Wednesday, October 31, 2018

மனனம் செய்வோம் - 92



ஆணிண் மறைவிடத்தை இன்னொரு ஆண் பார்க்கக்கூடாது


لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ


தமிழில் : லா யன்ழுருர் ரஜுலு இலா அவ்ரதிர் ரஜுலி

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;

ஸஹீஹ் முஸ்லிம் : 565

Tuesday, October 30, 2018

மனனம் செய்வோம் - 91



வரிசைகளை சரிசெய்தல்


سَوُّوا صُفُوفَكُمْ


தமிழில் :ஸவ்வூ ஸுஃபூஃபகும்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'(தொழுகையில்) வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! 

ஸஹீஹ் புகாரி : 723

மனனம் செய்வோம் - 90



தாடியை வளர்த்தல்


أَعْفُوا اللِّحَى


தமிழில் : அஃஃபுல் லிஹா

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

தாடியை வளரவிடுங்கள்.

ஸஹீஹ் புகாரி : 5893

மனனம் செய்வோம் - 89



மீசையை கத்தரித்தல்


انْهَكُوا الشَّوَارِبَ


தமிழில் : அன்ஹககுஷ் ஷவாரிப

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மீசையை கத்தரியுங்கள். 

ஸஹீஹ் புகாரி : 5893

மனனம் செய்வோம் - 88



கணவரின் சகோதரர்


الْحَمْوُ الْمَوْتُ


தமிழில் : அல்ஹம்உல் மவ்து

அர்த்தம் : நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 5232

மனனம் செய்வோம் - 87



அந்நிய பெண் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது


إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ


தமிழில் : இய்யாகும் வத்துஹூல அலன் நிஸாயி

அர்த்தம் : உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 5232

மனனம் செய்வோம் - 86



அல்லாஹ் ரோஷம் கொள்வான்


إِنَّ اللَّهَ يَغَارُ


தமிழில் : இன்னல்லாஹ யஃகாரு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 

நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். 

ஸஹீஹ் புகாரி : 5223

மனனம் செய்வோம் - 85



நற்செய்தி சொல்லல்


أَبْشِرُوا


தமிழில் : அப்ஷிரு

அர்த்தம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

நற்செய்தியையே சொல்லுங்கள்; 

ஸஹீஹ் புகாரி : 39

மனனம் செய்வோம் - 84



இயன்றதை செய்தல்


قَارِبُوا


தமிழில் : காரிபூ

அர்த்தம் : 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

இயன்றவற்றைச் செய்யுங்கள்; 

ஸஹீஹ் புகாரி : 39

மனனம் செய்வோம் - 83



நடுநிலை


سَدِّدُوا


தமிழில் : ஸத்திதூ

அர்த்தம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

' நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். 

ஸஹீஹ் புகாரி : 39

மனனம் செய்வோம் - 82



இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்


صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى


தமிழில் : ஸலாதுல் லைலி மஸ்னா மஸ்னா

அர்த்தம் : இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : 

நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். 

ஸஹீஹ் புகாரி : 990

மனனம் செய்வோம் - 81



சுபைர் ரலி


إِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ


தமிழில் : இன்ன ஹவாரிய்யஸ் ஸுபைருப்னுல் அவ்வாம்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் ஆவார். 

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 3719

மனனம் செய்வோம் - 80



பாத்திமா ரலியிடம் கோபம் கூடாது


مَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي


தமிழில் : மன் அgக்ழபஹா அgக்ழபனி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அவருக்குக் (ஃபாத்திமாவிற்கு) கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார். 

என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி  : 3714

மனனம் செய்வோம் - 79



பாத்திமா ரலி


فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي


தமிழில் : பாதிமது பழ்அதும் மின்னி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். 

ஸஹீஹ் புகாரி : 3714

மனனம் செய்வோம் - 78



முன்னோர்கள் மீது சத்தியம் செய்யக்கூடாது


لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ


தமிழில் : லா தஹ்லிஃபு பி ஆபாஇகும்

அர்த்தம் : இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
' நபி(ஸல்) அவர்கள், 

'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்' 
என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 3836

மனனம் செய்வோம் - 77



கதீஜா ரலி


خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ


தமிழில் : கைரு நிஸாயிஹா கதீஜதுன்

அர்த்தம் : (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். 

என அலீ(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 3815

மனனம் செய்வோம் -7 6



பெண்களில் சிறந்தவர்


خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ



தமிழில் : கைரு நிஸாயிஹா மர்யமு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம் ஆவார்.

