Monday, August 4, 2025

மூஸா நபி வரலாறு

 ஏக இறைவனின் திருப்பயெரால்…



மூஸா நபியின் வரலாறு


முன்னுரை


அற்புதங்கள் நிறைந்த அற்புத வரலாறுதான் மூஸா நபியின் வரலாறு. திருக்குர்ஆனில் கூறப்பட்ட வரலாறுகளில் மூஸா நபியின் வரலாறுதான் மிகப்பெரியது. இருந்தபோதிலும் மூஸா என்ற தலைப்பில் ஒரே ஒரு அத்தியாயம் கூட இல்லை. காரணம் மூஸா நபியின் வரலாறுகள் பல அத்தியாங்களில் விரிவாக இடம்பெற்றுள்ளது. ஆகவேதான் அவர்களின் பெயரில் அத்தியாயம் இல்லை. 


மூஸா நபியின் வரலாற்றில் ஏராளமான படிப்பினைகள் நமக்குக் கிடைக்கும். 


இறைவனின் கருணை எவ்வளவு பெரியது?. 


இறைவனின் அருள் எவ்வளவு உயர்ந்தது?


எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்?


இறைவனிடம் பிரார்த்தனை செய்வதின் மகிமை என்ன?


அசத்தியம் அழிக்கப்பட்டு இறுதியில் சத்தியமே மேலோங்கும் போன்ற விஷயங்களை இந்த வரலாறு நமக்குக் கற்றுத்தரும்


இந்த வரலாற்றின் மூலம் பனூ இஸ்ரவேலர்களின் இயல்பான குணங்களையும் நம்மால் அறிந்து கொள்ளமுடியும்.


படித்துப் பாருங்கள்... படிப்பினைகளால் மூழ்கித் திழைப்பீர்கள்.


புத்தகத்தை டவுன்லோடு செய்ய

மூஸா நபி வரலாறு

செய்தது காமித்

6391653548

இஸ்தப்ரக் பதிப்பகம்







பாகம் 1 - நபியாவதற்கு முன்


எகிப்தின் சூழல்


அக்காலத்தில் எகிப்தின் அரசராக ஃபிர்அவ்ன் என்பவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்நேரத்தில் எகிப்திலுள்ள மக்கள் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு ஃபிர்அவ்னின குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் (எ)கிப்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மற்றொரு பிரிவினர் பனூஇஸ்ரவேலர்கள். இவர்கள் யகூப் நபியின் சந்ததியினர். 


யகூப் நபியின் புதல்வர்களில் ஒருவரான யூசுப் நபியின் மீது மற்ற புதல்வர்கள் பொறாமை கொண்டு அவரை ஒரு பாழுங்கிணற்றில் தூக்கி வீசினர். அப்போது அங்கு வந்த ஒரு வியாபாரக்கூட்டம் யூசுப் நபியை எடுத்துச் சென்று அவர்களை எகிப்து அமைச்சரிடம் விற்றது.


யூசுப் நபி வாலிபரானதும் அவரது அழகில் மயங்கிய அமைச்சரின் மனைவி அவரை விபச்சாரத்திற்கு அழைத்தார். ஆனால் யூசுப் நபி அதற்கு உடன்படவில்லை. ஆகவே அவள் யூசுப் நபியை சிறையில் அடைத்தாள்.


அதன்பிறகு பல வருடங்கள் கழித்து எகிப்து மன்னன் ஒரு கனவு கண்டான். அந்த கனவிற்கான விளக்கத்தை யூசுப் நபி வழங்கினார்கள். இதனால். ஆனந்தமடைந்த மன்னர் யூசுப் நபியை எகிப்தின் பொருளாதார அமைச்சராக ஆக்கினான்.


அதன்பிறகு பஞ்சகாலம் ஏற்பட்டது. யூசுப் நபியின் சகோதரர்கள் உணவு வாங்க எகிப்திற்கு வந்தனர். அப்போது யூசுப் நபி தனது சகோதரர்கள் அனைவரையும் மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டார். இவ்வாறுதான் யாகூப் நபியும் அவர்களது பன்னிரண்டு புதல்வர்களும் எகிப்திற்கு வந்தனர்.


அதன்பிறகு பல ஆண்டுகள் உருண்டோடியது. எகிப்திற்கு மன்னனாக ஃபிர்அவ்ன் என்பவன் பொறுப்பேற்றான்.


அந்த ஃபிர்அவன் கொடுங்கோலனாக இருந்தான். அவன் பனூ இஸ்ரவேலர்களை அடக்கி அவர்களை அநியாயம் புரிந்துவந்தான். அவனின் அரசவையில் ஹாமான் என்பவன் அமைச்சராக இருந்தான். ஹாமான்தான் பல்வேறு அநியாயங்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தான்.



இதுபற்றி இறைவன் தனது திருமறையில் தெரிவித்திருப்பதாவது :


ஃபிர்அவ்ன் (எகிப்து எனும்) பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். 


அதில் உள்ளவர்களை பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரை (பனூ இஸ்ரவேலர்களைப்) பலவீனர்களாக ஆக்கினான். 


அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். 


அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். 


 திருக்குர்ஆன் 28:4

 

மேற்கூறிய வசனங்களின் மூலம் அன்றைய எகிப்தில் நிலவிய சூழ்நிலையை இறைவன் நமக்குத் தெரிவிக்கிறான். 


அதில் ஃபிர்அவன் மிக மோசமான அரக்கனாக இருந்தான் என்பதுதான்இ பனூ இஸ்ரவேலர்களின் ஆண் பிள்ளைகளை கொலை செய்து பெண்களை உயிருடன் விட்டுவந்தான் என்றும்இ அவனும் ஹாமானும் சேர்ந்து தங்களது ராணுவ பலத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கினார்கள் என்பதையும் இறைவன் தெரிவிக்கிறான். 


அதைப்போல் எகிப்திலுள்ள மக்களின் நிலையையும் இறைவன் தெரிவிக்கிறான். 


அல்லாஹ் கூறுகிறான் 


(எகிப்தில் வாழ்ந்த) அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையையே பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னின் கட்டளை நல்லதாக இருக்கவில்லை.


ஜதிருக்குர்ஆன் 11:97ஸ


எகிப்தில் வாழ்ந்த மக்கள் ஃபிர்அவ்னின் கட்டளையைத்தான் பின்பற்றி வந்தார்கள். அவனது கட்டளைகள்தான் நாட்டு சட்டமாக இருந்தது. அது கெட்ட சட்டமாக இருந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் அதையே பின்பற்றி வந்தனர். ஏனெனில் அவனை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்த அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தனர்.


அப்போது அழிச்சாட்டியம் செய்த ஃபிர்அவ்னையும் ஹாமானையும் அழித்து அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்க வேண்டும் என இறைவன் நாடினான். அதற்காக மூ நபியை பிறக்கச் செய்து அவர்களை நபியாகவும் ஆக்க முடிவு செய்தான்.


இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான் :


அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் (இஸ்ரவேலர்கள்) மீது அருள் புரியவும்இ அவர்களைத் தலைவர்களாக்கவும்இ அப்பூமியில் உரிமையாளர்களாகவும் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும்இ ஃபிர்அவ்னும்இ ஹாமானும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.


 ஜதிருக்குர்ஆன் 28:5-6ஸ


பிறப்பு 


மூஸா நபியின் தாயும் தந்தையும் பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்தவர்கள். 


ஃபிர்அவ்னின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் மூஸா நபியின் தாயார் கருவுற்றார்கள். மூஸா நபியை தனது வயிற்றில் சுமந்தார்கள். 


அவர்கள் கருவுற்ற நேரத்தில் 'பனூ இஸ்ரவேலர்களில் ஆண்பிள்ளைகள் பிறந்தால் அவர்களை கொலை செய்ய வேண்டும். பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் விடப்படும்' என்று ஃபிர்அவ்னிய அரசாங்கம் சட்டம் இயற்றியது.


வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? பெண்குழந்தையா? என்பதை அறியாமல் மூஸா நபியின் தாயார் அவற்றை சுமந்தார்கள்.


அந்நேரத்தில் அவர்களின் எண்ணவோட்டம்இ 'பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும்' என்பதாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் அக்குழந்தையை ஃபிர்அவ்ன் ஒன்றும் செய்யமாட்டான்.


ஆனால் இறைவனின் நாட்டமோ வேறுவிதமாக இருந்தது. அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்களுக்கு ஆண்குழந்தைப் பிறந்தது. 


ஆண் குழந்தையைப் பார்த்ததும் மூஸா நபியின் தாயார் பயந்தார்கள். ஃபிர்அவன் தனது குழந்தையை கொலை செய்துவிடுவானோ என்று அஞ்சினார்கள். என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவித்தார்கள்.


அப்போதுதான் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் ஒரு உள்ளுதிப்பை ஏற்படுத்தினான். அவற்றை அல்லாஹ் நமக்கு எடுத்துரைக்கிறான்.


"இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தாள் இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! எதிரியானவன் (ஃபிர்அவ்ன்) இவரை எடுத்துக் கொள்வான்''  


“(கடலில் போடுவதற்கு) பயப்படாதே!கவலையும் படாதே!தாயாருக்கு அறிவித்தோம். 


திருக்குர்ஆன் 28:7இ 20:39


இந்த வசனத்தில் தாய்ப்பாலின் அவசியத்தை இறைவன் தெரியப்படுத்துகிறான்.


ஃபிர்அவ்னால் தனது குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ? என்று பயந்து கொண்டிருந்த தாயிடத்தில்இ 'பாலூட்டு' என்று இறைவன் கட்டளையிடுகிறான். அதன்பிறகுதான் 'பயப்படாதே' என்று கூறுகிறான். இதிலிருந்து தாய்ப்பாலின் மகத்துவத்தை இறைவன் தெரியப்படுத்துகிறான்.


மேலும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அல்குர்ஆன் 2:233ல் தெரியப்படுத்துகிறான்.


தாய்ப்பாலில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக தற்காலத்திய மருத்துவங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன. இதை நாம் படிப்பினையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அடுத்ததாகஇ மேற்கண்ட வசனத்தில் மூஸாவின் தாயாருக்கு இறைவன் பல வாக்குறுதிகளை அளிக்கிறான்.


மூஸா நபியைக் கடலில் போடுங்கள். கடல் மூஸா நபியை ஒன்றும் செய்யாது. பாதுகாப்பாக கரையில் சேர்க்கும்.

ஃபிர்அவன்தான் அவரை எடுத்து வளர்ப்பான்.

மூஸா நபியைத் திரும்பவும் அவரது தாயாராகிய உங்களிடம் கொண்டு சேர்ப்போம்.

மூஸாவை இறைத்தூதராக ஆக்குவாேம்


மேற்கூறிய நான்கு வாக்குறுதிகளையும் மூஸா நபியின் தாயாருக்கு இறைவன் வழங்கினான். 


இறைவன் கூறியதுபோன்று அனைத்து வாக்குறுதிகளையும் அவன் முழுமையாக நிறைவேற்றினான். அவற்றை இனிவரும் பக்கங்களில் பார்ப்போம்.


தாயாரின் மனநிலை


இறைவன் வழங்கிய உள்ளுதிப்பின் அடிப்படையில் மூஸா நபியின் தாயார் குழந்தையை ஒரு கூடையில் வைத்து கடலில் விட்டார். இருந்தபோதிலும் அவருக்கு பயமும் பதற்றமும் நீங்கவில்லை. தனது குழந்தையை நினைத்து வருந்துகிறார். தனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறார்.


அச்சமயத்தில் அவர்களின் மனநிலையைப் பற்றி இறைவன் தெரிவிக்கிறான் :


“மூசாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்காவிட்டால் அவர் (உண்மையை) வெளிப்படுத்தியிருப்பார். செய்தோம்.”


ஜஅல்குர்ஆன் 28:10ஸ


மூஸா நபியின் தாயார் தனது குழந்தையைப் பற்றிய உண்மை நிலையை யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள். முக்கியமாக ஃபிர்அவ்னிற்குத் தெரியக்கூடாது என்று பயந்தார்கள். ஆகவேதான் அவர்கள் குழந்தையை கடலில் போட்டதை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. 


ஆனாலும் அவரது மனது அமைதியடையவில்லை. அவர் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். ஏனெனில் தனது மகனை கடலில் விட்டதை தனக்குத் தெரிந்தவர்களிடம் சொன்னால் அவர்கள் மூலம் தனது மகனைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அதில் பெரும் ஆபத்து உள்ளது. ஏனெனில் ரகசியம் வெளியே கசிந்து அது ஃபிர்அவ்னிற்கு தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். ஆகவேதான் அல்லாஹ் அவனுடைய உள்ளத்தை உறுதியாக்கி யாரிடத்திலும் சொல்லாதவாறு பாதுகாத்தான்.

உயிரைப் பணயம் வைக்கும் சகோதரி


பின்னர் மூஸா நபியின் தாயாரின் உள்ளம் உறுதியானது. அவர்கள் யாரிடமும் தனது மகனை கடலில் விட்டதை சொல்லவில்லை. 


இருந்தபோதிலும் தனது மகனை எப்படியாவது காப்பற்றிவிட வேண்டும் என்றும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆகவே அவர் தனது மூத்த மகளிடம் குழந்தையைப் பின்தொடருமாறு கட்டளையிட்டார்.


அல்லாஹ் கூறுகிறான் :


 "நீ குழந்தையைப் பின்தொடர்ந்து செல்! என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார்.


எனவே அவர்கள் அறியாத வகையில் (மூசாவின் சகோதரி) தொலைவில் இருந்து (மூசாவைப்) பார்த்துக் கொண்டிருந்தாள்.”


ஜஅல்குர்ஆன் 28:11ஸ


மூஸாவின் சகோதரி செய்தது மிகவும் ஆபத்தான ஒரு பணி. ஏனெனில் 'பனூ இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தையை கொலை செய்ய வேண்டும்' என்பது அரசாங்க உத்தரவு. அந்த உத்தரவை மீறியது அரசாங்கக் குற்றம். அதற்கு துணை நிற்பதும் குற்றம்தான். 


அந்தவகையில் ஆண் குழந்தையான மூஸா நபியை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்ட அவரது சகோதரி செய்தது ஃபிர்அவ்னிய அரசாங்க குற்றமாகும். இருந்தபோதிலும் தனது சகோதரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. இதுதான் சகோதரி பாசம். 


'சகோதரியானவள் தாய்க்குப் பிறகு இன்னொரு தாயாக செயல்படுபவள்."


ஆகவேதான் நபியவர்கள்இ 'தாயின் சகோதரி தாயைப் போன்றவள்' என்று கூறியிருக்கிறார்கள்.(புகாரி 2699)


எனவே நாமும் சகோதரியின் மகத்துவத்தை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.


பிர்அவ்ன் வீட்டில் மூஸா நபி :


இறைவனின் கட்டளையை ஏற்று மூஸாவின் தாயார் மூஸா நபியை கடலில் விட்டார். கடல் பாதுகாப்பாக அவரை அழைத்துச் சென்றது. அதைப் பின்தொடர்ந்து அவரது சகோதரியும் சென்றாள். 


இறுதியில் ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரின் கையில் மூஸா நபி கிடைத்தார்கள். அவர்கள் அவரை எடுத்துக் கொண்டார்கள். 


இதன்மூலம் இறைவனின் முதல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.


குழந்தையைப் பார்த்ததும் 'இந்தக் குழந்தையைக் கொலை செய்துவிடுவோம்' என்று ஃபிர்அவ்னும் ஹாமானும் பேசி முடிவெடுத்தனர். ஆனால் ஃபிர்அவ்னின் மனைவியான ஆசியா இதற்கு உடன்படவில்லை. குழந்தையை கொலை செய்ய வேண்டாமென்று அவர்களிடம் கூறினார்கள்.


ஆசியா அம்மையார் கூறியதை இறைவன் திருமறையில் தெரிவிக்கிறான்.


"எனக்கும்இ உமக்கும் இவர் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை நாம் மகனாக்கிக் கொள்ளலாம்'' ஃபிர்அவ்னின் மனைவி கூறினார்.” 


ஜஅல்குர்ஆன் 28:9ஸ


ஆசியா அம்மையார் கூறிய இந்த வார்த்தை யூசுப் நபியை வளர்த்த அமைச்சரின் வார்த்தையை ஒத்திருந்தது. 


அல்லாஹ் கூறுகிறான் : எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் (அமைச்சர்) தமது மனைவியிடம் “இவரைக் கண்ணியமாகத் தங்க வை! முடியும்” என்று கூறினார். (அல்குர்ஆன் 12 : 21)


இதே வார்த்தையைத்தான் ஆசியா அம்மையாரும் கூறினார். ஆசியா அம்மையாரின் இந்த ஆலோசனையை ஃபிர்அவ்ன் ஏற்றுக்கொண்டான். கொலை செய்ய வேண்டும் என்ற தனது எண்ணத்தை கைவிட்டு தனது குழந்தையை வீட்டிலேயே அந்த குழந்தையை வளர்ப்பதாக முடிவு செய்தான். இதுதான் இறைவனின் மிகச்சிறந்த ஏற்பாடு. 


கொடுங்கோலனான ஃபிர்அவ்னின் வீட்டில் இரக்கத்தின் சிகரமான அவரது மனைவியை அவர் மூலம் மூஸா நபியை அல்லாஹ் பாதுகாத்தான்.


மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் ஃபிர்அவ்னும் அவனது அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களும் ஆபத்தில் மூழ்கினர். அவர்களின் நிலைமை விபரீதமானது. அவர்கள் பின்விளைவை அறியாதிருந்தனர்.


இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :


“தங்களுக்கு எதிரியாகவும்இ கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். 


ஃபிர்அவ்னும்இ ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். அவர்கள் (பின் விளைவை) அறியாதிருந்தனர்.”


ஜஅல்குர்ஆன் 28:8இ9ஸ


இவ்வாறு மூஸா நபியின் உயிர் காப்பாற்றப்பட்டது. மேலும் பாதுகாப்பான இடத்திற்கும் மூஸா நபி வந்து சேர்ந்தார்கள். ஆகவே இதன்மூலம் இறைவனின் இரண்டாவது வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டது.


(இதைப்பற்றி பின்னர் அல்லாஹ் மூஸா நபியிடம் தெரிவிக்க) "மூஸாவே எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது என் அன்பை செலுத்தினேன்" கூறினான்.


அல்குர்ஆன் 20 : 39


மீண்டும் தனது தாயிடம் வந்து சேர்ந்த மூஸா நபி


ஆசியா அம்மையாரின் பாதுகாப்பில் வந்த மூஸா நபி யாரிடமும் பால் அருந்தவில்லை. இது ஆசியா அம்மையாருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. 


அல்லாஹ் கூறுகிறான் : 


“பாலூட்டும் பெண்களிடமிருந்து (பால் அருந்தாதவாறு) முன்பே (மூசாவாகிய) அவரைத் தடுத்திருந்தோம்.”


ஜஅல்குர்ஆன் 28:12ஸ


அப்போது மூஸா நபியின் சகோதரி புத்திசாலித்தனமான காரியங்கள் செய்தார்கள். அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :


“(அப்போது ஃபிர்அவ்னின் குடும்பத்தாரிடம்) "உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்” என்று மூஸாவின் சகோதரி கூறினாள். 


ஜஅல்குர்ஆன் 28:12ஸ


மூஸாவின் சகோதரி கூறியதைக் கேட்ட ஆசியா அம்மையார் மூஸாவின் தாயாரிடம் மூஸா நபியை ஒப்படைக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். 


இதனால் மூஸாவின் தாயார் மனம் குளிர்ந்தது. இறைவனின் வாக்குறுதி உண்மை என்பதை அவர்கள் நேரிடையாகக் கண்டார்கள். 


இவ்வாறு இறைவனின் மூன்றாவது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.


இதைப்பற்றி அல்லாஹ் கூறும்போதுஇ


அவரது தாயார் மனம் குளிர்வதற்காகவும்இ அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் கண் குளிர்வதற்காகவும்இ அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரை (மூசாவை) அவரிடம் திரும்பச் சேர்த்தோம். 


எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். 


(திருக்குர்ஆன் 28:13)


மூஸா நபிக்கு கல்வியை வழங்குதல்


அதன்பிறகு மூஸா நபி நல்ல முறையில் பாதுகாப்பாக வளர்ந்தார்கள். தனது தாயின் பாலை அருந்தி திடகாத்திரமானவராக வளர்ந்தார்கள். நல்லொழுக்கமுள்ளவராகவும் வளர்ந்தார்கள். அவர்கள பருவ வயதை அடைந்ததும் அல்லாஹ் அவர்களுக்கு கல்வி ஞானத்தை வழங்கினான்.

அல்லாஹ் கூறுகிறான் :


அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்தபோது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.”


(திருக்குர்ஆன் 28:13-14)



உபத்திரத்தில் முடிந்த உதவி :


மூஸா நபியவர்கள் தனது பிறப்பிலிருந்து எகிப்திலேயே வளர்ந்து வந்தார்கள். மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற பனூ இஸ்ரவேலர்களைப் போல் அடிமையாக இருக்கவில்லை. அவர்கள் ஆசியா அம்மையாரின் பாதுகாப்பிலும் தனது சொந்த தாயின் அரவணைப்பிலும் வளர்ந்தார்கள். 


அவர்கள் சிறந்த மனிதராக திகழ்ந்தார்கள். அவர்களிடத்தில் நற்பண்புகள் மிகைக் காணப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே உதவி செய்யும் பண்புகள் அவர்களிடத்தில் இருந்தது. 


அப்போதுதான் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றது.


அல்லாஹ் கூறுகிறான் :


“(மூஸா நபி வாழ்ந்த எகிப்தின்) மக்கள் கவனமற்று இருந்த (இரவு) நேரத்தில் அவர் அங்கே சென்றார். 


அதில் ஒருவர் இவரது சமுதாயமான பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயமான கிப்தியர்களைச் சேர்ந்தவர். 


இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா (கிப்தியைச் சேர்ந்தவரை) ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. 


"இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.  


(தான் செய்த தவறை உணர்ந்த மூஸா நபி இறைவனிடம் மன்றாடினர்)


"என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்துவிட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். 


அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 


"என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்கவே மாட்டேன்'' என்றார்.


அவர் அந்நகரத்தில் (என்ன நடக்குமோ என) எதிர்பார்த்தவராக (தான் செய்ததை எண்ணி மறுநாள்) காலையில் பயந்து கொண்டிருந்தார்.


அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி (மூசாவை) அழைத்தான். 


(அப்போது) "நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார். 


பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது "மூசாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்லுங்கள் நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் தேவை'' என்று அவன் சொன்னான்.”


அல்குர்ஆன் 28:15-19


படிப்பினைகள்


மூஸா நபி பாதிக்கப்படுபவர்களுக்கு உடனே உதவி செய்யும் மனித நேயம் கொண்டவர்கள் இந்த சம்பவத்திலிருந்து வெளிவருகிறார்கள். அதனால்தான் இருவர் சண்டையிடும் போது பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். இந்த பண்புகள் நம்மிடம் வெளிப்பட வேண்டும். யாரேனும் பாதிக்கப்பட்டால்இ யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் உடனே நாம் உதவி செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


அதேசமயம் நாம் செய்யும் உதவியை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அதுவே உபத்திரமாக மாறிவிடும்.


இதனால்தான் ஒரு அறிவன் பின்வருமாறு கூறினான் :


'நல்லவனாய் இருப்பது நல்லதுதான். ஆனால் நல்லது எது? கெட்டது எது? என்று அறியாத நல்லவனாய் இருப்பது ஆபத்தானது'.


இந்த வாக்கியம் மூஸா நபியின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டதாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் நல்லது செய்ய போக இறுதியில் அது அவர்களுக்கே ஆபத்தாக மாறும் நிலையை அடைந்தது.


ஆக நாம் செய்யும் உதவியை சரியாக அறிந்து முறையாக செய்ய வேண்டும்.


மூஸா நபிஇ தான் தவறிழைத்துவிட்டதை உணர்ந்ததும் இறைவனிடம் சரணடைந்தார்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். இனிமேல் எதையும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறுதான் நாமும் தவறிழைக்கும் போது இறைவனிடம் சரணடையக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.


மூஸா நபி யாருக்கு உதவி செய்ய முனைந்தார்களோ அவரே மூஸா நபியை காட்டிக் கொடுத்தார். அதுவரையிலும் கொலை செய்தது யார்? என்பது வெளியே தெரியாமல் இருந்தது. அவர் மூலமாக அது மூஸா நபிதான் என்று மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மூஸா நபி திகைத்தார்கள்.


அதன்பிறகு நடந்ததை அல்லாஹ் கூறுகிறான் :


அண்ணாநகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து "மூசாவே! பிரமுகர்கள் உம்மைக் கொல்ல ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே (நாட்டை) விட்டு) வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்'' என்றார். 


பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்று பிரார்த்தித்தார். (திருக்குர்ஆன் 28:20-21)


மூஸா நபி பிறக்கும்போதே அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அதைப்போல் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. 


