91) ஒவ்வொரு செய்திக்கும் எது உள்ளது?
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!
திருக்குர்ஆன் 6:67
92) உறுதியான நம்பிக்கையாளராக இப்றாகிம் நபியை அல்லாஹ் எதன் மூலம் மாற்றினான்?
உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.
திருக்குர்ஆன் 6:75
93) இறைவன் எதை கொண்டு அனைத்து பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்?
என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?''
திருக்குர்ஆன் 6:80
94) அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவைகளை நான் எப்படி அஞ்ச முடியும் என்று எதை வைத்து இப்றாகிம் நபி கூறினார்கள்?
"அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்றும் அவர் கூறினார்.)
திருக்குர்ஆன் 6:81
95) அச்சமில்லா நிலை யாருக்கு உள்ளது?
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் 6:82
96) வேதக்காரர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை என்று அல்லாஹ் கூற காரணம் என்ன?
"எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. "
திருக்குர்ஆன் 6:91
97) எதை கவனித்தால் நன்மையாக ஆகும்?
"உங்கள் இறைவனிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்து விட்டன. அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும். நான் உங்களுக்குக் காவலன் அல்லன்'' (என்று கூறுவீராக)
திருக்குர்ஆன் 6:104
98) மனித ஜின் ஷைத்தான்கள் ஏமாற்றுவதற்காக என்ன செய்வார்கள்?
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர்.
திருக்குர்ஆன் 6:112
99) அல்லாஹ்வின் வார்த்தைகள் எதனால் நிறைந்துள்ளது?
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது.
திருக்குர்ஆன் 6:115
100) முழுமையான சான்று யாருக்குரியது?
"முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.
திருக்குர்ஆன் 6:149
No comments:
Post a Comment