அவ்வாறு திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இணைவைப்பவர்களை திருமணம் முடிக்கக் கூடாது
இணைவைப்பவர்கள் நிரந்தர நரகத்திற்குரியவர்கள். அவர்கள் தங்களது இணைவைப்பை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்காத வரையில் அவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவேதான் அப்படிப்பட்டவர்களை ஒரு முஃமின் மணமுடிக்கக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்
அதுமட்டுமில்லாமல் திருமணத்தின் நோக்கங்களில் ஏகத்துவத்தை நிலைநாட்டுவதும் உள்ளடங்கும் என்று முன்னர் பார்த்தாேம். ஆகவே அந்த அடிப்படையிலும் ஏகத்துவத்திற்கு எதிரியாக இருக்கும் இணைவைப்பாளர்களை நாம் திருமணம் செய்யக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் :
இணை வைக்கும் பெண்களைஇ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்வரை திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் பெண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவளாவாள். இணை வைக்கும் ஆண்கள்இ இறைநம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (இறைநம்பிக்கை கொண்ட பெண்களைத்) திருமணம் செய்து கொடுக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவனாவான். (இணைவைப்பாளர்களான) அவர்கள் நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்இ தனது ஆணைப்படி சொர்க்கத்தையும் மன்னிப்பையும் நோக்கி அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்குத் தனது வசனங்களை அவன் தெளிவுபடுத்துகிறான்.
அல் குர்ஆன் - 2 : 221
மற்றொரு வசனத்திலும் இதை இறைவன் தெளிவுபடுத்தியுள்ளான்
இறைநம்பிக்கையாளர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கைக் கொண்டுள்ளார்களா? என்று உங்களது அறிவுக்குட்பட்ட வகையில்) அவர்களைப் பரிசோதியுங்கள்! அவர்களின் (உண்மையான) இறைநம்பிக்கையை அல்லாஹ்வே மிக அறிந்தவன். (உங்களது அறிவைக் கொண்டு) அப்பெண்களை இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள். அப்பெண்கள்இ இறைமறுப்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்ல. அவர்களும் இப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்ல. அவர்கள் (இப்பெண்களுக்காகச்) செலவிட்டதை அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் அப்பெண்களுக்குஇ அவர்களின் திருமணக் கொடைகளைக் கொடுத்து விட்டால் அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வது உங்கள்மீது குற்றமில்லை. இறைமறுப்பாளர்களான பெண்களின் திருமண ஒப்பந்தத்தை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அப்பெண்களுக்காக) நீங்கள் செலவிட்டதை (அவர்களை மணமுடிக்கும் இறைமறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! (இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்காக) அவர்கள் செலவிட்டதை (உங்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் தீர்ப்பு. அவன் உங்களுக்கிடையே தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
அல் குர்ஆன் - 60 : 10
மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் இணைவைப்பாளர்களைத் திருமணம் செய்யக்கூடாது என்று தடுக்கிறது.
விபச்சாரம் செய்பவர்கள் மற்றும் கள்ளக்காதல் வைத்திருப்பவர்களை திருமணம் முடிக்கக்கூடாது
திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் கற்பைப் பாதுகாப்பதும் அடங்கும். அந்த வகையில் கற்பை களங்கப்படுத்தும் விபச்சாரகர்களையும் கள்ளக்காதல் வைத்திருப்பவர்களையும் நாம் திருமணம் செய்யக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் :
இறைநம்பிக்கை கொண்டஇ சுதந்திரமான பெண்களைத் திருமணம் செய்ய உங்களில் வசதியைப் பெறாதவர்இ உங்கள் ஆதிக்கத்திலுள்ளஇ இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை(த் திருமணம் செய்யட்டும்.) உங்கள் இறைநம்பிக்கையை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றியவர்கள்தான். விபச்சாரம் செய்யாதஇ கள்ளக் காதலர்களை ஏற்படுத்தாதஇ கற்பொழுக்கமுடைய (அடிமைப்) பெண்களைஇ அவர்களுடைய எஜமானர்களின் அனுமதி பெற்று திருமணம் செய்யுங்கள்! அவர்களுக்குரிய மணக் கொடைகளை நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள். மணமுடிக்கப்பட்ட பின்பு அவர்கள் விபச்சாரம் செய்தால்இ சுதந்திரமான கன்னிப் பெண்களுக்குரிய தண்டனையில் பாதியே அவர்களுக்குண்டு. இதுஇ உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது. நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.
அல் குர்ஆன் - 4 : 25
மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான் :
இன்றைய தினம்இ தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் வழங்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உங்கள் உணவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை கொண்ட ஒழுக்கமான பெண்களையும்இ உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிலுள்ள ஒழுக்கமான பெண்களையும் விபச்சாரமாகவோஇ கள்ளக் காதலாகவோ இல்லாமல் அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதும் (அனுமதிக்கப்பட்டுள்ளது.) இறைநம்பிக்கையை யார் மறுக்கிறாரோ அவரது நற்செயல்கள் அழிந்து விடும். அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் இருப்பார்.
அல் குர்ஆன் - 5 : 5
விபச்சாரம் செய்தவன்இ ஒரு விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டான். (அதுபோல) விபச்சாரிஇ விபச்சாரம் செய்த ஒருவனையோ அல்லது இணைவைப்பவனையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டாள். இதுஇ இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.
அல் குர்ஆன் - 24 : 3
மேற்கூறிய அனைத்து குர்ஆன் வசனங்களும் விபச்சாரகர்களை திருமணம் முடிக்கக்கூடாது என்று தடுக்கிறது. இதை நபியவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் கூறியதாவது:
மர்ஸத் பின் அபீமர்ஸத் அல்ஃகனவீ அவர்கள் மக்கா(விலிருந்து மதீனா) விற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராக இருந்தார்.
(அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் கூறுகிறார்:)
மக்காவில் அனாக் எனும் விபச்சாரி ஒருத்தி இருந்தாள். (நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) அவள் என்னுடைய காதலியாக இருந்தாள்.
பின்னர் நான் நபி அவர்களிடம் வந்துஇ "அல்லாஹ்வின் தூதரே! நான் 'அனாக்'கைத் திருமணம் செய்துகொள்ளலாமா?' என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அப்போது இந்த இறைவசனம் இறங்கியது:
விபச்சாரியை விபச்சாரம் செய்பவனோ இணைவைப்பாளனோ அன்றி (வேறு யாரும்) மணமுடிக்கமாட்டார். (24:3) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உடனே என்னை அழைத்து என்னிடம் இந்த வசனத்தை ஓதிக்காட்டிவிட்டுஇ "அவளை நீர் மணமுடிக்காதீர்" என்று கூறிவிட்டார்கள்.'
ஸுனன் அபூதாவூது 2051 (1755 தமிழில்)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றவியல் தண்டனையில்) சாட்டையடி பெற்ற விபச்சாரன் அது போன்று சாட்டையடி பெற்ற விபச்சாரியையே திருமணம் செய்வான்.
ஸுனன் அபூதாவூது 2052 (1756 தமிழில்)
ஆக ஒரு முஃமின் விபச்சாரம் செய்பவர்களையோ அல்லது கள்ளக்காதல் வைத்திருப்பவர்களையோ திருமணம் செய்யக்கூடாது.
தடை செய்யப்பட்ட உறவுகள் - மஹ்ரம்
இணைவைப்பவர்கள்இ விபச்சாரம் செய்பவர்கள் மற்றும் கள்ளக்காதல் வைத்திருப்பவர்கள் போன்றவை தீய கொள்கை மற்றும் தீய நடத்தைகளினால் தடை செய்யப்பட்டவையாகும். இதுவல்லாமல் சில உறவு முறைகளை திருமணம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
உங்கள் தாய்மார்கள்இ உங்கள் மகள்கள்இ உங்கள் சகோதரிகள்இ உங்கள் தந்தையின் சகோதரிகள்இ உங்கள் தாயின் சகோதரிகள்இ உங்கள் சகோதரனின் மகள்கள்இ உங்கள் சகோதரியின் மகள்கள்இ உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்கள்இ உங்கள் பால்குடிச் சகோதரிகள்இ உங்கள் மனைவியரின் தாய்மார்கள்இ நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியரின் (முந்தைய கணவருக்குப் பிறந்த) உங்கள் பொறுப்பில் வளரும் மகள்கள் ஆகியோர் உங்களுக்குத் (திருமணம் செய்யத்) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அந்த மனைவியருடன் உடலுறவு கொள்ளாவிட்டால் (அவர்களை மணவிலக்குச் செய்துவிட்டு அவர்களின் மகள்களை மணந்து கொள்வதில்) உங்கள்மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவியரும் (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்றிணைத்துக் கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது.) முன்னர் நடந்து முடிந்ததை தவிர. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும்இ நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் - 4 : 23
மேலே கூறப்பட்ட உறவுகள் திருமணம் முடிப்பதற்கு தடை செய்யப்பட்ட உறவுகளாகும். இது மஹ்ரமான உறவுகள் என்று அழைக்கப்படும்.
அதாவது தாய்இ மகள்கள்இ சகோதரிகள்இ தந்தையின் சகோதரிகள் (மாமி)இ தாயின் சகோதரிகள் (சிற்றன்னைஇ பெரிய அன்னை)இ சகோதரனின் புதல்விகள்இ சகோதரியின் புதல்விகள் ஆகிய இரத்த பந்த உறவினர்களை திருமணம் முடிக்கக்கூடாது.
அதைப்போல் மனைவியின் தாய்இ (இரண்டாம்தரமாக திருமணம் செய்யப்பட்ட) மனைவியின் முன்னாள் கணவருக்குப் பிறந்த மகள்இ நமது மகனின் மனைவி (மருமகள்)இ தந்தையின் மனைவி (தனது தாயல்லாமல் வேறொரு பெண்ணை தனது தந்தை மணமுடித்திருந்தால்..) போன்ற திருமணத்தின் மூலம் ஏற்படும் பந்த உறவுகளைத் திருமணம் முடிக்கக்கூடாது.
பால்குடி உறவுமுறை
உறவு முறைகள் மூன்று விதங்களில் ஏற்படும். ஒன்று இரத்த உறவு முறை. இரண்டு திருமணம் மூலம் ஏற்படும் பந்த உறவு முறை. மூன்று பால்குடித்தல் மூலம் ஏற்படும் உறவு முறை.
இரண்டு நபர்களின் பிறப்பு வெவ்வேறு தாய்கள் மூலம் நிகழ்ந்திருந்தாலும் பால்குடித்து வளர்ந்தது ஒரே தாயிடமாக இருக்குமானால் அவ்விருவரும் சகோதர உறவைப் பெறுவார்கள். பாலூட்டியவள் பால்குடித் தாயாகக் கருதப்படுவாள். பாலூட்டியவளின் குழந்தைகளும் பால்குடித்தவருக்கு சகோதரத்துவ உறவைப் பெறுவார்கள். இவ்வாறு பால்குடித்தல் மூலம் ஏற்படும் மஹ்ரமான உறவுகளைத் திருமணம் செய்யக்கூடாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம்இ "பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவுகளில் மணமுடிக்கக்கூடாதவர்களைஇ பால்குடி உறவாலும் மணமுடிக்கக்கூடாது" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2854.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். (பால்குடி சகோதரர் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்டவர் என்பதால்) நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2855.
பால்குடி மூலம் ஏற்படும் உறவுமுறைகள் மஹ்ரமான உறவுமுறையைப் பெற்றால் அவர்களைத் திருமணம் முடிக்கக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமாெழி தெரிவிக்கிறது.
அதைப்போல் பால்குடி சகோதரி என்பதை அறியாமல் திருமணம் செய்து கொண்டவர்களை நபியவர்கள் பிரித்தும் வைத்திருக்கிறார்கள்.
உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்கள் :
நான் (உம்மு யஹ்யா பின்த் அபீ இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)'' என்று கூறினாள்.
எனவே (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களிடம் சென்றுஇ 'நான்' இன்னவர் மகள் இன்னவளை மணந்துகொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப்பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி 'நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்' என்று பொய் சொல்கிறாள்'' என்று சொன்னேன்.
(அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னைப் புறக்கணித்தார்கள்.
மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து 'அவள் பொய் தான் சொல்கிறாள்'' என்றேன்.
நபி(ஸல்) அவர்கள்இ 'அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிட்டுவிடு!'' என்று (யோசனை) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5104.
கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தவர்கள் பிற்காலத்தில் பால்குடி சகோதரத்துவ உறவைப் பற்றித் தெரிந்து கொண்டால் அவர்கள் பிரிந்துவிட வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமாெழி விளக்குகிறது.
ஒரு சேர மணமுடிக்கத் தடுக்கப்பட்டவர்கள்
இஸ்லாம் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணமுடிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அவ்வாறு பலதாரமணம் புரிபவர்கள் மனைவிமார்களுக்கிடையில் நீதமாக நடக்க வேண்டும். நீதமாக நடக்க முடியாதவர்கள் ஒரு மனைவியையே போதுமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பலதாரமணம் புரிவதற்கு சில உறவுமுறைகளை இஸ்லாம் தடுத்துள்ளது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.
ஸஹீஹ் புகாரி : 5109.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2742.
அல்லாஹ் கூறுகிறான் :
இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்றிணைத்துக் கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது.)
அல்குர்ஆன் 4 : 23
ஒரே நேரத்தில் ஒரு பெண்ணையும் அவளது மாமியையும் திருமணம் செய்யக்கூடாது.
ஒரே நேரத்தில் ஒரு பெண்ணையும் அவளது சின்னம்மா அல்லது பெரியம்மாவையும் மணமுடிக்கக்கூடாது.
ஒரே நேரத்தில் ஒரு பெண்ணையும் அவளது சகோதரியையும் திருமணம் செய்யக்கூடாது.
இந்த மூன்று தடைகளையும் மேற்கண்ட இரு நபிமொழிகள் மற்றும் குர்ஆன் வசனங்கள் தெரிவிக்கிறது. இதை நபியவர்கள் தனியாக விளக்கியும் கூறியிருக்கிறார்கள்.
உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) கூறினார் :
நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம்இ 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள்இ 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள்.
நான்இ 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்றேன்.
அதற்கு அவர்கள்இ 'என்னை அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்றார்கள்.
நான் 'தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!'' என்று கேட்டேன்.
'(என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என நபியவர்கள் கேட்கஇ நான் 'ஆம்' என்றேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள்இ 'அவள் (உம்மு ஸலமாவின் மகள்) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி இல்லாவிட்டாலும் கூடஇ அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டினார். எனவேஇ என்னிடம் உங்கள் பெண் மக்களையோஇ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:
ஸுவைபாஇ அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம்இ '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும்இ நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 5101.
அழ்ழஹ்ஹாக் பின் ஃபைரூஸ் அத்தைலமி தனது தந்தை கூறியதாக அறிவித்தார் : நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அவர்களிடம்இ ‘அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகிவிட்டேன். நான் இரண்டு சகோதரிகளை ஒருசேர திருமணம் முடித்துள்ளேன்’ என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்இ இருவரில் ஒருவரை உனது மனவிருப்பப்படி விவாகரத்து செய்துவிடு என்று கூறினார்கள்.
இப்னுமாஜா 1951
ஆகவே இதுவும் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட உறவுகளாகும்.
பாகம் 4 - திருமணத் துணையை தேர்வு செய்தல்
திருமணத் துணையைப் பொறுத்துத்தான் எதிர்வரக்கூடிய காலம் அமையும். திருமணத் துணை சரியானதாக அமைந்தால்தான் வாழ்க்கை மன நிம்மதியானதாக அமையும். திருமணத் துணை சரியாக அமையவில்லையாயின் வாழ்க்கை மோசமானதாக மாறிவிடும். ஆகவேதான் இஸ்லாம் துணையை தேர்வு செய்வதற்கு சிறந்த வழிகளைக் காட்டுகிறது.
இதில் முதலாவதாக பெண்களை தேர்வு செய்வதற்கான இஸ்லாமிய வழிகாட்டுதலைப் பார்க்கலாம்.
பெண் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்
புத்திக்கூர்மையுள்ள மனிதன் எந்தவொரு விஷயத்திலும் நுழைவதற்குமுன் அதன் நன்மை தீமைகளைக் குறித்து அறிந்த பின்பே அதில் நுழைவான்.
ஆகவேதான் சிறந்த வாழ்க்கைத் துணைவியை தேர்வு செய்வதில் அக்கறை காட்டுமாறு இஸ்லாம் கூறியுள்ளது. இவ்விஷயத்தை நபிகளார் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
மிகச் சிறந்த சேமிப்பு
ஸவ்பான் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“எவர்கள் தங்கத்தையும்இ வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் நற்செய்தியினை நீர் அறிவிப்பீராக! (9:34) என்ற திருமறை வசனம் இறங்கியபோதுஇ நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம்.
அப்போது சில தோழர்கள்இ "தங்கம் மற்றும் வெள்ளியைக் குறித்தல்லவா இவ்வசனம் பேசுகின்றது. சேகரித்து வைக்க வேண்டிய மிகச் சிறந்த செல்வம் எது? என்று நமக்குத் தெரிந்தால் அதனை நாம் சம்பாதிக்கலாமே" என்று கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைவனைத் துதிக்கும் நாவுஇ நன்றியுள்ள இதயம்இ கணவனுடைய இறை நம்பிக்கைக்கு உதவிகரமாக இருக்கும் இறைநம்பிக்கை கொண்ட மனைவி. (ஆகியவையே சேகரிப்பதில் மிகச் சிறந்தது)"
(திர்மிதி 3094இ இப்னுமாஜா 1856இ முஸ்னது அஹமது 23101)
‘மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்தவை இறைநம்பிக்கைக் கொண்ட மனைவிதான்’ என்று நபிகளார் கூறியதிலிருந்து மனைவியை தேர்வு செய்வது முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்..
அதைப்போல் ‘தங்கம் மற்றும் வெள்ளியை சேகரிப்பதைவிட மனைவியை சேகரிப்பதுதான் மிக சிறந்தது’ என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்று மக்கள் தங்கம்இ வெள்ளியை சேகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். இறைநம்பிக்கைக் காெண்ட மனைவியை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இது தவறானது. ஆகவே நாம் நமது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
இம்மை மற்றும் மறுமையின் நலன் பெற
அதைப்போல் மற்றொரு நபிமொழியில் சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் :
"நான்கு விஷயங்கள் யாருக்குக் கொடுக்கப்படுகின்றதோ அவர்இ இம்மை மற்றும் மறுமையின் நலன்களைப் பெற்றவர் ஆவார்.
(அவையாவன) நன்றியுணர்வு கொண்ட உள்ளம்இ இறைவனை நினைவு கூரும் நாவுஇ துன்பத்தில் பொறுமையை மேற்கொள்ளும் உடல்இ தனது உடலுக்கும் தன் கணவனின் உடமைக்கும் துரோகம் இழைக்காத மனைவி"
(சிறந்த அறிவிப்பாளர் வரிசையுடன் இமாம் தபரி இதனை அறிவிக்கின்றார்) முஅஜமல் அவ்ஸத் 7212இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 4429.
(இமாம் அல்பானி இதை பலவீனமானது என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் இமாம் சுயூத்தி இதற்கு ஹசன் தரம் வழங்கியுள்ளார்கள். அல்லாமா முன்திரி அறிவிப்பாளர்களின் தொடர்ச்சியை நல்லவர்கள் (ஜய்யித்) என்று அறிவித்துள்ளார்கள். மேலும் 'அல் முஅஜமுல் அவ்ஸத்தில் அறிவிப்பாளர்களின் தொடர்ச்சியை அல்லமா ஹைதமி உண்மையானவர்கள் என்று அறிவித்துள்ளார். தர்கிப்இ தொகுதி. 2 பக். 398 மற்றும் மஜ்மாவுஸ் ஜவாய்த்இ தொகுதி. 4 பக். 273.
ஒரு வேளை இந்த ஹதீஸ் பலவீனமானதாகக் கருதப்பட்டாலும் அதன் கருத்துக்கள் இஸ்லாமிய கருத்துக்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை)
மேற்கூறிய நபிமொழியில் சிறந்த மனைவியால் இம்மை மற்றும் மறுமையில் ஏராளமான நன்மைகளைப் பெறமுடியும் என்று நபிகளார் வழிகாட்டியிருக்கிறார்கள். ஆக நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைய நலன்கள் கிடைக்க வேண்டுமானால் நாம் சிறந்த துணையை தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டும்.
மகிழ்ச்சியைத் தருபவை
இறைவன் ஆண்களுக்குத் துணையாகப் பெண்களைப் படைத்திருப்பதே மனநிம்மதியை தர வேண்டும் என்பதற்குத்தான்.
எனவே நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும் என்றால் சிறந்த துணையை தேர்வு செய்ய வேண்டும்.
சஅது இப்னு அபீ வக்காஸ் ரலி அறிவிப்பதாவது :
நான்கு விஷயங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன: ஒரு நல்ல மனைவிஇ ஒரு விசாலமான வீடுஇ ஒரு நல்ல அண்டை வீட்டார்இ மற்றும் ஒரு வசதியான வாகனம். நான்கு விஷயங்கள் துன்பத்தைத் தருகின்றன: ஒரு கெட்ட அண்டை வீட்டார்இ ஒரு கெட்ட மனைவிஇ ஒரு கெட்ட அண்டை வீட்டார்இ மற்றும் ஒரு கெட்ட வாகனம்
ஸஹீஹ் அல் தர்கிப் 2576இ இப்னு ஹிப்பான் 4032இ தாரீகுல் பாக்தாத் 12ஃ99
இமாம் ஹாகிம் அறிவிக்கும் மற்றொரு நபிமொழியில் இடம்பெற்றிருப்பதாவது :
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
"மனிதனுக்கு மனநிம்மதி தருபவை மூன்று விஷயங்கள் ஆகும்:
1) நல்ல மனைவி. அவளைப் பார்க்கும்போது உனக்கு சந்தோஷம் ஏற்படும். (பிரயாணம் செய்கையில்) அவளை விட்டு விலகும்போது அவளது உடல் மற்றும் உனது செல்வத்தைக் குறித்து உனக்கு சமாதானம் ஏற்படும். 2) வேகமாகச் செல்லும் நல்ல வாகனம். உன்னை உனது தோழர்களிடம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். 3) விசாலமான பயன்மிக்க வீடு.
மனநிம்மதியைக் கெடுப்பவை மூன்று விஷயங்கள் ஆகும்: 1) கெட்ட மனைவி அவளைப் பார்ப்பதை நீ விரும்பமாட்டாய். அவளது நாவு எப்போதும் உனக்கு எதிராக சுழன்றுகொண்டே இருக்கும். அவளை விட்டு விலகும்போது அவளது உடல் மற்றும் உனது செல்வத்தைக் குறித்து உனக்கு சமாதானம் ஏற்படாது. 2) மெதுவாகச் செல்லும் வாகனம். அதனை அடித்தால் உனக்குத் தான் சடைவு ஏற்படும். அடிக்காமல் விட்டுவிட்டால் உன்னை உனது தோழர்களிடம் அழைத்தும் செல்லாது. 3) நெருக்கடியான பயனற்ற வீடு".
அல்பானியின் அஸ்ஸஹீஹா 1047இ ஹாகிம் 2684
இதிலிருந்து ஒரு ஆண் மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் பெற வேண்டுமென்றால் அவன் சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
பெண் தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை
ஆகவே நாம் எப்படிப்பட்ட பெண்ணை நமது வாழ்க்கைத் துணையாக அல்லது நமது ஆண் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதைப் பற்றிய மார்க்கத்தின் வழிகாட்டுதலை இப்போது பார்ப்போம்.
மார்க்கப்பற்று
நமது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய முதலாவது முக்கிய அம்சம் மார்க்கப் பற்றாகும்.
இதை நபியவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அன்றைய காலம் முதல் தற்காலம் வரையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுகிறாள். அந்த நோக்கங்கள் அனைத்தையும் நான்கு வகைக்குள் சுருக்கி நபியவர்கள் தெரியப்படுத்துகிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவை
1. அவளுடைய செல்வத்திற்காக
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக
4. அவளுடைய மார்க்கத்திற்காக.
எனவேஇ மார்க்கம் உடையவளை (திருமணம் செய்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
ஸஹீஹ் புகாரி : 5090.
ஒரு ஆண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெறும் செல்வத்திற்காகவோஇ அழகிற்காகவோ அல்லது குடும்பப் பாரம்பரியத்திற்காகவோ பெண்ணை தேர்வு செய்யாமல் மார்க்கத்திற்காக தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்வதுதான் இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.
நல்லொழுக்கம்
மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பவையாகும். மார்க்கப்பற்றுள்ளவள் நல்லொழுக்கமுள்ளவளாகத்தான் இருப்பாள். அப்படிப்பட்ட பெண்ணையே நாம் தேர்வு செய்ய வேண்டும். மாறாக வெறும் மார்க்க அறிவைப் பெற்று நல்லொழுக்கம் இல்லாமல் இருந்தால் அப்பெண்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
இதுபற்றி நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபியவர்கள் உமர் (ரலி) அவர்களிடம்இ ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? (என்று கேட்டு பின்னர்) அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் (என்று பதலளித்தார்கள்). அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று கூறினார்கள்.
நூல் : நஸாஈ 3231இ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே. பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல (ஒழுக்கத்தை உடைய) மனைவியே.
ஸஹீஹ் முஸ்லிம் : 2911.
மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் நல்லொழுக்கத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு தெரிவிக்கிறது. ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்ணையே நாம் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.
ஏனெனில் விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல் வைத்துக் கொண்டவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளதைப்போல நல்ல ஒழுக்கமுள்ள பெண்களை திருமணம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
பொருந்திக் கொள்ளும் பெண்
இஸ்லாமிய மார்க்கம் ஆணின் மீதுதான் பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது. ஆண்தான் சம்பாத்தியம் செய்து தனது குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.
ஒரு பெண் அந்த பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் பாதுகாகக்ககூடியவளாக இருக்க வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு முறை.
அந்த அடிப்படையில் நமது பொருளாதார நிலையை பொருந்திக்கொள்ளும் பெண்ணையே நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
இதற்கு இப்றாஹிம் நபியிடத்தில் முன்மாதிரி அமைந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர்.
இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொ)ண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள்.
அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்.
அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.
உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.
ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.
அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்நதார். அதன் பிறக அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்.
அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார் என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3364.
மேற்கூறிய சம்பவத்தின் மூலம் எப்படிப்பட்ட பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை இப்றாஹிம் நபி நமக்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.
நமது பொருளாதாரத்தையும்இ நமது நிலையையும் பொருந்திக் கொண்டு அதில் திருப்தி காணும் பெண்ணையே மனைவியாக ஆக்கிக் கொள்வது சிறந்தது என்பதை இதன்மூலம் அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.
இதை முஹம்மது நபியும் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்துஇ உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர்இ தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்கஇ பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்" என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டுஇ "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்கஇ நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால்இ நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள்.
(இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். "இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்" என்று கூறினார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கிஇ அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள்.
அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கிஇ அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா?" என்று அவர்களிருவருமே கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர்இ "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்" என்று கூறினர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள்.
பிறகு
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا⭘ وَإِن كُنتُنَّ تُرِدْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَـٰتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًۭا⭘
நபியே! உமது மனைவியரிடம்இ “நீங்கள் இவ்வுலக வாழ்வையும்இ அதன் பகட்டையும் விரும்புவோராக இருந்தால்இ வாருங்கள்! உங்களுக்கு நான் வாழ்க்கை வசதிகளை அளித்துஇ அழகிய முறையில் உங்களை மணவிலக்குச் செய்துவிடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும்இ அவனது தூதரையும். மறுமை வீட்டையும் விரும்புவோராக இருந்தால்இ உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார்படுத்தியுள்ளான்” என்று கூறுவீராக!
அல் குர்ஆன் - 33 : 28இ29
இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றுஇ "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்இ "அது என்னஇ அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுஇ "நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோஇ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாகஇ (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்"என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2946.
தனது பொருளாதாரத்தில் திருப்தி ஏற்படாத மனைவிமார்கள் தன்னை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முஹம்மது நபியவர்கள் தனது மனைவியிடத்தில் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் நமது பொருளாதாரத்தில் திருப்தியடையாத மனைவியுடன் வாழ்வது சிரமம். ஆகவேதான் பொருளாதாரத்தில் திருப்தியடையும் பெண்ணை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.
