வயிறு நிரம்ப உண்ணாதீர்கள்
புத்தகம் டவுன்லோடு செய்ய
இஸ்லாமிய மார்க்கம் ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது மனிதனுக்கு தேவையானதை கட்டாயமாக்கும். மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதை தடை செய்யும்.
அந்தவகையில் மனித உடலுக்கு உணவு உண்பது அவசியத் தேவையாகும். ஆகவே உண்பதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது.
அதேபோல் வயிறுமுட்ட உண்பது மனித உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிப்பதால் அதை மோசமான ஒரு பண்பாக இஸ்லாம் அறிவிக்கிறது.
மூன்றில் ஒரு பங்கு உண்பது சிறந்தது
حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكِنَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ جَابِرٍ الطَّائِيُّ قَالَ : سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ مَعْدِي كَرِبَ الْكِنْدِيَّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " مَا مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أُكُلَاتٍ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِنَفَسِهِ ".
அல்-மிக்தாம் இப்னு மஅதி கரீப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: "ஆதாமின் மகன் தனது வயிற்றை விட மோசமான எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவதில்லை. ஆதாமின் மகன் தனது முதுகை நேராக்க ஒரு சில வாய்கள் சாப்பிட்டால் போதும்இ ஆனால் அவன் (வயிற்றை நிரப்ப) வேண்டியிருந்தால்இ மூன்றில் ஒரு பங்கு அவரது உணவுக்கும்இ மூன்றில் ஒரு பங்கு அவரது பானத்திற்கும்இ மூன்றில் ஒரு பங்கு அவரது சுவாசத்திற்கும்."
முஸ்னது அஹமது 17186
இந்த நபிமொழி வயிறு நிரம்ப சாப்பிடுவதை தடை செய்கிறது. அவ்வாறு வயிறு நிரம்ப சாப்பிடுவது மோசமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் வயிறு நிரம்ப சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதிகளை நபியவர்கள் நமக்கு விளக்கியிருக்கிறார்கள்.
மதியின்மையை ஏற்படுத்தும்
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
"அறிந்துகொள்ளுங்கள்! எனக்குக் குர்ஆன் எனும் வேதமும் அத்துடன் அதுபோன்ற ஒன்றும் (ஹதீஸும்) கொடுக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுங்கள்! வயிறு நிரம்ப உண்டு வாழும் ஒருவர் (செல்வச் செருக்காலும்இ மதியின்மையாலும்) தனது சொகுசு இருக்கையில் அமர்ந்தவாறு. "நீங்கள் இந்தக் குர்ஆனை மட்டுமே அவசியம் பின்பற்றுங்கள். அதில் ஹலால் - அனுமதிக்கப்பட்டதாக நீங்கள் காண்பதை (மட்டும் அனுமதிக்கப்பட்டதாக கருதுங்கள்! அதில் ஹராம் - தடை செய்யப்பட்டதாக நீங்கள் காண்பதை (மட்டும்) தடை செய்யப் பட்டதாகக் கருதுங்கள்" என்று கூறும் காலம் நெருங்கிவிட்டது.
உண்மை நிலை யாதெனில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தடை ஆணை பிறப்பிப்பது அல்லாஹ் தடையாணை பிறப்பிப்பது போன்றதாகும்.
அறிந்துகொள்ளுங்கள்! நாட்டுக் கழுதையின் இறைச்சியும்இ கோரைப் பற்கள் உள்ள விலங்குகளும்இ (இஸ்லாமிய ஆட்சிக்குச் கீழ்) ஒப்பந்தம் செய்துகொண்ட (பிற மதத்த)வர்கள் தொலைத்தும் கண்டெடுக்கப்பட்ட பொருளும் உங்களுக்கு ஹலால் - ஆகுமானவை அல்ல. ஆனால் (கண்டெடுக்கப்பட்ட) பொருள் தேவையில்லை எனப் பொருளுக்குச் சொந்தக்காரர் கைவிட்டிருந்தால் அதனை பயன்படுத்தலாம்.
