Tuesday, December 30, 2025

திருமணம் ஒரு வழிபாடு

 திருமணம் ஒரு வழிபாடு


இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம். இறைவனால் தேர்வு செய்யப்பட்ட உண்மையான மார்க்கம். 


மார்க்கம் என்றால் வழித்தடம் என்று பொருள். சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழித்தடமாக இஸ்லாம் இருப்பதால் அதை மார்க்கம் என்றே அழைக்கிறோம். 


இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் வழிகாட்டுதல்கள் உள்ளன.


இறைவன் மனிதர்களைப் படைத்ததோடு அவனை அவன் போக்கில் நடந்துகொள்ளுமாறு விட்டுவிடவில்லை. மாறாகஇ அவன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்கின்ற அனைத்து விஷயங்களையும் திருக்குர்ஆன் மூலம் இறைவன் அறிவித்திருக்கிறான். மேலும் நபியவர்கள் மூலம் நடைமுறை முன்மாதிரியாகவும் அவற்றை நமக்குக் காண்பித்திருக்கிறான். 


அந்தவகையில் திருக்குர்ஆன் திருமணம் பற்றிய பல்வேறு சட்டங்களைக் கூறி அது தொடர்பாக வழிகாட்டியிருக்கிறது. 


மேலும் நபியவர்கள் திருமணத்தை ஒரு இபாதத் என்று கூறியிருக்கிறார்கள். சில மதங்களில்இ ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாமோஇ ‘திருமணம் செய்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று அறிவிக்கிறது. அந்த அளவிற்கு இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.


1) திருமணம் என்பது நபிவழி எனும் சுன்னத்தாகும்


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் (எவ்வாறு இருக்கும்? என்பது) குறித்து கேள்வி கேட்டனர். 


அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோதுஇ அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. 


பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)இ 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர். 


அவர்களில் ஒருவர்இ '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால்இ எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். 


இன்னொருவர்இ 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். 


மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் திருமணம் முடித்துக்கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். 


(அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நபியவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்தார்கள். அவர்களிடத்தில் அம்மூவர் கூறிய கூற்றுக்கள் தெரிவிக்கப்பட்டது.)


அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ (அந்தத் தோழர்களிடம்) வந்துஇ 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! 


அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட நான்தான் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். 


ஆயினும்இ நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். 


(இரவின் சில பகுதிகளில்) தொழுகவும் செய்கிறேன். (இரவின் சில பகுதிகளில்) உறங்கவும் செய்கிறேன். 


மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். 


(இதுதான் எனது சுன்னத் எனும் வழிமுறை) ஆகவே, (இதுபோன்ற) என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5063. 


மேற்கூறிய நபிமொழியில் இரண்டு விஷயங்களை நபியவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அவை :


திருமணம் என்பது நபிவழியைச் சார்ந்தது. ஆகவே அது ஒரு இபாதத் ஆகும். மற்ற மற்ற நபிவழியைப் பேணி நடந்தால் நமக்கு நன்மைகள் வாரி வழங்கப்படுவதைப் போன்று திருமணம் செய்வதன் மூலமும் நன்மைகள் வாரி வழங்கப்படும்.

அதைப்போல் ஒரு மனிதர் திருமணம் முடிக்க அனைத்து தகுதிகளையும் பெற்று வேண்டுமென்றே திருமணம் முடிக்காமல் இருந்தால் அவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. 


ஆக ஒரு மனிதன் திருமணம் செய்தால்தான் அவன் முஸ்லிமாகக் கருதப்படுவான். 


2) அனைத்து நபிமார்களும் திருமணம் செய்தவர்களே


அதனால்தான் இறைவன் அனைத்து நபிமார்களைக் குறித்துக் கூறும்போது, ‘அவர்கள் அனைவரும் திருமணம் முடித்தவர்கள்’ என்று அறிவிக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


(நபியே!) உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்.


அல் குர்ஆன் -   13 : 38


நபிமார்களின் பொதுவான நடைமுறைகளில் திருமணம் ஒன்றாகும் என்பது இதன்மூலம் தெரிகிறது. ஆகவே திருமணம் என்பது நபிவழி மட்டுமல்ல. அது நபிமார்களின் வழியும் கூட.

3) முதல் மனிதர் துணைவியோடுதான் பூமிக்கு அனுப்பப்பட்டார்


அதைப்போல் அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்கும்போது முதல்மனிதராக ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். அவர்களை மட்டும் படைத்து அப்படியே விட்டுவிடாமல் அவர்களுக்கு துணையாக ஹவ்வா அலை அவர்களையும் படைத்தான். 


ஆதம் நபியை பூமிக்கு அனுப்பி வைக்கும்போது தனிமனிதராக அனுப்பாமல் ‘கணவன் மனைவி’ என்றொரு குடும்பமாகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான். 


மனிதச் சமூகம் ஒரு குடும்பத்திலிருந்து பிறந்து பல குடும்பங்களாக பல்கிப் பெருக வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஆகவேதான் அல்லாஹ் திருமணத்தை ஒரு வழிபாடாக அமைத்துத் தந்திருக்கிறான்.



