ஏக இறைவனின் திருப்பெயரால்…
இப்றாஹிம் நபியின் வரலாறு
முன்னுரை
யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று வெவ்வேறு கொள்கையினரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளும் இறைத்தூதர்தான் இப்ராஹிம் நபி. இதற்கு காரணம் அவர்கள் செய்த பிரார்த்தனை. இப்றாஹிம் நபியின் பிரார்த்தனை நமக்கு நிறைய படிப்பினைகளை இட்டுச் செல்கிறது.
உதவியாளர்கள் இல்லாமல் தனிமனிதனாக பிரச்சாரம் செய்தவர் இப்றாஹிம் நபி. ஆகவேதான் அவரை ஒரு சமுதாயம் என்று இறைவன் கூறினான். இது வேறெந்த நபிமார்களுக்கும் கிடைக்காத சிறப்பாகும்.
இஸ்லாத்திற்காக ஏராளமான தியாகங்கள் புரிந்ததால் அவர்களை கலீலுல்லாஹ் (அல்லாஹ்வின் உற்றத் தோழர்) என்று அல்லாஹ் அழைத்தான். இந்த சிறப்பை இப்றாஹிம் நபியும் முஹம்மது நபியும்தான் பெற்றார்கள்.
இவ்வாறு இப்றாஹிம் நபியின் வரலாறு படிப்பினைகளால் நிறைந்துள்ளது
அவர்களின் தியாகம், பிரார்த்தனை, குடும்ப நிர்வாகம் போன்றவை மிகப்பெரும் படிப்பினைகளைத் தாங்கி நிற்கிறது.
புத்தகத்தை டவுன்லோடு செய்ய
செய்தது காமித்
6381653548
syedhameedh@gmaik.com
இஸ்தப்ரக் பதிப்பகம்
பொருளடக்கம்
இப்றாஹிம் நபியை பின்பற்றுவது கடமை
இப்றாஹிம் நபியின் பிரச்சாரம்
இப்றாஹீம் நபி கூறிய பொய்
இப்ராஹீம் நபி குழந்தை வளர்ப்பில் காட்டிய அக்கறை
இப்றாஹிம் நபி கற்றுத்தரும் கணவன் மனைவி தேர்வு
இப்றாஹிம் நபியின் தியாகம்
இப்றாஹிம் நபியின் பிற செயல்கள்
இப்றாஹிம் நபியின் புகழ்
இப்றாகிம் நபியை பின்பற்றுவது கடமை
மனித சமூகத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ் இந்த பூமிக்கு எண்ணற்ற நபிமார்களை அனுப்பியிருக்கிறான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சிறப்புகளையும் அற்புதங்களையும் வழங்கியிருக்கிறார்.
அந்தவகையில் இப்ராஹீம் நபிக்கும் ஏராளமான சிறப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது 'அவர்களின் வழிமுறைகளை முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்ற இறைவனின் கட்டளையாகும். ஆகவேதான் அவர்களின் வரலாறு திருமறையில் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
திருக்குர்ஆனில் இடம்பெற்ற வரலாறுகளில் மூஸா நபியின் வரலாறுதான் அதிக இடங்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை இப்றாஹிம் நபியின் வரலாறு பெற்றுள்ளது. ஏறத்தாழ ஒரு ஜுஸ்உக்கும் அதிகமான வசனங்கள் இப்ராஹீம் நபியைப் பற்றி பேசுகிறது. (திருக்குர்ஆனை சரிசமமாக முப்பது ஜுஸ்ஊக்களாக பிரிக்கலாம்.)
மக்காவில் வைத்து இறக்கப்பட்ட வசனங்களிலும் மதினாவில் இறக்கப்பட்ட வசனங்களிலும் இப்ராஹிம் நபியின் வரலாறு இடம்பெற்றுள்ளது. அந்த அளவிற்கு அவர்களின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதைப்போல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு சிறப்புதான் யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைவரும் இப்ராஹீம் நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொள்வது. ஏனெனில் யூதர்கள் மூஸா நபியை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் ஈஸா நபியையும் முஹம்மது நபியையும் மறுப்பார்கள். கிறிஸ்துவர்கள் ஈஸா நபியை ஏற்பார்கள். ஆனால் முஹம்மது நபியை மறுப்பார்கள். ஆனால் இவர்களனைவரும் ஒருமனதாக இப்றாஹிம் நபியை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டார்கள்.
'இப்றாஹிம் நபி எங்களுக்குத்தான் சொந்தமானவர்' என்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாதிடுகிறார்கள். இப்ராஹீம் ஒரு யூதராக இருந்தார் என்றும் கிறிஸ்தவராக இருந்தார் என்றும் அவர்கள் வாதிக்கிறார்கள். ஆனால் இப்றாஹிம் நபி யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக உண்மைவழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 3:67)
ஆகவேதான் இப்றாஹிம் நபியை உரிமை கொண்டாடுவதற்கு தகுதியானவர்கள் யார்? என்பதற்கான வழிமுறைகளை இறைவன் அறிவித்துத்தருகிறான்.
இப்றாஹிம் நபி யாருக்கு சொந்தம்
இப்ராஹிமின் விஷயத்தில் உரிமை கொண்டாடுவதற்கு மக்களிலேயே மிகத் தகுதி படைத்தவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டோருமே அவர். அல்லாஹ்வே இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்.
அல் குர்ஆன் - 3 : 68
இப்ராஹீம் நபியை உரிமை கொண்டாடுவதற்கு மூன்று வகையினர்தான் தகுதியானவர்கள் என்று இந்த வசனத்தின் மூலம் இறைவன் தெரிவிக்கிறான். அவைகளாவது :
இப்றாஹீம் நபியின் வழிமுறையை பின்பற்றி நடப்பவர்கள்
முஹம்மது நபி
இப்ராஹீம் நபி எந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்களோ அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
ஆக நாம் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதன்மூலம் இறைவன் நமக்கு வலியுறுத்துகிறான்.
அதுமட்டுமில்லாமல் இப்ராஹீம் நபியைப் பின்பற்றி நடப்பதுதான் சிறந்த வழிமுறை என்பதை இறைவன் தெரியப்படுத்துகிறான்.
சிறந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்
நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
அல் குர்ஆன் - 4 : 125
இந்த வசனத்தின் மூலம் உளத்தூய்மையோடு இப்றாஹிம் நபியின் வழிமுறையை பின்பற்றுமாறு இறைவன் கட்டளையாடுகிறான். அவ்வாறு பின்பற்றுபவர்தான் அழகிய மார்க்கத்திற்கு சொந்தக்காரர் என்றும் அவன் தெரியப்படுத்துகிறான். அத்தோடு இப்றாஹிம் நபியின் வழிமுறையைப் புறக்கணிப்பவனை மடையன் என்றும் இறைவன் ஏசுகிறான்.
இப்றாஹிம் நபியின் வழியை புறக்கணிப்பவன் மூடன்
தன்னையே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (வேறு) யார் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியுமா? அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லோரில் இருப்பார்.
அல் குர்ஆன் - 2 : 130
ஒரு மனிதன் இப்றாஹிம் நபியின் வழிமுறையை புறக்கணித்தால் அவன் மூடனாகத்தான் இருப்பான். ஏனெனில் இப்றாஹிம் நபியின் வழிமுறை சரியானதாகவும் உண்மையானதாகவும் அறிவுப்பூர்வமானதாகவும் உள்ளது. அத்தகைய வழிமுறையை அறிவீனன்தான் புறக்கணிப்பான்.
ஆதலால்தான் இப்றாஹிம் நபியை பின்பற்றுமாறு முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான்.
முஹம்மது நபியும் இப்றாஹிம் நபியை பின்பற்ற வேண்டும்
(நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!“ என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல் குர்ஆன் - 16 : 123
இப்றாஹிம் நபியை பின்பற்ற வேண்டும் என்று முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளையிட்டிருக்கும்போது நாமும் கட்டாயம் இப்றாஹிம் நபியை பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை இறைவனும் தனியாக வலியுறுத்தி சொல்லிக்காட்டுகிறான்.
நாமும் பின்பற்ற வேண்டும்
"அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல் குர்ஆன் - 3 : 95
ஆக இப்ராஹீம் நபியின் வழிமுறைகளை முஸ்லிம்களாகிய நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில்தான் நமக்கு வெற்றி அமைந்துள்ளது. அப்போதுதான் நாம் அழகிய மார்க்கத்திற்கு சொந்தக்காரராக இருப்போம். அறிவாளியாக இருப்போம். நேர்வழியில் இருப்போம்.
இப்றாஹிம் நபியின் பிரச்சாரம்
நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக்கடமையாகும். அதனடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழைப்பாளர்களாக செயல்பட வேண்டும். அந்தவகையில் இப்றாஹிம் நபி மிகச்சிறந்த அழைப்பாளராக செயல்பட்டார்கள். அவர்களின் அழைப்புப் பணியில் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள் உள்ளன.
இப்றாஹிம் நபி தனது பிரச்சாரத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொண்டார்கள். ஒருவன் முதலில் தன்னைத் தானே திருத்திக் காெள்ள வேண்டும். அதன்பிறகு தனது குடும்பத்தாரிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன் பிறகு சமூகத்தாரிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த வழிமுறையை இப்றாஹிம் நபி அழகாக கடைபிடித்தார்கள்.
தந்தையிடம் செய்த பிரச்சாரம்
ஒரு மனிதன் தனது பிரச்சாரத்தை தனது குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதை அல்லாஹ் தனது திருமறையில் வலியுறுத்துகிறான்.
(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
அல் குர்ஆன் - 26 : 214
முஹம்மது நபியைப் பார்த்து இறைவன் கூறிய கட்டளை இது. ஆகவேதான் அவர்கள் தனது குலத்தாரையும் தனது மகள் பாத்திமாவையும், தனது மாமி ஸஃபியாவையும் அழைத்து அவர்களிடத்திலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
இந்த வழிமுறையைப் பின்பற்றியவர்கள்தான் இப்றாஹிம் நபியவர்கள். அல்லாஹ் அதைத் தனது திருமறையில் கூறுகிறான்.
இப்றாஹிம் நபியின் தந்தையின் பெயர் ஆஸர் என்பதாகும். இவர் சிலைகளை செதுக்குபவராக இருந்தார். இவர் உருவாக்கிய சிலையை இவரே வணங்கக்கூடியவராகவும் இருந்தார். ஆகவேதான் இப்றாஹிம் நபி தனது தந்தையிடம் பிரச்சாரம் செய்தார்கள்.
இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம், என் அருமைத் தந்தையே! “சிலைகளைக் கடவுள்களாக எடுத்துக்கொள்கிறீரா? உம்மையும், உமது கூட்டத்தாரையும் பகிரங்க வழிகேட்டிலேயே காண்கிறேன்” என்று கூறியதை நினைத்து பார்ப்பீராக! (அல் குர்ஆன் - 6 : 74)
மேலும் அவர் தமது தந்தையிடம், "என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?" என்று கேட்டார்.
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
“என் தந்தையே! (சிலை வணக்கத்தின் மூலம்) ஷைத்தானை வணங்காதீர்! அளவற்ற அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”
“(நீங்கள் ஷைத்தானை வணங்கினால்) அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)
அல் குர்ஆன் - 19 : 42- 45
மேற்கூறிய வசனத்தின்மூலம் இப்றாஹிம் நபி செய்த பிரச்சாரத்தை அறிந்து கொள்ளலாம். அழகான முறையில் தனது தந்தையிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் வைத்த வாதம் :
என் அருமை தந்தையே! சிலைகளை கடவுளாக வணங்காதீர்கள்.
அவைகள் செவியேற்காது. பார்க்காது. எந்த நன்மையையும் பெற்றுத் தராது.
சிலைகளை வணங்குவது வழிகேடு.
இறைவனிடத்திலிருந்து எனக்கு வஹிச் செய்தி கிடைத்துள்ளது. அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவற்றை நான் உங்களுக்கு கூறுகிறேன். என்னைப் பின்பற்றுங்கள்.
இதற்கு மாறாக ஷைத்தானை வணங்காதீர்கள். அவன் பகிரங்கமான விரோதி. அளவற்ற அருளாளனுக்கு விரோதமாக அவன் உள்ளான்.
அவ்வாறு ஷைத்தானை வணங்கினால் அளவற்ற அருளாளன் தண்டனையை இறக்கிவிடுவான். நீங்கள் ஷைத்தானுக்கு தோழனாக மாறிவிடுவீர்கள்.
தனது தந்தையை அன்போடு அழைத்து, எவ்வளவு அழகாக பிரச்சாரம் செய்கிறார்கள். தனது தந்தையை ஷிர்க்கிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான வாதங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் இதற்கு ஆசரின் பதிலோ மோசமானதாக இருந்தது.
தந்தையின் பதில்
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். விட்டுப் பிரிந்து விடு!” என்று ஆஸர் கூறினார்.
அல் குர்ஆன் - 19 : 46
எவ்வளவு ஆக்ரோஷமான பதிலை ஆசர் வழங்கியிருக்கிறார்.
பெற்றெடுத்த மகனையே கொலை செய்வேன் என்கிறார்.
வீட்டைவிட்டு வெளியேறு என்று துரத்துகிறார்.
இப்றாஹிம் நபி தன் தந்தையின் மீது பாசம் கொண்டு செய்த அறிவுரையும் அதற்கு அவரது தந்தையின் கோபமான பதிலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாமாக இருந்தால் இப்படிப்பட்ட தந்தையை ஒரேயடியாக வெறுத்திருப்போம். ஆனால் இப்றாஹிம் நபி அவ்வாறு செய்யவில்லை. எப்படியாவது தனது தந்தையை நரகத்திலிருந்து காக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
தந்தையின் மிரட்டலுக்கு இப்றாஹிம் நபியின் மறுமொழி
ஆதலால்தான் தனது தந்தையின் கொலைக்கு இப்ராஹிம் நபி அழகான முறையில் பதிலளித்தார்கள். இதை அல்லாஹ் கூறுகிறான்
“(என் அருமை தந்தையே!) உங்கள்மீது ஸலாம் உண்டாகட்டும்!என் இறைவனிடம் உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன். இருக்கிறான். உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல் குர்ஆன் - 19 : 47,48
எவ்வளவு அழகான பதிலை இப்றாஹிம் நபி வழங்கியிருக்கிறார்கள்.
அருமை தந்தையே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது உங்கள் மீது இஸ்லாம் ஏற்படட்டும்.
உங்களுக்காக நான் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன்.
அழகான பதிலைக்கூறி தனது தந்தையை விட்டும் விலகிச் செல்கிறார்கள் இப்றாஹிம் நபி. அதன்பிறகும் தனது தந்தைக்காக இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்தார்கள். அவர்களை நேர்வழியில் செலுத்துமாறு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அவரது தந்தையோ தனது வழிகேட்டில் உறுதியாக இருந்து காஃபிராகவே மரணித்துப் போகிறார்.
