தக்வா வின் அர்த்தம்
தக்வா என்ற இந்த வார்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு வார்த்தை. இதற்கு தமிழக முஸ்லிம்கள் இறையச்சம் என்ற மொழிபெயர்ப்பை தருகின்றனர். ஆனால் தக்வா என்ற அரபிச் சொல் இறையச்சம் என்ற ஒற்றை அர்தத்தோடு முடியக்கூடிய வார்த்தை அல்ல. தக்வா என்பது விரிந்த அர்த்தத்தை கொண்ட ஒரு சொல்.
மொழியடிப்படையில் தக்வா التقوى என்ற சொல் விகாயத் என்ற சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை. விகாயத் என்பதற்கு தன்னைத் தானே பாதுகாத்தல் என்று அர்த்தம்.
தக்வாவிற்கு இறையச்சம் அல்லாத பல அர்த்தங்கள் உண்டு. திருமறையில் அல்லாஹ் தக்வாவை எந்தெந்த அர்த்தங்களில் பயன்படுத்தியிருக்கிறான் என்று பார்ப்போம்.
♦ விலகுதல்
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில்
உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இதன்மூலம்) தக்வாவை பெற்றுக்கொள்வீர்கள்
உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இதன்மூலம்) தக்வாவை பெற்றுக்கொள்வீர்கள்
திருக்குர்ஆன் 2:179
இந்த வசனத்தில் பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் வாழ்க்கை இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான். அது எப்படி பழிக்கு பழி வாங்கும் சட்டத்தில் வாழ்க்கை இருக்கும். சற்று சிந்தித்தால் அல்லாஹ் சொல்லும் உண்மையை புரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டவர்கள் அல்ல. பலதரப்பட்ட மக்களாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். இதில் கோபத்தை அடக்கிஆளக்கூடிய மனிதனும் இருப்பான். கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மனிதனும் இருப்பான்.
இப்படி வாழக்கூடிய சூழலில் பழிக்கு பழி வாங்கும் சட்டத்தை தடை செய்தோம் என்றால், ஒரு சண்டையில் ஒருவனுடைய கண்ணை வேறொருவன் பறித்துவிட்டால் கண்ணை இழந்தவன் பொறுமையை கடைபிடிப்பவனாக இருந்தால் தன் கண்ணைப் பறித்தவனை மன்னித்துவிடுவான். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் இந்த மன்னிக்கும் தன்மை இருக்காது. மன்னிக்கவே முடியாத குணத்தை கொண்ட மனிதன் இருப்பான். அவனிடத்தில் நீ பழிக்குப்பழி வாங்கக்கூடாது என்று சொன்னால் அவன் வேறொரு சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பான். அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் கண்ணுக்கு கண்ணை எடுப்பதற்கு பதிலாக கோபத்தில் உயிரையே பறித்துவிடுவான். பதிலுக்கு இறந்தவனுடைய குடும்பத்தினர் இவனை கொல்வார்கள். இவர்கள் அவர்களை கொல்ல அவர்கள் இவர்களை கொல்ல பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை நடக்கக்கூடாது. அனைவரும் இறக்கக்கூடாது என்பதற்காக அல்லாஹ் பழிக்கு பழி வாங்கும் சட்டத்தை அனுமதித்திருக்கிறான். இதன் மூலம் கொலைகள் தடுக்கப்படுவதால் இதில் வாழ்வு இருப்பதாகவும் சொல்லிக்காட்டுகிறான்.
இப்போது விஷயததிற்கு வருவோம், இப்படி பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நீங்கள் தக்வாவை பெற்றுக்கொள்ளலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். தக்வாவிற்கு இறையச்சம் என்று மட்டும் மொழி பெயர்த்தால் பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நீங்கள் இறையச்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று வரும். பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நமக்கு எப்படி இறையச்சம் கிடைக்கும்?. ஆகவே இதற்கு இறையச்சம் என்று மொழி பெயர்க்கக்கூடாது. இந்த இடத்தில் தக்வா என்பதற்கு விலகிக்கொள்வீர்கள் என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும்.
அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள். திருக்குர்ஆன் 2:179
இப்படி மொழிபெயர்ப்பது தான் சரியாகும். ஆகவே அல்லாஹ் இந்த இடத்தில் தக்வாவிற்கு "விலகிக்கொள்ளுதல்" என்ற அர்தத்தை தருகிறான்.
அதே போல் தக்வாவிற்கு இறையச்சம் அல்லாத வேறு அர்த்தத்தை கொடுக்கும் இன்னொரு வசனத்தைப் பாருங்கள்
وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்களுக்குத் தக்வாவை தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 9:115
திருக்குர்ஆன் 9:115
இந்த வசனத்தில் அல்லாஹ் நேர்வழி காட்டிய சமுதாயத்தைப் பற்றி சொல்லிக் காட்டுகிறான். ஒரு சமுதாயம் நேர்வழியை பெறுகின்றதென்றால் அந்த சமுதாயம் அல்லாஹ்வின் அச்சத்தை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அல்லாஹ்வின் அச்சத்தைப் பெறாத சமுதாயம் நேரான வழியில் பயணிக்காது.