4) திருமணத்தை வலியுறுத்திய நபிகளார்


ஆகவேதான் திருமணத்தை நபியவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


'உங்களில்இ திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். 


யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.


ஸஹீஹ் புகாரி : 1905. 


மேற்கூறிய நபிமொழியில் ‘திருமணம் செய்வதற்கான வசதிகளைப் பெற்றவர் திருமணம் செய்யட்டும்’ என்று கட்டளை வாக்கியமாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இது ‘திருமணம் வலியுறுத்தப்பட்ட ஒரு காரியம்’ என்பதை குறிக்கிறது.


5) நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்


ஆகவேதான் நபித்தோழர்களும் திருமணம் விஷயத்தில் பிறரை ஆர்வமூட்டுபவர்களாக இருந்துள்ளனர்.


அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்கள் :


நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்துஇ 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். 


பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். 


அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். 


திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். 


நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள்இ நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: 


''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5065. 


ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :


என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி)இ 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான்இ 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில்இ இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5069. 


எனவே திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு காரியமாகும். ஆகவேதான் அவற்றை நபியவர்களும் சஹாபாக்களும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.


இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்: 


“எனது வாழ்நாளில் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதி இருந்துஇ நான் மரணமடைந்துவிடுவேன் என்று முன்னரே எனக்குத் தெரிந்துஇ திருமணம் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் எனக்கு இருக்கும் என்றால் திருமணம் செய்யாமல் இருப்பதன் மூலம் ஏற்படும் சோதனைக்குப் பயந்து நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்!”


இப்னு மஸ்ஊத் ரலி ஸஹாபாக்களில் அறிஞராக இருந்தவர்கள். அதிகமான மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் இந்த கூற்று இஸ்லாத்தில் திருமணம் வலியறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.


மேலும் திருமணம் முடிக்காமல் இருப்பதை நபியவர்கள் தடையும் செய்திருக்கிறார்கள்.

6) திருமணம் முடிக்காமல் இருப்பது பாவம்


ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள் :


உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள (அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். 


அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். 


ஸஹீஹ் புகாரி : 5073, 5074. 


நபியவர்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அதைப்போல் ஆண்மை நீக்கம் செய்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. ஏனெனில் திருமணம் செய்தால்தான் அவன் உண்மையான முஸ்லிமாக இருப்பான்.


இதுமட்டுமில்லாமல் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அல்லாஹ்வும் வலியுறுத்தியுள்ளான்.


7) திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை


அல்லாஹ் கூறுகிறான் :


உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், உங்கள் ஆண் - பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வசதியளிப்பான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.


அல் குர்ஆன் -   24 : 32


நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் அடிமைகளுக்குக் கூட திருமணம் முடித்து வைக்குமாறு இறைவன் வலியுறுத்தியுள்ளான். தற்காலத்தில் அடிமை முறை இல்லை. ஆனால் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் நம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் முடிக்கும் வயது வந்துவிட்டால் அவர்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் முதலாளிகள் ஈடுபட வேண்டும். அதற்கான பொருளாதாரத்தை கொடுத்து உதவ வேண்டும். அது நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரும்.


அதைப்போல் இவ்வசனத்தில் இன்னொரு விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான். அதாவது இன்று நிறையபேர் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றால் நிறைய பொருளாதாரம் தேவைப்படும் என்று கூறி திருமணத்தை தள்ளிபோடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ திருமணம் முடித்தால் பொருளாதாரத்ததை அருளாக வழங்குவதாகக் குறிப்பிடுகிறான். ஆகவே இதுபோன்ற சாக்குபோக்குகளைக் கூறி திருமணத்தைத் தள்ளிப்போடுவது சரியல்ல.


8) அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்


ஆகவேதான் அல்லாஹ் திருமணம் முடிப்பவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவிக்கிறான்.


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் : 


"மூன்று நபர்களுக்கு உதவுவதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ளான். 


இறைப்பாதையில் போராடுபவர்,

விடுதலைப் பத்திரம் எழுதியபின் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பும் அடிமை,

கற்பைப் பாதுகாப்பதற்காக திருமணம் செய்ய விரும்புவர்."


திர்மிதீ 1655, இப்னு மாஜா 2516


தனது கற்பைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் திருமணம் செய்தால் அவனுக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ் திருமணம் செய்வதை வலியுறுத்துகிறான்.


10) திருமணம் தீவிரமானது


முத்தாய்ப்பாக நபியவர்கள் திருமணம் செய்வதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது : 


மூன்று விஷயங்கள் உள்ளது. அவற்றை தீவிரமானதாகக் கருதினால் தீவிரமானதாக இருக்கும். நகைச்சுவையாகக் கருதினாலும் தீவிரமானதாகத்தான் இருக்கும். அவை : திருமணம்இ விவாகரத்துஇ விவாகரத்து செய்த பின் மீண்டும் (மனைவியை) அழைத்துக் கொள்ளுதல்.


இப்னு மாஜா 2039.


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாவது:


"மூன்று செயல்களை வினையாகச் செய்வதும் வினைதான்; விளையாட்டாகச் செய்வதும் வினைதான். அவை: 1. திருமணம் 2. மணவிலக்கு 3. மணவிலக்கு அளிக்கப் பட்டுக் காத்திருப்பில் இருக்கும் பெண்ணைத் திரும்ப அழைத்தல்.


