Wednesday, May 6, 2020

வரலாறை அறிவதின் அவசியம்

ஏக இறைவனின் திருப்பெயரால்…

        அகில உலகைப் படைத்து, அதை சரியான முறையில் வடிவமைத்து, அழகாக உருவமைத்து பராமரிக்கக்கூடியவன் அல்லாஹ்தான். அவன் தான் உண்மையானவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அனைத்து உயிரினங்களுடைய உள்ளத்தை தன் விரல்களுக்கிடையில் வைத்திருப்பவன். முக்காலத்தையும் அறிந்தவன். அவனுக்கே அனைத்து புகழும். அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் சத்திய தூதகர;இ சன்மார;க்க போதகர;இ மாபெரும் மனிதர; முஹம்மது நபி (ஸல்) அவர;கள் மீதும் அவர;களுடைய சொல், செயல்இ அங்கீகாரத்தை பேணி பாதுகாத்து நடந்த சஹாபாக்கள் சஹாபிய பெண்மனிகள் மீதும் இன்னும் உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம்களான ஆண்கள்இ பெண்கள் அனைவர; மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக.

          அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால்இ அந்த சமுதாயம் தன் கடந்த கால வரலாறுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரலாறுகள் நம்மிடையே காணப்படும் ‘‘கனவுப் போக்குகளை அகற்றி நம்மை முதிர;ச்சி பெற்றவராக மாற்றும்’’. 
அதுமட்டுமில்லாமல் ‘வரலாறு தெரியாத சமுதாயம் குருட்டுச் சமுதாயம்’ என்ற பழமொழிகள் வரலாற்றை கற்பதின் அவசியத்தை நமக்கு உணர;த்துகின்றன. எந்த சமுதாயம் தன்னுடைய வரலாற்றை மறந்ததோ அந்த சமுதாயத்தால் தன் நிகழ்காலத்தை சரிப்படுத்தவும் முடியாது எதிர;காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது. நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முன்னோர;களுடைய வரலாறுகளை அறிவது மிகவும் அவசியம்;. 

      'வரலாறைப் படிப்பவர;கள் வரலாறு படைப்பார;கள’; என்பதும் முன்னோர;களின் மொழி. ஆனால் துரதிஷ்;டவசமாக இன்று முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய முந்தைய வரலாறுகளை மறந்து வருகிறது. வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கு ஆர;வம் காட்டாமல் இருக்கிறது.
ஆகவே வரலாறுகளை கட்டாயம் அறிய வேண்டும்; என்ற அடிப்படையில் நாம் சில நபி;தோழர;களுடைய வரலாறுகளை ஆதாரப்பூர;வமாக அறிய இருக்கிறோம். இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறுகள் அனைத்தும் புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு சில தகவல்கள் மட்டும்தான் பிற ஹதீஸ் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. 

              இன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தகங்கள் தமிழில் வெளிவந்திருக்கிறது. (இதற்காக முயற்சி எடுத்தவர;களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!) நீங்கள் தேடிப் பார;த்துக் கொள்ளும் அடிப்படையில் அதற்குண்டான ஆதார எண்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. நாம் இந்த புத்தகத்தைப் படித்து இதிலிருந்து நல்ல படிப்பினையைப் பெற்று, அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை சீரமைத்து, சொர;க்கம் செல்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

வரலாற்றின் முக்கியத்துவம் :

           ஒரு சமுதாயத்திற்கு வரலாறு மிக மிக முக்கியம். வரலாற்றின் முக்கியத்துவத்தை பல பழமொழிகள் நமக்கு உணர;த்தினாலும் அதை விட அதிகமாக இஸ்லாம் உணர;த்துகிறது. அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.

தூதர;களின் வரலாற்றின் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்கு கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கைக் கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது. (அல்குர;ஆன் 11:120)

        இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் வரலாற்றின் முக்கியத்துவத்தை மிக தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லிக் காட்டுகிறான். 

  • வரலாற்றின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்களில் முதலாவது நமது உள்ளம் வலுப்பெறும்.