மூஸா நபி பிறந்த சமயத்தில் அவர்களின் தாயாரின் உள்ளத்தில் உள்ளுதிப்பை ஏற்படுத்திய இறைவன் அவரைக் காப்பாற்றினான். தற்போது சக மனிதரின் ஆலாசனையைக் கொண்டு அல்லாஹ் அவரைக் காப்பாற்றுகிறான். அல்லாஹ் தான் நாடியதை நாடிய விதத்தில் செய்வான்.


மூஸா நபி நாட்டைவிட்டு வெளியேறும்போது இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபடியே வெளியேறுகிறார்கள். 'அநியாயக்கார கூட்டத்தைவிட்டுத் தன்னைக் காப்பாற்றுமாறு' கோருகிறார்கள். ஆகவே அவர்களை இறைவன் காப்பாற்றினான்.


நமக்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும் நாம் இறைவனிடம் கையேந்த வேண்டும். நமது கோரிக்கையை அவனிடம் முன்வைக்க வேண்டும். அவ்வாறு நாம் அவனிடம் கோரினால் அவன் நிச்சயம் நமது கோரிக்கைக்கு பதிலளிப்பான்.


அதைப்போல் மூஸா நபி எகிப்தை விட்டு வெளியேறும்போது பயந்தவர்களாக மட்டும் வெளியேறவில்லை. மாறாக கவனமாகவும் வெளியேறினார்கள். 


இதுதான் நம்மிடத்தில் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும். நாம் நமது காரியத்தை சரியாக நிறைவேற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் இறைவனிடம் உதவியும் தேட வேண்டும். இரண்டும் முக்கியம்.


மத்யனில் மூஸா நபி :


அதன்பிறகு மூஸா நபி எகிப்திலிருந்து தப்பித்து மத்யன் என்ற ஊருக்கு வந்தார்கள். இந்த ஊர் ஃபிர்அவ்னின் கட்டுப்பாட்டில் இல்லை. 


அதன்பிறகு நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


"மூஸா மத்யன் நகருக்கு வந்த போது 'என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டக்கூடும்' என்றார்."


அல்குர்ஆன் 18:22


மூஸா நபி பிரார்த்தனைக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அவர்கள் எகிப்திலிருந்து தப்பித்துவரும் போது பிரார்த்தனை செய்ததுபோல் மத்யன் நகருக்கு வந்தபின்னும் பிரார்த்தனை செய்கிறார்கள்.


ஏனெனில் மத்யன் என்பது புதிய ஊர். அங்குள்ள மக்கள் அனைவரும் புதியவர்கள். மூஸா நபிக்கு அந்த ஊரைப்பற்றியும் தெரியாது. அங்குள்ள மக்களைப் பற்றியும் தெரியாது. ஆகவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள். 


பின்னர் இதிலிருந்து மீள்வதற்கான ஒரேவழி இறைவனிடம் சரணடைவதுதான் என்பதை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். வழிகாட்டுமாறு அவனிடம் கோருகிறார்கள். ஆகவே இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.


மூஸா நபிக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளை இறைவன் செய்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


“மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்கள் (ஆண்களைச் சேர்ந்த) ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்து (தங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்டிக் கொண்டிருப்பதை (மூஸா) கண்டார்.


அவர்களுக்கு அப்பால் பெண்களிருவர் (தமது கால்நடைகளைத்) தடுத்து நிறுத்தி ஒதுங்கி நிற்பதையும் கண்டு "உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். 


"மெய்ப்பவர்கள் விலகும் வரை எங்களால் தண்ணீர் எடுக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்" என்று அவர்கள் கூறினர். 


அவ்விரு பெண்களுக்காகவும் அவர் தண்ணீர் இறைத்து (அவர்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார்.


அல்குர்ஆன் 28 : 23


இதில் மூஸா நபியின் உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படுகிறது. அவர்கள் இயல்பிலேயே பிறருக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். 


புதிய ஊருக்கு வந்திருக்கிறோம். என்னசெய்வதென்று தெரியவில்லை. இந்நிலையில் நமக்கு யார் உதவி செய்வார்கள்? என்றுதான் நாம் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் மூ நபியோ உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். அவ்விர பெண்களும் வெட்கப்பட்டுக் கொண்டு தனியாக நிற்பதைக் கண்டு அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். இதுதான் சிறந்த நற்பண்பாகும். இந்த பண்புகளை நாமும் பின்பற்ற வேண்டும்.


மேலும் மூஸா நபி அவ்விரு பெண்களிடம் நன்றிக் கடனையும் எதிர்பார்க்கவில்லை. 


நாம் அவர்களுக்கு உதவி செய்துள்ளோம். ஆகவே அவர்கள் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மூஸா நபி எதிர்பார்க்கவில்லை. 


மூஸா நபி அவ்விரு பெண்களிடம் எந்த உதவியையும் கோரவில்லை. 


'நான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்' என்றும் அவர்கள் கேட்கவில்லை.


மாறாக அவர்களிடம் இறைவனிடம் உதவி கோரினார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


“தண்ணீர் இறைத்துக் கொடுத்தபின் மூஸா நிழலை நோக்கிச் சென்றுஇ "என் இறைவா! நீ என்மீது இறக்கியருளும் நன்மையில் நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.


அல்குர்ஆன் 28:24


மூஸா நபி அவ்விரு பெண்களிடம் உதவி கோரவில்லை. மாறாக இறைவனிடம் உதவி கோரியுள்ளனர். 


அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள்.


புதிய ஊருக்கு வந்ததும் 'எனக்கு வழிகாட்டு' என்று கேட்டார்கள். அதன்பிறகு அவ்விரு பெண்களுக்கு உதவி செய்து பின்னர் அந்த நற்பண்புகளை குறிப்பிட்டுவிட்டுஇ 'நீ என்மீது இறக்கியருளும் நன்மையால் நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்' என்று உதவி கோருகிறார்கள். 


ஆகவேதான் இறைவனும் அவர்களுக்கு உதவி செய்தான்.


அல்லாஹ் மூஸா நபியை அந்த நீர்நிலைகளுக்கு அருகில் தங்கச் செய்ததும்இ அந்நேரத்தில் அவ்விரு பெண்களும் தயங்கி நின்றதும்இ அவர்களுக்கு மூஸா நபி உதவி செய்ததும் இறைவனின் நுணுக்கமான ஏற்பாடாகும். 


நாம் இறைவனிடம் சாதாரண கோரிக்கையை முன்வைப்பதைவிட ஏதேனும் நற்காரியங்களில் ஈடுபட்டு கோரிக்கை வைப்பது சிறந்ததாகும். ஏனெனில் அதற்கு இறைவன் நிச்சயம் பிரதிபலன் வழங்குவான்.


மூஸா நபியின் வரலாற்றிலிருந்து நாம் இப்பாடத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அந்த வகையில்தான் மூஸா நபிக்கு பிறகு வாழ்ந்து வந்த மூன்று மனிதர்கள் குகையில் மாட்டிக் கொண்டார்கள். அம்மூவரும் தான் செய்த நல்லறங்களை சுட்டிக்காட்டி இறைவனிடம் உதவி தேடினார்கள். ஆகவே இறைவனும் அவர்களுக்கு உதவினான். (பார்க்க புகாரி 2215)


பின்னர் அவ்விரு பெண்களும் தங்களது தந்தையிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவிக்கின்றனர். மூஸா நபியின் நற்குணத்தை எடுத்துரைக்கின்றனர். ஆகவே அப்பெண்களின் தந்தை மூஸா நபிக்கு நன்றிக்கடன் செலுத்த விரும்புகிறோம்.


எனவே அவர் மூஸா நபியை அழைத்து வருமாறு தனது ஒரு பெண்ணிடம் ஏவுகிறார். அந்த பெண்ணும் மூஸா நபியை அழைப்பதற்காக வருகிறார்.


அதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான் :


அவ்விருவரில் ஒரு பெண் வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து" நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். 


ஆகவே மூஸா (அப்பெண்களின் தந்தையாகிய) அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். 


அதற்கு (அப்பெண்களின் தந்தையாகிய) அவர் "நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் தப்பித்து விட்டீர்'' என்று கூறினார்.


(அப்போது அங்கு ஒதுங்கி நின்று கண்டிருந்த) அவரது மகள்களில் ஒருத்தி "என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று கூறினாள். 


"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர வேண்டும். அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.  


"இதுவே எனக்கும்இ உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. அல்லாஹ்வே. பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார்.


ஜதிருக்குர்ஆன் 28:25-28ஸ


இச்சம்பவத்தில் பெண்களுக்கான படிப்பினைகள் உள்ளன. அதாவது அவ்விரு பெண்களும் அதிக வெட்கப்படக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். 


அவ்விரு பெண்களும் நீர்நிலைகளில் வெட்கத்தோடு ஒதுங்கி நின்றார்கள். மூஸா நபியை அழைப்பதற்காக வரும்போது வெட்கத்தோடுதான் வந்தார்கள். 


ஆகவேதான் அவ்விரு பெண்களுக்கும் மூஸா நபியைக் கொண்டு இறைவன் உதவி புரிந்தான். 


'மூஸா நபியை அவர்களுக்கு தண்ணீர் பிடித்துக் கொடுத்து இறைவன் அருள்புரிந்தான்.'


அதுமட்டுமில்லாமல் ஒரு நபியை கணவனாக ஏற்றுக் கொள்ளும் மிகப்பெரும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த வெட்கம்தான் முக்கிய காரணமாக அமைந்தது. 


ஆகவே பெண்கள் வெட்கம் எனும் உயரிய பண்பை பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். வெட்கம் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரும்.


இதிலிருந்து பெரும் அடுத்தப் படிப்பினை நன்றிக்கடனை நிறைவேற்றுதலாகும். 


மூஸா நபி அவ்விரு பெண்களுக்கும் உதவி புரிந்தார்கள். ஆகவே தந்தை அவர்களின் மூஸா நபிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை அழைக்கிறார்கள். அவர்களது நிலைமையைப் பற்றி விசாரித்தார்கள். பின்னர் அவர்களுக்கு நன்றிக்கடனை திருப்பி செலுத்தும் விதமாக தனது மகளையே திருமணம் செய்து வைக்கிறார்கள். இவ்வாறு நாமும் சிறந்த முறையில் நன்றிக்கடன் செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


இச்சம்பவத்தில் இறைவன் பெண்களின் அறிவாற்றலை அங்கீகரிக்கிறான். 


அதாவது மூஸா நபியை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் சிந்தனையை அந்த பெண்தான் வெளிப்படுத்துகிறாள். அதுவும் சாதாரணமாக கூறாமல்இ 'வலிமையான நம்பகமானவர்'தான் வேலைக்குத் தகுதியானவர் என்று தெரிவிக்கிறார். 


தனது மகளின் இந்த யோசனையை அவரது தந்தையும் அங்கீகரிக்கிறார்கள். 


நாம் நமது பெண் பிள்ளைகளை மிகவும் அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். அவர்களது ஆலாசனைகள் சரியாக இருக்கும்பட்டசத்தில் அவற்றை ஏற்க வேண்டும். 


இதுபோலத்தான் முஹம்மது நபியவர்களும் நடந்து கொண்டார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கை முடிந்தபிறகு 'முடியை மழித்து குர்பானி கொடுக்குமாறு' நபியவர்கள் கட்டளையிட சஹாபாக்கள் அதை நிறைவேற்றாமல் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் தனது மனைவி உம்மு ஸலமா ரலியின் ஆலோசனையைக் கேட்டு தனது தலையை மழித்து குர்பானி கொடுத்தார்கள். அதன்பிறகு மற்ற சஹாபாக்களும் நபியவர்களை பின்பற்றி நடந்தார்கள். ஆகவே வீட்டிலிருக்கும் பெண்கள் சிறந்த ஆலோசனை அளித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஷுஜைப் அவர்கள் தனது மகளை மூஸா நபிக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள்தான் பெண்ணுக்கு பொறுப்பாளர். ஆகவே அந்த திருமணத்திற்கான மஹர் தொகையையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். சுமார் எட்டு வருடம் அல்லது பத்து வருடத்தின் உழைப்பை மஹராகக் கேட்கிறார்கள். அதை மூஸா நபியும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். 


திருமணத்திற்கு மஹர் அவசியம் என்றும் அந்த மஹர் தொகை நியாயமான அளவிற்கு இருக்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் நமக்கு எடுத்துரைக்கிறது.


இதில் 'இறைவன் பிரார்த்தனைக்கு பதிலளிப்பான்' என்பதற்கான உதாரணமும் அடங்கியுள்ளது.


மூஸா நபி எகிப்திலிருந்து தப்பித்து வரும்போதுஇ "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.


அவர்கள் மத்னுக்கு வந்து ஷுஐபை சந்தித்தபின்னர் ஷுஐப் பற்றிஇ “நீர் பயப்படாதீர்!


இறைவனிடம் எந்த கோரிக்கையை மூஸா நபி முன்வைத்தார்களோ அதை ஷுஐபைக் கொண்டு இறைவன் நிகழ்த்திக் காட்டினான்.


அதைப்போல் மூஸா நபி அவ்விரு பெண்களுக்கும் உதவி செய்தபின் “என் இறைவா! இருக்கிறேன்” என்று பிரார்த்தித்தார்கள்.


அந்த பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் முகமாக இறைவன்இ ஷுஐபின் வீட்டிலேயே மூஸா நபியை தங்கச் செய்துஇ வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து திருமணமும் நடத்தி வைத்தான். இதுதான் இறைவனின் ஆற்றல்.



மூஸா நபி எத்தனை வருடங்கள் மத்யனில் வசித்தார்கள்?


மூஸா நபிக்கும் ஷுஐப் அவர்களுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூஸா நபி மத்யானில் எட்டு வருடங்கள் வசித்தார்களா? அல்லது பத்து வருடங்கள் வசித்தார்களா?


இதைப்பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


அல்லாஹ் கூறினான் :


“மூஸாவே!மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.பின் (நமது) திட்டப்படி (மீண்டும் எகிப்திற்கு) வந்து சேர்ந்தீர்.


அல்குர்ஆன் 20:40


இதில் மூ நபி எத்தனை வருடங்கள் மத்யனில் வசித்தார்கள் என்பதை இறைவன் குறிப்பிடவில்லை.


இதுபற்றி புகாரியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :


என்னிடம் 'ஹீரா'வாசியான யூதர் ஒருவர்இ 'மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்' என்று கேட்டார். 


அதற்கு நான்இ 'எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று (இதுகுறித்து) அவரிடம் கேட்கும் வரை (காத்திரு)' என்று கூறினேன். 


அவ்வாறேஇ நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். 


அதற்கு அவர்கள்இ 'அவ்விரண்டில் அதிகமானதைஇ அவ்விரண்டில் மிக நல்லதை (மூஸா நபி) நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (அனைவரும்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்கள்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2684. 


இது முஹம்மது நபியின் கூற்று அல்ல. இது இப்னு அப்பாஸ் ரலியின் கருத்தாகும். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும் போன்ற விஷயங்களை ஆய்வு செய்வது தேவையற்றது. 


மூஸா நபி எட்டு வருடங்கள் இறந்தார்களா? அல்லது பத்து வருடங்கள் இருந்தார்களா? அதில் நமக்கு எந்த படிப்பினையும் இல்லை. ஆகவேதான் இவற்றைக் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்குத் தெரியப்படுத்தவில்லை. ஆகவே அவற்றை அப்படியே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது.


















பாகம் 2 - மூஸா நபியாக

 

ஷுஐபிற்கும் மூஸா நபிக்கும் இடையிலான திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூஸா நபி மத்யானில் பல வருடங்கள் வசிக்கின்றனர். திருமணம் செய்து மனைவி பிள்ளைகளோடு அங்கு வசிக்கிறார்கள். 


ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் மூஸா நபி தனது சொந்த ஊரான எகிப்திற்கு செல்ல நாடுகிறார்கள். ஆகவே தனது மனைவியையும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு எகிப்திற்குக் கிளம்புகிறார்கள்.


துவா பள்ளத்தாக்கில்


அல்லாஹ் கூறுகிறான் :


“மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்துஇ தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார்.


“(இங்கே) காத்திருங்கள்! அல்லது நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியைக் காணலாம்” என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.


அவர் அங்கே வந்தபோது பாக்கியம் பெற்ற இடத்தில்இ வலதுபுறப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து "மூசாவே! நான் தான் மிகைத்தவனும்இ ஞானமிக்கவனும்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என அழைக்கப்பட்டார்.


ஜஅல்குர்ஆன் 28: 29இ 30ஸ


(அதன்பிறகு அல்லாஹ் மூஸா நபியிடம் பேசினான். அவன் கூறினான்)


உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா' எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.


 நான் உம்மை (நபியாக)த் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக! 


நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீரராக! 


யுகமுடிவு நேரம் வந்தேதீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாதுஇ தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!". 


ஜஅல்குர்ஆன் 20:12-16ஸ


மேலும் நெருப்பில் இருப்பவரும் (மூஸா)இ அதைச் சுற்றியுள்ளோரும் (மூசாவின் குடும்பத்தினர்) பாக்கியமளிக்கப்பட்டவர்கள்; அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்'' என்று (அல்லாஹ்வின் மூலம் வஹிச் செய்தி) அறிவிக்கப்பட்டது.


அல்குர்ஆன் 27 :8


துவா எனும் பள்ளத்தாக்குதான் மூஸாவை நபியாக்கிய இடம். மூஸா நபியை எகிப்திலிருந்து தப்பி ஓடச் செய்து துவா எனும் தூய பள்ளத்தாக்கு வழியாக மறுபடியும் எகிப்திற்கு வரும்படி அவன்தான் நாடினான். அதையும் இரவு நேரத்தில் வரும்படி செய்தான். இதுவெல்லாம் அல்லாஹ்வின் மிகச் சிறந்த ஏற்பாடு.


துவா எனும் தூய பள்ளத்தாக்கில் இறைவன் தனது தூதுச் செய்தியை வழங்கியிருக்கிறான். இது வஹிச் செய்தியின் தூய்மையை நமக்குப் பறைசாற்றுகிறது.


அல்லாஹ் தனது முதல் வஹீச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது :


நான்தான் அல்லாஹ் என்று கூறி இறைவன் தன்னை உண்மைப்படுத்துகிறான். இதன்மூலம் நாத்திகத்தைத் தகர்த்தெரிகிறான்.

என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை என்று கூறி ஷிர்க்கைத் தகர்த்தெரிகிறான்.

இதை உண்மைப்படுத்தும் விதமாக தொழுகையை நிலைநாட்டுமாறு கட்டளையிடுகிறான்.

அதன்பிறகு மறுமை நாளைக் குறித்து நினைவூட்டுகிறான். அது கட்டாயம் வந்தே தீரும். அங்கு ஒவ்வொருவரும் அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படுவார்கள். அதனால் நல்லறங்கள் நிறைய செய்ய வேண்டும். இதற்காகத்தான் அது எப்போது வரும்? என்பதை அவன் மறைத்து வைத்துள்ளான்.

மனோஇச்சையைப் பின்பற்றுபவர்களுக்கு கட்டுப்படக்கூடாது. அவ்வாறு கட்டுப்பட்டால் நமது மறுமை வாழ்க்கை வீணாகிவிடும்.

அல்லாஹ்தான் தூய்மையானவன்.


இவ்வளவு விஷயத்தையும் தனது முதல் வஹியின் மூலம் மூஸா நபி பெற்றுக் கொள்கிறார்கள். இவையனைத்தையும் ஆச்சரியத்தோடு மூஸா நபி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 


முஹம்மது நபியும் போன்ற ஆச்சரியத்தை அடைந்தார்கள். ஹிரா குகையில் வைத்து முதன்முதலாக அவர்களுக்கு வஹி இறங்கியபோது அச்சமும் நடுக்கமும் கொண்டார்கள். அதுபான்ற ஆச்சரியம்தான் மூஸா நபிக்கும் ஏற்பட்டது.


மூஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்


ஆகவே அவர்களது ஆச்சரியத்தை போக்கும் விதமாக சில விஷயங்களை இறைவன் நிகழ்த்திக் காட்டுகிறான்.


அல்லாஹ் தெரிவிக்கிறான்.


(நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.


ஜஅல்குர்ஆன் 19 : 52ஸ


"மூசாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான். 


"இது எனது கைத்தடி. இதன் மீது நான் ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் உள்ளன'' என்றார். கூறியினார். 


“மூஸாவே!நானே மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ்.


உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான் இறைவன்) 


அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. எனவே மூஸா திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். 


"மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்''. 


எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. 


நீர் அச்சமற்றவராவீர். அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான். 


 ''உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எந்தத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். 


பயத்தின்போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! 


இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும்இ அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு முக்கியமான சான்றுகளாகும்.  


"நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறிவிட்டான். (அவனிடம்) 'நீ தூய்மை பெற விரும்புகிறாயா? வழிகாட்டுகிறேன். இதனால் நீ (அவனை) அஞ்சுவாய்' எனக் கூறுவீராக!" (என இறைவன் கூறினான்.)


திருக்குர்ஆன் 28:29-32இ 27:9-12இ 79 : 19


அல்லாஹ் மூஸா நபியை சாந்தப்படுத்துவதற்காக சில அற்புதங்களை வழங்குகிறான். 


அவர்களின் கைப்பிடியை பாம்பாக மாற்றிக் காட்டுகிறான். 

அவரது கையிலிருந்து வெண்மையான ஔியை ஏற்படச் செய்கிறான். 

பயத்தின் போது விலாவை ஒடுக்கிக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். இதன்மூலம் அவர்களின் பயம் விலகியது.


இவ்வாறு அல்லாஹ் சில அற்புதங்கள் மூலம் அவர்களின் பயத்தைப் போக்கி அவர்களுக்கு உறுதியை ஏற்படுத்தினான்.


அதன்பிறகு மூஸா நபி மேற்கொள்ள வேண்டிய தூதுத்துவப் பணியை இறைவன் தெரிவிக்கிறான். அதாவது ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் சென்று இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் பணியாகும்.


இதைக்கேட்டதும் மூஸா நபி சற்றுத்திடுக்கினார்கள். 


ஏனெனில் அவர்கள் ஏற்கனவே எகிப்தில் ஒரு மனிதரை தவறுதலாகக் கொலை செய்திருக்கிறார்கள். அதனால் மக்களால் தனக்குத் துன்பம் ஏற்படுமோ என்று பயப்படுகிறார்கள். 


அதைப்போல் மூஸா நபி 'சிறந்த முறையில் தெளிவாக எடுத்துரைப்பதில்' சிக்கல் உடையவர்களாக இருந்தனர். பிரச்சாரப் பணியில் மக்களிடம் வாதம் வைப்பதில் பேச்சுத்திறமை அவசியம். அவை தன்னிடம் போதுமானதாக இல்லை என்று மூஸா நபி உணர்கிறார்கள்.


 ஆகவேதான் அவர்கள் தனது பிரச்சாரப் பணிக்காக இறைவனிடம் சில உதவிகளைக் கேட்கிறார்கள்.


ஹாருன் நபி


அல்லாஹ் கூறுகிறான்


"என் இறைவா! அவர்களில் ஓர் உயிரை நான் கொன்றுவிட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' 


"என் இறைவா! என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!. எனது பணியை எனக்கு எளிதாக்குக! முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 


"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! பலப்படுத்து! அவர் என்னை உண்மைப்படுத்துவார். எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! 


நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக (இவற்றை எனக்கு வழங்குவாயாக). 


நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய்.


என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்று மூஸா நபி கூறினார்). 


(அதற்கு) மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது.


"உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். இதன்மூலம் இன்னொரு தடவையும் உமக்கு அருள் புரிந்துள்ளோம். 


நீங்கள் இருவரும்இ உங்களைப் பின்பற்றியோருமே வெற்றியடைவீர்கள்.


ஆகவே நீரும்இ உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!  


இருவரும் ஃபிர்அவ்னிடமும் அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடமும் ஒன்பது சான்றுகளுடன் செல்லுங்கள்! அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்.


அவர்கள் வரம்பு மீறிவிட்டனர். அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸா நபியிடம் கூறினான்.


அல்குர்ஆன் 28 : 34 - 35இ 20 : 42இ 26:10இ11


இதில் மூஸா நபி மூன்று கோரிக்கைகளை இறைவனிடம் முன்வைத்தார்கள். அவை ;


நான் ஏற்கனவே ஒரு கொலை செய்திருந்தால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என அஞ்சுகிறேன். ஆகவே அவர்களிடமிருந்து எனது உயிரைக் காப்பாற்றுவாயாக

எனது நாவு சரியாக எழாது. எனக்கு சரியாகப் பேச வராது. ஆகவே எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடு. சிறந்த முறையில் பேசும் ஆற்றலை வழங்குவாயாக.

எனக்கு உதவியாக எனது சகோதரர் ஹாருனையும் நபியாக ஆக்குவாயாக. அவர் சிறந்த முறையில் பேசுவார். 


இந்த மூன்று கோரிக்கையை வைத்த பிறகு அதற்கான காரணத்தைக் குறிப்பிடும் பொழுது


நாங்கள் உன்னை அதிகமாக துடிக்க வேண்டும்

உன்னை அதிகமாக நினைவு கூற வேண்டும் என்று மூஸா நபிகள் கூறினார்கள்.