அபூதாவூது 2194 (தமிழில் 1875), திர்மிதீ 1184


திருமணம் செய்வது நமது ஈமானையும் கற்பையும் பாதுகாக்கும் அம்சமாக இருப்பதால் அவற்றிற்கு தீவிரத்துவம் காட்ட வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது. ஆகவே திருமணம் விஷயத்தில் நாம் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.


11) உலக நன்மை


அதைப் போல் திருமணம் செய்வதால் உலகியல் நன்மைகளும் ஏற்படும். இதைப்பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


1959 ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை (வுhந Pநழிடந'ள நேறள pயிநச என்ற பத்திரிகையில்) பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா சபை) ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகின்றது: 


'திருமணம் செய்து வாழ்பவர்கள் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களைவிட நீண்ட நாள்கள் உயிர் வாழ்கின்றார்கள். அவ்வாறு திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் விதவைகள்இ மணவிலக்குப் பெற்றவர்கள்இ பிரம்மச்சாரிகள் யாராக இருந்தாலும் சரியே'.


அறிக்கை மேலும் இவ்வாறு கூறுகிறது: 'உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் அதிகமானோர் சிறுவயதிலேயே திருமணம் செய்யத் துவங்கியுள்ளனர். ஆயினும் திருமணம் செய்து வாழ்பவர்களின் ஆயுட்காலம் நீண்டு கொண்டே செல்கிறது'.


1958ஆம் ஆண்டு உலகம் முழுவது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஐ.நா சபையால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: 'திருமணம் செய்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்கள்இ திருமணம் செய்யாமல் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும். 


இதன் அடிப்படையில் ... திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேபோன்று பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்று கூறலாம். கர்ப்ப காலங்களிலும் பிரசவ வேளைகளிலும் ஏற்படும் ஆபத்துகள் முன்பைவிட இப்போது மிகவும் குறைந்துள்ளன. 

(பார்க்க ஃபிக்ஹுஸ் ஸுன்னா தமிழாக்கம் 6 வது பாகம்)


திருமணம் செய்வது தகுதிவாய்ந்த முஸ்லிம்கள்மீது கட்டாயக்கடமை என்று அல்லாஹ் அறிவித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் திருமணம் முடிப்பதை கட்டாயமாக்குவதற்காக அல்லாஹ் திருமணத்தையும் ஆயுளையும் ஒன்றிணைத்துள்ளான்.


ஆகவே இதன்மூலமும் இறைவன் திருமணம் செய்வதை அனைவர் மீதும் கடமையாக ஆக்கியிருக்கிறான்.



Sunday, December 21, 2025

இஸ்லாமிய வரலாறு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...




 இஸ்லாமிய வரலாறு


ஆசிரியர் : அக்பர் ஷா நஜீபாபதி


முழு புத்தகத்தை டவுன்லோடு செய்ய 

இஸ்லாமிய வரலாறு - பாகம் 1



முன்னுரை


​அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை


​உலக வரலாற்றை உற்றுநோக்கும்போது ஒரு உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. 


அது எதுவென்றால்இ உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும்இ ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும்இ சீர்திருத்தவாதிகளும்இ வழிகாட்டிகளும் மற்றும் மத நிறுவனர்களும் ஒரே இறைவனையே நம்பினார்கள் என்பதாகும். 


அவர்கள் அனைவரும் ஒரு உயர்ந்த படைப்பாளனின் இருப்பைப் பற்றி தங்கள் மக்களுக்கு உணர்த்த முழு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆதம்இ நூஹ்இ இப்ராஹீம்இ மூஸா மற்றும் முஹம்மது (அலை) ஆகியோர் ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்த போதிலும்இ அவர்களின் போதனைகளில் 'படைப்பாளனின் ஏகத்துவம்' (ஒரே இறைவன் எனும் கொள்கை) பொதுவான காரணியாக இருந்தது.


​கிருஷ்ணர்இ ராமச்சந்திரன்இ கௌதம புத்தர் மற்றும் குரு நானக் ஆகியோர் இந்தியாவில் தோன்றினர்; கைகுபாத் மற்றும் ஜோராஸ்டர் ஈரானிலும்; கன்பூசியஸ் சீனாவிலும்; லுக்மான் கிரேக்கத்திலும்; யூசுப் எகிப்திலும்; லூத் சிரியா மற்றும் பாலஸ்தீனத்திலும் தோன்றினர் - ஆனால் இவர்கள் அனைவருடைய போதனைகளின் அடிப்படையிலும் இறைவனின் ஏகத்துவமே அமைந்திருந்தது.


​கிட்டத்தட்ட அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும்இ முதியவர்களும் இளைஞர்களும்இ ஆண்களும் பெண்களும்இ கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் என அனைவரும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நம்புகிறார்கள். 


மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலரே இறைவனின் பெயரை உச்சரிக்க மறுக்கலாம். ஆனால் அவர்களின் இதயங்களுக்குள்ளும் ஒரே இறைவனது இருப்பை உணர்கிறார்கள். 