அல்லாஹ் இந்த வசனத்தில், ஒரு சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியதற்கு பிறகு அந்த சமுதாயத்திற்கு தக்வாவை தெளிவுபடுத்தியதற்குப் பிறகுதான் வழி கெடுப்பதாக சொல்கிறான். இதில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழி பெயர்த்தால்,
ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் இறையச்சத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். என்று வரும்.
இது சரியான மொழிபெயர்ப்பு ஆகாது. இந்த மொழி பெயர்ப்பு இறையச்சத்தையும் நேர்வழியையும் வெவ்வேறாக பிரிக்கிறது. ஆகவே இந்த வசனத்திற்கு இறையச்சம் என்று மொழி பெயர்க்காமல் "தவிர்ந்து நடக்க வேண்டிய விஷயங்கள்" (ஹராமானது) என்று மொழி பெயர்க்க வேண்டும்.
இது சரியான மொழிபெயர்ப்பு ஆகாது. இந்த மொழி பெயர்ப்பு இறையச்சத்தையும் நேர்வழியையும் வெவ்வேறாக பிரிக்கிறது. ஆகவே இந்த வசனத்திற்கு இறையச்சம் என்று மொழி பெயர்க்காமல் "தவிர்ந்து நடக்க வேண்டிய விஷயங்கள்" (ஹராமானது) என்று மொழி பெயர்க்க வேண்டும்.
ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்க்க வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 9:115.
திருக்குர்ஆன் 9:115.
இப்போது படித்து பாருங்கள். இதுதான் சரியான மொழிபெயர்ப்பாக அமையும். ஆக இந்த வசனத்திலிருந்தும் தக்வாவிற்கு "தவிர்ந்து நடத்தல்" என்ற அர்த்தம் வரும் என்பதை அலலாஹ் நமக்கு உணர்த்தி காட்டுகிறான்.
♥ தப்பித்தல்
தக்வா என்பதற்கு விலகிக் காெள்ளுதல் என்ற அர்த்தம் இருப்பது போல் தப்பித்தல் என்ற அர்த்தமும் உண்டு. அதற்கான ஆதாரம் இதோ,
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில்
(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில்
?எவ்வாறு தக்வாவை பெறவீர்கள்
திருக்குர்ஆன் 73:17
இந்த வசனத்தில் அல்லாஹ் மறுமை நாளைப்பற்றி பேசுகிறான். மறுமை நாள் என்பது மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடிய நாள். அங்கே அனைவரும் நம்முடைய நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தோடுதான் காணப்படுவார்கள். அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தை வழங்குவானா? அல்லது நரகத்தை வழங்குவானா? என்ற பயத்தோடு காணப்படுவோம். அப்படிப்பட்ட நாளில் இறையச்சம் நமக்கு மிகுதியாக இருக்கும்.
மேலே குறிப்பிட்ட வசனத்தில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழிபெயர்த்தால் வரக்கூடிய வாசகம்,
(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு இறையச்சத்தைப் பெறவீர்கள்?
திருக்குர்ஆன் 73:17
திருக்குர்ஆன் 73:17
இது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. மறுமை நாளில் நாம் இறையச்சத்தோடுதான் காணப்படுவோம். ஆகவே அல்லாஹ் இங்கு, தக்வா என்பதை இறையச்சம் என்று அர்த்தத்தில் பயன்டுத்தவில்லை. மாறாக "தப்பித்தல்" என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தயிருக்கிறான்.
(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பித்து கொள்வீர்கள்?
திருக்குர்ஆன் 73:17
திருக்குர்ஆன் 73:17
இப்போது வாசித்து பாருங்கள் சரியாக இருக்கும். ஆக தக்வாவிற்கு தப்பித்தல் என்ற அர்த்தமும் உண்டு.
♥தீமை
தக்வா என்ற அரபிச் சொல்லுக்கு விலகிக்கொள்ளுதல், தவிர்ந்து நடத்தல், தப்பித்தல் என்ற அர்த்தங்கள் இருப்பது போல் தீமை என்ற அர்த்தமும் உள்ளது.
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
,அதன் (உள்ளத்தின்) நன்மையையும்
.தக்வாவையும் அதற்கு அவன் அறிவித்தான்
அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்
திருக்குர்ஆன் 91:8-10
இந்த வசனங்களில் அல்லாஹ் உள்ளங்களைப் பற்றி பேசுகிறான். அதில் அல்லாஹ், உள்ளத்திற்கு நன்மைகளையும் தக்வாவையும் சொல்லிக் கொடுத்திருப்பதாக சொல்லிக்காட்டுகிறான்.
