Sunday, September 23, 2018

தக்வா - 4





இஸ்லாத்தின் அடிப்படை - 2

நிர்வாகி

அதைப் போன்று பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகிகளுக்கு தக்வா மிகவும் அவசியம்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே 
.நேர்வழி பெற்றோராக முடியும்

திருக்குர்ஆன்  9:18

அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள்தான் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.  அதே போன்று மஸ்ஜிதுல் ஹரம் என்ற மக்காவின் புனித பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர் யார் என்பதையும் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوا أَوْلِيَاءَهُ ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) தக்வா உடையோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்

  திருக்குர்ஆன்  8:34

தக்வா இருந்தால்தான் மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிக்கக்கூடிய தகுதி வரும் என்ற அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து தக்வாவின் முக்கியத்துவத்தை அறியலாம்.

தக்வாவை கொண்டு கட்டபபட்ட கட்டிடம்

அதே போல் நாம் செய்யக்கூடிய ஒட்டுமொத்த அமல்களையும் அல்லாஹ் ஒரு கட்டிடத்திற்கு உவமையாக்கி சொல்லிக்காட்டுகிறான்.

أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

அல்லாஹ்வைப் பற்றிய தக்வாவின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.  

திருக்குர்ஆன்  9:109

இந்த வசனத்தின் அடிப்படையில் நம்முடைய வணக்க வழிபாடுகள் இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். ஒன்று தக்வா இரண்டாவது ரிழ்வான் (அல்லாஹ்வின் திருப்தி). இந்த இரண்டும் அமையப் பெற்ற அமல்கள்தான் நமக்கு நன்மையை பெற்று தரும். ஆக இந்த அளவிற்கு தக்வா என்பது மிக முக்கியமானது.

♦ நன்மையென்றாலே தக்வாதான்

அதுமட்டுமில்லாமல் அல்லாஹ் இன்னாெரு வசனத்தில் "நன்மை என்றாலே அது தக்வா தான்" என்பதை சாெல்லிக்காட்டுகிறான்.

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ ۗ وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. தக்வா கொள்வதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி 
.பெறுவீர்கள்

திருக்குர்ஆன்  2:189

இந்த வசனத்தில் தக்வா இருந்தால் தான் நன்மையை பெற முடியும் என்று அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். ஆக முஸ்லிமாக வாழக்கூடியவன் கட்டாயமாக தக்வாவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நன்மையை பெற முடியும். நன்மையை பெற்றால்தான் சொர்க்கத்திற்கு செல்ல முடியும்.

♥ உள்ளத்தை தான் பார்ப்பான்

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும் இதற்கு சான்று பகிர்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் :   5012

இந்த பென்மொழியில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தக்வாவின் முக்கியத்துவத்தை தெளிவாக கூறுகிறார்கள். ஒரு மனிதன் மிக அழகானவனாக இருந்தாலும் நல்ல உடலமைப்பை பெற்றிருந்தாலும் அதன் மூலம் எந்த பலனுமில்லை. மாறாக அவன் செய்யக்கூடிய நல்ல செயல்பாடுகளுக்கும் அவனுடைய நல்ல உளளத்திற்கும் தான் அவன் பலனை பெற்றுக் கொள்வான்.
நல்ல உள்ளம் என்றால் அது தக்வாவை பெற்ற உள்ளம் தான். அல்லாஹ் நம்முடைய உள்ளத்தில் தக்வா இருக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்ப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5010

இதிலிருந்து தக்வா என்பது ஒரு முஸ்லிமுக்கு மிக மிக அவசியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஒரு மனிதனுடன் அவனுடைய நிழல் எப்படி இருக்குமோ அது போல முஸ்லிமுடன் தக்வா இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய அமல்கள் ஏற்றுக்காெள்ளப்பட்டு அதற்கான கூலிகள் வழங்கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியும்.

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...