இந்த பிரபஞ்சத்தின் காரணம் மற்றும் விளைவு (உயரளந யனெ நககநஉவ) செயல்முறையானதுஇ ஏதோ ஒரு மகா ஞானம் மிக்க சக்தியால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஞானமிக்க மற்றும் நன்நோக்கம் கொண்ட சக்தியே சர்வவல்லமையுள்ள அல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது.


​அறிஞர்களின் ஏகோபித்த நம்பிக்கையையும்இ சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்பையும் மனநலம் குன்றியவர்களைத் தவிர வேறு யாரும் நிராகரிக்க முடியாது.


​முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார்


​ரோமின் பிரம்மாண்டமான பேரரசு ஏற்கனவே துண்டு துண்டாக உடைந்திருந்தது. அதன் அரை-மிருகத்தனமான சட்டங்களும் அரசியலமைப்பும் சிதைந்துஇ அதிலிருந்த நற்பண்புகள் அனைத்தும் அழிந்து போயின. 


பாரசீகப் பேரரசு ஊழல் மற்றும் கொடுமைகளின் களஞ்சியமாக மாறியிருந்தது;


 சீனாவும் துர்கிஸ்தானும் இரத்தக் களரி மற்றும் கொடூரத்தின் புகலிடமாகத் தெரிந்தன. 


இந்தியாவில் அசோகர் மற்றும் கனிஷ்கரின் ஆட்சிகள் இல்லாமல் போயின. மகாராஜா விக்ரமாதித்யனின் ஆட்சியைப் பற்றி யாரும் நினைக்கக்கூட முடியவில்லை; புத்த மதத்திற்கோ அல்லது பிராமண மதத்திற்கோ அங்கு முன்மாதிரிகள் இல்லை.


​புத்தரை மதிப்பவர்கள்இ அதிகாரம் மற்றும் உலக இன்பங்களுக்காக அல்லது நம்பிக்கையின் பலவீனத்தால் வெட்கக்கேடான செயல்களைச் செய்தனர். 


கிருஷ்ணரின் ஜபமாலையை ஓதுபவர்கள்இ படைப்புகளிலேயே மிகவும் கண்ணியமான மனிதனைஇ காய்கறிகள் மற்றும் கற்களுக்கு முன்னால் சிரவணக்கம் (pசழளவசயவந) செய்ய வைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. 


ஐரோப்பா ஒரு காடு போலவும்இ அங்கிருந்த மனிதர்கள் இரத்த வெறி பிடித்த மிருகங்களைப் போலவும் இருந்தனர் என்றால்இ அரேபியா முழுவதும் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. 


சுருக்கமாகச் சொன்னால்இ உலகில் எங்குமே மனித இனம் அதன் தூய மனிதத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் ஒட்டியிருக்கவில்லை. 


உலகம் முழுவதும் இருண்டிருந்த இத்தகையச் சூழலில்இ பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பற்றி சிந்திப்பது இந்திய மக்களின் கடமையாக இருந்தது. 


அதில் ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் கூறுகிறார்:


​"அர்ஜுனா! எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோஇ அப்போதெல்லாம் நான் நற்பண்புகளைக் காக்கவும்இ தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் தோன்றுகிறேன்."


​ஜோராஸ்டரின் கட்டளைகளின்படி ஒரு வழிகாட்டியைத் தேடி வருவது பாரசீகர்களின் கடமையாக இருந்தது. 


'பாரான்' மலைத்தொடரின் சிகரங்களிலிருந்து வெளிச்சம் தோன்றுவதற்காகக் காத்திருப்பதும்இ புறக்கணிக்கப்பட்ட கல்லை மூலைக்கல்லாக (உழசநெசளவழநெ) மாற்றுவதும் யூதர்களின் கடமையாக இருந்தது. 


இப்ராஹீமின் பிரார்த்தனையையும்இ இயேசுவின் (ஈஸா) நற்செய்திகளையும் தங்களின் நம்பிக்கையின் மையமாக மாற்றுவது கிறிஸ்தவர்களின் கடமையாக இருந்தது. 


ஆனால் உலகளாவிய ஊழலும்இ சீர்குலைவும்இ இருளும் மனிதக் கண்களை மிகக் குருடாக்கிவிட்டன. இதனால் எவருக்கும் தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோ அல்லது மருந்து தேடிச் செல்லும் அறிவோ இருக்கவில்லை.


இத்தகையதொரு காலக்கட்டத்தில்இ அரேபியா போன்ற ஒரு நிலப்பரப்பில்இ பலதெய்வ வழிபாடு எனும் சீர்கேடுஇ உருவ வழிபாட்டின் இருள்இ ஊழல் மற்றும் சீர்குலைவு எனும் மாசுஇ மற்றும் தீய பழக்கவழக்கங்கள் மற்றும் வெட்கக்கேடான செயல்களின் அழுக்குகளை அகற்றுவதற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். 


'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற முழக்கத்தை எழுப்பிஇ மனிதர்களைப் போன்ற உருவத்தில் இருந்தவர்களை உண்மையான மனிதர்களாகவும்இ உயரிய ஒழுக்கநெறி கொண்டவர்களாகவும் மாற்றும் புனிதமான கடமையை அவர் ஆற்றினார். 