இவ்வாறு தனது கோரிக்கையை மூஸா நபி இறைவனிடம் முன்வைத்தார்கள். அவர்களின் மூன்று கோரிக்கைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டான். ஹாரூனை நபியாகத் தேர்வு செய்தார். 


அதன்பிறகு தைரியமாகச் சென்று ஃபிர்அவ்னிடமும் கிப்தியர்களிடமும் பிரச்சாரம் செய்யுமாறு அவ்விருவருக்கும் கட்டளையிடுகிறான். 


அப்போதும் மூஸா நபி தனது அச்சத்தை இறைவனிடம் வெளிப்படுத்தினர்.


அல்லாஹ் கூறுகிறான்


"என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார் 


"பிர்அவ்னிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்'' (என்று அல்லாஹ் கூறினான்.)


 "எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்'' என்று இருவரும் கூறினர். 


 "அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்''. நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான். 


திருக்குர்ஆன் 28:33-35இ 26:13-15இ 20 : 44-46


மூஸா நபி பிரார்த்தனையில் கொண்டிருந்த அதீத நம்பிக்கை இதிலிருந்து வெளிப்படுகிறது. தன்னால் இறைவனிடம் எதுவெல்லாம் கேட்கமுடியுமோ அவை அனைத்தையும் அவர்கள் கேட்கிறார்கள். ஏனெனில் அனைத்தையும் இறைவனால் வழங்கமுடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது.


ஆகவேதான் அவர்கள் இறைவனிடம்இ ஃபிர்அவ்னும் கிப்தியர்களும் என்னை பொய்யெரனக் கருதுவார்களோ என்று நான் பயப்படுகிறேன் என்று கூறுகிறார்கள்.


அதற்கு இறைவன்இ ஃபிர்அவ்னிடத்தில் மென்மையாக பிரச்சாரம் செய்யுங்கள். உங்களது பிரச்சாரத்தில் கடுமை காட்ட வேண்டாம் என்று வலியுறுத்துகிறான். நீங்கள் மென்மையாகவும் தன்மையாகவும் பிரச்சாரம் செய்தால் அவர்களால் உங்களைப் பொய்யராகக் கருத முடியாது என்று வழிகாட்டுகிறான்.


பிரச்சாரப் பணியை மேற்கொள்பவர்கள் இறைவனின் இந்த வழிகாட்டுதலைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நாம் நமது பிரச்சாரத்தை மென்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். அழகிய முறையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.


அதன்பிறகும் அவர்கள்இ ஃபிர்அவ்னால் தனக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படுவதாக கூறுகிறார்கள்.


அதற்கு இறைவன்இ பயப்படாதீர்கள்.


ஆக மூ நபி தனது இறைவனிடம் ஏராளமான பிரார்த்தனைகளை முன்வைத்தார்கள். இறைவனும் அனைத்து பிரார்த்தனைக்கும் சிறந்த முறையில் பதிலளித்தான். இதைப்போல் நாமும் நமக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடம் கேட்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


இவ்வாறு மூஸா என்பவர் நபியாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைப்பற்றி அல்லாஹ் முஹம்மது நபிக்குத் தெரியப்படுத்துகிறான்.


இவ்வேதத்தில் மூசாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும்இ தூதராகவும்இ நபியாகவும் இருந்தார். தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம். நமது அருளால் அவரது சகோதரர் ஹாரூனை நபியாக ஆக்கி அவருக்கு அன்பளிப்புச் செய்தோம். 


திருக்குர்ஆன் 19:51-53


அல்லாஹ் தனது வஹிச் செய்தியை ஜிப்ரீல் மூலம் முஹம்மது நபிக்கு வழங்கினான். மிஃராஜ் பயணத்தின் போதுதான் அவர்களுடன் நேரிடையாக உரையாடினான். ஆனால் மூஸா நபிக்கோ முதலாவது வஹிச்செய்தி வழங்கும் போதே இறைவன் அவர்களுடன் நேரிடையாக பேசினான்.


 அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். 


திருக்குர்ஆன் 4:164


இவ்வாறு இறைவன் தனது நான்காவது வாக்குறுதியையும் நிறைவேற்றினான். வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இறைவனைவிட சிறந்தவன் வேறு யாருமில்லை.


பிர்அவ்னிடம் பிரச்சாரம்


அதன்பிறகு மூஸா நபி தனது தூதுத்தவ பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். தனக்குத் துணையாக தனது சகோதரர் ஹாரூன் நபியை அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னிடம் சென்றார். அவனிடத்தில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தார்கள். 


இதுபற்றி அல்லாஹ் மூஸா மற்றும் ஹாரூன் நபிக்கு கட்டளையிட்டதை கூறுகிறான் :


(மூஸா மற்றும் ஹாரூன் ஆகிய) இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்றுஇ 


''நாங்கள் உனது இறைவனான (அல்லாஹ்வின்) தூதர்கள்.


எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! 


நேர்வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். 


பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்று கூறுங்கள்” என (இறைவன்) கூறினான். 


அல்குர்ஆன் 20:46-48


அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு மூஸா நபியும் ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடம் சென்றார்கள். அவர்களிடத்தில் மூஸா நபி பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


"ஃபிர்அவ்னே! நான் அகிலங்களின் இறைவனுடைய தூதராவேன்" என்று மூஸா கூறினார்.


“அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமல் இருப்பது (என்மீது) கடமையாகும். 


உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் வந்திருக்கிறேன். 


எனவே இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி விடுங்கள்!” (என்றும் அவர் கூறினார்.)


அல்குர்ஆன் 7 : 104இ 105


அல்லாஹ் கட்டளையிட்டப்படி தனது பிரச்சாரத்தை மூஸா நபி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் மிகவும் மென்மையான முறையில் பிரவ்னிடம் பிரச்சாரம் செய்தார்கள். அவனிடம் கடினமான வார்த்தைகளைக் கூறாமலும் அதேசமயம் உறுதியான தெளிவான வார்த்தைகளைக் கொண்டும் பிரச்சாரம் செய்தார்கள்.


இந்த பிரச்சாரத்தில் மூஸா நபி முன்வைத்த கருத்தாவது


அகிலத்தின் இறைவன் அல்லாஹ் மட்டும்தான். அவன்தான் ஃபிர்அவ்னாகிய உனக்கும் இறைவன் என்று கூறி ஏகத்துவ அழைப்பைக் கொண்டு தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

நான் அல்லாஹ்வைப் பற்றிய விஷயத்தில் பொய் கூறமாட்டேன். உண்மையை மட்டுமே பேசுபவன். ஆகவே நான் கூறும் செய்திகள் அனைத்தும் உண்மைதான்.

இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு. ஏனெனின் நீ அவர்களைத் துன்புறுத்துகிறாய். அவ்வாறு செய்வது மோசமானது என்று கூறி சமூக நீதியை எடுத்துரைக்கிறார்கள். இஸ்லாம் ஆன்மிக விஷயத்தையும் உலகக் காரியத்தையும் நேர்படுத்தும் வழிமுறையை கட்டளையிடுகிறது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.

நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இறைவனின் அமைதி கிடைக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஆகவே நீயும் நேர்வழியை ஏற்றுக்கொள் என்று அவனை ஆர்வமூட்டும் விதமாகக் கூறுகிறார்.

மாறாக நீ புறக்கணித்தால்இ இறைவனைப் பொய்யெனக் கருதினால் உனக்குத் துன்புறுத்தும் வேதனைக் கிடைக்கும். இவ்வுலகிலும் நீ அழிந்து போவாய். மறுமையிலும் அழிந்து போவாய் என்று அவனை எச்சரிக்கிறார்கள்.


இவ்வாறு மிகத் தெளிவாகவும் மென்மையாகவும் தனது அழைப்பை அவர்கள் மேற்காண்டார்கள். 


செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டுதல்


மூஸா நபியின் பிரச்சாரத்திற்கு ஃபிர்அவன் என்ன மறுமொழி கூறினான்? என்பதை அல்லாஹ் கூறுகிறான்


"(நீ) குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? 


உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான். 


 "நீர் செய்த உமது செயலையும் (கொலை) செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்'' (என்றும் அவன் கூறினான்.)


அல்குர்ஆன் 26 : 18இ 19


மூஸா நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துரைத்தார்கள். மறுமையைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் ஃபிர்அவ்னோ உலக காரியங்கள் குறித்து பேசுகிறான். அவன் மூஸா நபிக்கு உலக காரியத்தில் செய்த உதவியை சொல்லிக் காட்டுகிறான். 


குழந்தையாக இருந்த உன்னை நான்தான் எடுத்து வளர்த்தேன். 

பல வருடங்கள் என்னிடத்தில் வசித்தாய். 

ஒரு கொலையையும் செய்து தப்பித்து ஓடிவிட்டாய்.

உனக்கு நன்றி இல்லையா? நன்றி கெட்டத்தனமாக நடக்கிறாயே என்று அவன் கேட்டான்.


இங்கு ஃபிர்அவ்னோ உலக நன்மையை எதிர்பார்க்கிறான். உலக காரியங்களில் உதவி செய்து நன்றி கடனை அடைக்குமாறு கூறுகிறான். ஆனால் மூஸா நபியோ அதைவிட சிறந்த ஒன்றான மறுமையில் வெற்றிபெறும் வழியை நோக்கி அழைக்கிறார்கள்.


ஃபிர்அவ்னின் எதிர்பார்ப்பைவிட மூஸா நபியின் அழைப்பு மிகமிகச் சிறந்தது. ஆனால் ஃபிர்அவ்னுக்கோ இது புரியவில்லை. அவனது சிந்தனை உலகக் காரியத்தில் மட்டுமே சூழ்ந்து நிற்கிறது. இதுதான் இறையடியாருக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.


ஃபிர்அவ்னின் மேற்கூறிய கேள்விகளுக்கு மூஸா நபி அழகான பதிலை அளிக்கிறார்கள்.


 "நான் அறியாதவனாக இருந்த நேரத்தில் அதைச் (கொலையை) செய்தேன்''


(அதன்பிறகு) உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். 


அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களுக்கு ஒருவராக என்னை நியமித்தான்.


 "இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்!'' (என்று மூஸா பதில்) (கூறினார்)


அல்குர்ஆன் 26 : 20 - 22


ஃபிர்அவ்னிற்கு மூஸா நபி வழங்கிய இந்த பதில் அழகானது. மென்மையானது. தன்மையானது.


இங்கு மூஸா நபி பொய் கூறவில்லை. உண்மையை கூறுகிறார்கள். தான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறார்கள். 


நான் கொலை செய்தது உண்மைதான். அது தவறுதலாக நடந்தது. 

அதன்பிறகு உங்களுக்குப் பயந்து நான் உங்களைவிட்டு ஓடிவிட்டேன். இது நடந்தது உண்மைதான். நான் அவற்றை மறுக்கவில்லை. ஆனால் அப்போது நான் நேர்வழி பெற்றவனாக இருக்கவில்லை.

அதன்பிறகு இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதராகத் தேர்ந்தெடுத்தான். நான் நேர்வழி பெற்றேன்.

ஆகவேதான் உன்னிடம் பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். நீ செய்யும் தவறுகளிலிருந்து உன்னை எச்சரிக்கை செய்ய வந்துள்ளேன்.

ஆனால் நீயோ எனக்கு முன்னர் செய்த உதவிகளை சொல்லிக் காட்டி உனது அநியாயத்தை நியாயப்படுத்துகிறார். இது தவறு. உனது தவறிலிருந்து நீ திருந்திவிடு.


எவ்வளவு அழகான மறுமொழி பாருங்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனிடம் அழகிய வார்த்தையைக் கொண்டு பொறுமையாகவும் மூஸா நபி பதிலளித்தார்கள். 


மூஸா நபியின் பதிலைக் கேட்ட ஃபிர்அவ்னால் இதைப் பற்றி மீண்டும் பேசமுடியவில்லை. ஆகவே அவன் இறைவனைப் பற்றி மூஸா நபியிடம் சில கேள்விகளை முன்வைத்தான். 


அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?


அல்லாஹ் கூறுகிறான் :

 

"மூசாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான். 


"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் அதற்கு வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று மூஸா கூறினார்.


"அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான். 


"நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள்இ பூமி மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்" என்று மூஸா கூறினார்.  


தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீங்களா?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான். 


 "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்'' என்று மூஸா கூறினார்.  


"உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்'' என்று அவன் கூறினான். 


"நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்குக்கும்இ மேற்குக்கும்இ அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன்தான் இறைவன்'' என்று மூஸா கூறினார்.  


அல்குர்ஆன் 20 : 49 - 50இ 26 : 23 - 28


இதில் மூஸா நபி இறைவனைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார்கள்.


அல்லாஹ் என்பவன்இ அனைத்துப் படைப்புகளுக்கும் முறையான வடிவத்தை வழங்கி அதற்கு நேர்வழி காட்டியவன். படைத்தல் மட்டும் இறைவனது வேலையல்ல. அவற்றுக்கு நேர்வழிகாட்டுவதும் அல்லாஹ்ஃபிவின் வேலைதான் என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள்.

அகிலத்தின் இறைவன் என்றால் இந்த வானத்துக்கும் பூமிக்கும் அவருக்கு இடைப்பட்டவர்களுக்கும் இறைவனாக இருப்பவன் என்று அர்த்தம்.

அவன் உங்களுக்கும் உங்களது முன்னோர்கள் அனைவருக்கும் இறைவன் ஆவான். அதாவது ஆதம் நபியில் தொடங்கி மறுமைநாள் வரையிலும் பிறக்கப்போகிறார் அனைத்து மக்களுக்கும் அவன்தான் இறைவன்.

அவன்தான் கிழக்கிற்கும் இறைவன். மேற்கிற்கும் இறைவன். அவற்றுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் அவன்தான் இறைவன்.


இதன்மூலம் அகிலத்தின் இறைவனை மூஸா நபி அழகாக விளக்கிக் கூறுகிறார்கள்.


அதாவது பூமிக்கும் வானத்திற்கும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கும் அல்லாஹ்தான் இறைவன் என்பதன் மூலம் கீழிருந்து மேல் வரை அனைத்திற்கும் அல்லாஹ்தான் இறைவன் என்று புரிய வைக்கிறார்கள்.


கிழக்கிற்கும் மேற்கிற்கும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றிற்கும் அல்லாஹ்தான் இறைவன் என்பதன் மூலம் வலத்திலிருந்து இடது வரை அனைத்திற்கும் அல்லாஹ்தான் இறைவன் என்று புரிய வைக்கிறார்கள்.


அதைப்போல் ஆதம் நபியிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவருக்கும் அல்லாஹ்தான் இறைவன் என்பதன் மூலம் அனைத்துப் படைப்புகளுக்கும் அல்லாஹ்தான் இறைவன் என்று புரிய வைக்கிறார்கள். இவ்வாறு இறைவனைப் பற்றி முழுமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் மூஸா நபி எடுத்துரைத்தார்கள்.


அதைப்போல் இதில் இன்னொரு படிப்பினையும் உள்ளது. அதாவது மூஸா நபி இறைவனைப் பற்றி விளக்கிக் கூறும்போது ஃபிர்அவ்ன் அவர்களை கேலி செய்தான். தன்னை சுற்றியிருந்தோர்களிடம்இ மூஸா சொல்வதை கேட்டீர்களா? என்று கேலியான தோனியில் கேட்டான். பின்னர் மூஸா நபியை பைத்தியக்காரர் என்று கூறினான். ஆனால் இந்த விமர்சனம் எதுவும் மூஸா நபியின் பிரச்சாரத்திற்கு தடையாக இருக்கவில்லை. அவர்கள் ஃபிர்அவ்னின் கேலியையும் விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல் தனது பிரச்சாரத்தை தெளிவாக முன்வைக்கிறார்கள். 


இதில் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு படிப்பினை உள்ளது. இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யும் போது மூடர்களும் பித்அத்வாதிகளும் காஃபிர்களும் கேலியும் கிண்டலும் செய்வார்கள். நம்மை ஏசுவார்கள். இதற்காக நாம் மனம் துவண்டுவிடக்கூடாது. மூஸா நபியைப் பாேல் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.


அல்லாஹ்வைப் பற்றி மூஸா நபி தெளிவாக எடுத்துரைத்த பிறகு அல்லாஹ்வைப் பற்றி ஃபிர்அவ்னால் மேற்கொண்டு வாதம் செய்ய முடியவில்லை. அந்நேரத்தில் அவனது உள்ளம் எவ்வாறு இருந்தது என்பதை அல்லாஹ் தெரிவிக்கிறான்.


உள்ளங்கள் (மூஸா நபி அவர்கள் கூறிய) அவைகளை (உண்மையானவை என்று) உறுதியாக அறிந்தபோதும் அநியாயமாகவும் கர்வமாகவும் அவற்றை மறுத்தனர். 


(எனவே) குழப்பவாதிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிப்பீராக!


அல்கர்ஆன் 27 :14


மூஸா நபி உண்மையையே கூறினார்கள் என்பதற்காக பிர்அவ்னது உள்ளம் அவனுக்கு அறிவித்தது. இதன்மூலம் அல்லாஹ் மட்டுமே உண்மையான இறைவன் என்பதை அவன் தெளிவாக அறிந்து கொண்டான். இருந்தபோதிலும் அவனது கர்வம் உண்மையை ஏற்கவிடவில்லை. அவன் அநியாயமாகவும் ஆணவமாகவும் உண்மையை மறுத்தான். 


அதன்பிறகு அவன் தனது வாதத்தை வேறொரு விஷயத்தின் பக்கம் திருப்புகிறான்.


முன்சென்றவர்களின் நிலை என்ன?


"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான். 


 "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் உள்ளது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று மூஸா பதில் கூறினார். 


அல்குர்ஆன் 20 : 51இ 52


இறைவனைப் பற்றி ஃபிர்அவ்னிற்கு மூஸா நபி விளக்கினார்கள். அந்த இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்றும் அவனை நிராகரித்தவர்கள் நரகம் செல்வார்கள் என்றும் மூஸா நபி எச்சரித்தார்கள். 


ஆகவே ஃபிர்அவ்ன் மூஸா நபியை மடக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்களின் நிலையைக் குறித்துக் கேள்வி கேட்டான். மூஸா நபி கூறும் 'அகிலத்தின் இறைவனை' அறியாமல் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்களே? அவர்களின் நிலை என்ன? என்று கேட்டான்.


அதுபற்றி மூஸா நபி அழகான பதிலை அளித்தார்கள். 


முன்னோர்களின் நிலை குறித்து இறைவனின் பதிவேட்டில் உள்ளது. அவன் அவர்கள் செய்த அனைத்தையும் அதில் எழுதி வைத்துள்ளான். இவ்வுலகில் வாழும் நமக்கு மற்றவர்களின் செயல் மட்டும்தான் தெரியும். ஆனால் அல்லாஹ்விற்கோ அனைத்தும் தெரியும். அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன். அவற்றையும் அவன் பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான்.

இறைவன் மறப்பவன் அல்லன். அவன் எதையும் மறக்கமாட்டேன். மறதி என்பதே அவனுக்குக் கிடையாது.

அதைப்போல் எதையும் அவன் தவறவிடவும் மாட்டான். எதையெல்லாம் செய்யவேண்டுமோ அவையனைத்தையும் அவன் செய்துவிடுவான். அவற்றிலிருந்து எதுவும் தப்பிப் போகாது. 


இப்படிப்பட்ட இறைவன் முன்னோர்களைப் பற்றி அனைத்தையும் குறித்து வைத்துள்ளான். அவற்றில் எதையும் அவன் மறக்கவும் மாட்டான். தவறவிட்டுவிடவும் மாட்டான். ஆகவே முன்னோர்களைக் குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. உனது நிலையைக் குறித்தே நீ யோசிக்க வேண்டும் என்று ஃபிர்அவனிடம் மூஸா நபி தெளிவாக எடுத்துரைத்தார்கள்.


இறைவனின் மகத்துவம்


அதன்பிறகு அவர்கள் இறைவனின் மகத்துவத்தைப் பற்றி ஃபிர்அவ்னுக்கு எடுத்துக் கூறினார்கள்.


“அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தேன். உங்களுக்காக அந்தப் பாதைகளை எளிதாக்கினான். 


வானத்திலிருந்து தண்ணீரை இறக்கிஇ அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினான்.  


(ஆகவே அவற்றை நீங்கள்) உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை (அவற்றில்) மேய விடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 


இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்து உங்களை வெளிப்படுத்துவோம்.”


அல்குர்ஆன் 20 :53 - 55


இதன்மூலம் இறைவன் மனிதர்களுக்கு தான் செய்த அருட்கொடைகளை நினைவூட்டுகிறான். மேலும் இறைவனின் ஆற்றலையும் தெரியப்படுத்துகிறான்.


இன்று நீங்கள் பூமியில் நிம்மதியாக வாழ்வதற்கு அல்லாஹ்தான் காரணம். அவன்தான் அவற்றைப் படைத்தான். நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்காக அவன்தான் அவற்றைத் தொட்டிலாக அமைத்தான். அத்தாேடு நின்றுவிடாமல் அப்பூமியிலுள்ள பாதைகளையும் அவன் உங்களுக்காக இலகுப் படுத்திக் கொடுத்திருக்கிறான். இது எவ்வளவு பெரிய அருட்கொடை.

அதன்பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன்மூலம் பலதரப்பட்ட தாவரங்கள்இ செடிகொடிகள் மற்றும் மரங்களை முளைக்கச் செய்தான். இதன்மூலம்தான் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய அருட்கொடை.

எனவே இவற்றை நீங்களும் உண்ணுங்கள். உங்களது கால்நடைகளையும் மேயவிடுங்கள். இதன்மூலம் உங்களது ஆராேக்கியத்தைப் பாதுகாத்து இப்பூமியில் சில வருடங்கள் வாழுங்கள்.


இவ்வாறு இறைவன் தனது முக்கியமான அருட்கொடைகளை ஃபிர்அவ்னிற்கு நியமித்து பின்னர் தனது ஆற்றலைப் பற்றித் தெரிவிக்கிறான்.


இப்பூமியிலுள்ள மண்ணைக் கொண்டுதான் உங்களைப் படைத்தேன்.

இப்பூமியில்தான் நீங்கள் வாழ்வீர்கள்

இப்பூமியில்தான் நீங்கள் மரணிப்பீர்கள்.

அதன்பிறகு இப்பூமியில்தான் உங்களை மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவோம்.


ஆகவே நீங்கள் மரணித்ததற்குப் பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள். இது இறைவனுக்கு இலகுவானது. ஏனெனில் அவன்தான் ஒன்றுமில்லாததிலிருந்து உங்களைப் படைத்தான். அப்படிப்பட்டவனுக்கு உங்களை உயிர்கொடுத்து எழுப்புவது இலகுவானதே.


இவ்வளவு தெளிவான வாதம் வைத்த பிறகும் ஃபிர்அவன் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.


இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான் :


நமது சான்றுகள் அனைத்தையும் ஃபிர்அவ்னுக்குக் காட்டினோம். ஆனால் அவன் (அவைகளைப்) பொய்யெனக் கூறிஇ ஏற்க மறுத்தான்.


அல்குர்ஆன் 20 : 56


அவனது அமைச்சரவையைச் சேர்ந்தவர்களும் இதை மறுத்தனர். அவற்றை சூனியம் என்று கூறினர்.


ஃபிர்அவ்ன்இ ஹாமான்இ காரூன் ஆகியோரிடம் மூசாவை நமது சான்றுகளுடனும்இ தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பி வைத்தோம். 


“(இவர்) பெரும் பொய் சொல்லும் சூனியக்காரர்” என்று அவர்கள் கூறினர்.


அல்குர்ஆன் 40 : 24


இறைத்தூதை காஃபிர்கள் மறுக்கும் முறை


மூஸா நபியின் இந்த பிரச்சாரத்திற்கு ஃபிர்அவ்னால் பதிலளிக்க முடியவில்லை. அவன் திகைத்து நின்றான். அப்போது அவனது கிப்தி இனத்தைச் சேர்ந்த அரச பிரமுகர்கள் இதை சூனியம் என்று கூறி திசை திருப்ப முனைந்தார்கள்.


“இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. 


அதற்கு மூஸாவோஇ "தன் இறைவனிடமிருந்து நேர்வழியைப் பெற்று அதைக் கொண்டு வந்திருப்பவர் யார் என்றால் யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றிபெற மாட்டார்கள்'' என்று கூறினார்.  


அல்குர்ஆன் 28 : 36-37


மூஸா நபி கூறிய தெளிவான ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு கிப்தியர்களால் பதிலளிக்க முடியவில்லை. ஆகவேதான் அவர்கள் அவசியம் சூனியம் என்று கூறினர். 


இதேபோலத்தான் முஹம்மது நபியின் காலத்திலும் நடைபெற்றது. மக்கத்து காஃபிர்களால் முஹம்மது நபியின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியவில்லை. ஆகவே அவர்கள் முஹம்மது நபியை சூனியக்காரர் என்று கூறினர்.


(நபியே!) உம்மிடம் அவர்கள் செவியேற்கும்போது எதைச் செவியேற்கிறார்கள் என்று அந்த அநியாயக்காரர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசுகையில்இ “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” என்று கூறுவதையும் நாம் நன்கறிவோம்.