               முஸ்லிமாக வாழக்கூடியவன் தன்னுடைய உள்ளத்தை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். உள்ளம் வலுவாக இருப்பது மிக மிக முக்கியம். நம்முடைய உள்ளம் வலுவாக இருந்தால்தான் நம்மால் வணக்க வழிபாடுகளை சரியான முறையில் நிறைவேற்ற முடியும். 

     உதாரணமாக, இன்று நிறைய மக்கள் நான்கு வேளை தொழுகைகளை சரியாகத் தொழுதுவிட்டு ஃபஜ்ர; தொழுகையில் கோட்டை விடுவதை பார;க்க முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் உள்ளம் பலகீனமாக இருப்பதுதான். உள்ளம் வலுவாக இருந்திருந்தால் ஷைத்தானோடு போட்டியிட்டு தூக்கத்தை தியாகம் செய்து தொழுகையில் கலந்து கொண்டிருப்பார;கள். பலகீனமான உள்ளமாக இருந்ததால்தான் ஷைத்தானிற்கு அடிபணிகிறார;கள். 
அதேபோல் நோன்பு என்ற வணக்கத்தை எடுத்துக் கொள்வோம் நம்முடைய உள்ளம் வலுவாக இருந்தால்தான் நம்மால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க முடியும். உள்ளம் பலகீனமாக இருந்தால் சில நோன்புகளுக்கே நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது. 
இதேபோல் ஸகாத், ஹஜ் போன்ற அனைத்து வணக்க வழிபாடுகளையும் சரியாக நிறைவேற்றுவதற்கு உள்ளம் வலிமையாக இருப்பது அவசியம். அப்படிப்பட்ட உள்ள வலிமையைத்தான் வரலாறுகள் நமக்குத் தருகின்றன. இது முதலாவது விஷயம்.

  • இரண்டாவதாக, வரலாற்றின் மூலம் நாம் பெறும் பயனாக அல்லாஹ் சொல்வது - அறிவுரை மற்றும் நம்பிக்கைக் கொண்டோருக்குப் படிப்பினை.

        நாம் வரலாற்றை முறையாகப் படித்தால் அதன் மூலம் ஏராளமான படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் முற்கால வரலாற்றிலிருந்து பெற்ற படிப்பினையைப் பார;க்கலாம். 

            அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத  பங்கீடாகும்'' என்று (அதிருப்தியுடன்)  கூறினார்.

     நான், "நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கüடம் சொல்வேன்'' என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அüத்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கüடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்'' என்று சொன் னார்கள். (புகாரி : 6100)

நீதியில் சிறந்தவர;கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள். மக்கத்து காஃபிர;கள் கூட நபிகள் நாயகத்தின் நீதியைப் பற்றி பெருமையாக பேசுவார;கள். அத்தகைய உயர;ந்த மனிதரான நபிகள் நாயகத்தைப் பார;த்து ‘நீதியாக நடக்கவில்லை’ என்று அன்சாரி ஒருவர; கூறுகிறார;. இதைக் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் கடுமையாக கோபம் கொள்கிறார;கள். அவர;களின் முகமே கோபத்தால் சிவந்து விடுகிறது. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் தன்னுடைய கோபத்தை தணிப்பதற்காக மூஸா நபியின் வரலாற்றை நினைவுபடுத்துகிறார;கள்;. இந்த அளவிற்கு வரலாறுகள் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதே போல் ஆயிஷா ரலியவர;களும்; வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றிருக்கிறார;கள்.

ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர;களுடன் ஆயிஷா ரலியவர;களும் பங்கெடுத்து சென்றார;கள். பயணம் முடித்து மதினா திரும்பும் வழியில் ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் தங்கினார;கள். அப்போது ஆயிஷா ரலியவர;கள் இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக வெகு தொலைவில் சென்றார;கள். இயற்கை கடனை முடித்து விட்டு படையணியிடத்தில் வருவதற்கு முன்னால் படையினர; சென்று விட்டனர;. ஆயிஷா ரலியவர;கள் வந்து பார;க்கும் போது படையை காணவில்லை. உடனே படையை எதிர;ப்பார;த்து அந்த இடத்தில் அமர;ந்தார;கள். பிறகு உறங்கியும் விட்டார;கள். அப்போது ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸீலமி என்ற சஹாபி வந்தார;. ஆயிஷா ரலியைப் பார;த்ததும் சுபஹானல்லாஹ் என்றார;. இதைக் கேட்ட ஆயிஷா ரலி விழித்தார;கள். பிறகு ஆயிஷா ரலியை தன்னுடைய ஒட்டகத்தில் அமர;த்தி மதினாவிற்கு அழைத்துச் சென்றார;. ஆனால் படையணியினர; மதினா வந்து பார;த்த போது உள்ளே ஆயிஷா ரலியை காணவில்லை. பிறகு ஆயிஷா ரலியவர;களும் அந்த சஹாபியும் மதினாவிற்குள் நுழைந்தனர;. அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூன் என்று சொல்லப்படும் நயவஞ்சகனின் தலைவன் ஆயிஷா ரலியையும் அந்த சஹாபியையும் இணைத்து தவறாக பேசினான். இதை மதினா முழுக்க பரப்பிவிட்டான். சுpல ஸஹாபாக்களும் இதை பரப்ப ஆரம்பித்தனர;. அதன் பிறகு நடந்ததை ஆயிஷா ரலியவர;கள் அறிவிப்பிலிருந்து பார;க்கலாம்.

ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
என் தொடர்பாக அவதூறு பேசப்பட்ட போது ங்ட்க்; ஸ்க்; ற்டப்;க்ஷஹ்ல்மங்;சத்க்;. ம்ஞ்;சஞ்ட்ஓ நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றி விட்டு, "ஆயிஷா! நீ "தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்' அல்லது "அநீதியிழைத்திருந்தால்', அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்கüடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்'' என்று சொன்னார்கள். 

அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாச-ல் அமர்ந்திருந்தாள். நான், நபி (ஸல்) அவர்கüடம், "இந்தப் பெண் வெüயே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?'' என்று கேட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, "இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்'' என்றேன். அவர்கள் "நான் என்ன பதில் சொல்வது?'' என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, "இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!'' என்றேன். அவர்கள், "நான் என்ன சொல்வேன்?'' என்று கேட்டார்கள். 

அவ்விருவருமே பதில் அüக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி , அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றி விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்கüடம் சொன்னால், -வ-வும் உயர்வும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்.- அது எனக்கு உங்கüடம் பயனüக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- "தனக்குத் தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அüத்துவிட்டாள்'' என்று நீங்கள் சொல்வீர்கள்! 

அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன்'' -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்கüன் பெயரை நினைவு படுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- "(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ் விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன்'' என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.

அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன் வசனங்கள்) அருளப்பெற்றன. ஆகவே நாங்கள் மௌனமாக இருந்தோம். "வஹீ' ("வேத அறிவிப்பு' அருளப் படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்கüன் முகத்தில் மகிழ்ச்சியைத் தெüவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக்கொண்டிருந் தார்கள். மேலும் "ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருüவிட்டான்'' என்று சொன்னார்கள்.

பொதுவாக பெண்ணாக இருக்கக்கூடியவர;கள் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார;கள். ஆனால் தன் கற்பின் மீது யாரேனும் பழி சுமத்தினால் அதை அவர;களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. 
கற்பொழுக்கத்தில் சிறந்தவரான அன்னை ஆயிஷா ரலியவர;கள் மீது அபாண்டமாக நயவஞ்சகர;கள் பழி சுமத்துகிறார;கள். அதை சில முஸ்லிம்களும் பரப்பிவிடுகிறார;கள். இதைக் கேள்விப்பட்ட அன்னை ஆயிஷா ரலியவர;கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார;கள். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அருமை கணவர; நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் தன்னிடம் ‘தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிடு’ என்று சொன்ன மாத்திரத்தில் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகினார;கள். 

