101) ஆதம் நபியிடமும் ஹவ்வா (அலை)யிடமும் ஷைத்தான் செய்த சத்தியம் என்ன?
"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
திருக்குர்ஆன் 7:21
102) வானத்தின் வாசல்கள் யாருக்காக திறக்கப்படாது?
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.
திருக்குர்ஆன் 7:40
103) சொர்க்க நரகத்தில் அறிவிப்பாளர் உண்டா?
"எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் "ஆம்' என்பர்.
"அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார்.
திருக்குர்ஆன் 7:44
104) குருட்டுக்கூட்டமாக இருந்த சமுதாயம் எது?
ஆயினும் அவரைப் (நூஹ் நபியை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.
திருக்குர்ஆன் 7:64
105) அல்லாஹ்வின் வேதனை எந்த நேரங்களில் வரும்?
அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?
அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகலில் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?
திருக்குர்ஆன் 7:98
106) சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்த்தனை என்ன?
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.
திருக்குர்ஆன் 7:126
107) இஸ்ராயீலின் மக்கள் பொறுமையை மேற் கொண்டதால் இறைவன் வழங்கிய பரிசு என்ன?
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது.
திருக்குர்ஆன் 7:137
108) மூஸா நபியின் சமுதாயம் காளை மாட்டை வணங்கியதற்கு பிறகு அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்தனை என்ன?
தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்'' என்றனர்.
திருக்குர்ஆன் 7:149
109) மூஸா நபி தூர் மலையிலிருந்து கொண்டு வந்த பலகையில் என்ன எழுதி இருந்தது?
மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது.
திருக்குர்ஆன் 7:154
110) குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டவர்களை அல்லாஹ் ஏன் சோதித்தான்?
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை.
அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
திருக்குர்ஆன் 7:163
No comments:
Post a Comment