ஏக இறைவனின் திருப்பெயரால்…
மீலாதும் மவ்லீதும் மார்க்கத்தில் உள்ளதா?
புத்தகமாக டவுன்லோடு செய்ய
மீலாதும் மவ்லீதும் மார்க்கத்தில் உள்ளதா
செய்யது காமித்
6381653548
இஸ்தப்ரக் பதிப்பகம்
பாகம் - 1 பிறந்தநாள் (மீலாத்) கொண்டாடலாமா?
இறைவன் என்பவன் படைத்தல்இ காத்தல்இ அழித்தல் ஆகியவற்றை மட்டும் செய்பவன் அல்ல. மாறாக மனிதர்களுக்கு வழிகாட்டும் வேலையையும் செய்பவன்தான் அல்லாஹ்.
அந்தவகையில் இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காக இறைத்தூதர்களை தேர்வு செய்து அவர்களிடம் இறைவேதங்களையும் கொடுத்து அனுப்பியுள்ளான்.
ஆகவே முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அமைந்துள்ளது.
குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஒரு மனிதன் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்ற அனைத்து விஷயங்களும் விளக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒரு முஃமின் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? எதற்கு முக்கியத்துவம் வழங்கத் தேவையில்லை? ஆகிய வழிகாட்டுதல்களும் அவற்றில் உள்ளது.
ஆகவே பிறந்தநாள் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா இல்லையா?
அவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இஸ்லாத்தில் பிறந்த நாளிற்கு எத்தகைய சிறப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பிறந்த நாள் குறித்து எவ்வித வழிகாட்டுதலும் குர்ஆனில் இடம்பெறவில்லை.
மாறாக ஒரு மனிதர் தியாகம் செய்த நாள்தான் சிறப்புக்குரியது என்பதை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது. அதற்குத்தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று இறைவன் வழிகாட்டியிருக்கிறான். உதாரணம்…
இஸ்மாயில் நபி
இறைவன் தனது திருமறையில் இஸ்மாயில் நபி பிறந்ததைப் பற்றிக் கூறுகிறான். ஆனால் அதற்கு எந்த சிறப்பும் இருப்பதாகக் கூறவில்லை.
இப்றாஹிம் நபி தனது தள்ளாத வயது வரையிலும் குழந்தை பாக்கியத்தை பெறவில்லை. அதன்பிறகே அவர்களுக்கு இஸ்மாயில் நபி பிறந்தார்கள்.
“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.) எனவேஇ பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
அல்குர்ஆன் 37 : 100-101
இஸ்மாயிலா நபி பிறப்பதற்கு முன்பே பொறுமைசாலி என்ற சிறப்போடு பிறந்தார்கள். இருந்தபோதிலும் அவர்கள் பிறந்த நாள் எது என்பதையோ அதை சிறப்புப் படுத்துங்கள் என்றோ அல்லாஹ் கூறவில்லை.
அதைப்போல் இஸ்மாயில் நபி அவர்கள் குழந்தையாக இருக்கும் போது மக்காவில் விடப்பட்டார்கள். அங்கு அவர்களும் அவர்களது தாயாரும் கஷ்டப்பட்டார்கள். அதன்பிறகு அவர்கள் வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்ததும் அவர்களை அறுக்குமாறு இப்றாஹிம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கு அவ்விருவரும் கட்டுப்பட்டனர். அதன் சிறப்பாகத்தான் குர்பானி என்ற கடமை நம்மீது விதிக்கப்பட்டது.
இவ்வாறு இஸ்மாயில் நபியின் தியாகத்தை முன்னிட்டு அவர்கள் தன்னை பலியாக்க முன்வந்த நாளை ஹஜ் பெருநாளாக அல்லாஹ் அறிவித்தான். இதை ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடி வருகிறோம்.
ஆக இதன்மூலம் பிறந்த நாளிற்கு எத்தகைய சிறப்பும் இல்லை என்பதும் தியாகம் செய்த நாள்தான் நினைவு கூரத்தக்கது என்பதையும் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
மூஸா நபி
மூஸா நபியின் பிறப்பு பற்றி இறைவன் தனது திருமறையில் தெரிவித்திருக்கிறான். அப்போது ஃபிர்அவ்ன் என்பவன் ஆட்சி செய்தான். அவன் கொடுங்கோலனாக இருந்தான். பனூ இஸ்ரவேலர்களின் ஆண்பிள்ளைகளை கொலை செய்ய வேண்டும் என்று அவன் உத்தரவு பிறப்பித்திருந்தான். அந்நேரத்தில்தான் மூஸா நபி பிறந்தார்கள். ஆகவேதான் அவரது தாயார் பயந்தார்.