கட்டுப்படும் பெண் சிறந்தவள்
மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்றி தனது பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்களை திருமணம் செய்வதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
நல்லொழுக்கமுள்ள பெண்கள் எனப்படுவோர் பணிந்து நடப்போரும்இ அல்லாஹ் பாதுகாக்கச் சொன்ன விதத்தில் (கணவன்) மறைவாக உள்ள நேரத்தில் (தம்மைப்) பாதுகாத்துக் கொள்வோருமே ஆவர்.
அல்குர்ஆன் 4 : 34
கணவனுக்குப் பணிந்து கட்டுப்பட்டு நடக்கும் பெண்களையே நாம் திருமணம் செய்ய வேண்டும் என்று மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்.
இதை நபியவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு சலாம் ரலி அறிவிப்பதாவது.
நபி (ஸல்) கூறினார்கள் : கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பவளாகவும்இ அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாகவும்இ (கணவன் இல்லாத நேரங்களில்) தன்னையும் கணவனின் சொத்துக்களையும் சிறந்த முறையில் பாதுகாக்கும் மனைவியே பெண்களில் சிறந்தவள் ஆவாள்.
ஆதாரம் : இப்னு ஹஸ்ம் 10ஃ334இ ஸஹீஹ் நஸாயீ 3231
கணவன் குடும்பத்தின் நிர்வாகியாக இருப்பதால் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமை. அவ்வாறு கட்டுப்பட்டு நடந்தால்தான் குடும்பம் என்ற அமைப்பு சீராக இயங்கும். இல்லையெனில் குடும்ப அமைப்பு சீர்குலைந்துவிடும். ஆகவே இவ்விஷயத்திலும் ஒரு ஆண் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு உமர் ரலியின் வாழ்வில் சிறந்த முன்மாதிரி அடங்கியுள்ளது.
அஸ்லமிடமிருந்து அவரது மகனான அஸ்ஸுபைர் கேட்டு அவரிடமிருந்து அவரது மகனான அப்துல்லாஹ் கேட்டு அறிவிப்பதாவது : நான் (அஸ்லம்) கலீஃபா உமர் இப்னுல் கத்தாபுடன் மதீனாவில் இருந்தேன். மதீனாவிலுள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக அடிக்கடி மாறுவேடத்தில் செல்வது உமர் ரலியின் வழக்கம்.
ஒரு நாள் கலீஃபா உமர் ரலியுடன் நான் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பால்காரி வீட்டின் அருகில் நின்றோம். அங்கு பால் விற்கும் பெண் தனது தாயின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்துக் கொண்டிருந்தாள். அதை நாங்கள் செவியுற்றோம்.
அவளது தாய் பாலில் தண்ணீரைக் காெண்டு கலப்படம் செய்யுமாறு கூறினாள். நாம் பாலில் தண்ணீர் கலந்தால் அது உமருக்கு தெரியவா போகிறது(!) என்று அந்த பெண்ணின் தாய் கூறினாள்.
அதற்கு அந்த பெண் ; தாயே! கலீஃபா உமரின் கட்டளையை பகிரங்கமாகவும் மீறமாட்டேன். ரகசியமாகவும் மீறமாட்டேன். உமருக்குத் தெரியாவிட்டால் என்ன? உமரைப் படைத்தவனுக்கு தெரியுமல்லவா? என்று கூறினாள்.
உடனே உமர் ரலி இந்த வீட்டை நியாபகம் வைத்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார்.
மறுநாள் காலைஇ உமர் ரலி என்னிடம் கூறினார் : அஸ்லமே! அந்த பெண் நேற்று கூறியதில் உறுதியாக இருந்தாளா? என்பதை அறிய அவளது வீட்டிற்கு சென்று பால் வாங்கிக் கொண்டு வா. அதில் தண்ணீர் கலந்துள்ளதா? என்று பார்ப்போம் என்று கூறினார். பால் வாங்கிப் பார்த்ததில் அதில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை அறிந்து கொண்டோம். பிறகு உமர் ரலி அந்த பெண்ணையும் அவளது தாயையும் தனது நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்தார். அந்த பெண்ணின் நற்செயலுக்கான பரிசாக தனது மகன் ஆசிமை திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கினார். அந்த பெண் அதை ஏற்றுக் கொண்டாள்.
இந்த தம்பதியினருக்கு லைலா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்தான் உமர் இப்னு அப்துல் அஸீஸின் தாயார் ஆவார். (இமாம் இப்னு அல் ஹாகிமின் சீரத் உமர் பக்கம் 19-20இ இமாம் இப்னு அல் ஜவ்ஸிய்யாவின் சீரத் உமர் பக்கம் 10)
உமர் ரலி அவர்கள் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணை தனது மகனுக்குத் திருமணம் முடித்து வைத்திருக்கிறார்கள். ஏனெனில் ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பவள் தனது கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பாள். ஆகவேதான் அந்த பெண்ணை தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
இதில் நமக்கு சிறந்த முன்மாதிரி அமைந்துள்ளது.
அன்பு செலுத்துபவள் மற்றும் அதிக குந்தைகளை பெற்றெடுக்க விரும்புபவள்
திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று சமூக உருவாக்கமாகும். ஆகவேதான் அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களைத் திருமணம் செய்யுமாறு நபியவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ அழகும் உயர் குலத்தையும் சேர்ந்த பெண்ணை நான் கண்டுள்ளேன். ஆனால் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அந்த பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகளார்இ இல்லை (வேண்டாம்) என்று கூறினார்கள்.
அவர் மீண்டும் வந்து கேட்டார். நபிகளார் அப்போதும் தடுத்தார்கள்.
அவர் மூன்றாவது முறையாக கேட்டபோதுஇ
”உன்னிடம் அன்பு செலுத்துபவளையும்இ உனக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொடுப்பவளையும் திருமணம் செய்துகொள். நாளை கியாமத் நாளில் மற்ற உம்மத்துக்களை விட என் உம்மத்து அதிகளவில் இருப்பது கண்டு பெருமைப் பட விரும்புகிறேன்.” என்று கூறினார்கள்.
அபூதாவூத் 2050இ நஸாஈ 3227 ஸஹீஹ்இ ஷேக் அல்பானியின் ” இர்வா அல் கலீல்.”1784.
மேற்கண்ட நபிமொழியில் இரண்டு குணங்களை நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அன்பு செலுத்துபவள்
அதிக குழந்தையைப் பெற்றெடுப்பவள்
மேற்கூறிய இரண்டு குணங்களையும் அறிந்து கொள்வதற்கு அவர்களது தாயை கவனிக்கலாம். பெண்ணின் தாய் அதிக குழந்தையையும் அவர்களது கணவனிடத்தில் அன்பாகவும் நடந்து கொள்பவர்களாக இருந்தால் அவர்களது மகள்களும் அவ்வாறு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் தாயைப் போல் சேய் என்பது இயற்கையான அமைப்பாகும். ஆகவே இத்தகைய பெண்களை தேர்வு செய்வதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுபற்றி ஃபிக்ஹுஸ் ஸுன்னா என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
ஒரு பொருளில் இருக்கும் நன்மை; அந்தப் பொருளில் இருந்து உருவாகும் மற்றொரு பொருளிலும் காணப்படும் என்பதே இயற்கை.
நபி (ஸல்) கூறினார்கள் :
மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றால்இ இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறுவழியின்றி) சிக்கிக் கொள்ளும் வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள்.
ஸஹீஹ் புகாரி : 3496.
ஓர் அரபுக் கவிஞன் பாடினான்:
உழுபவன்இ வாய்க்காலை மட்டுமே அமைக்க முடியும்! பேரீத்த மரம் முளைப்பது அதன் விதையிலிருந்துதானே!
பிள்ளைப்பேறுஇ திருமணத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். எனவே அதிகக் குழந்தைகளைப் பெறக்கூடியவர்களை மனைவியாகத் தேர்வு செய்யுமாறு இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. அவளுடைய உடல் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டுஇ அவளுடைய சகோதரிகள் மற்றும் அவளுடைய தாய் தந்தையரின் சகோதரிகளுடன் ஒப்பிட்டு நோக்கி இதனை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் மேல் அதிக அன்பு செலுத்துபவர்கள்
அதைப்போல் குழந்தையின் மேல் அன்பு செலுத்தும் பெண்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)" அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.
அப்போது தான் நபி (ஸல்) அவர்கள்இ "ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள்இ நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4947. ஸஹீஹ் புகாரி : 5082.
மேற்கூறிய நபிமொழியில் கணவனின் செல்வத்தை பாதுகாப்பவளும்இ குழந்தையின் மீது அன்பு செலுத்துபவளும் சிறந்தவள் என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே அப்படிப்பட்ட பெண்ணை தேர்வு செய்ய முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
கன்னிப் பெண்ணிற்கு முன்னுரிமை
இஸ்லாமிய மார்க்கம் இரண்டாம் திருமணத்தை அனுமதிக்கிறது. விதவைக்கு வாழ்வளிப்பதை ஊக்கப்படுத்துகிறது. இருந்தபோதிலும் தனது முதல் திருமணத்திற்கு கன்னிப் பெண்ணை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்று நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!' என்று கேட்டார்கள்.
நான்இ 'ஆம்' என்று கூறினேன்.
'கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?' என்று கேட்டார்கள்.
நான்இ '(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)' என்று கூறினேன்.
'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள்.
நான்இ 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவேஇ பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாகஇ அவர்களுக்குத் தலை வாரிவிட்டுஇ அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள்இ 'நீ செய்தது சரிதான்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4052.
மேற்கூறிய நபிமொழியில் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே? என்று நபியவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் கன்னிப் பெண்ணை மணப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
அடிமையை மணத்தல்
நபியவர்கள் அடிமையை விடுவிப்பதற்கு நிறைய முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள். உலகத்தில் அடிமை முறையை ஒழித்துக் காட்டி வெற்றியடைந்தது இஸ்லாம்தான். அந்த வரிசையில்தான் அடிமையை விடுதலை செய்து அவர்களையே திருமணம் செய்து அவர்களுக்கு வாழ்வளிப்பதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தம்முடைய அடிமைப் பெண்ணை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்துஇ தாமே அவளை மணந்துகொண்ட ஒருவருக்கு இரட்டை நன்மைகள் உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2795.
அனஸ் அவர்கள் கூறியதாவது:
நபி அவர்கள் (கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்தார்கள். அதையே அவர்களுடைய மஹ்ராக ஆக்கி (தாமே அவர்களை மணந்து) கொண்டார்கள்.
ஸுனன் அபூதாவூத் 2054 (தமிழிர் 1758) புகாரி 947இ 4200இ 5086.
இந்த நபிமொழியின் அடிப்படையில்இ ஏழையாக இருந்து திருமணம் முடிக்கமுடியாமல் அவதிப்படுபவர்களை திருமணம் செய்வதின்மூலம் நிறைய நன்மைகளை கொள்ளையடிக்கலாம்.
குறையிருந்தால் புறக்கணிக்கலாம்
இஸ்லாமிய மார்க்கம் திருமணம் செய்வதற்கு எப்படிப்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்? என்று கூறியிருப்பதைப் போன்று வெளித்தோற்றத்தில் குறையிருக்கும் பெண்களை நிராகரிப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன்.
அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்துஇ தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "இல்லை" என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "அவ்வாறாயின்இ நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில்இ அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2783.
மதீனாவில் அன்சாரிகளான மதினாவாசிகளும் முஹாஜிர்களாக மக்காவாசிகளும் வசித்து வந்தார்கள். அங்கிருந்த அன்சாரிப் பெண்களின் கண்களில் சிறிது குறை இருந்தது. அதை சில முஹாஜிர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆகவேதான் அவர்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளுமாறு நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து வெளிப்புறத்தில் சில குறைகள் இருந்தால் அதை அடிப்படையாக வைத்து நிராகரிக்கலாம் என்பது விளங்குகிறது.
திருந்தியவர்களை மணக்கலாம்
மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்தான். அவர்களில் சிறந்தவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுத் திருந்தியவர்கள்.
ஒருவர் தவறிழைத்து பின்னர் மன்னிப்புக் கேட்டுத் திருந்தினால் அவரை அல்லாஹ் மன்னித்துவிடுவான். அல்லாஹ்வே மன்னிக்கும்போது அப்படிப்பட்டவர்களை நாம் மன்னிக்காமல் இருப்பது அநியாயமாகும்.
அந்தவகையில் தவறு செய்து திருந்தியவர்களை மணந்து காெள்ளலாம்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :
மக்காவை வெற்றி கொண்ட போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின் கை துண்டிக்கப்பட்டது.
(அவரைப் பற்றி) 'அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்தாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை (அறிந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 2648.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனையைப் பெற்று பின்னர் திருந்திய பெண்ணை சஹாபாக்கள் மணந்துள்ளார்கள். அதை நபியும் அஙகீகரித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிமாெழி தெரிவிக்கிறது.
இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள். அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொல்ல மாட்டார்கள்; விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யார் இதைச் செய்கிறாரோ அவர் தண்டனையை அடைவார். அவருக்கு மறுமை நாளில் தண்டனை இரட்டிப்பாக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவராக என்றென்றும் இருப்பார். பாவ மன்னிப்புக் கோரிஇ இறைநம்பிக்கை கொண்டுஇ நற்செயல் செய்தோரைத் தவிர! அவர்களுடைய தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும்இ நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 25 : 68 - 70
இவ்வசனத்தில் இணைவைப்புஇ கொலைஇ விபச்சாரம் போன்ற பாவங்களில் ஈடுபட்டு பின்னர் திருந்திவாழ்ந்தவர்களை அல்லாஹ் மன்னிப்பதாக சொல்லிக்காட்டுகிறான். ஆகவே இதுபோன்று பெரும்பாவங்களில் ஈடுபட்டு பாவமீட்சி செய்திருந்தால் அவர்களையும் மணக்கலாம்.
பெண்ணைப் பார்ப்பது சிறந்தது
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
"உங்களுள் யாரேனும் ஒரு பெண்ணிடம் திருமண ஒப்பந்தம் பேசினால் அப்பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக எது அவனைத் தூண்டியதோ அதை அவன் பார்க்க முடிந்தால் அவ்வாறு செய்யட்டும்"
ஜாபிர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஒரு பெண்ணிடம் திருமணம் ஒப்பந்தம் பேசினேன். அப்போது நான். அவளை விட்டு. மறைந்துகொண்டு அவளைத் திருமணம் முடிப்பதற்காக எது என்னைத் தூண்டியதோ அதை அவளிடம் கண்டேன். பிறகு அவளை மணந்துகொண்டேன்.
ஸுனன் அபூதாவூது 2082 (தமிழில் 1783)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள்இ "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில்இ அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை)உள்ளது"என்றார்கள். அதற்கு அந்த மனிதர்இ "அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்" என்றார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2784.
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: திர்மிதீ 1087இ நஸயீ 3235.
முகீரா பின் ஷுஃபா ரலி அறிவிக்கிறார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ நான் திருமணம் செய்து கொள்ள முன்மொழிய விரும்பிய ஒரு பெண்ணைப் பற்றிச் சொன்னேன்.
அதற்கு நபியவர்கள்இ 'போய் அவளைப் பார். ஏனென்றால் அது உங்களுக்கு இடையே அன்பை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது.' என்று கூறினார்கள்.
எனவே நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணிடம் சென்று அவளுடைய பெற்றோர் மூலம் திருமணத்தை முன்மொழிந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் சொன்னதை நான் அவர்களிடம் சொன்னேன். அது அவர்களுக்குப் பிடிக்காதது போல் இருந்தது.
பின்னர் அந்தப் பெண் தன் திரைக்குப் பின்னால் இருந்துஇ 'அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் அப்படிச் செய்யச் சொன்னால்இ அதைச் செய்யுங்கள். இல்லையெனில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (அவ்வாறு செய்ய வேண்டாம்) என்று உங்களிடம் கூறுகிறேன் என்று கூறுவதை நான் கேட்டேன்.
"அவள் அதை ஒரு தீவிரமான விஷயமாகக் கருதியது போல் இருந்தது. அதனால் நான் அவளைப் பார்த்து திருமணம் செய்து கொண்டேன்."
மேலும் அவர் அவளுடன் எவ்வளவு நன்றாகப் பழகினார் என்பதைக் குறிப்பிட்டார்.
சுனன் இப்னுமாஜா 1866
இஸ்லாமிய மார்க்கம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் தனி முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை மேற்கண்ட செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எந்தப் பகுதியைப் பார்க்கலாம்
ஒரு ஆண்இ தான் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணின் முகத்தையும் முன்கைகளையும் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஏனெனில் திருமணம் முடிக்கின்ற வரையில் அவ்விருவரும் அந்நியர்களே. ஆகவே அவரை ஹிஜாபுடன் பார்ப்பதற்குத்தான் அனுமதி உள்ளது.
இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள்இ (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். அவர்கள் தமது கணவர்கள்இ தமது தந்தையர்இ தமது கணவர்களின் தந்தையர்இ தமது மகன்கள்இ தமது கணவர்களின் மகன்கள்இ தமது சகோதரர்கள்இ தமது சகோதரர்களின் மகன்கள்இ தமது சகோதரிகளின் மகன்கள்இ தம்(மைப் போன்ற) பெண்கள்இ தமது அடிமைகள்இ ஆண்களில் (பெண்கள்மீது) விருப்பமில்லாத பணியாளர்கள்இ பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அறியாத சிறுவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் அவர்கள் தமது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். தமது அலங்காரத்தில்இ தாம் மறைத்துள்ளவை அறியப்பட வேண்டும் என்பதற்காகத் தமது கால்களால் அடி(த்து நட)க்க வேண்டாம். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்!
அல்குர்ஆன் 24 : 31
அதைப்போல் தனிமையிலும் சந்திப்பது கூடாது. அதையும் மார்க்கம் தடுத்துள்ளது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3006.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் எவரும் ஓர் அந்நியப் பெண்ணுடன் அப்பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவரும் உடன் இல்லாதபோது - தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்."
(அஹ்மத் 14657)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆமிர் பின் ரபீஆ (ரலி) கூறுகின்றார்: "தனக்கு ஹலால் அல்லாத பெண்ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான். திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவராவது இருந்தாலே தவிர".
(அஹ்மத் 15696)
ஆக மேற்கூறிய வழிமுறையை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்களை தனிமையில் சந்திக்கக்கூடாது. அவர்களிடத்தில் குலைந்து பேசக்கூடாது. ஹிஜாப் இல்லாமல் பேசக்கூடாது.
ஆண் தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை
ஒரு பெண் தன்னை திருமணம் முடிக்கவிருக்கும் ஆணைத் தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். அல்லது பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்கான துணையைத் தேர்வு செய்வதில் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
ஏனெனில் பெண்கள் யாரை திருமணம் செய்கிறார்களோ அவர்களது நிர்வாகத்தின் கீழ் வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்படக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்தவகையில் குடும்பம் என்ற அமைப்பின் நிர்வாகி தவறானவனாக இருந்தால் அந்த குடும்பமே சீர்குலைந்துவிடும். அவனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பெண்களின் நிலைமையை கேள்விக்குறியாகிவிடும். எனவே இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஆதலால்தான் அல்லாஹ்வும் வேதக்கார ஆண்களை திருமணம் செய்வதற்கு முஃமினான பெண்களுக்கு தடை விதித்திருக்கிறான். வேதக்காரப் பெண்களை திருமணம் செய்வதற்கு முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும் பெண்களுக்கு அது அனுமதிக்கப்படவில்லை.
ஏனெனில் எந்தவொரு முஃமினும் இறைமறுப்பாளரின் கட்டுப்பாட்டின் கிழ் இருக்கக்கூடாது என்பதே இந்த தடையில் உள்ள நுட்பமாகும்.
இதுகுறித்து ஆயிஷா மற்றும் அஸ்மா (ரலி) கூறுகின்றார்கள் : ''திருமணம் என்பது அடிமைத்தளை ஆகும். ஆகவேஇ தன் அன்பு மகளை எவரிடத்தில் ஒப்படைக்கப் போகின்றோம் என்பது குறித்து ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்". (அல் இஃப்ஸாஹ் அன் அஹாதீஸ் அன்நிகாஹ் 71)
இப்னு தைமிய்யா கூறுகின்றார்: ஒழுக்கக்கேட்டில் மூழ்கி இருப்பவனுக்கு ஒருபோதும் மணமுடித்து வைக்கக் கூடாது. (மஜ்மஉல் ஃபதாவா)
இதுபோல் மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஆணைத் தேர்வு செய்வதில் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
மார்க்கப்பற்று
ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி நமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கு மிகவும் தகுதியான பண்பு மார்க்கப் பற்றாகும்.
ஆகவே மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் உள்ள ஆணையே நமது வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்ய வேண்டும். அதில்தான் இம்மை மறுமை வெற்றி அமைந்திருக்கும்.
ஏனெனில் மார்க்கப் பற்றும் நல்லொழுக்கமும் மிக்க ஆணுக்கு நமது மகளை திருமணம் செய்துகொடுத்தால் அவன் நமது மகளை நல்லமுறையில் பார்த்துக் கொள்வார். நமது மகளை மார்க்க அடிப்படையில் வழிநடத்துவார். அது மறுமை வாழ்வை சிறப்பாக்கும். அவருக்கு நமது மகளைப் பிடித்திருந்தால் அவள்மீது பிரியம்காட்டி கண்ணியம் வழங்குவார். இதனால் இவ்வுலக வாழ்வும் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
ஒருவேளை அவருக்கு நமது மகளைப் பிடிக்காமல் போனாலும் அதனால் கொடுமை செய்யமாட்டார். அவளுக்கு அநியாயம் இழைக்கமாட்டார்.
ஆகவேதான் முன்சென்ற மார்க்க அறிஞர்கள் தங்களது மகள்களுக்கு மார்க்கப்பற்றும் ஒழுக்கமும் நிறைந்த ஆணையே மணமகனாக தேர்வு செய்தார்கள். இதற்கு உதாரணம்தான் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள்.
ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) தாபியீன்களில் பேரறிஞர். அன்றைய உமைய்யாக்களின் கலீஃபா அல் வலீத் இப்னு அப்துல் மலிக் தம்முடைய மகனுக்கு அவருடைய மகளைத் திருமணம் பேசினார். ஆனால் கலீஃபாவின் மகனுக்குத் தமது மகளை மணமுடித்துக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். அபூ விதாஆ எனும் தமது ஏழை மாணவர் ஒருவருக்கு தமது மகளை மணம் செய்துகொடுத்தார். கலீஃபாவின் மகனைவிட அந்த மாணவரே அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றவர் என்று ஸயீத் இப்னுல் முஸய்யப் கருதியிருந்தார். (சியரு அஃலாமுன் நுபுலாஇ இப்னுல் ஜவ்ஸியி்ன் ஸிஃபத் அல் ஸஃப்வா)
தொழுபவன்
தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கிய வணக்க வழிபாடாகும். கலீமாவிற்கு அடுத்தபடியாக முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய காரியம் தொழுகையாகும். தொழாதவனை காஃபிர் என்று நபியவர்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையை கைவிடுவது தான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)இ
நூல் : முஸ்லிம்-116
அதுமட்டுமல்லாமல் மறுமைநாளில் இறைவன் கேட்கும் கேள்விகளில் முதலாவது கேள்வி தொழுகையைப் பற்றித்தான்.
''மறுமை நாளில் ஒரு மனிதனின் செயல்களில் தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சரியாக இருந்தால் அவன் வெற்றியும் ஈடேற்றமும் அடைவான். அது சீர்கெட்டிருந்தால் அவன் நஷ்டமும் இழப்பும் அடைவான். அவனது கடமைகளில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் எனது அடியானிடம் ஏதேனும் உபரியான தொழுகை உண்டா பாருங்கள் என்று அல்லாஹ் கூறுவான். கடமைகளில் ஏற்பட்ட குறைவு அதன் மூலம் நிறைவு செய்யப்படும். ஏனைய எல்லா வணக்கங்களும் இவ்வாறே அமையும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள் - அபூதாவூத் 864இ திர்மிதீ 413இ நஸயீ 466இ அஹ்மத் 9494)
இறைவன் மறுமையில் கேட்கும் கேள்விகளில் முதலாவதாக தொழுகை இருக்கும்போதுஇ நாம் திருமணம் செய்யவிருக்கும் ஆணிடம் நீங்கள் தொழுகிறீர்களா? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது.
தொழுகையில் ஈடுபடும் ஆணையே நாம் திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் அது வெற்றியைத் தரும்.
அதுமட்டுமில்லாமல் நபியவர்கள் இறந்ததற்குப் பிறகு முதல் கலீஃபாவாக யாரை நியமிக்கலாம்? என்பதில் ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இறுதியில் அனைத்து ஸஹாபாக்களும் ஏகமனதாக அபூபக்கர் ரலி அவர்களை முதல் கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம்இ நபியவர்கள் நோய்வாய்ப்பட்ட போது தொழுகை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டவர் அபூபக்கர் ரலியே. அவர்கள்தான் நபியவர்களுக்குப் பதிலாக மக்களுக்க இமாமாக நின்று தொழ வைத்தார்கள்.
கலீஃபாவாக தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் ஸஹாபாக்கள் தொழுகையை ஒரு காரணமாக ஆக்கியிருக்கும்போது நமது வாழ்க்கைத் துணையாக வருபவன் தொழக்கூடியவனாக இருக்கிறானா? என்று நாம் ஏன் பார்க்கக்கூடாது?
கலீஃபா என்பவர் ஒட்டுமொத்த முஃமின்களுக்கும் தலைவர். கணவர் என்பவர் மனைவிக்கு தலைவர். எனவே நாம் நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கக்கூடியவர் தொழுபவராக இருக்க வேண்டும்.
ஏழையை மணக்கலாம்
ஒரு மனிதர் ஏழை என்பதற்காக அவரைப் புறக்கணிக்கக்கூடாது. ஏழையை மணமகனாகத் தேர்வு செய்யும் விஷயத்தில் நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்கள் :
ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்)இ 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள்இ 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும்இ இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும்இ இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள்.
பிறகுஇ நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள்இ 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள்இ 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும்இ இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும்இ இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இ 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5091.
நாம் நமது பிள்ளைகளை பணக்காரர்களுக்கு மட்டுமே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. ஒருமனிதன் நல்லவனாக இருக்கிறானா இல்லையா என்பதை அனுசரித்தே அவனுக்கு திருமணம் முடித்துக் காெடுக்க வேண்டும்.
ஒருவன் பணக்காரணாக இருந்து நல்லொழுக்கம் இல்லையென்றால் அவனுக்கு நமது பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கக்கூடாது.
அதைப்போல் ஒருவன் ஏழையாக இருக்கிறான். ஆனால் அவனிடத்தில் நல்லொழுக்கம் இருந்தால் அவனுக்கு நமது பிள்ளைகளை மணமுடித்துக் கொடுக்கலாம்.
இதற்கு மூஸா நபியின் வரலாற்றிலும் சான்று உள்ளது.
மூஸா நபி ஒரு மனிதரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டார்கள். இதனால் ஃபிர்அவ்ன் தன்னை கொன்றுவிடுவானோ என்று அஞ்சி எகிப்திலிருந்து ஓடி மத்யன் என்ற நகருக்கு வந்தார்கள். அங்கு இரு பெண்களுக்கு தண்ணீர் பிடித்துக் கொடுத்து உதவி செய்தார்கள். இதனால் அவ்விரு பெண்களின் தந்தை மூஸா நபியை அழைத்து அவர்களுக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
அப்போது நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கிறான்.
“என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும்இ நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்” என அவ்விருவரில் மற்றொரு பெண் கூறினாள்.
“நீர் என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எனது இவ்விரு மகள்களில் ஒரு பெண்ணை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால் உமது விருப்பம். உமக்குச் சிரமமளிக்க நான் விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் உள்ளவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.
அல் குர்ஆன் - 28 : 26 - 27
மூஸா நபி சொந்த நாட்டை விட்டுவிட்டு வந்திருந்தார்கள். அவர்களிடத்தில் எவ்வித பொருளாதாரமும் இல்லை. இருந்தபோதிலும் அவர்களிடத்திலுள்ள நல்லொழுக்கத்தை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அவ்விரு பெண்களின் தந்தையான ஷுஐப் என்பவர் திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஆகவே நாமும் நல்லொழுக்கத்தையே முதன்மை பண்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
செல்வமுள்ளவர்களை திருமணம் செய்யலாம்
ஏழையை மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. ஏழையைப் புறக்கணிக்கக்கூடாது என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின்படி பணக்காரர்களையும் திருமணம் செய்யலாம். அவர்களிடத்தில் நல்லொழுக்கம் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
இவ்விஷயம் குறித்தும் நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்இ நீ "இத்தா"வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!" என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் "இத்தா"வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து)இ முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோஇ அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்" என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்துகொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவேஇ நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2953.
