Tuesday, September 18, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 4



31) குர்ஆனில் எத்தனை வகையான வசனங்கள் உள்ளன?

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான்.

♦ அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய்.

♦இரு கருத்தைத் தருகின்ற சில வசனங்களும் உள்ளன.

திருக்குர்ஆன்  3:7

32) இரு கருத்தை தரக்கூடிய வசனங்களை அறிவுடையோர் படித்தால் என்ன செய்வார்கள்?

அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

திருக்குர்ஆன்  3:7

33) இரு கருத்தை தரக்கூடிய வசனங்களை பின்பற்றுவோர் யார்?

உள்ளங்களில் கோளாறு இருப்போர்

♦குழப்பத்தை நாடியும்,
♦அதற்கேற்ற விளக்கத்தைத் தேடியும்

அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.

திருக்குர்ஆன்  3:7

34) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் முஹம்மது நபியிடம் விதண்டாவாதம் செய்தால் முஹம்மது நபி என்ன சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்?

அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் "என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன்  3:20

35) இம்ரானின் மனைவி குழந்தை பெற்றெடுத்த போது என்ன பிரார்த்தித்தார்?

விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார்

திருக்குர்ஆன்  3:36

36) இம்ரானின் மகளுக்கு உணவு கொடுத்தது யார்?

அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

திருக்குர்ஆன்  3:37

37) ஸக்கரியா நபிக்கு யஹ்யா நபி பிறக்கப் போகும் நற்செய்தியை சொன்ன அல்லாஹ் அதற்காக ஸக்கரியா நபியை என்ன செய்ய கட்டளையிட்டான்?

"இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும்.

♦ உமது இறைவனை அதிகம் நினைப்பீராக!

♦ காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!'' என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன்  3:41

38) ஈஸா நபிக்கு எந்த வேதத்தை அல்லாஹ் கற்றுக கொடுததான்?

அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான்.  

திருக்குர்ஆன்  3:48

39) அல்லாஹ் மண்ணால் படைத்து ஆகு என்று சொன்னவுடன் ஆகியவர் யார்?

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார். 

திருக்குர்ஆன்  3:59

40) இப்றாகிம் நபி விஷயத்தில் உரிமைப் படைத்தவர்கள் யார்?

இப்ராஹீம் விஷயத்தில் உரிமை படைத்த மக்கள்

♦ அவரைப் பின்பற்றியோரும்,
இந்த நபியும்,
♦ நம்பிக்கை கொண்டோருமே.

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன். 

திருக்குர்ஆன்  3:68

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி - حرف الراء - ரா எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்

 ஏக இறைவனின் திருப்பெயரால்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்ப...