Wednesday, September 26, 2018

தக்வா - 5


தக்வாவின் முக்கியத்துவம்

தக்வா என்பது அனைத்து வணக்க வழிபாட்டிலும் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதேபோன்று தக்வா இருந்தால் தான் நமக்கு நேர்வழி கிடைக்கும் என்றும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

நேர்வழி காட்டம் அம்சம்

திருக்குர்ஆன்

திருமறையை மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளினான். அல்லாஹ் சொல்வதை பாருங்கள்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

திருக்குர்ஆன்  2:185

திருமறைக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். உண்மையையும் பொய்யையும் பிரித்துக்காட்டும் என்றும் சொல்கிறான். திருமறைக்குர்ஆன் நேர்வழி காடடும் என்றால் திருமறையை படித்த அத்துனை பேரும் நேர்வழியில் இருக்க வேண்டும். ஆனால் திருமறையை படித்த அத்தனை பேரும் நேர்வழியில்தான் உள்ளார்களா? திருமறையை நன்கு கரைத்து குடித்த எத்தனையோ பேர் நேர்வழியிலிருந்து தவறி வழிகேட்டில் பயனிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இருபது முப்பது வருடங்களாக திருமறையை கரைத்து குடித்த பல உலமாக்கள், பல அறிஞர்கள் பள்ளிகளில் அமரந்து மவ்லீத் ஓதுவதும், தர்காக்களை ஆதரிப்பதும் என்பதுபோன்ற பல்வேறு இணைவைப்பான காரிங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் திருமறையை படித்தும் நேர்வழியில் பயணிக்கவில்லை. அப்படியென்றால் அல்லாஹ் சொன்னது தவறா? நிச்சயமாக இல்லை.

ஏனென்றால் திருமறையை படித்தவர்களுக்கு நேர்வழி கிடைக்கும் என்று சொன்ன அல்லாஹ் எப்படி படித்தால் நேர்வழி கிடைக்கும் என்பதையும் சேர்த்தே சொல்லிக்காட்டுகிறான். கீழேயுள்ள திருமறையை படியுங்கள்.

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

இது(திருக்குர்ஆன்) தக்வாவை பெற்றவர்களுக்கு அறிவுரை.   

திருக்குர்ஆன்  69:48

இநத வசனத்தில் அல்லாஹ் தெளிவாக சொல்லிக்காட்டுகிறான். திருமறையை படித்தவர்களுக்கெல்லாம் நேர்வழி கிடைக்காது. திருமறையை யார் தக்வாவோடு படிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் நேர்வழி கிடைக்கும். இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) தக்வாயுடையவர்களுக்கு (இது) வழிகாட்டி.

திருக்குர்ஆன்  2:2

ஆக திருமறை நேர்வழி காட்ட தக்வா அவசியம். தக்வா இல்லாமல் வேதத்தை படித்தவர்களுடைய நிலையை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

வேதக்காரர்கள்

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு 
அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

திருக்குர்ஆன்  62:5

தக்வா என்றால் அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த ஹராமான விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்தல் என்று பார்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் வேதக்காரர்கள் வேதத்தை படித்தார்கள் ஆனால் அதிலுள்ளபடி நடக்கவில்லை (தக்வா இல்லை). ஆகவே அவர்களுக்கு வேதம் நேர்வழி காட்டவில்லை. அவர்களை அல்லாஹ் கழுதை என்கின்றான்.
அதே போல் இன்னொரு வசனத்தையும்பாருங்கள்.

வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் 
சிந்திக்க வேண்டாமா

திருக்குர்ஆன்  2:44

இதிலும் வேதக்காரர்கள் தக்வா இல்லாமல் வேதத்தை படித்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்களை சிந்தனையற்றவர்கள் என்கின்றான்.

ஆக இதிலிருந்து வேதங்கள் நமக்கு நேர்வழி காட்டவேண்டும் என்றால் தக்வா மிகவம் அவசியம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...