இஸ்லாத்தின் அடிப்படை
தக்வா தான் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையாக இருககிறது.
ஒரு மனிதனுக்கு மூச்சுக்காற்று, சுவாசக்காற்று எவ்வளவு இன்றியமையாததோ அதைப் போன்று தக்வாவும் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆக தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் உயிரோடும், உணர்வோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.
எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகரித்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.
அதனால் தான் இஸ்லாம் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் தக்வாவை எதிர்பார்க்கிறது.
உதாரணத்திற்கு சில,
ஹஜ் வணக்கம் :
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ
ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத்)
திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தக்வாவே (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் ஹஜ்ஜில் தடுத்த விஷயத்திலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதுதான்) மிகச் சிறந்தது. அறிவுடையோரே
!என்னை தக்வா செய்யுங்கள்
திருக்குர்ஆன் 2:197
இந்த வசனத்தில் ஹஜ்ஜைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூண். மிக முக்கியமான வணக்கவழிபாடு. இந்த ஹஜ் என்ற வணக்க வழிபாடு நம்மீது கடமையாகுவதற்கு இரண்டு நிபந்தனைகள். ஒன்று சென்றுவர பொருளாதார சக்தியை பெற்றிருக்க வேண்டும். மற்றொன்று பிரயாணத்திற்கான உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டையும் பெற்றவர்கள் ஹஜ் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ் என்ற வணக்க வழிபாடு பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் பிரயாணத்திற்கு தேவையானதை திரட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் திரட்டிக் காெள்வதில் மிக முக்கியமானதாக தக்வா தான் இருக்க வேண்டும். ஆடைகளையும் பொருளாதாரத்தையும் திரட்டிவிட்டு தக்வா வை திரட்டாமல் ஹஜ் செய்தால் அதனால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். தக்வா இல்லாத ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாத ஹஜ்ஜாக மாறிவிடும். ஆக ஹஜ் என்ற இஸ்லாத்தின் தூணிற்கு தக்வா மிகவும் அவசியம்.
குர்பானி பிராணியை அறுத்தல்
அதுமட்டுமில்லாமல் குர்பானி பிராணியை அறுப்பது பற்றியும் அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள தக்வாவே அவனைச்
.சென்றடையும்
திருக்குர்ஆன் 22:37
அல்லாஹ் இந்த வசனத்தில் தக்வாவின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்கிறான். நாம் எத்தனை ஆடு மாடு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தாலும், மிகப்பெரிய பிராணிகளை குர்பானி கொடுத்தாலும் அதன் மூலமாக நன்மைகளை பெற வேண்டுமென்றால் தக்வா மிகவும் அவசியம். தக்வா இல்லாத குர்பானிகள் அல்லாஹ்விற்கு தேவையில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.
பிரார்த்தனையில்
பிரார்த்தனை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்க வழிபாடு.
ஏனென்றால் பிரார்த்தனைகள் மனிதன் அல்லாஹ்விற்கு அடிமை என்பதை தெளிவாக காட்டும். அப்படிப்பட்ட பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் அச்சம் வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.
وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ
பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை
.செய்வோருக்கு அருகில் உள்ளது
திருக்குர்ஆன் 7:56.
இந்த வசனத்தில் அச்சத்துடன்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டுகிறான். அச்சம் என்பது தக்வாவின் ஒரு பகுதி என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆக பிரார்த்தனை என்ற முக்கிய வணக்கத்திற்கும் தக்வா அவசியம்.
தொழக்கூடிய பள்ளி
நாம் தொழக்கூடிய பள்ளிவாசலும் தக்வாவின் (அல்லாஹ்விற்கு பயந்து பாவத்திலிருந்து விடுபடுதல்) அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய ஹராமான காரியங்கள் நடந்தால் அந்த பள்ளிவாசல்களில் தொழக்கூடாது.
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் தக்வாவின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை
.விரும்புகிறான்
திருக்குர்ஆன் 9:108
இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான். தக்வாவின் அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஆகவே நாமும் இணைவைக்காத பள்ளிவாசல்களில்தான் தாெழ வேண்டும்.
இந்த வசனம் இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்பதை குறிக்கவில்லை. மாறாக இணைவைப்பு நடக்கும் பள்ளயிலே தொழக்கூடாது என்பதைத்தான் குறிக்கிறது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பார்கள். அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களை தொழக்கூடாது என்று இறைவன் கட்டளையிடுவதிலிருந்த இந்த வசனம் இமாமிற்கு பின்னால் நின்று தொழுவதை குறிக்கவில்லை. மாறாக பள்ளிவாசலில் நின்று தொழுவதைத்தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது
No comments:
Post a Comment