Tuesday, January 20, 2026

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை


அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்" என்று கேட்டார். உடனே மக்கள் அவரை நோக்கிச் சத்தமிட்டு, "சீச்சீ.. நிறுத்து!" என்று அதட்டினார்கள்.

​நபி (ஸல்) அவர்கள், "அவரை நெருங்கி வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார்.

​நபி (ஸல்): "உனது தாய்க்கு இச்செயல் நடப்பதை நீ விரும்புவாயா?"

இளைஞர்: "அல்லாஹ்வின் மீதாணையாக! மாட்டேன் அல்லாஹ்வின் தூதரே!"

நபி (ஸல்): "அவ்வாறே மக்களும் தங்கள் தாய்க்கு அதை விரும்பமாட்டார்கள்."

​பிறகு நபி (ஸல்): "உனது மகளுக்கு விரும்புவாயா?"

இளைஞர்: "மாட்டேன் அல்லாஹ்வின் தூதரே!"

நபி (ஸல்): "அவ்வாறே மக்களும் தங்கள் மகள்களுக்கு அதை விரும்பமாட்டார்கள்."

​இவ்வாறே அந்த இளைஞரின் சகோதரி, தந்தையின் சகோதரி (அத்தை), தாயின் சகோதரி (சின்னம்மா/பெரியம்மா) ஆகியோரைக் குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் அந்த இளைஞர் "மாட்டேன்" என்றே பதிலளித்தார்.

​பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் மீது கையை வைத்து, "இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.

​இதற்குப் பிறகு அந்த இளைஞர் எதையும் (பாவமான எதையும்) திரும்பிப் பார்க்கவே இல்லை.

​ஆதாரம்: அஹ்மத் (22211),


1. நிதானமும் மென்மையும் (Calmness and Gentleness)


​அந்த இளைஞரின் கோரிக்கையைக் கேட்டதும் தோழர்கள் கோபமடைந்து அவரை அதட்டினார்கள். ஆனால், நபிகளார் (ஸல்) அவர்கள் பதற்றமடையவில்லை.


​பாடம்: ஒருவர் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்ய நினைத்தாலும் அல்லது பேசினாலும், அவரிடம் கோபப்படாமல் மென்மையாக அணுகுவதுதான் அவரைத் திருத்துவதற்கான முதல் படி. 


சமூக ஊடகத்தில் ஒருவர் தவறான பாதையில் செல்கிறார் என்றால், அவரை 'Comments' பகுதியில் போட்டுத் தாக்குவது அவரை இன்னும் மோசமாக்கும். நபிகளார் அவரை "அருகில் அழைத்தது" போல, நாம் 'Direct Message (DM)' மூலம் தனிப்பட்ட முறையில் அன்பாகப் பேச வேண்டும்.


​2. அருகில் அமரவைத்தல் (Establishing Connection)


​நபிகளார் அவரைத் தள்ளி நின்று பேசச் சொல்லாமல், "அருகில் வா" என்று அழைத்து அமர வைத்தார்கள்.


​பாடம்: ஒருவருக்கு அறிவுரை சொல்லும்போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, அவர் மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்பதை உணரச் செய்ய வேண்டும். இது அவரை உளவியல் ரீதியாக நம் பேச்சைக் கேட்கத் தயார் செய்யும்.


சமூக ஊடகத்தில் தவறிழைத்த ஒருவரிடம் பேசும்போது தனிப்பட்ட முறையில் அவரிடம் உரையாட வேண்டும். அவர்களை அன்பான வார்த்தைகள் கொண்டு அழைக்க வேண்டும்.


​3. தர்க்க ரீதியான அணுகுமுறை (Logical Reasoning)


விபச்சாரம் செய்ய அனமேதி கேட்டவரிடத்தில் ​நபிகளார் (ஸல்) அவர்கள் "இது ஹராம் (தடுக்கப்பட்டது), நரகம் செல்வாய்" என்று எடுத்தவுடனேயே மார்க்கச் சட்டங்களைக் கூறவில்லை. மாறாக, மனித உணர்வுகளைத் தூண்டி, அது தவறு என்பதை அவராகவே உணர வைத்தார்கள்.


​பாடம்: ஒரு தீமையைத் தடுக்கும்போது, அந்தத் தீமையால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை (Empathy) உணர வைப்பது மிகச்சிறந்த போதனையாகும்.


எனவே சமூக வலைதளங்களில் யாராவது ஒரு தவறான கருத்தைப் பதிவிட்டால், உடனே "நீ காஃபிர்", "நீ நரகவாசி" என்று முத்திரை குத்தாமல், அவர்களைச் சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்ப வேண்டும். 


​4. உறவுகளின் மேன்மை


​"உன் தாய்க்கு இதை நீ விரும்புவாயா?", "உன் மகளுக்கு விரும்புவாயா?" என்ற கேள்விகள் மூலம், விபச்சாரம் என்பது ஏதோ ஒரு பெண்ணுடன் செய்வது மட்டுமல்ல, அது ஒருவருடைய தாய், மகள் அல்லது சகோதரியின் வாழ்க்கையைச் சீரழிப்பது என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.


​பாடம்: நாம் செய்ய நினைக்கும் ஒரு செயல் மற்றவர்களின் குடும்பத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தால், அந்தத் தீமையைச் செய்ய மனம் வராது. 


இத்தகைய உணர்வு ஒருவனுக்கு வந்துவிட்டால், அவன் இணையதளத்தில் பிற பெண்களின் புகைப்படங்களுக்குத் தவறான கமெண்ட் போடுவதையோ அல்லது ஆபாசத்தைப் பார்ப்பதையோ நிறுத்திவிடுவான்.


​5. தொடுதல் மற்றும் பிரார்த்தனை (Physical Comfort and Dua)


​அறிவுரை கூறி முடித்த பிறகு, நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் நெஞ்சில் கை வைத்து அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.


​பாடம்: ஒருவரைத் திருத்துவதில் பேச்சால் சொல்லும் அறிவுரை 50% என்றால், அவர் மீது காட்டும் அன்பும் (அரவணைப்பு) அவருக்காகச் செய்யும் பிரார்த்தனையுமே மீதி 50% வேலையைச் செய்கிறது.


இன்று நாம் ஆன்லைனில் ஒருவரைத் திருத்த முயலும்போது வாதங்களில் ஜெயிக்க நினைக்கிறோமே தவிர, அவருக்காக ஒரு நிமிடம் மனதார துஆ செய்வதில்லை.


எனவே சமூக வலைதளங்களில் ஒருவருடன் விவாதித்து முடித்த பிறகு அல்லது ஒரு தீய பதிவைக் கண்ட பிறகு, "யா அல்லாஹ்! இவருக்கு நேர்வழி காட்டு" என்று நமக்கும் அவருக்கும் இடையில் ரகசியமாகச் செய்யும் துஆ, ஆயிரக்கணக்கான கமெண்ட்களை விட அதிகச் சக்தி வாய்ந்தது.


​6. முழுமையான மாற்றம்


​இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் கூறும்போது: "நான் அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கும்போது, விபச்சாரம் என்பது எனக்கு உலகிலேயே ஆக வெறுப்பான ஒரு செயலாக மாறிவிட்டது" என்றார்.


​பாடம்: இதயப்பூர்வமாகச் சொல்லப்படும் அறிவுரை ஒரு மனிதனின் குணத்தையே அடியோடு மாற்றிவிடும்.

Monday, January 19, 2026

சமூக_ஊடகங்களில்_தவறைத்_திருத்துவதற்கு_நபிகளாரின்_முன்மாதிரி

 சமூக_ஊடகங்களில்_தவறைத்_திருத்துவதற்கு_நபிகளாரின்_முன்மாதிரி


அபூ ஹுரைரா(ரலி) மற்றும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். (இன்னும் சிலர்) அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.


அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள். 


பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 480. புகாரி 6128


இந்த ஹதீஸ்கள் (நபிகளாரின் பொன்மொழிகள்), தற்கால சமூக ஊடகச் சூழலுக்கு மிகவும் தேவையான உளவியல் மற்றும் அணுகுமுறைப் பாடங்களை வழங்குகின்றன.


​1. "திருத்துதல்" என்பது "தண்டித்தல்" அல்ல


​பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசி தவறு செய்கிறார் என்று தெரிந்தும், அவரை பாதியிலேயே தடுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: யாராவது ஒருவர் அறியாமையினால் தவறான கருத்தைப் பதிவிடும்போது, உடனே அனைவரும் சேர்ந்து அவரை 'ட்ரோல்' (Troll) செய்வதும், வசைபாடுவதும் அவரைத் திருத்தாது. மாறாக, அவர் இன்னும் பிடிவாதமாக மாறவே வழிவகுக்கும்.


​2. சூழலைக் கையாளும் நளினம் (Gentleness)


​"நீங்கள் நளினமாக நடக்கவே அனுப்பப்பட்டுள்ளீர்கள், கடினமாக நடக்க அல்ல" என்ற வரிகள் சமூக ஊடகப் பயனர்களுக்கு மிக முக்கியமான பாடம்.


​சமூக ஊடகப் பாடம்: ஒரு கருத்தை மறுக்கும்போது கண்ணியமான மொழியைப் பயன்படுத்த வேண்டும். கடுமையான சொற்கள் ஒரு கருத்தைச் சென்றடையச் செய்யாது, மாறாக வெறுப்பையே வளர்க்கும். 'விசைப்பலகை போர்வீரர்களாக' (Keyboard Warriors) இருப்பதை விட, நளினமான வழிகாட்டிகளாக இருப்பது அவசியம்.


​3. தவறை நீக்குவதில் கவனம் (Solution Oriented)


​நபிகளார் அந்த மனிதரை அடிக்கச் சொல்லவில்லை, மாறாக "அங்கு ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்" என்று தீர்வை நோக்கி நகர்கிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டுவதை விட, அந்தத் தவறு ஏற்படுத்திய பாதிப்பை எப்படிச் சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவரது தனிப்பட்ட குணத்தைச் சிதைக்காமல், அவர் செய்த தவற்றை மட்டும் சரி செய்வதே அறிவுடைமை.


​4. அறியாமைக்குக் கல்வி புகட்டுதல்


​சிறுநீர் கழித்தவரை அழைத்து, "இது அதற்கான இடமல்ல, இது இறைவனைத் துதிப்பதற்கான இடம்" என்று மிக மென்மையாக அந்த இடத்தின் புனிதத்தை விளக்குகிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: பல நேரங்களில் மக்கள் இணையத்தில் தவறான தகவல்களை (Misinformation) அறியாமையினால் பகிர்கிறார்கள். அவர்களைக் கேலி செய்வதற்குப் பதில், சரியான ஆதாரங்களை மென்மையாகத் தெளிவுபடுத்துவதே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.

Sunday, January 18, 2026

சமூக வலைதளங்களில் தீமையைத் தடுக்கும் வழிமுறை

 சமூக வலைதளங்களில் தீமையைத் தடுக்கும்  வழிமுறை


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தனது கையினால் தடுக்கட்டும்; அதற்கு முடியாவிட்டால் தனது நாவினால் (தடுக்கட்டும்); அதற்கும் முடியாவிட்டால் தனது உள்ளத்தினால் (வெறுக்கட்டும்). இது ஈமானின் (இறைநம்பிக்கையின்) பலவீனமான நிலையாகும்."


​ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (78), நஸாயீ (5008).


இதில் தீமையை மூன்று வழிமுறைகள் வாயிலாகத் தடுக்க வேண்டும் என்று நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள். இதை சமூக வலைதளங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


1) கரத்தால் தடுத்தல் (அதிகாரம் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கை)


​சமூக வலைதளங்களில் "கரம்" என்பது நமக்கிருக்கும் தொழில்நுட்ப அதிகாரத்தைக் குறிக்கும்.


​Report & Flag: ஆபாசம், வன்முறை அல்லது இஸ்லாத்திற்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்படும்போது, அந்தப் பதிவை 'Report' செய்து அதைத் தளத்திலிருந்து நீக்க முயற்சிப்பது.


​Admin Power: நீங்கள் ஒரு WhatsApp குழு அல்லது Facebook பக்கத்தின் அட்மினாக இருந்தால், அங்கு பகிரப்படும் தீய பதிவுகளை நீக்குவதும், சம்பந்தப்பட்டவரை எச்சரிப்பதும் "கரத்தால் தடுத்தல்" என்பதில் அடங்கும்.


​Unfollow/Block: தீமையைப் பரப்பும் பக்கங்களை 'Unfollow' செய்வது அல்லது 'Block' செய்வது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள செயலாகும்.


​2) நாவினால் தடுத்தல் (கருத்து மற்றும் விழிப்புணர்வு)


​சமூக வலைதளங்களில் "நாக்கு" என்பது உங்கள் பதிவுகள் (Posts) மற்றும் கருத்துகளை (Comments) குறிக்கும்.


​மறுப்புத் தெரிவித்தல்: ஒரு தவறான தகவல் பகிரப்படும்போது, அதற்கு நாகரிகமான முறையில் ஆதாரத்துடன் மறுப்புத் தெரிவித்து கமெண்ட் செய்வது.


​விழிப்புணர்வு பதிவுகள்: சமூகச் சீர்கேடுகள் நடக்கும்போது, அவற்றின் பாதிப்புகளை விளக்கி வீடியோக்களாகவோ அல்லது கட்டுரைகளாகவோ பதிவிடுவது.


​நல்லவற்றை ஏவுதல்: தீமையை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல், அதற்கு மாற்றான நன்மைகளை நோக்கி மக்களை அழைப்பது.


​3) உள்ளத்தால் வெறுத்தல் (தனிமனித ஒழுக்கம்)


​உங்களால் ஒரு தீமையைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க முடியவில்லை அல்லது நாவால் சொன்னால் பெரிய குழப்பம் வரும் என்ற சூழல் இருந்தால், குறைந்தபட்சம் அதை உள்ளத்தால் வெறுக்க வேண்டும்.


​ஈடுபடாமல் இருத்தல்: ஒரு தீய பதிவு வைரலாகிக் கொண்டிருக்கும்போது, அதற்கு 'Like' செய்யாமலும், அதை மற்றவர்களுக்குப் பகிராமலும் (Share செய்யாமல்) இருப்பது.


​விலகி இருத்தல்: தேவையற்ற விவாதங்கள், பிறரைத் தரக்குறைவாக விமர்சிக்கும் பதிவுகள் ஆகியவற்றைக் காணும்போது, "இது இறைவனுக்கு உகந்தது அல்ல" என்று உள்ளத்தால் வெறுத்து அந்தப் பக்கத்தை விட்டு வெளியேறுவது.


சுருக்கமாக தீமையைத் தடுப்பதாக எண்ணி, சமூக வலைதளங்களில் பிறரை ஏசுவதோ, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ கூடாது. நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டிய மென்மையையும், ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டே நமது டிஜிட்டல் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

Tuesday, December 30, 2025

திருமணம் ஒரு வழிபாடு

 திருமணம் ஒரு வழிபாடு


இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம். இறைவனால் தேர்வு செய்யப்பட்ட உண்மையான மார்க்கம். 


மார்க்கம் என்றால் வழித்தடம் என்று பொருள். சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழித்தடமாக இஸ்லாம் இருப்பதால் அதை மார்க்கம் என்றே அழைக்கிறோம். 


இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் வழிகாட்டுதல்கள் உள்ளன.


இறைவன் மனிதர்களைப் படைத்ததோடு அவனை அவன் போக்கில் நடந்துகொள்ளுமாறு விட்டுவிடவில்லை. மாறாகஇ அவன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்கின்ற அனைத்து விஷயங்களையும் திருக்குர்ஆன் மூலம் இறைவன் அறிவித்திருக்கிறான். மேலும் நபியவர்கள் மூலம் நடைமுறை முன்மாதிரியாகவும் அவற்றை நமக்குக் காண்பித்திருக்கிறான். 