அல்குர்ஆன் 17 :47


மேலும் கிப்தியர்கள் தங்களது வழிகேட்டுக்குத் துணையாக தங்களது மூதாதையர்களை அழைத்துக் கொண்டனர். 'எங்களது முன்னோர்கள் இறைவனைப் பற்றி இவ்வாறு எங்களிடம் கூறவில்லை. ஆகவே நீ சொல்வது பொய்' என்கிற தோனியில் மூஸா நபிக்கு அவர்கள் பதிலளித்தனர்.


இதுதான் காலம்காலமாக காஃபிர்களும் இணைவைப்பாளர்களும் வழிகேடர்களும் முன்வைக்கும் வாதம். அனைத்து வழிகேடர்களும் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முன்னோரின் வழிகேட்டதைத்தான் துணைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோன்ற வழிமுறையைத்தான் கிப்தியர்களும் அவர்களின் தலைவனான ஃபிர்அவனும் கடைபிடித்தான். 


இதற்கும் மூஸா நபி தெளிவான பதிலை வழங்கினார்கள். 


அதாவது நான் இறைவனிடமிருந்து நேர்வழியைப் பெற்று வந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ முன்னோர்களின் வழிமுறைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதை மறுமையில் பார்க்கலாம். இவ்வுலகில் அநீதி இழைப்பவர்கள் மறுமையில் நிச்சயம் வெற்றி பெறமாட்டார்கள் என்று நெத்தி பொட்டில் அடித்தாற்போல் பதிலளித்தார்கள்.


இவ்வளவு எடுத்து சொல்லியும் கிப்தியர்கள் கேட்பதாயில்லை. அவர்கள் நேர்வழியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். நிலையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்


"அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர்."


அல்குர்ஆன் 23 : 46


அவர்கள் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் அவர்களின் பெருமைதான். அவர்கள் பெருமையடித்துத் திரிந்தனர். எப்படி ஷைத்தான்களின் தலைவனான இப்லீஸ் பெருமையடித்து வழிதவறினானோ அப்படி கிப்தியர்களும் பெருமையினால் வழிதவறினார்கள். எகிப்தை ஆட்சி செய்து வந்தது அவர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியது. ஆகவேதான் அவர்கள் வழிதவறினர்.


பெருமையால் சத்தியத்தை ஏற்க மறுத்தல்


பெருமை அவர்களை என்னவெல்லாம் செய்யவில்லை என்பதை இறைவன் கூறுகிறான்.


 "இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர். 


அவ்விருவரையும் அவர்கள் பொய்யரெனக் கருதினர். 


"எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும்இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் வந்திருக்கிறீரா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்புவோர் அல்லர்''


அல்குர்ஆன் 10 : 78இ 23 : 47


இந்த இடத்தில் அவர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்தை வைத்து பெருமையடித்தனர். கிப்தியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் பனூ இஸ்ரவேலர்கள் அவர்களின் ஆட்சிக்குக் கீழே இருந்ததால் அவர்களை அடிமைகள் என்றும் கருதினர்.


ஆகவேதான் மூஸா மற்றும் ஹாரூன் ஆகியோர் பனூ இஸ்ரவேலர்களாக இருப்பதால் அவர்களை நம்பமாட்டோம் என்று கிப்தியர்கள் கூறுகின்றனர். 


அவர்கள் அவ்விர தூதர்களை நிராகரித்தனர். அவ்விருவரையும் பொய்யரெனக் கூறினர்.


மேலும்இ முன்னோர்களின் வழிமுறையைவிட்டு எங்களைத் திசை திருப்புவதற்காகவும் நீங்கள் ஆட்சியதிகாரத்தைப் பெருவதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார் செய்கிறீர்களா? என்று அவ்விரு தூதர்களை நோக்கி அவர்கள் கேட்டனர்.


இதிலிருந்து அவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே விரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவேதான் அவர்கள் சத்தியதனத்தை நிராகரிக்கிறார்கள்.




கேலி செய்த ஃபிர்அவ்ன்


இவ்வாறு ஆட்சிக்கட்டிலில் இருந்து கிப்தியார்கள் மூஸா நபியை நிராகரித்தனர். 


அதன் பிறகு ஃபிர்அவனும் தனது பங்கிற்கு பெருமையடித்தான். 


அல்லாஹ் கூறுகிறான் 


  "பிரமுகர்களே! உங்களைத் தவிர வேறு கடவுள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்.


 "ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு (செங்கலாக்கி) எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான். 


அவனும்இ அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர். 


அல்குர்ஆன் 28 : 38 - 39


ஃபிர்அவ்ன் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டான். தன்னைத்தான் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.


அடுத்து தனது அமைச்சரான ஹாமானிடம் உயர்ந்த மாளிகையை கட்டுமாறு கேலியாகக் கூறினான். வானம் அளவுக்கு மாளிகையை கட்டி அதில் ஏறி அல்லாஹ்வைப் பார்க்கப் போகிறேன் என்று கூறினான்.


இவ்வாறு ஃபிர்அவ்ன் பேசியதற்குக் காரணம் அதிகாரத் திமிரே. ஆட்சியாளனாக இருப்பதனால் அவன் உண்மையை ஏற்க மறுத்து அவற்றில் பிடிவாதமாக இருந்தான். 


மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை அவன் நம்பாமல் இருந்ததால்தான் இவ்வளவு அட்டூளியத்தையும் மேற்கொண்டான். ஆனால் உண்மை இதற்கு மாற்றமாக உள்ளது. அதை ஃபிர்அவ்ன் உணராமல் இருந்தான்.


அதன்பிறகு நடந்த உரையாடலை இறைவன் தெரிவிக்கிறான்இ 


அவரிடம் “மூஸாவே! நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்றே எண்ணுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.


(அதற்கு மூஸாவோ) “வானங்கள்இ பூமியின் இறைவனே இவற்றைத் தெளிவான சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ நன்கறிவாய்! 


ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என உறுதியாக உள்ளது” என்று கூறினார்.


அல்குர்ஆன் 17 : 101 - 102


மூஸா நபியின் பிரச்சாரத்தையும் அற்புதத்தையும் ஃபிர்அவ்ன் மீண்டும் மீண்டும் மறுத்தான். அவற்றை அவன் சூனியம் என்று கூறிக்கொண்டே இருந்தான். ஆகவேதான் அவனுக்கு மூஸா நபி பதிலடி வழங்கினார்கள்.


அதாவது நான் கொண்டுவந்திருப்பது சூனியம் அல்ல. அது தெளிவான சான்று. அதை இறைவனிடமிருந்து கொண்டுவந்துள்ளேன். இவற்றை நீ நம்ப மறுத்ததால் நிச்சயமாக நீ அழிக்கப்படுவாய் என்று அவனை எச்சரித்தார்கள்.


ஃபிர்அவ்னின் மிரட்டல்


எனவே அவன் மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் மிரட்ட ஆரம்பித்தான். அதை அல்லாஹ் திருமறையில் தெரிவிக்கிறான்.


"என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான். 


அல்குர்ஆன் 26 :29


ஃபிர்அவ்ன் ஆட்சியாளராக இருந்ததால் மூஸா நபியை மிரட்டினான். தன்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்தினான். ஆனால் மூஸா நபியோ அதற்கு சிறிதும் பயப்படவில்லை. மாறாக ஃபிர்அவ்னிடம் உறுதியான பதிலையே கூறினார்கள். அதை அல்லாஹ் தெரிவிக்கிறான் 


மூஸா நபி நிகழ்த்திய அற்புதங்கள்


அல்லாஹ் கூறுகிறான் :


"தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?'' (நீ என்னை சிறையில் அடைப்பாய்) என்று மூஸா நபி ஃபிர்அவ்னிடம்) கேட்டார். 


"நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான். 


அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையான பெரிய பாம்பாக ஆனது. 


தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. 


அல்குர்ஆன் 26 : 31 - 33


அல்லாஹ் மூஸா நபிக்கு கொடுத்தனுப்பிய அற்புதங்களை மூஸா நபி ஃபிர்அவ்னுக்கு எடுத்துக் காட்டினார்கள்.


கைத்தடியைப் போட்டார்கள். அது உண்மையான பெரிய பாம்பாக மாறியது. தனது சட்டைப் பையிலிருந்து தனது கையை வெளியே எடுத்தார்கள். அவர்களின் கையிலிருந்து பிரகாசமான வெளிச்சம் ஏற்பட்டது.


இவ்வாறு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் ஃபிர்அவ்னுக்கும் அவனது சபையோருக்கும் எடுத்துக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த அவர்கள் மலைத்து நின்றார்கள். ஆனாலும் அவர்களின் கர்வமும் அரசதிகாரமும் அவற்றை மறுக்கச் செய்தது. அவர்கள் அவற்றை ஏற்கவில்லை. அவற்றை மறுத்தார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


நமது சான்றுகள்இ பார்க்கின்ற விதத்தில் அவர்களிடம் வந்தபோது “இது பகிரங்கமான சூனியமே!” எனக் கூறினார்.


மேலும் அவர்கள் அவற்றைப் பார்த்து சிரித்தனர்.


அல்குர்ஆன் 27 : 13இ 43 : 47


ஃபிர்அவ்னின் சபையோர்கள் அனைவரும் மூஸா நபி செய்து காட்டிய அற்புதத்தை சூனியம் என்று கூறி மறுத்தனர். அதுமட்டுமில்லாமல் அவற்றைப் பார்த்து ஏகத்தாளமாக சிரித்தனர். ஏனெனில் அவர்கள் அவற்றை சூனியம் என்றே நம்பினர். ஆகவேதான் ஃபிர்அவ்னும் தைரியமாக அதை மறுத்தான்.


அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :


அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.


அல்குர்ஆன் 20 : 56


மூஸா நபி செய்து காட்டிய அற்புதத்தை ஃபிர்அவ்னிய சபையோர்கள் சூனியம் என்று கூறியதால் மூஸா நபியின் அற்புதத்தை ஃபிர்அவ்ன் பொய்யென கருதினான். ஆகவேதான் அவன் அவற்றை மறுத்தான்.


எனவே ஃபிர்அவ்னும் தனது சபையோரிடத்தில் மூஸா நபி செய்ததை சூனியம் என்று கூறுகிறான்.


சூனிய போட்டிக்கு தயாராகுதல்


அல்லாஹ் கூறுகிறான் :


"(மூசாவாகிய) இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' 


"இவர் தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நினைக்கிறார். 


(ஆகவே இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் ஃபிர்அவ்ன் கேட்டான். 


(அதற்கு சபையோர்கள்) "இவருக்கும்இ இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக! சூனியக்காரனையும் உம்மிடம்! கொண்டு வருவார்கள்'' (என்று பதில் கூறினார்). 


"மூசாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?'' 


 "இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! நீரூம் மீறாதிருப்போம்'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான்


"பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்'' என்று மூஸா நபி கூறினார்.  


அல்குர்ஆன் 26 : 34 - 37இ 20 : 57 - 59


மூஸா நபி செய்து காட்டிய அற்புதத்தை ஃபிர்அவ்னால் மறுக்கமுடியவில்லை. ஆகவே அவன் தேவை சூனியம் என்று கூறினான். மூஸா நபியை திறமைமிக்க சூனியக்காரர் என்று கூறினான். 


மூஸா நபி விஷயத்தில் வாதத்தைக் கொண்டு ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்த அவன் மூஸா நபியை என்ன செய்யலாம் என்று சபையோரிடம் கேட்டான். அதாவது அவரை சிறையிலடைக்கலாமா? அல்லது அவருக்கு மரண தண்டனை வழங்கலாமா? அல்லது வேறு என்ன செய்யலாம்? என்பது பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார்.


ஆனால் அவர்களோ மூஸா நபிக்கு அவகாசம் வழங்குவோம் என்று கூறினர். ஏனெனில் அவர்கள் சூனியத்தின் மீது அபார நம்பிக்கையை வைத்திருந்தனர். சூனியத்தின் மூலம் மூஸா நபியை வீழ்த்தி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டனர். ஆகவே அவர்கள் சூனியப் போட்டியை நடத்துமாறு ஃபிர்அவ்னிற்கு ஆலோசனை கூறினார். அதனடிப்படையில் ஃபிர்அவ்னும் மூஸா நபியை சூனியப் போட்டிக்கு அழைத்தான் 


அதற்கு மூஸா நபியோ தைரியமாக சம்மதம் தெரிவித்தார். பண்டிகை நாளில்இ மக்கள் முன்னிலையில் முற்பகல் நேரத்தில் போட்டி வைத்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.


அனைத்து மக்களையும் திரட்டி பண்டிகை நாளில் போட்டியை நடத்துவோம் என்றும் அதை முற்பகலில் செய்வோம் என்றும் மூஸா நபி கூறியதில் நுட்பங்கள் அடங்கியுள்ளது.


பண்டிகை நாளில்தான் அனைத்து மக்களும் ஒன்றுதிரள்வார்கள். அன்று யாரும் வேலைக்கு செல்லமாட்டார்கள் ஒட்டுமொத்த ஊரும் திரும்ப வருவதற்கு பண்டிகை நாள்தான் சரியானது. 


அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் மூஸா நபி இவ்வாறு செய்தார்கள்.


அதைப்போல் சூனியம் என்பது ஏமாற்று வித்தையாகும். பெரும்பாலான ஏமாற்றுவித்தைகள் இருட்டில்தான் நடத்தப்படும். ஆகவேதான் மூஸா நபி நன்கு வெளிச்சமாக இருக்கும் முற்பகல் நேரத்தை தேர்வு செய்தார்கள்.


ஃபிர்அவ்னும் அவனது சபையோரும் சூனியத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். மூஸா நபியும் ஹாருன் நபியும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். இருவரும் போட்டிக்கு சம்மதம் தெரிவித்தனர்.


அதன்பிறகு நடந்ததை இறைவன் தெரிவிக்கிறான்.


ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப்படுத்தினான். பின்னர் வந்தான். 


அப்போது அவர்களிடம் மூஸா நபிஇ "உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்! அழிப்பான். இட்டுக்கட்டியவன் நட்டமடைந்து விட்டான்'' என்று கூறினார்கள்.  


அல்குர்ஆன் 20 : 60 - 61


சூனியப் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் வரையிலும் மூஸா நபி ஃபிர்அவ்னிடம் அல்லாஹ்வைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார்கள். ஃபிர்அவ்ன் தனது சூழ்ச்சிகளை ஒருமுகப்படுத்திய பின்னரும் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவுகூர்ந்தனர். அவனை எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அவன் எதற்கும் செவிசாய்க்கவில்லை.


சபையோரின் கலந்தாலோசனை


அதன்பிறகு சூனியப் போட்டிக்காக சபையோர்கள் கலந்தலோசனை செய்தார்கள். அவற்றை இறைவன் தெரிவிக்கிறான்.


அவர்கள் தமது காரியத்தில் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர். 


"இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை பூமியிலிருந்து வெளியேற்றுகின்றனர். சிறந்த வழிமுறைகளை அழிக்கவும். நினைக்கின்றனர்'' என்று அவர்கள் தங்களுக்குள் கூறினர்.  


"உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்'' (என்றனர்). 


அல்குர்ஆன் 20: 62 - 64


அவர்களின் வழிமுறைகள் தவறானது என்பது நன்றாகத் தெரியும். இருந்த போதிலும் அவர்கள் சிறந்த வழிமுறைகளை கூறுகின்றனர். காரணம் அவர்கள் பெற்றிருந்த ஆட்சியதிகாரம்தான். அவற்றை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. ஆகவேதான் அவர்கள் அவர்களை விடாப்பிடியாக இருந்தனர். 


மேலும் அவர்கள்இ சூனியப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் அதில் வெற்றி பெற்றால் மூஸா நபியை மிகைத்து விடலாம் என்றும் எண்ணினார்கள். ஆகவே அவர்கள் சூனியப் போட்டிக்கு தயாரானார்கள்.





அப்போது ஃபிர்அவ்ன் தனது சபையோரிடம்இ


“நன்கு அறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று கூறினான். (10:79)


ஆகவே அவர்கள் நாட்டிலுள்ள மிகப்பெரும் சூனியக்காரர்களை சந்தித்து அவர்களை அழைத்து வர திட்டமிட்டார்கள். அதற்கான வேலையிலும் பட்டம். 


இறுதியில் அவர்கள் சூனியக்காரர்களை அழைத்து வந்தார்கள். 


குறிப்பிட்ட நாளில்இ நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டனர். (26:38)


அப்போது ஃபிர்அவ்னின் ஆட்கள் மக்களை மக்களிடம் அழைத்து கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.


சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா? என்று மக்களுக்கு கூறப்பட்டது.


அதற்கு மக்கள்இ


'சூனியக்காரர்கள் வென்றுவிட்டால் நம்மைப் பின்பற்றலாம்" (என்று கூறினார்.)


அல்குர்ஆன் 26 : 39 - 40


பின்னர் சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் தங்களுக்கான கூலியைக் குறித்துப் பேசினார்கள்.


சூனியக்காரர்கள் வந்தபோது அவர்கள் ஃபிர்அவ்னிடம்இ “நாங்கள் வெற்றியாளர்களாகி விட்டால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.


“ஆம்! அப்போது நீங்களே (எனக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவர்கள் ஆவீர்கள்” என அவன் கூறினான்.


அல்குர்ஆன் 26 : 41 - 42

சூனியப் போட்டி


அதன்பிறகு குறிப்பிடப்பட்ட பண்டிகை நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியப் போட்டி நடக்கும் இடத்திற்கு ஃபிர்அவ்னும் அவனது சபையோரும் சூனியக்காரர்களும் வந்து சேர்ந்தார்கள். அதைப்போல் மூஸா நபியும் ஹாரூன் நபியும் வந்தார்கள். மக்களும் ஒன்று திரண்டார்கள்.


அப்போது மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் இடையில் நடந்த சம்பவங்களை இறைவன் தெரிவிக்கிறான்.


"மூசாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.  


அதற்கு மூஸாவோ "இல்லை! "நீங்கள் போட வேண்டியதை நீங்களே (முதலில்) போடுங்கள்!" எனக் கூறினார்.


அவர்கள் தமது கயிறுகளையும்இ கைத்தடிகளையும் போட்டார்கள். (சூழ்ச்சிகளின் மூலம்) மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். 


(இவ்வாறு) பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். 


(தங்களது சூனியத்தை வெளிப்படுத்திய பின்னர் அவர்கள்) "ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நாங்களே வெல்பவர்கள்'' என்றனர். 


அவர்கள் (தங்கள் வித்தையைப்) போட்ட போது "நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ். மேலோங்கச் செய்வதில்லை'' என்று மூஸா கூறினார்.


அதன்பிறகு அவர்களின் கயிறுகளும்இ கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல மூஸா நபிக்குத் தோற்றமளித்தது.


ஆகவே மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.  


"அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்'' என்று (அல்லாஹ்வாகிய) நாம் கூறினோம்.


 "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். 


அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.) 


 உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுந்து விட்டது.


உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. 


அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.  


திருக்குர்ஆன் 7:116-119இ 10 : 80இ 20 : 65 - 69இ 26:44-45.


இதன்மூலம் சூனியம் என்பது வெறும் பொய்தான் என்றும் இறைவனின் அற்புதங்கள்தான் உண்மையானவை என்றும் இறைவன் தெரிவிக்கிறான். 


இறைவனின் அற்புதங்கள் குறித்து 'உண்மை நிலைத்தது' என்று அல்லாஹ் கூறியதிலிருந்து சூனியம் என்பது பொய்தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


இவ்விரண்டிற்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகளை இவ்விடத்தில் இறைவன் புரிய வைக்கிறான்.


அதேப்போல் தற்காலத்தில்கூட சூனியத்திற்கு அஞ்சக்கூடிய நிறைய மக்களைக் காணமுடிகிறது. ஆனால் உண்மையில் சூனியம் என்பது அஞ்சத்தகுந்தது அல்ல.


சூனியக்காரர்களின் சூனியத்தைப் பார்த்து மூஸா நபியும் மக்களும் அஞ்சினார்கள். அப்போது அல்லாஹ் மூஸா நபியிடம்இ 'அஞ்சாதீர்' என்று கூறினான். ஏனெனில் சூனியம் என்பது அஞ்சத்தக்கதல்ல.


அதையும் மீறி சூனியமானது நமக்கு அச்சத்தைத் தந்தால் இறைவனின் அற்புதங்களைக் கொண்டு சூனியத்தை வெல்ல வேண்டும். மூஸா நபி இறைவனின் அற்புதத்தைக் கொண்டு சூனியக்காரர்களின் சூனியத்தை இல்லாமலாக்கினார்கள். அதுபோல நாமும் இறைவனின் அற்புதமான திருக்குர்ஆனைக் கொண்டு சூனியத்தை இல்லாமலாக்க வேண்டும்.


இதைக்குறித்து அல்லாஹ் கூறுகிறான் :


 குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிலைநாட்டுவான். (10:82)


இவ்விடத்தில் சூனியம் என்பது பொய்தான் என்றும் அதற்கு அச்சப்படத் தேவையில்லை என்றும் இறைவனின் கட்டளையைக் (திருக்குர்ஆன்) கொண்டு அவற்றை முறியடிக்க முடியும் என்றும் இறைவன் தெரிவிக்கிறான்.

 

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றல் :


போட்டியில் நடைபெற்ற சூனியத்தை ஃபிர்அவ்ன் வேடிக்கைதான் பார்த்தான். ஆனால் அதை செய்தவர்கள் சூனியக்காரர்களே. அவர்களின் சூனியம் ஏமாற்று வித்தை என்பது நன்கு தெரியும். ஆகவேதான் அவர்கள் மூஸா நபியின் அற்புதத்தை உண்மை என்று நம்பி உடனே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.


அல்லாஹ் கூறுகிறான் :


 உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்துஇ "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்புவோம்'' என்றனர்.


அல்குர்ஆன் 7 : 122இ 20 : 70இ 26 : 48.


அதுவரையிலும் சூனியக்காரர்களாக இருந்தவர்கள் போட்டியில் தோற்றதும் முஃமினாக மாறுகிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.


சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஃபிர்அவ்ன் கடும் கோபம் கொண்டான். ஆகவே இஸ்லாத்தை ஏற்ற அவர்களை அவன் பயமுறுத்தினான்.


 "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே அவரை நீங்கள் நம்பி விட்டீர்களா?" 


அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். இது இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) பின்னர் அறிந்து கொள்வீர்கள்! 


எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டிஇ உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும்இ நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.


அல்குர்ஆன் 7: 123-124இ 20: 71இ 26 :49.


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை ஃபிர்அவ்ன் கடுமையாக எச்சரிக்கிறான். 


நான் அனுமதிப்பதற்கு முன்பே நீங்கள் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்கலாம்? என்று அவன் கேட்டான். இது அவன் ஆணவத்தில் மூழ்கி திளைத்ததை வெளிப்படுத்தியது. ஆட்சியதிகாரம் அவனது கண்ணை மறைத்தது.


அதுமட்டுமில்லாமல் அவன் இறைவனின் அற்புதத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சூனியக்காரர்கள் நிகழ்த்திய சூனியத்தைவிட மூஸா நபியின் அற்புதம்தான் மிகப்பெரும் சூனியம் என்று அவன் கூறுகிறான். ஆகவேதான் அவன்இ 'சூனியக்காரர்கள் அனைவருக்கும் மூஸா நபிதான் குரு' என்று கூறுகிறான். 


அதன்பிறகு அவன் அவர்களை மிரட்டுகிறான். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக தெரிவிக்கிறான். மாறு கால் மாறு கை எடுத்து சிலுவையில் அறைவதாக மிரட்டுகிறான்.


இருந்தபோதிலும் கொடுங்கோல் ஆட்சியாளரான ஃபிர்அவ்னின் மேற்கூறிய அச்சுறுத்தலுக்கு முஸ்லிம்கள் சிறிதும் அஞ்சவில்லை. அவர்கள் அப்போதுதான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே தங்களது உயிரையே தியாகம் செய்ய அவர்கள் முன்வந்தனர்.


அவர்களிடம் ஆணித்தரமான பதிலைக் கூறினார்.

 

 "(நீ வழங்கும் தண்டனையால் எங்களுக்கு) கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்''. 


"எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்"


ஆகவே எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும்இ எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. 


நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்.


"நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை இறைவன் மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் ஆசைப்படுகிறோம்'' 


"எங்கள் குற்றங்களையும்இ நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' 


தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். 


நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன. அவர்களுகாக்காவே நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.  


 "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' (என்றும் அவர்கள் கூறினர்.) 


அல்குர்ஆன் 7 : 126இ 20 : 72-76இ 26 : 50 - 51.


சூனியக்காரர்களாக இருந்து பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் இந்த உறுதியைப் பார்த்து ஃபிர்அவ்ன் திகைத்து நின்றான். அவன் கோபத்தின் உச்சிக்கு சென்றான். ஆகவே அவன் அவர்களை மாறுகால் மாறுகை வெட்டி பேரிச்ச மரத்தடியில் நட்டி கொலை செய்தான்.