மேற்கூறிய நபிமொழியில் ஃபாத்திமா பின்த் கைஸ் ரலி அவர்களுக்கு மூன்று பேர் பெண் கேட்டுத் தகவல்கள் தருகிறார்கள். அந்த மூவருமே நபித்தோழர்கள். மார்க்கப்பற்று மிக்கவர்கள். ஆகவே அவர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்கு உலக காரியங்கள் அடிப்படையில் நபியவர்கள் தீர்வு கூறுகிறார்கள்.
ஒருவர் கோபக்காரர் என்று கூறி அவரை நிராகரித்தார்கள்.
மற்றொருவர் ஏழை என்று கூறி அவரை நிராகரித்தார்கள்.
இவ்வாறு மார்க்கப்பற்றுள்ள பலர் ஒரே நேரத்தில் திருமணமுடிக்க சம்மதம் தெரிவித்தால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்கு உலகக்காரியத்தை அளவுகோலாக எடுக்கலாம்.
வலிமை வாய்ந்தவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்யலாம்
ஆண் என்பவன் உழைக்க வேண்டும். ஏனெனில் அவன்மீது பொருளாதார சுமையை இஸ்லாம் சுமத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் குடும்பத்தை பாதுகாக்க வேண்டியதும் ஆண்தான். ஆகவே ஆண்களில் வலிமை மிக்கவரை நமது வாழ்க்கைத் துணையாக நாம் தேர்வு செய்யலாம்.
மூஸா நபியை திருமணம் செய்வதற்கான காரணத்தைப் பற்றிக் கூறுகையில்இ
“என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும்இ நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்” என அவ்விருவரில் மற்றொரு பெண் கூறினாள்.
அல் குர்ஆன் - 28 : 26
ஆகவே நாம் வலிமை வாய்ந்த பலமுள்ள மணமகனை வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்யலாம்.
மேற்கூறிய அனைத்தும் நமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை சுட்டிக் காட்டுகின்றன.
மேற்கூறிய அனைத்தும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் அல்ல. மாறாக அவை அனுமதிக்கப்பட்ட வழிமுறைகள்தான். ஆகவே இவற்றில் நாம் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
நாம் எதைப் பார்க்க வேண்டும்?
ஆண் எனும் மனிதனும் பெண் எனும் மனுஷியும் ஒன்றிணைவதுதான் திருமணம்.
மனிதனிடத்தில் இருவித தோற்றங்கள் உள்ளது. ஒன்று வெளித்தோற்றம். மற்றாென்று உள்தோற்றம்.
மனிதனின் முக அழகுஇ உடல் அழகு ஆகியவை வெளித்தோற்றம் ஆகும். அதைப்போல் மனிதனுக்கு உள்ளே இருக்கும் அறிவுஇ நற்குணம் போன்றவை உள்தோற்றம் ஆகும்.
இவ்விரண்டை வைத்துத்தான் மனிதன் மதிக்கப்படுகிறான்.
இவ்விரண்டில் வெளித்தோற்றம் வருடம் செல்ல செல்ல குறைந்து கொண்டே வரும். ஆனால் உள்தோற்றமோ அப்படியல்ல. அவை நாள்கள் செல்ல செல்ல அழகானவையாக மாறும். இறுதியில் இவைதாம் எஞ்சி நிற்கும். ஆகவே நாம் வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதை விட உள்தோற்றத்திற்கு அதிகமுக்கியத்துவம் வழங்க வேண்டும்.
பாகம் 5 - மணப்பொருத்தம்
திருமணத்தில் மணப்பொருத்தம் பார்ப்பது பல்வேறு சமூகங்களில் காணப்படுகிறது. பத்து பொருத்தமும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கூறுவார்கள்.
ஆகவே இஸ்லாத்தில் மணப்பொருத்தம் பார்ப்பது அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடை செய்யப்பட்டதா? என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
மணப்பொருத்தம் என்பதற்கு அறபியில் ஃகஃபாஅத் என்று சொல்லப்படும்.
ஃகஃபாஅத் என்ற வார்த்தைக்கு சமத்துவம்இ சமம்இ பொருத்தம்இ துல்லியம் போன்ற பல அர்த்தங்கள் உண்டு.
மணப்பொருத்தத்தின் வகைகள்
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்இ மணப்பொருத்தத்தை இருவகைகளாகப் பிரிக்கலாம்.
கட்டாயமாக்கப்பட்ட மணப்பொருத்தம்
அனுமதிக்கப்பட்ட மணப்பொருத்தம்
கட்டாயமாக்கப்பட்ட மணப்பொருத்தம்
திருமணத்தில் கட்டாயமாகப் பார்க்கப்பட வேண்டிய பொருத்தம் உள்ளது. அதை மார்க்கம் கடமையாக்கியுள்ளது. அதுதான் காஃபிர்களையும் விபச்சாரகர்களையும் திருமணம் முடிக்கக்கூடாது என்ற தடையுத்தரவு.
இஸ்லாமிய மார்க்கம் காஃபிர்களை திருமணம் முடிக்கக்கூடாது என்றும் விபச்சாரகர்களை திருமணம் முடிக்கக்கூடாது என்றும் முஃமினான ஆண்களையும் முஃமினான பெண்களையும் தடுத்துள்ளது. இதுபற்றி முன்னர் விரிவாகக் கூறியுள்ளோம்.
ஆகவே ஒரு முஃமின் தனது வாழ்க்கை துணைக்காக பார்க்க வேண்டிய முதல் பொருத்தம் ஈமான் எனும் இறைநம்பிக்கையும் கற்பை பாதுகாக்கும் ஒழுக்கமும்தான்.
அதைப்போல் மஹ்ரமான நெருங்கிய உறவினர்களையும் பால்குடி உறவுகளையும் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாம் தடுத்துள்ளது. இத்தகைய உறவுமுறைகள் திருமணத்திற்கு பொருத்தமற்ற உறவுமுறைகளாகும்.
இவைகள் கட்டாயமாகக் கவனிக்கப்பட வேண்டிய மணப்பொருத்தமாகும்.
அனுமதிக்கப்பட்ட மணப்பொருத்தம்
திருமணம் முடிக்கவிருக்கும் இருவருக்கும் மத்தியில் உலகம் சார்ந்த விஷயங்களில் மணப்பொருத்தம் பார்ப்பது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டுள்ளது.
அதாவது சமூக அந்தஸ்துஇ பொருளாதாரம்இ கல்வித் தகுதி போன்றவற்றில் பொருத்தமானவர்களைத் திருமணம் செய்து வைப்பது ஹலாலாகும். ஏனெனில் இது அவர்களுக்கு மத்தியில் திருமண வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு உதவும்.
அதேசமயம் இது குலப்பெருமைக்காகவோ பிறரைத் தாழ்த்தும் வகையிலோ மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் தனது வருங்கால மனைவியிடத்தில் உலக நோக்கங்களை முன்னிட்டு பொருத்தம் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதேசமயம் ஒரு பெண் தனது வருங்கால கணவரிடத்தில் சில உலகப் பொருத்தம் பார்ப்பது சிறந்தது.
அதாவது மணமகனிடமே மணப்பாெருத்தம் பார்க்க வேண்டும். மணப்பெண்ணிடம் பார்க்கக்கூடாது.
இதற்கு நபியவர்களின் வழிமுறை சான்றாக உள்ளது
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதிஇ தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதிஇ "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம்இ தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டதுதான்)" என்று கூறிவினார். எனவேஇ நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்இ "அவர் உனக்கு (ஜீவனாம்சம்இ தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை" என்று கூறிவிட்டுஇ உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை "இத்தா" இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு)இ "அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) "இத்தா" இருந்துகொள். ஏனெனில்இ அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றிக்கொள்ளலாம். நீ "இத்தா"வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!" என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் "இத்தா"வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து)இ முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோஇ அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்" என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்துகொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவேஇ நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2953.
நபிகளார் ஃபாத்திமா பின்த் கைஸ் ரலிக்கு உலக ரீதியில் பொருத்தமானவரை பரிந்துரைக்கிறார்கள். அதாவது செல்வம் குறைவானவரையும் கோபத்தில் மிகைத்தவரையும் தவிர்த்துவிட்டு வேறொருவரை பரிந்துரைத்திருக்கிறார்கள். இதிலிருந்து பெண்கள் உலகரீதியிலான விஷயங்களில் பொருத்தம் பார்க்கலாம் என்பது விளங்குகிறது.
ஆனால் இதற்காக மார்க்கப்பற்றுள்ளவர்களைப் புறக்கணித்து மார்க்கப்பற்றற்ற செல்வந்தர்களை மணமுடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அது இம்மையிலும் மறுமையிலும் தீமையே தரும். மாறாக மார்க்கப்பற்றுள்ள பலர் திருமண முன்மொழிவை அளிக்கும்போது அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகக் காரியங்களில் பொருத்தம் பார்க்கலாம்.
அதேசமயம் ஒரு பெண் தனது வருங்கால கணவரிடத்தில் பொருத்தம் பார்ப்பதற்கு மிகத் தகுதியானவை நல்லுணர்வுகள் மற்றும் பொருளாதாரம் ஆகும்.
ஏனெனில் மார்க்கப்பற்றுள்ள ஒருவரிடத்தில் தீய உணர்வுகள் (கோபம் போன்றவை..) மிகைத்திருந்தால் அவரோடு வாழ்வது சிரமமாக இருக்கலாம்.
அதைப்போல் ஆண் என்பவன் பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்பவன். அவன்தான் நிர்வாகி. ஆகவே ஆண்களிடத்தில் செல்வம் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு அவசியம்.
இதனால்தான் நபிகளார் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். பார்க்க ஸஹீஹ் புகாரி : 5065.
ஆகவே ஆண்கள் பொருளாதாரத்தைத் தேடிப் பெற வேண்டும் என்பது நபிவழி.
ஆண்களின் பொருளாதாரத்திலிருந்து பெண்களுக்கு செலவிடப்படுவதால் இவ்விஷயத்தில் பொருத்தம் பார்ப்பது சரியானதாகும்
அதைப்போல் பொதுவாக மக்கள் மத்தியில் செல்வமானது மதிப்பிற்குரியதாக உள்ளது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْحَسَبُ الْمَالُ، وَالْكَرَمُ التَّقْوَى ".
ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அறிவிப்பதாவது : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வம் மதாப்பிற்குரியது. இறையச்சமே கண்ணியத்திற்குரியது
இப்னுமாஜா 4219இ திர்மிதீ 3271
செல்வந்தர்கள் தங்களது மனைவிக்கு வழங்கும் பொருளாதாரத்தைவிட ஏழைகள் வழங்குவது குறைவாக இருக்கும்.
ஆகவே மஹர் என்ற விஷயமும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதும் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகும்.
அந்த
அடிப்படையில் இவ்விஷயத்தில் ஒரு பெண் கவனமெடுக்கலாம்.
உதாரணமாக நல்ல வசதியுள்ள குடும்பத்தில் வாழ்ந்த பெண்ணை எடுத்துக் கொள்வோம். அவள் அன்றாடம் உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் அவளது குடும்ப செல்வத்தை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கும். அவளை ஒரு ஏழைக்குக் திருமணம் முடித்து வைத்தால் அவளது திருமண வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அவளது உணவிலும் உடையிலும் பெரிய வித்தியாசம் ஏற்படலாம். இது அவளது உள்ளத்தில் அதிருப்தியை ஏற்படுத்தலாம். அந்த அதிருப்தியே குடும்ப விரிசலுக்குக் காரணமாக அமையலாம்.
ஆகவே அவளை அவளுக்குப் பொருத்தமான செல்வமுள்ள ஆணுக்குத் திருமணம் முடித்து வைப்பது நல்லது.
இருந்தபோதிலும் நல்ல வசதியுள்ள குடும்பத்தில் வளர்ந்து வந்த ஒரு பெண் மார்க்கப்பற்றிற்காக ஒரு ஏழையைத் திருமணம் செய்து தனது உலக கஷ்டங்களை தியாகம் செய்தால் அவளுக்கு இறைவனிடத்தில் உயர்ந்த கூலிகள் வழங்கப்படும். இதை திருமணம் முடிக்கவிருக்கும் பெண்கள் மனதில் இருத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பொருத்தத்தை அலட்சியம் செய்வதே சிறந்தது
ஒரு முஃமின் மற்றொரு முஃமினை தனக்கு நிகரானவராகத்தான் பார்க்க வேண்டும். முஃமின் என்ற அடிப்படையில் அனைவரும் ஒரே தரத்தை சேர்ந்தவர்கள்தாம். அவர்களுக்கு மத்தியில் பொருளாதாரமோஇ குலமோஇ கோத்திரமோ வேறு எதவும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாது. ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் ஒரே அம்சம் இறையச்சம் மட்டும்தான்.
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌۭ
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே!
அல்குர்ஆன் 49 :10
ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ ۚ
உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார்.
அல் குர்ஆன் - 49 : 13
மேற்கூறிய இரண்டு வசனங்களும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதையும் அவர்களுக்கு மத்தியில் இறையச்சம் ஒன்று மட்டும்தான் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவிக்கிறது.
ஆக இஸ்லாத்தைப் பொருத்தவரையில் அரபியரை அரபியரல்லாதவர் மணமுடிக்கலாம். ஒரு வெள்ளையரை ஒரு கறுப்பர் மணமுடிக்கலாம். உயர் பதவியிலிருப்பவரை ஒரு சாதாரணமானவர் திருமணம் முடிக்கலாம். பணக்காரரை ஏழை திருமணம் முடிக்கலாம்.
இதுபோன்ற உலகக் காரியங்களை பெரிதாக மதிக்காமல் திருமணம் செய்வதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது.
இதற்கு ஆதாரமாக சில சான்றுகள் உள்ளன.
குலம் கோத்திரம் சிறப்பிற்குரியதல்ல
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقْنَـٰكُم مِّن ذَكَرٍۢ وَأُنثَىٰ وَجَعَلْنَـٰكُمْ شُعُوبًۭا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓا۟ ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۭ⭘
மனிதர்களே! ஓர் ஆண்இ ஒரு பெண்ணிலிருந்தே உங்களை படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும்இ குலங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; எல்லாம் தெரிந்தவன்.
அல் குர்ஆன் - 49 : 13
இஸ்லாம் குலப்பெருமையையும் கோத்திரப் பெருமையையும் தகர்க்க முனைந்தது. ஆகவேதான் ‘குலப்பெருமை என்ற ஒன்றில்லை‘ என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலமாக அறிவித்துள்ளது.
இதை திருமணத்தின் மூலம் நடைமுறையாக்க வேண்டும் என்று நபிகளார் விரும்பினார்கள். ஆகவேதான் அவர்கள் தனது மாமி மகளான குறைஷி குலத்தைச் சேர்ந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியை அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா ரலிக்கு திருமணம் முடித்து வைத்தார்கள்.
அதைப்போல் எத்தியோப்பிய கருப்பினத்தைச் சேர்ந்த அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்ட பிலால் இப்னு ரபாஹ் ரலி அவர்கள் மிகப்பெரும் செல்வந்தரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியின் சகோதரியைத் திருமணம் முடித்திருந்தார்கள்.
அடிமையை மணந்து கொள்ள ஆர்வமூட்டுதல்
அதைப்போல் உலகவிஷயத்தின் அடிப்படையில் பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நபிகளார் அடிமைப் பெண்ணைத் திருமணம் முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَعَالَهَا، فَأَحْسَنَ إِلَيْهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، كَانَ لَهُ أَجْرَانِ "".
'தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்துஇ அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்துஇ அவளை நல்ல முறையில் நடத்திஇ பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2544.
மேற்கூறிய நபிமொழிமூலம் அடிமைகளை திருமணம் செய்வதற்கு நபிகளார் ஆர்வம் மூட்டியுள்ளார்கள்.
இதற்கு மற்றுமொரு நபிமொழி சான்றாக உள்ளது.
அபூஹுரைரா அவர்கள் கூறியதாவது:
அபூ ஹின்த் அவர்கள் நபி அவர்களின் தலையின் நடு உச்சியில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.
அப்போது நபி அவர்கள்இ "பயாழாவின் குலத்தினரே! அபூஹின்துக்கு (உங்கள் பெண் மகளை) மணமுடித்துக்கொடுங்கள். (உங்களின் பெண் மக்களை அவரது குலத்தாரிடையே மணமுடித்துக் கொடுங்கள். மேலும் நீங்கள் சிகிச்சை செய்வதில் எதிலேனும் நன்மை இருக்குமானால்இ அது குருதி உறிஞ்சி எடுப்பதில்தான் இருக்கும்" என்று கூறினார்கள்.
அபூதாவூத் 2102 (தமிழில் 1798)
அபூஹிந்த் என்பவர் பயாழா கோத்திரத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையாக இருந்தவர். அந்த குலத்திற்கு ஹிஜாமா செய்து வந்தார். ஆகவேதான் அவர்களது குலத்தைச் சேர்ந்தவருக்கு அவரைத் திருமணம் செய்து வைக்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதற்கு மற்றொரு நபிமொழியும் ஆதாரமாகும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் :
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும்இ பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள. அப்போது பரீராஇ '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி : 5283.
நபிகளார் முஃகீஸ் எனும் அடிமைக்காக பரீராவிடம் பரிந்து பேசியதிலிருந்து அடிமையைத் திருமணம் செய்வதற்கு நபிகளார் ஊக்கப்படுத்தியது வெளிப்படுகிறது.
ஆதலால்தான் இவ்விஷயத்தை நபித்தோழர்களும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
உதாரணமாகஇ
அபூ ஹுதைஃபா இப்னு உத்பா இப்னு ரபீஆ இப்னு அப்து ஷம்ஸ் அவர்கள் சாலிமை தத்தெடுத்து வளர்த்தார். அவர் தனது சகோதரனின் மகள் ஹிந்த் பின்த் அல்-வலீத் இப்னு உத்பா இப்னு ரபீஆ அவர்களை சாலிமுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த சாலிம் அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அடிமையாக இருந்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸைத் (இப்னு ஹாரிஸா) அவர்களைத் தத்தெடுத்தது போலவே அபூ ஹுதைஃபாவும் சாலிமைத் தத்தெடுத்திருந்தார்.
அபூதாவூத் 2061
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர்(ரலி) அவர்களிடம் சென்றுஇ 'நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரிடம்இ 'நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக 'இஹ்ராம்' கட்டிஇ இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்'' என்று சொல்லிவிடு!' எனக் கூறினார்கள்.
ளுபாஆ(ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் துணைவியாராவார்.
ஸஹீஹ் புகாரி : 5089.
மிக்தாத் இப்னு அஸ்வத் யமனைச் சேர்ந்தவர். அஸ்வத் இப்னு யஃபூர் என்பவர் தத்தெடுத்தார். இவர் அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர். இவரை கறைஷி குரத்தைச் சேர்ந்த ளுபாஆ என்பவருக்கு நபிகளார் திருமணம் முடித்து வைத்திருக்கிறார்கள்.
நபித்தோழர்களின் நடைமுறையில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
அழகு
அதைப்போல் அழகைப் பார்க்காமல் திருமணம் முடிப்பதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள். நிறத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு காட்டுவதை திருமணத்தின் மூலம் ஒழிக்க நினைத்தார்கள்.
அபூ பர்ஸா அல்-அஸ்லமி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஜுலைபீப் (ரலி) அவர்கள் பெண்களிடம் சென்று அவர்களுடன் விளையாடுபவராக (சிரித்துப் பேசுபவராகஃநகைச்சுவையாகப் பேசுபவராக) இருந்தார். எனவே நான் என் மனைவியிடம்இ "ஜுலைபீப் உங்களிடம் வர வேண்டாம். அவர் உங்களிடம் வந்தால்இ நான் இன்னின்ன செய்வேன்" என்று கூறினேன்.
(அபூ பர்ஸா தொடர்ந்து கூறுகிறார்): அன்ஸாரி தோழர்களுக்கு மணமுடிக்க வேண்டிய பெண் இருந்தால்இ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அந்தப் பெண்ணில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு முன்இ அவர்கள் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள்.
(இந்நிலையில்) ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரி தோழர் ஒருவரிடம்இ "உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு" என்று கேட்டார்கள்.
அதற்கு அத்தோழர்இ "ஆம்இ அது எனக்குப் பெருமையும் கண்ணியமும் ஆகும்இ அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள்இ "நான் அவளை எனக்காக கேட்கவில்லை" என்று கூறினார்கள்.
நான்இ "அப்படியானால் யாருக்காகஇ அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்இ "ஜுலைபீபிற்காக" என்று கூறினார்கள்.
அதற்கு அத்தோழர்இ "நான் அவளது தாயுடன் ஆலோசனை செய்கிறேன்" என்று கூறிவிட்டுஇ அவளிடம் சென்றார்.
அவர் தன் மனைவியிடம்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன் மகளை பெண் கேட்கிறார்" என்று கூறினார்.
அதற்கு அவள்இ "ஆம்இ அது எனக்குப் பெருமையும் கண்ணியமும் ஆகும்!" என்று கூறினாள்.
அதற்கு அவர்இ "அவர்கள் அதை தங்களுக்காகக் கேட்கவில்லைஇ மாறாக ஜுலைபீபிற்காக கேட்கிறார்கள்" என்று கூறினார்.
அவள்இ "ஜுலைபீபிற்காகவா? அல்லாஹ்வின் மீது ஆணையாகஇ நாங்கள் அவருக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம்!" என்று கூறினாள்.
அந்தத் தோழர் தன் மனைவியின் மறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிப்பதற்காக எழுந்தபோதுஇ அந்தப் பெண் (மகள்) அறையிலிருந்துஇ "என்னை உங்களுக்கு யார் பெண் கேட்டார்கள்?" என்று கேட்டார்.
அவளுடைய தாயார் அவளிடம் விஷயத்தைக் கூறினார்.
உடனே அந்தப் பெண்இ "நீங்கள் அல்லாஹ்வின் தூதரின் கட்டளையை நிராகரிக்கிறீர்களா?! என்னை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக அவர் என்னைத் தவறவிட மாட்டார் (என்னைக் கைவிட மாட்டார்)" என்று கூறினார்.
பிறகு அந்தத் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுஇ விஷயத்தைக் கூறிஇ (மஹ்ருடன்) அவளை ஜுலைபீபிற்கு மணமுடித்து வைத்தார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்காகப் புறப்பட்டார்கள். அல்லாஹ் (அப் போரில்) அவர்களுக்கு வெற்றியளித்தபோதுஇ "யாரையாவது காணவில்லையா?" என்று கேட்டார்கள்.
(பிறகு அவர் ஜுலைபீப்இ ஏழு பேரைக் கொன்றுஇ பின்னர் அவர் கொல்லப்பட்டார் என்ற கதையைக் கூறினார்)... அந்த நிகழ்வின் இறுதி வரை கூறி முடித்த பின் (நபி (ஸல்) அவர்கள்)இ "இவர் என்னைச் சேர்ந்தவர்; நான் இவரைச் சேர்ந்தவன்" என்று கூறினார்கள்.
மேலும்இ "அன்ஸார் தோழர்களில் இவரைப் போல் அதிகம் செல்வம் கொடையாகக் கொடுக்கப்பட்ட (நன்மை பெற்ற) பெண் வேறெவரும் இல்லை" என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்இ நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்: "அல்லாஹ்வே! இவள் மீது நன்மையை நிரம்பச் சொரிந்துவிடு!" என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (19784) ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (4035) முஸ்லிம் (2472)
அழகு அடிப்படையில் ஏற்றத்தாழ்வு காட்டுவதை திருமணத்தின் மூலம் இல்லாமலாக்க வேண்டும் என்று நபிகளார் கருதியதை மேற்கண்ட சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முஃமின்கள் அனைவரும் சகோதரர்களே
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌۭ
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே!
அல்குர்ஆன் 49 :10
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே அந்தஸ்தில் உள்ளவர்கள்தான் என்பதை மேற்கண்ட வசனம் தெரிவிக்கிறது. ஆகவே முஸ்லிம்களிடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வித்தியாசத்தைக் காண்பிப்பதில்லை என்பதை திருமணம் மூலம் நாம் உணர்த்த வேண்டும்.
நபியவர்களின் எச்சரிக்கை
அதுமட்டுமில்லாமல் உலக நோக்கங்களுக்காக திருமணம் முடிக்கும் விஷயத்தை நபிகளால் கண்டித்துள்ளா்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவேஇ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5090.
இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒரு ஆண் உலக ரீதியலான விஷயத்தை முன்வைத்து பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஆகவே இவையனைத்து ஆதாரங்களும் உலக விஷயங்களில் பெண்களுக்கு பொருத்தம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதித்திருந்தாலும் அவற்றை புறக்கணித்து மார்க்க அளவுகோல்களை மட்டும் முன்னிறுத்துவதே சிறந்தது என்று அறிவிக்கிறது.
உயிர்ப் பொருத்தம்
அதைப்போல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் இரு உயிர்களின் பொருத்தமாகும்.
தற்காலத்திலுள்ளவர்கள் இவ்விஷயத்தை பெரும்பாலும் கவனிப்பதில்லை.
உயிர்பொருத்தம் பற்றி நபிகளார் கூறியுள்ளார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3336.
அல்லாஹ் உயிர்களை பல வகைகளாகப் படைத்திருக்கிறான். அவற்றில் சில உயிர்கள் மற்ற சில உயிருடன் ஒத்துப்போகும்.
அதைப்போல் சில உயிர்கள் சில உயிர்களுடன் முரண்பட்டு நிற்கும்.
ஒத்துப்போகும் உயிர்களை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதால் அவை நன்கு இணைந்து கொள்ளும். ஆனால் ஒத்துக்கொள்ளாத உயிர்கள் எப்பாடுபட்டாலும் அவைகள் இணைந்து கொள்ளாது.
அந்த அடிப்படையில்இ இரண்டு உயிர்கள் ஒன்றுக்கொன்று இணங்கிச் செல்லும்போதுதான் அங்கு அமைதி ஏற்படும். கருணை உருவாகும்.
அதைப்போல் முரண்பட்ட இரண்டு உயிர்களை இணைத்து வைத்தால் அங்கு கருத்துவேறுபாடு எழும். அமைதிக்குப் பதிலாக சண்டை சச்சரவுகள் ஏற்படும். கருணைக்குப் பதிலாக கோபம் மிகைக்கும்.
ஆகவே இந்த விஷயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உயிரின் நேசத்தை அறிந்து கொள்வது எப்படி?
உயிர்களுக்கு மத்தியில் பரஸ்பர நேசமும் பரஸ்பர வெறுப்பும் ஏற்படும் என்பதை நபிகளார் அறிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் ஒரு உயிரும் மற்றொரு உயிரும் பரஸ்பரம் நேசம் கொள்கிறதா? அல்லது ஒரு உயிரும் மற்றொரு உயிரும் பரஸ்பரம் வெறுக்கிறதா? என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? அதற்கான வழிவகைகள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
இதற்கும் நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவரை சந்தித்துக் காெள்ளுதல்
மணமுடிக்கவிரும்பும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பதன்மூலம் அல்லது மார்க்கம் அனுமதித்த வழியில் பேசிக் கொள்வதின் மூலம் இரு உயிர்களுக்கிடையில் உள்ள இணைப்பை அறிந்து கொள்ளலாம்.
முஃகீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பியபோதுஇ நபி (ஸல்) அவர்கள் அவரிடம்இ "அவளைப் பார். ஏனெனில்இ அது உங்களுக்கிடையே இணக்கத்தை (அன்பை) நிலைநிறுத்த மிகவும் உகந்தது" என்று கூறினார்கள்.
(முஃகீரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்):
நான் அவளிடம் சென்றேன். அவளுடைய தந்தையும் அவளது திரைக்குள் (மறைவிடத்தில்) இருந்தார். நான்இ "நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்க்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன்.
அவர்கள் (தந்தையும் மகளும்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்தப் பெண்இ திரையின் ஒரு பகுதியை விலக்கினாள். அவள் (என்னைப் பார்த்து)இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பார்க்கச் சொன்னால் நீ பார்த்ததில் தவறில்லை. ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பார்க்கச் சொல்லவில்லையென்றால்இ பார்க்க வேண்டாம்" என்று சொன்னாள்.
நான் அவளைப் பார்த்தேன். பிறகு நான் அவளை மணந்துகொண்டேன். (அதன்பிறகு ) என்னிடத்தில் அவளைப் போல் ஒரு மனைவி அமையவே இல்லை
(திர்மிதி 1087இ இப்னு மாஜா 1866இ நஸாயி 3235)
ஒருவரையொருவர் பார்ப்பதன் மூலம் அல்லது தனது இயல்பைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசி பரிமாறிக் கொள்வதன்மூலம் இரு உயிர்களுக்கிடையில் அன்பை ஏற்படுத்தலாம்.