அல்லாஹ் கூறுகிறான் :
மூஸாவின் தாயாரிடம்இ “இவருக்குப் பாலூட்டுவீராக! நீர் இவர் விஷயத்தில் பயந்தால் அவரை(ப் பெட்டியில் வைத்து)க் கடலில் போட்டு விடுவீராக! பயப்படாதீர்! கவலையும் கொள்ளாதீர். அவரை மீண்டும் உம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம். அவரைத் தூதர்களில் ஒருவராக்குவோம்” என்று அறிவித்தோம்.
அல்குர்ஆன் 28 : 7
மூஸா நபி இக்கட்டான சூழ்நிலையில் பிறந்தார்கள். அவர்களை அல்லாஹ்தான் பாதுகாத்தான். அந்தவகையில் அவர்களது பிறப்பு ஒரு தனித்துவமிக்கதுதான். ஆனாலும் அது எந்த நாள் என்பதைபன பற்றி அல்லாஹ் குறிப்பிடவில்லை.
அதன்பிறகு மூஸா நபி வளர்ந்து வாலிபராகி நபியாக ஆன பின்னர் ஃபிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் ஃபிர்அவ்ன் கோபம் கொண்டு அவர்களை அழிக்கத் துடித்தான். அப்போது மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேற முனைந்நடதார்கள். இதை அறிந்த ஃபிர்அவ்ன் அவர்களைத் துரத்தினான். அப்போது அல்லாஹ் கடல்களைப் பிளக்கச் செய்து பிர்அவ்னிடமிருந்து மூஸா நபியைக் காப்பாற்றினான்.
அல்லாஹ் கூறுகிறான் :
அப்போது நாம் மூஸாவிடம்இ “உம்முடைய கைத்தடியால் கடலை அடிப்பீராக!” என அறிவித்தோம். அக்கடல் பிளந்துஇ ஒவ்வொரு பகுதியும் பெரும் மலையைப் போல் ஆனது.
(துரத்தி வந்த) மற்றவர்களையும் அந்த இடத்திற்கு நெருங்கிவரச் செய்தோம்.
மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பிறகுஇ மற்றவர்களை (கடலில்) மூழ்கடித்தோம்.
அல்குர்ஆன் 26 : 63 - 66
இதில் மூஸா நபி ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்ந்து நின்றார்கள். அல்லாஹ்விற்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள். ஆகவேதான் இந்த நாளை ஆஷுரா தினம் என்று இஸ்லாம் அங்கீகரித்தது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோதுஇ யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள்இ "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றிஇ ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவேஇ மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவேஇ நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர்இ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்றுஇ நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2083.
ஆக இதிலிருந்துஇ மூஸா நபியின் பிறந்த தினத்தை இஸ்லாம் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர்கள் தியாகம் செய்ய முன்வந்த நாளை சிறப்பிற்குரிய நாளாக அறிவித்ததையும் அறிந்து கொள்ளலாம்.
பிறந்த நாளிற்கு எந்த சிறப்பும் இல்லை என்பதற்கும் தியாக நாளிற்குத்தான் சிறப்பு உண்டு என்பதற்கும் இதுவும் ஒரு ஆதாரமாகும்.
முஹம்மது நபி
முஹம்மது நபியின் பிறப்பு பற்றி குர்ஆனும் ஹதீஸும் கூறவில்லை.
நபியவர்களின் பிறந்த தினம் எது? என்பதில் கூட கருத்து முரண்பாடு காணப்படுகிறது. ஆக இது பிறந்த தினத்திற்கு எந்த சிறப்பும் இல்லை என்பதற்கான ஆதாரமாகும்.
அதைப்போல் முஹம்மது அவர்கள் நபியாக தேர்வு செய்யப்பட்ட நாளை சிறப்பு நாளாக இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.