அந்தவகையில் திருக்குர்ஆன் திருமணம் பற்றிய பல்வேறு சட்டங்களைக் கூறி அது தொடர்பாக வழிகாட்டியிருக்கிறது. 


மேலும் நபியவர்கள் திருமணத்தை ஒரு இபாதத் என்று கூறியிருக்கிறார்கள். சில மதங்களில்இ ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாமோஇ ‘திருமணம் செய்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று அறிவிக்கிறது. அந்த அளவிற்கு இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.


1) திருமணம் என்பது நபிவழி எனும் சுன்னத்தாகும்


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் (எவ்வாறு இருக்கும்? என்பது) குறித்து கேள்வி கேட்டனர். 


அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோதுஇ அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. 


பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)இ 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர். 


அவர்களில் ஒருவர்இ '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால்இ எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். 


இன்னொருவர்இ 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். 


மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் திருமணம் முடித்துக்கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். 


(அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நபியவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்தார்கள். அவர்களிடத்தில் அம்மூவர் கூறிய கூற்றுக்கள் தெரிவிக்கப்பட்டது.)


அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ (அந்தத் தோழர்களிடம்) வந்துஇ 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! 


அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட நான்தான் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். 


ஆயினும்இ நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். 


(இரவின் சில பகுதிகளில்) தொழுகவும் செய்கிறேன். (இரவின் சில பகுதிகளில்) உறங்கவும் செய்கிறேன். 


மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். 


(இதுதான் எனது சுன்னத் எனும் வழிமுறை) ஆகவே, (இதுபோன்ற) என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5063. 


மேற்கூறிய நபிமொழியில் இரண்டு விஷயங்களை நபியவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அவை :


திருமணம் என்பது நபிவழியைச் சார்ந்தது. ஆகவே அது ஒரு இபாதத் ஆகும். மற்ற மற்ற நபிவழியைப் பேணி நடந்தால் நமக்கு நன்மைகள் வாரி வழங்கப்படுவதைப் போன்று திருமணம் செய்வதன் மூலமும் நன்மைகள் வாரி வழங்கப்படும்.

அதைப்போல் ஒரு மனிதர் திருமணம் முடிக்க அனைத்து தகுதிகளையும் பெற்று வேண்டுமென்றே திருமணம் முடிக்காமல் இருந்தால் அவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. 


ஆக ஒரு மனிதன் திருமணம் செய்தால்தான் அவன் முஸ்லிமாகக் கருதப்படுவான். 


2) அனைத்து நபிமார்களும் திருமணம் செய்தவர்களே


அதனால்தான் இறைவன் அனைத்து நபிமார்களைக் குறித்துக் கூறும்போது, ‘அவர்கள் அனைவரும் திருமணம் முடித்தவர்கள்’ என்று அறிவிக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


(நபியே!) உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்.


அல் குர்ஆன் -   13 : 38


நபிமார்களின் பொதுவான நடைமுறைகளில் திருமணம் ஒன்றாகும் என்பது இதன்மூலம் தெரிகிறது. ஆகவே திருமணம் என்பது நபிவழி மட்டுமல்ல. அது நபிமார்களின் வழியும் கூட.

3) முதல் மனிதர் துணைவியோடுதான் பூமிக்கு அனுப்பப்பட்டார்


அதைப்போல் அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்கும்போது முதல்மனிதராக ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். அவர்களை மட்டும் படைத்து அப்படியே விட்டுவிடாமல் அவர்களுக்கு துணையாக ஹவ்வா அலை அவர்களையும் படைத்தான். 


ஆதம் நபியை பூமிக்கு அனுப்பி வைக்கும்போது தனிமனிதராக அனுப்பாமல் ‘கணவன் மனைவி’ என்றொரு குடும்பமாகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான். 


மனிதச் சமூகம் ஒரு குடும்பத்திலிருந்து பிறந்து பல குடும்பங்களாக பல்கிப் பெருக வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஆகவேதான் அல்லாஹ் திருமணத்தை ஒரு வழிபாடாக அமைத்துத் தந்திருக்கிறான்.



4) திருமணத்தை வலியுறுத்திய நபிகளார்


ஆகவேதான் திருமணத்தை நபியவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


'உங்களில்இ திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். 


யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.


ஸஹீஹ் புகாரி : 1905. 


மேற்கூறிய நபிமொழியில் ‘திருமணம் செய்வதற்கான வசதிகளைப் பெற்றவர் திருமணம் செய்யட்டும்’ என்று கட்டளை வாக்கியமாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இது ‘திருமணம் வலியுறுத்தப்பட்ட ஒரு காரியம்’ என்பதை குறிக்கிறது.


5) நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்


ஆகவேதான் நபித்தோழர்களும் திருமணம் விஷயத்தில் பிறரை ஆர்வமூட்டுபவர்களாக இருந்துள்ளனர்.


அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்கள் :


நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்துஇ 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். 


பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். 


அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். 


திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். 


நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள்இ நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: 


''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5065. 


ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :


என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி)இ 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான்இ 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில்இ இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5069. 


எனவே திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு காரியமாகும். ஆகவேதான் அவற்றை நபியவர்களும் சஹாபாக்களும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.


இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்: 


“எனது வாழ்நாளில் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதி இருந்துஇ நான் மரணமடைந்துவிடுவேன் என்று முன்னரே எனக்குத் தெரிந்துஇ திருமணம் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் எனக்கு இருக்கும் என்றால் திருமணம் செய்யாமல் இருப்பதன் மூலம் ஏற்படும் சோதனைக்குப் பயந்து நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்!”


இப்னு மஸ்ஊத் ரலி ஸஹாபாக்களில் அறிஞராக இருந்தவர்கள். அதிகமான மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் இந்த கூற்று இஸ்லாத்தில் திருமணம் வலியறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.


மேலும் திருமணம் முடிக்காமல் இருப்பதை நபியவர்கள் தடையும் செய்திருக்கிறார்கள்.

6) திருமணம் முடிக்காமல் இருப்பது பாவம்


ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள் :


உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள (அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். 


அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். 


ஸஹீஹ் புகாரி : 5073, 5074. 


நபியவர்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அதைப்போல் ஆண்மை நீக்கம் செய்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. ஏனெனில் திருமணம் செய்தால்தான் அவன் உண்மையான முஸ்லிமாக இருப்பான்.


இதுமட்டுமில்லாமல் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அல்லாஹ்வும் வலியுறுத்தியுள்ளான்.


7) திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை


அல்லாஹ் கூறுகிறான் :


உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், உங்கள் ஆண் - பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வசதியளிப்பான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.


அல் குர்ஆன் -   24 : 32


நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் அடிமைகளுக்குக் கூட திருமணம் முடித்து வைக்குமாறு இறைவன் வலியுறுத்தியுள்ளான். தற்காலத்தில் அடிமை முறை இல்லை. ஆனால் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் நம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் முடிக்கும் வயது வந்துவிட்டால் அவர்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் முதலாளிகள் ஈடுபட வேண்டும். அதற்கான பொருளாதாரத்தை கொடுத்து உதவ வேண்டும். அது நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரும்.


அதைப்போல் இவ்வசனத்தில் இன்னொரு விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான். அதாவது இன்று நிறையபேர் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றால் நிறைய பொருளாதாரம் தேவைப்படும் என்று கூறி திருமணத்தை தள்ளிபோடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ திருமணம் முடித்தால் பொருளாதாரத்ததை அருளாக வழங்குவதாகக் குறிப்பிடுகிறான். ஆகவே இதுபோன்ற சாக்குபோக்குகளைக் கூறி திருமணத்தைத் தள்ளிப்போடுவது சரியல்ல.


8) அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்


ஆகவேதான் அல்லாஹ் திருமணம் முடிப்பவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவிக்கிறான்.


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் : 


"மூன்று நபர்களுக்கு உதவுவதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ளான். 


இறைப்பாதையில் போராடுபவர்,

விடுதலைப் பத்திரம் எழுதியபின் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பும் அடிமை,

கற்பைப் பாதுகாப்பதற்காக திருமணம் செய்ய விரும்புவர்."


திர்மிதீ 1655, இப்னு மாஜா 2516


தனது கற்பைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் திருமணம் செய்தால் அவனுக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ் திருமணம் செய்வதை வலியுறுத்துகிறான்.


10) திருமணம் தீவிரமானது


முத்தாய்ப்பாக நபியவர்கள் திருமணம் செய்வதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது : 


மூன்று விஷயங்கள் உள்ளது. அவற்றை தீவிரமானதாகக் கருதினால் தீவிரமானதாக இருக்கும். நகைச்சுவையாகக் கருதினாலும் தீவிரமானதாகத்தான் இருக்கும். அவை : திருமணம்இ விவாகரத்துஇ விவாகரத்து செய்த பின் மீண்டும் (மனைவியை) அழைத்துக் கொள்ளுதல்.


இப்னு மாஜா 2039.


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாவது:


"மூன்று செயல்களை வினையாகச் செய்வதும் வினைதான்; விளையாட்டாகச் செய்வதும் வினைதான். அவை: 1. திருமணம் 2. மணவிலக்கு 3. மணவிலக்கு அளிக்கப் பட்டுக் காத்திருப்பில் இருக்கும் பெண்ணைத் திரும்ப அழைத்தல்.


அபூதாவூது 2194 (தமிழில் 1875), திர்மிதீ 1184


திருமணம் செய்வது நமது ஈமானையும் கற்பையும் பாதுகாக்கும் அம்சமாக இருப்பதால் அவற்றிற்கு தீவிரத்துவம் காட்ட வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது. ஆகவே திருமணம் விஷயத்தில் நாம் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.


11) உலக நன்மை


அதைப் போல் திருமணம் செய்வதால் உலகியல் நன்மைகளும் ஏற்படும். இதைப்பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


1959 ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை (வுhந Pநழிடந'ள நேறள pயிநச என்ற பத்திரிகையில்) பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா சபை) ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகின்றது: 


'திருமணம் செய்து வாழ்பவர்கள் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களைவிட நீண்ட நாள்கள் உயிர் வாழ்கின்றார்கள். அவ்வாறு திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் விதவைகள்இ மணவிலக்குப் பெற்றவர்கள்இ பிரம்மச்சாரிகள் யாராக இருந்தாலும் சரியே'.


அறிக்கை மேலும் இவ்வாறு கூறுகிறது: 'உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் அதிகமானோர் சிறுவயதிலேயே திருமணம் செய்யத் துவங்கியுள்ளனர். ஆயினும் திருமணம் செய்து வாழ்பவர்களின் ஆயுட்காலம் நீண்டு கொண்டே செல்கிறது'.


1958ஆம் ஆண்டு உலகம் முழுவது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஐ.நா சபையால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: 'திருமணம் செய்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்கள்இ திருமணம் செய்யாமல் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும். 


இதன் அடிப்படையில் ... திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேபோன்று பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்று கூறலாம். கர்ப்ப காலங்களிலும் பிரசவ வேளைகளிலும் ஏற்படும் ஆபத்துகள் முன்பைவிட இப்போது மிகவும் குறைந்துள்ளன. 

(பார்க்க ஃபிக்ஹுஸ் ஸுன்னா தமிழாக்கம் 6 வது பாகம்)


திருமணம் செய்வது தகுதிவாய்ந்த முஸ்லிம்கள்மீது கட்டாயக்கடமை என்று அல்லாஹ் அறிவித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் திருமணம் முடிப்பதை கட்டாயமாக்குவதற்காக அல்லாஹ் திருமணத்தையும் ஆயுளையும் ஒன்றிணைத்துள்ளான்.


ஆகவே இதன்மூலமும் இறைவன் திருமணம் செய்வதை அனைவர் மீதும் கடமையாக ஆக்கியிருக்கிறான்.



Sunday, December 21, 2025

இஸ்லாமிய வரலாறு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...




 இஸ்லாமிய வரலாறு


ஆசிரியர் : அக்பர் ஷா நஜீபாபதி


முழு புத்தகத்தை டவுன்லோடு செய்ய 

இஸ்லாமிய வரலாறு - பாகம் 1



முன்னுரை


​அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை


​உலக வரலாற்றை உற்றுநோக்கும்போது ஒரு உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. 


அது எதுவென்றால்இ உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும்இ ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும்இ சீர்திருத்தவாதிகளும்இ வழிகாட்டிகளும் மற்றும் மத நிறுவனர்களும் ஒரே இறைவனையே நம்பினார்கள் என்பதாகும். 


அவர்கள் அனைவரும் ஒரு உயர்ந்த படைப்பாளனின் இருப்பைப் பற்றி தங்கள் மக்களுக்கு உணர்த்த முழு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆதம்இ நூஹ்இ இப்ராஹீம்இ மூஸா மற்றும் முஹம்மது (அலை) ஆகியோர் ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்த போதிலும்இ அவர்களின் போதனைகளில் 'படைப்பாளனின் ஏகத்துவம்' (ஒரே இறைவன் எனும் கொள்கை) பொதுவான காரணியாக இருந்தது.


​கிருஷ்ணர்இ ராமச்சந்திரன்இ கௌதம புத்தர் மற்றும் குரு நானக் ஆகியோர் இந்தியாவில் தோன்றினர்; கைகுபாத் மற்றும் ஜோராஸ்டர் ஈரானிலும்; கன்பூசியஸ் சீனாவிலும்; லுக்மான் கிரேக்கத்திலும்; யூசுப் எகிப்திலும்; லூத் சிரியா மற்றும் பாலஸ்தீனத்திலும் தோன்றினர் - ஆனால் இவர்கள் அனைவருடைய போதனைகளின் அடிப்படையிலும் இறைவனின் ஏகத்துவமே அமைந்திருந்தது.


​கிட்டத்தட்ட அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும்இ முதியவர்களும் இளைஞர்களும்இ ஆண்களும் பெண்களும்இ கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் என அனைவரும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நம்புகிறார்கள். 


மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலரே இறைவனின் பெயரை உச்சரிக்க மறுக்கலாம். ஆனால் அவர்களின் இதயங்களுக்குள்ளும் ஒரே இறைவனது இருப்பை உணர்கிறார்கள். 


இந்த பிரபஞ்சத்தின் காரணம் மற்றும் விளைவு (உயரளந யனெ நககநஉவ) செயல்முறையானதுஇ ஏதோ ஒரு மகா ஞானம் மிக்க சக்தியால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஞானமிக்க மற்றும் நன்நோக்கம் கொண்ட சக்தியே சர்வவல்லமையுள்ள அல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது.


​அறிஞர்களின் ஏகோபித்த நம்பிக்கையையும்இ சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்பையும் மனநலம் குன்றியவர்களைத் தவிர வேறு யாரும் நிராகரிக்க முடியாது.


​முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார்


​ரோமின் பிரம்மாண்டமான பேரரசு ஏற்கனவே துண்டு துண்டாக உடைந்திருந்தது. அதன் அரை-மிருகத்தனமான சட்டங்களும் அரசியலமைப்பும் சிதைந்துஇ அதிலிருந்த நற்பண்புகள் அனைத்தும் அழிந்து போயின. 


பாரசீகப் பேரரசு ஊழல் மற்றும் கொடுமைகளின் களஞ்சியமாக மாறியிருந்தது;


 சீனாவும் துர்கிஸ்தானும் இரத்தக் களரி மற்றும் கொடூரத்தின் புகலிடமாகத் தெரிந்தன. 


