Thursday, September 20, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 6


51) அறிவாளிகள் அல்லாஹ்வை எவ்வாறு திக்ரு செய்வார்கள்?

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.

வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.

"எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அறிவாளிகள் கூறுவார்கள்)  

திருக்குர்ஆன்  3:191

52) அல்லாஹ்வின் விருந்து எது?

தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

திருக்குர்ஆன்  3:198

53) நம்பிக்கை கொண்டோர் சகிப்புத்தன்மையில் எப்படி இருக்க வேண்டும்?

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்குளை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்  3:200

54) நாம் நம்முடைய மனைவியை வெறுத்தால் அதில் அல்லாஹ் எதை வைத்திருப்பான்?

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன்  4:19

55) திருமணம் செய்பவர் எப்படிப்பட்ட உடன்படிக்கையை எடுக்கிறார்?

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன்  4:21

56) அல்லாஹ் நமக்கு ஏன் சட்டங்களை எளிதாக்க விரும்புகிறான்?

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். 

திருக்குர்ஆன்  4:28

57) நல்ல பெண்கள் யார்?

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். 

திருக்குர்ஆன்  4:34

58) மனைவியுடன் சண்டை வரும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்

♦ அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!
♦ அவர்களை அடியுங்கள்! 

அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்  4:34

59) ஷைத்தானின் நண்பர்கள் யார்?

♦ அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது
♦ மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைுத்தானின் நண்பர்கள்).

 யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

திருக்குர்ஆன்  4:38

60) மிகச்சிறந்த நிழலில் யார் நுழைவார்?

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். 

மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

திருக்குர்ஆன்  4:57


No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...