முஹம்மது நபி தனது நாற்பதாவது வயதில் ஹிரா குகையில் வைத்து நபியாக ஆக்கப்பட்டார்கள். இந்த நாளின் இரவை லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) என்று இஸ்லாம் கூறுகிறது.
இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும்இ (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அதுஇ அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.
அல்குர்ஆன் 97 : 1 - 5
முஹம்மது நபியின் பிறப்பைப் பற்றி ஒன்றும் கூறாத இறைவன் அவர்கள் நபியாக்கப்பட்டதை சிறப்பித்துக் கூறியிருக்கிறான்.
இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!'
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2017.
இந்த நாள்தான் லைலத்துல் கத்ர் என்று தெளிவாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஐந்து நாள்களில் ஒரு நாளாக லைலத்துல் கத்ர் இரவு இருக்கும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் அதைத் தேடுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஆக இதிலிருந்து இஸ்லாம் பிறந்த நாளிற்கு எத்தகைய முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
கிரகணம்
மேலும் ஒருவருடைய பிறப்பில் எந்த சிறப்பும் இல்லை என்பதை நபிகளார் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை.
ஸஹீஹ் புகாரி : 5197.
இந்த நபிமொழி பிறப்பிற்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை என்பதை ஆணித்தரமாக அறிவிக்கிறது.
நபித்தோழர்களின் நடைமுறை
ஆகவேதான் நபித்தோழர்கள் ஹிஜ்ரி ஆண்டை நபியின் பிறப்பை வைத்து முடிவு செய்யவில்லை. பிறப்பிற்கு தனி முக்கியத்துவம் இருந்திருந்தால் அவர்கள் நபியின் பிறப்பின் அடிப்படையில் ஹிஜ்ரி ஆண்டை முடிவு செய்திருப்பார்கள்.
ஆனால் நபித்தோழர்களோ நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டைத்தான் தங்களுக்கான ஆண்டுக் கணக்கீடாக முடிவு செய்தார்கள்.
ஆக நபித்தோழர்களும் பிறப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதையும் அவர்களும் ஹிஜ்ரத் எனும் தியாகத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கினார்கள் என்பதையும் இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பிறந்த நாள் அல்ல பிறந்த கிழமை
அதைப்போல் இஸ்லாம் பிறந்த நாளிற்கு முக்கியத்துவம் வழங்காமல் பிறந்த தேதிக்கு முக்கியத்துவம் வழங்கும் நடைமுறையை காட்டித் தருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.-
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1547.
அல்லாஹ் ஆதம் நபியை வெள்ளிக்கிழமையில் படைத்ததாகவும் அதனால் வெள்ளிக்கிழமை சிறப்பிற்குரிய கிழமை எனவும் நபிகளார் தெரிவிக்கிறார்கள்.
ஆகவேதான் வெள்ளிக்கிழமையை சிறிய பெருநாளாக இஸ்லாம் அறிவித்திருக்கிறது. அந்நாளில் குளிக்க வேண்டும் எனவும் இருப்பதில் சிறந்த உடையை அணிய வேண்டும் எனவும் மார்க்கம் கட்டளையிட்டிருக்கிறது.
ஆக இதிலிருந்து பிறந்த நாளை சிறப்பிற்குரியதாக கருதுவது இஸ்லாத்தின் நடைமுறை அல்ல என்பதையும் தேதிக்குத்தான் அல்லாஹ் முன்னுரிமை அளித்துள்ளான் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்கு இன்னொரு விஷயமும் ஆதாரமாக உள்ளது.
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்இ திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2153.
இதிலும் நபிகளார் கிழமையைத்தான் சிறப்புப் படுத்தியிருக்கிறார்கள். திங்கள் கிழமையில் தான் பிறந்ததாகவும் அந்நாளில்தான் தனக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக இதிலிருந்து பிறந்த நாள் என்ன ஒன்று இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் இல்லை என்பதை விளங்கிக் காெள்ளலாம்.
பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றுமத கலாசாசாரம்
வரலாற்றைத் தேடிப் பார்க்கையில் பிறந்த நாள் என்பதை முதன்முதலாகக் கொண்டாடியவர்கள் எகிப்தியர்கள் எனத் தெரிகிறது. அவர்கள் தங்களது மன்னன் ஆட்சியில் ஏறிய நாளை பிறந்த நாள் என்று அறிவித்துக் கொண்டாடினார்கள். ஆனால் அனைவரும் கொண்டாடவில்லை.