தந்தைக்காக இறைவனிடம் மன்றாடுதல்
ஆகவே காஃபிராக மரணித்த தனது தந்தையை மன்னிக்குமாறு இப்றாஹிம் நபி தனது இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
(என் இறைவனே!) என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகிவிட்டார். (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே!
அல் குர்ஆன் - 26 : 86, 87
மேற்கூறிய பிரார்த்தனையின் மூலம் கீழ்க்கண்ட கோரிக்கையை இப்றாஹிம் நபி முன்வைத்தார்கள்.
யா அல்லாஹ்! காஃபிராக இருக்கும் எனது தந்தையை மன்னிப்பாயாக.
கியாமத் நாளில் என்னுடைய தந்தையை நரகில் புகுத்திவிடாதே. அதனால் எனக்கு இழிவு ஏற்படும்.
இப்றாஹிம் நபியின் இந்த பிரார்த்தனைக்கு காரணம் அவர் தனது தந்தையின் மீது வைத்திருந்த நேசமே. ஆனால் காஃபிராக இருப்பவர் மீது இத்தகைய நேசத்தை வைக்கக்கூடாது என்று இறைவன் தடுத்தான். அதன் பிறகு அவர்கள் இதிலிருந்து விலகிக் கொண்டார்கள். இதையும் இறைவன் நமக்குத் தெரியப்படுத்துகிறான்.
இப்றாஹிம் நபியின் கோரிக்கையை நிராகரித்த இறைவன்
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது. அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
அல் குர்ஆன் - 9 : 114
இதிலிருந்து இறைவன் தெரிவிக்கும் கருத்தாவது :
இப்ராஹீம் நபி தனது தந்தையிடத்தில், “என் இறைவனிடம் உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்.” என்று வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். ஆகவேதான் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
காஃபிராக இருப்பவர் அல்லாஹ்வின் எதிரி என்றும் அப்படிவருக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்றும் இறைவன் கூறுகிறான்.
அதன்பிறகு உடனே இப்றாஹிம் நபி தனது தந்தைக்காக செய்த பிரார்த்தனையில் பின்வாங்கினார்கள்.
இதிலிருந்து இறைவன் நமக்குத் தெரிவிக்கும் கருத்தாவது : நமது இறைவனுக்காகவே நாம் நேசிக்க வேண்டும். இறைவனுக்காகவே நாம் வெறுக்க வேண்டும். அப்படிப்பட்டவராக இப்ராஹீம் நபி திகழ்ந்தார்கள்.
மறுமையில் ஆசரின் நிலை
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நான் உங்களிடம், எனது வழிகாட்டலுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, 'இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்' என்று கூறுவார்.
அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?' என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், 'நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்துவிட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)' என்று பதிலளிப்பான்.
பிறகு 'இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3350.
மறுமையில் இப்றாஹிம் நபி எந்த இழிவையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக அல்லாஹ் ஆஸரின் உருவத்தை மாற்றுவான். இது இப்றாஹிம் நபிக்கு இறைவன் வழங்கும் கண்ணியமாகும்.
சமூகத்திடம் பிரச்சாரம்
இப்றாஹிம் நபி தனது தந்தையிடம் பிரச்சாரம் செய்ததைப் போன்று தனது சமூகத்தில் உள்ளவர்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள். இதற்காக சில நுட்பத்தை கையாண்டார்கள்.
அழைப்புப் பணியின் வழிமுறையை இறைவனே இப்றாஹிம் நபிக்குக் கற்றுக் கொடுத்தான். இறைவன் கற்றுத்தந்த அடிப்படையில் தனது பிரச்சாரத்தை அமைத்துக் கொண்டார்கள்.
இப்றாஹிம் நபியின் சமூகத்தினர் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்கக்கூடியவர்களாக இருந்தனர். ஆகவே இப்றாஹிம் நபியின் சமூகத்தில் உள்ளவர்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக இறைவன் சில அத்தாட்சிகளை இப்றாஹிம் நபிக்கு காண்பிக்கிறான். அவற்றை தனதள திருமறையில் சுட்டிக்காட்டுகிறான்.
உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராக ஆவதற்காக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியை இப்ராஹீமுக்குக் காட்டினோம்.
அல் குர்ஆன் - 6 : 75
இந்த வசனம் கூறும் கருத்தாவது : 'வானம் மற்றும் பூமியில் ஏராளமான படைப்புகளை இறைவன் படைத்திருக்கிறான். அவை அனைத்தும் இறைவனை மட்டுமே வணங்குகின்றன' என்று இறைவன் இப்றாஹிம் நபிக்கு எடுத்துக் காட்டுகிறான். அவற்றின் அத்தாட்சிகளும் அவற்றின் தன்மைகளும் இப்றாஹிம் நபிக்கு உணர்த்தப்படுகின்றன. ஆகவே இதை வைத்தே தனது பிரச்சாரத்தை இப்றாஹிம் நபி தொடங்கினார்கள்.
இறைவனின் தன்மையை உணர்த்துதல்
இப்றாஹிம் நபி செய்த பிரச்சாரம் திருமறையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :
(ஒருநாள்) இப்றாஹிமை இரவு சூழ்ந்தபோது நட்சத்திரத்தைக் கண்டு, “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது “மறையக்கூடியவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
(அதன்பிறகு மற்றொரு நாள்) சந்திரன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் இறைவன் எனது” என்று கூறினார். அது மறைந்தபோது, “எனது இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லை என்றால் நானும் வழிதவறிய கூட்டத்தில் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார்.
(மூன்றாவது நாள்) சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது "இதுதான் எனது இறைவன். இது மிகப் பெரியது" என்று கூறினார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணையாக்குபவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். படைத்தவனை நோக்கி, சத்திய நெறியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை வைப்போரில் உள்ளவன் அல்ல” என்று கூறினார்.
அல் குர்ஆன் - 6 : 76- 79
மேற்கண்ட வசனத்தின் மூலம் இப்றாஹிம் நபியின் அறிவுப்பூர்வமான வாதத்தை அறிந்து கொள்ளலாம்.
அக்கால மக்களில் சிலர் வானத்தில் உள்ள நட்சத்திரத்தை வணங்கினர். ஆகவே அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்காக ஒரு இரவில், 'அந்த நட்சத்திரம்தான் எனது இறைவன்' என்று பொய்யாகக் கூறினார். அதன்பிறகு காலையில் நட்சத்திரம் மறைந்தபிறகு, 'மறையக்கூடியது இறைவனாக இருக்காது' என்றார். இறைவன் என்றால் மறையாமல் இருக்க வேண்டும் என்ற உண்மையை அம்மக்களுக்கு அழகாக உணர்த்தினார்.
இன்னொரு நாளில் 'நிலாவைப் பார்த்து இதுதான் என் இறைவன்' என்றார். காலையில் அது மறைந்தபோது இதுவும் எனது இறைவன் இல்லை என்றார். சந்திரனை வணங்கிய மக்களுக்கு 'சந்திரன் கடவுள் இல்லை' என்பதை உணர்த்தினார்.
மற்றொரு நாளின் பகலில் சூரியனைப் பார்த்து 'இதுதான் என் இறைவன் இது மிகப்பெரியது' என்றார். இரவில் அது மறைந்தபோது சூரியன் கடவுள் இல்லை என்று கூறி அம்மக்களுக்கு அதை உணர்த்தினார்.
இவையெல்லாம் இறைவன் அல்ல. உண்மையான இறைவன் அல்லாஹ் மட்டும்தான். அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன்தான் மிகப்பெரியவன். நீங்கள் இணைவைத்துத் திரியும் சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். என்று அம்மக்களிடம் பிரகடனம் செய்தார்கள்.
இவ்வளவு அழகான, அறிவுப்பூர்வமான வாதத்தைக் கேட்ட பிறகும் அம்மாக்கள் திருந்தவில்லை. இப்ராஹீம் நபியை ஏற்கவில்லை. அவர்கள் காஃபிர்களாகவே இருந்தனர். இதுமட்டுமில்லாமல் அவர்கள் இப்றாஹிம் நபியை மிரட்டவும் செய்தார்கள்.
சமூகத்தாரின் மிரட்டல்
இப்றாஹீமின் சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். (அதற்கு அவர்) “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் எனக்கு ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”
“உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவர்களுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?”
இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் என்று கூறினார்.
அல் குர்ஆன் - 6 : 80 - 82
மேற்கூறிய வசனத்தின் மூலம் இப்றாஹிம் நபியின் சமூகத்தார் அவர்களை மிரட்டியதாகத் தெரிகிறது. 'எங்களது கடவுளை ஏசினால் அவர்கள் உன்னை ஏதாவது செய்துவிடுவார்கள்' என்று அவர்களது சமூகத்தார் அவர்களை மிரட்டியிருப்பார்கள். ஆகவேதான் இப்றாஹிம் நபி கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார்கள் ;
நீங்கள் அல்லாஹ்விற்கு இணையாகக் கருதுபவற்றிற்கு நான் அஞ்சமாட்டேன். ஏனெனில் அவன்தான் எனக்கு நேர்வழி காட்டினான். நான் அவனுக்கே அஞ்சுவேன்.
உங்களாலும் உங்கள் போலி கடவுள்களாலும் எனக்கு எந்த தீங்கும் நேராது. மாறாக அல்லாஹ் நாடினால் மட்டும்தான் எனக்கு தீங்கு நேரும். ஏனெனில் எனது இறைவன்தான் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான்.
அல்லாஹ்விற்கு இணையாக வேறொன்றை கருதுவதற்கு நீங்கள் அஞ்ச மறுக்கிறீர்கள். ஏனெனில் அதுதான் மிகப்பெரும் பாவமாக இருக்கிறது. மிகப்பெரும் பாவத்தை செய்வதற்கு நீங்கள் அஞ்ச மறுக்கிறீர்கள். அவ்வாறெனில் நீங்கள் இணைவைப்பவற்றிற்கு நான் எப்படி அஞ்சுவேன்?
நம்மிருவரில் நீங்கள்தான் அஞ்சுவதற்கு தகுதியானவர்கள். ஏனெனில் நான் சொர்க்கத்தை நோக்கி அழைக்கிறேன். ஆனால் நீங்களோ நரகத்திற்குரிய காரியத்தை செய்கிறீர்கள். நரகத்தில் நுழைந்துவிடுவோமே என்று நீங்கள்தான் அஞ்ச வேண்டும்.
மேலும் தங்களது இறைநம்பிக்கையில் இணைவைப்பை கலக்காதவருக்கே இறைவனின் பாதுகாப்பு உண்டு. நான் இணைவைப்பவன் அல்லன். ஆகவே இறைவனின் பாதுகாப்பு எனக்கு உண்டு. எனவே நான் பயப்படமாட்டேன்.
இவ்வாறு தனது வாதத்தை பதிலாக இப்றாஹிம் நபி முன்வைத்தார்கள்.
சிலை வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரம்
சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரம் போன்ற இயற்கையை வணங்கி வந்த மக்களுக்கு எதிராக பிரச்சாரத்தை செய்ததைப் போன்று சிலை வணக்கத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்கள். ஏனெனில் அக்காலத்தில் மக்கள் சிலை வணக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.
சிலை வணக்கத்திற்கு எதிரான அவர்களின் பிரச்சாரம் திருமறையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்றாஹீம் தம் தந்தையிடமும் சமுதாயத்தினரிடமும், “எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “சிலைகளை வணங்குகிறோம்; அவற்றை வணங்கிக் கொண்டே இருப்போம்” என்று அவர்கள் கூறினர். (அல் குர்ஆன் - 26 : 70,71)
"நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகள் என்ன?" (ஏன் இவற்றை வணங்குகிறீர்களா?) என்று கேட்டபோது, “இவற்றை எங்கள் முன்னோர் வணங்குவதை நாங்கள் கண்டோம்” என அவர்கள் கூறினர். (அல் குர்ஆன் - 21 : 52,53)
"நீங்கள் அழைக்கின்றபோது அவை உங்களுக்குச் செவி சாய்க்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?" என அவர் கேட்டார்.
“எனினும் இவ்வாறு செய்பவர்களாக எங்கள் முன்னோரைக் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
(அதற்கு இப்றாஹிம் நபியின் பதிலாவது) “நீங்களும் முன்சென்று விட்டீர்கள் உங்கள் முன்னோரும் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று சிந்தித்தீர்களா?”
“நீங்களும் உங்கள் முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்!”
(நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகள்) எனக்கு எதிரிகளே! அகிலங்களின் இறைவனைத் தவிர! அவனே என்னைப் படைத்தான். அவனே என்னை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே எனக்கு உணவளிக்கிறான்; அவனே எனக்கு அருந்துவதற்கும் தருகிறான். நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் என்னை உயிர்ப்பிப்பான். இறுதித் தீர்ப்பு நாளில் அவன் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என அவனிடமே ஆதரவு வைக்கிறேன்.
என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! பின்வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கி வைப்பாக! என்று இப்றாஹிம் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் - 26 : 72-85)
(அப்போது அவரதள சமுதாயத்தினர்) “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது விளையாடுகிறீரா?” என கேட்டனர்.
அல் குர்ஆன் - 21 : 55
“அவ்வாறல்ல!வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே உங்கள் இறைவனே.அவனே அவற்றைப் படைத்தான். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு உங்கள் சிலைகள் விஷயத்தில் நான் ஒரு தந்திரத்தைக் கையாள்வேன்” என அவர் கூறினார்.
அல் குர்ஆன் - 21 : 55-57
மேற்கண்ட வசனத்தின் மூலம் சிலை வணக்கத்திற்கு எதிராகவும் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் தனது சமுதாயத்தில் இப்ராஹீம் நபி பிரச்சாரம் செய்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
இதில் கவனிக்க வேண்டிய அம்சமாவது :
இப்றாஹீம் நபி படிப்படியாக தனது வாதத்தை முன்வைத்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் இரண்டு கேள்விகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.
எதை வணங்குகிறீர்கள்? என்று இப்ராஹீம் நபி அவர்களிடம் கேட்கிறார்கள். அதற்கு அவரது சமுதாயத்தினர் சிலைகளை வணங்குவதாகக் கூறுகின்றனர்.
அடுத்ததாக ஏன் சிலையை வணங்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள்? அதற்கு சமுதாயத்தினர் முன்னோர்கள் அவற்றை வணங்கினர் என்றும் ஆகவேதான் நாங்களும் அவற்றை வணங்குகிறோம் என்றும் பதிலளிக்கின்றனர்.
இவ்விரண்டு கேள்விகளின் மூலம் அவர்களின் நிலையை இப்ராஹீம் நபி உணர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களது வணக்கத்தை அறிவுப்பூர்வமாக அமைத்துக் கொள்ளவில்லை என்பதையும் முன்னோர்களைப் பின்பற்றி நடப்பதையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்கள். பின்னர் அவர்களிடத்தில் தனது வாதத்தை முன்வைத்தார்கள்.
நீங்கள் வணங்கும் சிலைகளுக்கு செவிகள் உள்ளனவா?