அதன்பிறகு கிப்தி இனத்தைச் சேர்ந்த காஃபிர் பிரமுகர்கள் ஃபிர்அவ்னை தூண்டிவிட்டனர். பனூ இஸ்ரவேலர்களை அச்சுறுத்துமாறு தூண்டினர்.


அல்லாஹ் கூறுகின்றான் :


"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும்இ உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும்இ மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். 


“அவருடன் இறைநம்பிக்கை கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளைக் கொன்று விடுங்கள்! 


அதற்கு ஃபிர்அவ்னோஇ "அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' கூறினான். 


அல்குர்ஆன் 7 : 127இ 40 : 25


சபையோரின் தூண்டுதலால் ஃபிர்அவ்ன் மேலும் ஆத்திரமனைத்தான். 


மூஸா நபியையும் பனூ இஸ்ரவேலர்களின் ஆண்களையும் கொலை செய்யுமாறு அவர்கள் தூண்டினர். அதற்கு ஃபிர்அவ்னும் செவிசாய்த்து அவ்வாறு செய்வதாக கொக்கரித்தான்.

மூஸா நபியை கொல்லத்திட்டம்


“என்னை விட்டு விடுங்கள்!நான் மூசாவைக் கொல்கிறேன். அவர் தன் இறைவனை அழைக்கட்டும்! அஞ்சுகிறேன்” என ஃபிர்அவ்ன் கூறினான்.


“விசாரணை நாளை நம்பாமல் கர்வம் கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று மூஸா கூறினார்.


அல்குர்ஆன் 40 : 26-27


மூஸா நபியை காளை செய்யப்போவதாக மூஸா நபியின் முன்னிலையிலேயேஃபிர்அவ்ன் கூறுகிறான். அதற்கு மூஸா நபியோ தனது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். மூஸா நபி அனைத்து நிலைகளிலும் இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார்.


இறைவன் மூஸா நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களை பாதுகாப்பதற்காக ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடம் இருந்து ஒருவரை அனுப்புகிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் தனது இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கை கொண்ட ஒரு மனிதர்இ “எனது இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக ஒரு மனிதரை நீங்கள் கொல்லப் போகிறீர்களா? 


உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். 


அவர் பொய்யராக இருந்தால்இ அவரது பொய் அவரைச் சார்ந்தது. ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களை எச்சரிப்பதில் சில உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறிய பெரும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.


“என் சமுதாயமே!இன்று பூமியில் மிகத்தோராக இருக்கும் உங்களிடம் ஆட்சி இருக்கிறது. நம்மைப் பாதுகாப்பவர் யார்?” என்று அவர் கூறினார்.


அதற்கு ஃபிர்அவ்னோ “நான் (நல்லதென) காண்பதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் காட்டவில்லை. நேரான வழியையே உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறினான்.


“என் சமுதாயமே! நிலையைப் போன்று உங்களுக்கும் (ஏற்பட்டுவிடும் என) நான் அஞ்சுகிறேன். மாட்டான்” என்று இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்.


“என் சமுதாயமே! ஒருவரையொருவர் (உதவிக்காக) அழைத்துக் கொள்ளும் நாளைப் பற்றி உங்கள் விஷயத்தில் அஞ்சுகிறேன்”


“நீங்கள் புறமுதுகிட்டு ஓடும் அந்நாளில் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யாருமில்லை.அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ. அவனை நேர்வழியில் செலுத்துபவர் யாருமில்லை”


“இதற்கு முன் உங்களிடம் யூசுஃப் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். முடிவில் அவர் மரணித்தபோதுஇ “அவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்”என்று கூறுகிறீர்கள்.ஐயமுற்றுஇ வரம்பு மீறுபவனை அல்லாஹ் இவ்வாறே வழிகேட்டில் விட்டுவிடுகிறான்”


“தம்மிடம் எந்த ஆதாரமும் வராமலேயே அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளால் தர்க்கம் செய்கின்றனர். வெறுப்பிற்குரியது. இவ்வாறே கர்வம் கொண்டுஇ அடக்கமுறை ஒவ்வோர் உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் இறைநம்பிக்கை கொண்ட அந்த மனிதர் கூறினார்).


அல்குர்ஆன் 40 : 26 - 35


அந்த இறைநம்பிக்கையாளர் தெளிவான முறையில் கிப்தியர்களை எச்சரித்தார். 


மூஸா நபியைக் கொலை செய்யக்கூடாது என்று தடுத்தார். இவ்வாறுதான் மூஸா நபியை ஆசியா அம்மையாரும் காப்பாற்றினார்கள். கிப்தியர்களை வைத்தே அல்லாஹ் முஸா நபியை பலமுறை காப்பாற்றியிருக்கிறான்.


அதைப்போல் அந்த மனிதர்இ 'எனது இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்லப் போகிறீர்கள்?' என்று கேட்டார். ஏனெனில் ஃபிர்அவ்னிய சட்டத்தில் இவ்வாறு கூறியவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது இல்லை. ஆகவேதான் அவர் சட்டத்தை வைத்தே தனது வாதத்தை முன்வைத்தார்.


இதே வாதத்தைத்தான் அபூபக்கர் ரலியும் முன்வைத்தார்கள்.


உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :


'இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?' என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்இ '(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன்இ நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்துஇ நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போதுஇ 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 3678. 


இவ்வாறுதான் அல்லாஹ் நபிமார்களை சில மனிதர்களைக் கொண்டு காப்பாற்றுகிறான்.


அதன்பிறகு ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த அந்த இறைநம்பிக்கையாளர் இறைவனின் தண்டனையைக் குறித்து எச்சரிக்கிறார். அழிக்கப்பட்ட முன்சென்ற சமூகத்தைக் குறித்தும் எச்சரித்தார். இதனால் ஃபிர்அவ்ன் மூஸா நபியை காலல்லும் திட்டத்தை கைவிட்டான்.


அதன்பிறகு ஃபிர்அவ்ன் தனது ஆட்சியதிகாரத்தை வைத்து கேலி செய்ய ஆரம்பித்தான்.

ஃபிர்அவ்னின் ஏகத்தாளம்


அல்லாஹ் கூறுகிறான் :


“ஹாமானே!வான்வழிகளான அவ்வழிகளை நான் அடைந்துஇ மூஸாவின் இறைவனைப் பார்ப்பதற்காக ஓர் உயர்ந்த மாளிகையை எனக்காகக் கட்டுவாயாக! எண்ணுகிறேன்”என ஃபிர்அவ்ன் கூறினான். 


இவ்வாறே ஃபிர்அவ்னுக்குஇ அவனது தீய செயல் அழகாக்கப்பட்டது. அவன் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி அழிவில்தான் இருந்தது.


அல்குர்ஆன் 40 : 36 - 37


தன்னிடம் ஆட்சியும் பாெருளாதாரமும் இருப்பதால் அதைக் கொண்டு மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டி அதில் ஏறி இறைவனைப் பார்க்கப் போகிறேன் ஃபிர்அவ்ன் ஏகத்தாளமாகக் கூறினான். அவனன உண்மையை ஏற்றுக் கொள்ள முயற்சிக்கவேயில்லை.


அதனால்தான் அவனது தீய செயலை இறைவன் அவனுக்கு அழகாகக் காட்டினான். ஆகவே அவன் தீமைக்கு மேல் தீமை செய்தான். நேர்வழியிலிருந்து முற்றிலும் தடுக்கப்பட்டான்.


இதை உணர்ந்துகொண்ட ஃபிர்அவ்ன் குடும்பத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளர் ஃபிர்அவ்னை விட்டுவிட்டு தனது சமுதாயத்திற்கு அறிவுரை கூறினார் தொடங்கினார்.


அல்லாஹ் கூறுகிறான் :


"என் சமுதாயத்தினரே! (ஃபிர்அவ்னை விட்டுவிட்டு) நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறேன்" 


“என் சமுதாயத்தினரே! இவ்வுலக வாழ்க்கை(யில் கிடைப்பது அனைத்தும்) அற்ப இன்பமே! மறுமைதான் நிலையான வீடாகும்”


தீமை செய்தவர் அதுபோன்றதைத் தவிர வேறு கூலி கொடுக்கப்பட மாட்டார். 


ஆணோஇ பெண்ணோ யாராயினும் இறைநம்பிக்கை கொண்டுள்ள நிலையில் நற்செயல் செய்தால் அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அங்கு கணக்கின்றி இன்பங்கள் வழங்கப்படுவார்கள்.


"என் சமுதாயத்தினரே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றியை நோக்கி அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தை நோக்கி அழைக்கிறீர்கள்"


“நான் அல்லாஹ்வை மறுத்துஇ எதைப் பற்றி எனக்கு தெரியவில்லையோ அதை அவனை இணையாக்குவதற்காக என்னை அழைக்கிறீர்கள் மிகைத்தவனானஇ மன்னிப்புமிக்கவனை நோக்கி உங்களை அழைக்கிறேன்”


“உண்மையாகவேஇ எதை நோக்கி என்னை அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலோஇ மறுமையிலோ அழைக்கப்படுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை; நமது மீளுமிடம் அல்லாஹ்விடமே உள்ளது; வரம்பு மீறுவோர் நரகவாசிகளாவர்”


"நான் உங்களைக் கூறுவதை விரைவில் நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய காரியத்தை நான் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். அடியார்களை அல்லாஹ் பார்ப்பவன்” (என்று அந்த இறைநம்பிக்கையாளர் கூறினார்.)


அல்குர்ஆன் 40 : 38 - 44


கிப்தியர்களுக்குப் புரியும் விதத்திலும் அவர்களது நெத்திபொட்டில் அடித்தார் போலவும் நச்சென்று தனது வாதத்தை அந்த இறைநம்பிக்கையாளர் முன்வைத்துள்ளார். அவற் கூறியது


ஃபிர்அவ்னை பின்பற்றாதீர்கள். அவன் வழிகேடன். மாறாக என்னையே பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு இஸ்லாத்தை போதித்து நேர்வழிகாட்டுவேன்.

இவ்வுலக வாழ்க்கை அற்ப இன்பம்தான். குறைந்த வருடம்தான் இவ்வுலகில் வாழ்வோம். அதன்பிறகு மரணித்துவிடுவோம். அவ்வாறு மரணித்தால் நமக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடும்.

நிலையான உலகம் என்பது மறுமைதான். அங்குதான் நரகம் மற்றும் சொர்க்கம் உள்ளது. சொர்க்கத்தில் நுழைந்தால் அதன்பிறகு அங்கிருந்து வெளியேறவேமாட்டோம். அங்கு நமக்கு மரணமும் கிடையாது. நிரந்தர வாழ்க்கை அங்குதான் உண்டு.

தீமை செய்தால் அதற்கு தகுந்த தண்டனை நரகத்தில் வழங்கப்படும். ஆகவே தீமையில் ஈடுபடாதீர்கள்.

நன்மை செய்தால் அதற்கு சொர்க்கத்தில் கணக்கின்றி கூலி வழங்கப்படும். ஆகவே அதிக நன்மைகளை மேற்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வை மறுப்பதும்இ அவனுக்கு இணைவைப்பதும் நரகத்திற்குரிய செயல். அந்த செயலை நான் செய்யமாட்டேன்.

வணக்கத்திற்கு தகுதியான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடுவதுதான் சேர்க்க வேண்டிய செயல். இதுதான் வெற்றிக்குரிய செயல்.

ஆகவே இறைவனை அதிகம் வணங்கி வழிபடுங்கள். நமது மீளுதல் அல்லாஹ்விடமே உள்ளது.


நன்மை தீமையில் ஆரம்பித்து சொர்க்கம்இ நரகம் பற்றி கூறி இணைவைப்புஇ இறைமறுப்பு ஆகியவற்றைக் கண்டித்து வணக்க வழிபாட்டின் பக்கம் ஆசையை ஏற்படுத்தும் அவர் தனது பிரச்சாரத்தை செய்தார்.

மூஸா நபி முஸ்லிம்களுக்கு தைரியம் ஊட்டுதல்


அதன்பிறகு ஃபிர்அவ்னை நினைத்து பயந்துகொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக மூஸா நபி பேசினார்கள். அவர்களுக்கு ஈமானை ஊட்டினார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


மூஸா தமது சமுதாயத்திடம்இ "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அது உரியது. உரியது. அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று கூறினார்.  


அதற்கு அவர்கள்இ "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும்இ நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுத்து வருகிறோம்'' என்று கூறினர்.


ஆகவே மூஸாயி "உங்கள் இறைவன்உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள்" என்று கூறினார். 


திருக்குர்ஆன் 7:123இ126இ129இ 26:48இ 26:50-51


மூஸா நபி வெற்றிக்கான வழியையும் எதிரிகளை வீழ்த்த வழியையும் தனது சமூகத்திடம் தெரிவிக்கின்றனர். அந்த வழிகளாவதுஇ


அல்லாஹ்விடம் உதவி தேடுதல். 

அந்த உதவி கிடைக்கும் வரை பொறுமையாகவும் உறுதியாகவும் இருத்தல்.

அல்லாஹ்வை அஞ்சுதல்


இந்த மூன்று பண்புகளைக் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம் என்று மூஸா நபிகள் நாயகம் தெரிவித்தார்.


அதற்கு பனூ இஸ்ரவேல் சமூகமோஇ தாங்கள் அனுபவிக்கும் சோதனையை மட்டுமே அவர்களிடத்தில் தெரிவித்தது. 


சோதனையில்லாமல் வெற்றி ஏது?

துன்பமில்லாமல் இன்பம் ஏது?


இதை அந்த சமூகம் உணரத் தவறியது. இருந்தபோதிலும் மூஸா நபி அவர்களுக்கு உண்மையை உணர்த்திக் கொண்டே இருந்தார்கள்.


ஏனெனில் மூஸா நபிக்கு இரண்டு வித பணிகளை இறைவன் வழங்கினான். ஒன்று ஏகத்துவத்தை எடுத்துரைத்தல். மற்றாென்று அடிமைத்தளையைத் தகர்த்தெறிதல்.


ஆகவேதான் மூஸா நபி தனக்கு வழங்கப்பட்ட இறைப்பணியில் ஏகத்துவத்தோடு சேர்த்து பனூ இஸ்ரவேலர்களின் அடிமைத்தளையை தகர்த்தெறிவதற்காகவும் போராடினார்கள். அதற்காகத்தான் சூனியப்போட்டி நடைபெற்றது. அங்குதான் இறைவனின் அற்புதங்கள் வெளிக்காட்டப்பட்டது. அதைப்பார்த்த சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும் பனூ இஸ்ரவேலர்களில் குறைவானவர்களே மூஸா நபியை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புறக்கணித்தனர். 


அதற்கான காரணத்தை அல்லாஹ் கூறுகிறான்.


ஃபிர்அவ்ன்இ தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும்இ அவனது சமுதாயத்திற்கும் பயந்ததால் அவனது சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. 


ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன். 


அல்குர்ஆன் 10 : 83


பனூ இஸ்ரவேலர்கள் பிர்அவ்னுக்கு அஞ்சி நடுங்கியதைக் கண்ட மூஸா நபி அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுமாறு அவர்களுக்குப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸா நபியை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். 


"என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிஇ முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார்.


அதற்கு அவர்கள்இ "(நாங்கள்) அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம்" என்று கூறினர்.


(பின்னர் அவர்கள் இறைவனிடம்) “எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! காப்பாற்றுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.   


அல்குர்ஆன் 10 : 84 - 86


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பனூ இஸ்ரவேலர்களின் உறுதியைப் பார்த்து குழப்பமடைந்தான். அவன் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தான்.


அல்லாஹ் கூறுகிறான் :


(ஃபிர்அவ்னாகிய) அவனுக்கு (மூஸாவாகிய) அவர் மாபெரும் சான்றினைக் காட்டினார்.


ஆனால் அவன் அவற்றை பொய்யெனக் கூறினான்; மாறு செய்தான். பிறகு (குழப்பம் விளைவிக்க) முயன்றவனாகப் பின்வாங்கிச் சென்றான்.


(மக்களை) ஒன்றுதிரட்டி அழைத்துஇ “நான்தான் உங்களின் மேலான இறைவன்” என்று கூறினான்.


அல்குர்ஆன் 79 : 20 - 24


அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி நான்தான் உங்கள் இறைவன் என்று ஃபிர்அவ்ன் வெளிப்படையாக அறிவித்தான். ஆனால் அது முஸ்லிம்களின் உள்ளத்தில் எத்தகைய தடுமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

தொழுகைக்கான கட்டளை


அதன்பிறகு அல்லாஹ் மூஸா நபிக்கு சில கட்டளைகளை விதித்தான்.


"(மூஸா மற்றும் ஹாரூன் ஆகிய) இருவரும்உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! எதிர்நோக்கும் வகையில் ஆக்குங்கள்!  


தொழுகையை நிலைநாட்டுங்கள்!


 நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று மூசாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். 


அல்குர்ஆன் 10 : 87


மூஸா நபி எகிப்தில் வசிக்கிறார்கள். எகிப்து ஃபிர்அவ்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு வெளிப்படையாக பள்ளிவாசலைக் கட்டமுடியாத சூழல். ஆகவே அவர்களை தங்களது வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.


அதுமட்டுமில்லாமல் பனூ இஸ்ரவேலர்களின் வீடுகள் ஒன்றுக்கென்று அருகிலும் எதிரெதிராகவும் இருக்கும் வகையில் கட்டிக்கொடுக்குமாறு இறைவன் தெரிவிக்கிறான். அப்போதுதான் அவர்களால் உடனடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளமுடியும். எகிப்தை விட்டுத் தப்பித்து செல்வதற்கும் அதுதான் வசதியாக இருக்கும். 


அதுமட்டுமில்லாமல் இன்னொரு காரணத்திற்காகவும் இவ்வாறு வீடுகளை அமைத்துக் கொள்ளுமாறு இறைவன் கூறினான். அந்த காரணத்தை பின்வரும் சம்பவங்களை அறிந்து கொள்ளலாம்.


இறைவன் கூறிய அடிப்படையில் அவ்விரு இறைத்தூதர்களும் சமூகத்தாருக்காக அருகருகில் இருக்கும்வகையில் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்கள். பனூ இஸ்ரவேலர்களின் வீடுகள் ஒன்றாக இருந்தன. கிப்தியர்களின் வீடுகள் வேறு பக்கமாக இருந்தன.


அப்போது கிப்தியர்களுக்கு மட்டும் ஏற்படும் அனுபவிக்கும் விதமாக பல சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

பல்வேறு சோதனை:


அல்லாஹ் கூறுகிறான் :


"படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் சமுதாய ஃபிர்அவ்னுடையத்தைத் தண்டித்தோம்''. 


அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் "அது எங்களுக்காக (கிடைத்தது)" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூசாவையும் அவர் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். 


"கவனில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.'' 


"எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும்இ நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர். 


எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்குஇ வெட்டுக்கிளிஇ பேன்இ தவளைகள்இ இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் செய்தனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர். 


நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வொரு சான்றும் அதற்கு முந்தியதைவிட மிகப் பெரியதாகவே இருந்தது. அவர்கள் மீள்வதற்காக வேதனையின் மூலம் அவர்களைப் பிடித்தோம்.


 அவர்களுக்கு எதிராகஇ வேதனை வந்த போதெல்லாம்


"சூனியக்காரரே! உமது இறைவன் உமக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எங்களுக்காக அவனிடம் பிரார்த்திப்பீராக! நாங்கள் நேர்வழி அடைவோம்".


மூஸாவே! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்'' என்று அவர்கள் கூறினர். 


அவர்கள் நிறைவு செய்யும் காலக்கெடு வரை அவர்களுக்கு (நாம் வழங்கிய) வேதனையை நாம் நீக்கிய உடனேயே அவர்கள் வாக்களிக்கின்றனர். அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். 


திருக்குர்ஆன் 7:130-136இ 43 : 48 - 50


அல்லாஹ் கிப்தியர்களுக்கு பலவித சோதனைகளை வழங்கினான். அவர்கள் மட்டும் அதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பனூ இஸ்ரவேலர்களின் வீடுகளை வேறு இடங்களில் அமைத்துக் கொள்ளுமாறு இறைவன் தெரிவித்தான். இது இறைவனின் நுட்பத்தையும் பனூ இஸ்ரவேலர்கள்மீது அவன் காண்டிருந்த இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.


அதைப்போல் மேற்கூறிய சம்பவங்களில் கிப்தியர்களின் மோசமான நிலையையும் இறைவன் படம்பிடித்துக் காட்டுகிறான்.


அவர்கள் மூஸா நபி கொண்டு வந்த அனைத்து அற்புதங்களையும் சூனியம் என்றே நம்பினர். ஆகவேதான் அவர்கள்இ “எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும்இ நாம் உம்மை நம்பப் போவதில்லை” என்று கூறினர்.

அவர்களுக்கு ஏதாவது நன்மைகள் விளைந்தால்இ அது அவர்களால்தான் ஏற்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேசமயம் அவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் மூஸா நபியையும் முஸ்லிம்களையும் பீடையாகக் கருதுகிறார்கள். ஆனால் அது பீடையல்ல. இறைவனின் சோதனை. அதனை அவர்கள் அறியவில்லை.

ஆகவேதான் அவர்களை சோதிக்க வேண்டும் என்று இறைவன் நாடினான். அதற்காக அவன் அவர்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தினான். விளைச்சலில் குறைவை ஏற்படுத்தினான். அதன்பிறகும் அவர்கள் திருந்தவில்லை. செய்த தவறை உணரவில்லை.

அதனால்இ வெள்ளப்பெருக்குஇ வெட்டுக்கிளிஇ பேன்இ தவளைகள்இ இரத்தம் போன்றவற்றைக் கொண்டு அவர்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தினான்.

ஒவ்வொரு சோதனை வரும்போதும்இ மூஸா நபியிடம் வந்துஇ அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனையின் மூலம் துன்பங்கள் நீங்கினால்இ மூஸாவை நபியாக நம்புவோம் என்றும் பனூ இஸ்ரவேலர்களை மூஸா நபியுடன் அனுப்புவோம் என்றும் கூறினார்கள். அதனால் மூஸா நபி அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரிந்தார்கள். அதனை அங்கீகரித்த இறைவன் அவர்களது சோதனைகளை நீக்கினான். அதன்பிறகு தாங்கள் கொடுத்த வாக்குறுதியை கிப்தியர்கள் மீறினார்கள். இதுதான் ஆணவம் கொண்ட ஷைத்தான்களின் செயர்களாகும்.

இதனால்தான் அவர்கள் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.


கிப்தியர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை மேற்கூறிய சம்பவங்கள் விளக்குகின்றன. 


அவர்கள் மூஸா நபியின் தெளிவான சான்றுகளையும் அற்புதங்களையும் இறை ஆற்றல்களையும் நேரிடைக் கண்டார்கள். இருந்தபோதிலும் அதை ஏற்பதற்கு அவர்கள் முன்வரவில்லை. இதற்கு இன்னொரு காரணம் ஃபிர்அவ்னின் மிரட்டல்தான்.

ஃபிர்அவ்னின் கொக்கரிப்பு


ஃபிர்அவ்ன்இ தனது சமுதாயத்தினரை அழைத்துஇ "என் சமுதாயமே! எகிப்தின் ஆட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகளும் எனக்குக் கீழ் ஓடுகின்றனவே! நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினான்.


“அற்பமானவரும்இ தெளிவாகப் பேச இயலாதவருமான இவரைவிட நான் மேலானவன் அல்லவா?”


"தங்கத்தாலான காப்புகள் இவருக்கு அணிவிக்கப்பட வேண்டாமா? அல்லது இவருடன் வானவர்கள் சேர்ந்து வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறினான்)


அவன் தனது கூட்டத்தினரை இழிவாக நினைத்தான். அவர்களும் அவனுக்குக் கட்டப்பட்டனர். அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராக இருந்தனர்.


நம்மை அவர்கள் கோபமூட்டியபோது அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் (நீரில்) மூழ்கடித்தோம்.


அவர்களை (அழிவில்) முந்தியவர்களாகவும்இ பின்வருவோருக்கு எடுத்துக்காட்டுகளாகவும் ஆக்கினோம்.


அல்குர்ஆன் 43 : 51 : 56


ஃபிர்அவ்ன் தன்னைப் பற்றி பெருமையாகவும் மூஸா நபியைப் பற்றி இழிவாகவும் கூறினான். தன்னிடம் ஆட்சி உள்ளது என்று தன்னை பெருமையாகவும் மூஸா நபியை அற்புதமாக அற்புதமாக அற்பமானவர் என்றும் அவருக்கு திக்கு வாய் என்றும் இழிவுபடுத்திக் கூறினான். 


மூஸா நபி உண்மையிலேயே நபியாக இருந்திருந்தால் அவருக்குத் தங்கக்காப்புகள் இருக்க வேண்டும் என்றும் அல்லது அவர்களுடன் சேர்ந்து வந்திருக்க வேண்டும் வேண்டும் என்றும் கூறினான்.