தகுதியை கவனித்தல்
தனது அழகுஇ பொருளாதாரம்இ தகுதி மற்றும் படிப்பு போன்றவைகளுக்குத் தக்க துணையை நாம் தேட வேண்டும். அதுவும் இணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு) கைபர்மீது போர் தொடுத்தார்கள்.
பிறகு தாக்குதல் மூலம் கைபரை நாங்கள் கைப்பற்றினோம்.
(போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோதுஇ திஹ்யா (அல்கல்பீ-ரலி) அவர்கள் வந்துஇ "அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு (போர்ச் செல்வமாக)த் தாருங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்.
திஹ்யா (ரலி) அவர்கள்இ (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ "அல்லாஹ்வின் தூதரே! குறைழாஇ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கிவிட்டீர்களே!
ஸஃபிய்யாஇ உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்துவாருங்கள்" என்றார்கள்.
ஸஃபிய்யாவுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள்.
ஸஃபிய்யாவைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திஹ்யா (ரலி) அவர்களிடம்)இ "கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2793.
ஸஃபிய்யா என்பவர் யூத குலத்துத் தலைவரின் மகள். ஒரு தலைவரின் மகள் மற்றொரு தலைவருக்கு மணமுடித்து வைப்பதுதான் உயிர் இணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதை அந்த ஸஹாபி நபியிடம் தெரிவிக்க அதை அவர்களும் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆக உயிர் இணக்கம் ஏற்பட தகுதிகளையும் கவனிக்க வேண்டும்.
இதற்கு இன்னும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) என்பவரை நபியவர்கள் தனது வளர்ப்பு மகனாக ஆக்கிக் காெண்டார்கள். அவர் மீது நபியவர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். இந்நிலையில் ஸைத் பின் ஹாரிஸாவை தனது மாமி மகளான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஸைத் பின் ஹாரிஸாவோ கருப்பினத்தை சேர்ந்தவர்.
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியோ குறைஷி குலத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவரையும் திருமணம் மூலம் நபிகளார் இணைத்து வைத்தார்கள். ஆனால் அவ்விரு உயிர்களுக்கிடையில் பொருத்தம் ஏற்படவில்லை. ஆகவே இருவரும் பிரிந்துவிட முனைந்தனர்.
அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :
وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌۭ مِّنْهَا وَطَرًۭا زَوَّجْنَـٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌۭ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًۭا ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًۭا⭘
(நபியே!) அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்துஇ நீரும் அவருக்கு நன்மை செய்தீரோ அவரிடம்இ “உன் மனைவியை (மணவிலக்குச் செய்யாமல்) உன்னிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
அல்லாஹ் வெளிப்படுத்த இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்துக் கொண்டீர். நீர் மனிதர்களுக்கு அஞ்சுகிறீர்! நீர் அஞ்சுவதற்குத் தகுதி மிக்கவன் அல்லாஹ்தான். ஸைத் என்பவர்இ (மணவிலக்குச் செய்யும்) நோக்கத்தை அவளிடம் நிறைவேற்றிக் கொண்டபோதுஇ அப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம். ஏனெனில்இ வளர்ப்பு மகன்கள் அவர்களின் மனைவியரிடம் (மணவிலக்குச் செய்யும்) நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு விட்டால்இ அப்பெண்கள் விஷயத்தில் (மணமுடித்துக் கொள்ள) இறைநம்பிக்கையாளர்களுக்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவே (இதைச் செய்தோம்.) அல்லாஹ்வின் கட்டளை நடைபெற்றே தீரும்.
அல் குர்ஆன் - 33 : 37
அதைப்போல் இன்னொரு சம்பவமும் இதற்கு சான்றாகும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
நான் (அடிமையாக இருந்த) பரீராவை (விலைக்கு) வாங்கினேன். அதன்பிறகு நான் அவரை விடுதலை செய்துவிட்டேன்.
நபி(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்துஇ அவரின் கணவர் விஷயத்தில் (அவருடன் வாழ்வதுஇ அல்லது பிரிந்து விடுவது இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள்.
அதற்கு பரீராஇ 'அவர் எனக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்க மாட்டேன்' என்று கூறி (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.
ஸஹீஹ் புகாரி : 2536.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் :
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும்.
அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும்இ பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள்.
(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள்.
அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள.
அப்போது பரீராஇ '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி : 5283.
பரீரா மற்றும் முஃகீஸ் ஆகிய இருவரும் அடிமையாக இருந்தவர்கள். அவர்கள் அடிமையாக இருக்கும்போது கணவன் மனைவியாக வாழ்ந்துவந்தார்கள். அதன்பின்னர் பரீரா மட்டும் அடிமையிலிருந்து விடுதலையடைந்தார். ஆனால் முஃகீஸ் இன்னும் அடிமையாகவே தொடர்ந்தார். இந்நிலையில் பரீரா தன்னால் முஃகீஸுடன் வாழமுடியாது என்று பிரிந்து விடுகிறார்.
இருவருமே ஸஹாபாக்கள்தான். சிறந்தவர்கள்தான். இருந்தபோதிலும் ஒருவர் இன்னொருவர்மீது நேசமற்று இருந்துள்ளார். இதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் பரீராவோ சேரமுடியாது என்று மறுத்துவிட்டார்கள். அதற்காக நபியவர்கள் பரீராவை கண்டிக்கவில்லை. அதை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆகவே நாம் திருமணத்தில் உயிர்ப்பொருத்தம் பார்ப்பது அவசியம். இல்லையெனில் அந்த திருமண வாழ்க்கை கசப்பானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே ஓர் ஏழை ஆண்இ பணக்காரப் பெண்ணை மணந்துகொள்ள முயலாமல் இருப்பது நல்லது. ஏனெனில்இ அவள் உயர்தர வாழ்க்கை வாழ்ந்து பழக்கப்பட்டவளாக இருப்பாள். அதையே விரும்பக்கூடியவளாக இருப்பாள். சாதாரண வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட ஏழை கணவனால் அதை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதனால் இல்லறம் கசக்கும் நிலைக்கு ஆளாகலாம்.
வயது வித்தியாசம்
அதைப்போல் வயது வித்தியாசமும் உயர்ப்பொருத்தம் பார்ப்பதற்கு உகந்ததாகும்.
அப்துல்லாஹ் பின் புரைதா ரலி தனது தந்தை அறிவித்ததாக கூறியதாவது :
“அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி ஆகியோர் ஃபாத்திமா ரலியை திருமணம் செய்ய வேண்டி நபியவர்களிடம் முன்மொழிந்தனர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ‘ஃபாத்திமா இளவயதைச் சேர்ந்தவள்’ என்று கூறி(அவர்களது முன்மொழிவை நிராகரித்தார்கள்). பின்னர் அலீ ரலிஇ அவளை திருமணம் செய்ய வேண்டி முன்மொழிந்தார். அவருக்கு நபிகளார் திருமணம் செய்து வைத்தார்கள்.
சுனனுந் நஸாஈ 3221
நபிகளார் வயது வித்தியாசத்தைக் கவனித்து வரன்களை மறுத்திருக்கிறார்கள். அபூபக்கர் மற்றும் உமர் ரலி ஆகிய இருவரும் அலீ ரலியை விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தபோதிலும் மற்ற இரு நபித்தோழர்களைவிட அலீ ரலியின் வயது குறைவாக இருந்ததால் அதையே நபிகளார் தேர்வு செய்தார்கள். ஏனெனில் அதுவும் உயிர்ப்பொருத்தம் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
கன்னிப்பெண்
அதேபோல் முதல் திருமணத்தின்போது கன்னிகழிந்த பெண்ணைவிட கண்ணிப்பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள். ஏனெனில் அதுதான் உயிர்ப்பொருத்தத்திற்கு வழிவகுக்கும். இருந்தபோதிலும் மார்க்கத்திற்காக ஒருவர் அதை தியாகம் செய்தால் அது சிறந்தது. அதற்கு கூலிகள் இறைவனிடம் உண்டு. இதுபற்றி ஜாபிர் ரலியின் ஹதீஸ் நமக்கு அறிவிக்கிறது.
பிரார்த்தனை செய்தல்
ஒரு முஃமினின் மிகப்பெரும் ஆயுதம் பிரார்த்தனையாகும். இதற்கு விதியை மாற்றும் பண்பு உண்டு. ஆகவே உயிர்ப்பொருத்தம் ஏற்படுவதற்காக இந்த பிரார்த்தனையை நாம் பயன்படுத்த வேண்டும்.
இவ்விஷயத்தில் நபிகளார் வழிகாட்டுதல்கள் உள்ளன.
அபூசலமா இறந்தவுடன் அவரது மனைவியாகிய உம்மு சலமா துயருற்றிருந்தார்கள். அப்போது உம்மு சலமாவிற்கும் நபிகளாருக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பாருங்கள்.
உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்இ "அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" (இறைவாஇ எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால்இ அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)" என்று கூறினேன். ஆயினும்இ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பிஇ தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்" என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1674.
உம்மு சலமா ரலி தான் ஒரு முன்கோபக்காரி என்பதைத் தெரிவிக்கிறார்கள். இது உயிர்பொருத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு குணம். ஆகவேதான் அதற்கு எதிராக பிரார்த்தனை செய்வதாக நபிகளார் தெரிவிக்கிறார்கள். எனவே ‘நாம் திருமணம் முடிக்கடிருக்கும் பெண்ணிடம் நமது உயிருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் குணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்’ என்று நாம் பிரார்த்தனை செய்யலாம்.
பாகம் 6 - திருமணத்தின் அடிப்படைகள்
திருமணம் என்பது வெறும் சடங்கல்ல. மாறாக அது உறுதியான உடன்படிக்கை என்று இஸ்லாம் கூறுகிறது.
وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍۢ وَأَخَذْنَ مِنكُم مِّيثَـٰقًا غَلِيظًۭا⭘
உங்களிடம் அவர்கள் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்திஇ நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதை எடுத்துக் கொள்ள முடியும்?
அல் குர்ஆன் - 4 : 21
ஆகவே திருமணத்தை சாதாரண ஒரு நிகழ்வாகப் பார்க்க முடியாது. அதை முக்கியமான ஒன்றாகக் கருதி நபிவழி அடிப்படையில் அதை மேற்கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கான அடிப்படைத் தேவைகள் நான்கு என்று இஸ்லாம் கூறுகிறது
இருவரின் சம்மதம்
திருமணத்தின் முதல் அடிப்படை இருவரின் சம்மதம் ஆகும். திருமணம் முடிக்கும் ஆண் மற்றும் பெண்ணின் சம்மதம் பெற்று நடக்கும் திருமணம்தான் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆகவேதான் அவற்றை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது.
பெண்களை பலவந்தமாக அடைந்து கொள்வது தடுக்கப்பட்டதாக இறைவன் தெரிவிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
இறைநம்பிக்கை கொண்டோரே! பெண்களைப் பலவந்தமாகச் சொந்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை.
அல்குர்ஆன் 4 : 19
ஆகவே ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
இதை நபியவர்களும் விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள்இ 'கன்னிகழிந்த பெண்ணைஇ அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள்.
மக்கள்இ 'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள்இ 'அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5136.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'கன்னிகழிந்த பெண்ணைஇ அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணுடன் அவளுடைய தந்தை கலந்தாலோசனை செய்யவேண்டும்.
அபூதாவூது 2099
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு கன்னிப் பெண்ணை அவளுடைய வீட்டார் மணமுடித்துக்கொடுக்கும் போது அவளிடம் அனுமதி பெற வேண்டுமாஇ இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்இ "ஆம்; அவளிடம் அனுமதி பெற வேண்டும்" என்றார்கள்.
நான்இ "அவ்வாறாயின்இ அவள் வெட்கப்படுவாளே?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "அவள் மௌனமாக இருந்தால்இ அதுவே அவளது சம்மதம்தான்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2774.
கன்னிப் பெண்ணாக இருந்தாலும் கன்னி கழிந்த பெண்ணாக இருந்தாலும் அனைவரிடமும் சம்மதம் கேட்டுத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று நபியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பது மேற்கண்ட நபிமொழிகள் மூலம் தெளிவாகிறது.
அதுமட்டுமில்லாமல் சம்மதம் பெறப்படாமல் நடத்தப்பட்ட திருமணத்தை நபியவர்கள் ரத்தும் செய்திருக்கிறார்கள்.
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீபக்கர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் :
ஜஅஃபர்(ரஹ்) அவர்களின் மக்களில் ஒரு பெண்மணிஇ தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். எனவேஇ அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான்(ரஹ்)இ முஜம்மிஉ(ரஹ்) ஆகிய இரண்டு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும்இ '(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில்இ கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவரின் தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச் செய்தார்கள்' என்று கூறியனுப்பினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6969.
இப்னு அப்பாஸ் அவர்கள் கூறியதாவது:
ஒரு கன்னிப்பெண் நபி அவர்களிடம் வந்துஇ (அல்லாஹ்வின் தூதரே!) என்னுடைய தந்தை என்னை ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டார். நான் அ(த் திருமணத்)தை விரும்பவில்லை" என்று கூறினாள்.
அப்போது நபி அவர்கள் அப்பெண்ணுக்கு (விரும்பினால் அத்திருமணத்தில் நீடிக்கலாம் அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ளலாம் என்று இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு விருப்ப உரிமை அளித்தார்கள்.
ஸுனன் அபூதாவூது 2096 (தமிழில் 1794)
அப்துர் ரஹ்மான் பின் யசீத் அல் அன்சாரி மற்றும் முஜம்மா பின் யசித் அல் அன்சாரி ஆகியோர் அறிவிப்பதாவது :
எங்களில் ஒருவராக இருந்த கிதாம் என்ற ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த பெண் தனது தந்தை ஏற்பாடு செய்த திருமணத்தை விரும்பவில்லை.
ஆகவே அவள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அதைப் பற்றி (தனக்கு தனது தந்தையின் ஏற்பாட்டில் விருப்பமில்லை என்பதை) அவர்களிடம் சொன்னாள்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ அவளது தந்தை ஏற்பாடு செய்த திருமணத்தை ரத்து செய்தார்கள். பின்னர் அவள் அபூ லுபாபா பின் அப்துல்-முன்திர் என்பவரை மணந்தாள்.
சுனன் இப்னு மாஜா 1873
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி) கூறினார்
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவேஇ நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5138.
மேற்கூறிய அனைத்து நபிமொழிகளும் விருப்பமில்லாமல் நடைபெறும் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை மணமக்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதை தெரியப்படுத்துகிறது.
அதைப்போல் ஒரு பெண் விருப்பப்படும் ஆணிற்கே அப்பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுப்பது பொறுப்பாளரின் கடமை என்று இஸ்லாம் கூறுகிறது
மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்கள் :
அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோதுஇ அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம்இ 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால்இ அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டுஇ இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ்இ '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவேஇ நான் நபி(ஸல்) அவர்களிடம்இ 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன்இ இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டுஇ மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5130.
ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்ய விரும்பினால் சுயவிருப்பு வெறுப்பிற்காக அந்த ஆணிற்கு திருமணம் முடித்து கொடுப்பதை தடுக்கக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி விளக்குகிறது.
ஆக மேற்கூறிய அனைத்து செய்திகளும் சம்மதம் பெறாமல் திருமணம் நடத்தக்கூடாது என்பதைத் தெரிவிக்கிறது. எனவே திருமணத்தின் முதல் அடிப்படை இருவரின் சம்மதமாகும்.
பொறுப்பாளர் (வலீ)
திருமணத்தின் அடுத்த அடிப்படை பொறுப்பாளராகும். ஒரு பெண்ணிற்கு பொறுப்பாளர் அவசியம்.
அல்லாஹ் கூறுகிறான் :
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும்இ உங்கள் ஆண் - பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்!
அல்குர்ஆன் 24 : 32
இணை வைக்கும் பெண்களைஇ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்வரை திருமணம் செய்யாதீர்கள்.
இணை வைக்கும் ஆண்கள்இ இறைநம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (இறைநம்பிக்கை கொண்ட பெண்களைத்) திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.
அல்குர்ஆன் 2 : 221
மேற்கூறிய இரண்டு வசனங்களும் பொறுப்பாளர்கள்தான் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. ஏனெனில் ஆண்களைக் குறித்துக் கூறும்போது திருமணம் செய்யாதீர்கள் என்று கூறும் இறைவன் பெண்களைக் குறித்துக் கூறும் போது திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறான்.
எனவே இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்இ ஒரு ஆண் தனது திருமணத்தை தானே நடத்திக் கொள்ளலாம். ஆனால் பெண்ணைப் பொறுத்தவரையில் அவளுக்கு பொறுப்பாளர் அவசியமாகும்.
பொதுவாகவே பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களாகவும் எளிதில் ஏமாறக்கூடியவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு பொறுப்பாளர் அவசியம் என்று மார்க்கம் கூறுகிறது.
பெண்களுக்கு பொறுப்பாளர் அவசியம் என்ற இஸ்லாத்தின் நிலைப்பாடு பெண்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அவர்களுக்கு நன்மை விளைவிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏமார்ந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவர்களுக்கு மோசடி செய்யப்படாமல் இருப்பதற்காகவுமே இஸ்லாம் பொறுப்பாளரை அவசியமாக்கியிருக்கிறது.
அதேசமயம் இது பெண்களின் உரிமையை தடுக்கும் விதமாக அமைவதுமில்லை. ஏனெனில் ஒரு பெண்ணிற்கு அவளது சம்மதம் இல்லாமல் பொறுப்பாளர் திருமணம் முடித்துக் கொடுக்கமுடியாது. இதை இருவரின் சம்மதம் அவசியம் என்ற தலைப்பில் பார்த்தோம். ஆக பொறுப்பாளர் அவசியம் என்பது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருப்பதேயொழிய உரிமையை பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.
இதை நபிகளாரும் வழிகாட்டியிருக்கிறார்கள்.
மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்கள் :
அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோதுஇ அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம்இ 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால்இ அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டுஇ இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ்இ '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவேஇ நான் நபி(ஸல்) அவர்களிடம்இ 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன்இ இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டுஇ மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5130.
இந்த ஹதீஸும் பெண்ணுக்கு பொறுப்பாளர்தான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. அதேசமயம் பாெறுப்பாளரால் பெண்ணின் உரிமை பறிக்கப்படுவதில்லை என்பதையும் இது தெரியப்படுத்துகிறது.
ஏனெனில் பெண்களின் இயல்பான குணம் யாரையும் எளிதில் நம்பிவிடுவதாகும். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்பதை எடைபோட்டு பார்க்கும் தன்மை அவர்களுக்குக் குறைவு. அவர்களிடத்தில் நிதானமாக முடிவெடுக்கும் தன்மையும் குறைவாக இருக்கும்.
உணர்ச்சிக்கு அதிகமாக ஆட்படக்கூடியவர்களாக பெண்களே இருக்கிறார்கள் என்பதை மனதத்துவ நிபுணர்களும் தெரிவிக்கிறார்கள்.
ஆகவேதான் இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தில் பெண்ணுக்கு பொறுப்பாளர் அவசியம் என்று தெரிவிக்கிறது.
அந்த அடிப்படையில்இ பெண்ணின் விருப்பத்தைப் பெற்றுஇ அவளுடைய திருமணத்தை அவளது பொறுப்பாளர்தான் நடத்திவைக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் நெருங்கிய ஆண் உறவினரே (அஸ்பா) அவளுக்குக் காப்பாளராக (வலி) இருக்க முன்னுரிமை பெற்றவர். அதாவது தந்தைஇ சகோதரன் போன்றவர் அவளுக்கு பொறுப்பாளராக இருப்பார். நெருங்கிய உறவினர் இல்லாதபோதுஇ தூரத்து உறவினர் பொறுப்பாளராக இருப்பார். மாமாஇ சிறிய தந்தைஇ பெரிய தந்தை போன்றவர்கள் பொறுப்பாளராக இருப்பார்கள்.
பொறுப்பாளராக இருப்பவர் ஐந்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
சுதந்திரமானவர்
புத்தி சுவாதீனம் உள்ளவர்
பருவ வயதை அடைந்தவர்.
முஸ்லிமானவர்
ஆண்களாக இருக்க வேண்டும்.
இது பொதுவாக அனைத்தவேிதமான பொறுப்பாளர்களுக்கும் கூறப்படும் நிபந்தனையாகும்.
இஸ்லாம் பெண்ணுக்கு பொறுப்பாளர் அவசியம் என்பதை அதிகமாக வலியுறுத்தியுள்ளது. அதேபோல் பொறுப்பாளர் தொடர்பான சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. அவை அனைத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
பொறுப்பாளரின்றி திருமணம் இல்லை
பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை நபியவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
அபூ மூஸா ரலி அறிவித்தார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“பொறுப்பாளரின்றி திருமணம் இல்லை”
சுனன் இப்னுமாஜா 1881இ அபூதாவூது 2085 (தமிழல் 1785)
ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் :
எந்தவொரு பெண்ணின் திருமணமும் அவளுடைய பாதுகாவலரால் ஏற்பாடு செய்யப்படாவிட்டால்இ அவளுடைய திருமணம் செல்லாது. அவளுடைய திருமணம் செல்லாது. அவளுடைய திருமணம் செல்லாது. (அவ்வாறு திருமணம் முடித்து ஆண்) அவளுடன் உடலுறவு கொண்டால்இ அவளது கற்பை அவன் தனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக்கொண்டதற்காக (அவளைப் பிரியும்போது) அவளுக்கு அவன் 'மணக்கொடை (மஹ்ர்) கொடுக்க வேண்டும். காப்பாளர்கள் தமக்கிடையே (அவளுக்கு யார் மணமுடித்துவைப்பது என்பதில்) சண்டையிட்டுக்கொண்டால்இ (காப்பாளர் இல்லாதவள் எனும் நிலையில் அவளை வைத்துஇ ஆட்சியாளரே அவளுக்கு மணமுடித்துவைப்பார். (ஏனெனில்) காப்பாளர் அற்றோருக்கு ஆட்சியாளரே காப்பாளர் ஆவார்.
சுனன் இப்னு மாஜா 1879இ சுனனுந் நஸாஈ 1021 (1102)இ தாரிமி 2230
மேற்கூறிய இரு நபிமொழிகளும் பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை தடை செய்துள்ளது. ஆகவே திருமணத்திற்கு பொறுப்பாளர் அவசியமாகும்.
இதற்கு மற்றொரு நபிமொழியும் ஆதாரமாகும்.
இப்னு அப்பாஸ் ரலி அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் மைமூனா ரலி அவர்களை திருமணம் செய்ய வேண்டி முன்மொழிந்தார்கள். அப்போது மைமூனா ரலி தனது காப்பாளராக அப்பாஸ் ரலி அவர்களை நியமித்திருந்தார்கள். ஆகவே அவர் அவளை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
முஸ்னது அஹமது 2441இ சுனனுந் நஸாஈ 3273
மைமுனா ரலியின் சகோதரி உம்முல் ஃபள்ல் ரலியை அப்பாஸ் ரலி திருமணம் முடித்திருந்தார்கள். அந்தவகையில்தான் மைமுனா ரலி தனது பொறுப்பாளராக அப்பாஸ் ரலியை நியமித்தார்கள். ஆகவேதான் அப்பாஸ் ரலி மைமுனா ரலியை நபிகளாருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இது நபிகளார் காலத்தில் பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் நடந்ததில்லை என்பதை தெரியப்படுத்துகிறது.
பொறுப்பாளர் இல்லையென்றால் ஆட்சியாளரே பொறுப்பாளராவார்
திருமணத்தில் பெண்ணுக்கு காப்பாளர் அவசியம். இருந்தபோதிலும் ஒரு பெண்ணிற்கு பொறுப்பாளர்கள் யாரும் இல்லையெனும்பட்சத்தில் ஆட்சியாளரே அந்த பெண்ணிற்கு பொறுப்பாளராக மாறுவார்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள்இ "எந்தப் பெண் தன் காப்பாளரின் அனுமதி இன்றி (தானே) மணமுடித்துக் கொள் கிறாளோ அவளது திருமணம் செல்லாது" என்று மூன்று முறை கூறினார்கள். மேலும் அவ்வாறு (மணமுடித்து) அவளுடன் தாம்பத்திய உறவு நடந்துவிட்டால்இ அவளிடமிருந்து அவன் அடைந்து கொண்ட (இன்பத்) திதற்காக (அவளைப் பிரியும்போது) அவளுக்கு அவன் மணக்கொடை (மஹ்ர்) கொடுக்க வேண்டும்.
காப்பாளர்கள் தமக்கிடையே (அவளுக்கு யார் மணமுடித்து வைப்பது என்பதில்) சண்டையிட்டுக் கொண்டால்இ (காப்பாளர் இல்லாதவள் எனும் நிலையில் அவளை வைத்துஇ ஆட்சியாளரே அவளுக்கு மணமுடித்து வைப்பார். ஏனெனில்இ) காப்பாளர் அற்றோருக்கு ஆட்சியாளரே காப்பாளர் ஆவார்" என்றும் கூறினார்கள்.
ஸுனன் அபூதாவூது 2083 (தமிழல் 1784)
அதாவது ஒரு பெண்ணுக்குக் பல பொறுப்பாளர்கள் இருந்துஇ அவளுக்கு மணமுடித்து வைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டாமல்இ அவளைச் சொந்தம் கொண்டாடுவதிலேயே காலம் கடத்திக்கொண்டிருந்தால்இ அவர்கள் இருந்தும் இல்லாதவர்களைப் போன்றுதான். எனவேஇ ஆட்சியாளரே அவளுக்குக் காப்பாளராக இருந்து மணமுடித்துவைக்கும் பொறுப்பை ஏற்பார். அவளுக்கு மணமுடித்துவைப்பதில் உறவினர்களிடையே போட்டியிருந்துஇ உறவின் நெருக்கத்தில் சமமானவர்களாகவும் இருந்தால்இ அவர்களில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர் காப்பாளராக இருப்பார். (துஹ்ஃபத்துல் அஹ்வதி)
சில நேரங்களில் ஆட்சியாளரான நபியவர்களே பொண்ணுக்கு பொறுப்பாளராக இருந்து திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள் :
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்து கொள்ளுமாறு கோரினார். அவளைவிட்டும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொண்ட நபி(ஸல்) அவர்கள்இ பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால்இ அந்தப் பெண்ணை நபி(ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்பவில்லை. அப்போது நபியவர்களின் தோழர்களில் ஒருவர்இ 'இறைத்தூதர் அவர்களே! இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள்இ '(மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர்இ 'என்னிடம் ஏதும் இல்லை'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள்இ 'இரும்பினால் ஆன மோதிரம் கூட இல்லையா?' என்று கேட்டார்கள். அவர்இ '(இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும்இ (நான் கீழாடையாக உடுத்திக் கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள்இ 'இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா?' என்று கேட்டார்கள். அவர்இ 'ஆம்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள்இ '(அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்'' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5132.
மேற்கூறிய நபிமொழியில் அந்த பெண்ணின் திருமணத்தை நபியவர்கள்தான் நடத்தி வைத்தார்கள் என்பது தெரிகிறது. ஆகவே காப்பாளர் இல்லாதபட்சத்தில் ஆட்சியாளர் பொறுப்பாளராக இருக்க வேண்டும்.
வக்காலத்து (பிரதிநிதித்துவம்)
அதாவது ஒரு பொதுவான நபரே பெண் சார்பாகவும் ஆண் சார்பாகவும் இருந்து இருவருக்கும் மத்தியில் திருமணம் நடத்தி வைக்கலாம்.
உக்பா பின் ஆமீர் அவர்கள் கூறியதாவது:
நபி அவர்கள் ஒருவரிடம்இ "இன்ன பெண்ணை உமக்கு மணமுடித்து வைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா? என்று கேட்டார்கள். அவர்இ 'ஆம்' என்றார். பிறகு நபி அவர்கள் அப்பெண்ணிடம்இ "இன்ன ஆணை உமக்கு மணமுடித்துவைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா?" என்று கேட்டார்கள். அந்தப் பெண் மணியும் 'ஆம்' என்றார்.
அவ்விருவரும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு அவர் அவளோடு தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால் அவர் அவளுக்கு மஹ்ரை நிர்ணயம் செய்யவும் இல்லை; எதையும். கொடுக்கவும் இல்லை.
அம்மனிதர் 'ஹுதைபியா'வில் கலந்துகொண்டவர் ஆவார். மேலும் 'ஹுதைபியா'வில் சுலந்து கொண்டவர்களுக்கு கைபரில் கிடைத்த (போர்ச் செல்வங்களின்) பங்கு கிடைத்தது.
