Tuesday, October 9, 2018

இப்ராகிம் நபியின் பிரார்த்னைகள் - 1



வணக்க வழிபாடுகள் ஏற்றுக் காெள்ளப்பட :

நம்முடைய வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட இந்த துஆவை நாம் கேட்கலாம். இந்த துஆ இப்ராஹிம் நபியவர்களும் இஸ்மாயில் நபியவர்களும் கஃபத்துல்லாஹ்வை புணர் நிர்மாணம் செய்ததற்கு பிறகு கேட்ட துஆ. 

நம்முடைய வணக்கவழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது. நமமுடைய வணக்க வழிபாடுகளில் எவ்வளவு பிழைகளை செய்திருக்கிறோம் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை முடித்ததற்குப் பிறகு இந்த துஆவை கேட்பது சிறந்ததாக இருக்கும்.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

தமிழில் : ரப்பனா தகப்பல் மின்னா
. இன்னக அன்தஸ் ஸமீவுல் அலீம்

"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'.
திருக்குர்ஆன்  2:127

No comments:

Post a Comment

இஸ்லாமிய திருமணச் சட்டம்

 ஏக இறைவனின் திருப்பெயரால்… இஸ்லாமிய திருமணச் சட்டம் புத்தகமாக டவுன்லோடு செய்ய -  இஸ்லாமிய திருமண சட்டம் பாகம் 1 - திருமணம் ஒரு வழிபாடு இஸ்ல...