உங்கள் அழைப்புக்கு அவை பதில் தருகின்றனவா?
உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்வதற்கு அவைகளுக்கு ஆற்றல் உள்ளதா?
இவ்வாறு அறிவுபூர்வமான கேள்விகளை முன்வைத்தார்கள்.
இதுபோன்ற கேள்விகளுக்கு சமுதாயத்தினர் அளித்த பதில், 'எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்' என்பதாகத்தான் இருந்தது. அவர்களால் இப்ராஹீம் நபியின் கேள்விக்கு பதிலளிக்கமுடியவில்லை.
அதன்பிறகு இப்ராஹீம் நபி தனது சமுதாயத்திடம், 'நீங்களும் உங்களது முன்னோர்களும் எதை வணங்குகிறீர்கள்? பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவற்றை வணங்குவதன் மூலம் அவர்களும் வழிகேட்டில் இருந்தனர். நீங்களும் வழிகேட்டில் இருக்கிறீர்கள்' என்று கூறினார்கள்.
அதன்பிறகு உண்மையான இறைவன் அல்லாஹ் மட்டும்தான் என்றும் அவனது தன்மைகளையும் எடுத்துரைக்கிறார்கள். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.
அதற்கு அவரது சமுதாயத்தினர், "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது விளையாடுகிறீரா?" என கேட்டனர்.
இவ்வளவு அழகாக எடுத்துக்கூறியும் தனது சமுதாயத்தினர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை இப்றாஹிம் நபி பார்க்கிறார்கள். அவர்களின் மடமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறார்கள். ஆகவே அதன்பிறகு 'அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தேன். அவன்தான் உங்கள் இறைவன். அதற்கு நான் சாட்சி பகிர்கிறேன்' என்று கூறி அவர்களின் மடமைத்தனத்தை புரிய வைப்பதற்காக ஒரு தந்திரத்தை செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த தந்திரம்தான் சிலையை உடைத்ததாகும்.
அதைப்போல் மற்றொரு சந்தர்பத்திலும் சிலைவணக்கத்திற்கு எதிராக இப்ராஹீம் நபி பிரச்சாரம் செய்தார்கள். அதையும் இறைவன் பதிவு செய்திருக்கிறான்.
இப்ராஹீம் தமது சமுதாயத்தினரை நோக்கி "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளையே வணங்குகிறீர்கள். பொய்யையே கற்பனை செய்கிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு உணவளிப்பதற்குச் சக்தி பெறாது. எனவே, அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்! அவனை வணங்கி, அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
நீங்கள் பொய்யெனக் கூறினால், (அதேபோல்) உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தினரும் பொய்யெனக் கூறியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறெதுவும் இல்லை. (அல் குர்ஆன் - 29 : 16 - 18)
“அல்லாஹ்வையன்றி பொய்யைக் கடவுள்கள் என எண்ணுகிறீர்களா? அவ்வாறாயின் அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் என்ன?” (என்று கேட்டார்.) (அல் குர்ஆன் - 37 : 86,87)
அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் அதனை மீண்டும் படைக்கிறான் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அல்லாஹ்வுக்கு இது மிகவும் எளிதானது.
"பூமியில் பயணம் செய்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் மற்றொரு தடவை உருவாக்குகிறான் என்பதைக் கவனியுங்கள்!" என்று கூறுவீராக! ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
அவன், தான் நாடியவர்களை வேதனைப்படுத்துகிறான். தான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
பூமியிலும், வானத்திலும் நீங்கள் (அவனிடமிருந்து) தப்பிப்போர் அல்ல! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை.
“யார் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுக்கிறார்களோ அவர்கள் எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். துன்புறுத்தும் வேதனை உள்ளது” (என் இறைவன் கூறுவதாக இப்ராஹீம் கூறினார்.)
அல் குர்ஆன் - 29 : 19 - 23
இவ்வாறு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்த பின்னும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆகவே இப்ராஹீம் நபி தனது தந்திரத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.
சிலையை உடைத்தல்
ஒருமுறை இப்ராஹீம் நபியின் சமுதாயத்தினர் ஒரு கோயில் திருவிழாவிற்காக பக்கத்து ஊருக்கு கிளம்பினர். அப்போது இப்ராஹீம் நபியையும் தங்களுடன் வருமாறு கூறினர். அதன்பிறகு நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கிறான்.
فَقَالَ إِنِّى سَقِيمٌۭ⭘ فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ⭘ فَرَاغَ إِلَىٰٰٓ ءَالِهَالِهَالِ أَلَا تَأْكُلُونَ⭘ مَا لَكُمْ لَا تَنطِقُونَ⭘ فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلۡيَمِينِ⭘فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ⭘ قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ مَا تَنْحِتُونَ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ⭘ فَجَعَلَهُمْ جُذَٰذًا إِلَّا كَبِيرًۭا لَّهُمْ لَّهُمْ لَّهُمْ لَّهُمْ يَرْجِعُونَ⭘
(தன்னை கோயில் திருவிழாவிற்கு அழைத்தவர்களிடம் இப்ராஹீம் நபி) “நான் நோயாளியாவேன்” (ஆகவே நான் வரவில்லை) எனக் கூறினார். ஆதலால் அவர்கள், அவரை விட்டும் திரும்பிச் சென்றனர்.
(பின்னர் இப்றாஹிம் நபி தனது ஊரிலுள்ள கோயிலுக்குச் சென்றார்கள்.) அங்கு, அவர்களின் கடவுள்களிடம் சென்றார். "நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" எனக் கேட்டார்.
பின்னர் அவற்றை நோக்கிச் சென்று, வலதுகையால் தாக்கினார். (அனைத்து சிலைகளையும் உடைத்தார்)
அவர், அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கினார். அவற்றில் பெரிய சிலையைத் தவிர! அதனிடம் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்பதற்காக (அதை விட்டு வைத்தார்.) (21 : 58)
அல் குர்ஆன் - 37 : 87-93
அதன்பிறகு திருவிழா முடிந்ததும் தங்களது ஊருக்கு வந்தனர். தங்களது கோயிலில் உள்ள சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.
அதன்பிறகு நடந்ததை அல்லாஹ் தெரிவிக்கிறான்.
قَالُوا۟ مَن فَعَلَ هَـٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّـٰلِمِينَ⭘ەنَعَ فَتًۭى يَذْكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ⭘ قَالُوا۟ فَأْتُوا۟ بِهِۦ عَلَىىٰ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشْهَدُونَ⭘ قَالُوٓا۟ ءَأَنتَ فَعَلْتَ هَـٰذَا بِـَٔالِهَتِنَا يَـٰٓإِبۡرَٰهِيمُ⭘ قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمْ هَـٰذَا فَسْـَٔلُوهُمْ إينك فَرَجَعُوٓا۟ إِلَىٰٓ أَنفُسِهِمْ عَلَىٰ رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَـٰٓؤُلَآءِ يَنطِقُونَ⭘ قَالَ أَفَتَنَعْبُدُ دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْـًۭٔا وَلَا يَضُرُّكُمْ⭘ أُفٍّۢ لَّكُمَوَلِمْ وَلِمْ دُونِ ٱللَّهِ ۖ أَفَلَا تَعْقِلُونَ⭘
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே!” என அவர்கள் கூறினர்.
“இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் (குறை) கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்” என்று சிலர் கூறினர்.
“மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர்.
"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர்தானா?" எனக் கேட்டனர்.
"இல்லை! இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக் கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்!" என அவர் கூறினார்.
அவர்கள் தங்கள் பக்கமே திரும்பி, “நீங்களே அநியாயக்காரர்கள்” என்று கூறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தலைக்குனிவுக்கு உள்ளாக்கப்பட்டு, “இவை பேசாது என்பதுதான் உமக்குத் தெரியுமே!” (என்று கூறினார்.)
“அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? வணங்குபவருக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”
“நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அவர் கூறினார்.(37 : 95,96)
அல் குர்ஆன் - 21 : 59-67
அவர்கள் இப்றாஹீம் நபியின் அறிவுப்பூர்வமான வாதத்திற்கு பதலளிக்க முடியாமல் திணறினர். தங்களது இயலாமையை எண்ணி கைசேதம் அடைந்தனர்.
நெருப்பில் வீச கட்டளை
இந்நிலையில் அவர்கள் திருந்துவதற்குப் பதிலாக இப்ராஹீம் நபியின் மீது கோபம் கொண்டார்கள். அவர்களின் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது. அந்த கோபம் இப்ராஹீம் நபியை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியது.
இதுபற்றி இறைவன் கூறுவதாவது :
"இப்றாஹீமைக் கொன்று விடுங்கள்! அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்!" என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.
"நீங்கள் (உங்கள் கடவுளுக்கு எதையுமே நன்மை) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுளுக்கு உதவி செய்யுங்கள்!" என்று அவர்கள் கூறினர். (21 : 68)
இன்னொரு இடத்தில் இறைவன் கூறும் போது
“இப்றாஹீமுக்காக ஒரு கிடங்கை அமைத்து, (அதில் நெருப்பை மூட்டி) அவரை நெருப்பில் போட்டு விடுங்கள்!” என அவர்கள் கூறினர். (37 : 97)
இறைவனை நோக்கி மக்களை அழைத்ததற்காக இப்ராஹீம் நபியை நெருப்பில் வீசிவிட அவர்கள் முடிவு செய்தனர். அதற்காக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை தயாரித்தனர். அந்த நெருப்புக் குண்டத்தில் இப்றாஹிம் நபியை தூக்கி வீசினர். ஆனால் அல்லாஹ் அவர்களை காப்பாற்றினான். இதற்கு காரணம் இப்ராஹிம் நபி செய்த பிரார்த்தனையாகும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது 'அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 4563.
இப்றாஹிம் நபி செய்த பிரார்த்தனையின் காரணமாக இறைவன் நெருப்பிற்கு கட்டளையிட்டான்.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!”. (அல் குர்ஆன் - 21 : 69)
இவ்வாறு நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான். நம்புகின்ற சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன. (29 : 24)
இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நெருப்பு குளிரந்தது. இப்றாஹீம் நபிக்கு இதமானதாக அது மாறியது. ஆகவே இப்ராஹீம் நபி காப்பாற்றப்பட்டார்கள். காஃபிர்கள் இழிவடைந்தார்கள்.
இப்ராஹீமுக்கு (எதிராக) அவர்கள் சதி செய்ய நாடினார்கள். அவர்களை நாம் இழிந்தோராக ஆக்கினோம்.
அல் குர்ஆன் - 37 : 98
'தனது சமுதாய மக்களே தன்னைக் கொலை செய்யத் துணிந்தார்கள்' என்பதற்காக இப்ராஹீம் நபி அவர்கள்மீது கோபம் கொள்ளவில்லை. அவர்களை அழிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கவில்லை. மாறாக மறுபடியும் தனது சமுதாயத்தை நேர்வழியை நோக்கி அழைத்தார்கள். தனது சமுதாயத்திடம் உண்மையை எடுத்துரைத்தார்கள். எப்படியாவது அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துடித்தார்கள்.
அதன்பிறகும் அவர்கள் ஏற்கவில்லை என்பதற்காக நரகத்தைப் பற்றி அவர்களுக்கு இப்றாஹிம் நபி எச்சரிக்கிறார்கள். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டால், இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையிலான பற்றின் காரணமாகத்தான். பிறகு மறுமை நாளில் உங்களில் சிலர், சிலரை மறுப்பார்கள். மேலும் உங்களில் சிலர், சிலரைச் சபிப்பார்கள். உங்களின் தங்குமிடம் நரகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் - 29 : 25
இப்றாஹிம் நபியின் இத்தகைய பிரச்சாரத்தில் நமக்கு சிறந்த முன்மாதிரிகள் இருப்பதாக இறைவன் தெரிவிக்கிறான்.
“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதை விட்டும் நாங்கள் விலகிக் கொள்கிறோம். உங்களை மறுத்து விட்டோம். உங்களுக்கும், எங்களுக்குமிடையே என்றென்றும் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது” என்று தமது சமுதாயத்தினரிடம் கூறியதில் இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. “அல்லாஹ்விடமிருந்து உமக்கு (உதவ) எந்த ஒன்றுக்கும் நான் சக்தி பெறாத நிலையில், உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று இப்ராஹீம், தமது தந்தையிடம் கூறியதைத் தவிர! (மற்றவற்றில் முன்மாதிரி உள்ளது.)
அதைப்போல் இப்றாஹீம் நபி தன்னை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யுமாறு இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
"எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டும் விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது"
"எங்கள் இறைவனே! எங்களை இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாக ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நுண்ணறிவாளன்” (என்றும் இப்றாஹிம் இறைஞ்சினார்.)
அல் குர்ஆன் - 60 : 4, 5
அரசரிடம் செய்த பிரச்சாரம்
இப்றாஹிம் நபி தனது தந்தையிடத்திலும் தனது சமுதாயத்திடத்திலும் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை பார்த்தேம். இதில் அவரது தந்தையும் சமுதாயமும் தோல்வியைத் தழுவினார்கள். ஆகவே அவர்கள் இப்றாஹிம் நபியை அரசரிடம் அழைத்துச் சென்றனர். அந்த அரசனோ இப்றாஹிம் நபியிடம் ஆணவத்தோடு வாதம் புரிந்தான். அவனது வாதத்தையும் இப்றாஹிம் நபி முறியடித்தார்கள்.
(நபியே!) அல்லாஹ், தனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியதன் காரணமாக, இப்ராஹீமிடம் அவரது இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா?
“எனது இறைவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கின்றான்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணிக்கவும் வைக்கிறேன்” அவன் கூறினான்.
அதற்கு இப்ராஹீம், “அவ்வாறாயின், அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். அப்போது அந்த இறைமறுப்பாளன் வாயடைத்துப் போனான். அநியாயக்காரக்கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல் குர்ஆன் - 2 : 258
இதில் இப்றாஹிம் நபியின் அறிவாற்றல் வெளிப்படுகிறது.
இப்றாஹிம் நபி இறைவனின் இலக்கணத்தை அரசரிடம் முன்வைக்கிறார்கள். இறைவன் உயிர் கொடுப்பவன் உயிர் எடுப்பவன் என்று வாதிக்கிறார்கள். அதற்கு அரசனோ, 'நானும் உயிர் கொடுப்பேன் உயிர் எடுப்பேன்' என்கிறான். இதற்கு தஃப்சீர் ஆசிரியர்கள் விளக்கமளிக்கையில், அரசன் தனது கைதிகளில் இருவரை வரவழைத்து அதில் ஒருவரை கொன்றான். மற்றொருவரை விடுதலையளித்தான். இவ்வாறு செய்ததை வைத்து, கொலை செய்தவனின் உயிரை நான்தான் எடுத்தேன். விடுதலை செய்தவனுக்கு உயிர்பிச்சை வழங்கினேன். ஆகவே நானும் உயிர் கொடுப்பேன் மரணிக்கச் செய்வேன் என்று வாதிட்டான்.