அம்மனிதருக்கு மரண நேரம் நெருங்கியபோதுஇ "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்கு இன்ன பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். அப்போது நான் அவளுக்கு மஹ்ரை நிர்ணயம் செய்யவில்லை. மேலும் எதையும் அவளுக்குக் கொடுக்கவும் இல்லை. எனவே (மக்களே!) நான் உங்களை சாட்சியாக ஆக்குகிறேன்.
கைபர் போரில் கிடைத்த என்னுடைய பங்கை (என் மனை வியான) அவளுக்கு மஹ்ராக நான் இப்போது வழங்குகின்றேன்" என்று கூறினார். அவரின் மனைவி அதைப் பெற்றுக்கொண்டுஇ ஒரு லட்சம் வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டார்.
அபூதாவூத் (தமிழில் 1808)
ஒரு பாதுகாவலரே இருவருடைய வகீலாகவும் இருக்கலாம் என்பதற்கு இது ஆதாரமாகும்.
பெண்ணுக்கு பெண்ணே பொறுப்பாளராக முடியாது
அதைப்போல் பெண்களுக்கு பெண்களே காப்பாளர்களாக இருக்கமுடியாது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணுக்கு மணமுடித்து வைக்கக்கூடாது. எந்தப் பெண்ணும் தன் திருமணத்தை தானே ஏற்பாடு செய்யக்கூடாது. விபச்சாரி என்பவர் தன் திருமணத்தை தானே ஏற்பாடு செய்பவர் ஆவார்.”
இப்னு மாஜா 1882
இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
இணை வைக்கும் பெண்களைஇ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்வரை திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் பெண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவளாவாள். இணை வைக்கும் ஆண்கள்இ இறைநம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (இறைநம்பிக்கை கொண்ட பெண்களைத்) திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.
அல்குர்ஆன் 2 : 221
மேற்கூறிய வசனத்தில் ஆண்களைக் குறித்துக் கூறும்போதுஇ இணைவைக்கும் பெண்களை திருமணம் செய்யாதீர்கள் என்றும்இ பெண்களைக் குறித்துக் கூறும்போதுஇ திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறான். இதிலிருந்து பெண்கள் பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்பது தெளிவாகிறது.
பொறுப்பாளர் பெண்ணின் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்கக்கூடாது
பெண்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பெண்ணின் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்கக்கூடாது.
மஅகில் பின் யஸார் அவர்கள் கூறியதாவது:
எனக்கு ஒரு சகோதரி இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டுப் பலர் வந்தனர். அப்போது என்னுடைய சிறிய தந்தையின் மகன் (பெண் கேட்டு) என்னிடம் வந்தார். எனவே என் சகோதரியை அவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்தேன். (சில நாள்களுக்கு பிறகு) அவர் என் சகோதரிக்கு மணவிலக்கு அளித்துவிட்டார். அவருக்கு (என் சகோதரியை) திரும்ப அழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவரது 'இத்தா' (காத்திருப்பு) காலம் முடியும்வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியே அவர் விட்டுவிட்டார்.
பிறகு என் சகோதரியை (பழைய கணவரே மீண்டும்) பெண் கேட்டபோதுஇ நான்இ "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் உமக்கு அவரை மணமுடித்து வைக்கமாட்டேன்" என்று கூறினேன்.
"நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்துஇ அவர்கள் தங்களின் ('இத்தா' ) தவணையின் இறுதியை அடைந்துவிட்டால்இ தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்" எனும் (2:232ஆவது) வசனம் என் விஷயமாகவே இறங்கியது.
உடனே நான் செய்த சத்தியத்திற்காக குற்றப்பரிகாரம் செய்துஇ என் சகோதரியை அவருக்கு மணமுடித்துத் கொடுத்தேன்.
ஸுனன் அபூதாவூது 2087 (தமிழில் 1787)இ புகாரீ (4529இ 5130இ 5330இ 5331)இ திர்மிதீ (2907).
இதற்கு இன்னொரு சம்பவமும் ஆதாரமாக உள்ளது.
இப்னு உமர் ரலி அறிவிப்பதாவது :
உஸ்மான் இப்னு மழ்ஊன் ரலி ஒரு மகளை விட்டுவிட்டு மரணித்தார். என்தாய்வழி மாமாவான குதாமாஇ அந்த பெண்ணிற்கு தந்தைவழி மாமா ஆவார். அவர் என்னை அந்த பெண்ணிற்கு மணமுடித்து வைத்தார். ஆனால் அவர் அந்த பெண்ணிடம் கலந்தாலோசிக்கவில்லை. இது அவரது தந்தை இறந்ததற்குப் பிறகு நடந்ததாகும். அந்த பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அந்த பெண் முகீரா இப்னு ஷுஃபா ரலி அவர்களை திருமணம் முடிக்க விரும்பினார். ஆகவே அந்த பெண் அவரை திருமணம் செய்தாள்.
சுனன் இப்னு மாஜா 1878
இந்த சம்பவமும் பொறுப்பாளரின் நிலை பற்றி தெரிவிக்கிறது. ஒரு பொறுப்பாளர் தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணின் விருப்பத்திற்கு இணங்கி நடக்க வேண்டும்.
இதைக்குறித்து நபிகளார் மற்றொரு நபிமொழியில் கூறுகையில்இ
இப்னு அப்பாஸ் ரலி அறிவித்ததாவது :
“ஒருவரையொருவர் நேசிக்கும் இருவருக்கும் திருமணம் போன்றதைத் தவிர (சிறந்த வழி வேறு) எதுவுமில்லை.”
சுனன் இப்னு மாஜா 1847
ஆக ஒரு பெண் யாரை நேசிக்கிறாரோ அவருக்கே அந்த பெண்ணை திருமணம் முடித்து வைக்க வேண்டும். அதுதான் நல்லது. அதுவே பொறுப்பாளரின் கடமையும் கூட.
அதேசமயம் ஒரு பெண் விரும்பும் நபர் மோசமானவராக இருந்து அதை அந்த பெண் அறியாமல் இருந்தால் அதற்கு பொறுப்பாளர் தடையாக இருக்கலாம். ஏனெனில் இஸ்லாம் பெண்ணிற்கு பொறுப்பாளரை நியமித்ததன் நோக்கமே அந்த பெண் ஏமார்ந்துவிடக்கூடாது என்பதற்குத்தான். ஆகவே அவ்விஷயத்தில் பொறுப்பாளர் தலையிடலாம். ஆனால் தனது சுயவிருப்பு வெறுப்பிற்காக பெண்ணின் விருப்பத்தில் தலையிடுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.
சாட்சிகள்
திருமணத்திற்கான அடுத்த அடிப்படை இரண்டு சாட்சிகள்.
அல்லாஹ் திருமணம் குறித்து கூறும் போது அதை ஒரு உடன்படிக்கை என்று கூறுகிறான்.
وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍۢ وَأَخَذْنَ مِنكُم مِّيثَـٰقًا غَلِيظًۭا⭘
உங்களிடம் அவர்கள் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்திஇ நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதை எடுத்துக் கொள்ள முடியும்?
அல் குர்ஆன் - 4 : 21
திருமணம் என்பது உறுதியான உடன்படிக்கை எனும்பட்சத்தில் அந்த உடன்படிக்கைக்கு சாட்சி அவசியமாகும்.
ஏனெனில் ஒப்பந்தத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
நீங்கள் ஒப்பந்தங்கள் செய்யும்போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 2 : 282
ஆகவே திருமணம் எனும் உடன்படிக்கைக்கு சாட்சிகள் அவசியமாகும்.
இதை நபிகளாரும் வலியுறுத்தியுள்ளார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்: "பாதுகாப்பாளரும்இ நீதிமிக்க இரு சாட்சிகளும் இல்லாமல் திருமணம் இல்லை."
அல்பானியின் ஸஹீஹ் ஜாமிஃ 7557இ பைஹகியின் சுனன் அஸ் ஸகீர் 3ஃ21
சாட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் பருவ வயதை அடைந்தவராகவும்இ பகுத்தறிவும் புத்தி சுவாதீனம் உள்ளவராகவும் முஸ்லிமாகவும் இருக்க வேண்டும். இது பொதுவான விதியாகும்.
ஒப்பந்தங்களின் போது சாட்சிகள் நியமிக்கப்படுவதற்கான காரணம் அநிதி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
ஏனெனில் ஒப்பந்தங்களில் இரண்டு தரப்பினர்கள் பங்குபெறுவார்கள். ஒப்பந்தத்தின்போது ஒன்றை ஏற்றுக் காெண்டு பின்னர் அதற்கு மாற்றமாக பேசுபவர்களும் நடப்பவர்களும் மனிதர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவேதான் இஸ்லாம் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது.
அந்தவகையில் மற்ற மற்ற ஒப்பந்தங்களில் எப்படி ஏமாற்றுவதற்கு வாய்ப்புள்ளதோ அதுபோன்றே திருமணத்திலும் ஏமாற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
திருமண ஒப்பந்தத்திற்குப் பிறகுஇ பெண் தரப்போ அல்லது ஆண் தரப்போ ஒப்பந்தத்தை மீறுவதற்கு வாய்ப்புள்ளது.
அவ்வாறு ஏற்படும் சமயத்தில் அவ்விரு தரப்பினருக்குமிடையில் சமரசம் செய்து நீதியை வழங்குவதற்கு அந்த சாட்சிகள் துணைபுரிவார்கள்.
ஆகவேதான் இஸ்லாம் திருமண ஒப்பந்தத்திற்கு மட்டுமல்லாமல் விவாகரத்திற்குக் கூட இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து உங்களில் விடுங்கள்! நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும்இ இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
அல்குர்ஆன் 65:2
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு சாட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நீதியை நிலைநாட்டுவது சாட்சிகளின் முக்கிய பணியாக இருப்பதால் நாம் சாட்சியாக யாரைத் தேர்வு செய்கிறோமோ அவர்களைக் கொண்டே பெண்பேசுவது முதல்இ மஹர் தீர்மானிப்பது உட்பட திருமணம் ஒப்பந்தம் முடியும் வரையிலுள்ள அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
ஆகவே திருமண சபைகளில் வந்திருப்பவர்களில் ஒருவரைத் அவசர அவசரமாகத் தேடிப்பிடித்து அவரை சாட்சியாக்குவது நல்லதன்று. அதைப்போல் எதுவும் தெரியாதவரை சாட்சியாக்கக் கூடாது. நல்லவராகவும் மார்க்கத்தை முன்னிறுத்துபவராகவும் இருப்பவரை சாட்சிகளாக தேர்வு செய்து கொள்வதே தம்பதிகளுக்கும் இருவீட்டாருக்கும் பயனளிக்கும்.
மஹ்ர் எனப்படும் திருமணக்கொடை
திருமணத்தில் அடுத்த முக்கியமான அடிப்படை மஹராகும்.
மஹர் தொடர்பாக இஸ்லாம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.
மஹர் இல்லாமல் திருமணம் இல்லை
திருமணத்திற்கு மஹர் அத்தியாவசியமாகும். மஹர் இல்லாமல் திருமணம் இல்லை.
உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாஃபிஉ(ரஹ்) அவர்கள்இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என்று என்னிடம் தெரிவித்தார்கள்.
உடனே நான் நாஃபிஉ அவர்களிடம்இ 'ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?' என்று கேட்டேன்.
அவர்கள்இ 'ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6960.
மேற்கூறிய நபிமொழி மஹர் இல்லாமல் திருமணம் முடிப்பதை தடை செய்கிறது.
திருமணத்திற்கு மஹர் அவசியமாகும்.
ஆகவே திருமணத்திற்கு மஹர் என்பது அவசியமாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில்இ உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர் (விவாகக் கொடை)தான்.
என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5151.
திருமணம் என்பது ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தங்களில் முதன்மையானது மஹராகும். மஹரைப் பேசித்தான் திருமணப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவ்வாறு பேசப்பட்ட மஹரை வழங்குவது அவசியமாகும்.
எனவேதான் மஹரை வலியுறுத்தி பல வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்
அல்லாஹ் கூறுகிறான் :
وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَـٰتِهِنَّ نِحْلَةًۭ ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَىْءٍۢ مِّنْهُ نَفْسًۭا فَكُلُوهُ هَنِيٓـًۭٔا مَّرِيٓـًۭٔا⭘
பெண்களுக்கு அவர்களின் திருமணக்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! அதிலிருந்து அவர்கள் மனமுவந்து எதையேனும் உங்களுக்குத் தந்தால் அதைத் திருப்தியுடனும் மகிழ்வுடனும் உண்ணுங்கள்!
அல் குர்ஆன் - 4 : 4
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர மற்ற பெண்களில் கணவன் உள்ளவர்களையும் (திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.) இவை உங்கள்மீது அல்லாஹ் விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர மற்றவர்களை நீங்கள் விபச்சாரம் செய்வோராக இல்லாமலும்இ கற்பு நெறியைப் பேணியவர்களாகவும் உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்துத் (திருமணத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 4 : 24
அவர்களுக்குரிய திருமணக் கொடைகளை நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள்
அல்குர்ஆன் 4 : 25
அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதும் (அனுமதிக்கப்பட்டுள்ளது.)
அல்குர்ஆன் 5 : 5
மேற்கூறிய அனைத்து வசனங்களும் மஹர் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கிறது. ஆகவேதான் நபியவர்களும் இதை அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள் :
ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்துஇ 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகுஇ தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இ தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்துஇ 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால்இ அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள்இ
'(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?' என்று கேட்டார்கள்.
அதற்கவர்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லைஇ இறைத்தூதர் அவர்களே!' என்றார்.
நபி(ஸல்) அவர்கள்இ உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!' என்றார்கள்.
அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துஇ 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்.
'இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்!' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள்.
அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்துஇ 'இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால்இ இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது' என்று கூறினார்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'இந்த வேட்டியை நீர் அணிந்தால்இ அவளின் மீது ஏது இருக்காது. அவள் அணிந்தால்இ உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)' என்று கேட்டார்கள்.
பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டார். பிறகுஇ அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோதுஇ 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது' என்று கேட்டார்கள். அவர்இ 'இன்னஇ இன்னஇ அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன' என்று எண்ணி எண்ணிக் கூறினார்.
நபி(ஸல்) அவர்கள்இ 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள்.
அவர்இ 'ஆம் (ஓதுவேன்)' என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள்இ 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5030.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள்இ "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில்இ அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை)உள்ளது"என்றார்கள். அதற்கு அந்த மனிதர்இ "அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்" என்றார். "எவ்வளவு மணக்கொடையில் (மஹ்ர்) அவளை மணக்கப்போகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்இ "நான்கு ஊக்கியாக்கள்" என்றார். ஸஹீஹ் முஸ்லிம் : 2784.
அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடிஇ (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பிஇ அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம்.(அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்)இ மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்" என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்இ "அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள்இ "(சரி) அவர்கள் இருவரையும் அனுப்பிவையுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்றுஇ அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்துஇ "நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ("நீ பேசுஇ நீ பேசு" என) ஒருவரையொருவர் பேசச்சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர்இ "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவேஇ இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்டநேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேசவேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்இ) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்" என்று கூறிவிட்டுஇ "(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம்இ "இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம்இ (என்னைச் சுட்டிக்காட்டி)இ "இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம்முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும்இ மஹ்மியா (ரலி) அவர்களிடம் "இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக்கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்இ "அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1945.
மேற்கூறிய அனைத்து நபிமாெழிகளும் மஹர் கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
கொடுத்த மஹரைத் திரும்பப் பெறக்கூடாது
நாம் கொடுத்த மஹரை நாமே திரும்ப எடுத்துக் காெள்ளக்கூடாது. அவ்வாறு எடுப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
நீங்கள் (மணவிலக்குச் செய்த) ஒரு பெண்ணின் இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் (மணவிலக்குச் செய்யப்பட்ட) அவளுக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! அநியாயமாகவும்இ பகிரங்கமான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா?
அல் குர்ஆன் - 4 : 20
மேற்கூறிய வசனத்தில் பொற்குவியலையே கொடுத்திருந்தாலும் அவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை தெரிவிக்கிறது.
பெண்களாக விட்டுத்தந்தால் பெற்றுக் கொள்ளாலம்
ஆகவே நாம் வழங்கிய மஹரை நாம் வலுக்கட்டாயமாகப் பிடிங்கிக் காெள்ளக்கூடாது.
அதைப்போல் அவற்றை அவர்கள் விட்டுத்தந்தால் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகிறான் :
பெண்களுக்கு அவர்களின் திருமணக்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! அதிலிருந்து அவர்கள் மனமுவந்து எதையேனும் உங்களுக்குத் தந்தால் அதைத் திருப்தியுடனும் மகிழ்வுடனும் உண்ணுங்கள்!
அல் குர்ஆன் - 4 : 4
நீங்கள் அவர்களிடமிருந்து அடையும் இன்பத்திற்காக அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கட்டாயமாக வழங்கி விடுங்கள். நிர்ணயித்த பின்னர் (திருமணக் கொடையில் மாற்றம் செய்து அதை) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டால் அதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் - 4 : 24
ஒரு மஹரைப் பேசி பின்னர் அதை கொடுப்பதற்கு போதிய வசதி இல்லாத சூழல் ஏற்பட்டால் அந்நிலையில் பெண்கள் தங்களது மஹரை விட்டுக் கொடுக்கலாம். அல்லது மஹரை குறைத்துக் கொள்ளுமாறு ஆண் பேசிப்பார்க்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் கொடுத்த மஹரை வலுக்கட்டாயமாக திரும்பப் பெறக்கூடாது.
மஹர் ஏன்?
அல்லாஹ் மஹரை ஏன் நிர்ணயம் செய்துள்ளான் என்பதற்கு சில காரணங்கள் உண்டு
இல்லற இன்பம் அனுபவிப்பதற்கு..
நீங்கள் அவர்களிடமிருந்து அடையும் இன்பத்திற்காக அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கட்டாயமாக வழங்கி விடுங்கள்.
அல் குர்ஆன் - 4 : 24
உங்களிடம் அவர்கள் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்திஇ நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதை எடுத்துக் கொள்ள முடியும்?
அல் குர்ஆன் - 4 : 21
நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயித்துஇ அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் சரிபாதி (அவர்களுக்கு) உண்டு. அப்பெண்கள் விட்டுக் கொடுத்தாலோ அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறதோ - அ(க்கண)வர் விட்டுக் கொடுத்தாலோ தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. உங்களுக்கிடையே தாராளத்தன்மையை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
அல் குர்ஆன் - 2 : 237
மேற்கூறிய மூன்று வசனங்களும் பெண்களைத் தீண்டுவதற்காக அவர்களுக்கு மஹர் வழங்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது.
ஆண்களுக்கு நிர்வாகி எனும் அந்தஸ்தை தரும் மஹர்
அதேபோல் ஆண்கள் மஹ்ர் கொடுப்பதுதான் ஆண்களுக்கு கண்ணியமாகும். ஏனெனில் ஆண்களை நிர்வாகி என்ற அந்தஸ்து பெற்றவராக்குவது மஹ்ராகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள். அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதும்இ ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுவதுமே இதற்குக் காரணமாகும்.
அல் குர்ஆன் - 4 : 34
இஸ்லாம் ஆண்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது. அதற்கு பகரமாக ஆண்களுக்கு தலைமைத்துவ பதவியை வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்பப்புள்ளிதான் மஹர்.
எதையெல்லாம் மஹராக வழங்கலாம்
மஹரைப் பொறுத்தவரை அது மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும். அது பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அதுதான் மஹ்ருக்கான அர்த்தமாக இருக்கும்.
தங்கம்இ வெள்ளி மற்றும் காசு
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்களிடம்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடைஇ பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும்" என்று கூறிவிட்டுஇ "நஷ்ஷு என்றால் என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்கள்.
நான் "இல்லை" என்றேன்.
அவர்கள்இ "அரை ஊக்கியாவாகும்;
(ஆகமொத்தம்) அது ஐநூறு திர்ஹங்கள் ஆகும். இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடையாகும்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2787.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஒரு (அன்சாரிப்) பெண்ணை மணந்தார்கள். (அவரின் முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி)இ ஒரு பேரிச்சங் கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்'' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5148.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் "எவ்வளவு மணக்கொடையில் (மஹ்ர்) அவளை மணக்கப்போகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அவர்இ "நான்கு ஊக்கியாக்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "(ஓ!) நான்கு ஊக்கியாக்களா? வெள்ளியை நீங்கள் இந்த மலைப்பகுதியிலிருந்து குடைந்தெடுக்கிறீர்கள் போலும். என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2784.
அல்லாஹ் கூறுகிறான் :
நீங்கள் (மணவிலக்குச் செய்த) ஒரு பெண்ணின் இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் (மணவிலக்குச் செய்யப்பட்ட) அவளுக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! அநியாயமாகவும்இ பகிரங்கமான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா?
அல் குர்ஆன் - 4 : 20
நபியவர்களும் ஸஹாபாக்களும் பெரும்பாலும் தங்கள் வெள்ளி மற்றும் பொருளாதாரத்தையே மஹராக வழங்கியுள்ளார்கள். அல்லாஹ்வும் திருமறையில் மஹரைப் பற்றி பேசும் போது தங்கத்தையே குறிப்பிடுகிறான். ஆகவே நம்மிடத்தில் பொருளாதாரம் இருந்தால் அவற்றையே நாம் வழங்க வேண்டும்.
அதைப்போல் நபியவர்கள் சில நேரங்களில் பொருளாதாரம் அல்லாதவைகளையும் மஹராக அங்கீகரித்திருக்கிறார்கள்.
போர்க் கவசம்
"அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்இ பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்தபோதுஇ அல்லாஹ்வின் தூதர் அவரிடம்இ 'அவளுக்கு ஏதாவது (மஹர்) கொடுங்கள்' என்று கூறினார்கள்.
அதற்கு அவர்இ 'என்னிடம் எதுவும் இல்லை' என்றார்.
நபியவர்கள்இ 'உங்கள் ஹுதாமி கவசம் எங்கே?" என்றார்கள்.
அதற்கு அவர்இ அது என்னிடம்தான் உள்ளது என்றார்.
பிறகு நபியவர்கள்இ அதை அவளுக்கு (மஹராகக்) கொடுங்கள் என்று கூறினார்கள்.
சுனன் நஸாயி 3375இ 3376
அலீ ரலி அவர்கள் ஏழையாக இருந்தார்கள். அவர்களிடத்தில் போதிய பொருளாதாரம் இல்லை. ஆகவேதான் அவர்களின் போர்கவசத்தை மஹராக வழங்குமாறு நபியவர்கள் கூறினார்கள்.
குர்ஆனைக் கற்பித்தல்
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள்இ 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5087.
மேற்கூறிய நபிமொழியில் இடம்பபெற்றுள்ள ஸஹாபி ஏழையாக இருந்தார். அவரிடத்தில் பொருளாதாரமோ மற்ற பொருட்களோ எதுவும் இல்லை. ஆகவேதான் அவரை குர்ஆனை கற்றுக் கொடுக்குமாறு நபியவர்கள் கூறினார்கள்.
இரும்பு மோதிரம்இ ஆடைகள் வழங்குதல்
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்
ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பியவரிடம் நபி(ஸல்) அவர்கள்இ '(மஹர் வழங்குவதற்காக) உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!'' என்றார்கள்.
அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துஇ 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை'' என்றார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்)பார்!'' என்றார்கள்.
அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்துஇ 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லைஇ இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை; ஆனால்இ இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது'' என்றார்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உம்முடைய வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த வேட்டியை நீ உடுத்திக் கொண்டால் அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உன் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5087.
நபியவர்கள் தங்கம்இ வெள்ளி மற்றும் பிற பொருட்கள் இல்லாதவரிடம் இரும்பு மோதிரம் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் இல்லாதவர் வேஷ்டியைத் தருவதாக் கூறியிருக்கிறார். ஆனால் அவரிடத்தில் ஒரு வேஷ்டியைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவேதான் அவற்றை அவர்கள் ஏற்கவில்லை. எனவே இரும்பு மோதிரம்இ வேஷ்டி போன்ற உடைகளையும் மஹராக வழங்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.
வேலை செய்தல்
கூலி வேலை செய்வதை மஹராக நிர்ணயிக்கலாம் என்பதற்கு மூஸா நபியின் வரலாறு சான்றாக உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
“நீர் என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எனது இவ்விரு மகள்களில் ஒரு பெண்ணை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால் உமது விருப்பம். உமக்குச் சிரமமளிக்க நான் விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் உள்ளவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 28 : 27
எட்டு ஆண்டுகள் கூலி வேலை பார்ப்பதை மஹராக ஆக்கியிருக்கிறார்கள் மூஸா நபி.
அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்தல்
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள் :
(கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும்இ அவர்களை விடுதலை செய்ததையே மஹ்ர் (விவாகக் கொடையாக) ஆக்கி (தாமே அவர்களை மணந்து) கொண்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5086.
அடிமையாக இருப்பவருக்கு விலையுண்டு. ஆகவேதான் நபியவர்கள் அடிமையை விடுதலை செய்வதையே மஹராக ஆக்கியிருக்கிறார்கள்.
இஸ்லாத்தை மஹராக ஆக்குதல்
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :
அபூதல்ஹா உம்மு சுலைமை திருமணம் செய்தார்கள். அவர்களுக்கிடையில் இஸ்லாமே மஹராக இருந்தது.
அபூதல்ஹாவிற்கு முன்பாகவே உம்மு சுலைம் இஸ்லாத்தை ஏற்றுக் காெண்டுவிட்டார். அப்போது அபூதல்ஹா உம்மு சுலைமிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். அதற்கு உம்மு சுலைம் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்களை மணத்து கொள்கிறேன் என்று கூறினார்கள். ஆகவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதே அவர்களுக்கான மஹராக ஆனது.
நூல் : நஸாயி 3340
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :
அபூதல்ஹா உம்மு சலைமிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
அதற்கு உம்மு சுலைம்இ அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூதல்ஹாவே உங்களைப் போன்ற ஆண்கள் நிராகரிக்கப்படமாட்டா்கள். இருந்தபோதிலும் நீங்கள் இறைமறுப்பாளராக இருக்கிறீர்கள். நான் முஸ்லிமாக இருக்கிறேன். (இறைமறுப்பாளரான) உங்களைத் திருமணம் செய்வது எனக்குத் தடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதையே நான் மஹராக ஏற்றுக் கொள்கிறேன். அதன்பிறகு நான் உங்களிடம் மஹராக எதையும் கேட்கமாட்டேன். எனவே அவர் இஸ்லாத்தை ஏற்றார். அதுவே அவர்களுக்கு மஹராக ஆனது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் கூறுகிறார் : உம்மு சுலைம் மஹராகக் பெற்றுக் கொண்டதைவிட மிகச் சிறந்த மஹரைப் பெற்றுக் கொண்ட எந்த பெண்ணையும் நான் கேள்விப்படவில்லை. அவர்கள் இஸ்லாத்தை மஹராகக் பெற்றுக் கொண்டார்கள். அவருடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு குழந்தையும் பெற்றெடுத்தார்கள்.
சுனனுந் நஸாஈ 3341
உலகத்திலேயே இஸ்லாத்தை மஹராக ஏற்றுக் கொண்டவர்கள் உம்மு சுலைம் ரலிதான். இதையும் நபியவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.
சிறந்த மஹர்
மஹரானது பல்வேறு விதமாக வழங்கப்பட்டாலும் அவற்றில் எது சிறந்த மஹர் என்பதை நபியவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
خيرُ الصَّداقِ أيسَرُه
உக்பா இப்னு ஆமிர் ரலி அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் : மாப்பிள்ளையால் கொடுப்பதற்கு எளிமையாக உள்ள மஹர்தான் சிறந்த மஹராகும்.
ஆதாரம் : புலூகுல் மராம்இ அபூதாவூது 2117இ இர்வாஉ கலீல் 6ஃ344
ஆண்களால் கொடுக்க முடியுமான விஷயங்களையே பெண்கள் மஹராக கேட்க வேண்டும். அப்படிப்பட்ட மஹர்தான் சிறந்த மஹராக இருக்கும்.
அதைப்போல் எளிமையான மஹ்ரைப் பெறும் பெண்ணிற்கு இறைவனின் பரக்கத் ஏற்படும் என்று நபிகளார் அறிவித்துள்ளார்கள்.