கிரேக்கர்கள் தங்களது கடவுள்களுக்கு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
ரோமர்களில் அரசர்களளும் முக்கியஸ்தர்களும் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அவர்களது மார்க்கம் சிதைக்கப்பட்ட பிறகு அவர்கள் கிறிஸ்துமஸ் என்று பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் இதை உலகம் முழுக்கப் பரப்பினார்கள்.
ஆகவே இது மாற்றுமதக் கலாச்சாரமாக உள்ளது.
ஏனெனில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் என்று கூறி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
அதைப்போல் ஹிந்துக்களும் தங்களது கடவுளர்களான கிருஷணர்இ ராமர் போன்றவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திஇ ராம ஜெயந்தி என்று பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் நபிகள் நாயகமோ நபித்தோழர்களோ பிறந்தநாள் கொண்டாடியதாக எத்தகைய ஆதாரமும் இல்லை. ஏனெனில் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடியதில்லை.
ஆனால் பிற்காலத்தில் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று கூறி மீலாத் விழாக்களை சில இஸ்லாமியர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும் மார்க்கத்திற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை. ஏனெனில் இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல. மாறாக இது மாற்றுமத கலாச்சாரம்.
இதைப் பற்றி நபிகளார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத்-4031 (3512)
ஆக இந்த அடிப்படையில் நபிகளாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது மார்க்கத்திற்கு முரணான காரியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
மீலாத் விழாவைக் கொண்டாடுபவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம்இ நாங்கள் நபிகளார் மீது நேசம் வைத்திருக்கிறோம். ஆகவேதான் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்பதாகும்.
நாம் உண்மையிலேயே நபிகளார் மீது நேசம் வைத்திருந்தால் நபிகளார் காட்டிய வழியில்தான் நடந்திருப்போம். நபிகளார் திங்கள் கிழமை தான் பிறந்ததாகக் கூறினார்கள். மேலும் அந்த தினத்தில் நோன்பு வைப்பதை சிறந்தது என்று கூறினார்கள்.
ஆகவே ஒருவர் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமானால் அவர் ஒவ்வொரு திங்கள் கிழமையும் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அதுதான் நபிவழியைப் பின்பற்றியதாக அமையும். மாறாக இதைவிடுத்து ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது மாற்றுமத கலாச்சாரமாகும்.
பாகம் 2 - மவ்லீத் ஓதலாமா
பிறந்த நாள் கொண்டாடுவது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல என்பதையும் அது மாற்றுமத கலாச்சாரம் என்பதையும் பாகம் 1 ல் கண்டோம்.
ஆகவே மீலாது விழாவிற்காக மவ்லீத் ஓதுவதும் கூடாது என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமில்லாமல் மவ்லீத் என்பது நபியவர்களை புகழும் விதமாக கவிதை வடிவில் இயற்றப்பட்டுள்ளது.
ஆகவே நாம்இ
நபியை புகழலாமா?
கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
மவ்லீதில் இடம்பெற்றிருக்கும் வாக்கியங்கள் சரியானவைதானா? ஆகிய மூன்று விஷயங்களை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
நபியை புகழக்கூடாதா?
மவ்லீத் ஓதுபவர்கள்இ நாங்கள் நபிகளாரைப் புகழ்கிறோம் என்று கூறுகிறார்கள். மேலும் மவ்லீத் ஓதுவதைத் தடுப்பவர்கள் நபிகளாரை புகழ்வதைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆகவே நாம் நபியை புகழலாமா? கூடாதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நபியை புகழ்வது அனுமதிக்கப்பட்டது
நபிகளாரை புகழ்வது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ்வே நபிகளாரை புகழந்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ⭘
உமது புகழை உமக்கு உயர்த்தினோம்.
அல் குர்ஆன் - 94 : 4
وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَـٰلَمِينَ⭘
(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
அல் குர்ஆன் - 21 : 107
மேற்கூறிய இரண்டு வசனங்களும் நபிகளாரை அல்லாஹ் புகழ்ந்திருக்கிறான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும் நபியின் புகழை உயர்த்தியிருப்பதாகவும் அல்லாஹ் தெரிவிக்கிறான். ஆகவே அவர்களது புகழை தாழ்த்துவது முஸ்லிம்களுக்கு அழகல்ல.
