அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மிகப்பெரும் அற்புதமாக திருமறைக் குர்ஆனை தந்திருக்கிறான். அந்த திருமறையின் வசனங்கள் எந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள். அப்படிப்பட்ட திருமறையின் வசனங்களைப் பற்றிய சிறிய தகவல்களை இந்த கட்டுரையின் வாயிலாக அறிவோம்.
வசனங்கள் எப்படிப்பட்டது
1) தெளிவானது
இந்த திருமறையின் வசனங்களை அல்லாஹ் மிகத் தெளிவானதாக ஆக்கியிருக்கினான்.
وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ
தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை
.மறுக்க மாட்டார்கள்
திருக்குர்ஆன் 2:99
குற்றம் புரிபவர்களுக்கு இந்த திருமறை குழப்பத்தைத்தான் தரும். திருந்த நினைப்பவர்களுக்கு, திருந்தி வாழ்பவர்களுக்கு இந்த திருமறை தெளிவானதாக விளங்கும். நேர்வழியும் வழிகேடும் தெளிவாகத் தெரியும்.
அதேபோல் இந்த திருமறைக்குர்ஆன் அரபி மாெழியை தாய்மாெழியாகக் கொண்ட நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்டதால் அரபி மாெழியில் இந்த திருமறையை அல்லாஹ் அருளினான். அப்பாேதுதான் இந்த தெளிவான வசனங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
அலிஃப், லாம் ரா. இது தெளிவான வேதத்தின் வசனங்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம்
.அருளினோம்
திருக்குர்ஆன் 12:2
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَّقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ ۖ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَٰئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ
இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?'' என்று கூறியிருப்பார்கள். "இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நோய் நிவாரணமுமாகும்'' என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் அடைப்பு உள்ளது. இது அவர்களுக்குக் குருட்டுத் தனமாகவும் தெரிகிறது. அவர்கள் தொலைவான இடத்திலிருந்து
.அழைக்கப்படுகின்றனர்
திருக்குர்ஆன் 41:44
2) நன்மை தீமை பிரித்து காட்டும்
இந்த திருமறை நன்மையையும் தீமையையும் தெளிவாக பிரித்துக்காட்டும்.
مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ ۗ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ
முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்
திருக்குர்ஆன் 3:4
3) ஞானமிக்கது
இந்த திருமறையை அறிவுப்பூர்வமாகவும் இறைவன் அமைத்திருக்கிறான். சாதாரண மனிதர்கள் முதல் அறிஞர்கள் வரை படித்த அனைவரையும் கவரக்கூடியதாக அமைந்திருக்கிறது. திருமறை குர்ஆன் முழுக்க ஞானத்தால் நிரம்பியிருக்கிறது.
ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ
(முஹம்மதே!) நாம் உமக்குக் கூறும் இச்செய்தியானது (நமது) வசனங்களும்
.ஞானமிக்க அறிவுரையுமாகும்
திருக்குர்ஆன் 3:58
الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ
இது ஞானம்மிக்க வேதத்தின்
.வசனங்கள்
திருக்குர்ஆன் 10:1
4) உண்மையை உள்ளடக்கியது
இந்த திருமறையை தெளிவானதாகும் ஞானமிக்கதாகவும் மட்டுமில்லாமல் உண்மையைக் கொண்டதாகவும் அமைத்திருக்கிறான். ஒரு சிறிய பொய் கூட இந்த திருமறையில் அமைக்கப்படவில்லை.
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
இவை உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். அதை (முஹம்மதே!) உமக்குக் கூறுகிறோம். நீர் தூதர்களில் ஒருவர்
திருக்குர்ஆன் 2:252, 3:108
No comments:
Post a Comment