இதுதான் காலம்காலமாக காஃபிர்கள் இறைத்தூதர்களை மறுக்கும் முறை. மக்கத்துக் காஃபிர்களும் முஹம்மது நபியை இவ்வாறு கூறிதான் மறுத்தார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


“இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர். (அவ்வாறு) நாம் ஒரு வானவரை இறக்கியிருந்தால் (அவர்களின்) காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்க மாட்டார்கள். (தூதரான) அவரை ஒரு வானவராக அனுப்பியிருந்தாலும் அவரையும் மனிதராகவே ஆக்கியிருப்போம். (ஏற்கனவே) அவர்கள் எதில் குழம்பினார்களோ அதே குழப்பத்தை (இதிலும்) அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்போம். (நபியே!) உமக்கு முன்னரும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். அத்தூதர்களை எதைக் கொண்டு அவர்கள் கேலி செய்தார்களோ அது அவர்களையே சூழ்ந்து கொண்டது. அல்குர்ஆன் 6 : 8 - 10


மற்றெரு இடத்தில் இறைவன் கூறும்போதுஇ


"இவருக்கு ஒரு கருவூலம் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வந்திருக்க வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதால் (நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதில் சிலவற்றை நீர் விட்டுவிடுவீர் போலும். அதனால் உமது உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகலாம். நீர் எச்சரிப்பவர் மட்டுமே! ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். அல்குர்ஆன் 11 : 12


இவ்வாறு அனைத்து காஃபிர்களும் இறைத்தூதரை அரசரைப் போன்று ஆடம்பரமானவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தூயவன். அவனது தூதர்கள் அனைவரும் எளிமையின் சிகரமாகத்தான் திகழ்ந்தார்கள். அவ்வாறுதான் மூஸா நபியும் திகழ்ந்தார்கள். அதைத்தான் ஃபிர்அவ்ன் குறை கூறினான்.


அதுமட்டுமில்லாமல் அவன் மூஸா நபியை மட்டும் இழிவாகப் பார்க்கவில்லை. தனது கூட்டத்தினர் அனைவரையும் இழிவாகத்தான் பார்த்தான். அதனால்தான் அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டு ஃபிர்அவ்னிற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள். இதனால் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது இறங்கியது.


ஆகவேதான் மூஸா நபி ஃபிர்அவ்னிற்கு எதிராகவும் அவனது ஆற்றலுக்கு எதிராகவும் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

ஃபிர்அவ்னிற்கு எதிரான மூஸா நபியின் பிரார்த்தனை


அல்லாஹ் கூறுகிறான் :


"எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும்இ அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் இந்த செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! 


எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). 


எங்கள் இறைவா! செல்வங்களை அழித்து அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்க! 


துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார். 


"உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.  


திருக்குர்ஆன் 10:88-89


எந்த பலத்தை வைத்து கொண்டு ஃபிர்அவன் ஆட்டம் காட்டுகிறானோ அந்த பலத்தை அழிக்குமாறு மூஸா நபியும் ஹாரூன் நபியும் பிரார்த்தனை செய்தார்கள். அதனை அல்லாஹ் அங்கீகரித்துவிட்டான். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை இறைவன் ஏற்படுத்த தொடங்கினான்.





பிர்அவ்ன் முஸ்லிம்களை துரத்துதல் :


ஏற்கனவே மூஸா நபியின் மீதும் முஸ்லிம்களின் மீதும் கடும் கோபத்தில் இருந்த ஃபிர்அவ்ன் அவர்களை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான சதித்திட்டத்தைத் தீட்டினான். இவ்விஷயத்தை அல்லாஹ் மூஸா நபிக்கு அறிவித்துக் கொடுத்தான். மேலும் ஃபிர்அவ்னிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் இறைவன் சொல்லிக் கொடுத்தான்.


"எனது அடியார்களை இரவில்அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! 


நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள். பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (என்னைத் தவிர வேறெதற்கும்) அஞ்சாதீர்!''


கடலைப் பிளந்த நிலையிலேயே விட்டுவிடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினர்” என்று மூசாவுக்கு அறிவித்தோம். 


அல்குர்ஆன் 26 : 52இ 44 : 23-24


மூஸா நபி ஏற்கனவே எகிப்திலிருந்து தப்பித்து மத்யன் நகருக்குச் சென்றிருக்கிறார்கள். தப்பித்துச் செல்வத்தில் மூஸா நபிக்கு மனே அனுபவம் உண்டு. இருந்தபோதிலும் அவர்கள் தனியாகத்தான் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்போதோ ஒரு சமூகத்தையே அழைத்துக் கொண்டு தப்பித்துச் செல்கின்றனர்.


ஆகவேதான் அல்லாஹ் மூஸா நபிக்கு தப்பித்துச் செல்வதற்கான சில நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கிறான்.


இரவோடு இரவாக பனூ இஸ்ரவேலர்களை அழைத்துச் செல்லுமாறு அவன் கூறினான். காரணம் இரவில்தான் அனைவரும் உறங்கியிருப்பர். ஆகவே யாருக்கும் தெரியாமல் தப்பித்துச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு இரவுதான் சிறந்த வழி. ஆகவேதான் இறைவன் அவ்வாறு கூறினான்.


அடுத்ததாக மக்கள் அனைவரையும் ஈரமில்லாத பாதை வழியாக அழைத்துச் செல்லுமாறு கூறுவதால் ஈரமுள்ள பாதையில் நடப்பது சிரமம். அதில் வேகமாக நடக்கமுடியாது. ஆகவேதான் ஈரமில்லாத பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு இறைவன் கூறினான்.


அதைப்போல் நிச்சயம் பிர்அவ்னால் பின்தொடரப்படுவார்கள் என்று இறைவன் மூஸா நபிக்கு அறிவித்துக் காத்துஇ அதற்கு ஆறுதலாக காப்பாற்றப்படுவதையும் சேர்த்து கூறினான்.


இறைவனின் கட்டளைப்படி இரவோடு இரவாக பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் காெண்டு மூஸா நபி எகிப்தைவிட்டு வெளியேறினார்.


இதை அறிந்து கொண்ட ஃபிர்அவ்ன் கடும் கோபம் கொண்டான். அவன் கோபத்தின் எல்லைக்கே சென்றான். 


ஆகவே ஃபிர்அவ்ன்இ


(படைகளுக்கு) ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் அனுப்பினான். 


அதன்பிறகு ஃபிர்அவ்ன் கீழ்க்கண்டவாறு கொக்கரித்தான்.


அவர்கள் சிறிய கூட்டத்தினரே. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.  


நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள்.


அல்குர்ஆன் 26 : 54 - 56.


கடும் கோபத்தில் இருந்து ஃபிர்அவ்ன் தனது படையைத் திரட்டிக் கொண்டு தனது கோட்டையிலிருந்து வெளியேறினான். இதைப் பற்றி இறைவன் கூறும்போதுஇ


தோட்டங்களையும்இ நீரூற்றுகளையும்இ பொக்கிஷங்களையும்இ மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம். இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம். 


அல்குர்ஆன் 26 : 57 - 59


மூஸா நபியையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்பதற்காக கோட்டையிலிருந்து கிளம்பிச் செல்வதாக ஃபிர்அவ்ன் நினைத்தான். ஆனால் உண்மையில் ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் அழிப்பதற்காக அவர்களது கோட்டையிலிருந்து இறைவன்தான் அவர்களை வெளியேற்றினான். அதை பிரவன் அறியவில்லை.


ஃபிர்அவ்ன் தனது படையினரோடு மூஸா நபியையும் முஸ்லிம்களையும் துரத்தினான். அதிகாலை வேளையில் இரண்டு படையினரும் ஒருவரையொருவர் சந்தித்தனர்.


அல்லாஹ் கூறுகிறான் :


காலையில் ஃபிர்அவ்னும்இ அவனது படையினரும் அக்கிரமமாகவும்இ அநியாயமாகவும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். 


இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டால் "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.  


"அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று மூஸா கூறினார். 


"உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.  


மூஸாவையும்இ அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். 


அங்கே (ஃபிர்அவன் மற்றும் அவனது படையைச் சேர்ந்த) மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். 


ஃபிர்அவ்ன்இ தனது படைகளுடன் அவர்களைத் பின்தொடர்ந்து சென்றான். அப்போது அவர்களைக் கடலில் மூடிக் கொள்ளக் கூடிய (அலையான)து மூடிக் கொண்டது.


(இறைவனை மறுத்து ஆணவம் கொண்டதால்) ஃபிர்அவ்னையும்இ அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். அவர்களை மூழ்கடித்தோம். 


முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நிகழும்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான். 


இப்போதுதானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) 


மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இப்படித்தான் ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தை வழிகெடுத்தான். (அவன் அவர்களுக்கு) நேர்வழி காட்டவில்லை.


இந்த வரலாற்றைக் கூறிய பிறகு இறைவன் முஸ்லிம்களுக்கு சில அறிவுரைகளைக் கூறுகிறான்.


"அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?'' என்று கவனிப்பீராக!. 


அவர்களை நரகிற்கு அழைக்கும் தலைவர்களாக்கினோம். 


மறுமை நாளில் (ஃபிர்அவ்னாகிய) அவன் தனது கூட்டத்தாருக்கு முன்னால் சென்றுஇ அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வான். அழைத்துச் செல்லப்படும் அந்த இடம் மிகக் கெட்டது.


கியாமத் நாளில் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு சாபத்தைத் தொடரச் செய்தோம். கியாமத் நாளில் அவர்கள் இழிந்தோரில் இருப்பார்கள். 


இவ்வுலகிலும் மறுமை நாளிலும் அவர்கள் சாபம் தொடருமாறு செய்தனர். (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட இந்தப் பரிசு மிகக் கெட்டது.


இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன். 


திருக்குர்ஆன் 26 : 52-68இ 28 : 40-42இ 10 : 90-92இ 11 : 98 - 99


ஃபிர்அவ்னின் கதை முடிக்கப்பட்டது இவ்வாறுதான். இந்த சம்பவங்களில் ஏராளமான படிப்பினைகள் அடங்கியுள்ளன.


மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதனை அறிந்து கொண்ட ஃபிர்அவன் படைபட்டாளங்களோடு அவர்களைத் துரத்துகிறான். இரவில் தப்பித்தவர்கள் மறுநாள் அதிகாலையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்கள். இது இறைவனின் தெளிவான ஏற்பாடாகும். இதில்தான் இறைவனின் நுட்பம் அடங்கியுள்ளது.


அல்லாஹ் நமது மனதில் உள்ள இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் சில சூழ்நிலைகளை நமக்கு ஏற்படுத்துவான். 


அப்போது நாம் உறுதியாக இருக்கிறோமா? தியாகம் செய்ய முன்வருகிறோமா? பொறுமையை கடைபிடிக்கிறோமா? என்பதை பரிசோதிப்பான். இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்.


உங்களில் தியாகம் செய்வோர் யார்? என அல்லாஹ் பொறுமையை வெளிப்படுத்திக் காட்டாமலும்இவர்கள் யார்? என வெளிப்படுத்திக் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அல்குர்ஆன் 3 : 142


ஆகவேதான் இந்த இடத்தில் மூஸா நபி மற்றும் பிற முஸ்லிம்களின் தியாகத்தையும் பொறுமையையும் வெளிப்படுத்திக் காட்ட அல்லாஹ் நாடினான். ஆகவேதான் அவன் அவர்களை நேருக்கு நேராக சந்திக்கச் செய்தான்.


இந்த இக்கட்டான சூழலிலும் பனூ இஸ்ரவேலர்கள் மூஸா நபியுடன்தான் நின்றார்கள். அவர்கள் பிரவ்னை பார்த்ததும் அவன்பக்கம் சாயவில்லை. அவனிடம் தஞ்சம் அடையவில்லை. மாறாக மூஸா நபியுடனையே இறந்தனர். இருந்தபோதிலும் அவர்கள் மூஸா நபியிடம்இ 'நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்' என்று கூறினார்கள். 

ஆனால் அதற்கு மூஸா நபியோய் ஃபிர்அவ்னால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் என் இறைவன் என்னோடு இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறினார். மற்ற பனூ இஸ்ரவேலர்களை விட மூஸா நபியின் ஈமான் உயர்ந்தது. அவர்களது ஈமான்தான் உயர்தரமானது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் இறைவனின் உதவியை பலமுறை கண்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் இறைவன் மீது அலாதி நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

மூஸா நபியின் நம்பிக்கையை இறைவன் உண்மைப்படுத்தினான். அவன் அவர்களுக்கு உதவி புரிந்தான். மூஸா நபியின் கைத்தடியைக் கொண்டு கடலில் அடிக்குமாறு உத்தரவிட்டான். அவ்வாறே மூஸா நபி செய்ய கடல் இருகூறாக பிளந்து அவர்களை வழிபட்டது. அவ்வழியே அவர்கள் தப்பித்து சென்றனர். நாம் இறைவன் மீது உறுதியான நம்பிக்கையை வைத்தால் இறைவன் நமக்கு நிச்சயம் உதவுவான் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

மூஸா நபியை எந்த கடல் வழியின்மூலம் இறைவன் காப்பாற்றினானோ அந்த கடல் வழியிலேயே ஃபிர்அவ்னையும் அவனது படையையும் இறைவன் மூழ்கடித்தான். இதுதான் இறைவனின் நுட்பம். முஸ்லிம்கள் காப்பற்றப்பட்ட வழியிலேயே காஃபிர்கள் அழிக்கப்பட்டனர். ஒரே வழி இருவேறு எதிர்வினைகளை தந்தது. இதுதான் இறைவனின் நுட்பமான ஏற்பாடாகும்.

மூழ்கடிக்கப்படும் நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஃபிர்அவ்ன் அறிவித்தார். ஆனால் அவற்றை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர் தொண்டைக்குழியை அடைவதற்கு முன்பாகவே வேண்டுதலைத்தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். ஃபிர்அவ்னோ இறுதிக் கட்டத்தில் ஏகத்துவ கலிமாவை மொழிந்ததால் இறைவன் அதை அங்கீகரிக்கவில்லை.


ஒருவழியாக மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும் ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்தார்கள். அவர்களை இறைவன் காப்பாற்றினான். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கி மாண்டார்கள். அவர்களை இறைவன் ஒரு சான்றாக ஆக்கினான். 

நரகத்தில் ஃபிர்அவ்னும் கிப்தியர்களும்


இதைப்பற்றி இறைவன் கூறும்போதுஇ


(ஃபிர்அவ்ன் மற்றும் கிப்திய சமூகத்தைச் சேர்ந்த) அவர்கள் செய்த சூழ்ச்சியின் தீங்குகளிலிருந்து (மூசாவாகிய) அவரை அல்லாஹ் காப்பாற்றினான். 


ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைக் கொடிய வேதனை சுற்றி வளைத்தது. 


அவர்கள் காலையிலும்இ மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுவார்கள். 


மறுமை நிகழும் நாளில்இ "ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைக் கடும் வேதனையில் புகுத்துங்கள்!" (எனக் கூறப்படும்.)


இவ்வாறு அவனை அல்லாஹ் மறுமை இம்மையின் தண்டனையால் பிடித்தான்.


அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யும்போதுஇ கர்வம் கொண்டோரை நோக்கிப் பலவீனர்கள்இ “நாங்கள் உங்களைத்தான் பின்பற்றுவோராக இருந்தோம். எனவேஇ எங்களை விட்டும் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு பங்கையாவது நீங்கள் தடுக்கக் கூடியவர்களா?” என்று கேட்பார்கள்.


“நாம் எல்லோருமே இதில்தான் இருக்கிறோம். அல்லாஹ் தனது அடியார்களுக்கிடையே தீர்ப்பளித்து விட்டான்” என்று கர்வம் கொண்டோர் பதிலளிப்பார்கள்.


நரகத்தின் காவலர்களை நோக்கி "உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்! அவன் ஒரு நாளுக்கேனும் எங்களுக்கு வேதனையை இலேசாக்குவான்" நரகத்திலிருப்போர் கூறுவார்கள்.


"உங்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வரவில்லையா?" என்று (நரகத்தின் காவலர்கள்) கேட்பார்கள். அதற்குஇ “ஆம்!” என்று அவர்கள் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தியுங்கள்!” என்று கூறி விடுவார்கள். இறைமறுப்பாளர்களின் பிரார்த்தனை வழிதவறியதாகவே உள்ளது.


இவ்வுலக வாழ்விலும்இ சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் நமது தூதர்களுக்கும்இ நம்பிக்கை கொண்டோருக்கும் உதவி செய்வோம்.


அந்த அநியாயக்காரர்கள் கூறும் சாக்குப் போக்கு அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள்மீது சாபம் உண்டாகும். அவர்களுக்கு மோசமான தங்குமிடமியும் உண்டு.


அல்குர்ஆன் 40 : 45 -52இ 79 : 25


ஃபிர்அவ்ன் இவ்வுலகில் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதை இறைவன் தெரிவித்ததைப் போன்று நாளை மறுமையில் நரகத்தில் தூக்கி வீசப்படுவதையும் இறைவன் தெரிவிக்கிறான்.


ஃபிர்அவ்னுடைய பேச்சைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்காததால் அவர்கள் நரகத்தில் எப்படியெல்லாம் புலம்புவார்கள்? என்பதை இறைவன் தெரிவிக்கிறான்.


அவர்கள் தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொள்வார்கள். கிப்தி இனத்தின் சாதாரண மனிதர்கள் நரக நெருப்பைவிட்டு தங்களைப் பாதுகாக்குமாறு பிரமுகர்களாக இருந்தவர்களிடம் கூறுவார்கள். ஆனால் பிரமுகர்களும் அந்த நரகத்தில்தான் வெந்து வேதனையை அனுபவிப்பார்கள். ஆகவே தங்களால் உதவி செய்யமுடியாது என்று கூறிவிடுவார்கள்.


பிற நரகவாசிகளால் நரகத்தைவிட்டும் தங்களைப் பாதுகாக்கமுடியாது என்பதை அறிந்து கொண்டு அவர்கள் நரகத்தின் மலக்குகளிடம் செல்வார்கள். அவர்களிடத்தில் உதவி கேட்பார்கள். ஆனால் அவர்களும் உதவி செய்ய மறுத்துவிடுவார்கள். ஆகவே அவர்கள் அனைவரும் நரகத்தில் கடும் தண்டனையை அனுபவிப்பார்கள்.


கடல் பிளக்கப்பட்டு ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு மூஸா நபி காப்பாற்றப்பட்ட இந்த சம்பவம் மிக முக்கியமான சம்பவமாகும். இந்த சம்பவம் நடைபெற்ற தினம் முஹர்ரம் பத்தாவது நாளாகும். ஆகவேதான் ஒவ்வொரு வருடமும் இத்தினத்தில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக மூஸா நபி நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். இத்தினத்தைத்தான் நாம் ஆஷூரா தினம் என்று அழைக்கிறோம்.

ஆஷுரா தினம்


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் :


நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 


'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். 


யூதர்கள் 'இது நல்ல நாள்இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். 


நபி(ஸல்) அவர்கள்இ 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்' என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்றுஇ நோன்பு நோற்குமாறு (மக்களுக்கு) கட்டளையும் இட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2004. 


இந்த நாளில் நாம் நோன்பு நோற்றால் நமது ஒரு வருட பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகளார் தெரிவித்துள்ளார்.


அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என்றார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2152. 


பாகம் 3 - ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்னர்

சிறந்த இடத்தில் தங்குதல்


அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு பல அற்புதங்களை வெளிக்காட்டினான். பல்வேறு அருட்கொடைகளை பொழிந்தான். கடலைப் பிளக்கச் செய்து ஃபிர்அவ்னிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். 


அதன்பிறகு மூஸாவும் பனூஇஸ்ரவேலர்களும் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு செல்கின்றனர். இறுதியில் அவர்கள் ஒரு சிறந்த இடத்தில் தங்கினர்.


அல்லாஹ் கூறுகிறான் :


இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். 


பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தைஇ நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாகியுள்ளோம். 


இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்களின் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. 


ஃபிர்அவ்னும்இ அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும்இ அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம். இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம்.


அல்குர்ஆன் 10 : 93இ 7 : 137


பனூ இஸ்ரவேலர்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் அவர்களுக்கு இறைவன் வெற்றியை வழங்கினான். ஃபிர்அவ்னையும் அவனது ஆட்சியையும் அழித்து அவனது உயரமான கட்டிடங்களையும் அல்லாஹ் இல்லாமலாக்கினான். இவை அல்லாஹ் பனு இஸ்ரவேலர்களுக்கு அழித்த வாக்குறுதிகள். அந்த வாக்கறுதியை இறைவன் நிறைவேற்றினான். இறைவன் வாக்கை மீறுபவன் அல்லன்.


சிலை வழிபாடு கேட்ட இஸ்ரவேலர்கள்


அதன்பிறகு தூர் எனும் மலையை நோக்கி முஸ்லிம்களை அழைத்துவருமாறு அல்லாஹ் மூஸா நபிக்கு கட்டளையிட்டான். ஆகவே மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களை தூர் மலையை நோக்கி அழைத்துச் சென்றார்கள். அங்கு செல்லும் வழியில் அவர்கள் ஒரு சமூகத்தைப் பார்த்தார்கள். அவர்கள் சிலை வணங்கிகளாக இருந்தனர். அப்போது நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கிறான்.


அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். 


"மூசாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்றுத் தருவீராக!'' என்று கேட்டனர். 


"நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்"


"அவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.''


 "அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸா) கூறினார். 


இணைவைப்பான காரியத்தில் ஈடுபடுவதற்காக பனூ இஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் அனுமதி கேட்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மூஸா நபி அவர்களைக் கண்டித்து அந்த சிலைகள் அழியக்கூடியவையே என்று கூறினார்கள். இதன்பிறகு இறைவன் தான் செய்த அருட்கொடைகளை பனூ இஸ்ரவேலர்களுக்கு நினைவூட்டுகிறான்.


உங்கள் ஆண் மக்களைக் கொன்றுஇ உங்கள் பெண் (மக்)களை உயிருடன் விட்டுஇ உங்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! 


உங்கள் இறைவனிடமிருந்து இதில் கடும் சோதனை இருந்தது. அறிவு அவர்களுக்கு வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். 


திருக்குர்ஆன் 7:131-141இ 10:93


இதில் பனூ இஸ்ரவேலர்களின் மோசமான குணத்தை இறைவன் படம்பிடித்துக் காட்டுகிறான். பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக்காட்டிய பின்னரும் அவர்களிடத்தில் உறுதியான ஈமான் ஏற்படவில்லை. அவர்கள் சிலை வணக்கத்தையே வேண்டி நிற்கின்றனர். வேறொரு சமுதாயம் செய்ததைப் பார்த்து தங்களுக்கும் அதுபோன்ற சிலைகள் வேண்டும் என்று கேட்கின்றனர்.


இந்த கெட்ட குணம் அவர்களிடத்தில் மட்டுமல்ல. பெரும்பாலான மக்களின் உள்ளத்தில் இப்படிப்பட்ட சிந்தனையை ஷைத்தான் ஏற்படுத்தவே செய்கிறான்.


இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் காஃபிர்களின் பஜனைப் பாடல்களைப் பார்த்து தங்களுக்கு மீலாது பாடல்களை அரங்கேற்றிக் கொண்டார்கள். கோவில் திருவிழாக்களைப் பார்த்து கந்தூரி விழாக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். 


இத்தகைய தவறான சிந்தனையிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் நமக்கு ஏற்படுத்தியதே நமக்கு போதுமானது. அதுவே நமக்கு சிறந்தது. காஃபிர்களின் செயல்கள் நமக்குத் தேவையில்லை.


பனூ இஸ்ரவேலர்கள் 'தங்களுக்கும் ஒரு சிலையை ஏற்படுத்தித் தருங்கள்' என்று கேட்டதற்கு மூஸா நபி ஆக்ரோஷமாக பதிலளித்தார்கள்.


அவர்களைப் பார்த்துஇ 'நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கிறீர்கள்' என்று கூறினார்கள்.


ஆம்இ அவர்கள் அறிவு கெட்ட கூட்டம்தான். ஏனெனில் சிலைகளுக்கு கேட்கும் காதுகளோஇ பேசும் நாவுகளோஇ உதவும் கைகால்களோ இல்லை. அவ்வாறிருக்கையில் வெற்று சிலைகளை வடித்து அவற்றை இறைவனாக்கி தருமாறு கேட்பவர்கள் அறிவீர்கள்தானே. ஆகவேதான் மூஸா நபி அவ்வாறு கூறினார்கள்.


அதைத்தொடர்ந்து அந்த சிலைகள் அழியக்கூடியது என்றும் அந்த சிலைகளிடம் பிரார்த்தனை செய்வது வீணானது என்றும் மூஸா நபி அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


அதன்பிறகு அவர்கள் உண்மையான இறைவனான அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டுகிறார்கள்.

அல்லாஹ்வும் தான் செய்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறான். ஃபிர்அவ்ன் செய்து வந்த அட்டூளியங்களையும் அவர்களில் இருந்து அவர்களை காப்பாற்றியதையும் அவர்களுக்கு நியாபகமூட்டுகிறான்.


தூர் மலையில் மூஸா நபி


அதன்பிறகு மூஸா நபி அங்கிருந்து தூர் மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


மூசாவுக்கு முப்பது இரவுகளை வக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.


