11) நாம் ஏன் நடுநிலை சமுதாயமாகக
இவ்வாறே,
♦ நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும்,
♦ இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும்
உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம்.
திருக்குர்ஆன் 2:143
12) வேதம் கொடுக்கப்பட்டோர் (யூத கிறிஸ்தவர்கள்) முஹம்மது நபியை எப்படி அறிந்து கொள்வார்கள்?
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
திருக்குர்ஆன் 2:146
13) நாம் எங்கிருந்தாலும் நம்முடைய முகத்தை எந்த திசையில் திருப்ப வேண்டும்?
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!
எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:150
14) அல்லாஹ் யாருக்கு நன்றி பாராட்டுபவன்?
நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்.
திருக்குர்ஆன் 2:158
15) பொறுமையாளர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 2:156
16) நரகத்தை சகித்துக் கொள்பவர்கள் யார்?
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்.
நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!
நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!
திருக்குர்ஆன் 2:175
17) நாம் அல்லாஹ்வை ஏன் பெருமைப்படுத்த வேண்டும்? ஏன் நன்றி செலுத்த வேண்டும்?
உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
திருக்குர்ஆன் 2:185
18) பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் யார்?
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி
பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
19) அல்லாஹ் திருக்குர்ஆனின் ஆயத்துகளை ஏன் விளக்கி தெளிவுபடுத்துகிறான்?
(தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:187
படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:221
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 3:103
நீங்கள் விளங்குவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:242
உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 13:2
20) ஹஜ்ஜுக்கு காலம் காட்டிகள் எவை?
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:189
No comments:
Post a Comment