இந்தியாவில் அசோகர் மற்றும் கனிஷ்கரின் ஆட்சிகள் இல்லாமல் போயின. மகாராஜா விக்ரமாதித்யனின் ஆட்சியைப் பற்றி யாரும் நினைக்கக்கூட முடியவில்லை; புத்த மதத்திற்கோ அல்லது பிராமண மதத்திற்கோ அங்கு முன்மாதிரிகள் இல்லை.


​புத்தரை மதிப்பவர்கள்இ அதிகாரம் மற்றும் உலக இன்பங்களுக்காக அல்லது நம்பிக்கையின் பலவீனத்தால் வெட்கக்கேடான செயல்களைச் செய்தனர். 


கிருஷ்ணரின் ஜபமாலையை ஓதுபவர்கள்இ படைப்புகளிலேயே மிகவும் கண்ணியமான மனிதனைஇ காய்கறிகள் மற்றும் கற்களுக்கு முன்னால் சிரவணக்கம் (pசழளவசயவந) செய்ய வைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. 


ஐரோப்பா ஒரு காடு போலவும்இ அங்கிருந்த மனிதர்கள் இரத்த வெறி பிடித்த மிருகங்களைப் போலவும் இருந்தனர் என்றால்இ அரேபியா முழுவதும் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. 


சுருக்கமாகச் சொன்னால்இ உலகில் எங்குமே மனித இனம் அதன் தூய மனிதத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் ஒட்டியிருக்கவில்லை. 


உலகம் முழுவதும் இருண்டிருந்த இத்தகையச் சூழலில்இ பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பற்றி சிந்திப்பது இந்திய மக்களின் கடமையாக இருந்தது. 


அதில் ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் கூறுகிறார்:


​"அர்ஜுனா! எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோஇ அப்போதெல்லாம் நான் நற்பண்புகளைக் காக்கவும்இ தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் தோன்றுகிறேன்."


​ஜோராஸ்டரின் கட்டளைகளின்படி ஒரு வழிகாட்டியைத் தேடி வருவது பாரசீகர்களின் கடமையாக இருந்தது. 


'பாரான்' மலைத்தொடரின் சிகரங்களிலிருந்து வெளிச்சம் தோன்றுவதற்காகக் காத்திருப்பதும்இ புறக்கணிக்கப்பட்ட கல்லை மூலைக்கல்லாக (உழசநெசளவழநெ) மாற்றுவதும் யூதர்களின் கடமையாக இருந்தது. 


இப்ராஹீமின் பிரார்த்தனையையும்இ இயேசுவின் (ஈஸா) நற்செய்திகளையும் தங்களின் நம்பிக்கையின் மையமாக மாற்றுவது கிறிஸ்தவர்களின் கடமையாக இருந்தது. 


ஆனால் உலகளாவிய ஊழலும்இ சீர்குலைவும்இ இருளும் மனிதக் கண்களை மிகக் குருடாக்கிவிட்டன. இதனால் எவருக்கும் தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோ அல்லது மருந்து தேடிச் செல்லும் அறிவோ இருக்கவில்லை.


இத்தகையதொரு காலக்கட்டத்தில்இ அரேபியா போன்ற ஒரு நிலப்பரப்பில்இ பலதெய்வ வழிபாடு எனும் சீர்கேடுஇ உருவ வழிபாட்டின் இருள்இ ஊழல் மற்றும் சீர்குலைவு எனும் மாசுஇ மற்றும் தீய பழக்கவழக்கங்கள் மற்றும் வெட்கக்கேடான செயல்களின் அழுக்குகளை அகற்றுவதற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். 


'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற முழக்கத்தை எழுப்பிஇ மனிதர்களைப் போன்ற உருவத்தில் இருந்தவர்களை உண்மையான மனிதர்களாகவும்இ உயரிய ஒழுக்கநெறி கொண்டவர்களாகவும் மாற்றும் புனிதமான கடமையை அவர் ஆற்றினார். 


அத்தகைய மேன்மையான மக்களைஇ இருளை ஒளியாகவும்இ அநீதியை நீதியாகவும்இ குழப்பத்தை அமைதியாகவும்இ நேர்மையின்மையை நேர்மையாகவும் மாற்றும் இறைநேசர்களாக அவர் உருவாக்கினார்; வழிதவறியவர்கள்இ சிலையாராதனை செய்பவர்கள் மற்றும் தீயவர்களிடமிருந்து தீமைகளைக் களைந்து தூய முஸ்லிம்களை செதுக்கினார்.


​நூஹ் (அலை) அவர்கள்இ ஈராக் மற்றும் அரேபியாவின் வழிதவறிய மக்களை நேர்வழிக்கு கொண்டு வர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில்இ "என் இறைவா! பூமியில் நிராகரிப்பாளர்களில் ஒருவரையும் விட்டு வைக்காதே!" (71:26) என்று பிரார்த்தித்துஇ சூழ்நிலை காரணமாக அவர்களை அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 


மூஸா (அலை) அவர்கள் எகிப்தியர்களுக்கும்இ அந்த அகந்தை கொண்ட ஃபிர்அவ்னிய அரசனுக்கும் நேர்வழியைக் காட்ட கடுமையாக முயன்றார்கள். ஆனால் இறுதியில்இ மூஸாவும் இஸ்ரவேலர்களும் கண்ட காட்சியைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:


​"...நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் (கடலில்) மூழ்கடித்தோம்." (2:50)


​இதற்காகத்தான் மகாராஜா ராமச்சந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து அரக்கர்களுடன் போரிட்டார்; ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் அர்ஜுனனை குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் போரிடத் தூண்டினார். மேலும் பாண்டவர்களின் கைகளால் கௌரவர்களை அழிக்க வேண்டியிருந்தது. 


ஈரானில்இ ஜோராஸ்டர் தனது போதனை மற்றும் மதப் பிரச்சாரத்திற்கு இஸ்பந்தியார் மற்றும் கியானி பேரரசின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டார்.


​ஆனால், அறிஞர்களை வந்தடைந்துள்ள பண்டைய வேதங்களும் சமூக மரபுகளும் ஒரு விஷயத்தில் ஏகோபித்து நிற்கின்றன: அதாவது, 25 ஆண்டுகளுக்கும் குறைவான குறுகிய காலத்தில்இ உலகின் மிக மோசமான நாடும்இ அறியாமை கொண்ட முரட்டுத்தனமான மக்களும்இ பூமியின் மிகச்சிறந்த ஆசிரியர்களாகவும்இ நாகரீகமானவர்களாகவும்இ ஒழுக்கம் மிக்கவர்களாகவும் மாறியதற்கு வேறு எந்த மத நிறுவனரோ அல்லது வழிகாட்டியோ முன்மாதிரியாக இல்லை. 


நூறு ஆண்டுகளுக்கும் குறைவாகஇ அதாவது 80 ஆண்டுகளில்இ முஹம்மது (ஸல்) கொண்டு வந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரைஇ அதாவது சீனாவின் கிழக்குக் கரை வரை மற்றும் ஒட்டுமொத்த நாகரீக உலகத்தையும் தங்களுக்குள் கொண்டு வந்தனர்.


 நமது இந்த உலகம் இத்தகைய அற்புத வெற்றிக்கு வேறு எந்த உதாரணத்தையும் காட்ட முடியாது. 


இஸ்லாத்தின் போதனைகள் அதன் உயரிய குணங்களுக்காக மற்ற அனைத்து மதக் கோட்பாடுகளை விடவும் மேலானதாக இருக்கும்போதுஇ மனித இனத்திலேயே மிகச்சிறந்தவராகவும்இ இறைத்தூதர்களின் முத்திரையாகவும்இ அகிலத்தின் அருட்கொடையாகவும் விளங்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் அந்தஸ்தை யாரால் கேள்வி கேட்க முடியும்? 


மேலும், அந்த இறைத்தூதர் கொண்டு வந்த புனிதமான குர்ஆன் ஈடுஇணையற்றது மற்றும் மறுக்க முடியாதது என்ற இறைவனின் கூற்றை சவாலுக்கு உட்படுத்த யாருக்குத் துணிச்சல் வரும்? 


குர்ஆன் கூறுவது போல:


​"நிச்சயமாக நாமே இந்த நற்போதனையை (குர்ஆனை) இறக்கினோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்." (15:09)


சமூகங்களை முன்னேற்றம் மற்றும் செழுமையின் பாதையில் செலுத்துவதற்கும்இ அவமானத்திலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அவற்றைக் காப்பாற்றுவதற்கும் வரலாறு மிகவும் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க ஆதாரமாகத் திகழ்கிறது. சமூகங்கள் எப்போதெல்லாம் பெரும் உயரங்களை எட்டியுள்ளனவோஇ அப்போதெல்லாம் அவை வரலாற்றிலிருந்துதான் உத்வேகத்தைப் பெற்றுள்ளன.


​மனிதனின் கண்ணியத்திற்காகவும்இ இம்மை மற்றும் மறுமை வெற்றிக்காகவும் வரலாற்றைப் படிப்பது மிகவும் அவசியம் என்று திருக்குர்ஆனும் நமக்குக் கூறியுள்ளது. 


கடந்த கால சமூகங்களின் நிகழ்வுகள்இ சில சமூகங்கள் தங்கள் தீய செயல்களின் சுமையைத் தாங்கின என்பதையும்இ மற்ற சில சமூகங்கள் தங்களின் நற்செயல்களால் மகத்தான வெற்றியைப் பெற்றன என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன. 


ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா போன்றோரின் நிகழ்வுகளும், பிர்அவ்ன், நம்ரூத், ஆது, சமூது கூட்டத்தினரின் அவலநிலைகளும் திருக்குர்ஆனில் வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது தூக்கத்தை வரவழைப்பதற்காகவோ கூறப்படவில்லை. மாறாகஇ நம்மிடம் நற்செயல்களைச் செய்யும் தைரியத்தை உருவாக்கவும்இ தீமைகளிலிருந்து விலகி இருக்கவும்இ நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றவுமே அவை கூறப்பட்டுள்ளன.


​மனிதகுலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைத்தூதர்கள்இ மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களின் கடந்த கால வரலாற்றை எப்போதும் நினைவூட்டியுள்ளனர். 


உணர்வற்ற நிலையில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய உலகத் தலைவர்கள் அல்லது சீர்திருத்தவாதிகள் எவரும் கடந்த கால நிகழ்வுகளைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. 


இதன் காரணமாகவேஇ ஒவ்வொரு சொற்பொழிவாளரும் தனது நேயர்களை ஊக்குவிக்கவும் சுறுசுறுப்பாக்கவும் சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகிறார்கள். 


கடந்த கால நாயகர்களில் கூடஇ நமது சமூகத்தோடும் மதத்தோடும் நெருங்கிய தொடர்புடையவர்களையே நாம் குறிப்பிடுகிறோம். அவர்களே நமது வாழ்க்கையில் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்கள். 


ருஸ்தம், இஸ்பந்தியார் மற்றும் குஸ்தாப் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் செயல்கள் ஜைனர்கள் அல்லது இந்தியர்களை விட ஈரானியர்களிடமும் பார்சிகளிடமும் அதிக மத ஊக்கத்தையும்இ நீதியையும் தூண்டக்கூடும். 


அதேபோல் பீமன், அர்ஜுனன், விக்ரமாதித்யன் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோரின் கதைகள் கிறிஸ்தவர்களை விட இந்துக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


​வரலாறு ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் இன்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு சமூகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அதை உயிருடன் வைத்திருக்கவும் இதுவே ஒரே வழி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவேஇ புகழ்பெற்ற வரலாறு இல்லாத நாடுகள் கூடஇ தங்கள் இளைஞர்களின் மனதை நிரப்புவதற்காகவும் அவர்களை நம்ப வைப்பதற்காகவும் புனையப்பட்ட கதைகளையும் கற்பனைகளையும் தங்கள் வரலாறு என்ற பெயரில் முன்வைப்பதை நாம் பார்க்கிறோம்.


​தங்கள் மக்களின் கடந்த காலப் பெருமையை உணர்த்துவதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலப் பெருமை இல்லாமல் எந்தவொரு சமூகமும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க மற்றவர்களுடன் போட்டியிட முடியாது. 


இதனால்தான் ஒரு சமூகத்திற்கு எதிரானவர்கள்இ அந்த சமூகத்தின் வரலாற்றைத் திரித்துஇ அந்த மக்களைத் தங்கள் வரலாற்றைப் பற்றிய அறியாமையிலும் கவனக்குறைவிலும் வைக்க முயல்கிறார்கள்.


முஸ்லிம்களின் மகத்தான சாதனைகள்


​உலக நாடுகளுக்கிடையில்இ மகத்தான செயல்களாலும் அற்புதமான சாதனைகளாலும் நிறைந்திருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமூதாயம் மட்டுமே. 


எல்லாவற்றிற்கும் மேலாகஇ அவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் நாயகர்களின் சாதனைகளைப் பற்றி சோதிக்கப்பட்ட மற்றும் நம்பகமான அறிவையும் தகவல்களையும் கொண்டுள்ளனர்; அவை மறுக்க முடியாதவை மற்றும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை. 


முஸ்லிம்களுக்கு ஹோமரின் 'இலியட்' (Iliat) மற்றும் 'ஒடிஸி' (odisi) ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே போல் மகாபாரதமும் இராமாயணமும் அவர்களுக்குத் தேவையில்லை. 


ஏனெனில், அவர்களின் உண்மையான வரலாற்றில் இலியட், ஒடிஸி, மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகியவற்றில் உள்ளதை விட மிகச்சிறந்த மற்றும் வியக்கத்தக்க முன்மாதிரிகள் நிறைந்துள்ளன.


​முஸ்லிம்களுக்கு பிர்தௌசியின் 'ஷாஹ்நாமா' (shahnama) அல்லது ஸ்பார்டன் கதைகளுடனும் எந்தத் தொடர்பும் இல்லை; ஏனெனில் அவர்களின் வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் பல ருஸ்தம்களையும் ஸ்பார்டன்களையும் முன்வைக்க முடியும். 


'நீதிமான்' நுஷர்வான் மற்றும் ஹாதிம் தாயின் கதைகளை முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் அவர்களின் உண்மையான மற்றும் ஆதாரபூர்வமான வரலாற்றில், எண்ணற்ற ஹாதிம்களும் நுஷர்வான்களும் ஒளியையும் பிரகாசத்தையும் வீசிக்கொண்டுத் தோன்றுகிறார்கள். 


முஸ்லிம்களுக்கு அரிஸ்டாட்டில், பேக்கன், தாலமி அல்லது நியூட்டன் போன்றவர்கள் தேவையில்லை; ஏனெனில் அவர்களின் முன்னோர்களின் அவையில்இ அத்தகைய தத்துவஞானிகளும் வானியலாளர்களும் ஏற்கனவே இருப்பது அவர்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும்.


​உலக நாடுகளுக்கிடையே ஒருவரையொருவர் முந்துவதற்கு கடுமையான போட்டி நிலவும் இந்த நேரத்தில்இ முஸ்லிம்கள் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தும்இ தங்கள் வரலாற்றில் பற்றற்றவர்களாகவும் கவனக்குறைவாகவும் இருப்பது எவ்வளவு பரிதாபகரமானது மற்றும் ஆச்சரியமானது! 


முஸ்லிம்களிடையே விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறப்படும் ஒரு வர்க்கம் கூடஇ உயர் ஒழுக்கங்களுக்கோ அல்லது வியக்கத்தக்க சாதனைகளுக்கோ உதாரணம் காட்ட வேண்டிய இடங்களில்இ ஐரோப்பா அல்லது கிறிஸ்தவ உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களையே தங்கள் விரிவுரைகள்இ உரைகள்இ கட்டுரைகள் மற்றும் நூல்களில் மேற்கோள் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களிடையே உள்ள அத்தகைய ஆளுமைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.