எனவேதான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :
وَلَا يَرْغَبُوا۟ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِۦ
அவரது உயிரைவிடத் தமது உயிர்களை நேசிப்பதும் தகுதியானதல்ல!
அல் குர்ஆன் - 9 : 120
நபிகளாரைப் புகழும் விதமாக தங்களது உயிரைவிட அவர்களை நேசிப்பது கடமை என்று அல்லாஹ் தெரிவிக்கிறான்
வரம்பு மீறுதல் கூடாது
நபியை அல்லாஹ் புகழ்ந்துள்ளான். ஆகவே நாமும் அவர்களைப் புகழலாம். ஆனால் அந்த புகழ்ச்சியில் வரம்பு மீறுதல் இருக்கக்கூடாது.
இதை நபிகளார் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
எனக்காக எழுந்திருக்கக்கூடாது
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும்இ அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)இ
நூல்: அஹ்மத்-12526 (12068)
தான் வந்தால் தனக்காக எழுந்திருக்கக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இதிலிருந்து நபிகளார் தன்னை வரம்பு மீறி கண்ணியப்படுத்துவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆகவே அவர்களைப் புகழும் போதும் நாம் வரம்பு மீறக்கூடாது.
சஜ்தா செய்யக்கூடாது
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனுக்கு மனைவி ஸஜ்தா செய்வதை நான் அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் :திர்மிதி:1079
நாம் அல்லாஹ்விற்காக மட்டுமே சஜ்தா செய்ய வேண்டும். ஆகவேதான் நபியை கண்ணியப்படுத்துகிறோம் என்று கூறி அவர்களுக்கு சஜ்தா செய்வதை நபிகளார் விரும்பவில்லை. இதிலிருந்து நபிகளார் தன்னை அல்லாஹ் அளவிற்கு உயர்த்திக் கொள்வதை விரும்பவில்லை என்பது தெரிகிறது.
என்னை வரம்பு மீறி புகழாதீர்கள்
இதை நபிகளார் தனியாகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள்இ “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில்இ நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்’’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
நூல்: புகாரி-3445
ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்கள் :
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் - அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமிஇ 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள்இ 'இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4001.
மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் நபிகளாரை வரம்பு மீறி புகழக்கூடாது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.
ஆகவே நாம் நபிகளாரை புகழும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் வரம்பு மீறிய வார்த்தைகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு மவ்லீத் புத்தகங்களை ஆய்வு செய்வோம்.
அவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அதில் நபிகளாரை வரம்பு மீறி புகழும் வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
மவ்லீத் கிதாபிலுள்ள வரம்பு மீறல்
மவ்லீத் புத்தகங்களில் நபிகளாரைப் புகழ்கிறோம் என்று கூறி அவர்களுக்கு அல்லாஹ்வின் பண்புகளை கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு.
நோய் நீக்குபவர் யார்?
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’
சுபஹான மவ்லீத் பக்கம் 5
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’
சுபஹான மவ்லீத் பக்கம் 37
وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ
‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’
சுபஹான மவ்லீத் பக்கம் 23
மேற்கூறிய மூன்று வரிகளும் சுபஹான மவ்லீதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.
இந்த வாசகங்கள் நபிகளாரால் நோயை நீக்க முடியும் என்பதை தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் அல்லாஹ் மட்டுமே நோயை நீக்கக்கூடியவன் ஆவான். அதுதான் இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை.
அல்லாஹ் இப்ராகிம் நபி கூறியதாக திருமறையில் தெரிவிக்கிறான்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26 :80)
அதைப்போல் அய்யூப் நபியின் பிரார்த்தனையை இறைவன் தெரிவிக்கிறான்.
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போதுஇ அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 21:83)
அதைப்போல் முஹம்மது நபியையும் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍۢ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ⭘
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)
மேற்கூறிய மூன்று வசனங்களும் அல்லாஹ்வால் மட்டும்தான் நோயை நீக்க முடியும் என்பதை தெரிவிக்கிறது.
ஆகவே மேற்கூறிய மவ்லீத் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் நபியை வரம்பு மீறி புகழ்ந்த வாசகங்கள் என்பது தெளிவாகிறது.
இதுபோன்ற ஏராளமான வாசகங்கள் மவ்லீத் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இது மவ்லீத் ஓதக்கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.