إِنَّ مِنْ يُمْنِ الْمَرْأَةِ تَيْسِيرَ خِطْبَتِهَا، وَتَيْسِيرَ صَدَاقِهَا، وَتَيْسِيرَ رَحِمِهَا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (பரக்கத் எனும்) இறையருளை பெற்றவள் என்பதற்கு அடையாளம்இ அவளை பெண் பேசுவது எளிதாக இருக்கும். அவளின் (மஹர் எனும்) திருமணக் கொடை(த் தொகை) எளிதாக இருக்கும். அவள் பிள்ளைப்பேறைப் பெறுவதும் எளிதாக இருக்கும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 24478)
வசதிக்கு ஏற்ப கொடுக்க வேண்டும்
அதைப்போல் அல்லாஹ் மனிதர்களை பலதரப்பட்டவர்களாக படைத்துள்ளான். பொருதாரத்தில் ஏற்ற இறக்கம் உள்ளவர்களாக மனிதர்களை ஆக்கியிருக்கிறான். அந்தவகையில் ஒவ்வொருவரும் தனது வசதிக்கு தகுந்தாற்போல் மஹர் வழங்க வேண்டும்.
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ⭘
நீங்கள் பெண்களைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயிக்காமலோ அவர்களை மணவிலக்குச் செய்தால் உங்கள்மீது குற்றமில்லை. வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும்இ வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும் அழகிய முறையில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குங்கள். (இது) நன்மை செய்வோர்மீது கடமையாகும்.
அல் குர்ஆன் - 2 : 236
ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்பவே மஹர் கொடுக்க வேண்டும். அதுதான் சிறந்த மஹராக இருக்கும்.
இதை உமர் இப்னு கத்தாப் ரலியும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அபுல் அஜ்ஃபாஉ அஸ் ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் ரலி அவர்கள் எங்களுக்கு (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் மணக் கொடை (மஹ்ர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள்இ நபி அவர்கள்தாம். (ஆனால்) நபி அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.
அபூதாவூது (தமிழில் 1801)
மஹர் குறிப்பிடாமல் திருமணம் முடித்தால்…
மஹர் பேசி திருமணம் முடிப்பதுதான் நபிவழி. ஒருவேளை மஹரைப் பேசாமல் திருமணம் முடித்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதற்கும் நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
உக்பா பின் ஆமீர் அவர்கள் கூறியதாவது:
நபி அவர்கள் ஒருவரிடம்இ "இன்ன பெண்ணை உமக்கு மணமுடித்து வைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா? என்று கேட்டார்கள். அவர்இ 'ஆம்' என்றார். பிறகு நபி அவர்கள் அப்பெண்ணிடம்இ "இன்ன ஆணை அவர் உமக்கு மணமுடித்துவைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா?" என்று கேட்டார்கள். அந்தப் பெண்மணியும் 'ஆம்' என்றார்.
அவ்விருவரும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு அவர் அவளோடு தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால் அவர் அவளுக்கு மஹ்ரை நிர்ணயம் செய்யவும் இல்லை; எதையும். கொடுக்கவும் இல்லை.
அம்மனிதர் 'ஹுதைபியா'வில் கலந்துகொண்டவர் ஆவார். மேலும் 'ஹுதைபியா'வில் கலந்து கொண்டவர்களுக்கு கைபரில் கிடைத்த (போர்ச் செல்வங்களின்) பங்கு கிடைத்தது.
அம்மனிதருக்கு மரண நேரம் நெருங்கியபோதுஇ "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்கு இன்ன பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். அப்போது நான் அவளுக்கு மஹ்ரை நிர்ணயம் செய்யவில்லை. மேலும் எதையும் அவளுக்குக் கொடுக்கவும் இல்லை. எனவே (மக்களே!) நான் உங்களை சாட்சியாக ஆக்குகிறேன்.
கைபர் போரில் கிடைத்த என்னுடைய பங்கை (என் மனைவியான) அவளுக்கு மஹ்ராக நான் இப்போது வழங்குகின்றேன்" என்று கூறினார். அவரின் மனைவி அதைப் பெற்றுக்கொண்டுஇ ஒரு லட்சம் வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டார்.
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
எனது ஆசிரியர் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு முழுமையானது. மேலும் அவர்கள் அறிவித்த நபிமொழியின் தொடக்கத்தில்இ "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எளிமையான திருமணமே சிறந்ததாகும் என்று அம்மனிதரிடம் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அபூதாவூது 2117இ 1808.
மணக்கொடை (மஹர்) நிர்ணயம் செய்யப்படாமலேயே திருமணம் செல்லுபடியாகும் என்று இந்த நபிமொழி உணர்த்துகிறது. அதனால் மணக்கொடை இல்லை என்று ஆகிவிடாது. மணக்கொடை இல்லாமல் திருமணம் செல்லாது என்பதை மேலே உள்ள அனைத்து நபிமொழிகளும் உணர்த்துகின்றன.
எனவே ஒருவர் அறியாமையினால் மஹர் கொடுக்காமல் திருமணம் முடித்திருந்தால் அவர் தெரிய வந்ததும் மஹர் வழங்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழியே ஆதாரமாகும்.
"அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களிடம் ஒருவர் குறித்து (மேற்கண்டவாறு) வழக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களிடம் ஒரு மாதம் அல்லது பல முறை பேசி கருத்து வேறுபாடு கொண்டனர்.
அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள் "(அப்படி யானால் இந்தப் பிரச்சினையில் எனக்குத் தெரிந்ததைச் சொல் கிறேன்" என்று கூறிவிட்டு)இ "அவளுக்கு அவளுடைய (சகோத ரிகள் போன்ற அவளது குடும்பப்) பெண்களின் மஹ்ர் போன்றது உண்டு. அதில் கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. அவளுக்கு வாரிசுச் சொத்தும் உண்டு. அவளுக்கு இத்தாவும் உண்டு.
இது சரியாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வந்தது. தவறாக இருந்தால் அது என்னைச் சார்ந்தது. மேலும் ஷைத்தானைச் சார்ந்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தவறுகளை விட்டும் நீங்கியவர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அஷ்ஜஈ கோத்திரத்தைச் சேர்ந்த அல்ஜர்ராஹ்இ அபூசினான் மற்றும் அவர்களின் சிலர் எழுந்து நின்றுஇ "அப்துல்லாஹ் பின் மஸ்ஊதே! நீங்கள் தீர்ப்பளித்த இதையே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிர்வஉ பின்த் வாஷிக் அவர்களுக்குத் தீர்ப்பளித் தார்கள் என்று நாங்கள் சாட்சி அளிக்கின்றோம். அப்பெண்ணின் கணவர் அல்அஷ்ஜஈ கோத்திரத்தைச் சேர்ந்த ஹிலால் பின் முர்ரா அல்அஷ்ஜஈ ஆவார்."
(இதை கேட்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள் என்னுடைய தீர்ப்பு அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தீர்ப்புக்கு ஒத்ததாக இருக்கிறதே என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்கள்.
அபூதாவூது (தமிழில் 1807) 2114இ 2114
ஆகவே மஹர் நிர்ணயம் செய்யாமல் திருமணம் முடித்திருந்தால் பின்னர் உரிய மஹர் வழங்க வேண்டும். தனது பொருளாதார வசதிக்கு தகுந்தாற்போல் மஹர் வழங்க வேண்டும்.
மஹரை நிர்ணயம் செய்யாமலும் இல்லறத்தில் ஈடுபடும் முன்னரும் தலாக் கூறினால்…
மஹரை நிர்ணயம் செய்யாமல் திருமணம் செய்து இல்லறத்திலும் ஈடுபடாமல் விவாகரத்து செய்தால் அதற்கும் மஹர் வழங்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ⭘
நீங்கள் பெண்களைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயிக்காமலோ அவர்களை மணவிலக்குச் செய்தால் உங்கள்மீது குற்றமில்லை. வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும்இ வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும் அழகிய முறையில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குங்கள். (இது) நன்மை செய்வோர்மீது கடமையாகும்.
அல் குர்ஆன் - 2 : 236
ٱلطَّلَـٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَـٰنٍۢ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘
இந்த(த் திருப்பி அழைத்துக் கொள்ளும்) மணவிலக்கு இரண்டு தடவைதான். பின்னர் முறைப்படி சேர்ந்து வாழ வேண்டும்; அல்லது அழகிய முறையில் விடுவித்துவிட வேண்டும். நீங்கள் மனைவியருக்கு வழங்கியவற்றில் எதையும் (மணவிலக்கிற்குப் பின்) பெற்றுக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை. எனினும்இ (ஒரு பெண்இ தன் கணவனிடமிருந்து மணவிலக்குக் கோரினால்) அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சிஇ மேலும் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்களும் அஞ்சினால் அவள் (மணக் கொடையை) ஈடாகக் கொடுத்து (கணவனைப் பிரிந்து) விடுவதில் இருவர்மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை நீங்கள் மீறாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை யார் மீறுகிறார்களோ அவர்களே அநியாயக்காரர்கள்.
அல் குர்ஆன் - 2 : 229
மேற்கூறிய வசனத்தில் அழகிய முறையில் விடுவித்துவிடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அதைப்போல் உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் வழங்குங்கள் என்றும் கூறுகிறான். அந்த வகையில் நீதியான முறையில் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
மஹரை நிர்ணயம் செய்து பின்னர் வழங்கலாம்
அல்லாஹ் கூறுகிறான் :
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةًۭ فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ⭘
நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயித்துஇ அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் சரிபாதி (அவர்களுக்கு) உண்டு.
அல் குர்ஆன் - 2 : 237
இவ்வசனத்தில் மஹரை நிர்ணயித்து தீண்டுவதற்கு முன் மணவிலக்கு செய்தால்… என்று அல்லாஹ் கூறுகிறான். இதன்மூலம் திருமணத்திற்கு முன் மஹரை நிர்ணயித்து அதை திருமணத்திற்கு பின்னர் வழங்கலாம் என்பது விளங்குகிறது
அதேபோல் மூஸா நபி வரலாறும் இதற்கு ஆதாரமாகும். அவர்கள் மஹராக எட்டு அல்லது பத்து ஆண்டுகள் கூலி வேலை செய்வதை நிர்ணயித்து பின்னர் திருமணம் செய்தார்கள். இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னரும் அவர்களின் மஹரை (கூலி வேலையை) அவர்கள் வழங்கி வந்துள்ளார்கள்.
இருந்தபோதிலும் மஹரை திருமணத்தின்போது வழங்குவதுதான் சிறந்தது.
மஹர் பற்றி இப்னு கஸீரின் விளக்கம்
மஹர் தொடர்பாக இமாம் இப்னு கஸீர் அருமையான விளக்கத்தை வழங்கியுள்ளார்கள். அவற்றை நாம் இதில் பதிவு செய்துள்ளோம்.
மஹ்ர் எனும் சொல்லுக்கு பதில்இ பகரம்' என்பது சொற்பொருளாகும் மணமகளுக்கு மணமகன் கட்டாயமாக அளிக்க வேண்டிய மணக்கொடைக்கே இஸ்லாமிய வழக்கில் மஹ்ர் என்பர் திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யும் வகையிலும்இ மணமகளை வைத்து வாழ்க்கை நடத்துகின்ற தகுதி மணமகனுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலும் மஹ்ர் கொடுக்கும் முறை மார்க்கத்தில் சுட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் தம்பதியரிடையே பிரிவினை ஏற்பட்டாலும்கூட இந்த மஹ்ர் தொகை மணமகளுக்கு ஓர் உதவியாக இருக்கும்.
மனைவிமீது கணவனுக்கு உண்மையிலேயே பற்று உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் இந்த மஹ்ர் அமைந்துள்ளது.
இந்த அடிப்படையிலேயே உண்மை எனும் பொருள் பொதிந்த ஸதாக் (பன்மை ஸதுகாத்) எனும் பெயரே இங்கு வசனத்தில் (4:2-4) மஹ்ருக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆக மணமகளின் தகுதியையும் பாதுக்காப்பையும் இந்த மஹ்ர் உறுதி செய்கிறது (மஆரிஃபுல் குர்ஆன்)
அடுத்த வசனத்தில் (4)இ "பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கு 'மனமுவந்து' என்பதைச் சுட்ட 'நிஹ்லா எனும் சொல் மூலத்தில் ஆளப்பட் டுள்ளது.
இச்சொல்லுக்கு 'மணக்கொடை' (மஹ்ர்) என்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பொருள் கூறியுள்ளார்கள்.
கட்டாயமாக' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் பொருள் செய்தார்கள். அரபி யரின் வழக்கிலும் இதற்குக் கட்டாயம்" என்றே பொருள் என இப்னு ஸைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன்படி. ஒரு பெண்ணுக்குக் கட்டாயமாக அளிக்க வேண்டிய மணக் கொடையை அளிக்காமல் அவளை மணமுடிக்கலாகாது என இந்த வசனத் தின் பொருள் அமையும். நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் கட்டாயமான மணக்கொடையைச் செலுத்தாமல் ஒரு பெண்ணை மணப்பது முறையாகாது.
ஆகஇ மனைவிக்கு மணக்கொடை அளிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமையாகும். அதை மனமுவந்து அளிக்கவும் வேண்டும். அன்பளிப்புப் பொருட்கள் எவ்வாறு மனமுவந்து வழங்கப்படுமோஇ அவ்வாறே மணப் பெண்ணுக்கு அவளது மணக்கொடை மனமுவந்து வழங்கப்பட வேண்டும்…..
ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அன்று ஒருவர் தம் மகளை மணமுடித்துக் கொடுக்கும் போது அவளுக்குச் சேர வேண்டிய மணக்கொடையை அவளிடம் கொடுக்காமல் தாமே எடுத்துக்கொள்வார். இதைக் தடுக்கும் விதமாகவே அல்லாஹ் இந்த வசனத்தை (4) அருளினான்.
வலீமா
திருமணத்தின் அடுத்த முக்கிய அம்சம் வலீமா எனும் மணவிருந்தாகும்.
வலீமா' எனும் சொல்இ 'வல்ம்' எனும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்கு 'ஒன்றுக்கூடுதல்' என்பது சொற்பொருளாகும். மணமக்கள் ஒன்றுகூடுவதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம். திருமணத்திற்காக மணமகள் சார்பாக வழங்கப்படும் மணவிருந்தே மார்க்கத்தில் 'வலீமா' எனப்படுகிறது. 'வலீமா' விருந்து கொடுப்பதும் அந்த விருந்து அழைப்பை ஏற்பதும் நபிவழி ஆகும்.
(துஹ்ஃபத்துல் அஹ்வதீ)
திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்வாகும். மகிழ்ச்சியான நிகழ்வில் ஏழைகளுக்கு உணவளித்து அவர்களையும் மகிழ்விப்பதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
அதனால்தான் நோன்பு பெருநாளின்போது ஃபிதரா எனும் கடமையையும் ஹஜ் பெருநாளில் குர்பானி என்ற கடமையையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
அந்தவரிசையில் திருமணம் எனும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியையொட்டி வலீமா எனும் மணவிருந்து வைப்பதை ஆண் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. ஆண்தான் பொருளாதாரக் கடமையை சுமப்பவன் என்பதால் அவன்மீதே வலீமாவை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
வலீமா விருந்தின் அளவு
வலீமா விருந்தின் அளவை நபிகளார் நிர்ணயம் செய்யவில்லை. மஹரைப் போல அவரவர் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற வகையில் வலீமா விருந்தளிப்பதற்கு நபிகளார் விட்டுள்ளார்கள்.
மஹருக்கு ஏற்ற வகையில் விருந்தளித்தல்
இருந்தபோதிலும் ஒருவர் தான் வழங்கும் மஹர் தொகைக்கு தகுந்தார்போல் மணவிருத்தளிக்க வேண்டும் என்று நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணந்துகொண்டபோது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள்இ 'அவளுக்கு எவ்வளவு மஹ்ர் (திருமணக் கொடை) கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி)இ 'ஒரு பேரிச்சங் கொட்டை எடை அளவுத் தங்கத்தை'' என்று கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து அளியுங்கள்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5167.
இந்நபிமொழியில் எவ்வளவு மஹர் கொடுத்தீர்கள்? என்று கேட்டுஇ அதை அறிந்ததற்குப் பிறகு ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்தளிக்குமாறு நபியவர்கள் ஏவியிருக்கிறார்கள். ஆகவே நம்மிடத்திலுள்ள பொருளாதாரத்திற்கு தகுந்தாற்போல் மஹர் தொகை வழங்குவதுபோல் வலீமா விருந்தும் வழங்க வேண்டும் என்பதை இதன்மூலம் நபியவர்கள் உணர்த்துகிறார்கள்.
நபியவர்கள் வழங்கிய வலீமா
அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்துஇ ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
(வலீமா விருந்து) உணவுக்காகஇ மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள். பிறகுஇ மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன்.
ஸஹீஹ் புகாரி : 4793.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :
(கைபர் போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விடுதலை செய்துஇ தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்; (ஸஃபிய்யா(ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (விவாகக் கொடையாகவும்) ஆக்கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம்இ பாலாடைக் கட்டிஇ நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) 'ஹைஸ்' எனும் பண்டத்தை வலீமா (மணவிருந்தில் அளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5169.
ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலருக்காக (அவர்களை மணந்ததன் பின்) வாற்கோதுமையில் இரண்டு 'முத்து' அளவில் வலீமா விருந்தளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5172.
மேற்கூறிய மூன்று நபிமாெழிகளும் நபிகளார் வழங்கிய திருமண விருந்தைப் பற்றிக் கூறுகிறது. மூன்றுமே வெவ்வேறு வகையான உணவுகள்.
ஒரு விருந்தில் ரொட்டியும் இறைச்சியும் வைக்கப்பட்டுள்ளது.
மற்றாெரு விருந்தில் வாற்கோதுமை விருந்து வைக்கப்பட்டுள்ளது.
மற்றொருமுறை கைஸ் என்ற உணவு வைக்கப்பட்டுள்ளது.
இது ஸஃபிய்யா ரலியை திருமணம் செய்ததற்காக வைக்கப்பட்ட உணவு. அப்போது நபியவர்கள் கைபர் போரை முடித்துவிட்டு மதினாவிற்கு வந்து கொண்டிருத்தார்கள். பயணத்தில் இருந்ததால் இந்த உணவை வைத்தார்கள்.
ஆகவே நம்மிடத்தில் உள்ள பொருளாதாரத்திற்கு தகுந்தாற்போல் வலீமா விருந்து அளிக்க வேண்டும்.
அதைப்போல் நம்மால் முடிந்த அளவிற்கு வலீமா விருந்தை சிறப்பாக வைக்க வேண்டும். ஏனெனில் நபித்தோழர்கள் வலீமா விருந்து வைப்பதற்காக தனியாக உழைத்திருக்கிறார்கள்.
சுவை மிகுந்த உணவுகள்
வலீமாவில் சுவை மிகுந்த உணவையும் வைக்கலாம்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள் :
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அஸ்ஸா இதீ(ரலி)இ தம் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.)
மணப் பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத் சலாமா பின்த் வஹ்ப்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மணப்பெண் (உம்மு உசைத்) பருகுவதற்கு என்ன தந்தார் தெரியுமா?
அவர் நபி(ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரிச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருந்தார்.
நபி(ஸல்) அவர்கள் (வலீமா எனும் மணவிருந்தை) சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரிச்சம் பழச் சாற்றை அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.
ஸஹீஹ் புகாரி : 5176.
வலீமா என்பது திருமண விருந்து. திருமணம் மூலம் நாம் மட்டும் சந்தோஷத்தை அனுபவிக்காமல் பிறருக்கும் சந்தோஷத்தை வழங்க வேண்டும் என்பதற்கு வழங்கப்படும் விருந்துதான் வலீமா விருத்து. ஆகவே அதில் சுவை மிகுந்த உணவுகள் வைப்பது சிறந்தது.
வலீமாவிற்காக உழைத்தல்
அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அறிவித்தார்கள் :
பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள்இ அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லைஇ விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன்.
ஸஹீஹ் புகாரி : 2375.
அலீ ரலி ஏழ்மை நிலையில் இருந்த சஹாபி. ஆகவேதான் அவர்கள் வலீமாவிற்காக உழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சஹாபாக்கள் வலீமா விருந்திற்காக தனியாக உழைத்ததை குறிக்கிறது.
ஏழைகளை புறக்கணிக்கக்கூடாது
வலீமா விருந்தின் முக்கிய நிபந்தனை ஏழைகளை புறக்கணிக்கக்கூடாது என்பதாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :
ஏழைகளை விட்டுவிட்டுஇ செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
ஸஹீஹ் புகாரி : 5177.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டுஇ மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவேஇ கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2819.
ஆகவே வலிமா விருந்தில் ஏழைகளை அழைக்க வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. நம்மை நமது இறைவன் மகிழ்வித்ததற்காக நாம் பிற ஏழைகளை மகிழ்விக்க வேண்டும்.
அதிகம் பேரை அழைக்கலாம்
ஆகவே நாம் நமது வலீமா விருந்தில் உறவினர்கள்இ அண்டைவீட்டார்இ ஏழைகள் என்று முடிந்த அளவிற்கு நமக்குத் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும். அதைப்போல் நமக்குத் தெரியாதவர்களையும் நாம் வலீமா விருந்திற்காக அழைக்கலாம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்கள் ஸஃபிய்யா ரலியை மணமுடித்த பின்னர் வலீமா விருந்திற்காக என்னிடம்) "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறிஇ சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.
-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம்இ "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்குஇ "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2803.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்துஇ ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
(வலீமா விருந்து) உணவுக்காகஇ மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள். பிறகுஇ மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன்.
ஸஹீஹ் புகாரி : 4793.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள் :
திருமண விருந்தொன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரிப்) பெண்களையும் சிறுவர்களையும் நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்.
உடனே (அவர்களை நோக்கி) மகிழ்ச்சியுடன்) எழுந்து சென்றுஇ 'இறைவா! (நீயே சாட்சி' என்று கூறிவிட்டுஇ அவர்களைப் பார்த்துஇ) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5180.
வலீமா விருந்திற்கு தெரிந்தவர்களை மட்டும் அழைக்க வேண்டும் என்பதில்லை. தெரியாதவர்களையும் அழைக்கலாம். முடிந்த அளவிற்கு வலீமா விருந்தை சிறப்பாக வைக்க வேண்டும். ஆனால் பெருமைக்காக வைக்கக்கூடாது. ஊரார் பாராட்ட வேண்டும் என்பதற்காக வைக்கக்கூடாது. நம்மால் முடிந்த அளவிற்கு நமது சக்திக்கு உட்பட்ட வகையில் வலீமா விருந்து வைக்க வேண்டும்.
மாப்பிள்ளைக்காக பிறரும் வலீமா விருந்தளிக்கலாம்
வலீமா விருந்தளிப்பது மணமகனின் மீது கடமை. இருந்தபோதிலும் மணமகனின் சார்பாக வேறுயாரேனும் வைத்தால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
"அப்துல்லாஹ் இப்னு அபீ அல்-அஸ்வத் எங்களிடம் அறிவித்தார்இ அவர் கூறினார்: ஹுமைத் இப்னு அல்-அஸ்வத் எங்களிடம் அறிவித்தார்இ அவர் ஹஜ்ஜாஜ் அஸ்-சவ்வாஃப் அவர்களிடமிருந்து அறிவித்தார்இ அவர் கூறினார்: அபூ அஸ்-ஸுபைர் என்னிடம் அறிவித்தார்இ அவர் கூறினார்: ஜாபிர் எங்களிடம் அறிவித்தார்இ அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: 'பனூ சலமா மக்களே! உங்களின் தலைவர் யார்?' நாங்கள் கூறினோம்: 'ஜுத் இப்னு கைஸ்இ என்றாலும் அவர் கஞ்சத்தனமுள்ளவர் என்று கருதுகிறோம்.' அதற்கு நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: 'கஞ்சத்தனத்தை விட மோசமான நோய் வேறு எதுவுண்டு? இல்லைஇ உங்கள் தலைவர் அம்ரு இப்னு அல்-ஜமூஹ் தான்.' அம்ரு அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்) அவர்களின் சிலைகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார்இ மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் 'வலிமா' (திருமண விருந்து) அளிப்பவராக இருந்தார்."
அதபுல் முஃப்ரத் 296
இதில் நபிகளார் தன் சார்பாக பிறர் வலிமா விருந்தளிப்பதை அங்கீகரித்திருக்கிறார்கள்.
வலீமா விருந்தை புறக்கணிக்கக் கூடாது
வலீமா விருந்திற்கு அழைக்கப்பட்டால் அதை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டிருக்கிறா்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!
ஸஹீஹ் புகாரி : 5173.
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள்இ '(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (வலீமா - மணவிருந்து முதலியவற்றிற்காக) அழைத்தவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5174.
பேச்சுவார்த்தை
திருமணம் என்பது உறுதியான ஒப்பந்தமாகும். ஆகவே அந்த ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்.
அவற்றில் முதலாவது பெண்கேட்டு முன்மொழிதலாகும்.
பெண்கேட்டு முன்மொழிவதை மூன்று தருணங்களில் இஸ்லாம் தடுத்துள்ளது. ஆகவே அந்த மூன்று விஷயங்கள் இல்லாத பட்சத்தில்தான் திருமண பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவை
இத்தா இருக்கும் போது
அந்த பெண்ணை வேறொருவர் பேசிக் கொண்டிருத்தல்
இஹ்ராமில் வைத்து
இத்தா இருக்கும் போது
ஒரு பெண் தன் கணவனை இழந்து அல்லது விவாகரத்துப் பெற்று இத்தாவில் இருக்கும் சமயத்தில் ஒரு ஆண் பெண்கேட்டு முன்மொழிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
(இத்தாவில் இருக்கும்போது) நிர்ணயிக்கப்பட்ட அதற்குரிய தவணை நிறைவடைவதற்குள் திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி விடாதீர்கள்.
அல்குர்ஆன் 2 : 235
மேற்கூறிய வசனத்தில் இத்தாவில் இருக்கும்போது திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தக்கூடாது என்று அல்லாஹ் தடுத்துள்ளான்.
ஆகவேதான் இவ்விஷயத்தில் நபிகளார் கவனம் செலுத்தினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள். நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்தவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்.
பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாகி) நாடு துறந்து (மதீனாவிற்கு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாகி) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள்.
பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ பெண்ணோ (முஸ்லிமாகி) நாடு துறந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (நாடு துறந்து வந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.
ஸஹீஹ் புகாரி : 5286.
காஃபிராக இருந்த ஒரு பெண் முஸ்லிமாகி நாடுதுறந்து வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்படும் வரையில் அவளிடத்தில் பெண் பேசக்கூடாது. ஏனெனில் அவள் கருவுற்று இருக்காறாளா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறை மாதவிடாய். ஆகவே அது வரையிரும் பாெறுத்திருக்குமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
அதைப்போல் இத்தா காலத்தில் திருமண பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதை நபித்தோழர்களும் வலுவாகக் கடைபிடித்தார்கள்.
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்கள் :
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத்(ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். 'விடைபெறும்' ஹஜ்ஜினபோது ஸஅத்(ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்த நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோதுஇ பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போதுஇ பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக்(ரலி) சுபை ஆ அவர்களிடம் வந்துஇ 'திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனுடைய இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது' என்று கூறினார்கள்.
சுபைஆ(ரலி) கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்குஇ 'நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளான ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3991.
மேற்கூறிய சம்பவத்தில் அபுஸ்ஸனாபில் ரலி அவர்கள் இத்தா காலம் முடியும்வரையில் மறுமணம் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்ததிலிருந்து இதை சஹாபாக்கள் நடைமுறைப்படுத்திவந்ததை அறிந்துகொள்ளலாம்.
அதேசமயம் இவ்விஷயத்தில் அபுஸ்ஸனாபில் ரலி தவறான தீர்ப்பு வழங்கியதற்குக் காரணம் இத்தா பற்றிய நபிவழியை முழுவதுமாக அறியாததுதான்.
அதாவது ஒரு பெண் தனது கணவன் இழந்து அச்சமயத்தில் கருவுறாமல் இருந்தால் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் இத்த இருக்க வேண்டும்.
அதேசமயம் கணவன் இறக்கும் தருவாயில் அந்த பெண் கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் காலமே இத்தா காலமாகும். இதை அபுஸ்ஸனாபி அறிந்திருக்கவில்லை.
ஆனால் நபியவர்கள் இந்த சட்டத்தை சுபைஆ ரலிக்கு தெரிவித்து அவரது இத்தா காலம் முடிவடைந்ததாக அறிவித்தார்கள்.
சாடைமாடையாகக் கூறலாம்
இத்தாவின்போது திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதற்குத்தான் தடையிருக்கிறதேயொழிய சாடைமாடையாக விருப்பம் தெரிவிப்பது தடையல்ல.