​முஸ்லிம்களில் உள்ள படித்த வர்க்கத்தினர் காலித் பின் வலீத், சலாஹுத்தீன் அய்யூபி, ஹஸ்ஸான் பின் ஸாபித், பிர்தௌசி, தூஸி, இப்னு ருஷ்த் மற்றும் இப்னு சீனா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுவதை விட ஹன்னிபால், ஷேக்ஸ்பியர், பேக்கன், நியூட்டன் போன்றவர்களின் பெயர்களைத் தங்கள் உரைகளிலும் எழுத்துக்களிலும் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்? 


இதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றைப் பற்றி அறியாமலும் கவனக்குறைவாகவும் இருப்பதே ஆகும்.


​இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன: 


முதலாவதாகஇ மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களுக்கு அறிவின் மீது ஆர்வம் மிகக் குறைவாக உள்ளது; 


இரண்டாவதாகஇ அறிவைப் பெறுவதற்கு அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பும் ஓய்வும் கிடைக்கிறது; 


மூன்றாவதாகஇ அரசாங்கப் பள்ளிகளும் கல்லூரிகளும் இந்தியாவில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டன; 


நான்காவதாகஇ முஸ்லிம்களிடையே படித்த வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். அங்கு இஸ்லாமிய வரலாறு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அது உண்மையான இஸ்லாமிய வரலாறு என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. 


கல்லூரிகளில் பட்டம் பெற்ற பிறகுஇ மேலதிகக் கல்வியைப் பெறுவதற்கான வயது கிட்டத்தட்ட கடந்துவிடுகிறது. மேலும் இஸ்லாமியக் கலைகளைப் படிக்க ஒருவருக்குப் போதிய நேரமும் இருப்பதில்லை. 


அனைத்துச் சூழல்களிலும்இ நமது படித்த முஸ்லிம் வர்க்கத்தினர்இ முஸ்லிம்களின் எதிரிகளால் ஆங்கிலத்தில் சிதைக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்ட இஸ்லாமிய வரலாறுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.


​இஸ்லாத்திற்கு முன்னால்இ எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு சமூகமும் வரலாற்று எழுத்துக் கலையில் கவனம் செலுத்தவில்லை அல்லது தங்கள் முன்னோர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றைத் தொகுக்கவில்லை. 


இஸ்லாத்திற்கு முன்பு வரலாற்று எழுத்துக் கலையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க முடியும் என்பதை அறிய பைபிள்இ மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நூல்களே போதுமானவை. 


அதேசமயம், ஹதீஸ்களைப் (நபிமொழிகள்) பாதுகாப்பதிலும் அறிவிப்பதிலும் முஸ்லிம்கள் காட்டிய எச்சரிக்கை உணர்வுஇ உறுதி மற்றும் தைரியத்திற்கு இவ்வுலகில் ஈடுஇணை எதுவுமே இல்லை.


​ஹதீஸ் கலை மற்றும் 'அஸ்மாவுர் ரிஜால்' (அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் கலை) போன்ற கொள்கைகள்இ அனைத்து சவால்களையும் தாண்டி இறைத்தூதரின் பொன்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும்இ சேவை செய்வதற்காகவும் முஸ்லிம்களால் ஒரு தனி அறிவியலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. 


ஆய்வு மற்றும் நுணுக்கமான படிப்பிற்காக முஸ்லிம்கள் உருவாக்கிய இந்த வலுவான மற்றும் அசைக்க முடியாத கொள்கைகள் ஈடுஇணையற்றவை; உலகம் தனது நீண்ட வரலாற்றில் இதுபோன்ற ஒன்றை இதுவரை கண்டதில்லை.


​வரலாறு எழுதும் கலையில் முஸ்லிம்களின் முதல் மறக்க முடியாத பணிஇ ஹதீஸ் அறிவியலை வரிசைப்படுத்துவதும் தொகுப்பதுமே ஆகும். இதைப் பின்பற்றியேஇ அவர்கள் தங்கள் கலீஃபாக்கள்இ பிரபுக்கள்இ அரசர்கள்இ அறிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளின் வரலாறுகளைப் பதிவு செய்தனர். இந்த முழு பொக்கிஷத்தையும் இஸ்லாமிய வரலாறாகவே கருத வேண்டும். 


முஸ்லிம்களின் இந்த வரலாற்று எழுத்துக் கலை என்பது உலகிற்கு ஒரு புதிய மற்றும் விசித்திரமான விஷயமாகவும்இ எதிர்பாராத ஆசீர்வாதமாகவும்இ அத்தியாவசிய சொத்தாகவும் அமைந்தது. 


மற்ற சமூகங்கள் பைபிள் மற்றும் மகாபாரதம் போன்ற புத்தகங்களை தங்கள் பெருமைக்குரிய சொத்தாகக் கருதும்போதுஇ முஸ்லிம்கள் 'கத்தீப்' போன்றவர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றுப் புத்தகங்களைக்கூட அலமாரிகளிலிருந்து எடுத்து ஓரம் கட்டி வைத்திருப்பதைப் பார்த்து மனிதன் வியப்படையாமல் இருக்க முடியாது.


​இக்காலத்தில் ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் நுணுக்கமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதைக் கண்டு முஸ்லிம்கள் வியந்து பாராட்டுவதோடுஇ அவர்களின் திறமையைத் தங்களின் முழு மனதாரப் புகழ்கிறார்கள். 


ஆனால், வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு அரபு குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர் 'இப்னு கல்தூன்' எழுதிய 'முகத்திமா' (வரலாற்று முன்னுரை)இ வரலாறு எழுதும் கலையைப் பற்றி உலகிற்கும் ஐரோப்பாவிற்கும் பல தனித்துவமான புள்ளிகளை உணர்த்தியது என்ற உண்மையைக்கூட அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். 


ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் அத்தனை முயற்சிகளும் இப்னு கல்தூனின் வரலாற்று அறிவிற்கும் நுணுக்கத்திற்கும் முன்னால் நிற்க முடியாது என்று தாராளமாகக் கூறலாம். 


ஆனால், முஸ்லிம்களின் லட்சியமும் ஆர்வமும் எவ்வளவு குறைந்துவிட்டது என்றால்இ இஸ்லாமிய அறிஞர்களின் அவையில்கூடஇ இப்னு கல்தூன் எழுதிய அந்த புகழ்பெற்ற 'முன்னுரையைத்' தவிரஇ அவரது மூல வரலாற்று நூல்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் ஈர்ப்பதில்லை.


​இப்னு ஹிஷாம், இப்னுல் அஸீர், தபரி, மஸ்ஊதி முதல் அஹ்மத் பின் கவந்த் ஷா, ஜியா பரணி மற்றும் முஹம்மது காசிம் ஃபரிஷ்தா, முல்லா பதாயூனி வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் வரலாற்றாசிரியர்களின் பாராட்டுக்குரிய முயற்சிகள் இன்றும் பருமனான தொகுதிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த கால இஸ்லாமிய யுகத்தின் வசீகரமான மகத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் சித்தரிக்கின்றன. 


இஸ்லாமிய வரலாறு குறித்த ஒவ்வொரு புத்தகமும் ஆழமான படிப்பிற்குரியவை; அவற்றிலிருந்து பெறப்படும் பாடங்கள் வாசகர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால்இ நூற்றில் ஒரு முஸ்லிம்கூட தனது இஸ்லாமிய வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்பதும்இ முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதில்லை என்பதும் எவ்வளவு பரிதாபகரமானது! 


அதே நேரத்தில், மில் (mill), கார்லைல் (carlyl)இ எலியட் (eliat)இ கிப்பன் (gibbon) போன்றவர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் கொண்ட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


​இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்டிருப்பதாலும்இ இந்தியாவில் உள்ள நூற்றில் ஒரு முஸ்லிம்கூட இந்த மொழிகளைத் தெரியாமல் இருப்பதாலும், இஸ்லாமிய வரலாற்றை உருது மொழியில் எழுதுவது ஒரு கடமையாகிறது. 


இப்போது நான் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிப்பதைப் போல, மற்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களும் இந்த எளிய முயற்சியை விடச் சிறந்த முறையில் உருதுவில் இஸ்லாமிய வரலாறுகளை எழுத வாய்ப்பு உள்ளது.


Friday, November 28, 2025

ஸஹீஹ் அல்பானி - حرف الراء - ரா எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்

 ஏக இறைவனின் திருப்பெயரால்…


صحيح
الجامع الصغير وزيادته 
(الفتح الكبير)



ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள்


இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்பானி



செய்யது காமித்

இஸ்தப்ரக் பதிப்பகம்

6381653548



حرف الراء - ரா எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஹதீஸ்கள்


3450. அல்லாஹ்வின் மீது சத்தியமாக


رَأَى عِيسَى ابْنُ مَرْيَمَ رَجُلاً يَسْرِقُ، فَقَالَ لَهُ أَسَرَقْتَ قَالَ كَلاَّ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ. فَقَالَ عِيسَى آمَنْتُ بِاللَّهِ وَكَذَّبْتُ عَيْنِي "".


அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஒருமுறை ஈசா இப்னு மர்யம் (அலை) அவர்கள் ஒருவர் திருடுவதைப் பார்த்தார்கள்.


ஆகவே அவனிடம்இ “நீ திருடினாயா?” என்று கேட்டார்கள்.


​அதற்கு அவன்இ “இல்லை! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த இறைவன் மீது சத்தியம் செய்கிறேன்” என்றான்.


​உடனே ஈஸா நபிஇ “நான் இறைவனை நம்புகிறேன். என் கண்கள் பொய் கூறிவிட்டன” என்று கூறினார்கள்.


ஆதாரம் : ஸஹீஹுல் புஹாரி 3444


3451. நபியின் பிறப்பை ஒட்டி நடந்த அற்புதம்


رأتْ أُمِّي كَأَنَّهُ خرج منها نُورٌ ، أَضَاءَتْ مِنْهُ قصورُ الشَّامِ » .


அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(எனது பிறப்பை முன்னிட்டு) என் தாயார்இ தன்னிடமிருந்து ஒரு ஒளி புறப்பட்டுஇ சிரியாவின் அரண்மனைகளை ஒளிரச் செய்வது போல் கனவு கண்டார்கள்.


ஆதாரம் : முஸ்னது அஹமது 22315இ முஸ்னது தயாலிஸி 1236இ முஸ்னது ஹாரிஸ் 927


3452. வேலைக்கு ஏற்றாற்போல் குணம் இருக்கும்


رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ، وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالإِبِلِ، وَالْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ "".


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைமறுப்பின் தலைமைப் பீடம் (மதினாவிற்குக்) கிழக்குத் திசையில் (பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் கம்பளி ஆடையணிந்திருப்பவர்களிடமும் (நாடோடிப் பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்களிடம்) தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களிடம் (அடக்கமும் நிதானமும் கலந்த) அமைதி காணப்படுகிறது. 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 3301. 


3453. இறைமறுப்பின் தலைமைப் பீடம்


«رأسُ الكُفْرِ ههنا، من حيثُ يطلع قرن الشيطان . يعني : المشرق» .

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைமறுப்பின் தலைமைப் பீடம் இங்கே உள்ளது. அதாவது ஷைத்தானின் கொம்பு உதிக்கும் இடமான கிழக்கு திசையில் உள்ளது.


ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 7093


3454. தொழுகையில் நெருக்கமாக நிற்பது


رَاصُّوا الصُّفُوفَ ؛ فَإِنَّ الشَّيْطَانَ يَقُومُ فِي الْخَلَلِ ".


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(தொழுகையின்) வரிசைகளை (இடைவெளியில்லாமல்) நெருக்கி நில்லுங்கள்; ஏனென்றால்இ ஷைத்தான் இடைவெளியில் நுழைகிறான்.


ஆதாரம் : முஸ்னது அஹமது 12572இ தாரகுத்னியின் இலல் 12ஃ230இ அபூ நயீமின் ஹில்யத்துல் அவ்லியா 3ஃ53


3455. தொழுகையில் வரிசையை சரிப்படுத்துதல்


رُصُّوا صُفُوفَكُمْ، وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ،


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


உங்கள் வரிசைகளை நேராக்குங்கள். அவற்றுக்கிடையே நெருக்கமாக இருங்கள். உங்களது கழுத்துகளை சமன்படுத்துங்கள்.


ஆதாரம் : சுனன் அபூதாவூத் 667இ நஸாஈ 815இ முஸ்னது அஹமது 13735.


3456. இறைநம்பிக்கையாளரின் கனவு


رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ وَلَا يُحَدِّثُ بِهَا إِلَّا لَبِيبًا أَوْ حَبِيبًا ".


அபீ ரஸீன் அல் உகைலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைநம்பிக்கையாளரின் கனவுஇ நபித்துவத்தின் நாற்பது பாகங்களில் ஒரு பாகமாகும். அவர் (கண்டிருக்கும் கனவு) அதைப் பற்றிப் பேசாதவரை ஒரு அது பறவையின் காலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர் அதைப் பற்றிப் பேசினால்இ அது கீழே விழுந்துவிடும் (பலிக்காமல் போக வாய்ப்புள்ளது). எனவே அறிவாளியிடமோ அல்லது பிரியமானவரிடமோ (நண்பரிடமோ) தவிரஇ வேறு யாரிடமும் அவர் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.


ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2278இ சுனன் அபூதாவூத் 5020இ முஸ்னது அஹமது 16195.



3457. இறைநம்பிக்கையாளரின் கனவு


رُؤيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وأربعين جزءاً مِنَ النُّبُوَّةِ .


உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைநம்பிக்கையாளரின் கனவுஇ நபித்துவத்தின் நாற்பது பாகங்களில் ஒரு பாகமாகும். 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 6987இ ஸஹீஹ் முஸ்லிம் 2264



3458. முஸ்லிமின் கனவு


رُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يُحَدِّثْ بِهَا، فَإِذَا حَدَّثَ بِهَا وَقَعَتْ 


அபூ ரஸீன் அல் உகைலி (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​ஒரு முஸ்லிமின் கனவுஇ நபித்துவத்தின் நாற்பத்து ஆறு பாகங்களில் ஒரு பாகமாகும். அவர் அதைப் பற்றிப் பேசாத வரைஇ அது ஒரு பறவையின் காலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர் அதைப் பற்றிப் பேசினால்இ அது நிகழ்ந்துவிடும் (பலிக்கத் தொடங்கிவிடும்).


ஆதாரம் : ஜாமிஉத் திர்மிதீ 2279இ சுனன் அபூதாவூத் 5020இ முஸ்னது அஹமது 16227.



3459. நல்ல முஸ்லிமின் கனவு


رُؤْيَا الْمُسْلِمِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".


அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நல்ல முஸ்லிமின் கனவு நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும். 


ஆதாரம் : சுனன் இப்னுமாஜா 3895இ முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 31105இ அபூ யஃலா 1335



3460. சுவர்க்கத்தின் தன்மை


رأيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ : يَا مُحَمَّدُ، أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ ، وَغِرَاسَهَا …………لا حول ولا قُوَّةَ إلا بالله» .


இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​(மிஃராஜ்) இரவு நான் (விண்ணுலகத்திற்கு) அழைத்துச் செல்லப்பட்டபோது (அங்கு) இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: "முஹம்மதே! உமது சமூகத்தாருக்கு சலாம் (சாந்தி) சொல்லுங்கள். மேலும் அவர்களிடம் அறிவியுங்கள்: சுவர்க்கத்தின் மண் மிக மணமானது. அதிலுள்ள நீர் இனிமையானது. அது சமவெளியாக (வெற்று நிலங்களாக) உள்ளது. மேலும் அதன் பயிர்கள் (அல்லது செடிகள்)..... 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வை அன்றி ஆற்றலோ சக்தியோ இல்லை) என்று கூறுவதாகும்."