அத்தகைய மேன்மையான மக்களைஇ இருளை ஒளியாகவும்இ அநீதியை நீதியாகவும்இ குழப்பத்தை அமைதியாகவும்இ நேர்மையின்மையை நேர்மையாகவும் மாற்றும் இறைநேசர்களாக அவர் உருவாக்கினார்; வழிதவறியவர்கள்இ சிலையாராதனை செய்பவர்கள் மற்றும் தீயவர்களிடமிருந்து தீமைகளைக் களைந்து தூய முஸ்லிம்களை செதுக்கினார்.


​நூஹ் (அலை) அவர்கள்இ ஈராக் மற்றும் அரேபியாவின் வழிதவறிய மக்களை நேர்வழிக்கு கொண்டு வர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில்இ "என் இறைவா! பூமியில் நிராகரிப்பாளர்களில் ஒருவரையும் விட்டு வைக்காதே!" (71:26) என்று பிரார்த்தித்துஇ சூழ்நிலை காரணமாக அவர்களை அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 


மூஸா (அலை) அவர்கள் எகிப்தியர்களுக்கும்இ அந்த அகந்தை கொண்ட ஃபிர்அவ்னிய அரசனுக்கும் நேர்வழியைக் காட்ட கடுமையாக முயன்றார்கள். ஆனால் இறுதியில்இ மூஸாவும் இஸ்ரவேலர்களும் கண்ட காட்சியைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:


​"...நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் (கடலில்) மூழ்கடித்தோம்." (2:50)


​இதற்காகத்தான் மகாராஜா ராமச்சந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து அரக்கர்களுடன் போரிட்டார்; ஸ்ரீ கிருஷ்ண மகராஜ் அர்ஜுனனை குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் போரிடத் தூண்டினார். மேலும் பாண்டவர்களின் கைகளால் கௌரவர்களை அழிக்க வேண்டியிருந்தது. 


ஈரானில்இ ஜோராஸ்டர் தனது போதனை மற்றும் மதப் பிரச்சாரத்திற்கு இஸ்பந்தியார் மற்றும் கியானி பேரரசின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டார்.


​ஆனால், அறிஞர்களை வந்தடைந்துள்ள பண்டைய வேதங்களும் சமூக மரபுகளும் ஒரு விஷயத்தில் ஏகோபித்து நிற்கின்றன: அதாவது, 25 ஆண்டுகளுக்கும் குறைவான குறுகிய காலத்தில்இ உலகின் மிக மோசமான நாடும்இ அறியாமை கொண்ட முரட்டுத்தனமான மக்களும்இ பூமியின் மிகச்சிறந்த ஆசிரியர்களாகவும்இ நாகரீகமானவர்களாகவும்இ ஒழுக்கம் மிக்கவர்களாகவும் மாறியதற்கு வேறு எந்த மத நிறுவனரோ அல்லது வழிகாட்டியோ முன்மாதிரியாக இல்லை. 


நூறு ஆண்டுகளுக்கும் குறைவாகஇ அதாவது 80 ஆண்டுகளில்இ முஹம்மது (ஸல்) கொண்டு வந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரைஇ அதாவது சீனாவின் கிழக்குக் கரை வரை மற்றும் ஒட்டுமொத்த நாகரீக உலகத்தையும் தங்களுக்குள் கொண்டு வந்தனர்.


 நமது இந்த உலகம் இத்தகைய அற்புத வெற்றிக்கு வேறு எந்த உதாரணத்தையும் காட்ட முடியாது. 


இஸ்லாத்தின் போதனைகள் அதன் உயரிய குணங்களுக்காக மற்ற அனைத்து மதக் கோட்பாடுகளை விடவும் மேலானதாக இருக்கும்போதுஇ மனித இனத்திலேயே மிகச்சிறந்தவராகவும்இ இறைத்தூதர்களின் முத்திரையாகவும்இ அகிலத்தின் அருட்கொடையாகவும் விளங்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் அந்தஸ்தை யாரால் கேள்வி கேட்க முடியும்? 


மேலும், அந்த இறைத்தூதர் கொண்டு வந்த புனிதமான குர்ஆன் ஈடுஇணையற்றது மற்றும் மறுக்க முடியாதது என்ற இறைவனின் கூற்றை சவாலுக்கு உட்படுத்த யாருக்குத் துணிச்சல் வரும்? 


குர்ஆன் கூறுவது போல:


​"நிச்சயமாக நாமே இந்த நற்போதனையை (குர்ஆனை) இறக்கினோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்." (15:09)


சமூகங்களை முன்னேற்றம் மற்றும் செழுமையின் பாதையில் செலுத்துவதற்கும்இ அவமானத்திலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அவற்றைக் காப்பாற்றுவதற்கும் வரலாறு மிகவும் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க ஆதாரமாகத் திகழ்கிறது. சமூகங்கள் எப்போதெல்லாம் பெரும் உயரங்களை எட்டியுள்ளனவோஇ அப்போதெல்லாம் அவை வரலாற்றிலிருந்துதான் உத்வேகத்தைப் பெற்றுள்ளன.


