Sunday, September 16, 2018

தக்வா - 2




தக்வா எனும் ஆடை


அதனால்தான் அல்லாஹ் தக்வாவை ஆடையுடன் ஒப்பிட்டு சொல்லிக்காட்டுகிறான்.
ஆடைகள் எப்படி நம்மை அசுத்தங்களிளலிருந்து பாதுகாக்குமோ அதைப் போல் தக்வா என்பது பாவம் என்ற அசுத்தத்திலிருந்து நம் உள்ளத்தை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்

يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

ஆதமுடைய மக்களே உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். தக்வா எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது

திருக்குர்ஆன்  7:26

அல்லாஹ் ஆடைகளில் சிறந்ததாக தக்வாவை சொல்லிக்காட்டுகிறான். ஆடை நம்முடை மறைவிடங்களை மறைக்கவும் நம்மை தூசிகளிலிலருந்து பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதே போல் தக்வா நம்முடைய கெட்ட எண்ணங்களை மறைத்து பாவத்திலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வுடைய அச்சம் மிக இன்றியமையாதது.
நமக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதே நாம் பாவங்களிலிருந்து விடுபடுவதைப் பொறுத்துத்தான்.

♥பாவத்தை சொல்லும் போது


அதனால் தான் அல்லாஹ் பாவத்தை சொல்லும்போதெல்லாம் கூடவே தக்வாவையும் சேர்த்து சொல்வான். ஏனென்றால் பாவத்தை விடுவதுதான் தக்வா. உதாரணத்திற்கு சில வசனங்கள் . 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ

நம்பிக்கை கொண்டோரே! தக்வாவை மேற்கொள்ளுங்கள் (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்) ! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் .  திருக்குர்ஆன்  2:278

வட்டி என்பது இறைவன் தடுத்த பாவமான செயல். ஆகவே வட்டியை சொல்வதற்கு முன்னால் தக்வாவை சொல்கிறான். அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு அவன் தடுத்த விஷயங்களில் வட்டியும் ஒன்று என்பதை சொல்லிக்காட்டுகிறான்.

அதே போல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் ! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்
திருக்குர்ஆன்  49:12

இதிலேயும் புறம், கோள் போன்ற ஹராமான விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு தக்வாவை சொல்லிக்காட்டுகிறான்.
அதேபோல் நபியின் மனைவிமார்களுக்கு தடுக்கப்பட்டதை சொல்லும் போதும் கூட தக்வாவை சேர்த்து சொல்கிறான்.

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (தக்வாவை) இறைவனுக்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து தவிர்ந்து நரகத்திலருந்து உங்களை காத்துக் கொள்ள விரும்பினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
திருக்குர்ஆன்  33:32

குலைந்து பேசுவது தடுக்கப்பட்ட காரியம் என்று சொல்லும் போது அதனுடன் சேர்த்து தக்வாவையும் சொல்கிறான். இதிலிருந்தும் தக்வாவின் பிரதான அர்த்தமே அல்லாஹ்விற்கு அஞ்சி பாவத்திலிருந்து விடுபடுவதுதான் என்று விளங்கிக்கொள்ளலாம்.

2) அஞசுவதற்கு தகுதியானவன்

அடுத்ததாக நாம் தக்வாவிற்கு உரித்தானவன் யார்? என்பதை அறிந்து காெள்ள வேண்டும். 

அதாவது நாம் அஞ்சுவதற்கு தகுதியானவன். இவையெல்லாம் பாவம் என்று பாவத்தின் பட்டியலை சொல்வதற்கு தகுதியானவன். பாவம் செய்பவர்களை நரகத்தில் போட்டு பொசுக்குவதறகு அதிகாரம் படைத்தவன் யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை அல்லாஹ் தன் திருமறையில் சாெல்லிக்காட்டுகிறான்.

وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ

அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை
:அவனே தக்வாவிற்கு உரித்தானவன் 
.மன்னித்தல் உடையவன்

திருக்குர்ஆன்  74:56

இந்த வசனத்திலருந்து தக்வா செய்வதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை விளங்க முடிகிறது.

அதாவது
நாம் யாரை அஞ்ச வேண்டும்  - அல்லாஹ்வை.
நாம் யார் தடுத்த விஷயங்களிலிருந்து விலக வேண்டும் - அல்லாஹ் தடுத்த விஷயத்திலிருந்து.
யார் தயாரித்த நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் - அல்லாஹ் தயாரித்த நரகத்திலிருந்து.

ஆகவே அஞ்சுவதற்கு தகுதியானுவனும், ஹலால் ஹராமை உருவாக்கியவனும், நரகத்தை படைத்தவனுமாக அல்லாஹ் இருக்கின்ற காரணத்தினால் அவன் மட்டும் தான் தக்வாவிற்கு உரித்தானவனாக இருக்கின்றான்.

♥ முஃமின் யார்

இந்த அளவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தக்வா இருக்கின்ற காரணத்தினால்தான் முஃமின்கள் என்றாலே தக்வாவை பெற்றவர்கள்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே 
.சார்ந்திருப்பார்கள்

திருக்குர்ஆன்  8:2.

அல்லாஹ்வை பற்றி நியாபகப்படுத்தப்பட்டவுடன் யாருடைய உள்ளங்கள் நடுங்குகிறதோ அவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக சொல்லிக்காடடுகிறான். ஆக தக்வா இருந்தால்தான் நாம் உண்மையான முஃமின்கள்.

அதேபோல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.

"மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறிய போது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்  

திருக்குர்ஆன்  5:112

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...