Monday, November 12, 2018

மனனம் செய்வோம் - 110



பாலுறவை சரியாக பயன்படுத்துவதும் தர்மம்


فِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ


தமிழில் : ஃபீ புழ்இ அஹதிகும் ஸதகதுன்

அர்த்தம் :அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 109



தீமையை தடுத்தல்


نَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ،


தமிழில் : நஹ்யுன் அனில் முன்கரி ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தீமையைத் தடுத்தலும் தர்மமே;

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 108



நன்மையை ஏவி தீமையை தடுத்தல்


أَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ،


தமிழில் : அம்ரு பில் மஅரூஃபி ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நல்லதை ஏவுதலும் தர்மமே; 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 107



அல்லாஹு அக்பர்


كُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ


தமிழில் : குல்லு தக்பீருன் ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 106


லாயிலாஹ இல்லல்லாஹ்



كُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ


தமிழில் : குல்லு தஹ்லீலுன் ஸதகதுன்

அர்த்தம் :அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்



ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 105




அல்ஹம்துலில்லாஹ்


كُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ،


தமிழில் : குல்லு தஹ்மீதுன் ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 104



தஸ்பீஹ்


كُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ،


தமிழில் : குல்லு தஸ்பீஹுன் ஸதகதுன்

அர்த்தம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

மனனம் செய்வோம் - 103



தானியத்தில் ஜகாத்


لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ


தமிழில் : லைஸ ஃபீமா தூன ஹம்ஸி அவ்ஸுகின் ஸதகதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக்= 60ஸாவு) தானியத்தில் ஸகாத் (கடமை) இல்லை. 

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1405

மனனம் செய்வோம் - 102



ஒட்டகத்தின் ஜகாத்


لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ،


தமிழில் : லைஸ ஃபீமா தூன ஹம்ஸி தவ்தின் ஸதகதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1405

மனனம் செய்வோம் - 101



வெள்ளியின் ஜகாத்


لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ،


தமிழில் : லைஸ ஃபீமா தூன ஹம்ஸி அவாகின் ஸதகதுன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. 
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்

ஸஹீஹ் புகாரி : 1405

மனனம் செய்வோம் - 100



அஸருக்கு பின் சுனனத் இல்லை


لَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ


தமிழில் : லா ஸலாத பஅதல் அஸ்ரி ஹத்தா தகீபஷ் ஷம்ஸு

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை  எந்தத் தொழுகையும் இல்லை

ஸஹீஹ் புகாரி : 588

மனனம் செய்வோம் - 99


ஃபஜ்ருக்கு பின் சுன்னத் இல்லை



لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ،


தமிழில் : லா ஸலாத பஅத ஸுப்ஹி ஹத்தா தர்தஃபிஅஷ் ஷம்ஸ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.'

ஸஹீஹ் புகாரி : 586

மனனம் செய்வோம் - 98


தண்ணீரை தடுத்தால்



لِتَمْنَعُوا بِهِ فَضْلَ الْكَلَأِ


தமிழில் : லி தம்னஊ பிஹி ஃபழ்ளல் கலஇ

அர்த்தம் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

ஸஹீஹ் புகாரி : 2355

மனனம் செய்வோம் - 97


தேவைக்கு மேல் உள்ள நீர்



لَا تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ


தமிழில் : லா தம்னஊ ஃபழ்ளல் மாஇ

அர்த்தம் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். 

ஸஹீஹ் புகாரி : 2355

மனனம் செய்வோம் - 96



கடன்


إِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً


தமிழில் : இன்ன கைரகும் அஹ்ஸனுகும் கழாஅன்

அர்த்தம் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அழகிய முறையில்(கடனை) திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்.

ஸஹீஹ் புகாரி : 2306

மனனம் செய்வோம் - 95



முத்ஆ தடுக்கப்பட்டது


نَهَى عَنْ نِكَاحِ الْمُتْعَةِ


தமிழில் : நஹா அன் நிகாஹில் முத்அதி

அர்த்தம் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

"அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை செய்தார்கள்.  

ஸஹீஹ் முஸ்லிம் : 2737

மனனம் செய்வோம் - 94



திருமணம் பார்வையை தாழ்த்தும்


فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ،


தமிழில் : ஃபல் யதஸவ்வஜ், ஃபஇன்னஹு அ(g) கழ்ழூ லில் பஸரி

அர்த்தம் : நபி (ஸல்) கூறினார்கள் :

மணமுடித்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்;  

ஸஹீஹ் முஸ்லிம் : 2710

Sunday, November 11, 2018

மனனம் செய்வோம் - 93



பெண்ணின் மறைவிடத்தை வேறொரு பெண் பார்க்கக்கூடாது


لَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ


தமிழில் : லா அல் மர்அது இலா அவ்ரதில் மர்அதி

அர்த்தம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் (பார்க்க வேண்டாம்)  

ஸஹீஹ் முஸ்லிம் : 565

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...