Tuesday, October 9, 2018

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 4



மறுமை நாளின் மன்னிப்பு :


இவ்வுலகில் நாம் செய்த அனைத்து செயல்களும் ஒன்றுவிடாமல் இறைவனுடைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறிது முதல் பெரிது வரையிலான அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் செய்த செயல்களுக்காக இறைவன் நம்மை பிடித்தால் நம்முடைய நிலைமை மோசம்தான். 

ஆகவே மறுமை நாளில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று துஆ கேட்பது அவசிமாகிறது.

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

தமிழில் :ரப்பன ஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன 
யவ்ம யகூமுல் ஹிஸாப்

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! திருக்குர்ஆன்  14:41

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 3



குஃப்ரிலிருந்து பாதுகாப்பு :


இறைமறுப்பின் பக்கம் செல்லாதவாறு நம்மை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மை மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரையையும் இறை மறுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டும். சிலை வணக்கம் என்பது நம்மை நிரந்த நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடியது.

رَبِّ جْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ

தமிழில் :  ரப்பிஜ்னுப்னி வ பனிய்ய 
.அன்னஃபுதுல் அஸ்னாம்

"இறைவா! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!''  திருக்குர்ஆன்  14:35

இப்ராகிம் நபியின் பிரார்த்தனைகள் - 2




உண்மையான முஸ்லிமாக வாழ :


இறுதி வரையிலும் உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். அதற்கு இறைவனுடைய நாட்டம் மிகவும் அவசியம். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடந்தால்தான் சுவர்க்கம் செல்ல முடியும். இறைவனுடைய கட்டளைகளை பேணி நடப்பதற்கு நாம் மட்டுமில்லாமல் நம்முடைய பரம்பரைக்கும் சேர்த்தாக இந்த துஆ அமைந்திருக்கிறது.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

தமிழில் : ரப்பனா வஜ்அல்னா 
முஸ்லிமைனி லக வமின் துர்ரியதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனா ஸிகனா வதுப் அலைனா இன்னக 
.அன்த்த தவ்வாபுர் ரஹீம்

"எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. திருக்குர்ஆன்  2:128

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

தமிழில் : ரப்பிஜ் அல்னி முகீமஸ் ஸலாதி வமின் துர்ரியதி. ரப்பனா வதகப்பல் 
.துஆ

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
திருக்குர்ஆன்  14:40

நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை இறுதி வரையிலும் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த துஆ அவசியமானது. அது மட்டுமில்லாமல் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்காகவும் இந்த பிரார்த்தனை அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

இப்ராகிம் நபியின் பிரார்த்னைகள் - 1



வணக்க வழிபாடுகள் ஏற்றுக் காெள்ளப்பட :

நம்முடைய வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட இந்த துஆவை நாம் கேட்கலாம். இந்த துஆ இப்ராஹிம் நபியவர்களும் இஸ்மாயில் நபியவர்களும் கஃபத்துல்லாஹ்வை புணர் நிர்மாணம் செய்ததற்கு பிறகு கேட்ட துஆ. 

நம்முடைய வணக்கவழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது. நமமுடைய வணக்க வழிபாடுகளில் எவ்வளவு பிழைகளை செய்திருக்கிறோம் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை முடித்ததற்குப் பிறகு இந்த துஆவை கேட்பது சிறந்ததாக இருக்கும்.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

தமிழில் : ரப்பனா தகப்பல் மின்னா
. இன்னக அன்தஸ் ஸமீவுல் அலீம்

"எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'.
திருக்குர்ஆன்  2:127

Sunday, October 7, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 17




161) நாம் நல்லுணர்வை எதன் மூலம் பெற முடியும்?

நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
திருக்குர்ஆன்  16:90

162) உறுதிப்பட்ட பாதம் எப்போது சறுகிப் போகும்?

உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும். 

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும். திருக்குர்ஆன்  16:94

163) யாரிடத்தில் இருப்பது தீர்ந்துவிடும்?

உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தோருக்கு அவர்கள் செய்து வந்த நல்லவற்றின் காரணமாக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.  திருக்குர்ஆன்  16:96

164) யாருடைய முயற்சிக்கு நன்றி செலுத்தப்டும்?

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். திருக்குர்ஆன்  17:19

165) மிகப் பெரிய தகுதிகளையும் சிறப்புகளையும் கொண்டது எது?

