61) மிகச்சிறந்த நண்பர்கள் யார்?
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர்,
அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள்.
அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4:69
62) ஷைத்தானின் சூழ்ச்சி எப்படிப்ட்டது?
ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.
திருக்குர்ஆன் 4:76
63) பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்?
பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 4:83
64) அழகிய விஷயங்களை பரிந்துரை செய்பவருக்கு என்ன உள்ளது?
அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.
தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:85
65) நமக்கு யாரேனும் வாழ்த்து சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:86
66) நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரை தவறுதலாக கொலை செய்தால் என்ன தண்டனை?
நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது.
நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:92
67) அல்லாஹ்வை குறைவாக திக்ரு செய்பவர்கள் யார்?
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்.அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
திருக்குர்ஆன் 4:142
68) தீய சொல்லை வெளிப்படையாக யார் கூறலாம்?
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
திருக்குர்ஆன் 4:148
69) பொறுமையாக இருப்பது யாருக்கு எளிது?
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
திருக்குர்ஆன் 2:45
70) அல்லாஹ் யூதர்களுக்கு தூய்மையானவற்றை ஏன் ஹராமாக்கினான்?
♦ யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும்,
♦ அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும்,
♦ வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும்,
♦ மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும்
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 4:161
No comments:
Post a Comment