ஸஹீஹ் புகாரி : 3815

மனனம் செய்வோம் - 75



அன்ஸாரிகளின் சிறப்பு


الْأَنْصَارُ كَرِشِي وَعَيْبَتِي


தமிழில் : அல்அன்ஸாரு கரிஷி வ அய்பதி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர்

ஸஹீஹ் புகாரி : 3801

மனனம் செய்வோம் - 74



மறுமை வாழ்க்கை நிரந்தரமானது


لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ


தமிழில் : லா அய்ஷ இலலா அய்ஷல் ஆஹிரா

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; 

ஸஹீஹ் புகாரி : 3795

மனனம் செய்வோம் - 73



முனாஃபிகின் அடையாளம்


آيَةُ النِّفَاقِ بُغْضُ الْأَنْصَارِ


தமிழில் : ஆயதுன் நிஃபாகி புக்(g)ழுல் அன்ஸாரி

அர்த்தம் : நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். 

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 3784

மனனம் செய்வோம் - 72



ஈமானின் அடையாளம்


آيَةُ الْإِيمَانِ حُبُّ الْأَنْصَارِ،


தமிழில் : ஆயதுல் ஈமானி ஹுப்புல் அன்ஸாரி

அர்த்தம் :இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்;

ஸஹீஹ் புகாரி : 3784

மனனம் செய்வோம் - 71


அன்சாரிகளை வெறுத்தால் அல்லாஹ் வெறுப்பான்



مَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ


தமிழில் : மன் அப்ஙழஹும் அப்ஙழஹுல்லாஹு

அர்த்தம் : யார் அவர்களை (அன்சாரிகளை) வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். 

என பராஉ(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 3783

மனனம் செய்வோம் - 70



அன்சாரிகளை நேசித்தால் அல்லாஹ்வின் நேசம் உண்டு


مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ


தமிழில் : மன் அஹப்பஹும் அஹப்பஹுல்லாஹு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் அவர்களை (அன்சாரிகளை) நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். 

என பராஉ(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 3783

மனனம் செய்வோம் - 69



அன்சாரிகளை வெறுப்பவன் முனாஃபிக்


الْأَنْصَارُ لَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ،


தமிழில் : அல்அன்ஸாரு லா யுப்கிழுஹும் இல்லா முனாஃபிகுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அன்சாரிகளை  நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். 

ஸஹீஹ் புகாரி : 3783

Monday, October 29, 2018

மனனம் செய்வோம் - 68



அன்சாரிகளை நேசிப்பவன் முஃமின்


الْأَنْصَارُ لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ


தமிழில் : அல்அன்ஸாரு லா யுஹிப்புஹும் இல்லா மஃமினுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; 

ஸஹீஹ் புகாரி : 3783

மனனம் செய்வோம் - 67


பறவை சகுனம்



لَا طِيَرَةَ 


தமிழில் : லா தியரத

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

பறவை சகுனம் கிடையாது
.  

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 5753

மனனம் செய்வோம் - 66



தொற்றுநோய் இல்லை


لَا عَدْوَى


தமிழில் : லா அத்வா

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

தொற்றுநோய் கிடையாது; 

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 5753

மனனம் செய்வோம் - 65




கெட்ட கனவு


الْحُلْمُ مِنَ الشَّيْطَانِ


தமிழில் : அல் ஹுல்மு மினஷ் ஷைத்தானி

அர்த்தம் : அபூ ஸலமா(ரஹ்) கூறினார் 

'(கெட்ட) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்

ஸஹீஹ் புகாரி : 5747

மனனம் செய்வோம் - 64



நல்ல கனவு


الرُّؤْيَا مِنَ اللَّهِ


தமிழில் : அர்ருஃயா மினல்லாஹி

அர்த்தம் : அபூ ஸலமா(ரஹ்) கூறினார் 

'(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். 

ஸஹீஹ் புகாரி : 5747

மனனம் செய்வோம் - 63


பச்சை குத்துவது தடை



نَهَى عَنِ الْوَشْمِ


தமிழில் : நஹா அனில் வஷ்மி

அர்த்தம் : அபூ ஹுரைரா(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்கள் பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5740

மனனம் செய்வோம் - 62



வயிற்றுப்போக்கால் இறப்பு


الْمَبْطُونُ شَهِيدٌ


தமிழில் : அல்மப்தூனு ஷஹீதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

வயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்;  

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5733

மனனம் செய்வோம் - 61



முஸ்லிம்தான் சொர்க்கம் செல்வான்


لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ،


தமிழில் : லா யத்ஹுலுல் ஜன்னத இல்லா முஃமினுன்

அர்த்தம் : அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

'இறைநமபிக்கையுள்ள அடியார்தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். 