இது முட்டாள்தனமான வாதம் என்பதை இப்றாஹிம் நபி உணர்ந்தார்கள். ஏனெனில் இறைவனே அனைத்து உயிரினங்களுக்கும் உயிரளித்தவன். ஆனால் அரசனால் மரணத்தருவாயில் இருப்பவனுக்கு உயிர் கொடுக்க முடியுமா? அல்லது அந்த அரசனே மரணிக்காமல் வாழ முடியுமா? அதைப்போல் வேறொரு நாட்டைச் சேர்ந்தவனின் உயிரை அரசனால் பறிக்க முடியுமா? அரசன் நாடிய அனைவரின் உயிர்களையும் அரசனால் பறிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆகவே இது முட்டாள்தனமான வாதமாகும். இருந்தபோதிலும் இப்றாஹிம் நபி அரசனிடம் இதை விளக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அரசன் வாயை மூடும் விதமாக அடுத்த வாதத்தை முன்வைத்தார்கள். அதாவது,
இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கிறான். மேற்கில் மறையச் செய்கிறான். நீ இறைவனாக இருந்தால் சூரியனை மேற்கில் உதிக்கச் செய் என்று கூறினார்கள். இதற்கு பதிலளிக்கமுடியாமல் அரசன் திணறினான். கடைசியில் அவன் தோல்வியுற்றான்.
இத்தகைய பிரச்சாரத்தின் காரணமாக இப்றாஹிம் நபிக்கு எதிராக அவர்களது தந்தை ஆஸரும், சமுதாயமும் அரசரும் ஒன்று திரண்டார்கள். இதனால் இப்றாஹிம் நபி தனது சொந்த ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள். அதாவது இப்றாஹிம் நபி ஹிஜ்ரத் செய்தார்கள்.
சொந்த நாட்டைவிட்டு செல்லுதல்
ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் இப்ராஹீம் நபி தனது சமுதாயத்திடம் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.
“என்னைப் படைத்தவனையன்றி நீங்கள் வணங்குவனவற்றை விட்டும் விலகிக் கொண்டேன். அல்லாஹ்வாகிய) அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்” என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், சமுதாயத்தினரிடமும் கூறி (ஊரைவிட்டும் கிளம்பி சென்றதை) நினைவு கூர்வீராக! (அல் குர்ஆன் - 43 : 26,27)
(இப்ராஹீம் நபி,) "நான் என் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்" கூறினார். (அல் குர்ஆன் - 29 : 26, 37 : 99)
மேற்கண்ட கூற்றின் மூலம் இப்றாஹிம் நபியின் உறுதியான இறைநம்பிக்கை வெளிப்படுகிறது. அதாவது,
நீங்கள் வணங்கும் போலிக் கடவுள்களைவிட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன். ஏனெனில் அவற்றை வணங்குவது வழிகேடு. மாறாக அல்லாஹ் எனக்கு நேரான வழியைக் காட்டுவான். அந்த வழியில்தான் நான் நடப்பேன் என்று கூறி தனது இறைநம்பிக்கையை பறைசாற்றுகிறார்கள்.
அதைப்போல் நான் ஊரை விட்டும் வெளியேறிச் செல்கிறேன். எங்கே செல்ல வேண்டும்? எப்படி செல்ல வேண்டும்? என்று எனக்கு தெரியாது. ஆனாலும் நான் வெளியேறிச் செல்கிறேன். காரணம் எனது இறைவன் எனக்கு நேர்வழியைக் காட்டுவான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறிய பிறகு கிளம்பிச் செல்கிறார்கள்.
இதன்மூலம் இப்றாஹிம் நபிக்கு இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
இதன்பிறகு தனது சொந்த நாட்டைவிட்டு இப்றாஹிம் நபியும் அவரது மனைவியான சாராவும் ஃபாலஸ்தீனத்தை நோக்கி சென்றார்கள். அப்போது இவர்கள் இருவர் மட்டும்தான் முஸ்லிம்களாக இருந்தனர். இதனால்தான் இறைவன் இப்றாஹிம் என்ற தனி மனிதரை சமுதாயம் என்று வர்ணிக்கிறான்.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல் குர்ஆன் - 16 : 120
அன்றைய காலத்தில் அவர்களது சமூகத்தில் இப்ராஹிம், அவரது மனைவி சாராவைத் தவிர வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. இவர்கள் மட்டும்தான் முஸ்லிம்களாக இருந்தனர். அதாவது ஊரிலுள்ள மற்ற அனைவரும் காஃபிர் சமூகமாகவும் இப்ராஹீம் நபி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்கள். அதனால்தான் அவர்களைத் தனிமனிதர் என்று கூறாமல் சமுதாயம் என்று இறைவன் கூறுகிறான்.
3) இப்ராஹீம் நபி கூறிய பொய்
இப்றாஹிம் நபியும் அன்னை சாராவும் தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு ஒரு சோதனை நடந்தது. அதை நபியவர்கள் தெரியப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதையும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:
1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காக) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?" என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது" என்று கூறியது.
3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:)
(ஒரு நாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்த நாட்டில் கொடுங்கோல் மன்னன் இருக்கிறான். நீ என் துணைவி என்பதை அவன் அறிந்து கொண்டான். கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி" என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவர் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, "(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது" என்று சொன்னான்.
ஆகவே, கொடுங்கோல் மன்னன், சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது, அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தன் கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், "அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்" சொன்னான்.
அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.
(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கையை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்" என்று கூறினான். அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது.
சாராவை அழைத்து வந்தவனை மன்னன், "நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டு வந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு" என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்து வருவதை இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் "என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். சாரா அவர்கள், "நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4726.
இந்த சம்பவத்தில் இப்ராஹீம் நபி மூன்று பொய்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது. பொய் சொல்வது மார்க்கத்தில் பெரும்பாவமாகும். ஆனால் நிர்ப்பந்தமான நிலையில் சொல்லிக் கொள்ளலாம். அதற்கு மார்க்கத்தில் தடையில்லை. அந்தவகையில் இப்றாஹிம் நபி கூறிய பொய்கள் மூன்றுமே நிர்ப்பந்தமான நிலையில் சொல்லப்பட்டதாகும். அவற்றில் இரண்டு மார்க்கத்திற்காகவும் ஒன்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கூறியுள்ளனர். இவ்வாறு நிர்பந்தமான நிலையில் நாம் பொய் சொல்லிக்கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்விலும் இதைப்போன்ற சம்பவங்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர்(ரலி) வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். (அப்போது அவ்விருவரையும் கொலை செய்வதற்காக மக்கா காஃபிர்கள் வலைவீசி தேடிக் கொண்டிருந்தார்கள்) அபூபக்ர்(ரலி) (இள நரையின் காரணத்தினால்) தோற்றத்தினால்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில்) அறிமுகமானவராகவும் இருந்தார். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தினால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால்) மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.
(அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின் போது) அபூபக்ர்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?' என்று கேட்கிறார்.
அதற்கு, அபூபக்ர்(ரலி), 'இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்' என்று (நபி - ஸல் அவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து விடாமலும், அதே சமயம் உண்மைக்குப்) புறம்பில்லாமலும் இரண்டு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள்.
இதற்கு, (பயணத்தில்) பாதை (காட்டுபவர்)' என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால், 'நன் மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்)' என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.
அப்போது, அபூபக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார்கள். ஸஹீஹ் புகாரி : 3911.
அபூபக்கர் ரலியின் இத்தகைய நடவடிக்கைக்கு இப்றாஹிம் நபியின் வரலாற்றின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட படிப்பினை காரணமாக இருக்கலாம். அல்லது மன்னரிடம் தந்திரமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு இப்ராஹீம் நபிக்கு இறைவன் கற்றுக்கொடுத்ததைப் போன்று அபூபக்கர் ரலிக்கும் அல்லாஹ் கற்றுக்கொடுக்கிறான். கொடுத்திருப்பான். எவ்வாறிருப்பினும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவ்வாறு தந்திரமான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
அதைப்போல் பிறிதொரு இடத்தில் மார்க்கத்திற்காக பொய் சொல்வதற்கு நபியவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறி) பேச என்னை அனுமதிக்கவும்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறோம். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்.
இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது. பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் தேவை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.
"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைவது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன்" இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தார்.
பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்களுடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டு சென்றார்கள்.
அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.
அப்போது "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோரபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.
அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி ஏறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான்.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை) நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டது அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இந்த பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.
அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3682.
இந்த ஹதீஸில் முஹம்மது பின் மஸ்லமா பொய் சொல்வதற்காக நபியிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு நபியவர்களும் அனுமதியளிக்கிறார்கள். இந்த பொய் மார்க்கத்திற்காக கூறப்படும் பொய்யாகும். ஏனெனில் கஅப் பின் அஷ்ரஃப் ஒரு யூதன். அவனால் முஸ்லிம்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் அபாயம் இருந்தது. ஆகவேதான் அவனைக் கொலை செய்யும் விஷயத்தில் நபியவர்கள் பொய் சொல்ல அனுமதிக்கிறார்கள்.
இப்றாஹீம் நபி கூறிய பொய்யும் அதுதான். அவர்கள் உடல் நலத்தோடு இருந்துகொண்டே தன்னை ஒரு நோயாளி என்று பாய் கூறினார்கள். அவ்வாறு பொய் கூறிவிட்டு அனைத்து சிலைகளையும் உடைத்து தள்ளினார்கள். சிலைகளை தகர்த்தெறிவதற்காக இத்தகைய பொய்யை இப்ராஹீம் நபி கூறினார்கள். அதுபோலத்தான் காஃபிரான கஅபை கொலை செய்வதற்காக பொய் சொல்வதை நபியவர்கள் அங்கீகரித்தார்கள்.
ஆக மார்க்கத்திற்காக தருணங்களில் பொய் கூறுவது அனுமதிக்கப்பட்டது என்பது இதிலிருந்து விளங்குகிறது. இருந்தபோதிலும் தான் கூறிய பொய்க்காக இப்ராஹீம் நபி வருந்தினார்கள். பொய் கூறிவிட்டோமே என்று அங்கலாய்த்தார்கள். ஏனெனில் இப்ராஹீம் நபி அந்த அளவிற்கு பொய்யை வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்திவைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், '(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?' என்று பேசிக் கொள்வார்கள்.
பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான்; தன்னுடைய சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' கோருவர். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது மரத்திலிருந்து பூசித்துவிட்டதால் தாம் புரிந்த தவற்றினை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். '(எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத்தூதர்களில் முதலாமவரான நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தம் தவறினை அவர்கள் நினைவு கூர்வார்கள். பிறகு, 'நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்கள் எடுத்துக்கூறுவார்கள். பிறகு, 'நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத் (வேதத்)தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அளித்த அடியாராவார்' சொல்வார்கள்.
உடனே இறை நம்பிக்கையாளர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை' என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்துவிட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக்கூறுவார்கள். பிறகு 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனுடைய ஆவியும் வார்த்தையுமான ஈஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று மூஸா கூறுவார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்களும் '(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனுடைய இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுந்துவிடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே)விட்டுவிடுவான். பிறகு எவன், 'எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்' என்று கூறுவான். அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் (அவனுடைய இல்லத்திலிருந்து) வெளியேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். -ஸஹீஹ் புகாரி : 7440.
இப்றாஹீம் நபியவர்கள் மார்க்கத்திற்காகவும் நிர்பந்தமான சூழ்நிலையிலும் பொய் கூறியிருந்தாலும் அதற்காக இறைவனை அஞ்சக்கூடியவர்களாக இருக்க வேண்டும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று நாமோ ஏகப்பட்ட பொய்களை கூறுகிறோம். ஆனால் அதற்காக பயப்படுவதும் இல்லை. இறைவனை அஞ்சுவதும் இல்லை. நாம் இப்றாஹிம் நபியின் இந்த முன்மாதிரியைப் பெற்றுக் கொண்டு பொய் கூறாத மக்களாக திகழ வேண்டும்.
4) இப்ராஹீம் நபி குழந்தை வளர்ப்பில் காட்டிய அக்கறை
இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் குழந்தை எனும் அருள் மிக முக்கியமானது. இதை இப்றாஹீம் நபி நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கோ பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியத்தை இறைவன் வழங்கவில்லை. ஆகவேதான் அவர்கள் தனது இறைவனிடம் குழந்தை பாக்கியத்தை வேண்டி துஆ செய்தார்கள்.
இது தொடர்பாக இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையில் நமக்கு அழகிய முன்மாதிரி அடங்கியுள்ளது.
நல்லொழுக்கமுள்ள வாரிசை வேண்டி பிரார்த்தனை
அவர்கள் செய்த துஆவானது :
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ⭘
"என் இறைவனே! எனக்கு நல்லொழுக்கமுள்ளவரை (வாரிசாக) அளிப்பாயாக!" (என்று இப்றாஹீம் நபி தனது இறைவனிடம் இறைஞ்சினார்.)
அல் குர்ஆன் - 37 : 100
மேற்கண்ட வாசகத்தை நன்கு கவனியுங்கள். இப்றாஹீம் நபி இறைவனிடம், "இறைவனே! எனக்கு ஒரு வாரிசை தருவாயாக!" என்று கேட்கவில்லை. மாறாக "என் இறைவனே! எனக்கு நல்லொழுக்கமுள்ளவரை (வாரிசாக) அளிப்பாயாக!" என்று பிரார்த்திக்கிறார்கள்.
இந்த பிரார்த்தனையை கேட்கும்போது இப்ராஹீம் நபி முதிர்ந்த வயதுடையவராக இருந்தார். நமக்குதான் அதிக வயதாகிவிட்டதே! இந்நேரத்தில் இறைவனிடம் வாரிசை மட்டும் கேட்போம் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இறைவனால் எதையும் நமக்கு வழங்கமுடியும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆகவேதான் அவர்கள் நல்லொழுக்கமுள்ள வாரிசை தருவாயாக என்று பிரார்த்திக்கிறார்கள். நாம் நமது இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இறைவனின் முதல் பரிசு - பொறுமைசாலி குழந்தை
இப்ராஹீம் நபி இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து துஆ செய்த காரணத்தால் அவர்களுக்கு இறைவன் சிறந்த குழந்தையை வாரிசாக வழங்கினான். அதை இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.
எனவே, பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
அல் குர்ஆன் - 37 : 101
இப்றாஹீம் நபி கேட்டது, நல்லொழுக்கமுள்ள வாரிசு.
இறைவன் கொடுத்தது பொறுமைமிக்க வாரிசு.
பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளவர்களால்தான் நல்லவர்களாக வாழமுடியும். ஆகவேதான் இறைவன் இப்றாஹிம் நபிக்கு பொறுமைமிக்க குழந்தையான இஸ்மாயீல் நபியை வாரிசாக வழங்கினான்.