 மூஸா தமது சகோதரர் ஹாரூனிடம் "என் சமுதாயத்திற்கு எனது பிரதிநிதியாக இருந்து சீர்திருத்தம் செய்வீராக! குழப்பவாதிகளின் வழியைப் பின்பற்றாதீர்!" என்று கூறினார்.


நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "மூசாவே! உமது சமுதாயத்தை விட்டு அவசரமாக வந்தது ஏன்?'' (என்று இறைவன் கேட்டான்.) 


"அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகிறார்கள். என் இறைவா! நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்'' என்று அவர் கூறினார். 


அல்குர்ஆன் 2 : 51இ 7 : 142-143இ 20 : 83-84


பனூ இஸ்ரவேர்களை அழைத்துக் கொண்டு தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் மூஸா நபிக்கு கட்டளையிட்டிருந்தான். தூர்மலையில் வைத்து தவ்ராத் எனும் வேதம் வழங்குவதற்காக நாற்பது இரவுகளை அல்லாஹ் வாக்களித்தான். ஆகவேதான் மூஸா நபி மக்களை அழைத்துக் கொண்டு தூர் மலைக்குச் சென்றார்கள்.


ஆனால் இவ்விஷயத்தில் மூஸா நபிக்கு அதிக ஆர்வம் இருந்தது. வேதத்தை விரைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எனவே அவர்கள் தனது சகோதரரும் நபியுமான ஹாரூனிடம்இ மக்களை கவனித்துக் கொள்ளுமாறும் அவர்களை சீர்படுத்துமாறும் கூறிவிட்டு அவசரமாக தூர்மலைக்குச் சென்றார்கள்.


அப்போது இறைவன்உமது சமுதாயத்தை விட்டுவிட்டு ஏன் அவசரமாக வந்தீர்கள்? என்று கேட்டான். அதற்கு மூஸா நபியோஇ உனது திருப்தியைப் பெறுவதற்குத்தான் அவசரமாக வந்தேன் என்று பதிலளித்தார்கள்.

இறைவனை பார்க்க முடியுமா?


அதன்பிறகு இறைவனுக்கும் மூஸா நபிக்கும் இடையில் சில உரையாடல்கள் நடந்தது.


அல்லாஹ் கூறுகிறான் :


"என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' என்று மூஸா கூறினார்.


 அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். 


அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். 


மூஸா மூர்ச்சித்து விழுந்தார். 


அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். 


 "மூசாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும்இ நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!'' என்று (இறைவன்) கூறினான். 


7 : 143-144


அல்லாஹ்வை இதுவரை யாரும் பார்த்தது இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இவ்வுலகில் இறைவனை நம்மால் காணமுடியாது. அதற்கான ஆற்றல் நம்மிடம் இல்லை. நபிமார்கள் கூட இறைவனைப் பார்த்தது இல்லை. 


அந்தவகையில் மூஸா நபி இறைவனை காண ஆசைப்பட்டார்கள். ஆகவேதான் மூஸா நபிக்கு படிப்பினை வழங்க வேண்டும் என்பதற்காக மலைக்கு இறைவன் காட்சியளித்தான். அதை மலையால் தாங்கமுடியவில்லை. ஆகவே அது சுக்குநூறாக நொறுங்கியது. அந்த அதிர்ச்சியில் மூஸா நபி மூர்சித்து விழுந்தார்கள்.


இறைவன் காட்சியளிப்பதை பலம்வாய்ந்த மலையால்கூட தாங்கமுடியவில்லை என்றால் மனிதர்களால் நிச்சயம் தாங்கமுடியாது என்பதை மூஸா நபி உணர்ந்தார் கொண்டார்கள். ஆகவே அவர்கள் தனது தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.


இதுபற்றி நபியவர்கள் நமக்கு விளக்கியிருக்கிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


இறைத் தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில்இ (மறுமை நாளில்) எக்காலம் ("சூர்") ஊதப்படும். உடனே வாகனங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.


பிறகு மற்றொரு முறை எக்காலம் ஊதப்படும். அப்போது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதலில் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் "தூர் சினாய்" (மலையில் இறைவனைச் சந்தித்த) நாளில் மூர்ச்சையாகி விழுந்தது கணக்கி லெடுக்கப்(பட்டுஇஅங்கு அவருக்கு விதிவிலக்கு) அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?" என்பது எனக்குத் தெரியாது. மேலும்இ யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட. ஒருவர் சிறந்தவர் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4731. 


தவ்ராத் வேதம் வழங்கப்படுதல்


அதன்பிறகு அல்லாஹ் மூஸா நபிக்கு தவ்ராத் வேதத்தை வழங்கினான்.


அல்லாஹ் கூறுகிறான் :


பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும்இ அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. 


"இதைப் பலமாகப் பிடிப்பீராக! நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும்இ (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் இறைவன் வழங்கியிருக்கிறான். 


இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! 


பாவிகளின் தங்குமிடத்தை உங்களுக்கு நான் காட்டுவேன்'' 


நியாயமின்றி பூமியில் கர்வம் உள்ளவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாகக் கொள்வார்கள். 


அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும்இ அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.


 நமது வசனங்களையும்இ மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா? 


திருக்குர்ஆன் 7:145-147இ 2:53


மூஸா நபிக்கு தவ்ராத் வேதத்தை வழங்கிய இறைவன் அதை அழகிய முறையில் பற்றி பிடிக்குமாறு கட்டளையிடுகிறான். அவர்களது சமுதாயத்திற்கும் இதை ஏவுமாறு கட்டுளையிடுகிறான். இவ்வாறு மூஸா நபி தூர் மலையில் இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் மலையடிவாரத்திலிருந்து பனூ இஸ்ரவேலர்களை சாமிரி என்பவன் மூலம் ஷைத்தான் வழிகெடுத்தான்.


சாமிரி வழிகெடுத்தல்


அல்லாஹ் கூறுகிறான் :


மூஸா (தூர் மலைக்குச்) சென்ற பிறகு அவரது சமுதாயத்தினர் தமது நகைகளால் (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றின் வடிவத்தை போலிக் கடவுளாக) எடுத்துக் கொண்டார்.


 அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்றும் அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்றும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள். 


அல்குர்ஆன் 7 : 148


மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களை விட்டுவிட்டு தூர் மலைக்குச் சென்ற பிறகு சாமிரி என்பவன் காளைக் கன்றின் வடிவத்தை செய்தான். அதற்கு மாட்டின் சப்தமும் ஏற்பட்டது. இதைக் கண்டதும் பனூ இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை கடவுளாக கற்பனை செய்தனர்.


ஏற்கனவே மூஸா நபி கைத்தடியைப் போட்டு உண்மையான பாம்பாக மாற்றிக்காட்டினார்கள். இந்த அற்புதத்தைக் கண்டு இஸ்லாமை ஏற்றவர்கள் பனூ இஸ்ரவேலர்கள்.


அதே பனூ இஸ்ரவேலர்களுக்கு போலி அற்புதங்களைக் காட்டி ஷைத்தான் வழிகெடுக்கிறான். இதுதான் ஷைத்தானின் சித்து விலையாட்டு. நாம் அவனிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


இதைப் பார்த்த ஹாரூன் நபி தனது சமூகத்தை எச்சரித்தார்கள்.


  "என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!'' என்று ஹாரூன் கூறினார். 


அதற்கு அவர்கள் "மூஸாயி எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று கூறினர். 


அல்குர்ஆன் 20 : 90 - 91


ஹாரூன் நபி எவ்வளவோ தனது சமூகத்தை எச்சரித்துப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் கேட்கவில்லை.


அப்போது இறைவன் இந்த செய்தியை மூஸா நபிக்கு தெரிவிக்கிறான்.


"உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை சாமிரி வழிகெடுத்து விட்டான்'' என்று (இறைவன் மூஸா நபியிடம்) கூறினான். 


அல்குர்ஆன் 20 : 85


இறைவன் மூலம் செய்தியறிந்த மூஸா நபி கோபத்தோடு தனது சமுதாயத்தை நோக்கி வந்தார்கள். தனது சமூகத்தை சரமாரியாக வசைபாடினார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும்இ கவலைப்பட்டவராகவும் திரும்பினார். 


(அப்போது அவர் தனது சமுதாயத்தைப் பார்த்து) "என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப்) போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?'' 


"எனக்குப் பிறகு நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா? என்னிடம் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து விட்டீர்களே!” என்று கேட்டார். 


(கோபத்தில் தனது கையிலிருந்து) பலகைகளைப் போட்டார். 


அல்குர்ஆன் 20 : 86இ 7 : 150


மூஸா நபியின் இந்த கேள்விக்கு பனூ இஸ்ரவேலர்கள் கீழ்க்கண்டவாறு பதிலளித்தனர்.


நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறுசெய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே சாமிரியும் வீசினான். 


அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. 


உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்'' என்றனர்.  


அல்குர்ஆன் 20 : 87 - 88


நடந்த உண்மைகளை அவர்கள் அப்படியே ஒப்பித்தனர். தாங்கள் அறியாமல் செய்துவிட்டதாக மூஸா நபியிடம் உள்ளது. அதற்கு மூஸா நபி இறைவன் என்றால் யார்? என்பதை பரிசோதித்து அறிந்துகொள்ளும் வழிகளைக் கற்றுக் கொடுத்தார்கள்.


"அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பது அவருக்குத் தீங்கு விளைவிப்பதுஇ நன்மை செய்ய வேண்டும் என்பது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?


அல்குர்ஆன் 20 : 89


இதுதான் இறைவனை கண்டுகொள்ளும் வழிமுறையாகும். இவ்வுலகிலுள்ள போலிக் கடவுள்கள் அனைத்திற்கும் இந்தப் பரிசோதனையை நிகழ்த்தினாலே அவசியம் போலி என்று கண்டுகொள்ளலாம். மூஸா நபி தெரிவித்த வழிமுறையாவது


இறைவனாக இருக்கக்கூடியவன் நமது பிரார்த்தனைக்கு பதிலளிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.

நன்மை செய்ய தீமையைத் தடுக்கவும் அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும்.


இவ்விரண்டும் இறைத்தன்மையில் முக்கியமானவை. இவற்றைக் கொண்டே போலிக்கடவுள்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.


அதன்பிறகு மூஸா நபி தனது சகோதரன் ஹாரூனைக் கண்டித்தார்.


அல்லாஹ் கூறுகிறான் :


(மூஸா நபி) தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (பின்பு அவரிடம்)


"ஹாரூனே! அவர்கள் வழிகெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை?'' எனது கட்டளையை மீறி விட்டீரே!'' கேட்டார். 


(அதற்கு ஹாரூன்) 'என் தாயின் மகனே! எனது தாடியையும்இ எனது தலையையும் பிடிக்காதீர்! 


 "இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!''.


"என் வார்த்தையை எதிர்பார்க்காமல் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டீரே!' என்று நீர் கூறுவதை (எண்ணி)ப் பயந்தேன்” என்று கூறினார்.


அல்குர்ஆன் 20 : 92 - 94இ 7 : 150


அதன்பிறகு மூஸா நபி இறைவனிடம் மன்னிப்புக் கோரினார்கள்.


  "என் இறைவா! என்னையும்இ என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்'' (மூஸா) கூறினார். 


அல்குர்ஆன் 7 : 151


பின்னர் தனது சமூகத்தைப் பார்த்து அவர்களை எச்சரித்தார்கள். அவர்களையும் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டினார்கள்.


"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கு இழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது' என்று மூஸா கூறினார். எனவே அவன் (பனூ இஸ்ரவேலர்களாகிய) உங்களை மன்னித்தான். அவன் மன்னிப்புமிக்கவன். நிகரிலா அன்பாளன்.


அல்குர்ஆன் 2 : 54


ஆகவே அவர்களது சமூகத்தாரும் பாவமன்னிப்புக் கோரினார்கள்.


தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்துஇ எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்'' என்றனர்.

அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


அல்குர்ஆன் 7 : 149.


இந்த சம்பவத்தைப் பற்றி இறைவன் கூறும் போதுஇ


காளைக் கன்றைக் கடவுளாகக் கருதியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும்இ இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் ஏற்படும். கற்பனை செய்வோரை இவ்வாறே வேதனைக்கு உட்படுத்துவோம். 


யார் தீமையான காரியங்களைச் செய்துஇ பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 


அல்குர்ஆன் 7 : 152 - 153.


அதன்பிறகு மூஸா நபி தனது கவனத்தை சாமிரியின் பக்கம் திருப்பினார்கள்.


  "சாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். 


"அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு (செய்யுமாறு) என்னைத் தூண்டியது'' என்பான்.


"போய்விடு! இந்த வாழ்க்கையில் உனக்குரிய (தண்டனையான)து 'தீண்டாதே!' எனக் கூறுவதுதான். உன்னால் மாற்றப்பட முடியாத உனக்கென நிர்ணயிக்கப்பட்ட ஒருநேரம் உண்டு. நீ வணங்கிக் கொண்டிருந்த உன் கடவுளைப் பார்! நாம் அதை நெருப்பில் எரித்துஇ பிறகு அதை ஒரேயடியாகக் கடலில் தூவி விடுவோம்” என்று (மூஸா) கூறினார்.


திருக்குர்ஆன் 20:95-97


மூஸா நபி ஸாமிரியை கண்டித்து அவனுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அந்த காளைக் கன்றின் சிலையை எரித்து சாம்பலாக்கி அவற்றை கடலில் தூக்கி எறிந்தார்கள். இதன்மூலம் அவை போலிக் கடவுள்தான் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.


மூஸா நபிஇ ஹாரூன் நபி மற்றும் பனூ இஸ்ரவேலர்கள் ஆகிய அனைவரும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார்கள். இறைவனும் மன்னித்தான். 


அதைப்போல் சாமிரிக்கு தண்டனை வழங்கப்பட்டு அவன் விரட்டப்பட்டான். அனைத்து காரியமும் முடிக்கப்பட்டது.


அதன்பிறகு மூஸா நபி தனது கவனத்தை தூக்கி எறிந்த பலகையின் பக்கம் செலுத்தினார்கள்.


மூசாவுக்குக் கோபம் தணிந்த போது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும்இ நேர்வழியும் இருந்தது.


திருக்குர்ஆன் 7 :154


மூஸா நபி தவ்ராத் வேதத்தை எடுத்து கொள்ள வைத்தார்கள். அதன்அடிப்படையில் மக்களுக்கு போதனை செய்து வந்தார்கள்.


அல்லாஹ்வை நேரில் பார்க்க கோரிக்கை ;


அப்போது திடீரென ஒருநாள் பனூஇஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் தவறான கோரிக்கையை முன்வைத்தனர்.


மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்


“எங்களுக்கு அல்லாஹ்வை நேரடியாகக் காட்டுவீராக!” என்று அவர்கள் கேட்டனர்.  


அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் இறந்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். 


திருக்குர்ஆன் 2:54-56இ 4:153


ஏற்கனவே மூஸா நபி அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று அவனிடம் கோரிக்கை வைத்தே பின் மூர்ச்சையாகி விழுந்தார்கள். அதன்பிறகு மன்னிப்புக் கேட்டு அதிலிருந்து விலகிக் கொண்டார்கள்.


தற்போது அதே கோரிக்கையை பனூ இஸ்ரவேலர்கள் முன்வைத்தனர். ஆகவே அவர்களை இடிமுழுக்கத்தின் மூலம் அல்லாஹ் தண்டித்தான். அவர்களை மரணிக்கச் செய்தான். பின்னர் அவர்கள் திருந்துவதற்காகஇ இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பினான்.


ஓரிடத்தில் ஏழுபது பேர் :


அதன்பிறகு இறைக்கட்டளைக்கு ஏற்ப மூஸா நபி தனது இறைவனை சந்திப்பதற்காக எழுபது பேரைத் தேர்வு செய்தார்கள்.


நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா நபி தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். 


அவர்களைப் பூகம்பம் தாக்கிய போது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை.


 இதன் மூலம் நீ நாடியோரை வழிகேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழிகாட்டுகிறாய். 


நீயே எங்கள் பொறுப்பாளன். 


எனவே எங்களை மன்னித்துஇ எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்''


 "எங்களுக்கு இவ்வுலகிலும்இ மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்'' (என மூஸா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்) 


"என் வேதனையை நான் நாடியோருக்கு அளிப்பேன். எனது அருள்இ எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. வசனங்களை நம்புகின்ற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.


 திருக்குர்ஆன் 7:155இ56


இறைவன் நிர்ணயித்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மூஸா நபி எழுபது ஆண்களைத் தேர்வு செய்து அழைத்துச் சென்றார்கள். அந்த எழுபது பேரும் அறிஞர்களாக இருந்தார்கள் என்று இமாம் இப்னு கஸீர் தெரிவிக்கின்றனர். அவர்கள் அங்கு சென்றதும் அவர்களை பூகம்பத்தைக் கண்டு அல்லாஹ் தாக்கினான். 


இவர்கள் அனைவரும் பாவம் செய்யாதவர்கள். காளைக் கன்றை வணங்காதவர்கள். ஆனாலும் இவர்களை அல்லாஹ் தண்டித்தான். காரணம்இ தங்களது சமூகத்தினர் வழிதவறும்போது அவர்கள் அவர்களைத் தடுக்காமல் இருந்தனர். 


ஆகவேதான் “எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா?” என்று மூஸா நபி அல்லாஹ்விடம் கேட்டார்கள்.


அதன்பிறகு அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து அவர்களுக்கு உயிர்கொடுத்தான்.


மேலும் தான் நாடியோருக்கு வேதனையை வழங்குவேன் என்றும்இ இறைவனை அஞ்சிஇ ஸகாத் கொடுத்துஇ இறைவசனங்களை நம்புபவர்களுக்கு அருள்புரிவேன் என்றும் அவன் தெரிவித்தான்.


பாலஸ்தீனத்தில்…


அதன்பிறகு மூஸா நபி தனது சமூகத்தை பாலஸ்தீனத்திற்குள் நுழையுமாறு கட்டளையிட்டார்கள். அதுதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாக இருந்தது. அதுதான் இஸ்ஹாக் நபி வாழ்ந்த இடமாக இருந்தது. அங்குதான் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் கட்டப்பட்டது.


அல்லாஹ் கூறுகிறான் :


"என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்திஉங்களை ஆட்சியாளர்களாக்கிஇ உலகில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!


 "என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்களா!'' (என்றும் மூஸா கூறினார்)


அதற்கு பனூ இஸ்ரவேலர்கள்இ "மூசாவே! அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் உள்ளனர். நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்'' என்று கூறினர்.


(அப்போது அவர்களில்) அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றஇ இறைவனை அஞ்சக்கூடிய இருவர் வந்துஇ "(அடக்குமுறை செய்யும்) அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள்!


 நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள்.


 நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!'' என்று கூறினர்.

 

அதற்கு பனூ இஸ்ரவேலர்களோஇ "மூசாவே! அவர்கள் அங்கே இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் நுழைய மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்று கூறினர்.


எனவே மூஸாஇ "என் இறைவா! என்னையும்இ என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும்இ குற்றம் புரிந்தது. இக்கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார். 


"இவ்வூர் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக. நீர் கவலைப்படாதீர்!'' என்று (இறைவன்) கூறினான்.  


திருக்குர்ஆன் 5 : 20-26


இதில் கவனிக்கத்தக்க பல்வேறு அம்சங்கள் உள்ளன.


மூஸா நபியின் அறிவுப் புலமைக்கு இந்த சம்பவம் சான்றாகும். ஏனெனில் அவர்கள் தனது சமூகத்தை பாலஸ்தீனத்திற்குள் நுழையுமாறு நேரிடையாகக் கூறாமல்இ அல்லாஹ் அவர்களுக்கு அருட்கொடைகளை செய்தான் நினைவூட்டி பின்னர்தான் அப்பூமியில் நுழையுமாறு கூறுகிறார்கள். அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்திவிட்டு பின்னர் கட்டளைகளைத் தெரிவிக்கிறார்கள். இது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையாகும்.

பனூ இஸ்ரவேலர்கள் இறைத்தூதரின் கட்டளையை புறக்கணித்தார்கள். ஏனெனில் அப்போது பாலஸ்தீனத்தில் ஒரு அடக்கம் செய்யும் ஆட்சியாளர் இருந்தார். அவர்களுக்குப் பயந்து உள்ளே நுழையமாட்டோம் என்று மறுத்தார்கள். பனூ இஸ்ரவேலர்களின் ஈமான் தாழ்ந்த நிலையில் இருந்தது. ஆகவேதான் அவர்கள் கோழைகளாக இருந்தனர். போருக்கு செல்லமாட்டோம் என்று மறுத்தார்கள். நம்மிடம் உள்ள ஈமான்தான் நமது வீரத்தை வலுப்படுத்தும். ஈமான் குறைய குறைய வீரமும் குறையும்.

அப்போது இருவர் வந்து மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பேசினார்கள். அந்த இருவரின் ஈமானும் உயர்ந்திருந்தது. ஆகவேதான் அவர்கள் வீரர்களாக இருந்தனர். அவர்கள் இறைக்கட்டளையை நிறைவேற்ற தயாராக இருந்தனர். மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு தூண்டினார்கள். இறைக்கட்டளையை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இருந்தபோதிலும் அது பனூ இஸ்ரவேலர்களுக்கு எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் மூஸா நபியையும் அல்லாஹ்வையும் போர் செய்யுமாறு அவர்கள் கூறினார்கள். இது எவ்வளவு மோசமான வார்த்தை. அல்லாஹ் அவர்களுக்கு பல அருட்கொடைகள் வழங்கிய போதிலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாகவும் உறுதியற்றவர்களாகவும் கோழைகளாகவும் இருந்தார்கள்.

ஆகவேதான் மூஸா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைக்கட்டளைக்கு செவிசாய்க்காதவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கூறினார்கள்.

எனவே அல்லாஹ் நாற்பது வருடங்கள் அந்த பூமியில் நுழையமுடியாதவாறு அவர்களைத் தடுத்துவிட்டான். அவர்கள் நாடோடிகளாகத் திரிய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.


பன்னிரண்டு கிளையினர் :


அதன்பிறகு அவர்கள் நாடோடிகளாக நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். அப்போதும் அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிந்தான். 


அல்லாஹ் கூறுகிறான் :


மூஸாவுடைய சமுதாயத்தில் உண்மையின்படி வழி காட்டுவோரும்இ அதன்படி நீதி செலுத்துவோரும் உள்ளனர். 


அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். 


மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோதுஇ மூஸா தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டினார்.


  "உமது கைத்தடியால் இப்பாரையில் அடிபீராக!' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். 


அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். 


அவர்களுக்கு மன்னுஇ ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். 


"உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!' 


பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!' 


இங்கே வரம்பு மீறாதீர்கள்!


 (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். 


எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.  


திருந்திஇ நம்பிக்கை கொண்டுஇ நல்லறம் செய்துஇ பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். 

அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார். (என்று கூறினோம்)"


பனூ இஸ்ரவேலர்கள் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த போது அவர்களை பன்னிரண்டு கோத்திரங்களாக இறைவன் பிரித்தான். அப்போது அவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. ஆகவே மூஸா நபி இறைவனிடம் வேண்டினார்கள். அல்லாஹ் அவர்களது கைத்தடியைக் கொண்டு ஒரு பாறையில் அடிக்குமாறு உத்தரவிட்டான். மூஸா நபி கைத்தடியால் பாறையை அடிக்க அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டு வந்தது. ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒவ்வொரு நீரூற்றுக்களை இறைவன் வழங்கினான்.


அன்னை ஹாஜரா அம்மையாருக்கும் இஸ்மாயில் அலை அவர்களுக்கும் ஜம்ஜம் என்ற அதிசய நீரூற்று வழங்கப்பட்டதுபோல பனூ இஸ்ரவேலர்களுக்கு பன்னிரண்டு ஊற்றுக்கள் வழங்கப்பட்டது. இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருளாகும்.


அவர்கள் நாடோடிகளாக பாலைவனத்தில் சுற்றித்திரிந்ததால் அவர்களை வெளியேயும் இன்னபிறவற்றிலிருந்தும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் மேகத்தை அவர்கள்மீது நிழலிடச் செய்தான். இதுவும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருளாகும்.


அதன்பின்னர் அவர்களது பசியை போக்குவதற்காக மன்னுஇ சல்லா என்ற இருவகை உணவுகளை வானத்திலிருந்து இறைவன் இறக்கினான். இது யாருக்கும் வழங்கப்படாத உணவு. அற்புத உணவு. இதுவும் இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருளாகும்.


இவ்வளவு அருள்களையும் வழங்கிவிட்டு ஒரு சில கட்டளைகளை மட்டுமே இறைவன் இட்டான்.


தூய்மையான உணவை மட்டுமே உண்ண வேண்டும்

குழப்பம் ஏற்படுத்தி திரியக்கூடாது.

வரம்பு மீறக்கூடாது


இந்த கட்டளையை மீறினாள் இறைவனின் கோபம் என்றும் இறைவன் எச்சரித்தான்.


இவ்வாறு எச்சரித்தும் அவர்கள் கேட்டபாடில்லை. அவர்கள் வரம்பு மீறுபவர்களாகவே இருந்தனர்.