கவிதைப் பற்றிய இஸ்லாத்தின் நிலை
கவிதைகள் படிப்பதை மார்க்கம் அனுமதித்திருந்தாலும் அதை வெறுப்பிற்குரிய ஒரு காரியமாகத்தான் இஸ்லாம் பார்க்கிறது.
ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் நபிகளாருக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கிறான்.
وَمَا عَلَّمْنَـٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ وَقُرْءَانٌۭ مُّبِينٌۭ⭘
நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு அவசியமானதும் அல்ல! இது நற்போதனையும்இ தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
அல் குர்ஆன் - 36 : 69
மேலும் மற்றொரு இடத்தில் கவிஞர்களைப் பின்பற்றக்கூடாது என்று தெரிவிக்கிறான்.
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ⭘
வழிகேடர்களே கவிஞர்களைப் பின்பற்றுகின்றனர்.
அல் குர்ஆன் - 26 : 224
அதுமட்டுமில்லாமல் நபிகளார் கவிதைப் படிப்பவரை ஷைத்தான் என்று ஏசியிருக்கிறார்கள்.
6032 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِىُّ حَدَّثَنَا لَيْثٌ عَنِ ابْنِ الْهَادِ عَنْ يُحَنِّسَ مَوْلَى مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ
بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ».
அபூசயீத் அல்குத்ரீ (ரரி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள் (முஸ்லிம் 4548)
இந்த நபிமொழிமூலம் கவிதைகள் மோசமானது என்பதை நபிகளார் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே நாம் நபிகளாரைப் புகழ வேண்டுமானால் அதற்கு கவிதைகள் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக குர்ஆனில் அவர்கள் பற்றி கூறப்பட்டுள்ள வசனங்களைக் கூறினாலே போதுமானது.
பொய்யான தகவல்கள்
மவ்லீத் கிதாபுக்களில் நிறைய பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மார்க்கத்தில் பொய் சொல்வது பாவமாகும். அதிலும் நபியவர்கள் மீது இட்டுக்கட்டி கூறுவது மாபெரும் பாவமாகும்
'என் மீதுஇ எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான்இ உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 108.
நபியின் மீதான பொய்கள் மவ்லீது கிதாபுகளில் இடம்பெற்றுள்ளது. அதற்கான உதாரணம்
இறைவன் முதலில் படைத்தது எது?
“أَنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ نُورَ مُحَمَّدٍ”
அல்லாஹ் முதலில் படைத்தது நபியின் ஔியைத்தான்
சுபஹான மவ்லீத் பக்கம் 16
இது நபியின் மீதும் அல்லாஹ்வின் மீதும் இட்டுக்கட்டி கூறியதாகும். ஏனெனில் அல்லாஹ் எதை முதலிலா படைத்தான் என்பதை நபிகளார் நமக்கு கூறியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"அல்லாஹ் முதலில் படைத்தது பேனா. பின்னர் அதை எழுதும்படி கட்டளையிட்டான். எனவே அது மறுமை நாள் வரை நடக்கும் அனைத்தையும் எழுதுகிறது."
(திர்மிதி 2155இ அபூதாவூத் 4700 மற்றும் அஹ்மத் 22705)
மேற்கண்ட நபிமொழி பேனாதான் முதலில் படைக்கப்பட்டதாக கூறுகிறது. ஆனால் மவ்லித் கிதாபுகளோ இதற்கு மாற்றமான கருத்தைத் தெரிவிக்கின்றன.
ஆதம் நபிக்கு முன்பே முஹம்மது நபி படைக்கப்பட்டார்களா?
وَأَوْجَدَ نُوره قبل خلق آدم بالقي عام وكان نُورُهُ يُسَبِّح اللهَ الوَاحِدَ القَهَّار سلو تسبح بتسبيحه الملائكة الأبرار فَلَمَّا خَلَقَ اللهُ تَعَالَى آدَمَ عَلَيْهِ السَّلام انتقل ذلك النُّورُ إِلَيْهِ وَصَارَ مَحْفُوظًا لَدَيْهِ
ஆதம் நபியை படைப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி தனது ஔியைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது நபியின் ஔி அடக்கியாள்பவனும் ஒற்றையானவனுமான அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருந்தது. நபியின் புகழைப் பின் தொடர்ந்து மலக்குமார்களும் புகழ்கிறார்கள். ஆதம் நபியை படைத்த போது அந்த ஔி ஆதம் நபிக்குள் புகுந்து பாதுகாக்கப்பட்டது.