பொறுமையை நிரூபித்த இஸ்மாயீல் நபி
இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல் என்ற பொறுமைசாலி குழந்தையை வழங்கியதை எடுத்துகாட்டுவதற்காக இறைவன் ஒரு ஏற்பாட்டை செய்தான். அதுதான் இப்ராஹீம் நபியின் கனவு.
இப்ராஹீம் நபி இறைவனின் கட்டளையை ஏற்று தனது மகன் இஸ்மாயீலையும் மனைவி ஹாஜரையும் மக்காவில் விட்டுவிட்டு வந்தார்கள். அதன்பிறகு இஸ்மாயீல் நபியவர்கள் தனது தாய் ஹாஜர் மற்றும் ஜுர்ஹும் கோத்திரத்தாருடன் சேர்ந்து மக்காவில் வளர்ந்து வந்தார்கள். அவர்கள் வாலிப பருவத்தை அடைந்தார்கள்.
அப்போது இப்ராஹீம் நபி ஒரு கனவு காண்கிறார்கள். அதில் தனது மகனான இஸ்மாயீலை அறுப்பது போன்று காண்கிறார்கள். இறைத்தூதர்களின் கனவும் வஹீச் செய்திதான். அந்த அடிப்படையில் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற மக்காவிற்கு கிளம்பி வருகிறார்கள். அதன்பிறகு நடந்த சம்பவத்தை இறைவன் கூறுகிறான்.
இப்றாஹீமுடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை இஸ்மாயீல் அடைந்தபோது “என் அருமை மகனே! நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று இப்ராஹீம் கூறினார்.
“என் தந்தையே!(இறைவனால்) உங்களை ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! என்று இஸ்மாயீல் கூறினார்.
அவர்கள் இருவரும் கட்டுப்பட்டு, அவரை (இஸ்மாயீலை இப்ராஹீம்) முகங்குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! நீர் கனவை உண்மையாக்கி விட்டீர்!" என்று (கூறி) அவரை அழைத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம். இதுவே பகிரங்க சோதனையாகும். அவருக்கு மகத்தான ஒரு பலிப் பிராணியை ஈடாக்கினோம்.
அல் குர்ஆன் - 37 : 102-107
மேற்கண்ட சம்பவத்தில் இஸ்மாயீல் நபி தனது பொறுமையை நிரூபிக்கிறார்.
ஒரு மனிதன் இழப்பதற்கு இவ்வுலகில் எவ்வளவோ பொருட்கள் உள்ளன. அவற்றில் மிகப்பெரும் இழப்பாக அவனது உயிர் இழப்புதான் உள்ளது. மற்ற பொருட்களை இழந்தால் பொறுமையோடிருந்து அவற்றை மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் உயிரிழப்பு அவ்வாறில்லை. அதில் பொறுமையோடு இருப்பது மிகவும் கடினம். ஆனாலும் இஸ்மாயீல் நபி அதில் பொறுமையோடு இருந்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை தான்.
இரண்டாவது பரிசு - சாலிஹான குழந்தை
இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல் என்ற குழந்தையை மட்டும் இறைவன் வழங்கவில்லை. அவர்களோடு சேர்த்து இஸ்ஹாக் என்ற குழந்தையையும் இறைவன் வழங்கினான். அவர்களுக்கும் சேர்த்துத்தான் இப்ராஹீம் நபி துஆ செய்தார்கள்.
"என் இறைவனே! எனக்கு நல்லொழுக்கமுள்ளவரை (வாரிசாக) அளிப்பாயாக!" என்ற பிரார்த்தனைக்கு இறைவன் வழங்கிய இரண்டாவது பரிசு
இப்றாஹீமுக்கு, நல்லோரிலுள்ள நபி இஸ்ஹாக் (எனும் மகன்) குறித்து நற்செய்தி கூறினோம்.
அல் குர்ஆன் - 37 : 112
இதில் இஸ்ஹாக் நபி ஸாலிஹீன்களில் ஒருவராக இருந்தார் என்பதை இறைவன் தெரிவிக்கிறான். இதற்குக் காரணம் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைதான்.
தனது சந்ததியினருக்கான பிரார்த்தனை
தனது குழந்தைகளுக்காக மட்டுமில்லாமல் தனது சந்ததியைச் சேர்ந்தவர்களுக்காகவும் இப்ராஹீம் நபி இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவற்றை முழுமையாக நிறைவு செய்தார். (அதனால்) “மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் (இறைவனிடம்) கேட்டார். “(உமது தலைமுறையிலுள்ள) அநியாயக்காரர்களை எனது வாக்குறுதி சேராது” என்று அவன் கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 124
மேற்கண்ட வசனத்தில் இறைவன் இப்ராஹீம் நபிக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறான். அவரை “மக்களுக்கு வழிகாட்டும் தலைவராக ஆக்குவேன்” என்று கூறுகிறான். நாமாக இருந்தால் அதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்து சென்றிருப்போம். ஆனால் இப்ராஹீம் நபி அவ்வாறு மட்டும் இருக்கவில்லை. இறைவன் தனக்கு வழங்கிய அந்தஸ்தை தனது சந்ததியினருக்கும் வழங்குமாறு அவனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன.
இப்ராஹீம் நபி இறைவன் மீது வைத்திருந்த உயர்ந்த எண்ணம். 'இறைவனிடத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் தருவதற்கு இறைவன் ஆற்றலுள்ளவன்' என்ற அசையாத நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது.
தனது சந்ததியினர் மீதான அக்கறை. இன்று நாம் பிரார்த்தனை செய்தால் நமக்காக கேட்போம். அதன்பிறகு நமது பெற்றோருக்காக, வாழ்க்கை துணைக்காக, உடன்பிறந்தேருக்காக மற்றும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோம். ஆனால் இதுவரையிலும் பிறக்காமல் இருக்கும் நமது வருங்கால சந்ததியினருக்காக நாம் பிரார்த்தனை செய்திருப்போமா? ஆனால் இப்ராஹீம் நபி தனது வருங்கால சந்ததியினருக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைக்கு இறைவன் அளித்த பதில்,
அநியாயக்காரர்களை தலைவர்களாக ஆக்கமாட்டேன்.
அவர்களைத் தவிர மற்றவர்களை தலைவர்களாக ஆக்குவேன்.
இந்த சிறப்பை இப்றாஹீம் நபிக்கு இறைவன் வழங்கினான். காரணம் அவர்களின் பிரார்த்தனைதான். அதனால்தான் இப்ராஹீம் நபியின் சந்ததியிலிருந்து ஏராளமான இறைத்தூதர்கள் வந்துள்ளனர்.
இதில் இப்ராஹீம் நபியின் மூத்த மகனான இஸ்மாயீல் நபியின் தலைமுறையில் வந்தவர்கள்தான் முஹம்மது நபியவர்கள்.
ஆனால் இஸ்ஹாக் நபியின் சந்ததியில் ஏராளமான நபிமார்கள் வந்துள்ளனர். இதைப் பற்றி இறைவன் கூறுவதாவது :
இப்றாஹீமிற்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள்வளம் புரிந்தோம். அவ்விருவரின் தலைமுறைகளில் நன்மை செய்வோரும் உள்ளனர்; பகிரங்கமாகத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்வோரும் உள்ளனர்.
அல் குர்ஆன் - 37 : 113
இஸ்ஹாக் நபியின் சந்ததியில் நல்லவர்களும் வந்துள்ளனர். தீயவர்களும் வந்துள்ளனர். ஏற்கனவே இறைவன் கூறியது போன்று அவர்களிலுள்ள நல்லவர்களை இறைவன் நபியாகவும் தலைவர்களாகவும் தேர்ந்தெடுத்தான்.
அந்தவகையில் இப்ராஹீம் நபியின் மகனான இஸ்ஹாக் என்பவர் நபியாக இறந்தார். அவரது மகனான யஃகூப் நபியாக இருந்தார். அவரது மகனான யூசுஃப் நபியாக இருந்தார். அவர்களது வழித்தோன்றலில் வந்த தாவூத் நபியாக இருந்தார். அவரது மகனான சுலைமான் நபியாக இருந்தார். அவரது வழித்தோன்றல்களில் வந்த மூஸா நபியாக இருந்தார். அவரது சகோதரர் ஹாரூன் நபியாக இருந்தார். அவரது வழித்தோன்றல்களில் வந்த ஜக்கரிய்யா நபியாக இறந்தார். ஈஸா நபியாக இருந்தார். யஹ்யா நபியாக இருந்தார். இவ்வாறு இப்றாஹீம் நபியின் தலைமுறையிலிருந்து ஏராளமான நபியை அல்லாஹ் தேர்வு செய்தான். இறுதி நபியான முஹம்மது நபியும் இப்ராஹீம் நபியின் சந்ததிகளில் உள்ளவர்கள்தான்.
இதற்கு காரணம் இப்ராஹீம் நபி தனது சந்ததி மீது அக்கறை கொண்டு செய்த பிரார்த்தனைதான். இதை இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
இஸ்ஹாக்கையும் (அவரது மகன்) யஃகூபையும் இப்றாஹீமிற்கு பரிசாக அளித்தோம். அனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். இதற்கு முன் நூஹுக்கும் (இப்றாஹீமின்) வழித்தோன்றல்களில் தாவூத், சுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
அல் குர்ஆன் - 6 : 84
(இப்றாஹீம் நபியின் சமூகத்தைச் சேர்ந்த காஃபிர்களான) அவர்களை விட்டும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குவதை விட்டும் இப்றாஹீம் விலகியபோது, இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாக அளித்து, ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
அல் குர்ஆன் - 19 : 49
இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். அவரது வழித்தோன்றலில் நபித்துவத்தையும், வேதத்தையும் அளித்தோம். அவருக்கு இவ்வுலகில் அவரது கூலியை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
அல் குர்ஆன் - 29 : 27
ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோரையும் (நேர்வழியில் செலுத்தினோம்.) அனைவரும் நல்லவர்கள்.
அல் குர்ஆன் - 6 : 85
இவ்வாறு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைக்கு இறைவன் அழகிய முறையில் பதிலளித்தான். ஆகவே நாமும் நமது குடும்பத்திற்காகவும் சந்ததியினருக்காகவும் இது போன்று பிரார்த்தனை புரியக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
3) குடும்பத்தாரின் ஈருலக வெற்றிக்கு இப்றாஹிம் நபியின் முன்மாதிரி
இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். இவ்வுலகத்திலும் மறுமையிலும் வெற்றி பெற வழிகாட்டுதல்களை வழங்கும் தூய்மையான, சரியான மார்க்கம் இஸ்லாமாகும்.
மறுமையை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறும் இவ்வுலகத்தை முற்றிலுமாக புறக்கணிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.
அல்லாஹ் தனது குர்ஆனில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்? என்று கற்றுத்தருகிறான்.
மற்றும் وَقِنَا عَذَابَ ٱلنَّارِ⭘
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! பாதுகாப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.
அல் குர்ஆன் - 2 : 201
மறுமைக்காக மட்டுமல்ல இவ்வுலக வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு வலியுறத்துகிறான். அந்த வகையில் இப்றாஹிம் நபி தனது குடும்பத்தினரின் ஈருலக வெற்றியிலும் அக்கறை செலுத்தியிருக்கிறார்கள்.
ஈருலக நன்மைக்கான ஏற்பாடு
மறுமைக்கான ஏற்பாடு
நாம் நமது குழந்தைகளின் மறுமை வெற்றிக்காக உழைக்க வேண்டும். அவர்களை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் காரியங்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறான்
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருளாவர். அதில் கடினத் தன்மையுடன், வலிமைமிக்க வானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டதில் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு ஏவப்பட்டதையே செய்வார்கள்.
அல் குர்ஆன் - 66 : 6
மேற்கண்ட வசனத்தில் இறைவன் நமது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காக்குமாறு நமக்கு கட்டளையிடுகிறான். நம்மை மட்டும் நரகத்திலிருந்து காத்தால் போதாது. நமது குடும்ப உறுப்பினர்களையும் நரகத்திலிருந்து காக்கும் வேலையில் நாம் ஈடுபட வேண்டும்.
ஆகவேதான் இப்ராஹீம் நபியவர்கள் தனது சந்ததியினரின் மறுவை வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார்கள். அதற்காக பல காரியங்களில் ஈடுபட்டார்கள்.
வழிகாட்டும் தலைவராக ஆக்குவாயாக
இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவற்றை முழுமையாக நிறைவு செய்தார். “மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் கூறினார். “(உமது தலைமுறையிலுள்ள) அநியாயக்காரர்களை எனது வாக்குறுதி சேராது” என்று அவன் கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 124
மக்களுக்கு வழிகாட்டும் தலைவராக எனது சந்ததியினரை ஆக்குவாயாக என்று இப்ராஹீம் நபி தனது இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். மறுமையில் வெற்றிபெறும் ஒருவரைத்தான் இறைவன் வழிகாட்டும் தலைவராக ஆக்குவான். ஆகவேதான் இப்படிப்பட்ட கோரிக்கையை அவர்கள் வைத்தார்கள்.
சிலைகளை வணங்குவதை விட்டும் பாதுகாப்பு
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். மற்ற அனைத்து பாவங்களையும் இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆனால் ஷிர்க்கை மட்டும் மன்னிக்கமாட்டான். ஷிர்க்கிலிருந்து வெளியேறி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டால் மட்டுமே ஷிர்க்கை இறைவன் மன்னிப்பான்.
ஒருமனிதன் ஷிர்க்கில் ஈடுபட்டால் அவனுக்கு நிரந்தர நரகமே தண்டனையாகும். அதிலிருந்து அவனால் வெளியேற முடியாது. ஆகவேதான் 'தனது சந்ததியினயை சிலை வணக்கத்தை விட்டும் தூரமாக்குமாறு' இப்ராஹீம் நபி வேண்டினார்கள்.
மற்றும் نَّعْبُدَ ٱلْأَصْنَامَ⭘
“என் இறைவனே!(மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல் குர்ஆன் - 14 : 35
தொழுகையை நிலைநாட்டுதல்
ஷிர்க்கிலிருந்து தப்பித்தால் மட்டும் போதாது. தொழுகையை சரியான முறையில் நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான் சொர்க்கத்தில் நுழைய முடியும். ஒரு மனிதனுடைய மறுமை வெற்றி தொழுகையில்தான் அமைந்துள்ளது. ஆகவேதான் இப்ராஹீம் நபி தனது சந்ததியினரை தொழுகை நிலைநாட்டக்கூடியவராக ஆக்குவாயாக என்று பிரார்தித்தார்கள்.
رَبِّ ٱجۡعَلۡنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دِعَآآآ
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!
அல் குர்ஆன் - 14 : 40
பாவமன்னிப்புக் கோரல்
அதைப்போல் இப்றாஹீம் நபி தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ⭘
எங்கள் இறைவனே! விசாரணை நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)
அல் குர்ஆன் - 14 : 41
அத்தகைய பிரார்த்தனையை நாம் செய்ய வேண்டும்.
ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு
மனிதனின் முதல் எதிரி ஷைத்தான். அவன்தான் பகிரங்கமான எதிரியாகவும் இருக்கிறான். அவன் மனிதனை வழிகெடுக்க வேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறான். ஆதலால்தான் ஷைத்தானைவிட்டும் இப்றாஹீம் நபி பாதுகாவல் தேடியிருக்கிறார்கள்.
அஃதாவது
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். 'அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) அவர்களுக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3371.
மேற்கண்ட ஹதீஸின் மூலம் இப்ராஹீம் நபியின் இந்த வழிமுறையை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்பதை நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர். இப்றாஹீம் நபி தனது இரு மகன்களுக்காக செய்த துஆவை முஹம்மது நபி தனது இரு பேரக்குழந்தைகளுக்காக செய்திருக்கிறார்கள். ஆகவே நாமும் நமது குழந்தைகளுக்காக இத்தகைய பிரார்த்தனைகளை செய்ய வேண்டும்.
அறிவுரைகள் வழங்குதல்
இப்றாஹீம் நபி இஸ்லாத்தை கடைபிடிக்குமாறு தனது மகன்களுக்கு அறிவுரை கூறக்கூடியவர்களாக இருந்துள்ளனர். இதை இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
“என் பிள்ளைகளே! உங்களுக்காக இம்மார்க்கத்தை அல்லாஹ் தேந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்” என்பதாகும். இப்ராஹீமும், யஃகூபும் அறிவுறுத்தினர்.
அல் குர்ஆன் - 2 : 132
சிறந்த சமூக சூழலை உருவாக்குதல்
நாம் நமது பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்தல், அறிவுரை கூறுதல் போன்றவற்றுடன் அவர்களுக்கான சிறந்த சமூக சூழலையும் உருவாக்க வேண்டும். ஏனெனில் ஒருவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றும் தன்மை சமூக சூழலுக்கு உள்ளது.
நாம் நமது பிள்ளைகளை சிறந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும். அதுதான் அவர்களை சிறந்தவர்களாக்கும். அந்த வகையில் இப்ராஹீம் நபி தனது பிள்ளைகளை சிறந்த இடத்தில் குடியமர்த்தியிருக்கிறார்கள். இதை இறைவன் நமக்கு தெரியப்படுத்துகிறான்.
இப்ராஹீம் நபி இறைவனிடம் கீழ்க்கண்டவாறு பிரார்த்தித்தார்கள் :
எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிடமிருந்து அவர்களுக்கு உணவளிப்பாக!
அல் குர்ஆன் - 14 : 37
தனது மகன் இஸ்மாயீல் தொழுகையை நிலைநாட்டக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை இப்றாஹீம் நபி கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் குடியமர்த்தியிருக்கிறார்கள். இவ்வாறு நாமும் நமது குழந்தைகளுக்கு சிறந்த சமூக சூழலை உருவாக்க வேண்டும்.
2) உலகத்திற்கான ஏற்பாடு
பெற்றோர்களான நாம் நமது பிள்ளைகளின் உலக வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் உலக வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் மறுமை வாழ்க்கையை நாசமாக்கிவிடும். இருலகத்திலும் வெற்றி பெறுமாறுதான் இறைவன் நமக்கு வழிகாட்டுகிறான். அந்த வகையில் இப்ராஹீம் நபி தனது பிள்ளைகளுக்கு தேவையான உலக காரியங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இதுபற்றி நபியவர்களின் ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இருவரையும் அழைத்து வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) சம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்க இருக்கச் செய்தார்கள்.
அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள் அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள் அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை யாரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَىرْعٍ عِندَ بَيْكَ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ⭘
'எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்க இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37)
குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்கள் மிகவும் விரும்பத்தக்கவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய) அவர்களின் நிலை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.
உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அவர் ஆம் உங்கள் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துகொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்கிறார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்கிருந்து வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள்.
மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் உங்களின் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உங்கள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பதாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களுக்கு உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப் படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்து கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார் என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3364.
இந்த நீண்ட ஹதீஸில் நமக்கு நிறைய படிப்பினைகள் உண்டு. 'குழந்தையின் உலக காரியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்' என்பதற்கான வழிகாட்டுதல் இவற்றில் உள்ளது. அவையாவன :
யாருமில்லாத பாலைவனத்தில் தனது மனைவியையும் மகனையும் தன்னந்தனியாக இப்றாஹீம் நபி விடுகிறார்கள். இறைவன் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டதால்தான் இப்றாஹிம் நபி இதை செய்தார்கள். அப்படியிருந்தபோதிலும் அவர்களை சாதாரணமாக விட்டுச் செல்லவில்லை. அவர்களுக்குத் தேவையான பேரீத்தம்பழங்களையும் தண்ணீரையும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். தன்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உணவுகளை வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். நமது குடும்பத்தினருக்கான உணவுகளை வழங்குவது ஆண் மகனின் கடமை என்பதையும் இப்ராஹீம் நபி நிறைவேற்றினார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அதன்பிறகு வெகுதூரம் சென்று கஅபத்துல்லாஹ்வை நோக்கித் திரும்பி, “தனது மனைவி மற்றும் மகன் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! இவர்களுக்கு உண்பதற்கான உணவுப் பொருட்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்.” என்று பிரார்த்திக்கிறார்கள். ஏனெனில் அன்றைய தினத்தில் மக்காவில் எந்த ஆள்நடமாட்டமும் புற்பூண்டுகளும் கிடையாது. மனிதன் சமூகமாகப் படைக்கப்பட்டிருக்கிறான். ஆகவே தனியாக வாழ்வது மனிதனுக்கு சிரமமானது. எனவேதான் பிற மக்களையும் மக்காவிற்கு வருகை தர வைக்குமாறு இப்றாஹிம் நபி பிரார்தித்கள். ஆதலால்தான் ஜுர்ஹும் குலத்தினர் மக்காவிற்கு வருகை தந்தார்கள். அதைப்போல் கனி வர்க்கங்களை வழங்குமாறு அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதனால்தான் இன்று வரையிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கனி வர்க்கங்கள் மக்காவிற்கு வந்த வண்ணம் உள்ளது.
பிறகு தனது மகனைப் பார்ப்பதற்காக பல்லாண்டுகள் கழித்து இப்றாஹிம் நபி வருகிறார்கள். அப்போது இஸ்மாயீல் நபிக்கு திருமணம் ஆகியிருந்தது. வீட்டில் இஸ்மாயீல் நபி இல்லை. ஆகவே அவர்களது மனைவியான தனது மருமகளிடத்தில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றியும் உணவைப் பற்றியும் விசாரித்தார்கள். இது இப்றாஹீம் நபி தனது மகனின் உலக காரியங்களில் செலுத்திய அக்கறையை காட்டுகிறது.
இஸ்மாயீல் நபியின் இரண்டாவது மனைவி, 'நாங்கள் இறைச்சியை உண்கிறோம். தண்ணீரை அருந்துகிறோம்' என்று கூறினார்கள். ஆகவே “இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! மறுமைக்காக பிரார்த்தித்ததைப் போன்று உலக வாழ்விற்காகவும் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆகவே நாம் நமது குழந்தைகளின் உலக வாழ்க்கைக்காக பிரார்த்திப்பதைப் போன்று மறுமை வாழ்க்கைக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் உலக வாழ்க்கை சிறப்பாவதற்க்கான ஏற்பாடுகளை செய்து தருவதைப் போன்று அவர்களது மறுமை வாழ்க்கையும் சிறப்பாவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் வேண்டும்.
இப்ராஹீம் நபியைப் பின்பற்றிய முஹம்மது நபி
குடும்பத்தினரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் இப்ராஹீம் நபியின் நடைமுறையில் நமக்கு முன்மாதிரி இருப்பதால்தான் முஹம்மது நபியவர்கள் தனக்காக கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்யுமாறு கோரியிருக்கிறார்கள்.
அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்கள் :
மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!' உங்களின் மீது நாங்கள் எப்படி 'ஸலவாத்து' சொல்வது?' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்
இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்களின் மீதும், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்நிதிகள் மீதும் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்நிதிகளின் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்' என பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3369.
இந்த பிரார்த்தனையை நாம் ஒவ்வாெரு தொழுகையிலும் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள். அதைப்போல் தொழுகை முடிந்த பின்னும் நமக்கு நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற கோரிக்கைகளை நமது குடும்பத்தினருக்காகவும் நாம் கேட்க வேண்டும்.
5) இப்றாஹிம் நபி கற்றுத்தரும் கணவன் மனைவி தேர்வு
குடும்ப வாழ்க்கையும் பொருளாதாரமும்
குடும்ப வாழ்க்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியம். பொருளாதாரம் இல்லாமல் குடும்பத்தை வழிநடத்த முடியாது. அதைப்போல் இருக்கும் பொருளாதாரத்தை வைத்து திருப்தியோடு வாழ்க்கையை நடத்துவதும் முக்கியம். இந்த இரண்டும் தான் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளம்.
இப்ராஹீம் நபியின் வழிகாட்டுதல்
இதை இப்ராஹீம் நபியவர்கள் தனது மகனுக்கு கற்பிக்கிறார்கள்.
இப்ராஹீம் நபியவர்கள் தனது மனைவியான ஹாஜர் (அலை) அவர்களையும் கைக்குழந்தையான இஸ்மாயீல் நபியையும் மக்காவில் விட்டுவிட்டு சென்றார்கள். பிறகு காலம் கடந்தது. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் மிகவும் விரும்பத்தக்கவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். அதன்பிறகு இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் (அலை) இறந்துவிட்டார்கள்.
பொருந்திக்கொள்ளும் மனைவி
இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற தம் மனைவி மகன் ஆகியவர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக மக்கா வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை அவர்களது வீட்டில் காணவில்லை.
அப்போது இப்ராஹீம் நபி இஸ்மாயில் நபியைப் பற்றி அவரது மனைவியிடம் விசாரித்தார்கள்.
அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
அதன்பிறகு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்
இப்ராஹீம் நபி : உங்களுடைய வாழ்க்கை நிலையும் பொருளாதார நிலையும் எவ்வாறு உள்ளது?
இஸ்மாயில் நபியின் மனைவி : நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்
இப்ராஹீம் : உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் கூறுங்கள். அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி நான் சொன்னதாக சொல்லுங்கள்.
இவ்வாறு கூறிவிட்டு இப்றாஹீம் நபி கிளம்பி சென்றுவிட்டார்கள்.
அதன்பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தார்கள். எவரோ தனது வீட்டிற்கு வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.
ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று தனது மனையிடம் கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.
மேலும் என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? என்று கேட்டார். நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று அவரிடம் சொன்னேன் என்று கூறினார்கள்.
அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம். உங்களுக்குத் தன் சார்பாகச் சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உங்களது நிலைப்படியை மாற்றிவிடுமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று பதிலளித்தார்.
அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் வந்தவர் வேறுயாருமில்லை. என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி அவர் எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துகொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்கள்.
இந்த சம்பவம் புகாரியில் 3364வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இதில் ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனைவிகளுக்கு இதில் முக்கிய படிப்பினை உள்ளது.
அதாவது தனது கணவர் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் திரட்டிவரும் பாருளாதாரத்தை திருப்தியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை போதுமாக்கி கொள்ள வேண்டும். அந்த வருமானத்திற்குள் தனது குடும்ப செலவை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அமைத்துக் கொள்வவள்தான் சிறந்த மனைவி.
இஸ்மாயில் நபியின் மனைவியிடம் இத்தகைய பண்புகள் இல்லை. அவர்கள் போதுமென்ற மனத்தை பெறவில்லை. ஆகவேதான் அவரை விவாகரத்து செய்யுமாறு இப்ராஹீம் நபி கட்டளையிட்டார்கள்.
இதே நடைமுறையைத்தான் முஹம்மது நபியவர்களும் கடைபிடித்தார்கள்.
நபியவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்பது மனைவிமார்கள். அந்தந்த மனைவிகளுக்குத் தேவையான பொருளாதாரத்தையும் நபியவர்கள் வழங்கினார்கள். ஆனால் அந்த பொருளாதாரம் தங்களுக்குப் போதவில்லை என்று முஃமின்களின் அன்னையர்கள் எண்ணினார்கள். இதனால் வீட்டுச் செலவிற்கான பாருளாதாரத்தை அதிகரித்துத் தருமாறு நபியவர்களிடம் வலியுறுத்தினார்கள்.
இதனால் நபியவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒரு மாத காலம் தங்களது மனைவிமார்களைவிட்டு பிரிந்திருந்தார்கள்.
இறுதியில் தனது மனைவிமார்களை அழைத்து நீங்கள் இவ்வுலக வாழ்வை விரும்பினால் உங்களுக்கு போதுமான பாெருளாதாரத்தை அழகிய முறையில் தந்தீர்கள் விடுவிக்கிறேன். அதாவது தலாக் செய்கிறேன். இல்லையெனில் நான் தரும் பொருளாதாரத்தை திருப்தியுடன் ஏற்றுக்கொள். இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
முஃமின்களின் அன்னையர் அனைவரும் இரண்டாவது நிபந்தனையை தேர்வு செய்தார்கள். நபியவர்கள் வழங்கும் பாருளாதாரத்தை திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள். அதன்பிறகு நபியவர்கள் தனது மனைவிமார்களுடன் இணைந்தார்கள்.
இந்த சம்பவம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. ஆக நாம் சிறந்த மனைவியாக இருக்க வேண்டுமென்றால் கணவனின் வருமானத்தை திருப்தியோடு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்.
கணவனுக்கு அறிவுரை
முதல் மனைவியை இஸ்மாயில் நபி விவாகரத்து செய்ததை முன்னர் பார்த்தேன். அதன்பிறகு ஜுர்ஹும் குலத்தாரிலே வேறொரு பெண்ணை இஸ்மாயில் நபி மணமுடித்துக் கொண்டார்கள்.
சில காலம் உருண்டோடியது. தனது மகனை சந்திப்பதற்காக மீண்டும் இப்ராஹீம் நபி மக்காவிற்கு வந்தார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை இந்த முறையும் அங்கு காணவில்லை.
ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்கள்.
அதற்கு அவர் எங்கிருந்து வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
இருவருக்குமிடையில் நடந்த உரையாடல்
இப்ராஹீம் நபி : நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நலம்தானா? உங்களுடைய வாழ்க்கை நிலையும் பொருளாதார நிலையும் எவ்வாறு உள்ளது?
இஸ்மாயில் நபியின் மனைவி : நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்.
இவ்வாறு கூறிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
இப்ராஹீம் நபி : உங்கள் உணவு எது?
இஸ்மாயில் நபியின் மனைவி : இறைச்சி
இப்றாஹீம் நபி : உஙகள் பானம் எது?
இஸ்மாயில் நபியின் மனைவி : தண்ணீர்
அதன்பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இப்ராஹீம் : உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் கூறுங்கள். அவரது நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி நான் சொன்னதாக சொல்லுங்கள்.
இவ்வாறு கூறிவிட்டு இப்றாஹீம் நபி கிளம்பி சென்றுவிட்டார்கள்.