பொதுவாக இந்த மாதிரியான சூழ்நிலையை ஏதாவதொரு பெண் சந்தித்தால் தற்கொலை செய்துவிடுவாள். அவளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஆயிஷா ரலியவர;களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையை தந்தது வரலாறுதான். யாகூப் அலை அவர;களின் வரலாற்றை நினைத்துப் பார;த்து பொறுமையாக இருந்துக் கொண்டார;கள். அவர;கள் பொறுமையை இழந்திருந்தால் தவறான முடிவை எடுத்திருப்பார;கள். அல்லாஹ் அவர;களை வரலாற்றின் மூலம் பாதுகாத்தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் மூஸா நபியின் வரலாற்றிலிருந்தும், ஆயிஷா ரலியவர;கள் யாகூப் நபியின் வரலாற்றிலிருந்தும் படிப்பினையைப் பெற்றதைப் போல நாமும் வரலாறுகளை முறையாகப் படித்து படிப்பினையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வரலாறுகளை சரியான முறையில் தெரிந்து கொண்டால் எவை நேர; வழி? என்பதை இலகுவாக கண்டுபிடித்து விடலாம். வழிகேட்டிலிருந்து இலகுவாக தப்பித்துவிடலாம். அது போல் நமக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து வெற்றிப் பெறுவதற்கும் வரலாறுகள் மிகவும் துணைபுரியும். 

ஏனெனில் நாம் முற்கால வரலாறுகளை படித்தால் அதில் முன்னோர;கள் அனுபவித்த சோதனைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இன்று மனிதர;களில் பெரும்பாலானோர; ஏதாவதொரு சோதனை ஏற்பட்டால் உடனே நிலைகுலைந்து போய்விடுகின்றனர;. இவர;கள் வரலாறுகளை சரியாக படித்திருந்தால் அந்த சோதனைகளை எளிதாக வென்றிருப்பார;கள். 

பொதுவாக சோதனைகள் என்பது புதிது புதிதாக உருவாவது கிடையாது. இதற்கு முன் காலங்களில் ஏற்பட்ட சோதனைதான் நம்முடைய காலத்தில் பரிமாணங்கள் எடுத்து புதிதாக தோன்றும். நாம் முற்கால மக்களின் வரலாறுகளை தெரிந்திருந்தோமென்றால் சோதனைகளைப் பற்றிய அறிவும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றிய அறிவும் நமக்கு கிடைத்துவிடும். நாம் எளிமையாக சோதனைகளை வென்றுவிடலாம்.

 உதாரணத்திற்கு, நல்லவர;கள் சோதனைகளில் எப்படி வெற்றி பெற்றார;கள்? என்பதை நல்லவர;களின் வரலாறுகளை படிப்பதின் மூலம் தெரிந்து கொண்டு அதே போன்ற சோதனை நமக்கு வந்தால் நாமும் அந்த சோதனைகளிலிருந்து இலகுவாக தப்பித்து விடலாம். 

கெட்டவர;கள் இறைவனின் சோதனைகளில் எப்படி தோல்வியுற்றார;கள்? என்பதை தெரிந்து கொண்டால் தோல்விக்குறிய வழிகளில் செல்லாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். வரலாறுகளின் மூலம் மிகச்சிறந்த அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் இது போன்ற ஏராளமான நன்மைகள் வரலாற்றைப் படிப்பதின் மூலம் கிடைக்கிறது.
வரலாறுகள் தெரியாமையால் ஏற்படும் பாதிப்புகள் :

வரலாறுகள் தெரியாததினால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வரும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர;களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம் ஆதாரமாக இருக்கிறது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர;களாக இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர;களுடன் ஹீனைன் என்ற யுத்தத்திற்கு சென்றோம். அங்கு இணைவைப்பவர;களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அந்த மரத்தின் பெயர; தாத் அன்வாத். அங்கு இணைவைப்பவர;களான அவர;கள் பரக்கத்தை நாடி தங்களின் போர;க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்க தங்கியிருப்பார;கள். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர;களிடத்தில், அல்லாஹ்வின் தூதரே! காபிர;களுக்கு தாத் அன்வாத் என்ற மரம் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தித் தாருங்கள் என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர;கள் சுபஹானல்லாஹ்! இவையெல்லாம் அறியமைக்கால முன்னோர;களின் செயல் ஆகும், என்று சொல்லி ‘என் உயிர; எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக’ நீங்கள் நபி மூஸா (அலை) அவர;களிடத்தில் பனூஇஸ்ரவேலர;கள் கேட்டதைப் போல் கேட்கிறீர;கள். பனூ இஸ்ரவேலர;கள் நபி மூஸா (அலை) அவர;களிடத்தில், ‘‘மூஸாவே அவர;களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப்போல எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்’’ என்று கேட்டார;கள். (அதற்கு மூஸா (அலை)) அவர;கள் நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர;கள் என்று பதிலளித்தார;கள். (திருக்குர;ஆன் 7:138) இதைப் போலவே நீங்களும் கூறியுள்ளீர;கள்.

நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர;களின் வழிமுறைகளைப் படிப்படியாக பின்பற்றுவீர;கள் என்று நபி (ஸல்) அவர;கள் கூறினார;கள். (அறிவிப்பர; : அபூ வாஹித் அல்லைஸி. நூல் : தீர;மிதீ 2180)

இந்த நபிமொழியை நன்கு படித்துப் பாருங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்கள் வரலாற்றைத் தெரியாததினால் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகப் பார;த்தார;கள். மூஸா நபியின் வரலாற்றை அவர;கள் அறிந்திருந்தால் நபிகள் நாயகத்திடம் இந்தக் பாரதூரமான கேள்வியை அவர;கள் கேட்டிருக்கமாட்டார;கள். 
ஆகவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் தவறான கேள்வி கேட்டவர;களைத் திருத்துவதற்காக, முன்னோர;களின் வரலாற்றைப் நினைவுப்படுத்தி அவர;களை கண்டிக்கிறார;கள். வரலாற்றை தெரியாமல் இருந்தால் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு ஆளாக நேரிடும் என்பது இதிலிருந்து பெறப்படும் படிப்பினை.

இதுமட்டுமில்லாமல், வரலாறுகளை மறந்ததினால் நம்முடைய சமுதாயம் அடைந்த பாதிப்புகள் ஏராளம். அவற்றில் மிக முக்கியமானது சு+பிகளின் வளர;ச்சி. நாம் நம்முடைய வரலாறுகளை சரியாக தெரிந்திருந்தால் சு+பி என்ற ஒரு வழிகேடே உருவாகியிருக்காது. நாம் நம்முடைய கடந்த கால வரலாறுகளை தெரியாமல் இருந்த காரணத்தினால்இ சு+பிகள் பொய்யான வரலாறுகளை புனைந்து கூற ஆரம்பித்தனர;. அவ்லியாக்கள் வரலாறுகள் பெருகியதற்கு இவைதான் காரணம். 

நாம் நபிமார;களுடைய வரலாறுகளை, ஸஹாபாக்களுடைய வரலாறுகளை அறிந்திருந்தோமென்றால் அவ்லியாக்களின் பெயரால் கட்டுக்கதைகள் வந்திருக்காது. அப்படியே வந்திருந்தாலும் அவ்லியாக்களில் முதலிடத்தை வகிக்கும் நபிமார;கள் செய்யாததை, சிறந்த ஸஹாபாக்கள் செய்யாததை அவர;களுக்கு பின்னால் வந்த, அவர;களின் கால் தூசிக்கு கூட பெறாத அவ்லியாக்களால் எப்படி செய்ய முடியும்? என்று கேள்வி கேட்டு அப்படியே விரட்டி அடித்திருப்போம். 

ஆனால் வரலாறுகளை அறியாமல் இருந்த காரணத்தினால் அவற்றை நம்பி ஏராளமான பித்அத்களை உருவாக்கிவிட்டோம். ஏராளமான கட்டுக்கதைகள் உருவாகுவதற்கு காரணமாகிவிட்டோம். இன்னும் இது போன்ற ஏராளமான ஆபத்துக்களை வரலாற்றை தெரியாததின் காரணமாக நாம் அனுபவித்து வருகிறோம். 

நம்முடைய உண்மையான வரலாறுகள் நமக்குத் தெரிந்தால்தான் இஸ்லாத்தை சரியாக பின்பற்ற முடியும். இல்லாவிட்டால் நாம் வழிதவறிவிடுவதற்கு வரலாறுகள் பற்றிய அறியாமையே மிக முக்கியமான காரணமாகிவிடும். அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...