"அவர்களில் சிலரை விட சிலரை எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப் பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும் கொண்டது.
திருக்குர்ஆன்  17:21

166) ஷைத்தானின் உடன்பிறப்புகள் யார்?

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.   திருக்குர்ஆன்  17:27

167) யாசகம் கேட்பவருக்கு எதையேனும் கொடுக்க முடியாத நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

(உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!
திருக்குர்ஆன்  17:28

168) அழகிய முடிவு எது?

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. திருக்குர்ஆன்  17:35

169) இறைவனின் வெறுப்பிற்குரியது எது?

இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.
திருக்குர்ஆன்  17:38

170) நமக்கும் காபிர்களுக்கும் இடையே மறைக்கப்பட்ட திரையை ஏற்படுத்த என்ன வழி?

நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம். திருக்குர்ஆன்  17:45

Tuesday, October 2, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 16



151) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன?

அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர். 

திருக்குர்ஆன்  15:44

152) எதிரிகள் பேசுவதன் மூலம் நமக்கு கலக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!  

திருக்குர்ஆன்  15:98

153) உயர்ந்த குணம் யாரிடத்தில்உள்ளது?

மறுமையை நம்பாதோருக்கு தீய குணம் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கோ உயர்ந்த குணம் உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  

திருக்குர்ஆன்  16:60

154) பொறுமையாளர்களுக்கு எது சிறந்தது?

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

திருக்குர்ஆன்  16:126

155) மனிதர்களுக்கு நோய் நிவாரணம் எதில் உள்ளது?

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. 

திருக்குர்ஆன்  16:69

156) தெரிந்ததற்குப் பின் எதையும் தெரியாதவராக யார் ஆகுவார்?

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:70

157) யுகமுடிவு நேரத்தின் நிகழ்ச்சி எந்த நேரத்திற்குள் நடந்துவிடும்?

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்  16:77

158) நாம் நன்றி செலுத்துவற்காக நமக்கு அல்லாஹ் எவற்றையெல்லாம் தந்தான்?

நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். 

திருக்குர்ஆன்  16:78

159) அல்லாஹ் அவனது அருட்கொடுகளை நமக்கு ஏன் முழுமைப்படுத்தினான்?

நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.  

திருக்குர்ஆன்  16:81

160) வேதனைக்கு மேல் வேதனை யாருக்கு அதிகமாக்கப்படும்?

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

திருக்குர்ஆன்  16:88

Monday, October 1, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 15





141) யூசுப் நபிக்கு எதைவிடச் சிறைச்சாலை விருப்பமானதாக இருந்தது?

"என் இறைவா! இப்பெண்கள் (விபச்சாரத்திற்கு) அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்'' என்றார்.  திருக்குர்ஆன்  12:33

142) அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைக்க நமக்கு என்ன வேண்டும்?

"இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.  திருக்குர்ஆன்  12:108

143) யாருடைய கழுத்தில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது?

நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன்  13:5

144) மின்னலும் மேகமும் எதற்காக உருவாக்கப்ட்டது?

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.

திருக்குர்ஆன்  13:12

145) நுரையை அல்லாஹ் எதற்கு உதாரணமாக காட்டுகிறான்?

வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.

திருக்குர்ஆன்  13:17

146) குர்ஆனை உண்மை என்று அறிந்தவர் தீமையை எவ்வாறு தடுப்பார்?

நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.  திருக்குர்ஆன்  13:22

147) மூஸா நபி  வழங்கப்பட்ட சான்றுகள் யாருக்கு பலனளிக்கும்?

"உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்வீராக! அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'' என்று மூஸாவை நமது சான்றுகளுடன் அனுப்பினோம்.

♦அதில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும்,
♦நன்றி செலுத்துவோருக்கும் சான்றுகள் உள்ளன.  திருக்குர்ஆன்  14:5

148) நரகவாசிகளுக்கு நரகத்தில் எந்த திசையிலிருந்து மரணம் வரும்?

அதை (சீழ் நீரை) மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. திருக்குர்ஆன்  14:17

149) முஃமின்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எதன் மூலம் நிலைப்படுத்துகிறான்?

நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

திருக்குர்ஆன்  14:27

150) ஜின்கள் எப்படிப்பட்ட நெருப்பால் படைக்கப்பட்டார்கள்?

கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.

திருக்குர்ஆன்  15:27

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...