ஆதாரம் : சுனன் திர்மிதீ 3462இ தபரானி 10363.

ஹசன் தரமானது


3461. இரவுத் தொழுகை கடமையல்ல


رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ فلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلاَّ أَنِّي خَشِيتُ أَنْ  تُفْرَضَ عَلَيْكُمْ


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


'நீங்கள் செய்ததை நிச்சயமாக நான் பார்த்(துக் கொண்டுதான் இருந்)தேன். உங்கள்மீது (இரவுத் தொழுகை) இத்தொழுகை கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வராமல் என்னைத் தடுத்துவிட்டது' 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 1129.ஸஹீஹ் முஸ்லிம் 1395



3462. சொர்க்கம் நரகம்


رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخَذَا بِيَدِي، فَأَخْرَجَانِي إِلَى الأَرْضِ الْمُقَدَّسَةِ، فَإِذَا رَجُلٌ جَالِسٌ، وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ كَلُّوبٌ مِنْ حَدِيدٍ ، فَيُدْخِلُهُ فِي شِدْقِهِ، فَيَشُقُّهُ حَتَّى يُخْرِجُهُ، من قَفَاهُ، ، ثُمَّ يُخْرِجُهُ، فَيُدْخِلُهُ فِي شِدْقِهِ الآخَرِ ، وَيَلْتَئِمُ هَذَا الشِّدْقُ، فَهُوَ يَفْعَلُ ذَلِكَ بِهِ، فقُلْتُ : مَا هَذَا ؟ قَالَا : انْطَلِقْ، ، فَانْطَلَقْتُ مَعَهُمَا، فَإِذَا رَجُلٌ مُسْتَلْقٍ عَلَى قَفَاهُ، وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ فِهْرٌ - أَوْ : صَخْرَةٌ - فَيَشْدَخُ بِهَا رَأْسَهُ، فَيَتَدَهْدَا الْحَجَرُ، فَإِذَا ذَهَبَ لِيَأْخُذَهُ ؛ عَادَ رَأْسُهُ كَمَا كَانَ، فَيَصْنَعُ مِثْلَ ذَلِكَ، فَقُلْتُ : مَا هَذَا ؟ قَالَا : انْطَلِقْ، فَانْطَلَقْتُ مَعَهُمَا، فَإِذَا بَيْتٌ مَبْنِيٌّ عَلَى بِنَاءِ التَّنُّورِ، أَعْلَاهُ ضَيِّقٌ، وَأَسْفَلُهُ وَاسِعٌ، يُوقَدُ تَحْتَهُ نَارٌ، فِيهِ رِجَالٌ، وَنِسَاءٌ عُرَاةٌ، فَإِذَا أُوقِدَتِ ارْتَفَعُوا، حَتَّى يَكَادُوا أَنْ يَخْرُجُوا، فَإِذَا خَمَدَتْ ؛ رَجَعُوا فِيهَا، فَقُلْتُ : مَا هَذَا ؟ قَالَا لِيَ : انْطَلِقْ، فَانْطَلَقْتُ، فَإِذَا نَهْرٌ مِنْ دَمٍ، فِيهِ رَجُلٌ، وَعَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ، فَيُقْبِلُ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ، فَإِذَا دَنَا لِيَخْرُجَ ؛ رَمَى فِي فِيهِ حَجَرًا، فَرَجَعَ إِلَى مَكَانِهِ، فَهُوَ يَفْعَلُ ذَلِكَ بِهِ، فَقُلْتُ : مَا هَذَا ؟ فَقَالَا : انْطَلِقْ، فَانْطَلَقْتُ، فَإِذَا رَوْضَةٌ خَضْرَاءُ، وإِذَا فِيهَا شَجَرَةٌ عَظِيمَةٌ، وَإِذَا شَيْخٌ فِي أَصْلِهَا، حَوْلَهُ صِبْيَانٌ، وَإِذَا رَجُلٌ قَرِيبٌ مِنْهُ بَيْنَ يَدَيْهِ نَارٌ، فَهُوَ يُحَشِّشُهَا، وَيُوقِدُهَا، فَصَعِدَا بِي فِي الشَّجَرَةِ، فَأَدْخَلَانِي دَارًا لَمْ أَرَ دَارًا قَطُّ أَحْسَنَ مِنْهَا، فَإِذَا فِيهَا رِجَالٌ شُيُوخٌ وَشَبَابٌ، وَفِيهَا نِسَاءٌ، وَصِبْيَانٌ، فَأَخْرَجَانِي مِنْهَا، فَصَعِدَا بِي فِي الشَّجَرَةِ، فَأَدْخَلَانِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ مِنْهَا، فِيهَا شُيُوخٌ وَشَبَابٌ، فَقُلْتُ لَهُمَا : إِنَّكُمَا قَدْ طَوَّفْتُمَانِي مُنْذُ اللَّيْلَةِ، فَأَخْبِرَانِي عَمَّا رَأَيْتُ، فَقَالَا : نَعَمْ،


أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي رَأَيْتَ، فَإِنَّهُ رَجُلٌ كَذَّابٌ، يَكْذِبُ الْكَذْبَةَ فَتُحْمَلُ عَنْهُ فِي الْآفَاقِ، فَهُوَ يُصْنَعُ بِهِ مَا رَأَيْتَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، ثُمَّ يَصْنَعُ اللَّهُ  بِهِ مَا شَاءَ.


 وَأَمَّا الرَّجُلُ الَّذِي رَأَيْتَ مُسْتَلْقِيًا، فَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ، فَنَامَ عَنْهُ بِاللَّيْلِ، وَلَمْ يَعْمَلْ بِمَا فِيهِ بِالنَّهَارِ، فَهُوَ يُفْعَلُ بِهِ مَا رَأَيْتَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.


 وَأَمَّا الَّذِي رَأَيْتَ فِي التَّنُّورِ، فَهُمُ : الزُّنَاةُ.


 وَأَمَّا الَّذِي رَأَيْتَ فِي النَّهَرِ، فَذَاكَ : آكِلُ الرِّبَا.


 وَأَمَّا الشَّيْخُ الَّذِي رَأَيْتَ فِي أَصْلِ الشَّجَرَةِ، فَذَاكَ : إِبْرَاهِيمُعليه السلام. وَأَمَّا الصِّبْيَانُ الَّذِي رَأَيْتَ، فَأَوْلَادُ النَّاسِ.


 وَأَمَّا الرَّجُلُ الَّذِي رَأَيْتَ يُوقِدُ النَّارَ، فَذَاكَ خَازِنُ النَّارِ، وَتِلْكَ النَّارُ. وَأَمَّا الدَّارُ الَّتِي دَخَلْتَ أَوَّلًا، فَدَارُ عَامَّةِ الْمُؤْمِنِينَ.


 وَأَمَّا الدَّارُ الْأُخْرَى، فَدَارُ الشُّهَدَاءِ، وَأَنَا جِبْرِيلُ، وَهَذَا مِيكَائِيلُ. ثُمَّ قَالَا لِيَ : ارْفَعْ رَأْسَكَ، فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا هِيَ كَهَيْئَةِ السَّحَابِ، فَقَالَا لِي : وَتِلْكَ دَارُكَ، فَقُلْتُ لَهُمَا : دَعَانِي أَدْخُلْ دَارِي، فَقَالَا : إِنَّهُ قَدْ بَقِيَ لَكَ عَمَلٌ لَمْ تَسْتَكْمِلْهُ، فَلَوِ اسْتَكْمَلْتَهُ ؛ دَخَلْتَ دَارَكَ ".


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


'நான் (இன்று) இரவில் (ஒரு கனவின் வழியாக) இருவரைப் பார்த்தேன். அவர்கள் இருவரும் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு (பைத்துல் முகத்தஸ்) அழைத்துச் சென்றனர். 


அங்கே உட்கார்ந்திருந்த ஒருவரையும் கையில் இரும்பாலான கொக்கிகள் வைத்து நின்றிருந்த மற்றொருவரையும் கண்டேன். 


அவர் அக்கொக்கியை உட்கார்ந்திருப்பவரின் வாயின் ஒரு பக்கத்தில் நுழைத்துஇ அதை இழுத்து அவரது பிடரி வரை கிழிப்பார்.


பின்னர் அதை எடுத்துஇ வாயின் மறு பக்கத்தில் நுழைப்பார். இந்த நேரத்தில்இ கிழித்த பக்கம் (குணமடைந்து) முன்பிருந்தது போலாகிவிடும். அவர் இதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார்.


உடனே நான் இது என்ன? என்று கேட்டேன். 


அதற்கு அவ்விருவரும் 'செல்லுங்கள்' என்றனர். 


நான் அவர்களுடன் சென்றேன். 


அப்போது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதர் கையில் கல்லையோ அல்லது பாறையையோ வைத்துஇ அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார்.


அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. அவர் மீண்டும் வந்து உடைத்தார். 


உடனே இது என்ன?' என்று நான் கேட்டேன். 


அதற்கு அவ்விருவரும் 'செல்லுங்கள்' என்றனர். 


​நான் அவர்களுடன் சென்றேன். அங்கு ஒரு அடுப்பு (தன்னூர்) அமைப்பைப் போன்ற ஒரு வீடு இருந்தது அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதன் மேல் பகுதி குறுகலாகவும்இ அடிப் பகுதி அகலமாகவும் இருந்தது. அதன் அடியில் தீ மூட்டப்பட்டது. அதற்குள் ஆண்களும் பெண்களும் ஆடையின்றி இருந்தார்கள். தீ மூட்டப்படும்போதுஇ அவர்கள் மேலேறிஇ வெளியே வந்துவிடுவார்கள் என்று தோன்றும் அளவுக்கு வருவார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாக இருப்பதால் அவர்களால் வெளியே வர முடியாது)


 தீ தணியும்போதுஇ அவர்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவார்கள். நான்இ "இது என்ன?" என்று கேட்டேன். அவர்கள் இருவரும்இ "செல்லுங்கள்இ" என்று கூறினார்கள்.


நான் சென்றேன். அங்கே இரத்த ஆறு ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதர் இருந்தார். ஆற்றின் கரையில் மற்றொரு மனிதர் இருந்தார். அவருக்கு முன்பாக கற்கள் இருந்தன. ஆற்றில் உள்ள மனிதர் வெளியே வர அருகில் வரும்போதெல்லாம்இ கரையில் உள்ள மனிதர் அவரது வாயில் ஒரு கல்லை எறிவார். உடனே அவர் தனது இடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுவார். அவர் இதைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தார். நான்இ "இது என்ன?" என்று கேட்டேன். அவர்கள் இருவரும்இ "செல்லுங்கள்இ" என்று கூறினார்கள்.


 ​நான் சென்றேன். அங்கே பச்சைப் பசுமையான தோட்டம் (ரவ்ழா) ஒன்று இருந்தது. அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் வேரில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி சிறுவர்கள் இருந்தனர். அவருக்கு அருகில் ஒரு மனிதர் இருந்தார்இ அவர் தன் முன்பாக நெருப்பை மூட்டிஇ அதைப் பராமரித்துக்கொண்டிருந்தார். அந்த இருவரும் என்னைத் தாங்கி மரத்தின் மேல் ஏறினார்கள். நான் இதுவரையில் பார்த்திராத அழகான ஒரு வீட்டுக்குள் (தாருக்குள்) என்னை அழைத்துச் சென்றார்கள். அதில் முதியவர்களும் இளைஞர்களுமான ஆண்களும்இ பெண்களும்இ சிறுவர்களும் இருந்தனர். அங்கிருந்து என்னை வெளியே அழைத்து வந்துஇ மரத்தின் மேல் ஏறிஇ அதைவிட அழகானதும்இ சிறந்ததும் ஆன மற்றொரு வீட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள். அதிலும் முதியவர்களும் இளைஞர்களுமானவர்கள் இருந்தார்கள்.


நான் அவர்களிடம்இ "நீங்கள் இன்று இரவு முழுவதும் என்னைச் சுற்றிக் காட்டினீர்கள். நான் கண்டவற்றைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்இ" என்று கேட்டேன். அவர்கள் இருவரும்இ "ஆம்இ" 


நீங்கள் முதலில் பார்த்தீர்களே! அந்த (தாடை கிழிக்கப்பட்ட) மனிதர்: அவர் ஒரு பெரும் பொய்யர் ஆவார். அவர் ஒரு பொய்யைக் கூறுவார். அது உலகெங்கும் பரவிவிடும். நீங்கள் பார்த்தபடிஇ மறுமை நாள் வரை அவருக்கு இவ்வாறுதான் செய்யப்படும். அதன் பிறகுஇ இறைவன் நாடியதை அவருக்குச் செய்வான்.


​நீங்கள் மல்லாக்கப் படுத்திருந்த நிலையில் பார்த்த மனிதர்: இறைவன் அவருக்கு குர்ஆனைக் (கற்றுக்) கொடுத்தான். ஆனால் அவர் இரவில் அதை (ஓதாமல்ஃதொழாமல்) உறங்கிவிட்டார். பகலில் அதில் உள்ளபடி செயல்படவில்லை. நீங்கள் பார்த்தபடிஇ மறுமை நாள் வரை அவருக்கு அவ்வாறுதான் செய்யப்படும்.


​நீங்கள் அடுப்பில் (தன்னூரில்) பார்த்தீர்களே! அவர்கள்: விபச்சாரம் செய்தவர்கள் (ஸுனாத்).


​நீங்கள் ஆற்றில் பார்த்தீர்களேஇ அவர் வட்டி உண்பவர் (ஆக்கிலுர்-ரிபா).


​நீங்கள் மரத்தின் வேரில் பார்த்த முதியவர்: அவர் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) ஆவர். நீங்கள் பார்த்த சிறுவர்கள்இ அவர்கள் மனிதர்களின் குழந்தைகள்.


​நீங்கள் நெருப்பை மூட்டுவதைப் பார்த்த மனிதர்: அவர் நரகத்தின் காவலர் (காஸினுன்-நார்)இ அதுதான் நரகம்.


​நீங்கள் முதலில் நுழைந்த வீடு (தார்): அது பொதுவான விசுவாசிகளின் (முஃமின்கள்) வீடு.


இரண்டாவது பார்த்த வீடு (தார்): அது தியாகிகளின் (ஷுஹதாக்களின்) வீடு. 


நான் ஜிப்ரீல்இ இவர் மீக்காயீல் (என்று கூறினார்கள்).


​பின்னர் இருவரும் என்னைப் பார்த்துஇ "உங்கள் தலையை உயர்த்துங்கள்இ" என்று கூறினார்கள். நான் என் தலையை உயர்த்தினேன். அங்கே மேகத்தைப் போல் ஒரு வீடு இருந்தது. 


அவர்கள் இருவரும்இ "அதுதான் உங்கள் வீடுஇ" என்று கூறினார்கள். 


நான் அவர்களிடம்இ "நான் என் வீட்டுக்குள் செல்ல என்னை விடுங்கள்இ" என்று கூறினேன்.


​அதற்கு அவர்கள்இ "உங்களுக்கு நீங்கள் செய்ய ஒரு செயல் பாக்கியிருக்கிறது. நீங்கள் அதை இன்னும் முடிக்கவில்லை. அதை நீங்கள் முடித்தால்இ உங்கள் வீட்டில் நுழைவீர்கள்இ" என்று கூறினார்கள்.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 1386இ முஸ்னது அஹமது 20165


(குறிப்பு : இமாம் அஹ்மத் மற்றும் புஹாரி ஆகியோரின் ஓர் அறிவிப்பில் (கூறியதாவது): 'அவரைச் (இப்றாஹிம் நபியை) சுற்றியுள்ள சிறுவர்கள் (குழந்தைகள்) அனைவரும் இயல்பான நிலையில் (இஸ்லாமிய இயற்கைத் தூய்மையில்) இறந்த ஒவ்வொரு குழந்தையும் ஆவர்.' (இதைச் சொன்னபோது) முஸ்லிம்களில் சிலர் கேட்டார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களின் (காஃபிர்களின்) குழந்தைகளுமா?' அதற்கு அவர் பதிலளித்தார்: 'இணை வைப்பாளர்களின் குழந்தைகளும் (அவ்வாறே).')