​மனிதனின் கண்ணியத்திற்காகவும்இ இம்மை மற்றும் மறுமை வெற்றிக்காகவும் வரலாற்றைப் படிப்பது மிகவும் அவசியம் என்று திருக்குர்ஆனும் நமக்குக் கூறியுள்ளது. 


கடந்த கால சமூகங்களின் நிகழ்வுகள்இ சில சமூகங்கள் தங்கள் தீய செயல்களின் சுமையைத் தாங்கின என்பதையும்இ மற்ற சில சமூகங்கள் தங்களின் நற்செயல்களால் மகத்தான வெற்றியைப் பெற்றன என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன. 


ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா போன்றோரின் நிகழ்வுகளும், பிர்அவ்ன், நம்ரூத், ஆது, சமூது கூட்டத்தினரின் அவலநிலைகளும் திருக்குர்ஆனில் வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது தூக்கத்தை வரவழைப்பதற்காகவோ கூறப்படவில்லை. மாறாகஇ நம்மிடம் நற்செயல்களைச் செய்யும் தைரியத்தை உருவாக்கவும்இ தீமைகளிலிருந்து விலகி இருக்கவும்இ நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றவுமே அவை கூறப்பட்டுள்ளன.


​மனிதகுலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைத்தூதர்கள்இ மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களின் கடந்த கால வரலாற்றை எப்போதும் நினைவூட்டியுள்ளனர். 


உணர்வற்ற நிலையில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய உலகத் தலைவர்கள் அல்லது சீர்திருத்தவாதிகள் எவரும் கடந்த கால நிகழ்வுகளைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. 


இதன் காரணமாகவேஇ ஒவ்வொரு சொற்பொழிவாளரும் தனது நேயர்களை ஊக்குவிக்கவும் சுறுசுறுப்பாக்கவும் சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகிறார்கள். 


கடந்த கால நாயகர்களில் கூடஇ நமது சமூகத்தோடும் மதத்தோடும் நெருங்கிய தொடர்புடையவர்களையே நாம் குறிப்பிடுகிறோம். அவர்களே நமது வாழ்க்கையில் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்கள். 


ருஸ்தம், இஸ்பந்தியார் மற்றும் குஸ்தாப் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் செயல்கள் ஜைனர்கள் அல்லது இந்தியர்களை விட ஈரானியர்களிடமும் பார்சிகளிடமும் அதிக மத ஊக்கத்தையும்இ நீதியையும் தூண்டக்கூடும். 


அதேபோல் பீமன், அர்ஜுனன், விக்ரமாதித்யன் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோரின் கதைகள் கிறிஸ்தவர்களை விட இந்துக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


​வரலாறு ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் இன்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு சமூகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அதை உயிருடன் வைத்திருக்கவும் இதுவே ஒரே வழி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவேஇ புகழ்பெற்ற வரலாறு இல்லாத நாடுகள் கூடஇ தங்கள் இளைஞர்களின் மனதை நிரப்புவதற்காகவும் அவர்களை நம்ப வைப்பதற்காகவும் புனையப்பட்ட கதைகளையும் கற்பனைகளையும் தங்கள் வரலாறு என்ற பெயரில் முன்வைப்பதை நாம் பார்க்கிறோம்.


​தங்கள் மக்களின் கடந்த காலப் பெருமையை உணர்த்துவதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலப் பெருமை இல்லாமல் எந்தவொரு சமூகமும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க மற்றவர்களுடன் போட்டியிட முடியாது. 


இதனால்தான் ஒரு சமூகத்திற்கு எதிரானவர்கள்இ அந்த சமூகத்தின் வரலாற்றைத் திரித்துஇ அந்த மக்களைத் தங்கள் வரலாற்றைப் பற்றிய அறியாமையிலும் கவனக்குறைவிலும் வைக்க முயல்கிறார்கள்.


முஸ்லிம்களின் மகத்தான சாதனைகள்


​உலக நாடுகளுக்கிடையில்இ மகத்தான செயல்களாலும் அற்புதமான சாதனைகளாலும் நிறைந்திருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமூதாயம் மட்டுமே. 


எல்லாவற்றிற்கும் மேலாகஇ அவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் நாயகர்களின் சாதனைகளைப் பற்றி சோதிக்கப்பட்ட மற்றும் நம்பகமான அறிவையும் தகவல்களையும் கொண்டுள்ளனர்; அவை மறுக்க முடியாதவை மற்றும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை. 


முஸ்லிம்களுக்கு ஹோமரின் 'இலியட்' (Iliat) மற்றும் 'ஒடிஸி' (odisi) ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே போல் மகாபாரதமும் இராமாயணமும் அவர்களுக்குத் தேவையில்லை. 


ஏனெனில், அவர்களின் உண்மையான வரலாற்றில் இலியட், ஒடிஸி, மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகியவற்றில் உள்ளதை விட மிகச்சிறந்த மற்றும் வியக்கத்தக்க முன்மாதிரிகள் நிறைந்துள்ளன.


​முஸ்லிம்களுக்கு பிர்தௌசியின் 'ஷாஹ்நாமா' (shahnama) அல்லது ஸ்பார்டன் கதைகளுடனும் எந்தத் தொடர்பும் இல்லை; ஏனெனில் அவர்களின் வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் பல ருஸ்தம்களையும் ஸ்பார்டன்களையும் முன்வைக்க முடியும். 


