21) கொலையை விடக் கொடியது எது?
கலகம், கொலையை விடக் கடுமையானது.
திருக்குர்ஆன் 2:191
22) ஹஜ்ஜிற்கு செல்பவர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது?
ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது
♦ உடலுறவு கொள்வதோ,
♦ குற்றம் செய்வதோ,
♦ விதண்டாவாதம் புரிவதோ கூடாது.
திருக்குர்ஆன் 2:197
23) இறைத்தூதர்கள் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டார்கள்?
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214
24) நாம் விரும்புவதும் வெறுப்பதும் நமக்கு எப்படிப்பட்டதாக இருக்கலாம்?
உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும்.
ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும்.
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:216
25) எதற்காகவெல்லாம் நம்முடைய சத்தியம் மூலம் அல்லாஹ்வை தடையாக்கக்கூடாது ?
♦ நன்மை செய்வதற்கும்,
♦ (இறைவனை) அஞ்சுவதற்கும்,
♦ மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்
உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
26) பிள்ளைகளுக்கு எத்தனை ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்?
தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
திருக்குர்ஆன் 2:233
26) அல்லாஹ் தாலூதை ஆட்சியாளராக்க என்ன காரணம்?
♦ அவருக்கு கல்வியையும்,
♦ உடலையும் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:247
27) மறுமையில் அல்லாஹ்வை சந்திப்போம் என்று நம்பிய தாலூத் படையினர் என்ன கூறினார்கள்?
அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், "எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்' என்றனர்.
திருக்குர்ஆன் 2:249
28) ஷைத்தான் எதை பயமுறுத்துகிறான் எதை தூண்டுகிறான்?
ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான்.
வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான்.
திருக்குர்ஆன் 2:268
29) தீமைகளுக்கு பரிகாரமாக எது அமையும்?
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது.
உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:271
30) வட்டியை உண்போர் எப்படி எழுப்பப்படுவார்கள்?
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.
திருக்குர்ஆன் 2:275
No comments:
Post a Comment