3463. மலக்குகளின் குளிப்பாட்டல்


رأيتُ الملائكةَ تُغَسلُ حمزةَ بنَ عبدِ المطلبِ، وحنظلةَ بنَ الراهبِ


இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் அவர்களையும்இ ஹன்ழலா இப்னு அபீ ஆமிர் (அர்-ராஹிப்) அவர்களையும் மலக்குமார்கள் (இறைவனின் பிரத்தியேகப் படையினர்) குளிப்பாட்டுவதைப் பார்த்தேன்.


ஆதாரம் : தபரானியின் முஅஜமுல் கபீர் 12094இ மஅரிஃபதுல் சுனனுந் ஆஸார் 7460இ 


ஹசன் தரமானது


3464. ஜிப்ரீலின் உருவம்


رأيتُ جِبْرِيلَ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ.


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் ஜிப்ரீலை (அலைஹிஸ்ஸலாம்) பார்த்தேன்; அவருக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 4856இ முஸ்லிம் 174இ முஸ்னது அஹமது 3780.


குறிப்பு : மேலும்இ அவரும் (இப்னு ஹுஸைமா) அஹ்மதும் (இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்) ஒரு அறிவிப்பில் சேர்த்துள்ளனர்: அதன் சிறகுகளில் இருந்து முத்துக்களும் மாணிக்கங்களும் போன்ற பிரமிக்க வைக்கும் பொருட்கள் உதிரும்.)


3465. ஜாஃபர் பின் அபீதாலிப்


رَأَيْتُ جعفَرَ بنَ أبِي طالِبٍ ملكاً يَطِيرُ فِي الْجَنَّةِ مَعَ الْمَلَائِكَةِ بجَناحَينِ


அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைஇ மலக்குகளுடன் சொர்க்கத்தில் இரண்டு இறக்கைகளுடன் பறக்கும் ஒரு மலக்காக (இறைவனின் பிரத்தியேகப் படையினர்) பார்த்தேன்.


ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4367இ திர்மிதீ 3763இ அபூ யஃலா 6464



3466. நபிகளார் இறைவனைக் கண்டார்கள்


رأيت ربي عَزَّ وجل»


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் வலிமையும் கண்ணியமும் மிக்க என் இறைவனைக் கண்டேன்.


ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4361இ அஹாதீஸுல் முக்தார் 234ஃ12இ ஷுஐப் அல் அர்னாஊதின் தக்ரீஜ் ஸஅதுல் மஆத் 3ஃ33


(குறிப்பு : அதாவதுஇ மற்ற அறிவிப்புகள் சுட்டிக்காட்டுவதைப் போலஇ அது கனவில் நிகழ்ந்தது)


3467. ஆணும் பெண்ணும் பார்ப்பது


رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنِ مِنَ الشَّيطان عليهما


அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் ஒரு இளைஞனையும் ஒரு இளைஞியையும் பார்த்தேன். (அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்) அவர்கள் இருவர் மீதும் ஷைத்தானிடமிருந்து  பாதுகாப்பு ஏற்பட்டிருப்பதாக நான் உணரவில்லை.


ஆதாரம் : திர்மிதீ 885இ முஸ்னது அஹமது 562இ அபூ யஃலா 312


3468. உமரைப் பார்த்து ஷைத்தான் விரண்டோடுவான்


رأيتُ شياطينُ الإِنَّسِ والجنِّ فرُّوا مِنْ عُمَرَ


முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


மனித ஷைத்தான்களும் ஜின் ஷைத்தான்களும் உமரைப் பார்த்து ஓடி ஒளிவதைக் கண்டேன்.


ஆதாரம் : இப்னு அதீயின் காமில் ஃபில் ழுஅஃபா 3ஃ51இ இப்னு அஸாகீரின் தாரீக் திமிஷ்க் 44ஃ84.

ஹசன் தரமானது


3469. அம்ர் இப்னு ஆமிர் அல் குஸாஈ


رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، كَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ وبحر البحيرة ..


அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் அம்ரு இப்னு ஆமிர் அல்-குஸாயீயை நரகத்தில் தன் குடல்களை இழுத்துச் செல்லக் கண்டேன். சாயிபா ஒட்டகங்களை (இறைவனுக்கு நேர்ந்து விடப்பட்ட) சுதந்திரமாகத் திரியவிட்ட முதல் ஆளும்இ பஹீரா ஒட்டகத்தை அறுக்காமல் விட்ட முதல் ஆளும் அவனே.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 4623. 


3470. அம்ரு இப்னு லுஹை


رأيتُ عمرو بن لحي بن قمعة بن خندف أخا بني كعب ؛ وهو يجرُّ قَصْبَهُ فِي النَّارِ».


அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் பனூ கஅப் வம்சத்தின் சகோதரரான அம்ரு இப்னு லுஹை இப்னு கம்ஆ இப்னு கின்ஃப் என்பவரைக் கண்டேன்; அவர் தன் குடல்களை நரகத்தில் இழுத்துச் செல்கிறார்.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 1212. 


3471. நபிமார்களின் தோற்றம்


رَأَيْتُ عِيسَى ومُوسَى وإِبْرَاهِيمُஇ فأما عِيسَى ؛ فأحمرُ جعْدٌ عريضُ الصدْرِ، وأما موسى ؛ فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ ، كَأَنَّهُ مِنْ رجالِ الزُّطِّ، وأما إبراهيم فانظروا إلى صاحبِكُمْ. يعني نَفْسَهُ


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தில்) ஈஸா (அலை)இ மூஸா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா சிவந்த நிறமுடையவர். சுருண்ட முடி உடையவர். அகன்ற மார்பு உடையவர். மூஸா பழுப்பு நிறமுடையவர். திடகாத்திரமானவர். நீளமான நேர் முடி உடையவர். அவர் 'ஸுத்' இனத்தவர் போன்றிருந்தார். இப்ராஹீமைப் பொறுத்தவரைஇ உங்கள் தோழரைப் (நபி முஹம்மது (ஸல்) அவர்களையே) பாருங்கள்."


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 165இ 166இ ஸஹீஹ் புகாரி 1555. 


3472. ஹிஜ்ரத் பற்றிய கனவு


رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ، فَذَهَبَ وَهْلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ، أَوْ هَجَرُ، فَإِذَا هِيَ الْمَدِينَةُ ؛ يَثْرِبُ، وَرَأَيْتُ فِي رُؤْيَايَ هَذِهِ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى، فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا - وَاللَّهُ خَيْرٌ - فَإِذَا هُمُ النَّفَرُ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْخَيْرِ بَعْدُ، وَثَوَابُ الصِّدْقِ الَّذِي آتَانَا اللَّهُ بَعْدَ يَوْمِ بَدْرٍ ".


அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் கனவில் கண்டேன்; நான் மக்காவில் இருந்து பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ஹிஜ்ரத் செய்கிறேன் (குடியேறுகிறேன்). அது யமாமா அல்லது ஹஜர் ஆக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால்இ அது மதீனா (யத்ரிப்) ஆக இருந்தது.

​மேலும்இ அந்தக் கனவிலேயே நான் ஒரு வாளை ஆட்டியபோதுஇ அதன் முன்பகுதி உடைந்துவிட்டது. அது உஹத் போர் நாளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறிப்பதாக இருந்தது. பிறகு நான் அதை மீண்டும் ஆட்டியபோதுஇ அது முன்பைவிடச் சிறப்பாக மீண்டு வந்துவிட்டது. அதுஇ அல்லாஹ் அருளிய வெற்றியையும் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்ததையும் குறிப்பதாக இருந்தது.

​மேலும்இ நான் அதில் சில மாடுகளையும் கண்டேன் - அல்லாஹ்வே மிகச் சிறந்தவன். அதுஇ உஹத் போரில் (இழக்கப்பட்ட) சில முஸ்லிம் தோழர்களைக் குறிப்பதாக இருந்தது. (கனவில் கண்ட) அந்த நன்மை (خير) என்பதுஇ பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்கு அருளிய வெற்றியையும்இ உண்மையான விசுவாசத்திற்கான வெகுமதியையும் குறிப்பதாக இருந்தது.


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 2272


3473. கடற்பயணம் செய்யும் முஸ்லிம் படைவீரர்கள்


رَأَيْتُ قَوْمًا مِمَّنْ يَرْكَبُ ظَهْرَ هَذَا الْبَحْرِ كَالْمُلُوكِ عَلَى الْأَسِرَّةِ


உம்மு ஹராம் பின்து மில்ஹான் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(எனக்கு எடுத்துக்காட்டப்பட்ட கனவில்) அரியாசனங்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல (கப்பல்களில் ஏறி) கடலின் மேற்பரப்பில் சவாரி செய்யும் ஒரு கூட்டத்தினரை நான் கண்டேன்.


ஆதாரம்  : அபூதாவூது 2490இ ஸஹீஹ் புகாரி 2799


3474. நோயின் இடமாற்றம்


رَأَيْتُ كأن امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى نزلت مَهْيَعَةَ فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إليها».


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


முடி கலைந்த கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி 'மஹ்யஆ' என்ற இடத்தில் தங்குவது போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் கொள்ளைநோய் மஹ்யஆவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 7040. 


3475. மார்க்கம் நிலைபெற்று விட்டது

رأيتُ كأني الليلَةَ في دارِ عقبَةَ بنِ رافِعٍ، وأُتِيتُ بتمرٍ من تمرِ ابنِ طابَ، فأوَّلْتُ أنَّ لنا الرفعةَ في الدنيا والعاقبةَ في الآخرةِ،؛ وإِنَّ دينَنَا قَدْ طابَ


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இன்றிரவு நான் உக்பா இப்னு ராஃபிஃ என்பவரின் வீட்டில் இருப்பது போல கனவில் கண்டேன். அப்போது எனக்கு இப்னு தாப் எனப்படும் சிறந்த பேரீச்சம் பழம் கொடுக்கப்பட்டது. (இதற்கு நான் கண்ட விளக்கமாவது :) இவ்வுலகில் நமக்கு உயர்வு (الرفعة - அல்-ரிஃப்அத்) உண்டு. மறுமையில் நமக்கு நல்ல முடிவு (العاقبة - அல்-ஆகிபா) உண்டு. மேலும் நமது மார்க்கம் நன்றாக நிறைவு (طاب - தாப) பெற்றுவிட்டது என்பதே அதன் விளக்கம்."


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 2270. 


3476. மதினா பாதுகாப்பானது


رَأَيْتُ كَأَنِّي فِي دِرْعٍ حَصِينَةٍ، وَرَأَيْتُ بَقَرًا تُنْحَرُ فَأَوَّلْتُ أَنَّ الدِّرْعَ الْحَصِينَةَ الْمَدِينَةُ، وَأَنَّ الْبَقَرَ نَفَرٌ وَاللَّهُ خَيْرٌ ".


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் ஒரு உறுதியான கவச உடைக்குள் (திர்அன் ஹஸீனா) இருப்பது போலக் கனவு கண்டேன். மேலும்இ மாடுகள் அறுக்கப்படுவதையும் பார்த்தேன். எனவேஇ அந்த உறுதியான கவச உடை  மதீனா நகரம் என்றும்இ மாடுகள் என்பவை சில மனிதர்கள் (நஃபர்) என்றும்இ அல்லாஹ்வே மிக்க நன்மை அளிப்பவன் என்றும் அதற்கு நான் விளக்கம் கண்டேன்.


ஆதாரம் : நஸாஈயின் சுனனுந் குப்ரா 7647இ முஸ்னது அஹமது 14787இ தாரிமீ 2205


3477. நபிமார்களின் தோற்றம்


رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلاً آدَمَ طُوَالاً جَعْدًا، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى رَجُلاً مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ، سَبْطَ الرَّأْسِ، وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ وَالدَّجَّالَ 


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


எனது (மிஃராஜ் எனும்) இரவுப் பயணத்தின்போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டேன்; அவர் அடர்நிறமும்இ உயரமான உருவமும்இ சுருண்ட முடியும் கொண்ட ஒரு மனிதராக இருந்தார்; அவர் ஷனூஆ இனத்தைச் சேர்ந்த ஆண்களைப் போலிருந்தார். ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டேன். அவர் நடுத்தர உயரமும்இ சிவப்பு வெள்ளை நிறமும் கலந்துஇ நேராக தொங்கும் (சற்றேறக்குறைய) தலைமுடியும் கொண்ட ஒரு மனிதராக இருந்தார். மேலும்இ நரகத்தின் காவலாளியான மாலிக் மற்றும் தஜ்ஜாலையும் நான் கண்டேன்.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 3239. 


3478. உமரின் ரோஷம்


رَأَيْتُنِي دَخَلْتُ الْجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ امْرَأَةِ أَبِي طَلْحَةَ وَسَمِعْتُ خَشَفَةً، من أمامي ، فَقُلْتُ مَنْ هَذَا يا جبريل ؟ فَقَالَ هَذَا بِلاَلٌ. وَرَأَيْتُ قَصْرًا أبيض بِفِنَائِهِ جَارِيَةٌ، فَقُلْتُ لِمَنْ هَذَا القصر؟ قالوا : لِعُمَرَ بن الخطاب فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ، فَذَكَرْتُ غَيْرَتَكَ


ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் சுவர்க்கத்தில் நுழைவதாகக் (கனவில்) கண்டேன். அங்கே நான் அபூ தல்ஹாவின் மனைவியான ருமைஸாவைப் பார்த்தேன். மேலும்இ எனக்கு முன்னால் ஒரு மெல்லிய காலடி சப்தத்தைக் கேட்டேன். 'ஜிப்ரீலே! இது யார்?' என்று நான் கேட்டேன். 'இது பிலால்' என்று அவர் கூறினார். மேலும்இ ஒரு வெள்ளை மாளிகையையும்இ அதன் முற்றத்தில் ஒரு பணிப்பெண்ணையும் நான் பார்த்தேன். 'இந்த மாளிகை யாருக்குரியது?' என்று நான் கேட்டேன். 'அது உமர் இப்னுல் கத்தாப்பிற்கு உரியது' என்று அவர்கள் கூறினார்கள். (உமரே!) நான் உள்ளே சென்று அதைப் பார்க்க விரும்பினேன். அப்போதுஇ உமது ரோஷத்தை (பற்றுதலை) நினைவுகூர்ந்தேன்."

 

ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 3679. 


3479. எலலையில் காவல் காப்பதின் சிறப்பு


رِباطُ شهرٍ خيرٌ من صيام دَهرٍ، ومن مات مرابطًا في سبيلِ اللهِ أمِنَ من الفزعِ الأكبرِ، وغدى عليه برزقِه، وريح من الجنة، ويجرى عليه أجرُ المرابطِ، حتى يبعثه اللهُ 


அபூதர்தா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஓர் எல்லைப் புறத்தைக் காத்து நிற்கும் (ரிபாத்) ஒரு மாதம்இ காலமெல்லாம் நோன்பு நோற்பதை விடச் சிறந்ததாகும். மேலும்இ அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காப்பாளராக இருக்கும் நிலையில் மரணமடைந்தவர்இ பெரும் திகிலிலிருந்து (மறுமை நாளில்) அச்சமற்றவராக இருப்பார். சுவனத்திலிருந்து வரும் அவருடைய வாழ்வாதாரமும் (ரிஸ்க்கும்) நறுமணமும் அவரிடம் காலையிலும் மாலையிலும் கொண்டுவரப்படும். அல்லாஹ் அவரை எழுப்பும் வரைஇ எல்லைக் காப்பாளரின் (ரிபாத்தின்) நன்மைக் கூலி அவருக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.