அல்லாஹ் கூறுகிறான் :
(காத்திருப்புக் காலத்தில்) அப்பெண்களிடம் திருமண விருப்பத்தை ஜாடைமாடையாகத் தெரிவிப்பதோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொள்வதோ உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளான். எனினும் அவர்களிடம் இனிய சொற்களைக் கூறுவதைத் தவிர ரகசியமாக வாக்குறுதி அளித்து விடாதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட அதற்குரிய தவணை நிறைவடைவதற்குள் திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி விடாதீர்கள். உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிந்துஇ அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்இ சகிப்புத் தன்மையுடையவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 2 : 235
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்இ "அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" (இறைவாஇ எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால்இ அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)" என்று கூறினேன். ஆயினும்இ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பிஇ தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்" என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1674.
மேற்கூறிய சம்பவத்தில் உம்மு சலமாவின் இத்தா காலகட்டத்தில் நபிகளார் சாடைமாடையாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்பதையும் அவரது இத்தா காலம் முடிந்தபிறகு பெண் கேட்டு தூது அனுப்பினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் மற்றாெரு சம்பவமும் ஆதாரமாக உள்ளது.
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :
ஸைனப் ரலி அவர்களின் இத்தா முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் ரலியிடம்இ ‘எனக்காக அவளிடம் திருமண முன்மொழிவு கூறுங்கள்' என்று கூறினார்கள். ஆகவே ஸைத் ரலி (ஸைனப் ரலியிடம்) வந்துஇ ஓ ஸைனப் மகிழ்ச்சியடையுங்கள். ஏனென்றால்இ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை அவர்கள் சார்பாக திருமண முன்மொழிவு செய்ய உன்னிடம் அனுப்பியுள்ளார்கள்' என்று கூறினார். அதற்கு (ஸைனபாகிய) அவளர்கள்இ 'நான் என் இறைவனிடம் ஆலோசனை கேட்கும் வரை எதுவும் செய்ய மாட்டேன்' என்று கூறினாள். பின்னர் அவள் தொழுகை இடத்திற்குச் சென்று தொழுதாள். அதன்பிறகு குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த சம்பிரதாயமும் இல்லாமல் அவளைச் சந்தித்தார்கள்.
சுனனுந் நஸாஈ 3251
இதிலும் ஸைனப் ரலியின் இத்தா காலம் முடிந்தபிறகே நபிகளார் திருமண முன்மாெழிவு செய்திருக்கிறார்கள். ஆகவே இத்தாவின் போது திருமண பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பது தெளிவு.
மற்றாெருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது
ஒருவர் ஒரு பெண்ணை மணம் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் அதே பெண்ணை நாமும் பெண் பேசக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண்ணைஇ தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போதுஇ எவரும் (இடையில் குறுக்கிட்டுத்) தமக்காகப் பெண் பேசலாகாது.
ஒரு பெண் தன் (இஸ்லாமிய) சகோதரியின் பாத்திரத்தைக் கவிழ்த்து(விட்டு அதைத் தனதாக்கி)க்கொள்ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப் போகின்றவரிடம்) கோரலாகாது. அவள்இ (முதல் மனைவி இருக்கவே) மணந்துகொள்ளட்டும். ஏனெனில்இ இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயம் இவளுக்குக் கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2747.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் :
ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5142.
மேற்கூறிய நபிமொழிகள் பிறர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் இடைமறித்து பெண் பேசக்கூடாது என்பதை தெரிவிக்கிறது.
இஹ்ராமில் இருக்கும்போது
ஹஜ்ஜிற்காகவோ அல்லது உம்ராவிற்காகவோ இஹ்ராம் அணிந்திருந்தால் அப்போது திருமண பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது.
நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள் (தம்முடைய புதல்வர்) தல்ஹா பின் உமருக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவேஇ (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வருமாறு கூறினார்.
அப்போது அபான் (ரஹ்) அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக்கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது" என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2750.
இஹ்ராம் அணிந்திருப்பவர் திருமண பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி அறிவிக்கிறது.
மேற்கூறி மூன்று தருணங்களிலும் திருமண பேச்சுவார்த்தையை நடத்தக்கூடாது. அதுவல்லாத மற்ற நேரங்களில் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்.
விவாகரத்து செய்தவரே மீண்டும் பெண் பேசலாம்
ஒரு மனிதர் ஒரு பெண்ணை திருமணம் செய்து பின்னர் அவளை விவாகரத்தும் செய்து பின்னர் மீண்டும் மணக்க விரும்பினால் அவர் அவளை மணக்கலாம். இவ்வாறு இறுதி தலாக் (மூன்றாவது) நிகழ்வதற்கு முன்னர் வரையிலும் மணப்பதற்கு அனுமதி உள்ளது.
ஹஸன் அல்பஸரீ (ரஹ்) கூறினார் :
மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களின் சகோதரியை அவரின் கணவர் விவாகரத்துச் செய்து 'இத்தா' காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே)விட்டுவிட்டார். (எனவேஇ இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.) பிறகுஇ மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில்(ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.
அப்போதுதான்இ 'அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் அருளப்பட்டது.
ஸஹீஹ் புகாரி : 4529.
திருமண முன்மொழிவை யார் செய்ய வேண்டும்
பொதுவாக ஆண் தேடக்கூடியவனாகவும் பெண் தேடப்படக்கூடியவளாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் இது கட்டாயமில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்பதுபோல் ஒரு பெண்ணின் பொறுப்பாளரும் பெண் சார்பாக ஒரு ஆணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம்.
திருமண முன்மொழிவை ஆண் செய்யலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
மைமூனா ரலி மற்றும் ஸைனப் ரலியை திருமணம் செய்வதற்கு நபிகளார்தான் முன்மொழிந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
அதைப்போல் பெண் தரப்பிலிருந்தும் திருமண முன்மொழிவை வழங்கலாம் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளது.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் :
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையான போது (அவர்களை வேறொருவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)
-குனைஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும்இ பத்ருப் போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும்இ மதீனாவில் இறந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனவேஇ நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறிஇ நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஹாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள்இ (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது (யோசித்த பின் எனது முடிவைக் கூறுகிறேன்) என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்த போது) அவர் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவேஇ நான் அபூபக்ர் அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூழுக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவேஇ உஸ்மான் அவர்களை விட அபூழுக்ர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃஸாவைப் பெண் கேட்டார்கள். எனவேஇ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போதுஇ நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போதுஇ நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மன வருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான்இ ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்ர் -ரலி) அவர்கள் நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம்இ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான்இ உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருதிருப்பேன் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4005.
உமர் ரலி அவர்கள் தனது மகள் சார்பாக நபித்தோழர்களிடத்தில் திருமண முன்மொழிவை வைத்திருக்கிறார்கள். அதை நபிகளார் எதிர்க்கவில்லை என்பதிலிருந்து இது அனுமதி என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதற்கு மற்றோர் சான்று.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் அபூசுஃப்யான் (ரலி) அவர்களை (அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகும்) ஏறெடுத்துப் பார்க்காமலும் அவரைத் தம் அவைகளில் அனுமதிக்காமலும் இருந்து வந்தனர்.
(இந்நிலையில்இ) அவர் நபி (ஸல்) அவர்களிடம்இ "அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு (நிறைவேற்றி)த் தாருங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்இ "என்னிடம் அரபியரிலேயே மிகவும் அழகான இலட்சணமான பெண் இருக்கிறார். அவர்தான் (என் மகள்) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான். அவரைத் தங்களுக்கு நான் மணமுடித்துத் தருகிறேன்" என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள்.
அடுத்து "தாங்கள் (என் புதல்வர்) "முஆவியா"வை தங்களுடைய எழுத்தராக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள்இ "ஆ(கட்டு)ம்" என்றார்கள்.
அடுத்து "படைப் பிரிவொன்றுக்கு என்னைத் தலைவராக்குங்கள். முஸ்லிம்களுடன் நான் போரிட்டுக் கொண்டிருந்ததைப் போன்று இறைமறுப்பாளர்களுடனும் நான் போரிட வேண்டும் (அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு என்மீதுள்ள வெறுப்பை நான் அகற்றிக்கொள்வேன்)" என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4914.
இதிலும் அபூசுஃப்யான் ரலி தனது மகள் சார்பாக நபிகளாரிடம் திருமண முன்மொழிவை வழங்கியிருக்கிறார்கள். அதை நபிகளாரும் அனுமதித்திருக்கிறார்கள். ஆகவே பெண் தரப்பிலிருந்தும் திருமண முன்மொழிவை வைக்கலாம். அது இழிவிற்குரியது அல்ல.
தன்னிடத்திலுள்ள குறைகளை வெளிப்படுத்திக் கூறுவது சிறந்தது
நம்மிடத்தில் திருமண முன்மொழிவை யாராவது முன்வைத்தால் அவரிடத்தில் நமது முக்கிய குறைகளை வெளிப்படுத்துவது நல்லது. ஏனெனில் அது பிற்காலத்தில் பிரச்சனை எழாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும்.
உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பிஇ தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்" என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1674.
நபிகளார் தன்னிடத்தில் திருமண முன்மொழிவை கூறிய போது உம்மு சலமா ரலி தனது குறைகளை வெளிப்படுத்துகிறார்கள். தான் ஒரு முன்கோபக்காரி என்பதை தெரியப்படுத்துகிறார்கள். ஆகவேதான் நபிகளார் அதற்காக பிரார்த்தனை செய்தார்கள். இது ஒரு நல்ல வழிமுறை. நாம் நமது சில குறைகளை முன்கூட்டியே கூறினால் அதற்கு தகுந்தாற்போல் நமது துணைவர் நடந்து கொள்வார். அது பல பிரச்சனைகளை தவிர்க்கும்.
திருமண முன்மொழிவை நிராகரிக்கலாம்
ஒருவர் நம்மிடத்தில் திருமண முன்மொழிவை வைத்தால் அது நமக்கு சரியாகாத பட்சத்தில் நிராகரிக்கலாம். அதில் தவறில்லை.
அதேபோல் நாம் முன்மொழியும் திருமண விருப்பத்தை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை ஏற்க வேண்டும். அவ்வாறு நிராகரிக்கும்பட்சத்தில் அதற்காக நாம் கோபமும் கொள்ளக்கூடாது.
அப்துல்லாஹ் பின் புரைதா ரலி தனது தந்தை அறிவித்ததாக கூறியதாவது :
“அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி ஆகியோர் ஃபாத்திமா ரலியை திருமணம் செய்ய வேண்டி நபியவர்களிடம் முன்மொழிந்தனர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ‘ஃபாத்திமா இளவயதைச் சேர்ந்தவள்’ என்று கூறி(அவர்களது முன்மொழிவை நிராகரித்தார்கள்). பின்னர் அலீ ரலிஇ அவளை திருமணம் செய்ய வேண்டி முன்மொழிந்தார். அவருக்கு நபிகளார் திருமணம் செய்து வைத்தார்கள்.
சுனனுந் நஸாஈ 3221
அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி போன்ற மிகப்பெரும் சஹாபாக்களின் முன்மொழிவை நபிகளார் மறுத்திருக்கிறார்கள். அதற்காக அவ்விருவரும் கோபம் கொள்ளவில்லை.
அதேபோல் நபிகளாரும் மறுக்கப்பட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)" அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள்இ குறைஷிப் பெண்கள்தான் ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஆயினும் இவற்றில் "(தம்) குழந்தைகள் மீது அதிகப் பாசமுடையவர்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 4947.
நபிகளாரின் திருமண முன்மொழிவை உம்மு ஹானீ ரலி மறுத்திருக்கிறார்கள். அதற்காக நபிகளார் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவரது குணத்தை மெச்சி பாராட்டியிருக்கிறார்கள்.
ஆக நமது கோரிக்கையை யாரேனும் மறுத்தால் அதற்காக நாம் கோபப்படத் தேவையில்லை. நாம் நிராகரிக்கப்பட்டதற்காக நாம் இழிவானவர்களாக ஆக மாட்டோம். இவற்றை சாதாரணமான ஒன்றாக எடுத்து நல்லமுறையில் கடந்து செல்ல வேண்டும்.
திருமண பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விலகுதல்
திருமண முன்மொழிவை வழங்கி அதை அவரும் ஏற்று திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்ட பின்னர் இடையில் அதை வேண்டாம் என்று மறுப்பதற்கு இருவருக்கும் அனுமதி உள்ளது.
அதாவது திருமண ஆலோசனை செய்திருப்பவர் அதிலிருந்து பின்வாங்கலாம். திருமணம் முடிக்கின்ற வரையிலும் மாறுவதற்கு அனுமதி உள்ளது.
அதேசமயம் திருமண பேச்சுவார்த்தைக்கு பின் ஏதேனும் அன்பளிப்பகள் வழங்கியிருந்தால் அவற்றை திரும்பப் பெறக்கூடாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2622.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்: "பரிசுப்பொருளையோ அல்லது தானத்தையோ கொடுத்தபின் அதனை திரும்ப வாங்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. ஒரு தந்தை தன் மகனுக்குக் கொடுத்ததைத் தவிர." பரிசாகக் கொடுத்த பொருளை திரும்ப வாங்குவது தனது வாந்தியை தானே சாப்பிடுவது போன்றதாகும்”.
(அபூதாவூத் 3539)
ஆனால் மஹர் தொகையில் சிறு பகுதியை கொடுத்திருந்தால் அதை வாங்கலாம். ஏனெனில் மஹர் என்பது திருமணம் முடிப்பதற்காக வழங்கப்படுவதாகும். இங்கு திருமணம் முடிக்கப்படவில்லை எனும்போது அதை திரும்பப் பெற்றுக்கொள்வது சரியானதுதான்.
நிபந்தனை விதித்தல்
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அடுத்ததாக நாம் பார்க்க வேண்டிய விஷயம் நிபந்தனை விதிப்பது தொடர்பானதாகும்.
திருமணம் என்பது ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்திற்கு நிபந்தனைகள் விதிப்பது தவிர்க்கமுடியாதது. ஆகவே அது தொடர்பாக அறித்து கொள்வது அவசியமாகும்.
திருமணத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.
கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகள்
பொதுவாக ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
இறைநம்பிக்கை கொண்டோரே! உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
அல்குர்ஆன் 5 : 1
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஸ்லிம்கள் தங்களுடைய நிபந்தனைகளைப் பேண வேண்டும்."
அபூதாவூத்-3594இ இர்வாஊ கலீல் 1419
அந்தவகையில் திருமணத்தில் விதிக்கப்படும் சில நிபந்தனைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இதைக்குறித்து நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில்இ உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2772.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில்இ உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் ஏற்படுத்திக் கொண்டவையே
என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2721.
எனவே திருமணத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
அதேசமயம் நாம் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனைகள் திருமணத்தின் நோக்கங்களில் கட்டுப்பட்டதாகவும்இ அல்லாஹ் மற்றும் அவனது தூதருடைய சட்டதிட்டங்களுக்கு முரணாக அமையாத வகையிலும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிபந்தனைகளைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்குஇ
குடும்பத்தில் நீதியுடன் நடத்தல்இ
மனைவிக்கு நல்லமுறையில் உடைஇ உறைவிடம்இ செலவு ஆகியவற்றைச் செய்தல்இ
மனைவியின் உரிமைகளில் எவ்வித குறையும் ஏற்படாமல் கவனித்துக்கொள்ளுதல்இ
பலதார மணம் செய்திருந்தால் மற்ற மனைவியரைப் போன்றே இவளுக்கும் நாட்களைப் பங்கு வைத்தல்இ
கணவனுடைய அனுமதி இன்றி வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல்இ
கணவனுடைய அனுமதி இன்றி ஸுன்னத்தான நோன்பு வைக்காமல் இருத்தல்இ
அவனுடன் சண்டை போடாமல் இருத்தல்இ
அவனுடைய அனுமதி இன்றி வீட்டினுள் யாரையும் அவள் அனுமதிக்காமல் இருத்தல்இ
அவனுடைய திருப்தி இன்றி அவனுடைய பொருட்களை அவள் செலவு செய்யாமல் இருத்தல்
இது போன்றவை இதற்கான உதாரணங்கள் ஆகும். இவற்றை நிபந்தனைகளாக விதிக்காமல் இருந்தாலும் இதைப் பின்பற்றுவது கடமையாகும்.
நிராகரிக்க வேண்டிய நிபந்தனைகள்
திருமண ஒப்பந்தத்திற்கு முரணாகவும் இஸ்லாமிய சட்டதிட்டத்திற்கு முரணாகவும் அமையும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்துஇ அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துஇ அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையும் வீணானதே; அவை நூறு நிபந்தனைகளானாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத்தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது! (கட்டுப்படுத்தும் வலிமையுடையது!) நிச்சயமாக அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமைஇ விடுதலை செய்தவருக்குத் தான்!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2168.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போதுஇ இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண்இ தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!'
ஸஹீஹ் புகாரி : 2140.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒரு பெண்இ மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலி செய்(துவிட்டு அதைத் தன்னுடையாக்கிக் கொள்)வதற்காக அவளை விவாகவிலக்குச் செய்திடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில்இ அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5152.
என்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் உனது மனைவியை விவாகரத்து செய் என்று கூறும் நிபந்தனைகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். இது முதல் மனைவிக்கு இழைக்கப்படும் தீங்காக அமையும். ஆகவேதான் இத்தகைய நிபந்தனைகளை நபிளகளார் கண்டித்துள்ளார்கள்.
இதுபோன்று மார்க்கத்திற்கு முரணான அனைத்து நிபந்தனைகளும் கண்டிக்கத்தக்கதாகும்.
உதாரணமாக;
கணவனாக இருக்கும் நான் எனது மனைவியாக வரவிருக்கும் உனக்கு செலவு செய்யமாட்டேன்.
நாம் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
நான் உனக்கு மஹ்ர் தொகை தரமாட்டேன்.
மனைவியாக இருக்கும் நீ கணவனாக ஒருக்கும் எனக்கு செலவுக்குக் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற திருமண நோக்கத்திற்கு மாற்றமாக இருக்கும் நிபந்தனைகள் திருமண ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் நிறைவேற்றவும் வேண்டியதில்லை.
இவை அனைத்தும் செல்லுபடியாகாத நிராகரிக்கப்பட நிபந்தனைகள் வேண்டியவை ஆகும். காரணம் இவை திருமண ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
ஒருவேளை அறியாமையின் காரணத்தால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பின்னர் அதைப்பற்றிய மார்க்க அறிவு கிடைத்தால் திருமண ஒப்பந்தம் முறியாது. மாறாக அந்த நிபந்தனைகளை மட்டுமே நாம் புறக்கணிக்க வேண்டும்.
தவறான இந்த நிபந்தனைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டதாகத்தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் திருமண ஒப்பந்தத்தைவிட மேலதிகமான நிபந்தனைகள் ஆகும்.
3) பெண்ணுக்கு பயன் தரும் நிபந்தனைகள்
திருமண நோக்கங்களில் கட்டுப்படாத அதேசமயம் அதற்கு முரணாகவும் அமையாத நிபந்தனைகள் பயன்தரும் நிபந்தனைகளாகும். அவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.
உதாரணமாகஇ
வேலை பார்ப்பதற்காக வெளிநாடு செல்லக்கூடாது.
வேறொரு திருமணம் செய்யக்கூடாது….
இதற்கு ஆதாரமாக பின்வரும் நபிமாெழிகள் அமையும்.
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்கள் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படிஇ 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டுஇ அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5230.
நபிகளார் ‘தனது மகள் பாத்திமா இருக்கையில் அவரைத் தவிர்த்து வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமானால் பாத்திமாவை விவாகரத்து செய்ய வேண்டும்’ என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். இது மார்க்கத்திற்கு முரணான நிபந்தனை அல்ல. ஏனெனில் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளதே தவிர அதை தடுக்கவில்லை.
அதேபோல் அலீ ரலி வேறாெரு பெண்ணைத் திருமணம் செய்வதை முழுவதுமாகத் தடுக்கவில்லை. அவ்வாறு தடுப்பது மார்க்கத்திற்கு முரண். ஆனால் நபிகளாரோ தனது மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்ளலாம் என்றுதான் நிபந்தனை விதித்துள்ளார்கள். இவ்வாறு தனது மகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிபந்தனை விதிக்கலாம்.
பாகம் 7 - தடை செய்யப்பட்ட திருமணம்
மனித சமுதாயம் திருமணத்தை பல வழிகளில் நிறைவேற்றி வருகிறது. அவற்றில் சில திருமண முறைகள் மோசமான தவறான முறைகளாக உள்ளது. அவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.
ஷிஃகார் திருமணம்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் :
'ஷிஃகார்' முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
ஒருவர் மற்றெவாருவரிடம் 'நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்'' என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே 'ஷிஃகார்' எனப்படும்.
இதில் இரண்டு பெண்களுக்கும் 'மஹ்ர்' (விவாகக் கொடை) இராது.
ஸஹீஹ் புகாரி : 5112.
உபைதுல்லாஹ் அல்உமரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாஃபிஉ(ரஹ்) அவர்கள்இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என்று என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிடம்இ 'ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?' என்று கேட்டேன். அவர்கள்இ 'ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6960.
மஹர் என்பது திருமணத்தின் அடிப்படை. ஆகவே அது இல்லாமல் நடத்தப்பட்டும் இத்தகைய திருமணத்தை இஸ்லாம் தடுத்துள்ளது.
முத்ஆ திருமணம்
தவணைக் கால திருமணத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. ஆரம்பகாலங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிற்காலத்தில் இது நபியவர்களால் தடை செய்யப்பட்டுவிட்டது.
முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்களும்இ அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள் :
(எம் தந்தை) அலீ(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்இ 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்திற்கும்இ நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும்இ கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5115.
திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானது சந்ததிபெருக்கம். அதை இந்த முத்ஆ திருமணம் நிறைவேற்றவில்லை என்பதாலும் இது தடை செய்யப்பட்டுள்ளது.
சடங்குத் திருமணம்
கணவன் மனைவிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு சேர்ந்து கொள்ளமுடியாத சூழல் ஏற்படுகையில் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. அவ்வாறு தலாக் கூறிய பின்னர் அந்த பெண்ணை மீண்டும் அழைத்துக் கொள்வதற்கும் இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு தலாக் கூறி பின்னர் மீண்டும் அழைத்துக் கொள்ளுதல் என்பது மூன்றுமுறை வரை அனுமதிக்கப்படும்.
ஒரு மனிதர் மூன்று முறை தலாக் கூறிய பின்னர் அந்த பெண்ணின் இத்தா காலம் முடிந்து மற்றொருவர் அந்த பெண்ணை உண்மையாகவே திருமணம் செய்து இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்களிருவருக்கிடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு அல்லது அந்த கணவர் மரணம் அடைந்தால் பின்னர் முதல் கணவர் அவரைத் திருமணம் முடிக்கலாம். அதுவரையிலும் மூன்று முறை தலாக் கூறிய கணவரால் அந்த பெண்ணை திருமணம் செய்யமுடியாது.
ஒரு மனிதர் மூன்று முறை தலாக் கூறிய பின்னர் மீண்டும் அந்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு (வயதான அல்லது நோஞ்சான்) மனிதருக்கு சடங்கு திருமணம் செய்து பின்னர் தலாக் கூறி அந்த பெண்ணை திருமணம் முடிக்கும் பழக்கம் சமூகத்தில் உள்ளது. இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"சடங்குத் திருமணம் செய்பவனையும்இ யாருக்காக அவ்வாறு செய்யப்படுகின்றதோ அவனையும் அல்லாஹ் சபித்துள்ளான்."
முஸ்னது அஹமது 4283இ 4284
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள் :
"சடங்குத் திருமணம் செய்பவனையும் அவன் யாருக்காக அவ்வாறு செய்கின்றானோ அவனையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்துள்ளார்கள்"
அபூதாவூத் 2076இ திர்மிதீ 1120இ நஸாஈ 3416
மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் சடங்குத் திருமணம் ஹராம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறது.
இதை நபியவர்கள் இன்னொரு நபிமொழி மூலமாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்துஇ 'நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகுஇ அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவேஇ நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன்.
அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)' என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள்இ 'நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி)இ நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி)இ தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள்இ 'அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?' என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2639.
மேற்கூறிய நபிமொழி மூன்று தலாக் கூறப்பட்ட பின்னர் அந்த தம்பதியினர் மீண்டும் இணைய விரும்பி சடங்குத் திருமணம் முடிப்பதற்குத் தெளிவாக தடை விதித்துள்ளது.
மூன்று தலாக் கூறப்பட்ட பின்னர் அந்த தம்பதிகள் மீண்டும் இணைய வேண்டுமானால் அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து அவருடன் தாம்பத்திய உறவு கொண்டு திருப்தியுடன் வாழ முற்பட வேண்டும். அவ்வாறு முயற்சித்தும் முடியவில்லையானால்இ தலாக் விடும் நிலை ஏற்படுமானால் தலாக் விட்டு மீண்டும் பழைய தம்பதிகள் இணைந்து கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகிறான் :
அவன் அவளை (மூன்றாவது தடவை) மணவிலக்குச் செய்து விட்டால்இ அதன் பிறகு அவனல்லாத வேறு கணவனை அவள் திருமணம் செய்யும் வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இவனும் அவளை மணவிலக்குச் செய்து விட்டால் (அவளும்இ முந்தைய கணவனும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்டுவார்கள் என்று எண்ணினால் அவ்விருவரும் மீண்டும் (திருமணம் செய்து) சேர்ந்து கொள்வது அவர்கள்மீது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு இவற்றை அவன் தெளிவாக்குகின்றான்.
அல் குர்ஆன் - 2 : 230
அறியாமைக் கால திருமணம்
அறியாமைக்கால மக்கள் திருமணம் என்ற பெயரில் மோசமான நடைமுறையை கொண்டிருந்தனர். அவற்றை இஸ்லாம் தடை செய்தது
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
முதல் வகை:
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.
இரண்டாம் வகைத் திருமணம்:
ஒருவர் தம் மனைவியிடம்இ 'நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டுஇ அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால்இ விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போதுஇ அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன்இ இன்னாரே!'' என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.
நான்காம் வகைத் திருமணம்:
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.
இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால்இ அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.
சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5127.
விபச்சாரத்தின் சாயலைக் கொண்டிருந்த அறியாமைக்கால திருமணம் அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது.
இதிலிருந்து இஸ்லாம் தூய்மையான சமூகத்தைஇ தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறது.
பாகம் 8 - திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட காலங்கள்
இன்று உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் திருமணத்திற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் காலத்தைப் பற்றிய தவறான கொள்கையைக் கொண்டிருப்பதாலேயே இத்தகைய காரியத்தில் ஈடுபடுகின்றனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் காலத்தை திட்டக்கூடாது என்று கூறுகிறது. காலத்தில் கெட்ட காலம் என்று ஏற்படுத்துவதை கண்டிக்கிறது.
அந்தவகையில் திருமணத்தை எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். அதில் தவறில்லை.
ஷவ்வால் மாதத்தில் முடிக்கலாம்
ஆனால் சில குறிப்பிட்ட மாதங்களில் திருமணம் முடிக்கக்கூடாது என்ற தவறான நம்பிக்கை நமது சமூகத்தில் உள்ளது. ஆனால் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. எந்த மாதங்களில் வேண்டுமானாலும் திருமணம் முடித்துக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2782.
ஆகவே சில மாதங்களில் திருமணம் முடிக்கக்கூடாது என்று கூறப்படும் மூட நம்பிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
ரமலானில் திருமணம் முடித்தல்
அதேபோல் ரமலானில் திருமணம் முடிப்பதையும் மார்க்கம் தடுக்கவில்லை.
ரஜஃ பின் ஹைவா கூறியதாக இப்னு அவ்ன் எங்களிடம் கூறினார்கள் :
யஃலா பின் உக்பா என்பவர் ரமழானில் தனது திருமணத்தை முடித்தார்கள். அவர் (தனது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டு) மறுநாள் காலையில் குளிப்புக் கடமையானவராக ஆனார்.
அவர் அபூஹுரைராவை சந்தித்து (அது குறித்து) அவரிடம் கேட்டார்.
அவர் "உங்கள் நோன்பை முறித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அவர்இ "நான் இன்று நோன்பை விட்டுவிட்டு பின்னர் அதை எடுத்து வைக்க முடியுமா?" என்று கேட்டார்.
ஜஅபூஹுரைராஸ~ "உங்கள் நோன்பை முறித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
எனவே. ஜயஃலாஸ மர்வானிடம் சென்று அவரிடம் நடந்ததை கூறினார். மேலும் அவர் இதுபற்றி விசாரிக்க அபூ பக்கர் பின் அப்துர் ரஹ்மான் பின் அல்-ஹாரிஸ் என்பவரை உம்முல்-முஃமினீனிடம் அனுப்பினார்.
