41) அருள் எங்கே உள்ளது?
"நேர்வழி அல்லாஹ்வின் வழியே' என்று கூறுவீராக!
"அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது;
தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்' என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:73
42) நாம் எப்போது நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டோம்?
நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 3:92
43) பாக்கியம் பொருந்தியதாக ஆக்கப்பட்ட பள்ளிவாசல் எது?
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன் 3:96
44) எப்படிப்பட்ட சமுதாயம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104
45) வேதமுடையோரில் சிலர் எதை செய்ததால் நேரான சமுதாயமாக மாறினார்கள்?
அவர்கள் அனைவரும் சமமாக இல்லை. வேதமுடையோரில்நேரான சமுதாயமும் உள்ளது.
♦ அவர்கள் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்;
♦ஸஜ்தாச் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 3:113
46) காபிர்களின் சூழ்ச்சி நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க நாம் என் செய்ய வேண்டும்?
♦ நீங்கள் சகித்துக் கொண்டு
♦ (இறைவனை) அஞ்சினால்
அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
திருக்குர்ஆன் 3:120
47) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எங்கே உயிருடன் உள்ளனர்?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:169
48) காபிர்களை அல்லாஹ் உடனடியாக தண்டிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறான்?
"(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 3:178
49) கஞ்சத்தனம் செய்வோருக்கான தண்டனை என்ன?
அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 3:180
50) உறுதிமிக்க காரியங்கள் எது?
♦ நீங்கள் சகித்துக் கொண்டு
♦ (இறைவனை) அஞ்சினால்
அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆன் 3:186
♦ என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு!
♦ நன்மையை ஏவு! தீமையைத் தடு!
♦ உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்!
அது உறுதிமிக்க காரியமாகும்.
திருக்குர்ஆன் 31:17
♦யார் பொறுமையை மேற்கொண்டு ♦மன்னிக்கிறாரோ
அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆன் 42:43
No comments:
Post a Comment