ஆதாரம் : தபரானி 5ஃ293


3480. எலலையில் காவல் காப்பதின் சிறப்பு


رِبَاطُ يَوْمٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ ".


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஓர் நாள் எல்லைப் பகுதியைக் காப்பதுஇ ஒரு மாதம் நோன்பு நோற்பதை விடவும்இ இரவில் நின்று வணங்குவதை விடவும் சிறந்தது.


ஆதாரம் : முஸ்னது அஹமது 6653இ தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 4821இ ஸஹீஹ் முஸ்லிம் 1913



3481. எலலையில் காவல் காப்பதின் சிறப்பு


رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ، وَمَنْ مَاتَ فِيهِ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ، وَنُمِّيَ لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ


ஸல்மான் அல் ஃபாரிசி (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் (எல்லையைக்) காப்பதுஇ ஒரு மாதம் நோன்பு நோற்பதை விடவும்இ இரவில் நின்று வணங்குவதை விடவும் சிறந்தது ஆகும். மேலும்இ அதில் (அந்த நிலையில்) எவர் மரணிக்கிறாரோஇ அவர் கப்ரின் (அடக்கத்தலம்) சோதனையில் இருந்து பாதுகாக்கப்படுவார் மேலும் அவருடைய நற்செயல் கியாமத் நாள் (மறுமை நாள்) வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.


ஆதாரம் : திர்மிதீ 1665இ நஸாஈ 3168


3482. எலலையில் காவல் காப்பதின் சிறப்பு


رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا الْعَبْدُ فِي سَبِيلِ اللَّهِ أَوِ الْغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا "".


ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அல்லாஹ் (காட்டிய நேரான) பாதையில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் காப்பது உலகத்தை விடவும் அதில் உள்ளவற்றை விடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில்இ ஒரு சாட்டையை வைக்குமளவிற்குள்ள இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதில் உள்ளவற்றை விடவும்  சிறந்ததாகும். ஓர் அடியான் இறைவழியில் செல்கிற மாலை நேரம் அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதில் உள்ளவற்றை விடவும்  சிறந்ததாகும். 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 2892. 


3483. எலலையில் காவல் காப்பதின் சிறப்பு


رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ، وَإِنْ مَاتَ مرابطاً جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ، وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ، وَأَمِنَ الْفُتَّانَ ".


ஸல்மான் அல் ஃபாரிசி (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அல்லாஹ்வின் பாதையில் ஒரு இரவும் ஒரு பகலும் காவல் காப்பது (ரிபாத்) ஒரு மாதம் நோன்பு நோற்பதை விடவும்இ இரவில் நின்று வணங்குவதை விடவும் சிறந்தது. அவர் காவலில் இருக்கும்போதே மரணித்தால்இ அவர் செய்து வந்த நற்செயலின் கூலி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும்இ அவருடைய வாழ்வாதாரமும் அவருக்குத் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன்இ அவர் குழப்பத்தை (கப்ரின் வேதனையை) விட்டும் பாதுகாக்கப்படுவார்.


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1913இ நஸாஈ 3167இ திர்மிதீ 1665


3484. அல்லாஹ்வின் பார்வையிலா உயர்ந்தவர்கள்

 

رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ ".


அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


தலைமுடி கலைந்தஇ (மக்களால் உள்ளே அனுமதிக்கப்படாமல்) வீட்டுவாயில்களில் தடுத்துவைக்கப்பட்ட எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்இ அதை அவன் நிறைவேற்றுவான்."


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 5483


3485. சிறந்த பிரார்த்தனை


رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرْ هُدَايَ إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ رَاهِبًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا - إليك أواها مُنِيبًا - رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي ، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي ".


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"என் இரட்சகனே (இறைவனே)! எனக்கு உதவி செய். எனக்கு எதிராக யாருக்கும் உதவி செய்யாதே. எனக்கு வெற்றியை வழங்கு. எனக்கு எதிராக யாருக்கும் வெற்றி அளிக்காதே. எனக்காகத் திட்டமிடு (எனக்குச் சாதகமாக உனது ஆற்றலைப் பயன்படுத்து)இ எனக்கு எதிராகத் திட்டமிடாதே. எனக்கு நேர்வழி காட்டு. மேலும் அந்த நேர்வழியை எனக்கு எளிதாக்கு. எனக்கு அநீதி இழைப்பவர்களுக்கு எதிராக எனக்கு உதவி செய்.


​இறைவா! என்னைத் உனக்கு நன்றி செலுத்துபவனாகவும்இ உன்னை அதிகம் நினைவு கூறுபவனாகவும்இ உனக்கு அஞ்சி நடப்பவனாகவும்இ உனக்குப் பூரணமாகக் கீழ்ப்படிபவனாகவும்இ உன்னிடம் பணிந்து அடங்குபவனாகவும் - உன்னிடம் மிகவும் இரக்கம் காட்டுபவனாகவும்இ உன்னை நோக்கி மீள்பவனாகவும் - ஆக்குவாயாக.


​என் இரட்சகனே! எனது பாவமன்னிப்பை (மனந்திருந்தலை) ஏற்றுக் கொள்வாயாக. என் பாவங்களை நீக்கி விடுவாயாக. என் பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக. என் வாதத்தை உறுதிப்படுத்துவாயாக. என் இதயத்திற்கு நேர்வழி காட்டுவாயாக. என் நாவைச் செம்மைப்படுத்துவாயாக. என் இதயத்திலுள்ள வெறுப்பையும்இ தீய எண்ணங்களையும் அகற்றி விடுவாயாக."


ஆதாரம் : அபூதாவூத் 1510இ திர்மிதீ 3551இ இப்னு மாஜா 3830


3486. பாவங்களை மன்னிப்பவன்


رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ".


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! என்மீது கிருபை செய்வாயாக (என் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வாயாக)! நிச்சயமாக நீயே பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். அளவற்ற அருளாளன் (ரஹீம்).


ஆதாரம் : அபூதாவூத் 1516இ திர்மிதீ 3434இ இப்னு மாஜா 3814


3487. அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவர்கள்


رُبَّ ذي طِمْرينِ لا يُؤْبَهُ له لو أقسَم على اللهِ لأبرَّه


இப்னு மஸ்ஊத் மற்றும் அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


கிழிந்த ஆடை அணிந்தஇ எவராலும் மதிக்கப்படாத நிலையில் பலர் (இருக்கிறார்கள்). அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்இ நிச்சயமாக அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான்.


ஆதாரம் : முஸ்னது இப்னு அபீஷைபா 414இ பஸ்ஸார் 2035இ இப்னு அதீயின் அல் காமில் ஃபி ழுஅஃபா 2ஃ273


3488. வணக்கத்தை சரியாக நிறைவேற்றுவோம்


رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ، وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ ".


அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


எத்தனையோ நோன்பாளிகள்இ அவர்கள் நோன்பு பிடித்ததன் விளைவாகப் பசியை (த் தவிரஇ வேறு எந்த நன்மையையும்) அடைவதில்லை. மேலும்இ எத்தனையோ (இரவு நேர) வணக்கசாலிகள்இ அவர்கள் நின்று வணங்கியதன் விளைவாக விழித்திருப்பதை (த் தவிரஇ வேறு எந்த நன்மையையும்) அடைவதில்லை.


ஆதாரம் : இப்னு மாஜா 1790இ நஸாஈயின் சுனனுல் குப்ரா 3249இ அஹமது 9683


3489. இப்னு தஹ்தாஹா


رُبَّ عِذْقٍ مُذَلَّلٍ لابنِ الدَّحْدَاحَةِ في الجنَّةِ


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இப்னு தஹ்தாஹா அவர்களுக்குச் சுவனத்தில் இலகுவாக்கப்பட்ட (எளிதாகப் பறிக்கக்கூடிய) தொங்கும் பேரீச்சம் பழக் குலைகள் இருக்கின்றன.


ஆதாரம் : இப்னு சஅதின் ஜாமிஉஸ் ஸகீர் 1ஃ425இ 


3490. வணக்கத்தை சரியாக நிறைவேற்றுவோம்


ربَّ قائم حظه من قيامه الشهر، ورُبَّ صائم حظه من صيامه الجوع والعطش» .


இப்னு உமர் மற்றும் அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


எத்தனையோ நின்று வணங்கும் வணக்கசாலிகளுக்குஇ அவர்கள் நின்று வணங்கியதன் பலனாகக் கண்விழிப்பே (தூக்கமின்மையே) மிஞ்சுகிறது. மேலும்இ எத்தனையோ நோன்பாளிகளுக்குஇ அவர்கள் நோன்பு நோற்றதின் பலனாகப் பசியும் தாகமுமே மிஞ்சுகிறது.


ஆதாரம் : பைஹகியின் சுனனுல் குப்ரா 8112


3491. யூசுபன நபியின் ஒழுக்கம்

رَحِمَ اللهُ أخي يُوسُفَ لو أنَا أتانِي الرسولُ بعدَ طُولِ الحَبْسِ لَأسرعتُ الإِجابةَ حِينَ قال : ارْجِعْ إلى رَبِّكَ فَاسْأَلْهُ ما بالُ النِّسْوَةِ


ஹஸன் பஸரி ரஹிமஹுமுல்லாஹ் அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"அல்லாஹ் என் சகோதரர் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அருள் புரிவானாக. நான் அவர் இடத்தில் இருந்திருந்துஇ நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு தூதுவர் (விடுதலைச் செய்தியுடன்) என்னிடம் வந்திருந்தால்இ அவர் 'உம்முடைய எஜமானனிடம் (மன்னனிடம்) திரும்பிச் சென்றுஇ பெண்களின் நிலை என்ன என்று அவரிடம் கேட்டு வரும்' என்று கூறியபோதேஇ நான் உடனடியாக (அச்சிறைவாசத்தை விட்டு வெளியேற) சம்மதம் தெரிவித்திருப்பேன்."


ஆதாரம் : இமாம் அஹ்மதின் அஸ் ஸுஹ்த் 420இ தஃப்சீர் அபீ ஹாதிம் 11635. தப்சீர் தபரி 173ஃ13.


3492. நல்லதை பேசு இல்லேயேல் மௌனமாக இரு


رَحِمَ اللهُ امرأً تَكَلَّمَ فغَنِمَ، أو سَكَتَ فسَلِمَ


அனஸ் ரலி மற்றும் ஹஸன் பஸரி ரஹிமஹுமுல்லாஹ் அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"(நல்லவற்றைப்) பேசி (நன்மையைப்) பெற்ற மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அல்லது மௌனமாக இருந்து (தீங்கிலிருந்து) தப்பித்த மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக."


ஆதாரம் : முஸ்னது ஷிஹாப் 582இ முஅஜம் இப்னு அல் முக்ரி 1284இ இப்னு அபித்துன்யாவின் அஸ்ஸம்த் 41இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 4585.


ஹஸன் தரமானது


3493. அஸர் முன் சுன்னத்


رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا ".


இப்னு உமர் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழுதவர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.


ஆதாரம் : அபூதாவூத் 1271இ திர்மிதீ 430இ முஸ்னது அஹமத் 5980.


ஹசன் தரமானது


3494. ஃபஜ்ர் தொழுகைக்கு துணையை எழுப்புதல்


رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ ".


அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இரவில் (தூக்கத்திலிருந்து) எழுந்து (கடமையான ஃபஜ்ர்) தொழுகையை நிறைவேற்றிய ஆணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! (ஏனெனில்) அவன் தனது மனைவியையும் எழுப்பி அவளையும் தொழச் செய்தான்; அவள் (எழுந்திருக்க) மறுத்தால் அவன் அவளின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பான்.


இரவில் எழுந்து தொழுகையை நிறைவேற்றும் பெண்ணுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக (ஏறெனில்) அவள் தனது கணவனை எழுப்பி அவனையும் தொழச் செய்வாள்;

அவன் மறுத்தால் அவள் அவனின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பாள்.


ஆதாரம் : அபூதாவூத் 1450இ 1308இ. நஸாஈ 1610இ இப்னு மாஜா 1336இ முஸ்னது அஹமத் 7410.


3495. வியாபார ஒழுக்கங்கள்


رَحِمَ اللَّهُ عَبْدًا سَمْحًا إِذَا بَاعَ ، سَمْحًا إِذَا اشْتَرَى، سمحاً إذا قضى ، سَمْحًا، إِذَا اقْتَضَى .


ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​(வியாபாரத்தில்) விற்கும்போதும்இ வாங்கும்போதும்இ (கடனைத்) திருப்பிச் செலுத்தும்போதும்இ (கடனைத்) திரும்பக் கேட்கும்போதும்இ தாராளமாகவும்இ கனிவாகவும் நடந்துகொள்ளும் அடியார் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.


ஆதாரம் : ஸஹீஹ் இப்னே ஹிப்பான் 4903இ ஸஹீஹுல் புகாரி 2076இ இப்னு மாஜா 2203இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 7758


3496. பேச்சின் ஒழுக்கம்

رَحِمَ اللهُ عبدًا قال خيرًا فغَنِم، أو سكَت عن سوءٍ فسَلِم


காலித் இப்னு அபீ இம்ரான் அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நல்லதைப் பேசி (அதன் மூலம்) நற்பயன் அடைந்தஇ அல்லது தீய(தை பேசுவ)திலிருந்து விலகி (மௌனம் காத்து) பாதுகாப்பைப் பெற்ற அடியானுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.


ஆதாரம் : இப்னு முபாரக்கின் அஸ்ஸுஹுத் 380இ இப்னு அபீ ஆஸிமின் அஸ்ஸுஹுத் 20.


ஹசன் தரமானது


3497. பேச்சின் ஒழுக்கம்

رحِم اللهُ عبدًا قال فغنِمَ أو سكت فسلِمَ


அபூ உமாமா அல் பாஹிலி ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(நல்லதைப்) பேசி நன்மை அடைந்த அல்லது (தீயதைப் பேசாமல்) மௌனமாக இருந்து பாதுகாப்புப் பெற்ற அடியானுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக (அருள் செய்வானாக).


ஆதாரம் : இப்னு ஹஜரின் அல் ஃபிர்தவ்ஸ் 1616இ அபூ அல் ஷேகின் கன்ஸுல் உம்மால் லில் முத்தக்கி அல் ஹிந்தி 7849


3498. குர்ஆனை நினைவூட்டுதலின் சிறப்பு


رَحِمَ اللَّهُ فُلاناً لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً، أَسْقَطْتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا


ஆயிஷா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


'அல்லாஹ் இன்ன மனிதருக்குக் அருள் புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்' 


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 5042. ஸஹீஹ் முஸ்லிம் 788. 


3499. வலுவான ஆதரவாளர்


رَحِمَ اللَّهِ لُوطًا، كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وما بَعَثَ اللَّهُ بَعْدِهِ نَبِيًّا إِلَّا وهُوَ فِي ثروة مِنْ قَوْمِهِ .


அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவர் உறுதியான ஒரு ஆதரவாளனின் பக்கம் (அல்லாஹ்) ஒதுங்குபவராக இருந்தார். அவருக்குப் பிறகு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட எந்த நபியும்இ அவர் தமது சமுதாயத்தில் பலம் வாய்ந்தவராக இல்லாமல் அனுப்பப்படவில்லை."


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 4694இ திர்மிதீ 3116.


ஹசன் தரமானது


3500. பொறுமையின் சிறப்பு


رَحِمَ اللَّهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ ".


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அல்லாஹ் மூஸாவுக்கு அருள்புரிவானாக. அவர் இதைவிட அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் பொறுமையாக இருந்தார்.


ஆதாரம் : ஸஹீஹ் புகாரி : 6059இ முஸ்லிம் 1062.