அவர்கள் சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் இருக்கும் குளிப்பு கடமையான எழுவார்கள். அன்று நோன்பும் வைப்பார்கள்.
முஸ்னது அஹமது 1826
ரமலான் என்பது நோன்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் திருமணம் முடிப்பதை மார்க்கம் தடுக்கவில்லை. இருந்தபோதிலும் அதில் திருமணம் முடிக்காமல் இருப்பதுதான் நல்லது.
ஏனெனில் திருமணம் முடித்த புதிதில் இல்லற ஈடுபாடு அதிகம் இருக்கும். ஆகவே அது நோன்பை பாழாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். ஆகவே ரமலானில் திருமணம் முடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆனால் தடையில்லை.
அதேசமயம் சில காரியங்களைக் குறிப்பிட்டு அந்த காரியம் நடைபெறும் சமயங்களில் திருமணம் முடிக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறியுள்ளது. அவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இஹ்ராம் அணிந்த நிலையில்
உம்ராவிற்கோ ஹஜ்ஜிற்கோ இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் திருமணம் முடிக்கக்கூடாது.
நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள் (தம்முடைய புதல்வர்) தல்ஹா பின் உமருக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவேஇ (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களி டம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வருமாறு கூறினார்.
அப்போது அபான் (ரஹ்) அவர்கள்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக்கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது" என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2750.
இஹ்ராம் நிலையில் திருமண பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது. அதேபோல் திருமணத்தையும் நடத்தக்கூடாது.
இத்தா காலம்
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். கர்ப்பிணியாக இருந்தால் குழந்தைப் பெற்றெடுக்கின்ற வரையில் இத்தா இருக்க வேண்டும். இந்த இத்தா காலங்களில் திருமணம் முடிக்கக்கூடாது.
முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்கள் :
''('இத்தா'வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி)இ 'ஒருவர்இ '(இத்தா'விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) 'நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றோ 'ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்' என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5124.
இத்தா காலத்தில் திருமண பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அதேபாேல் திருமணத்தையும் நடத்தக்கூடாது.
பாடம் 9 - திருமண நிகழ்ச்சி
திருமணம் நடைபெறும்போது நடக்கும் காரியங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
திருமணத்திற்கான வார்த்தை
திருமணம் நடைபெற்றது என்பதற்கான அடையாளமாக சில வார்த்தைளை குறிப்பிடுவது மக்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. இதுபோன்ற வார்த்தைகளன கூறினால்தான் திருமணம் செல்லுபடியாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் மார்க்கத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் வலியுறுத்தப்படவில்லை.
ஆணும் பெண்ணின் பொறுப்பாளரும் ஒப்புக் கொள்ளும் விதத்தில் வார்த்தைகள் அமைந்தாலே போதுமானது. அதை அறபியில்தான் கூற வேண்டும் என்பதோ குறிப்பிட்ட வார்த்தைகள்தான் பயன்படுத்த வேண்டும் என்பதோ அவசியமல்ல.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள் :
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்துஇ 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-)வே வந்துள்ளேன்' என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.
அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் '(இறைத்தூதர் அவர்களே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்றார்.
قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ
நபி(ஸல்) அவர்கள்இ 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5871.
இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் பொறுப்பாளராக நபிகளார் இருக்கிறார்கள்.
அந்தபெண்ணை மணமுடிக்கவிரும்பியவர்இ ‘இவரை மணமுடித்துத் தாருங்கள்’ என்று கேட்கிறார். அதற்கு நபிகளார் ‘மஹரைக் குறிப்பிட்டு இந்த மஹருக்காக இந்த பெண்ணை உனக்கு மணமுடித்துத் தருகிறேன்’ என்று கூறுகிறார்கள்.
திருமணம் என்பது ஒப்பந்தமாக இருப்பதால் அதை நமக்குப் புரியும் மொழியில் தெளிவாகத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்.
ஆகவே சபையோர் முன்னிலையில் இரண்டு சாட்சிகளுடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் மாப்பிள்ளை இவ்வளவு ரூபாய் மஹரைப் பெற்றுக் கொண்டு அல்லது இத்தனை பவுன் தங்கத்தைப் பெற்றுக் கொண்டு தங்களது மகளை எனக்கு திருமணம் முடித்துத் தருவீர்களா? என்ற கருத்துள்ள வாசகங்களை கேட்டதும்இ 'ஆம்' என்று பெண்ணின் தந்தை அல்லது பொறுப்பாளர் பதில் உறைத்ததுமே திருமண ஒப்பந்தம் நிறைவேறிவிடும். அவ்வளவுதான் இருவரும் கணவன் மனைவியாக ஆகிவிடுவார்கள்.
அல்லது பெண்ணின் தந்தையோ பொறுப்பாளரோஇ இவ்வளவு மஹருக்கு அவளது சம்மதத்துடன் திருமணம் முடித்துத் தருகிறேன் தங்களுக்கு சம்மதா? என்ற கருத்துள்ள வாசகங்களை மாப்பிள்ளையிடம் கேட்டுஇ அதற்கு மாப்பிள்ளையும் ஒத்துக் கொண்டாலும் திருமண ஒப்பந்தம் நிறைவேறிவிடும்.
பகிரங்கப்படுத்துதல்
(விபச்சாரம் எனும்) அனுமதிக்கப்படாத உறவுக்கும் (திருமணம் எனும்) அனுமதிக்கப்பட்ட உறவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தஃப் அடிப்பதும் குரல் எழுப்பி பாடுவதும் ஆகும்.
சுனனுந் நஸாஈ 3369
முஹம்மது இப்னு ஹாதிப் ரலி அறிவித்ததாவது : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“(திருமணத்தின் போது) சட்டபூர்வமானதற்கும் சட்டவிரோதமானதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்இ தஃப் (அடிப்பது) மற்றும் (பாடலில்) குரல்களை எழுப்புவது ஆகும்.”
சுனன் இப்னுமாஜா 1896இ திர்மிதீ 1088
அதாவது தடை செய்யப்பட்ட விபசாரத்திற்கு இரகசியமாகச் செல்வார்கள். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என எதிர்பார்ப்பார்கள்.
அதேசமயம் அனுமதிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் தம்பதியரான இருவர் ஒன்றாக செல்வதையோஇ பழகுவதையோ மறைக்க வேண்டியதில்லை. அவர்கள் சட்டப்படி பழகலாம். குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுதான் விபசாரத்திற்கும் திருமணத்திற்கும் இடையிலான முக்கிய வித்தியாசமாகும். ஆகவேதான் திருமணத்தை நான்கு பேருக்குத் தெரியும் வகையில் செய்ய வேண்டும என்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது.
திருமணத்தின் போது கஞ்சிரா அடித்துத் அனுமதிக்கப்பட்ட வாழ்த்துப் பாடல்கள் (சினிமா பாடல்கள் அல்ல) பாடுவதும் இருவருக்கிடையே நடக்கும் திருமணம் பலருக்கும் தெரியவருவதற்கு வாய்ப்பாக அமையும். யாருக்கும் தெரியாமல் திருமணம் முடித்துவிட்டுஇ ஒருவருடன் ஒருவர் பழகிவந்தால் பார்ப்போர் சந்தேகப்பட நேரிடும்.
ஆகவே திருமணத்தை பகிரங்கமாக நிறைவேற்றுவது சிறந்தது. அதன்மூலம் விபச்சாரமும் ஒழிக்கப்படும்.
திருமணத்தில் தஃப் அடிக்கலாம்
மேலே கூறப்பட்ட நபிமொழி திருமணத்தில் தஃப் அடிப்படை வலியுறுத்தியுள்ளது.
அதற்கு பின்வரும் சம்பவமும் ஆதாரமாகும்.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார் :
எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களில் ஒரு சிறுமிஇ 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனேஇ நபி(ஸல்) அவர்கள்இ '(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5147.
திருமண நிகழ்ச்சியில் நபிகளார் முன்னிலையில் தஃப் அடித்து பாட்டுப்பாடப்பட்டிருக்கிறது. அதை நபிகளார் தடுக்கவில்லை. இது இதற்கான அனுமதிக்கு சிறந்த சான்றாகும்.
பாடல் பாடலாம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள்இ 'ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பகுதி சிறுமியர்) இல்லையா? ஏனெனில்இ அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5162.
இந்த சம்பவத்தில் நபிகளார் பாடல் பாடுவதை வலியுறுத்தி கூறுயிருக்கிறார்கள். ஏனெனில் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அம்சமாகும். ஆகவே மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் ஹராமான வாக்கியங்கள் கலக்காத பாடல்கள் பாடுவது நல்லதாகும்.
இதை சஹாபாக்களும் கடைபிடித்து வந்துள்ளார்கள்.
ஆமிர் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கின்றார்: நான் ஒருதடவை குர்ள் இப்னு கஅப் (ரலி) மற்றும் அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) ஆகியோர் இருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவர்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருந்தனர். அப்போது அங்கே சில சிறுமிகள் பாட்டு பாடிக்கொண்டிருந்தனர்.
நான் கூறினேன்: "நீங்கள் இருவரும் இறைத்தூதரின் தோழர்கள் அல்லவா... மேலும்இ பத்ர் போரில் கலந்துகொண்டவர்கள் ஆயிற்றே. நீங்கள் இருக்கும் சபையில் இவ்வாறு நடக்கின்றதே..?" அதற்கு அவர்கள் இருவரும் கூறினர்: "உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடன் அமர்ந்து ரசியுங்கள்... இல்லையேல் சென்றுவிடுங்கள்... திருமண வேளைகளின்போது இது போன்ற செயல்களுக்கு எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது."
(நஸாயீ 3383)
மேற்கூறிய சம்பவங்கள் திருமண நிகழ்ச்சியில் பாடல் பாடப்படுவதற்கும் அதை ரசிப்பதற்கும் சான்றாக உள்ளன.
புத்தாடை அணியலாம்
திருமணம் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். ஆகவே அதில் புத்தாடை அணிவது சிறந்தது.
அதிலும் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஆரம்பநாள் அது. ஆகவே அத்தினத்தில் இருவரும் புத்தாடை அணிந்து ஒருவரையொருவர் ஈர்க்கும் விதமாக அலங்கரித்துக் காெள்வது மிகமிக நல்லது.
இந்த வழிமுறையை நபிகளார் காலத்தில் சஹாபாக்கள் கடைபிடித்து வந்தார்கள்.
அய்மன்(ரஹ்) அறிவித்தார்கள் :
ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள்இ 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள்இ வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால்இ அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முன்பு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2628.
நம்மிடத்தில் நல்ல உடைகள் இல்லையென்றாலும் பிறரிடத்தில் இரவில் வாங்கி அணிவது சிறந்தது என்பதை மேற்கண்ட சம்பவம் அறிவிக்கிறது
மென்பட்டு விரிப்பு பயன்படுத்தலாம்
திருமணம் முடித்ததும் கணவனும் மனைவியும் பயன்படுத்துவதற்கு மென்பட்டு விரிப்புகளை பயன்படுத்தலாம். அதாவது இன்றைய காலத்தில் நாம் பயன்படுத்தும் மெத்தைகளைப் பயன்படுத்தலாம்
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
(எனக்குத் திருமணமான பொழுது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இ 'மென்பட்டு விரிப்புகளை அமைத்துவீட்டீர்களா?' என்று கேட்டார்கள். நான்இ 'எங்களிடம் எவ்வாறு மென்பட்டு விரிப்புகள் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள்இ 'விரைவில் (உங்களிடம்) மென்பட்டு விரிப்புகள் இருக்கும்'' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5161.
இந்த நபிமொழியில் நபிகளார் மென்பட்டு விரிப்பதை வலியுறுத்தியுள்ளார்கள். ஆகவே வசதி வாய்ப்புள்ளவர்கள் இதுபோன்ற மெத்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
சிறந்த திருமணம்
இன்றைய காலத்தில் மக்களிடத்தில் செல்வங்கள் பெருகிப்போயுள்ளது. அவற்றை அவர்கள் வீண்விரயமாகவும் ஆடம்பரமாகவும் செலவழித்து வருகிறார்கள். அவற்றிலும் திருமண நிகழ்ச்சியில்தான் பெரும்பாலான ஆடம்பரங்கள் நடைபெருகிறது. இதை நபிகளார் தடுத்திருக்கிறார்கள்.
நாம் மேலே கூறிய விஷயங்களுக்காக செலவழித்துக் கொள்ளலாமேயொழிய தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உக்பா இப்னு ஆமிர் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் : எளிய முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணமாகும்.
ஆதாரம் : அபூதாவூது 2117
அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது. நபி (ஸல்) கூறினார்கள் :
எளிமையாக நடப்பதுதான் உங்களது (இஸ்லாமிய) மார்க்கத்தில் சிறந்ததாகும்.
ஆதாரம் : அதபுல் முஃப்ரத் 260 இமாம் தபரானியின் முஅஜமுஸ் ஸகீர் 1066இ முஸ்னது அஹமது 15978இ முஸ்னது தயாலீஸி (2ஃ628)
ஆகவே நாம் நடத்தும் திருமணத்தை முடிந்த அளவிற்கு எளிமையாக நடத்த வேண்டும். அவற்றில் ஆடம்பரங்களையும் வீண்விரயங்களையும் தவிர்த்துக் காெள்ள வேண்டும்.
மணமக்களை வாழ்த்தும் துஆ
பிரார்த்தனை என்பது மிகப்பெரும் வணக்கம். அது இறைவனின் உதவியைப் பெற்றுத்தரும் அமல். அவற்றை திருமணம் முடித்திருக்கும் ஆண் மற்றும் பெண்ணுக்காக செய்ய வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.
நபித்தோழர்கள் அன்னை ஆயிஷா ரலிக்காக பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். அதை நபிகளார் அங்கீகரித்திருக்கிறார்கள்.
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَتَتْنِي أُمِّي فَأَدْخَلَتْنِي الدَّارَ، فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
(நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது) என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்துஇ என்னை வீட்டினுள் அனுப்பி வைத்தார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள்
(அலல் கைரி வல் பரகத்தி வ அலா கைரி தாயிரி)
'நன்மையுடனும் சுபிட்சத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!'' என்று (வாழ்த்துக்) கூறினர்.
ஸஹீஹ் புகாரி : 5156.
இவ்விஷயத்தில் நபிகளாரும் வழிகாட்டியுள்ளார்கள்.
அபூஹுரைரா அவர்கள் கூறியதாவது:
நபி அவர்கள் மணமுடித்தவருக்கு வாழ்த்துச் சொல்லும்போதுஇ "பாரக்கல்லாஹு லக்கஇ வ பாரக்க அலைக்கஇ வ ஜமஅ பைனக்குமா ஃபீகைர்" (உமக்கு அல்லாஹ் அருள் வளம் வழங்குவானாக; உம்மீது தனது வளத்தைப் பொழிவானாக; உங்கள் இருவரையும் நன்மை பயக்கும் காரியங்களில் இணைத்து வைப்பானாக!) என்று கூறிப் பிரார்த்திப்பார்கள்.
சுனன் அபூதாவூது 2130 (தமிழில் 1819)இ
ஆகவே நாம் மணமக்களுக்காக நபிகளார் கற்றுத்தந்த பிரார்த்தனையை மேற்காெள்ள வேண்டும்.
ஆண் தனது புதிய மனைவிக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனை
நபி அவர்கள் கூறி னார்கள்:
நீங்கள் ஒரு பெண்ணை மணமுடித்தால் அல்லது அடிமைப் பெண்ணை வாங்கினால் "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக் கைரஹா வகைர மா ஜபல்தஹா அலைஹிஇ வ அஊது பிக் மின் ஷர்ரீஹா வமின் ஷர்ரீ மா ஜபல்தஹா அலைஹி' என்று கூறுங்கள்.
(பொருள்: இறைவா! அவளிடமிருந்து நல்லவையும்இ நீ படைத்த அவளின் குணங்களிலி ருந்து நல்லவையும் கேட்கிறேன். அவளின் தீங்கிலிருந்தும் நீ படைத்த அவளின் குணங்களில் உள்ள தீங்கிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன்.)
ஒருவர் ஒட்டகத்தை வாங்கினால் ஒட்டகத்தின் திமிலின் மேல் பகுதியைப் பிடித்து மேற்கூறப்பட்ட பிரார்த்தனையைச் செய்யட்டும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் · அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுனன் அபூதாவூது 2160 (தமிழில் 1845)இ இப்னு மாஜா 1918
பெண்ணின் தந்தை மகளுக்கு சில பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம்
இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தில் மஹரை கடமையாக்கியுள்ளது.
ஆனால் உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரதட்சணை எனும் கொடுமைதான் அரங்கேறி வருகிறது. அதாவது பெண்ணின் தரப்பிலிருந்து தங்களுக்கு இன்ன இன்ன பாெருட்கள் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்து அதை தந்தால்தான் திருமணம் முடிப்பேன் என்று கூறுவது வரதட்சணையாகும்.
இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. இது ஹராமான நிபந்தனையாகும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஆண்தான் நிர்வாகி. அவன்தான் பெண்ணிற்கு வழங்க வேண்டும். ஆண் பெண்ணிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக பறிப்பதை தடுத்துள்ளது.
அதனால்தான் ஆணால் வழங்கப்படும் மஹரைப் பறிப்பதைக்கூட இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
وَإِنْ أَرَدتُّمُ ٱسْتِبْدَالَ زَوْجٍۢ مَّكَانَ زَوْجٍۢ وَءَاتَيْتُمْ إِحْدَىٰهُنَّ قِنطَارًۭا فَلَا تَأْخُذُوا۟ مِنْهُ شَيْـًٔا ۚ أَتَأْخُذُونَهُۥ بُهْتَـٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا⭘
நீங்கள் (மணவிலக்குச் செய்த) ஒரு பெண்ணின் இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் (மணவிலக்குச் செய்யப்பட்ட) அவளுக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! அநியாயமாகவும்இ பகிரங்கமான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா?
அல் குர்ஆன் - 4 : 20
ஆகவே வரதட்சணை எனும் பெயரில் நடைபெறுவது முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கு முரணானது.
அதேசமயம் பெண் வீட்டார் வரதட்சனை எனும் நிர்பந்தம் இல்லாமல் முழு மனதோடு தனது பெண்ணிற்கு அன்பளிப்புகள் வழங்கலாம். அவற்றை மார்க்கம் தடுக்கவில்லை.
அதா இப்னு சாயிப் தனது தந்தை வழியாக அறிவிப்பதாவது :
நபி (ஸல்) அவர்கள் அலீ மற்றும் பாத்திமா ரலி ஆகியோரிடம் வந்தார்கள். அப்போது அவ்விருவரும் அவர்களுக்கு சொந்தமான காமில் (என்ற ஆடையால்) போர்த்தியிருந்தார்கள். காமில் என்பது கம்பளியால் செய்யப்பட்ட மென்பட்டாகும். இதனுடன் இத்கிர் எனும் புல் நிரப்பப்பட்ட தலையனையையும் தோல்பை ஒன்றையும் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு திருமண பரிசாக வழங்கினார்கள்.
சுனன் இப்னு மாஜா 4152
அலீ ரலி அறிவித்தார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் பாத்திமாவை எனக்கு மணமுடித்துக் கொடுத்தபோதுஇ ஒரு பட்டு ஆடைஇ பனை நாரால் நிரப்பப்பட்ட தோல் தலையணைஇ மாவு அரைக்கும் இரண்டு கற்கள்இ ஒரு நீர்த்தோல்ப்பை மற்றும் இரண்டு மண் ஜாடிகளை கொடுத்து அனுப்பினார்கள்.
முஸ்னது அஹமது 819
மேற்கூறிய சம்பவங்கள் பெண்ணின் தந்தை தனது மகள் மற்றும் மருமகனுக்காக திருமண அன்பளிப்புகள் வழங்கலாம் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
திருமண வயது
இன்றைய உலகில் திருமண ஒழுங்கையும் குடும்ப உறவையும் சீர்குலைப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்றுதான் திருமண வயதைத் தள்ளிப்போடுதல். மக்கள் மனதில் தாமதாக திருமண முடிப்பதை விதைப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாடும் திருமணம் முடிப்பதற்கான வயதெல்லையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சில நாடுகளில் திருமணத்திற்கான வயது 18 என்றும் இன்னும் சில நாடுகளில் 21 என்றும் பல்வேறு விதமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் திருமணத்திற்கான தகுதியாக பருவமடைதலைத்தான் குறிக்கிறது. அதற்கென வயது எல்லை இல்லை.
யஸீத் பின் ஹுர்முஸ் அவர்கள் கூறியதாவது: நஜ்தா பின் அமீர் அவர்கள் இப்னு அப்பாஸிடம் சில கேள்விகளைக் கேட்டு எழுதினார்.
அவர் கூறினார்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரது கடிதத்தைப் படிக்கும் போதும்இ அவர் தனது பதிலை எழுதும் போதும் நான் அவருடன் இருந்தேன்.
பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் தீமையில் விழுவதைத் தடுக்க வேண்டும் என்ற ஒரு காரணம் இல்லாமல் இருந்திருந்தால் நான் அவருக்கு பதில் எழுதியிருக்க மாட்டேன்.
அவர் ஒருபோதும் கண்ணியப்படுத்தப்படக்கூடாது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவருக்கு பதில் கடிதம் எழுதினார்:
நீங்கள் அனாதையைப் பற்றியும்இ அவர் எப்போது அநாதையாகப் கருதப்படுவதில்லை என்பதைப் பற்றியும் கேட்டீர்கள்.
அவர் திருமண (பருவ) வயதை அடைந்து மன முதிர்ச்சி அடையும் போதுஇ அவரது செல்வம் அவருக்குக் கொடுக்கப்படலாம். மேலும் அவர் இனி அனாதையாகக் கருதப்படுவதில்லை.
முஸ்னது அஹமது 2235
எனவே ஆணோ பெண்ணோ பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்கள் உடல் ரீதியாக திருமணம் முடிக்கும் பருவத்தை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
அதனால்தான் தமிழில் பருவமடைந்த பெண்ணை ‘சமைந்துவிட்டாள்’ என்று கூறுவார்கள்.
சமையல் என்றால் பயன்படுத்தத் தகுதியானது என்று அர்த்தம்.
அரிசியை சாப்பிடக்கூடிய உணவாக மாற்றும் முறையை சமையல் என்று கூறுவோம். அதாவது அரிசியை உண்பதற்கு தகுதியானதாக மாற்றும் முறை சமையலாகும்.
அதேபோலத்தான் சிறுமியை இல்லறத்தில் ஈடுபடுவதற்கு தகுதியானவளாக மாற்றும் பருவத்தை சமைந்துவிட்டாள் என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுகிறார்கள்.
ஆகவே பருவ வயதை அடைவதுதான் திருமணத்திற்கான தகுதியாகும். ஆண்களைப் பொருத்தவரையில் அவர்களுக்கு உடல்தகுதியோடு பொருளாதாரத் தகுதியும் அவசியம். ஆகவே அவர்கள் பொருளாதார தகுதி பெறும் வரையில் காத்திருக்க வேண்டும்.
பாகம் 10 - பலதாரமணம்
இஸ்லாமிய மார்க்கம் பலதாரமணத்தை அங்கீகரித்துள்ளது.
இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கமாகும். ஆகவே அது திருமணம் முடிக்காமல் இருப்பதை தடுத்ததுபோல் எக்கச்செக்கமாக திருமணம் முடிப்பதையும் தடுத்துள்ளது.
ஏனெறில் அறியாமைக் காலத்தில் மக்கள் ஏராளமான பெண்களை மணமுடித்திருந்தார்கள். ஆகவே இஸ்லாம் அவற்றிற்கு எல்லைகளை வகுத்து அவற்றை கட்டுப்படுத்தியது. ஒரு ஆண் அதிகபட்சமாக நான்கு பெண்கள் வரையில் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.
நான்கு வரை மட்டுமே அனுமதி
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَـٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَـٰثَ وَرُبَـٰعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟⭘
அநாதைப் பெண்கள் (திருமண) விஷயத்தில் நீங்கள் நேர்மையாக நடக்க முடியாது என்று பயந்தால் மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோஇ மும்மூன்றாகவோஇ நான்கு நான்காகவோ திருமணம் செய்து கொள்ளுங்கள்! (அவர்களுக்கிடையே) நீதியாக நடக்கமுடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணோ அல்லது அடிமைப் பெண்ணோ போதும். நீங்கள் நீதி தவறாமல் இருக்க இதுவே மிக நெருக்கமானது.
அல் குர்ஆன் - 4 : 3
உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம்இ 'அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாகஇ மும்மூன்றாகஇ நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்' (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண்இ தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற - அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டுஇ அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பொண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல்இ அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகுஇ (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர்.
எனவே அல்லாஹ்இ
'பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர்.
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும்இ இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவுபடுத்துகிறான். (அதாவதுஇ) எந்த அநாதைப் பெண்களுக்குஇ அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோஇ மேலும்இ எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்)' என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
மேலும்இ 'இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்...' என்று அல்லாஹ் கூறியிருப்பதுஇ 'அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்...' என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும்.
மேலும்இ 4:127ம் இறைவசனத்தில்இ 'மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ' என்று கூறியிருப்பதுஇ உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்துகொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்இ அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலே தவிர மணந்துகொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஸஹீஹ் புகாரி : 2494.
மேற்கூறிய வசனமும் ஹதீஸும் நான்கு பெண்கள் வரையில் திருமணம் முடிப்பதைை அனுமதித்திருக்கிறது.
இதை நபிகளார் நடைமுறை வாழ்க்கையில் அமுல்படுத்தினார்கள்.
இப்னு உமர் ரலி கூறினார்கள் : கைலான் பின் சல்மான் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு பத்து மனைவிகள் இருந்தார்கள்.
ஆகவே நபிகளார் அவரிடம்இ (பத்து மனைவியில்) நான்கு பேரைத் தேர்ந்தெடுத்துக் கொள் (மற்றவர்ஙளை விவாகரத்து செய்துவிடு) என்று கூறினார்கள்.
இப்னுமாஜா 1953
நீதமாக நடத்தல்
பலதாரமணத்தின் முக்கிய நிபந்தை்கள் நீதமாக நடப்பதாகும்.
அதாவது உணவுஇ உடைஇ இருப்பிடம் மற்றும் இரவு தங்குதல் போன்றவற்றில் மனைவிமார்களுக்குள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
மனைவியருக்கிடையே நீதமாக நடக்க நீங்கள் விரும்பினாலும் அது உங்களால் அறவே இயலாது. எனினும்இ அந்தரத்தில் விடப்பட்டவளைப் போல் ஒருத்தியை விட்டுவிட்டுஇ (மற்றொருத்தியிடம்) முழுமையாகச் சாய்ந்து விடாதீர்கள்! நீங்கள் இணக்கமாகவும்இ இறையச்சத்துடனும் நடந்து கொண்டால் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும்இ நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் - 4 : 129
அதேபோல் அநீதியாக நடப்பதைக் குறித்து நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் : "எவருக்காவது இரண்டு மனைவியர் இருந்து அவர்களில் ஒரு மனைவியின் பக்கமே முற்றிலும் சாய்ந்தால்இ ஒரு பக்கம் சாய்ந்த நிலையிலேயே மறுமைநாளில் வருகை தருவானன.
(அபூதாவூத் 2133இ திர்மிதீ 1141இ நஸாஈ 3942இ இப்னுமாஜா 1969)
ஆகவேதான் இவ்விஷயத்தில் நபிகளார் எச்சரிக்கையோடு நடந்து கொண்டார்கள்.
ஆயிஷா (ரலி) கூறுகின்றார்: நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியரிடையே பங்கு வைக்கும்போது நீதியுடன் நடந்து கொள்வார்கள்.
அப்போது அவர்கள் கூறுவார்கள்: "யா அல்லாஹ்! எனது கட்டுப்பாட்டில் இருப்பவற்றில் இதுதான் எனது நீதி. எனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றில் என்னை நீ குற்றம் சாட்டிவிடாதே".
அபூதாவூத் 2134இ திர்மிதீ 1140இ நஸாஈ 3943
வெளியூர் சென்றால்
இவ்விஷயத்தில் நபிகளார் நீதமாக நடந்தார்கள். சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் சான்றாகும்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால்இ சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளைஇ நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாகஇ அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2593.
நபிகளார் வெளியூருக்கு செல்வதாக இருந்தால் தனக்குப் பிடித்தவர் யார்? என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு மத்தியில் சீட்டு குலுக்கிப் போட்டு தேர்வு செய்து அழைத்துச் செல்வார்கள். இந்த அளவிற்கு அவர்கள் நீதமாக நடந்தார்கள்.
No comments:
Post a Comment