அதன்பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள்.
அப்போது தனது மனைவியிடம் நமது வீட்டிற்கு எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார்.
(பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நலமுடன் வளத்துடனும் இருக்கிறோம் என்று தெரிவித்தேன்.
அவர் உனக்கு அறிவுரை ஏதாவது சொன்னாரா? என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உங்களின் நிலைப்படியை உறுதிப் படுத்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி. உன்னை விவாகரத்து செய்யாமல் அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார் என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3364.
இந்த இரண்டாம் சம்பவத்தில் கணவனுக்கான முக்கிய அறிவுரை உள்ளது. அதாவது நமது மனைவி நமது வருமானத்தைப் பொருத்திக்கொண்டால் அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவரிடமுள்ள மற்ற குறைகளை கண்டுகொள்ளக்கூடாது.
இவ்வுலகில் மனிதர்களாக பிறந்த அனைவரிடமும் குறைகள் இருக்கும். குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது. அதிலும் பெண்கள் விலா எலும்பில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடத்திலிருந்து கணவன்மார்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்யும். இது இறைவனின் நியதி.
நமது மனைவி நமது வருமானத்தில் திருப்தியோடு நடந்து கொண்டால் அவருடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மனைவி மூலமாக ஏற்படும் மற்ற சங்கங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் இப்றாஹீம் நபி தனது மகனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். இதை கணவன்மார்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
6) இப்ராஹீம் நபியின் தியாகம்
இப்றாஹிம் நபி இஸ்லாத்திற்காக பல்வேறு தியாகங்கள் புரிந்துள்ளார்கள்.
இதைப்பற்றி இறைவன் கூறும்போது :
இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.
(அல்குர்ஆன் 2:124)
கட்டுப்படுவீரராக!” என அவரிடம் இறைவன் கூறியபோது, “நான் அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினார்.
அல் குர்ஆன் - 2 : 131
இப்றாஹிம் நபிக்கு இறைவன் பல்வேறு சோதனைகளை வழங்கினான். அனைத்து சோதனைகளையும் அவர்கள் சாதனைகளாக மாற்றினார்கள். இதில் அவர்களின் பொறுமையும் தியாக மனப்பான்மையும் நமக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.
இப்றாஹிம் நபி செய்த தியாகத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்.
தந்தையை பிரிதல்
இப்ராஹீம் நபி தனது தந்தையின் மீது அளப்பரிய பாசத்தை வைத்திருந்தார்கள். தனது தந்தையை அதிகமாக நேசித்தார்கள். இருந்தபோதிலும் இஸ்லாத்திற்காக தனது தந்தையை தியாகம் செய்தார்கள்.
ஆஸருக்கு தனது மகன் இப்ராஹீம் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரம் பிடிக்கவில்லை. தொடர்ந்து இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்றும் மிரட்டுகிறார்.
ஆதலால் தனது தந்தையின் வீட்டிலிருந்து இப்ராஹீம் நபி வெளியேறினார்கள்.
நாம் வாழும் தற்காலத்தில் வீட்டைவிட்டு வெளியேறினால் பிழைப்பதற்கு ஆயிரத்தெட்டு வழிகள் உண்டு. ஆனால் இப்ராஹீம் நபியின் காலம் அப்படிப்பட்டதல்ல. வெளியில் சென்று பிழைப்பது மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது. இருந்தபோதிலும் மார்க்கத்திற்காக இத்தகைய தியாகத்தை செய்கிறார்கள்.
உயிரை இழக்கத் துணிதல்
அதைப்போல் தனது சமுதாயத்தினரின் விரோதத்தையும் இப்றாஹிம் நபி சம்பாதித்துக் கொண்டார்கள்.
தனது சமுதாயத்தில் உள்ளவர்களிடம் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதனால் சமுதாயத்திலுள்ளவர்கள் இப்றாஹிம் நபியின் மீது கோபம் கொண்டார்கள். இறுதியில் இப்றாஹிம் நபியை நெருப்புக் குண்டத்தில் வீசுவதாக அச்சுறுத்தினார்கள்.
இருப்பினும் இப்றாஹிம் நபி சற்றும் அசரவில்லை. தனது உயிரைத் தியாகம் செய்ய முன் வந்தார்கள். ஆனால் அவர்களை இறைவன் காப்பாற்றினான்.
ஹிஜ்ரத் செய்தல்
அதன்பிறகு ஊரார் இப்றாஹிம் நபியை தங்களது ஊரைவிட்டு வெளியேற்றினார்கள்.
ஆகவே இப்றாஹிம் நபி மார்க்கத்திற்காக தனது தந்தையை, உறவினர்களை, சொத்துக்களை, ஊரார்களை விட்டு வெளியேறி சென்றார்கள்.
ஹிஜ்ரத் செய்வது மிகப்பெரும் தியாகமாகும். அதை மார்க்கத்திற்காக அவர்கள் மேற்கொண்டார்கள்.
மனைவியையும் மகனையும் பிரிதல்
இப்றாஹிம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அவர்கள். இவர்கள் மூலம் இப்றாஹிம் நபிக்கு இஸ்மாயில் என்ற குழந்தை பிறந்தது. அப்போது அவர்கள் ஷாம் தேசத்தில் வசித்து வந்தார்கள்.
தாய்பால் குடிக்கும் நிலையிலிருந்த குழந்தை இஸ்மாயீலையும் அவரது அன்னை ஹாஜரையும் ஆள் நடமாட்டம் இல்லாத புற்பூண்டுகள் முளைக்காத மக்கா எனும் பாலைவனத்தில் விட்டுவிட்டு வருமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
இறைவனின் அனைத்து கட்டளைகளையும் அப்படியே நிறைவேற்றும் இப்றாஹிம் நபி இந்த கட்டளையையும் நிறைவேற்றுவதற்காக கிளம்பினார்.
பல்லாண்டுகள் தவமிருந்து பெற்ற மகனையும் மனைவியையும் மக்காவில் விட்டுவிட்டு சென்றார்கள் இப்ராஹீம் நபி.
மகனை அறுக்க முன்வருதல்
அதன்பிறகு இஸ்மாயீல் நபி வளர்ந்து இளமைப் பருவத்தை அடைகிறார்கள். தனது மகனை சந்திப்பதற்காக பல்லாண்டுகள் கழித்து இப்ராஹீம் நபி மக்காவிற்கு வருகிறார்கள். அந்நேரத்தில் இறைவனிடமிருந்து கனவின் மூலம் வஹீ வருகிறது. தனது மகனை அறுக்குமாறு அதில் கட்டளையிடப்படுகிறது.
இறைவனின் இந்த கட்டளையையும் ஏற்று தனது மகனை அறுப்பதற்காக இப்ராஹீம் நபி முனைகிறார்கள். அப்போது இறைவன் அவர்களை தடுத்து அவர்களுக்கு பலிப்பிராணியை வழங்குமாறு கட்டளையிட்டான்.
ஆக இப்றாஹீம் நபி செய்த தியாகங்கள் அளப்பெரியது.
தனது தந்தையை பிரிதல்
மனைவியை பிரிதல்
மகனைப் பிரிதல்
வீட்டை விட்டு வெளியேறுதல்
நாட்டை விட்டு வெளியேறி ஹிஜ்ரத் செய்தல்
நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு தனது உயிரை பணயம் வைத்தல்
தனது மகனின் உயிரை இளப்பதற்கு துணிதல்
இவ்வாறு மிகப்பெரும் தியாகத்தை இப்றாஹிம் நபி செய்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களை தியாகத் தந்தை என்று அழைக்கிறோம்.
அதுபோல அவர்களது குடும்பத்தினரும் ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர்.
மனைவியின் தியாகம்
இப்றாஹிமை நபியாக ஏற்றுக்கொண்ட முதல் பெண் அன்னை சாராதான். அப்போது அவர்கள் இருவர் மட்டும்தான் முஸ்லிம்களாக இருந்தனர். இப்றாஹிம் நபியை அவரது சமுதாயத்தினர் நாட்டைவிட்டு வெளியேற்றும் போது மார்க்கத்திற்காக தனது கணவரோடு சேர்ந்து அன்னை சாராவும் ஹிஜ்ரத் செய்தார்கள். இது மிகப்பெரும் தியாகமாகும்.
அன்னை ஹாஜரா அவர்கள் இஸ்லாத்திற்காக தனது கணவனை பிரிந்திருக்கிறார்கள். கணவனை பிரிந்திருப்பது மிகவும் சிரமமான ஒன்று. அதிலும் ஆள் நடமாட்டமும் பூண்டுகளும் இல்லாத பாலைவனத்தில் தன்னந்தனியாக இருப்பது சிரமத்திலும் சிரமம்.
கைக்குழந்தை இஸ்மாயீலையும் தன்னையும் விட்டுவிட்டு தனது கணவர் திரும்பிப் பார்க்காமல் செல்கிறார்.
அப்போது ஹாஜர், “இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்கே போகிறீர்கள்? கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள் அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள் அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
இறைவனின் கட்டளை என்று தெரிந்ததும் அதை அப்படியே பொருந்திக் கொண்டார்கள். அல்லாஹ்விற்காக தனது கணவனை பிரிந்திருப்பதையும் பாலைவனத்தில் வசிப்பதையும் பொருந்திக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உயிருக்கு ஆச்சரியம் இல்லாத இத்தகைய தியாகத்தை ஹாஜர் என்ற பெண்மணி செய்ததற்கும் அச்சரியம் அளிக்கிறது. இது மகத்தான தியாகம்தான்.
இப்றாஹிமின் மகனான இஸ்மாயீல் தனது உயிரை தியாகம் செய்ய முன்வந்தார்கள். உயிர்த்தியாகம்தான் அளப்பெரியது. அந்தஸ்துகளில் ஷஹீது அந்தஸ்தே உயர்ந்தது. இறைவனின் கட்டளைக்காக தனது கழுத்தை முன் வைத்தவர் இஸ்மாயீல் நபி. இவ்வாறு ஒட்டுமொத்த குடும்பமும் தியாகக் குடும்பமாக விளங்கியது.
இவர்களது குடும்ப தியாகத்தின் காரணமாகத்தான் சம்ஸம் என்ற அற்புத நீரூற்று நமக்குக் கிடைத்தது. இன்று வரையிலும் நாம் அதை அள்ளிப் பருகிக்கொண்டிருக்கிறோம். அதைப்போல் அவர்களது வாழ்க்கைப் படிப்பினைகளையும் நாம் அள்ளிப் பருகக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அதுபாேல ஹஜ் என்ற அருமையான வணக்க வழிபாடும் இப்றாஹிம் நபியின் குடும்பத்தினால் ஏற்பட்டதாகும். ஸஃபா மர்வா தொங்கோட்டமும் குர்பானி பிராணியும் இப்ராஹிம் நபியின் குடும்ப தியாகத்தை நினைவு கூறும் விதமாக கட்டளையிடப்பட்டுள்ளது.
7) இப்றாஹிம் நபியின் பிற செயல்கள்
இப்றாஹிம் நபியின் பிரார்த்தனையால் சிறப்புற்ற மக்கா
இப்றாஹிம் நபி தனது முதல் மனைவியான சாராவுடனும் அவரது மகனான இஸ்ஹாக்குடனும் ஃபாலஸ்தீனத்தில் வசித்து வந்தார். அதைப்போல் அவர்களது இரண்டாவது மனைவியான ஹாஜரும் அவரது முதல் மகனான இஸ்மாயீலையும் மக்காவில் விட்டுவிட்டு வந்தார்கள். அதன்பிறகு அவர்கள் மக்காவை சிறப்புப்படுத்துமாறு துஆ செய்தார்கள்.
“என் இறைவனே!(மக்கா எனும்) இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “யார் (என்னை) மறுக்கிறாரோ அவரையும் சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன். தள்ளுவேன். அது சேருமிடத்தில் கெட்டது” என்று அவன் கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 126
இப்றாஹிம் நபியின் இந்த பிரார்த்தனையால்தான் மக்காவிற்கு சில சிறப்புகள் வந்தன. அதனால்தான் மக்கா இன்றுவரையிலும் புனித நகரமாகத் திகழ்கிறது. இனிமேலும் திகழும். தஜ்ஜால் எனும் குழப்பவாதியால் நுழையமுடியாத அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பூமியாக மக்கா உள்ளது. அங்குள்ள உணவுகள் பரக்கத் நிறைந்ததாக உள்ளது. சம்ஸம் எனும் நீரூற்று அற்புத நீரூற்றாக உள்ளது. இதை நபியவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (அளவைகளான) "ஸௌ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம்) ஏற்படப்) பிரார்த்திக்கிறேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2641.
கஅபாவை புணர் நிர்மாணம் செய்தல்
இப்றாஹிம் நபியின் பிரார்த்தனையால் மக்காவில் ஜுர்ஹும் குலத்தார் குடியேறினார்கள். சம்ஸம் எனும் வற்றாத நீரூற்று பொங்கியெழுந்தது. மக்கள் வாழ்வதற்கு சிறந்த பூமியாக மாறியது.
அதன்பிறகு நாட்கள் உருண்டோடியது. அன்னனா ஹாஜர் மரணமடைந்தார்கள். இஸ்மாயீல் நபி வளர்ந்து திருமணம் முடித்தார்கள். அந்த பெண் மோசமானவளாக இருந்தார். ஆகவே இப்றாஹிம் நபி அந்த பெண்ணை தலாக் விடுமாறு கட்டளையிட்டார்கள். தந்தையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு இஸ்மாயீல் நபி தனது முதல் மனைவியை தலாக் விடுகிறார்கள். பின்னர் வேறொரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்த பெண் சிறப்பிற்குரியவராக இருந்தார். ஆகவே அப்பெண்ணுடன் நல்லமுறையில் வாழ்க்கையை நடத்துமாறு இப்ராஹீம் நபி அறிவுறுத்தினார்கள்.
பின்னர் பல்லாண்டுகள் கழிந்தது. அப்போது இப்ராஹீம் நபி பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். மக்காவில் சேதமடைந்த கஅபத்துல்லாஹ்வை புணர்நிர்மானம் செய்யுமாறு இப்றாஹிம் நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான். ஆகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மக்காவிற்கு வருகை தந்தார்கள். இதுபற்றி இறைவன் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
“தவாஃப் செய்வோர், இஃதிகாஃப் இருப்போர் மற்றும் ருகூவு, ஸஜ்தா செய்வோர்களுக்காக எனது ஆலயத்தைத் தூய்மையாக்குங்கள்” என இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் வாக்குறுதி வாங்கினோம். (அல் குர்ஆன் - 2 : 125)
(நபியே!) அந்த ஆலயத்தின் இடத்தில் இப்ராஹீமை நாம் தங்க வைத்ததை நினைவூட்டுவீராக! “எனக்கு எதையும் இணையாக்காதீர்! (என்று அவருக்குக் கூறினோம்.)