சுபஹான மவ்லீத் 9ம் பக்கம்
அல்லாஹ் ஆதம் நபியைத்தான் முதன்முதலில் படைத்தான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஏனெனில் அவ்வாறுதான் அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌۭ فِى ٱلْأَرْضِ خَلِيفَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ⭘
“வழித்தோன்றல்களை ஏற்படுத்தும் ஒரு படைப்பை பூமியில் உருவாக்கப் போகிறேன்” என்று வானவர்களிடம் உமது இறைவன் கூறியபோதுஇ “குழப்பம் செய்துஇ இரத்தம் சிந்தக் கூடியவர்களையா அதில் நீ உருவாக்கப் போகிறாய்? நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அவன் கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 30
அல்லாஹ் ஆதம் நபியைப் படைக்கப் போவதாக மலக்குகளிடம் தெரிவிக்கிறான். அதற்கு மலக்குகள்இ நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று கூறுகிறார்கள்.
ஆக மலக்குகள் இயல்பாகவே அல்லாஹ்வைப் புகழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் அவர்களை அல்லாஹ் படைத்துள்ளான்.
அவர்கள் முஹம்மது நபியிடமிருந்து கற்று அல்லாஹ்வை புகழக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவ்வாறிருந்திருந்தால் முஹம்மது நபி இருக்கையில் மற்றவர்களை ஏன் படைக்கிறாய்? என்று கேட்டிருப்பார்கள்.
ஆக இது பொய்யான கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.
இவ்வாறு நபியின் மீதும் அல்லாஹ்வின் மீதும் பிற நபிமார்கள் மற்றும் மலக்குகளின் மீதும் பொய்யானக் கட்டுக்கதைகள் மவ்லீதில் கூறப்பட்டுள்ளது.
எனவே நாம் மவ்லீது ஓதினால் பொய்யைப் பரப்பியவர்கள் ஆவோம்.
மவ்லீது ஓதுவது மாற்றுமத கலாச்சாரம்
நபிகளார் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதையும் உரை நிகழ்த்துவதையும் ஒரு இபாதத்தாக வழிகாட்டியிருக்கிறார்கள்.
கூட்டாக அமர்ந்து கவிதை வரிகளையும் (வரம்பு மீறிய) புகழ்ப்பாடல்களையும் படிக்குமாறு நமக்குக் கற்றுத்தரவில்லை. இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல.
மாறாக ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் தான் அவர்களது வணக்கஸ்தலங்களில் கூட்டாக அமர்ந்து பாடல் படிப்பார்கள்.
ஹிந்துக்கள் கோயிலில் கூட்டாக அமர்ந்து பஜனை பாடுவார்கள். கிருஷ்ண ஜெயந்திஇ ராமர் ஜெயந்தி போன்ற அவர்களது கடவுளர்களின் பிறந்தநாளிற்கு இவ்வாறு பாடல் படிப்பார்கள்.
கிறிஸ்தவர்கள் சர்ச்சில் அமர்ந்து ஜெபம் பாடுவார்கள். கிறிஸ்துமஸ் அன்று கூட்டாக அமர்ந்து பாடல் பாடுவார்கள்.
ஆகவே இது மாற்றுமத கலாச்சாரம் என்பது தெளிவாகிறது.
அத்தகைய மாற்றுமத கலாச்சாரத்தைத்தான் முஸ்லிம்கள் காப்பியடித்துஇ மசூதியில் அமர்ந்து மவ்லீத் பாடுகிறார்கள்.
இதைப் பற்றி நபிகளார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத்-4031 (3512)
(பின்குறிப்பு : மவ்லீதில் ஏராளமான ஷிர்க்கான வாசகங்களும் கட்டுக்கதைகளும் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்தையும் நாம் குறிப்பிடவில்லை. உதாரணத்திற்கு ஒரு சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளோம். ஏனெனில் அவை அனைத்தையும் குறிப்பிட்டு பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. விரிவாக அறிய விரும்புபவர் அவற்றைப் படித்துக் கொள்ளலாம்.)
No comments:
Post a Comment