அவர்கள் கூறியது :


மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள்இ வெள்ளரிக் காய்இ பூண்டுஇ பருப்புஇ வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்' கூறிய போதுஇ "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு' அவர் கூறினார். 


அவர்களுக்கு இழிவும்இ வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். 


அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும்இ நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்துஇ வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம். 


அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர். 


"இவ்வூரில் குடியிருக்குங்கள்! விரும்பியதை இதில் உண்ணுங்கள்! "மன்னிப்பு (கேட்கிறோம்)' எனக் கூறுங்கள்! பணிந்துஇ வாசல்வழியாக நுழையுங்கள்!” 


"உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதை நினைவூட்டுவீராக! 


அவர்களில் அநீதி இழைத்தோர்இ தமக்கு (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.  


திருக்குர்ஆன் 7 : 159-162இ 2:57-61


யாருக்கும் வழங்காத மிகத் தூய்மையான உணவை பனூஇஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். இருந்தபோதிலும் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை. 


அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை முறையாக நம்பவில்லை. நபிமார்களை கொலை செய்தார்கள். பாவம் செய்தார்கள். வரம்பு மீறினார்கள். இதன் காரணமாகவே அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான்.


ஆகவேதான் ஏதாவது ஒரு நகரத்தில் தங்குமாறும் அங்கு நீங்கள் கேட்டது கிடைக்கும் என்றும் அவர்களிடத்தில் அல்லாஹ் கூறினான்.


அவர்கள் சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததைக் கேட்டார்கள். ஆகவே அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டது. அவன் அவர்களுக்கு வறுமையையும் இழிவையும் ஏற்படுத்தினான்.


அதன்பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்து ஒரு ஊரில் நுழையுமாறும் அங்கே விரும்பியதை உண்ணுமாறும் மன்னிப்பு என்று கூறுமாறும் பணிவோடு வாசல் வழியாக நுழையுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.


அவ்வாறு செய்தால் அவர்களது பாவங்களை மன்னிப்பதாகவும் தெரிவித்தான்.


ஆனால் அதற்கும் பனூ இஸ்ரவேலர்களிர் சிலர் மாறு செய்தனர். இறைக்கட்டளைக்கு மாற்றம் செய்தனர். ஆகவே அவன் அவர்களுக்கு வானத்திலிருந்து தண்டனையை இறக்கினான்.

இறைவன் வாங்கிய உறுதிமொழி


பனூ இஸ்ரவேலர்களுக்கு பல அருட்கொடைகளை இறைவன் வழங்கினான். இருந்தபோதிலும் அவர்கள் இறைவனுக்கு மாற்றமாகவே நடந்துகொண்டார்கள். 


ஆகவே அல்லாஹ்இ தவ்ராத் வேதத்தை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் வாக்குறுதி வாங்கினான்.


"நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!'' என்று தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!. 


இதன் பின்னரும் புறக்கணித்தீர்கள். 


அல்லாஹ்வின் அருளும்இ கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் நட்டமடைந்திருப்பீர்கள்!  


திருக்குர்ஆன் 2:63இ64


தூர் மலையை அவர்களுக்கு மேலாக உயர்த்தி அதன் பின்னர் அல்லாஹ் அவர்களிடம் உறுதிமொழி வாங்கினான். இந்த மாதிரி எந்த சமுதாயத்திடமும் அல்லாஹ் உறுதிமாெழி வாங்கியதில்லை. ஆனாலும் அவர்களைப் புறக்கணித்தார்கள்.


மூஸா நபி அவர்களுடன் இருந்த காரணத்தால் அவர்கள் மீது அல்லாஹ் தனது அருளையும் கருணையையும் பொழிந்தான்.


அல்லாஹ்வின் கருணை அளப்பெரியது என்பதற்கு மூஸா நபியின் வரலாறே சிறந்த சான்றாகும்.


பனூ இஸ்ரவேலர்கள் செய்த தவறைப் பற்றி ஓரிடத்தில் இறைவன் சுருக்கமாகக் கூறுகிறான்.


அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக தூர் மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். 


"பணிந்துஇ வாசல் வழியாக நுழையுங்கள்!' என்று அவர்களிடம் கூறினோம். 


"சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்!' என்றும் அவர்களிடம் கூறினோம். 


அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.  


தமது உடன்படிக்கையை அவர்கள் முறித்தாலும்இ அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தாலும்இ நபிமார்களை அநியாயமாகக் கொன்றாலும்இ “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்.) 


மேலும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டான்.


 எனவே சிலரைத் தவிர அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.


அல்குர்ஆன் 4 : 154 - 155


இதுதான் பனூ இஸ்ரவேலர்களின் நிலை. அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் மோசமானவர்களாகவும் தீயவர்களாகவுமே திகழ்ந்தார்கள்.


அவர்கள் மோசமானவர்கள் என்பதற்கு இன்னொரு சம்பவமும் ஆதாரமாக உள்ளது.


காளைமாட்டை அறுத்தல் :


பனூ இஸ்ரவேலர்களில் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றது. அந்த கொலையை செய்தது யார்? என்று தெரியவில்லை. அதனால் அங்கு குழப்பம் நிலவியது. ஆகவே அவர்கள் மூஸா நபியிடம் வந்து கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினார்கள். 


மூஸா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் ஒரு காளைமாட்டை அறுக்குமாறு கட்டளையிட்டான். அதை மூஸா நபி பனூ இஸ்வேலர்களிடம் தெரிவித்தார்.


அல்லாஹ் கூறுகிறான் :


"ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று மூஸாயி தமது சமுதாயத்திடம் கூறிய போது 


"எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?' என்று கேட்டனர். 


அதற்கு அவர்இ "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்றார்.


 "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். 


"அது கிழடும்இ கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார். 


"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அதன் நிறம் என்ன' என்பதை அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். 


"அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார். 


"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர். 


"அது நிலத்தை உழவோஇ விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.


 "இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.. 


நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன். 


"அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!' என்று கூறினோம்.


 இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். 


இதன் பின் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. 


ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன.


 நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.  


திருக்குர்ஆன் 2:67-74


பனூ இஸ்ரவேலர்கள் தேவையற்ற சிந்திப்பவர்கள் என்பதற்கு அவசியமற்ற கேள்விகளைக் கேட்பவர்கள் என்பதற்கும் இச்சம்பவம் சான்றாக உள்ளது.


காளை மாட்டை அறுக்க வேண்டும் என்ற கட்டளையை ஏற்று தங்களிடம் இருப்பதில் சிறந்த காளைமாட்டை அறுத்திருந்தால் இலகுவாக முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் கேள்விமேல் கேள்விகேட்டு தங்களையே சிரமத்திற்குள்ளாக்கிவிட்டார்கள்.


அதன்பிறகாவது அவர்கள் திருந்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. அவர்களின் உள்ளங்கள் பாறைகள் போல் இறுகிவிட்டதாக இறைவன் தெரிவிக்கிறான். அந்த அளவிற்கு அவர்கள் மோசமானவர்கள்.






















பாகம் 4 - மூஸா நபியும் மற்ற தகவல்களும்


பொறுமைசாலி:


இருந்தபோதும் மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களிடம் பொறுமையாக தூதுத்துவ பணியை மேற்காண்டார்கள்.


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர்இ 'நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும்' என்று (அதிருப்தியுடன் கூறினார். அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகுஇ 'மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்து கொண்டார்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 3405. 


மூஸா அலை அவர்கள் மிகப்பெரும் பொறுமைசாலி என்பதற்கு நபியின் கூற்றே மிகப்பெரும் சான்றாகும்.

மூஸா (அலை) அவர்களும் ஹிழ்ர் (அலை) அவர்களும்

மூஸா நபியின் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களில் ஹிழ்ர் அலை அவர்களை சந்தித்த சம்பவங்கள் அடங்கும்.


சயீத் பின் ஜூபைர் (ரஹ்) அவர்கள்


நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "நவ்ஃப் அல் பிக்காலீ என்பவர். 'களிர்' (அலை) அவர்களின் தோழரான மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரயீல்களின் (இறைத் தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசா தான் என்று கருதுகிறார்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள். "அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்துவிட்டார்கள்:


(ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம். 'மக்களிடையே மிகவும் அறிந்தவர். யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள். "நான் தான்" என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவேஇ அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். 


ஏனெனில்இ மூஸா (அலை) அவர்கள் "அல்லாஹ்வே அறிந்தவன்" என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.


ஆகவேஇ அல்லாஹ்இ மூஸா (அலை) அவர்களிடம்இ "இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கின்றார். அவர் உங்களை விட அதிகமாக இருக்கின்றார். அறிந்தவர் என்று சொன்னான். மூஸா (அலை) அவர்கள்இ "என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)" என்று கேட்டார்.


அதற்கு அல்லாஹ்இ "நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங் கூடையில் போட்டுக் கொள்ளுங்கள்.) செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்" என்று சொன்னான்.


அதன்படியே மூஸா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷு பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டார்கள். நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனேஇ மூசா (அலை) அவர்கள் தூங்கி விட்டனர். மீன் குதித்து வெறியேறிக் கடலில் விழுந்தது. அந்த கடலில் (சுரங்கம் போல்) வழியமைத்துக் கொண்டு (செல்லத் தொடங்கிவிட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட) (மீனைச் சுற்றி) ஒரு வளையம் போல் தண்ணீர் ஆகிவிட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். 


இறுதியில்இ அடுத்த நாள் வந்த போது தம் உதவியாளரை நோக்கி "நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப்படைந்து விட்டோம்" என்று மூசா (அலை) சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூஸா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. உதவியாளர் அவர்களிடம்இ "நாம் அந்தப் பாறையில் ஒய்வெடுக்க தங்கினோமேஇ பார்த்தீர்களா? அங்கே தான் நான் மீனை மறந்து (தவற விட்டு) விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான் தான் எனக்கு அதை மறக்கடித்து விட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக் கொண்டு (சென்று) விட்டது' என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும்இ அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. 


மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம்இ "அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்" என்று சொன்னார்கள். உடனேஇ அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில்இ அந்தப் பாறையை அடைந்தார்கள்.


அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக்கொண்டு (அமர்ந்து) இறந்தார்.


(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை 


வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 18:65)


மூஸா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற அம்மனிதர் அவர்களுக்கு பதில் சலாம் சொன்னார். பிறகுஇ “உங்களுடைய (இந்தப் பகுதியில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள்இ "நான் தான் மூசா' என்று பதிலளித் தார்கள். அதற்கு அம்மனிதர்இ 'பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா" என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள். ஆம்இ உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்' சொன்னார்கள்.


அதற்கு அவர்இ 'மூசாவே அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன் என்று சொன்னார்.


மூசா (அலை) அவர்கள்இ "நான் உங்களைத் தொடர்ந்து வரட்டுமா?" என்று கேட்டார்கள். அவர் உங்களால் என்ன பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பீர்கள்?" என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) அவர்கள். 'இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்" என்று சொன்னார்கள். அதற்கு களிர் அவர்கள்


“நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது” என்று (அந்த அடியார்) கூறினார். (அல்குர்ஆன் 18:70)


பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றனர். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன்களான ஏழைத் தொழிலாளர்) உரிமையாளர்களிடம் தங்களை ஏற்றிச் செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் புரிந்து கொண்டு அவர்களை வாடகைக்கு கேட்காமல் ஏற்றிச் சென்றார்கள்.


அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக் குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகுஇ அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தியது. உடனே மூசா(அலை) அவர்களிடம் களிர் (அலை)இ 'மூசாவே! சிட்டுக் குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலில் இருந்து எவ்வளவு (நீரை) எடுத்துத் திருக்குமோ அந்த அளவு தான் உங்களுக்குத் தெரியும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்கள்.


அப்போது கிளர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித் தளப் பலகை ஒன்றைக் கழற்றி விட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவியால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூஸா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள். “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப் பெரும் (கொடுஞ் செயலைச் செய்து விட்டீர்கள்" என்று சொன்னார்கள். களிர் (அலை) அவர்கள். "உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்கமுடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?" என்றார்கள். மூஸா (அலை) அவர்கள்இ "நான் மறந்து விட்டதை. வைத்து என்னை தண்டித்து (போகச் செல்லி) விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்" என்று சொன்னார்கள். ஆகஇ மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமையிழந்தது அவர்கள் மறந்து போனதால் தான்.


(பிறகு) கடலில் இருந்து அவர்கள் வெளியேறிய போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து தம் கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து) விட்டார்கள்.


-இந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்இ தம் விரல் நுனிகளை எதையோ பறிப்பதைப் போல் காட்டி சைகை செய்தார்கள்


அப்போது மூஸா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம். 'ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள். முடியாது" என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?" என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள். இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதேனும் (விளக்கம்) கேட்டால் என்னை உங்களிடம் வைத்திருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது" என்றார்கள்.


மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில்இ ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழுந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட உடனேஇ களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள்.


மூஸா (அலை) அவர்கள்இ "இந்த சமுதாயத்தினரிடம் நாம் வந்து (உணவு கேட்டு அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவில்லை; (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கிக் கொள்ளுங்கள் களிர் (அலை) அவர்கள்இ "இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன்" என்று கூறினார்கள்.


-நபி (ஸல்) அவர்கள். 'மூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்திருந்தால் அல்லாஹ் அவ்விருவரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்' என்று சொன்னார்கள்.


ஸஹீஹ் புகாரி 3401இ அல்குர்ஆன் 18 : 60 - 82


இந்த சம்பவங்களில் ஏராளமான படிப்பினைகள் அமைந்துள்ளன.


மூஸா நபியவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை இந்நபிமொழி படம்பிடித்துக் காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் நபியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தவ்ராத் வேதமும் ஞானமும் அருளப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் தனக்குத் தெரியாத ஒன்று வேறு ஒருவருக்குத் தெரிந்திருக்கிறது எனக் கேள்விப்பட்டதும் அவரைச் சந்தித்து அவரிடத்தில் கல்வி கற்க ஆர்வமாக உள்ளனர். இந்த ஆர்வம் நம்மிடையே இருக்க வேண்டும்.

அல்லாஹ் அந்த மனிதரை சந்திக்கும் வழியை நேரிடையாகக் கூறாமல் ஒரு விடுகதையைப் போன்று கூறுகிறான். மீன் தொலையும் இடம்தான் கிள்ர் இருக்கும் இடம் என்று அறிவிக்கிறான். இருந்தபோதிலும் மூஸா நபி தனது பயணத்தைத் தொடர்வதற்கு ஆயத்தமாகிறார்கள். எங்கு செல்ல வேண்டும்? எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எத்தனை நாட்கள் செல்ல வேண்டும்? என்று எதுவும் தெரியாமல் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கல்வியின் மேல் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பாறைக்கு அருகில் வைத்து மீன் தொலைகிறது. தொலைந்த விஷயத்தை மூஸா நபியிடம் தெரிவிக்காமல் ஷைத்தான் மறதியை ஏற்படுத்துகிறான். இதுதான் ஷைத்தானின் சதிவலை. அவன் நம்மை கல்வி கற்க விடமாட்டான். அதற்கு எதிராக சதி செய்வான். நாம் அந்த சதியை முறியடிக்க வேண்டும்.

ஹிழ்ரு அலை அவர்கள் மூஸா நபிக்கு கற்றுத் தந்த முதல் விஷயம்இ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிவு வழங்கப்படும் என்பதுதான். அனைத்தையும் அறிந்த மனிதன் யாரும் இல்லை. ஒருவனுக்குத் தெரியாதது இன்னொருவனுக்குத் தெரிந்திருக்கும். இதுதான் மனித எதார்த்தம். இதைத்தான் அவர்கள் முதலாவதாக கற்றுக் கொடுத்தார்கள்.

அதன்பிறகு ஒரு சிட்டுக்கருவியை வைத்து பாடம் எடுத்தார்கள். சிட்டுக்குருவி கடலில் குடித்திருக்கும் துளிகள் போன்றதுதான் மனித இனத்தின் அறிவு. அல்லாஹ்வின் அறிவு கடலை விட பெரியது. அந்த கடலில் அந்த சிட்டுக் குருவி கொத்திக் குடித்த அளவுதான் மனிதர்கள் பெற்றிருக்கும் அறிவாகும்.

அதன்பிறகு மூன்று சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சம்பவத்தின் போதும் மூஸா நபி பொறுமையிழந்து சந்தேகங்களைக் கேட்டார்கள். ஆகவே அவர்களால் அதற்குமேல் கற்றுக் கொள்ளமுடியாமல் போனது. இதிலிருந்து கல்வி கற்பதற்கு பொறுமை அவசியம் என்பது விளங்குகிறது.

இரு அநாதைச் சிறுவர்களுக்கான புதையலை ஹிழ்ர் அலை அவர்கள் பாதுகாத்து வைத்தார்கள். காரணம் அந்த சிறுவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். ஆகவேதான் அவர்களின் சொத்துக்களை அல்லாஹ் பாதுகாத்தான். எனவே நாம் நல்லவர்களாக இருந்தால் நாம் மரணித்த பின்பும் நமது பிள்ளைகளை இறைவன் பாதுகாப்பான்.


மூஸா நபியும் முஹம்மது நபியும் :


நபியவர்கள் மிஃராஜ் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொரு வானத்திற்கும் ஏறிச் சென்றார்கள். அங்குள்ள நபிமார்களிடம் உரையாடினார்கள். அப்போது அவர்கள் மூஸா நபியையும் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்கள்.


இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் :


(மிஃராஜ் பயணத்தின் போது) நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 


அப்போது (வானத்தின் காவலரால்) 'யார் அது?' என்று எங்களிடம் கேட்கப்பட்டது. 


'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 


'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 


'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. 


'(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 


'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. 


'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.


நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள்இ 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். 


இவர் யார்? என நான் கேட்டதற்குஇ 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். 


நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்இ 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகழுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 


(அதன்பிறகு முஹம்மது நபி ஏழு வானத்தைத் தாண்டி அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு இறைவனிடம் உரையாடினார்கள். அல்லாஹ் அங்கு தொழுகையை கடமையாக்கி அறிவித்தான். அந்த கட்டளையைப் பெற்றுக்கொண்டு கீழே வந்தார்கள். அதுபற்றி இறைத்தூதர் கூறினார்கள் :)


'அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோதுஇ மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் சமுதாய நான் சென்றபோது 'உங்களுக்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன்.


'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவித்துள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவேஇ உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்றார்கள்.


நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். 


(அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 


'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்கிறார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். 


ஸஹீஹ் புகாரி : 349இ 3207. 


தனது சமுதாயத்தின் மூஸா நபிக்கு அதிக அக்கறை இருந்தது மக்களைப் பற்றி மூஸா நபி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள் என்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மூலம் அறிந்து கொள்ளலாம்.


ஏனெனில் தனது சமூகத்தைவிட முஹம்மது நபியின் சமூகத்தினர்தான் அதிகம்பேர் சொர்க்கம் செல்வார்கள் என்பதை அறிந்து அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். இது பனூ இஸ்ரவேலர்கள்மீது அவர்கள் கொண்டிருந்த அக்கறை வெளிப்படுகிறது.


அதன்பிறகு முஹம்மது நபியிடம்இ 'மக்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர்கள் ஐம்பது வேளைத் தொழுகையை நிறைவேற்ற மாட்டார்கள்' என்று கூறினார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு ஐந்து வேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இதன்காரணமாக நாம் மூஸா நபிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவர்களது வற்புறுத்தலின் காரணத்தால்தான் ஐந்து வேலையாக குறைக்கப்பட்டது.


தற்காலத்தில் மூஸா நபி கூறியது போன்று ஐந்து வேளைத் தொழுகையைக் கூட நிறைய மக்கள் கடைபிடிப்பதில்லை. இது மிக மோசமான தன்மையாகும். ஐந்து வேளைத் தொழுகையைக் குறைத்துக் கேட்பதற்கு முஹம்மது நபி வெட்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய காரியத்தில் நாம் ஈடுபடுவது வேதனைக்குரியதாகும்.



மறுமையில் மூஸா நபியிடம் அடைக்கலம் :


மறுமைநாளில் மஹ்ஷர் பெருவெளியில் நடைபெறும் அமளிதுமளிகளை நபியவர்கள் விவரித்தார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


மறுமை நாளில் (மஹ்ஷர் பெருவெளியில்) வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். 


இந்நிலையில் மக்கள் ஆதம்(அலை) அவர்களிடமும் பிறகு மூஸா(அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்.' 


 ஸஹீஹ் புகாரி : 1474 1475. 


இது இன்னொரு நபிமொழியில் விவரிக்கப்பட்டுள்ளது.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஒரு நாள் (விருந்தொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி பரிமாறப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை அவர்களுக்கு ஒன்று வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. (அதை) அவர்கள் தம் பற்களால் கடித்துஇ அதிலிருந்து சிறிது உண்டார்கள்.


பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்களில் சிலர் (சிலரை நோக்கி) "நீங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையைக் கவனிக்கவில்லையா? உங்கள் எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி)ப் பார்க்கமாட்டீர்களா?" என்று கேட்பார்கள். 


அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம்இ "(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்)" என்பர்.


(ஆகவேஇ மனிதர்கள்இ ஆதம் (அலை) அவர்களிடம் சென்றுஇ இறைவனிடம் பரிந்து பேசுமாறு கோரிக்கை வைப்பார்கள். அதை ஆதம் நபி மறுத்துவிடுவார்கள்.


பின்னர் நூஹ் அலை அவர்களிடம் கோரிக்கை வைப்பார்கள். அவர்களும் மறுத்துவிடுவார்கள்.


பின்னர் இப்றாஹிம் நபியிடம் கோரிக்கை வைப்பார்கள். அவர்களும் மறுத்துவிடுவார்கள்.)


(அப்போது இப்றாஹிம் நபிஇ) (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்" என்று மக்களிடம் கூறிவிடுவார்கள்.


உடனே மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்றுஇ "மூசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவேஇ) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் நாங்கள் நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறுவார்கள். 


அதற்கு மூசா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவேஇ) நீங்கள் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.


அதன்பிறகு ஈஸா நபியிடம் மக்கள் செல்வார்கள். அவர்களும் பரிந்து பேச மறுத்துவிடுவார்கள். இறுதியில் மக்கள் முஹம்மது நபியிடம் வருவார்கள். அவர்கள் மக்களுக்காக பரிந்து பேசுவார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 327. 


மூஸா நபி தவறுதலாக ஒரு கொலையை செய்தார்கள். அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள். அதை இறைவனும் மன்னித்துவிட்டான். இதை ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம். இருந்தபோதிலும் அந்த தவறுதலான கொலையை நினைத்து மூஸா நபி பயந்துகொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்ட சம்பவம். இதுதான் முஃமின்களின் பண்பு. செய்த வதறை நினைத்து அஞ்சக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தமுறை தவறு செய்யாமல் இருப்போம்.


மூஸா நபிக்கும் ஆதம் நபிக்கும் இடையிலான உரையாடல் :


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

              ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கிய எங்கள் தந்தையான ஆதம் அலை நீங்கள் தாமே!' என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். பதிலுக்கு ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம்இ 'அல்லாஹ் தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைக்கும் தூதர் பதவிக்காகவும்இ தன்னுடன் உரையாடுவதற்காகத் தேர்ந்தெடுத்துஇ தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள்.) அதற்கு மூஸா(அலை) அவர்கள்இ 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள்இ 'என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாகஇ தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள். என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் 'எழுதிவிட்ட' அல்லது 'விதித்துவிட்ட 'ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறார்கள்' என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இ 'ஆதம் (அலை) அவர்கள் (தம் இந்தப் பதிலால்) மூஸா(அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்' என்று கூறினார்கள். 

இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


 ஸஹீஹ் புகாரி : 4736. 



யார் பெரியவர் :


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :


ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார். 


அந்த முஸ்லிம்இ 'உலகத்தார் அனைவரையும் விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். 


அந்த யூதர்இ 'உலகத்தார் அனைவரையும் விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். 


அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். 


அந்த யூதர்இ நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். 


நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அதைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். 


(நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள்இ 'மூஸாவை விட என்னைச் சிறப்பாகச் செய்து (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில்இ மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போதுஇ மூஸா(அலை)இ (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகிஇ பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத்) தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2411. 


மூஸா நபியின் தோற்றம் :


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.


நபி (ஸல்) அவர்கள்இ 'இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள்) என்று தெரிந்து கொள்ள வேண்டிய தோழரான என்னைப் பாருங்கள். 


மூஸா(அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும்இ (கோதுமை போன்ற) பழுப்பு நிறத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிகப்பு நிற ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது 'அல் அஸ்ரக்' எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது' என்று கூறினார்கள்' எனச் சொல்ல கேட்டேன். 


ஸஹீஹ் புகாரி : 3355. 


மேலும்இ நபி(ஸல்) அவர்கள்இ தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவு கூர்ந்தார்கள். 


அப்போதுஇ 'மூஸா(அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; 'ஷனூஆ' குலத்து மனிதர்களைப் போல் உயரமானவர்கள்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 3396. 



No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...