அல் குர்ஆன் - 22 : 26
மேற்கண்ட வசனத்தின் மூலம் கஅபத்துல்லாஹ்வை ஏன் கட்ட வேண்டும் என்பதற்கான காரணத்தை இறைவன் தெரிவிக்கிறான். அவையாவன
ஹஜ் மற்றும் உம்ராக்களில் தவாஃப் செய்தல்
அங்கு இஃதிகாஃப் இருந்து அல்லாஹ்வை நினைவு கூர்தல்
ருகூஉ, ஸஜ்தா செய்து தொழுகையை நிலைநாட்டுதல்
இம்மூன்று காரணங்களுக்காக இந்த பள்ளிவாசலை கட்டுமாறு இறைவன் பணிக்கிறான். இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு கஅபத்துல்லாஹ்வை கட்டுவதற்காக இப்றாஹீம் நபி பல மைல்கள் கடந்து மக்காவிற்கு வந்தார்கள். உதவிக்கு தனது மகன் இஸ்மாயீலையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து கஅபதுல்லாஹ்வை கட்ட ஆரம்பித்தார்கள். இதுபற்றி நபியவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை இஸ்மாயீலை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் சம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்தின் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாடுகள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள் (பாசத்தோடு நெகிழ்வோடும் வரவேற்றார்கள்).
பிறகு இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான் எனறு சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், 'உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்' என்று சொன்னார்கள்.
அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா? என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள் உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள்.
அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள்.
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (அல் குர்ஆன் - 2 : 127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பார் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய் (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3364.
இவ்வாறு இருவரும் கபாவை புணர் நிர்மாணம் செய்தார்கள். அதன்பிறகு இப்ராஹீம் நபி சில பிரார்த்தனைகளைப் புரிந்தார்கள்.
رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةًۭ مُّسْلِمَةًۭ لَوَ مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ⭘
“எங்கள் இறைவனே!எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
அல் குர்ஆன் - 2 : 128
رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولًۭا مِّنۡهُمۡ يَتْلُوا۟ عَلَيْهِمۡ ءَايَـٰتِكَ وَيُمُعَلِكَ ۚ
“எங்கள் இறைவனே!(எங்கள் தலைமுறையினரான) அவர்களிடமிருந்து ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மையாக்குவார். நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் கூறினார்.)
அல் குர்ஆன் - 2 : 129
இதிலிருந்து நாம் பெரும் படிப்பினை
இறைவனின் கட்டளையினால் கஅபதுல்லாஹ்வை இப்றாஹிம் நபி கட்டினார்கள். இருந்தபோதும் இறைவனிடம், இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய் பிரார்த்திக்கிறார்கள். இதுதான் பணிவின் உச்சகட்டம். நாம் உள்ளச்சத்தோடும் முழு மனதோடும் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும் 'அந்த வணக்க வழிபாட்டை ஏற்றுக்கொள்வாயாக!' என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசலை கட்டி முடித்த பிறகு, இறைவா! எங்களுக்கான வழிபாட்டு முறைகளை கற்றுத்தருவாயாக! என்று இப்றாஹிம் நபி பிரார்த்திக்கிறார்கள். நாம் நமது வழிபாடுகளை இறைவன் காட்டித்தந்த வழியில் அமைக்க வேண்டும். அதைத்தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். அதற்கு மாற்றமாக உள்ள விஷயங்கள் பித்அத்களாக கருதப்படும். அவற்றை இறைவன் புறக்கணித்து அதற்கு மறுமையில் தண்டனையும் தருவான்.
மேலும் எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாக ஆக்குவாயாக! என்று இப்ராஹீம் நபி பிரார்த்தித்தார்கள். இதிலும் தங்களது வருங்கால சந்ததிக்கும் சேர்த்து இப்ராஹீம் நபி பிரார்த்தித்த முன்மாதிரி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்திலிருந்து இறைவன் நமக்கு ஒரு கட்டளையையும் இடுகிறான்.
(கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், பாதுகாப்புத் தலமாகவும் நாம் ஆக்கியதை நினைத்துப் பாருங்கள். மேலும் 'மகாமு இப்ராஹீமை'த் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். 2:125
இப்றாஹீம் நபி கஅபதுல்லாஹ்வை நின்று கட்டிய இடமான மகாமு இப்றாஹிமில் நாம் தொழ வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துகிறான். அதனால்தான் உம்ராவின் வழிமுறைகளில் ஒன்றாக மகாமு இப்றாஹிமில் தொழுவதை நபியவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1627.
இறந்தவர்களை எவ்வாறு உயிர்பிப்பாய்
"என் இறைவனே! இறந்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாய்!" என இப்ராஹீம் கூறியபோது, “நீர் நம்பவில்லையா?” என்று அவன் கேட்டான். "அவ்வாறில்லை! எனினும் என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காகத்தான்" என்று அவர் கூறினார். “நான்கு பறவைகளை எடுத்து, அவற்றை உம்மிடம் வருமாறு பழக்கிக் கொள்வீராக! பகுதியை வைப்பீராக! பிறகு அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாக வந்து சேரும். அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (இறைவன்) கூறினான்.
அல் குர்ஆன் - 2 : 260
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்டவர்களுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை) விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி யுடையவர்கள் ஆவோம்.
(எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம(அலை) அவர்கள், 'என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு' என்று கேட்டபோது அல்லாஹ்? 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டான்.
அவர்கள், 'ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3372.
விருந்தினரை கண்ணியப்படுத்துதல்
இஸ்லாமிய மார்க்கம் விருந்தினரை கண்ணியப்படுத்துமாறு வலியுறுத்துகிறது. அதை ஈமானின் தன்மையாக வருணிக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6138.
இந்தவகையில் இப்றாஹிம் நபி விருந்தினரை சிறந்த முறையில் உபசரிக்கக்கூடியவராக இருந்தார். அந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
இப்ராஹீம் நபிக்கு பல்லாண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதனால் குழந்தை பாக்கியத்தை வேண்டி இறைவனிடம் அதிகமாக இப்றாஹிம் நபி துஆ செய்தார்கள். ஆகவே அல்லாஹ் இப்றாஹிம் நபிக்கு ஹாஜர் மூலமாக இஸ்மாயீல் என்ற குழந்தையை வழங்கினான்.
இப்றாஹிம் நபி அத்தோடு நிற்கவில்லை. தனது முதல் மனைவியான சாரா மூலமாகவும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடினர். ஆகவே இறைவன் அவர்களுக்கு இஸ்ஹாக் என்ற குழந்தையை வழங்க முடிவு செய்தான். இந்த நற்செய்தியை மலர்கள் மூலமாக இப்றாஹிம் நபிக்கு தெரிவிக்கிறேன். இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
இப்ராஹீமிடம் நமது தூதர்களான (மலக்குமார்கள் மனித உருவத்தில்) நற்செய்தியைக் கொண்டு வந்தனர். மலக்குமார்கள் (இப்றாஹிம் நபியிடம்) ஸலாம் கூறினர். அவரும் பதில் ஸலாம் கூறினார். (வந்திருப்பவர்களை மனிதர்கள் என்று நினைத்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) சற்றும் தாமதிக்காமல், பொறித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
(உண்பதற்காக) அதனை நோக்கி அவர்களின் கைகள் செல்லாததைக் கண்டதும் அவர்களை வினோதமானவர்களாகக் கண்டு, அவர்களைப் பற்றி மனதிற்குள் பயந்தார்.
(அதற்கு மலக்குகள்) “அஞ்சாதீர்! சாப்பிடவில்லை. மேலும்) நாங்கள் லூத்தின் சமுதாயத்தை நோக்கி (அவர்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினர்.
(இத்தகைய உரையாடல் நடைபெறும்போது) இப்ராஹீமின் மனைவியும் அங்கு நின்றிருந்தார். அவர் சிரித்தார். அப்போது அவருக்கு இஸ்ஹாக் என்ற மகன் பிறப்பது பற்றியும், இஸ்ஹாக்கிற்குப் பின் யஃகூப் என்ற பேரன் பிறப்பது பற்றியும் மலக்குகள் நற்செய்தி கூறினார்.
(அதற்கு சாரா) “என் கைச்சேதமே! நான் கிழவியாகவும், என் கணவராகிய இவர் வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? ஆச்சரியமான விஷயமே!” என்று கூறினார்.
“அல்லாஹ்வின் கட்டளையில் நீர் ஆச்சரியப்படுகிறீரா? (இப்ராஹீமின்) குடும்பத்தாரே! உண்டாகட்டும்! அவன் புகழுக்குரியவன்; மகிமை மிக்கவன்” (என வானவர்கள் கூறினர்.)
இப்ராஹீமிடமிருந்து பயம் நீங்கி, அவரிடம் நற்செய்தி வந்தபோது, லூத்தின் சமுதாயத்தைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
இப்ராஹீம் சகிப்புத் தன்மை கொண்டவர்; இரக்கமுடையவர்; (அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக் கூடியவர்.
"இப்ராஹீமே! இ(வ்வாறு வாதிப்ப)தைத் தவிர்ப்பீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தடுக்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்" (என்று கூறப்பட்டது.)
அல்குர்ஆன் 11: 69-76
மேற்கூறிய வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினையாவது :
இப்றாஹிம் நபி விருந்தினர்களை சிறந்த முறையில் கவனிக்கக்கூடியவராக இருந்தார். ஆகவேதான் அவர்கள் தன்னிடத்திலுள்ள சிறந்த உணவான இறைச்சியை கொண்டு வந்தார்கள். அதையும் பொறித்து கொண்டு வந்தார்கள். விருந்தினர்களின் மனம் குளிர வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்கள்.
இதில் மலக்குகளின் தன்மைகளும் வெளிப்படுகின்றன. மலக்குகள் மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் எந்நேரமும் இறைவனை வணங்கிக் கொண்டே இருப்பார்கள். மனிதர்களுக்கும் மலக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. அதில் ஒன்றுதான் இறைச்சி சாப்பிடுதல்.
மிகவும் வயதான நிலையில் இருக்கும் அன்னை சாராவிற்கு குழந்தை பிறக்கப் போவதாக குழந்தைகள் அறிவிக்கிறார்கள். இதனைக் கேட்டதும் அன்னை சாரா ஆச்சரியமடைகிறார்கள். கிழவியான எனக்கு எப்படி குழந்தைப் பிறக்கும்? என்று கேட்கிறார்கள். இறைவனால் அனைத்தும் முடியும். ஆகவே இறைவனின் கட்டளையை ஆச்சரியப்படுத்தக்கூடாது என்று மலக்குகள் அன்னை சாராவிற்கு போதிக்கிறார்கள்.
அதன்பிறகு லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்படுவது பற்றி மலக்குகளிடம் இப்றாஹீம் நபி வாதிட்டார்கள். அந்த சமூக மக்களின் மீது இப்ராஹீம் நபி இரக்கம் காட்டினார்கள். ஆனால் இறைவனின் கட்டளைக்கு எதிராக இவ்வாறு வாதிடுவது கூடாது என்று இறைவன் கூறியதும் தனது வாதத்திலிருந்து பின்வாங்கிவிட்டார்கள். இதுதான் ஒரு முஃமினின் நிலையாக இருக்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக்கூடியவர்கள்தான். இறைக்கட்டளை நம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டால் நாம் உடனடியாக தவறிலிருந்து விலகக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதில் இப்ராஹீம் நபிக்கு மூன்று சிறப்பு பெயர்களை இறைவன் வழங்குகிறான். 1) சகிப்புத்தன்மை மிக்கவர். (ஹலீம்) 2) இரக்கமுள்ளவர். (அவ்வாஹ்) 3) இறைவனை நோக்கி திரும்பக்கூடியவர். (முனீப்). இந்த மூன்று தன்மைகளை நாமும் பெற முயற்சிக்க வேண்டும்.
விருத்த சேதனம் செய்தல்
இஸ்லாமிய மார்க்கம் ஆண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு கத்னா (விருத்தசேதனம்) செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6297.
மேற்கூறப்பட்ட ஐந்தும் இறைத்தூதர்கள் பின்பற்றி வந்த இயற்கை மரபுகளாக இருந்தன. அவற்றில் விருத்தசேதனம் செய்யும் முறையை இப்ராஹீம் நபியே முதன்முதலாக ஆரம்பித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதுக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'கத்தூம்' என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும் என (அறிவிப்பாளர்) அபுஸ் ஸினாத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (இதன்படி 'கத்தூம்' எனுமிடத்தில் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்) எனப் பொருள் வரும்.)
ஸஹீஹ் புகாரி : 6298.
இத்தகைய வழிமுறைகளை நபியவர்களும் ஸஹாபாக்களும் கடைபிடித்தார்கள்.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?' என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன்' என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.
பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.
ஸஹீஹ் புகாரி : 6299.
இப்றாஹீம் நபி எண்பது வயதுக்கு மேல்தான் கத்னா செய்திருக்கிறார்கள். சஹாபாக்கள் பருவ வயதை அடைந்த பிறகு கத்னா செய்யும் பழக்கத்தை மேற்கொண்டார்கள். ஆகவே கத்னா செய்வதற்கு குறிப்பிட்ட நாட்கள் வரையறை கிடையாது. பருவ வயதிற்கு முன்பும் பின்பும் எப்போது வேண்டுமானாலும் கத்னா செய்து கொள்ளலாம்.
அதைப்போல் கத்னா செய்வதால் ஏராளமான நன்மைகள் இருப்பதாக தற்காலத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பாலுறுப்பில் நோய்கள் வராமல் இருக்கும். மேலும் இது இல்லறத்திற்கும் நன்மை பயப்பதாகக் கூறுகிறார்கள்.
இப்றாஹிம் நபி எண்பது வயதுக்கு மேல் கத்னா செய்தார்கள். அதன்பிறகே அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். ஆகவே கத்னா செய்வது இல்லறத்திற்கு அவசியமானது என்பதை இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
8) இப்ராஹீம் நபியின் புகழ்
இப்றாஹிம் நபியின் வாழ்க்கையில் நமக்கான முன்மாதிரிகள் ஏராளமாக உள்ளன. அவர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் இன்று பலவிதமான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
நாம் இறுதியாக இப்றாஹிம் நபியின் புகழைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இப்றாஹிம் நபி தனது இறைவனிடம் ஏராளமான பிரார்த்தனைகளை புரிந்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் கீழ்க்கண்ட பிரார்த்தனை.
என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! பின்வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (26:85)
எதிர்கால சந்ததியினர் தன்னைப் பற்றி நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்று இப்றாஹிம் நபி பிரார்த்தித்தார்கள். அதை இறைவனும் அங்கீகரித்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
(அல் குர்ஆன் - 37 : 108)
(இப்றாஹீமின் குடும்பத்தாருக்கு) நமது அருளை வழங்கினோம். (பின்வருவோரிடம்) அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரையும் ஏற்படுத்தினோம்.
(அல் குர்ஆன் - 19 : 50)
ஆக இப்றாஹிம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி, அதை மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களின் புகழை நிலைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்.
No comments:
Post a Comment