71) அல்லாஹ்வை குறை கூற மனிதர்களுக்கு எந்த வாய்பும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அல்லாஹ் என்ன செய்தான்?
தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:165
72) தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலத்தில் வேதக்காரர்களுக்கு அல்லாஹ் யாரை தூதராக அனுப்பினான்?
தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார்.
திருக்குர்ஆன் 5:19
73) அல்லாஹ் யாரிடமிருந்து வணக்கத்தை ஏற்றுக் கொள்வான்?
"(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
திருக்குர்ஆன் 5:27
74) நமக்கு அல்லாஹ் தந்திருப்பவற்றிலிருந்து நம்மை சோதிப்பதற்காக அல்லாஹ் நம்மை என்ன செய்தான்?
அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.)
திருக்குர்ஆன் 5:48
75) இஸ்லாத்தை விட்டு மாறியோருக்காக அல்லாஹ் வேறொரு சமுதாயத்தை கொண்டு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.
அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 5:54
76) அல்லாஹ் முஹம்மது நபியை யாரிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்களிக்கிறான்?
அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.
திருக்குர்ஆன் 5:67
77) இவ்வுலகில் சோதனையே ஏற்படாது என்று எண்ணியவர்களை அல்லாஹ் என்ன செய்தான்?
எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர். இதனால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள்.
திருக்குர்ஆன் 5:71
78) மர்யமை அல்லாஹ் எவ்வாறு புகழ்கிறான்?
அவரது (ஈஸாவின்) தாய் உண்மையாளர்.
திருக்குர்ஆன் 5:75
79) நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களில் கடுமையான பகைவர்களாகவும் நெருக்கமான நேசர்களாகவும் யார் இருக்கிறார்கள்?
நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்!
"நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 5:82
80) கிறிஸ்தவர்கள் குர்ஆனை செவுயுற்று உண்மையை அறிந்து கொண்டால் என்ன செய்வார்கள்?
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 5:83
No comments:
Post a Comment