Thursday, September 27, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 12




111) சனிக்கிழமை மீன் பிடிக்க சென்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் ஏன் அறிவுரை கூறினார்கள்?

"அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.

♦ அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும்,

♦ அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

திருக்குர்ஆன்  7:164

112) சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயத்தை திருத்துவதற்காக அல்லாஹ் எதன் மூலம் சோதித்தான்?

அவர்களைப் பூமியில் பல கூட்டத்தினராகப் பிரித்தோம். அவர்களில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு அல்லாதோரும் அவர்களில் உள்ளனர்.

அவர்கள் திருந்துவதற்காக அவர்களை நல்லவை மூலமும், தீயவை மூலமும் சோதித்தோம். 

திருக்குர்ஆன்  7:168

113) தன்னை சீர்படுத்த என்ன வழி?

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.  

திருக்குர்ஆன்  7:170

114) யாரை நாய்க்கு உதாரணமாக சொல்லிக்காட்டுகிறான்?

நாம் நாடியிருந்தால் அதன் (குர்ஆன் வசனங்கள) மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். 

திருக்குர்ஆன்  7:176

115) கால்நடைகளை விட வழி கெட்டவர்கள் யார்?

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  

திருக்குர்ஆன்  7:179

116) அல்லாஹ் துணைவியை எதற்கு படைத்தான்?

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான். 

திருக்குர்ஆன்  7:189

117) ஷைத்தானின் தாக்கத்தை யார் சுதாரிப்பார்கள்?

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  

திருக்குர்ஆன்  7:201

118) அல்லாஹ் எதை சீர்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்?

உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! 

திருக்குர்ஆன்  8:1

119) பத்ரு யுத்தத்தில் அல்லாஹ் ஏன் மழையை பொழியச் செய்தான்?

தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

திருக்குர்ஆன்  8:11

120) மக்களிடம் நன்மை இருப்பதை அறிந்தால் அல்லாஹ் என்ன செய்வான்?

அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான்.   

திருக்குர்ஆன்  8:23

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...