Sunday, September 16, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 1



திருக்குர்ஆன் கேள்வி பதில்

1) பணிவுடையோர் எப்படி நம்புவார்கள்?

(பணிவுடையோர் யாரெனில்) 

♦ தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், 

♦ அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் 

அவர்கள் நம்புவார்கள்.

திருக்குர்ஆன்  2:46

2) உலக மக்கள் அனைவரைவிடவும் யாரை அல்லாஹ் மேன்மைபடுத்தினான்?

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!  

திருக்குர்ஆன்  2:47.

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!

திருக்குர்ஆன்  2:122

3) பனூ இஸ்ரவேலர்களை ஏன் இடிமுழக்கம் தாக்கியது?

"மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்' என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.

 திருக்குர்ஆன்  2:55

இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். "அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

திருக்குர்ஆன்  4:153

4) பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானதற்கு என்ன காரணம்?

அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். 

♦ அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், 

♦ நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். 

♦ மேலும் பாவம் செய்து, 

♦ வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.  

திருக்குர்ஆன்  2:61

5) பனூ இஸ்ரவேலர்களில் எழுதத்தெரியாதவர்கள் எவற்றை தெரிந்து கொள்ளவில்லை?

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர். 

திருக்குர்ஆன்  2:78

6) இவ்வுலக வாழ்க்கையில் பனூ இஸ்ரவேலர்கள் எவ்வாறு இழிவை பெற்று கொணடார்கள்?

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. 

திருக்குர்ஆன்  2:85

7) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? எதனால்?

அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். 

திருக்குர்ஆன்  2:90

8) பள்ளிவாசல்களில் எப்படி நுழைய வேண்டும்?

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? 

♦ பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

திருக்குர்ஆன்  2:114

9) அல்லாஹ்வின் முகம் எங்கே உள்ளது?

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.  

திருக்குர்ஆன்  2:115

10) மனிதர்களுக்கு தலைவராக அல்லாஹ் யாரை ஆக்கினான்?

இப்ராஹீம்  நபியை

 திருக்குர்ஆன்  2:124

1 comment:


  1. 20 பனூ இஸ்ரவேல் சமுகத்திற்கு யாரினால் முதல் குழப்பம் ஏற்பட்டது?

    ReplyDelete

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...