'நீதிமான்' நுஷர்வான் மற்றும் ஹாதிம் தாயின் கதைகளை முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் அவர்களின் உண்மையான மற்றும் ஆதாரபூர்வமான வரலாற்றில், எண்ணற்ற ஹாதிம்களும் நுஷர்வான்களும் ஒளியையும் பிரகாசத்தையும் வீசிக்கொண்டுத் தோன்றுகிறார்கள். 


முஸ்லிம்களுக்கு அரிஸ்டாட்டில், பேக்கன், தாலமி அல்லது நியூட்டன் போன்றவர்கள் தேவையில்லை; ஏனெனில் அவர்களின் முன்னோர்களின் அவையில்இ அத்தகைய தத்துவஞானிகளும் வானியலாளர்களும் ஏற்கனவே இருப்பது அவர்களுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும்.


​உலக நாடுகளுக்கிடையே ஒருவரையொருவர் முந்துவதற்கு கடுமையான போட்டி நிலவும் இந்த நேரத்தில்இ முஸ்லிம்கள் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தும்இ தங்கள் வரலாற்றில் பற்றற்றவர்களாகவும் கவனக்குறைவாகவும் இருப்பது எவ்வளவு பரிதாபகரமானது மற்றும் ஆச்சரியமானது! 


முஸ்லிம்களிடையே விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறப்படும் ஒரு வர்க்கம் கூடஇ உயர் ஒழுக்கங்களுக்கோ அல்லது வியக்கத்தக்க சாதனைகளுக்கோ உதாரணம் காட்ட வேண்டிய இடங்களில்இ ஐரோப்பா அல்லது கிறிஸ்தவ உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களையே தங்கள் விரிவுரைகள்இ உரைகள்இ கட்டுரைகள் மற்றும் நூல்களில் மேற்கோள் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களிடையே உள்ள அத்தகைய ஆளுமைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.


​முஸ்லிம்களில் உள்ள படித்த வர்க்கத்தினர் காலித் பின் வலீத், சலாஹுத்தீன் அய்யூபி, ஹஸ்ஸான் பின் ஸாபித், பிர்தௌசி, தூஸி, இப்னு ருஷ்த் மற்றும் இப்னு சீனா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுவதை விட ஹன்னிபால், ஷேக்ஸ்பியர், பேக்கன், நியூட்டன் போன்றவர்களின் பெயர்களைத் தங்கள் உரைகளிலும் எழுத்துக்களிலும் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்? 


இதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றைப் பற்றி அறியாமலும் கவனக்குறைவாகவும் இருப்பதே ஆகும்.


​இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன: 


முதலாவதாகஇ மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களுக்கு அறிவின் மீது ஆர்வம் மிகக் குறைவாக உள்ளது; 


இரண்டாவதாகஇ அறிவைப் பெறுவதற்கு அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பும் ஓய்வும் கிடைக்கிறது; 


மூன்றாவதாகஇ அரசாங்கப் பள்ளிகளும் கல்லூரிகளும் இந்தியாவில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டன; 


நான்காவதாகஇ முஸ்லிம்களிடையே படித்த வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். அங்கு இஸ்லாமிய வரலாறு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அது உண்மையான இஸ்லாமிய வரலாறு என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. 


கல்லூரிகளில் பட்டம் பெற்ற பிறகுஇ மேலதிகக் கல்வியைப் பெறுவதற்கான வயது கிட்டத்தட்ட கடந்துவிடுகிறது. மேலும் இஸ்லாமியக் கலைகளைப் படிக்க ஒருவருக்குப் போதிய நேரமும் இருப்பதில்லை. 


அனைத்துச் சூழல்களிலும்இ நமது படித்த முஸ்லிம் வர்க்கத்தினர்இ முஸ்லிம்களின் எதிரிகளால் ஆங்கிலத்தில் சிதைக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்ட இஸ்லாமிய வரலாறுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.


​இஸ்லாத்திற்கு முன்னால்இ எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு சமூகமும் வரலாற்று எழுத்துக் கலையில் கவனம் செலுத்தவில்லை அல்லது தங்கள் முன்னோர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றைத் தொகுக்கவில்லை. 


இஸ்லாத்திற்கு முன்பு வரலாற்று எழுத்துக் கலையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க முடியும் என்பதை அறிய பைபிள்இ மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நூல்களே போதுமானவை. 


அதேசமயம், ஹதீஸ்களைப் (நபிமொழிகள்) பாதுகாப்பதிலும் அறிவிப்பதிலும் முஸ்லிம்கள் காட்டிய எச்சரிக்கை உணர்வுஇ உறுதி மற்றும் தைரியத்திற்கு இவ்வுலகில் ஈடுஇணை எதுவுமே இல்லை.


​ஹதீஸ் கலை மற்றும் 'அஸ்மாவுர் ரிஜால்' (அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் கலை) போன்ற கொள்கைகள்இ அனைத்து சவால்களையும் தாண்டி இறைத்தூதரின் பொன்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும்இ சேவை செய்வதற்காகவும் முஸ்லிம்களால் ஒரு தனி அறிவியலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. 


