121) நாம் என்ன செய்தால் அல்லாஹ் நமக்கு தெளிவை வழங்குவான்?
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான்.
உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான்.
அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
திருக்குர்ஆன் 8:29
122) நம்முடைய பலம் எப்போது அழிந்து போகும்?
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும்.
திருக்குர்ஆன் 8:46
123) திடீரென்று உடன்படிக்கையை முறித்தால் எத்தனை மாதங்கள் அவகாசம் கொடுக்கனும்?
(இணை கற்பிப்போரே!) நான்கு மாதங்களுக்கு இப்பூமியில் (மக்காவில்) சுற்றித் திரியுங்கள்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது என்பதையும், (தன்னை) மறுப்போரை அல்லாஹ் இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 9:2
124) இணைகற்பி்ப்போர் நம்மிடம் அடைக்கலம் கேட்டால் நாம் ஏன் அடைக்கலம் கொடுக்கனும்?
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 9:6
125) அசுத்தமானவர்கள் யார்?
இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே.
திருக்குர்ஆன் 9:28
126) திருப்திபடுத்த தகுதியானவர்கள் யார்?
உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.
அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதருமே திருப்திப்படுத்தத் தகுதி படைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 9:62
127) கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்?
கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர்.
கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 9:99
128) இரண்டு தடவை தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் யார்?
உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 9:101
129) யாரை அல்லாஹ் மன்னிக்கக்கூடும்?
மற்றும் சிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். நல்ல செயலை, மற்றொரு தீய செயலுடன் கலந்து விட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும்.
திருக்குர்ஆன் 9:102
130) நமது உள்ளத்தை எது பலப்படுத்தும்?
தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது.
திருக்குர்ஆன் 11:120
தான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பகைமை கொள்வேன்'' என கூறிய யஹூதி யார்?
ReplyDelete