3501. பொறுமையின் அவசியம்


رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى ؛ لَوْ صَبَرَ لَرَأَى مِنْ صَاحِبِهِ الْعَجَبَ،


அபீ இப்னு கஅப் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"நம்மீதும்இ மூஸா (அலை) மீதும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக. அவர் பொறுமையாக இருந்திருந்தால்இ அவருடைய நண்பரிடமிருந்து (அல்-கிள்ர்) அதிசயமான (சம்பவங்கள் பல)வற்றைக் கண்டிருப்பார்."


ஆதாரம் : அபூதாவூத் 3984


3502. யாசகம் கேட்பவருக்கு வழங்குதல்


رُدُّوا السَّائِلَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ ".


உம்மு புஜைத் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


யாசிப்பவரை (வெறுங்கையோடு) திருப்பி அனுப்பாதீர்கள். அது எரிக்கப்பட்ட கால் குளம்பாக (சிறு துண்டாக) இருந்தாலும் சரி (அதையாவது கொடுங்கள்).


ஆதாரம் : நஸாஈ 2565இ முஸ்னது அஹமத் 16648இ ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 3374.


3503. ஷஹீத்களை அடக்கம் செய்தல்


رُدُّوا الْقَتْلَى إِلَى مَضَاجِعِهِمْ.


ஜாபிர் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(போர்க்களத்தில் ஷஹீதாக) கொல்லப்பட்டவர்களை (இறந்தவர்களை) அவர்கள் ((கொல்லப்பட்டு) விழுந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள்."


ஆதாரம் : திர்மிதீ 1717.


3504. தூதுவன்


رَسُولُ الرَّجُلِ إِلَى الرَّجُلِ إِذْنُهُ ".


அபூஹூரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அனுப்பும் தூதுவனே அவனுக்கு அனுமதி (வழங்கப்பட்டதற்கான சான்று) ஆகும்.


ஆதாரம் : அபூதாவூத் 5189இ அதபுல் முஃப்ரத் 1076இ சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4439இ ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 5811இ பஸ்ஸார் 9867


3505. தொழுகையின் வரிசைகள்


رُصُّوا صُفُوفَكُمْ، وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ ".


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(தொழுகையின் போது) உங்கள் வரிசைகளை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவற்றிற்கு மத்தியில் நெருக்கமாக இருங்கள். கழுத்துகளை சமப்படுத்திக் கொள்ளுங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! வரிசைக்கு இடையே உள்ள இடைவெளியின் வழியாக சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டி நுழைவதைப் போல் ஷைத்தான் நுழைவதை நான் காண்கிறேன்.


ஆதாரம் : அபூதாவூத் 667இ நஸாஈ 815இ முஸ்னது அஹ்மத் 13761


3506. தந்தையின் கோபமும் திருப்தியும்


رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ ".


அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைவனுடைய திருப்திஇ தந்தையின் திருப்தியில் உள்ளது; இறைவனுடைய கோபம்இ தந்தையின் கோபத்தில் உள்ளது.


ஆதாரம் : திர்மிதீ 1899இ இப்னு ஹிப்பான் 429இ பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 7830


3507. பெற்றோரின் திருப்தியும் கோபமும்


رِضَا الرَّبِّ فِي رِضَا الوالدين، وسخطه في سخطهما».


அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இறைவனுடைய திருப்திஇ பெற்றோரின் திருப்தியில் உள்ளது; அவனுடைய கோபம்இ அவர்களின் கோபத்தில் உள்ளது.


ஆதாரம் : திர்மிதீ 1900இ இப்னு ஹிப்பான் 2026இ புலூகுல் மராம் 1457


3508. திருமணத்திற்கான சம்மதம்


رضاها صمتها » يعني : البكر .


ஆயிஷா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


(திருமணத்திற்கான அனுமதி பெறுவதில்) கன்னிப் பெண் என்றால் அவளது மௌனம்தான் சம்மதமாகும்.


ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 5137இ இப்னு ஹிப்பான் 4082இ அபூ அவானாவின் அல் முஸ்தக்ரஜ் 4248


3509. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாயார்

رَضيتُ لأُمَّتي ما رَضيَ لها ابنُ أُمِّ عَبدٍ.


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


என் சமுதாயத்திற்காக இப்னு உம்மி அப்து (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் தாயார்) எதை விரும்பினாரோஇ அதை நான் திருப்தி (சம்மதம்) கொள்கிறேன்.


ஆதாரம் : ஹாகிமின் முஸ்தத்ரக் அலா ஸஹீஹைன் 5481இ தபரானியின் அவ்ஸத் 6879இ பஸ்ஸார் 1986


3510. மூக்கறுபடட்டும்


رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ، ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ، فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ ". 


அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஒருவரின் முன்னிலையில் நான் குறிப்பிடப்படும்போதுஇ அவன் என்மீது ஸலவாத் (ஸலாம்) சொல்லாமல் இருந்தால் அவன் இழிவடையட்டும் (அல்லது மூக்கறுபடட்டும்).

யாரொருவன் ரமளான் மாதம் தன்னை வந்தடைந்தும்இ பாவமன்னிப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அது அவனைவிட்டும் நீங்கிவிட்டதோ (ரமளான் மாதம் முடிந்துவிட்டதோ) அவனும் இழிவடையட்டும்.

அவனுடைய பெற்றோர் இருவரும் அல்லது அவர்களில் ஒருவர் அவனருகில் முதுமையை அடைந்தும்இ அவர்களைக் கவனித்து அதன் மூலம் சுவர்க்கத்தில் நுழையாத மனிதனும் இழிவடையட்டும்.


ஆதாரம் : திர்மிதீ 3545இ முஸ்னது அஹமத் 7451


3511. பெற்றோரை பேணுதல்


رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ. " مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ ".


அபூஹுரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அவன் இழிவடைந்தான்! பின்னர் அவன் இழிவடைந்தான்! பின்னர் அவன் இழிவடைந்தான்! (அதாவதுஇ மண்ணைக் கவ்வினான்ஃநாசமானான்.)


​"எவர் ஒருவர் தன் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமைக் காலத்தில் அடைந்தும் (அவர்களுக்குச் சேவை செய்து அதன் மூலம்) சுவனம் செல்லவில்லையோஇ அவன் (இழிவடைந்தான்)."


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 4987 (2551)



3512. குற்றமற்ற மூவர்


رُفِعَ القلم عن ثلاثة : عَنِ الْمَجْنُون المغلوب على عقله حَتَّى يَبْرَأَ وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصبي حتى يحتلم».


அலீ பீன் அபீதாலிப் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


மூன்று நபர்களிடமிருந்து பேனா (சட்டப் பொறுப்பு) உயர்த்தப்பட்டுவிட்டது (நீக்கப்பட்டுவிட்டது):"


​"அறிவு திரும்பும் வரை (குணமடையும் வரை) அவரது அறிவின் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கும் மனநலம் குன்றியவரிடம் இருந்து."

​"விழித்துக் கொள்ளும் வரை உறங்குபவனிடம் இருந்து."

​"பருவ வயதை அடையும் வரை சிறுவனிடம் இருந்து.”


ஆதாரம் : அபூதாவூத் 4399இ முஸ்னது அஹமத் 1328. பைஹகி 8380. 



3513. குற்றமற்ற மூவர்



رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ : عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ "


அலீ பீன் அபீதாலிப் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"மூன்று நபர்களிடமிருந்து பேனா (சட்டப் பொறுப்பு) நீக்கப்பட்டுவிட்டது:


​விழித்துக் கொள்ளும் வரை உறங்குபவனிடமிருந்து.

​வளர்ந்து (பருவ வயதை அடையும்) வரை சிறுவனிடமிருந்து.

​அறிவு (சுயநினைவு) திரும்பும் வரை புத்தி சுவாதீனம் இல்லாதவனிடமிருந்து (அல்லது மடையனிடமிருந்து)."


ஆதாரம் : திர்மிதீ 1433இ அபூதாவூத் 4402இ முஸ்னது அஹமத் 956. 


3514. குற்றமற்ற மூவர்


رُفِعَ الْقَلَمُ عَنْ ثلاث : عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ "


அலீ பீன் அபீதாலிப் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"மூன்று நபர்களிடமிருந்து பேனா (சட்டப் பொறுப்பு) நீக்கப்பட்டுவிட்டது:


​விழித்துக் கொள்ளும் வரை உறங்குபவனிடமிருந்து.

​வளர்ந்து (பருவ வயதை அடையும்) வரை சிறுவனிடமிருந்து.

​அறிவு (சுயநினைவு) திரும்பும் வரை புத்தி சுவாதீனம் இல்லாதவனிடமிருந்து (அல்லது மடையனிடமிருந்து)."


ஆதாரம் : இப்னு முஃப்லிஹின் பத்ருல் முனீர் 3ஃ234இ திர்மிதீ 1433இ அபூதாவூத் 4402இ முஸ்னது அஹமத் 956. 



3515. குற்றமற்ற மூன்று தருணங்கள்

رُفِعَ عَن أُمَّتي الخَطأُ والنِّسيانُ وما استُكرِهوا عليه


ஸவ்பான் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


எனது சமுதாயத்தை விட்டும் மூன்று விஷயங்கள் (குற்றப்பட்டியலிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டன (அவற்றிற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை):


​தவறுதலாகச் செய்வதுஇ


​மறதியால் செய்வதுஇ


​எதன் மீது அவர்கள் வற்புறுத்தப்பட்டார்களோ (அதைச் செய்வது).


ஆதாரம் : சுயூத்தியின் ஜாமிஉஸ் ஸகீர் 4445


3516. மிஃராஜ் பயணம்


رُفِعْتُ إِلَى السِّدْرَة المنْتَهَى مُنتَهاها في السماء السابعة نَبَقُها مِثلُ قِلالِ هَجَرَ وورَقُها مِثلُ آذانِ الفِيلَةِ فإذا أربعةُ أنْهارٍ نِهْرانِ ظاهِرانِ، ونهرانِ باطِنانِ. فأمّا الظَّاهِرانِ : فالنِّيلُ والفُراتُ. وأمّا الباطِنانِ : فنَهْرانِ في الجنةِ، وأُتِيتُ بثلاثةٍ أقْداحٍ قدَحٌ فيه لَبنٌ وقدَحٌ فيه عسَلٌ وقدَحٌ فيه خمْرٌ، فأخذتُ الّذي فيه الَّلبَنَ فشَرِبْتُ فقِيلَ لِي : أجَبْتَ الفِطرةَ أنتَ وأُمَّتُكَ


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நான் (மிஃராஜ் பயணத்தின்போது)  ஸித்ரத்துல் முன்தஹா வரை உயர்த்தப்பட்டேன். அது ஏழாவது வானத்தில் உள்ளது. அதிலுள்ள இலந்தைப் பழங்கள் ஹஜர் குடங்களைப் போலவும்இ அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போலவும் இருந்தன. அங்கே நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் வெளிப்படையானவை (உலகில் ஓடுபவை) மற்றும் இரண்டு ஆறுகள் மறைவானவை (சுவனத்தில் ஓடுபவை). வெளிப்படையான ஆறுகள்: நைல் மற்றும் யூப்ரடீஸ் ஆகும். மறைவான ஆறுகள் சுவனத்தில் உள்ளன. மேலும்இ (அங்கு) மூன்று கோப்பைகள் என்னிடம் கொண்டு வரப்பட்டன. ஒரு கோப்பையில் பால் இருந்தது. ஒரு கோப்பையில் தேன் இருந்தது. ஒரு கோப்பையில் மது இருந்தது. நான் பால் இருந்த கோப்பையை எடுத்து குடித்தேன். அப்போது என்னிடம்இ ‘நீர் இயற்கையான தூய்மையான வழியை (ஃபித்ராவை) ஏற்றுக்கொண்டீர். நீரும் உம்முடைய உம்மத்தும் (சமுதாயமும் இயற்கையான மரபை அடைந்துள்ளீர்கள்)’ என்று கூறப்பட்டது."


ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி 5610இ அபூ அவானாவின் முஸ்தக்ரஜ் அலா முஸ்லிம் 8134இ தபரானியின் முஅஜமுல் ஸகீர் 1139இ ஹாகிம் 272இ 



3517. ஃபஜ்ருடைய முன் சுன்னத்


رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ".


ஆயிஷா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்துகள் இந்த உலகை விடவும் அதில் உள்ள அனைத்தை விடவும் மிகச் சிறந்ததாகும்.


ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1314 (725)இ திர்மிதீ 416இ நஸாஈ 1759இ அபூ அவானாவின் முஸ்தக்ரஜ் 2188.


3518.நஃபில் தொழுகைகள்

رَكْعتانِ خَفيفتانِ بِما تَحقِرُونَ وتَنفِلُونَ يَزيدُهما هذا في عملِهِ أحَبُّ إليه من بقيَّةِ دُنياكُمْ


அபூஹூரைரா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


நீங்கள் சாதாரணமாகக் கருதிஇ உபரியாகத் தொழுகின்ற (நஃபிலான) இரண்டு லேசான ரக்அத்துகள் உள்ளனவேஇ அவற்றை (ஒரு அடியான்) தனது அமலில் (நற்செயலில்) அதிகமாக்கிக் கொள்வதுஇ உங்களுடைய எஞ்சிய உலகத்தை விடவும் (அதில் உள்ள இன்பங்களை விடவும்) அவனுக்கு (அல்லாஹ்வுக்கு) மிகவும் பிரியமானதாகும்.


ஆதாரம் : இப்னு முபாரக்கின் அஸ் ஸுஹ்த் 31இ முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 7715இ தபரானியின் முஅஜமுல் அவ்ஸத் 920.


3519. ரமளான் பாக்கியமிக்க மாதம்

رمضانُ شهرٌ مباركٌ تُفتحُ فيهِ أبوابُ الجنةِ وتغلقُ أبوابُ السعيرِ وتصفدُ فيهِ الشياطينُ، و ينادي منادٍ كلَّ ليلةٍ : يا باغيَ الخيرِ هلمَّ ، و يا باغيَ الشرِّ أقصرْ


நபித்தோழர்களில் ஒருவர் அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ரமளான் ஒரு பாக்கியமிக்க (அருள் நிறைந்த) மாதமாகும். அதில் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றனஇ நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. மேலும் அதில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். மேலும்இ (ரலளான் மாதத்தின்) ஒவ்வொரு இரவும் ஒரு அழைப்பாளர் (வானவர்) அழைக்கிறார்: 'நன்மையை நாடுவோனேஇ விரைந்து வா (முன்னோக்கி வா)! மேலும் தீமையை நாடுவோனேஇ நிறுத்திவிடு (திரும்பிக்கொள்ஃகுறைத்துக்கொள்)!'


ஆதாரம் : பைஹகியின் ஷுஅபுல் ஈமான் 3329இ முஸ்னது அஹமத் 18795இ இப்னு அபீ ஷைபா 8868.



3520. அப்பெறிதல்


رَمْيًا بَنِي إِسْمَاعِيلَ ؛ فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ".


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


​"ஓஇ இஸ்மாயீலின் மக்களே! அம்பு எய்யுங்கள்; ஏனெனில்இ உங்கள் தந்தை (இஸ்மாயீல்) ஒரு சிறந்த வில்லாளியாக இருந்தார்."


ஆதாரம் : இப்னுமாஜா 2815இ முஸ்னத் அஹ்மத் 3444இ 


3521. ஜும்ஆ கடமை


رَوَاحُ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ ".


ஹஃப்ஸா ரலி அறிவித்ததாவது :


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


ஜும்ஆவுக்குச் செல்வது வயது வந்த (பருவமடைந்த ஆண்கள்) ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.


ஆதாரம் : நஸாஈ 1371இ அபூதாவூத் 342இ 


சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...