ஆய்வு மற்றும் நுணுக்கமான படிப்பிற்காக முஸ்லிம்கள் உருவாக்கிய இந்த வலுவான மற்றும் அசைக்க முடியாத கொள்கைகள் ஈடுஇணையற்றவை; உலகம் தனது நீண்ட வரலாற்றில் இதுபோன்ற ஒன்றை இதுவரை கண்டதில்லை.


​வரலாறு எழுதும் கலையில் முஸ்லிம்களின் முதல் மறக்க முடியாத பணிஇ ஹதீஸ் அறிவியலை வரிசைப்படுத்துவதும் தொகுப்பதுமே ஆகும். இதைப் பின்பற்றியேஇ அவர்கள் தங்கள் கலீஃபாக்கள்இ பிரபுக்கள்இ அரசர்கள்இ அறிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளின் வரலாறுகளைப் பதிவு செய்தனர். இந்த முழு பொக்கிஷத்தையும் இஸ்லாமிய வரலாறாகவே கருத வேண்டும். 


முஸ்லிம்களின் இந்த வரலாற்று எழுத்துக் கலை என்பது உலகிற்கு ஒரு புதிய மற்றும் விசித்திரமான விஷயமாகவும்இ எதிர்பாராத ஆசீர்வாதமாகவும்இ அத்தியாவசிய சொத்தாகவும் அமைந்தது. 


மற்ற சமூகங்கள் பைபிள் மற்றும் மகாபாரதம் போன்ற புத்தகங்களை தங்கள் பெருமைக்குரிய சொத்தாகக் கருதும்போதுஇ முஸ்லிம்கள் 'கத்தீப்' போன்றவர்களின் ஆதாரபூர்வமான வரலாற்றுப் புத்தகங்களைக்கூட அலமாரிகளிலிருந்து எடுத்து ஓரம் கட்டி வைத்திருப்பதைப் பார்த்து மனிதன் வியப்படையாமல் இருக்க முடியாது.


​இக்காலத்தில் ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் நுணுக்கமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதைக் கண்டு முஸ்லிம்கள் வியந்து பாராட்டுவதோடுஇ அவர்களின் திறமையைத் தங்களின் முழு மனதாரப் புகழ்கிறார்கள். 


ஆனால், வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு அரபு குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர் 'இப்னு கல்தூன்' எழுதிய 'முகத்திமா' (வரலாற்று முன்னுரை)இ வரலாறு எழுதும் கலையைப் பற்றி உலகிற்கும் ஐரோப்பாவிற்கும் பல தனித்துவமான புள்ளிகளை உணர்த்தியது என்ற உண்மையைக்கூட அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். 


ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் அத்தனை முயற்சிகளும் இப்னு கல்தூனின் வரலாற்று அறிவிற்கும் நுணுக்கத்திற்கும் முன்னால் நிற்க முடியாது என்று தாராளமாகக் கூறலாம். 


ஆனால், முஸ்லிம்களின் லட்சியமும் ஆர்வமும் எவ்வளவு குறைந்துவிட்டது என்றால்இ இஸ்லாமிய அறிஞர்களின் அவையில்கூடஇ இப்னு கல்தூன் எழுதிய அந்த புகழ்பெற்ற 'முன்னுரையைத்' தவிரஇ அவரது மூல வரலாற்று நூல்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் ஈர்ப்பதில்லை.


​இப்னு ஹிஷாம், இப்னுல் அஸீர், தபரி, மஸ்ஊதி முதல் அஹ்மத் பின் கவந்த் ஷா, ஜியா பரணி மற்றும் முஹம்மது காசிம் ஃபரிஷ்தா, முல்லா பதாயூனி வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் வரலாற்றாசிரியர்களின் பாராட்டுக்குரிய முயற்சிகள் இன்றும் பருமனான தொகுதிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த கால இஸ்லாமிய யுகத்தின் வசீகரமான மகத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் சித்தரிக்கின்றன. 


இஸ்லாமிய வரலாறு குறித்த ஒவ்வொரு புத்தகமும் ஆழமான படிப்பிற்குரியவை; அவற்றிலிருந்து பெறப்படும் பாடங்கள் வாசகர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால்இ நூற்றில் ஒரு முஸ்லிம்கூட தனது இஸ்லாமிய வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்பதும்இ முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதில்லை என்பதும் எவ்வளவு பரிதாபகரமானது! 


அதே நேரத்தில், மில் (mill), கார்லைல் (carlyl)இ எலியட் (eliat)இ கிப்பன் (gibbon) போன்றவர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் கொண்ட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


​இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்டிருப்பதாலும்இ இந்தியாவில் உள்ள நூற்றில் ஒரு முஸ்லிம்கூட இந்த மொழிகளைத் தெரியாமல் இருப்பதாலும், இஸ்லாமிய வரலாற்றை உருது மொழியில் எழுதுவது ஒரு கடமையாகிறது. 


இப்போது நான் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிப்பதைப் போல, மற்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களும் இந்த எளிய முயற்சியை விடச் சிறந்த முறையில் உருதுவில் இஸ்லாமிய வரலாறுகளை எழுத வாய்ப்பு உள்ளது.


சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...