ஸஹீஹ் புகாரி : 3062

மனனம் செய்வோம் - 60



தஜ்ஜாலும் மதீனாவும்


لَا يَدْخُلُ الْمَدِينَةَ الْمَسِيحُ


தமிழில் : லா யத்ஹுலுல் மதீனதல் மஸீஹு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்;

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5731

மனனம் செய்வோம் - 59



கோள் சொல்தல்


لَا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ


தமிழில் : லா யத்ஹுலுல் ஜன்னத நம்மாமுன்

அர்த்தம் : ஹுதைஃபா (ரலி) அவர்கள், 

"கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் 

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.- 

ஸஹீஹ் முஸ்லிம் : 168

மனனம் செய்வோம் - 58




மது வியாபாரம் ஹராம்


حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ


தமிழில் : ஹுர்ரிமதித் திஜாரது ஃபீல் ஹம்ரி

அர்த்தம் : ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, 

'மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!' என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2226

மனனம் செய்வோம் - 57



தவறான வியாபாரம்


وَلَا تَنَاجَشُوا


தமிழில் : வலா தனாஜஷு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

' (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2160

மனனம் செய்வோம் - 56



வியாபாரத்தில் குறுக்கீடு கூடாது


لَا يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ


தமிழில் : லா யபீஉ பஃழுகும் அலா பையி அஹீஹி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!' 

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2139

மனனம் செய்வோம் - 55



சிறதளவாவது தர்மம் செய்


ارْضَخِي مَا اسْتَطَعْتِ


தமிழில் : இர்ழஹி  மஸ்ததஃது

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்' 

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1434

மனனம் செய்வோம் - 54



தர்மம்


لَا تُوكِي فَيُوكَى عَلَيْكِ


தமிழில் : லா தூகி ஃப யூக அலைகி

அர்த்தம் : அஸ்மா(ரலி) அறிவித்தார். 

'நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 

'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' 

எனக் கூறினார்கள். '

ஸஹீஹ் புகாரி : 1433

மனனம் செய்வோம் - 53



பிறரிடம் தேவையற்றவனாக வாழ்தல்


مَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ


தமிழில் : மன் யஸ்தஃக்னி யுஃக்னிஹில்லாஹு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.' 

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

Sunday, October 28, 2018

மனனம் செய்வோம் 52



சுயமரியாதை


مَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ


தமிழில் : மன் யஸ்தஃஃபிஃப் யுயிஃப்பஹுல்லாஹு

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான்.  

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

Saturday, October 27, 2018

மனனம் செய்வோம் - 51




சிறந்த தர்மம்


خَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى


தமிழில் : கைருஸ் ஸதகதி அன் ழஹ்ரி ஃகினன்

தமிழில் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். 

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

மனனம் செய்வோம் - 50



நெருங்கிய உறவினருக்கு தர்மம் செய்தல்


وَابْدَأْ بِمَنْ تَعُولُ


தமிழில் : வப்தஃ பிமன் தஊலு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!  

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1427

மனனம் செய்வோம் - 49



இறந்தோரை ஏச கூடாது


لَا تَسُبُّوا الْأَمْوَاتَ


தமிழில் : லா தஸுப்புல் அம்வாத்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறந்தோரை ஏசாதீர்கள்! 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1393

மனனம் செய்வோம் - 48



ஜனாஸாவை பின்தொடர்தல்


مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ


தமிழில் : மன் தபிஅ ஜனாஸதன் ஃபலஹு கீராதுன்

அர்த்தம் :

ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு 

என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் . 

ஸஹீஹ் புகாரி : 1323

மனனம் செய்வோம் - 47



ஜனாஸாவை கண்டால் எழுந்து நின்றல்


إِذَا رَأَيْتُمُ الْجِنَازَةَ فَقُومُوا


தமிழில் : இதா ரஅய்துமுல் ஜினாஸத ஃபகூமு

அர்த்தம் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 1311

மனனம் செய்வோம் - 46




கொள்ளை நோய்மூலம் மரணம்


الْمَطْعُونُ شَهِيدٌ


தமிழில் : அல்மத்ஊனு ஷஹீதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5733

கற்பிக்கும் முறைகள்











இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...