இந்த இடத்தில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழிபெயர்ப்பது பொருத்தமானதாக இருக்காது. காரணம் இறையச்சம் இருந்தால்தான் நன்மையை பெற முடியும். இறையச்சம் இல்லாமல் செய்யும் செயல்கள் நன்மையை பெற்றுத்தராது(இதைப் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்)
தொடர்ந்து வரக்கூடிய வசனங்களைப் பார்த்தாலும் இறையச்சம் என்ற அர்த்தம் பொருத்தமில்லாதது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆக இந்த வசனத்தில் தக்வா என்று அல்லாஹ் குறிப்பிடுவது தீமையைத்தான்.
அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார். திருக்குர்ஆன் 91:8-10
அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார். திருக்குர்ஆன் 91:8-10
இப்பொழுது படித்துப் பாருங்கள் தெளிவாக இருக்கும். அல்லாஹ் உள்ளத்திற்கு நன்மையையும் தீமையையும் அறிவித்து கொடுத்தான். நன்மையை கொண்டு உள்ளத்தை தூய்மைபடுத்தினால் வெற்றிபெறுவோம். தீமையைக் கொண்டு உள்ளத்தை களங்கப்படுத்தினால் நஷடமடைவோம். இதுதான் சரியான மொழி பெயர்ப்பு. ஆகவே தக்வாவிற்கு தீமை என்ற அர்த்தமும் உண்டு.
♥ வரம்பிற்குள் நடத்தல்
சில வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அதன் எதிர்பதமான வார்த்தையைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.
உதாரணமாக நன்மை என்ற வார்த்தையின் அர்த்தத்தை அதன் எதிர்பதமான தீமை என்ற வார்த்தையைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். தீமைக்கு எதிரானது நன்மை என்று சொல்லலாம்.
அதேபோல், உண்மை என்பதை விளங்க அதற்கு எதிர்பதமான பொய்யைக் கொண்டு விளங்கிக் காெள்ளலாம். பொய்யிற்கு எதிராக இருப்பது உண்மை என்று சொல்லலாம்.
அதுபோலத்தான் அல்லாஹ் தக்வாவிற்கு எதிர்பதமாக உத்வான் (வரம்பு மீறுதல்) என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.
ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நன்மையிலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 5:2
இந்த வசனத்தில் நன்மைக்கு (பிர்ரு) என்பதற்கு எதிர்பதமாக பாவத்தையும் (இஸ்மி) அதோபோல் வரம்பு மீறுதல் (உத்வான்) என்பதற்கு எதிர்பதமாக தக்வாவை சொல்கிறான்.
இங்கே தக்வா என்பதற்கு வரம்பிற்குள் நடத்தல் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்த வசனத்தில் அதற்கு அடுத்து வத்தக்குல்லாஹ் என்று அல்லாஹ் சொல்கிறான். இதில் வத்தக்குல்லாஹ் என்பதற்கு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற அர்த்தம் வரும்.
நன்மையிலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 5:2
திருக்குர்ஆன் 5:2
♦ குற்றம புரியாதோர்
أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப்
பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா
அல்லது தக்வா உள்ளவரைக்
?குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா
திருக்குர்ஆன் 38:28
இந்த வசனத்திலும் தக்வா என்பது குற்றத்திற்கு எதிரானது என்பதை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். பாவத்திற்கு எதிரானதாக தக்வாவை வருணிக்கிறான். ஆக தக்வா என்பது பாவத்திலிருந்து விடுபடுவதையும் குறிக்கும் என்பது இதிலருந்து விளங்குகிறது.
ஆக மொத்தத்தில் மார்க்க ரீதியாக தக்வா என்பதற்கு சொல்லப்படும் விளக்கம் :
அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த செயல்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து தன்னைத் தானே பாதுகாத்தல்.
எதற்காக இந்த விளக்கம் சொல்லப்படுகிறதென்றால்
தக்வா என்பதற்கு வெறுமனே இறையச்சம் என்று மொழிபெயர்த்து
இறையச்சம் என்றால் என்ன? என்பது தெரியாமல், எப்படி இறையச்சத்தோடு நடப்பது? என்று தெரியாமல், ஷைத்தானின் வலைக்குள் விழுந்து பாவச்செயல்களிலிருந்து மீள முடியாமல் பல முஸ்லிம்கள் தவிக்கின்றனர்.
இறையச்சம் என்றால் என்ன? என்பது தெரியாமல், எப்படி இறையச்சத்தோடு நடப்பது? என்று தெரியாமல், ஷைத்தானின் வலைக்குள் விழுந்து பாவச்செயல்களிலிருந்து மீள முடியாமல் பல முஸ்லிம்கள் தவிக்கின்றனர்.
எனவே முஸ்லிம்கள் அனைவரும் தக்வா என்றாலே அல்லாஹ்விற்கு பயந்து பாவத்திலிருந்து விடுபடுவதைத்தான் குறிக்கும் என்று விளஙகிக் கொண்டால் ஷைத்தான் வலைக்குள் சிக்காமல் எளிமையாக தப்பித்து விடலாம். எந்த பாவத்திற்கும் அருகில் கூட செல்ல மாட்டோம்.
No comments:
Post a Comment