ஒரு சமூகத்தாரிடம் (விருந்தாளியாக) சென்றவருக்கு விருந்தோம்பல் செய்வது அச்சமூகத்தின் மீது கடமையாகும். அவர்கள் அவருக்கு விருந்தோம்பவில்லையானால்இ அச்சமூகத்திடமிருந்த தன்னுடைய விருந்து உபசரிப்பிற்குத் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ள அம்மனிதருக்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள் இதை மிக்தாம் பின் மஅதீ கரிப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் (3988)இ இக்கருத்தமைந்த ஹதீஸ் தாரிமீ (1ஃ153 ஹ.எ.586)இ இப்னு மாஜா (12) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
மிஷ்காத்துல் மஸாபீஹ் 163
அல்லாஹ்வின் வேதத்தை உயர்த்தி பிடித்து நபிவழியைப் புறக்கணிக்கக்கூடியவன் வயிறுமுட்ட உண்பவனாக இருப்பான் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ஹலாலை ஹராமாகவும்இ ஹராமை ஹலாலாகவும் மாற்றுபவன் வயிறுமுட்ட உண்பவனாக இருப்பான் என்பதையும் நபிகளார் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
ஆக இதிலிருந்து வயிறுமுட்ட உண்பது மார்க்கத்திற்கு முரணாக செல்ல வைக்கும் என்பதை நபிகளார் உணர்த்தியிருக்கிறார்கள்.
மோசமானவர்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள்இ நான் யாரிடையே அனுப்பப்பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டுஇ -மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களாஇ இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்-
"பிறகு அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள். சாட்சியமளிக்கும்படி கோரப்படுவதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4959.
பிற்காலத்தில் மோசமான மனிதர்கள் தோன்றுவார்கள். அவர்கள் சாட்சியம் விஷயத்தில் தானாக முன்வருவார்கள் என்று நபிகளார் கூறி அவ்வாறு இருப்பவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள் என்று நபிகளார் தெரிவிக்கிறார்கள். இதன்மூலம் உண்டு கொழுப்பது நற்குணங்களை பாதிக்கும் என்பது தெரிகிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர்இ 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர்இ 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர்இ 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்இ '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.
ஸஹீஹ் புகாரி : 4817.
மேற்கூறிய நபிமொழியில் வயிறுகளில் காெழுப்பை அதிகம் சுமப்பவர்கள் தீமையிலிருந்து திருந்தமாட்டார்கள் என்பதை தெரிவிக்கிறது.
நரகவாசி
ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக்கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்இ) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
ஸஹீஹ் புகாரி : 4918.
நரகவாசிகளின் பண்புகளைக் குறித்து நபிகளார் கூறுகையில் அவர்கள் உண்டு கொழுத்திருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இதன்மூலமும் உண்டு கொழுப்பதை நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அல்லாஹ்விடம் மதிப்பிருக்காது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 4729.
உடல் பருத்த மனிதன் அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பையும் பெற்றிருக்கமாட்டான் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். ஏனெனில் மேலே கூறியது போன்று அவர்கள் மோசமானவர்களாகவும் தவறிலிருந்து திருந்தாதவர்களாகவும் இருப்பார்கள். ஆகவேதான் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மதிப்பிருக்காது
காஃபிரின் பண்பு
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :
ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள்இ 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5397.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைமறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார்.
பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.
மறுநாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடஇ அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோதுஇ அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4189.
இந்த நபிமொழிகள் இறைநம்பிக்கையாளர்கள் குறைவாக சாப்பிடுவார்கள் என்பதையும் இறைமறுப்பாளர்கள்தான் வயிறுமுட்ட சாப்பிடுவார்கள் என்பதையும் அறிவிக்கிறது.
இதற்கு மாற்றமான கருத்து கூறுபவர்கள் பின்வரும் சம்பவத்தை முன்வைக்கிறார்கள்.
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள் :
(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி)இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)' என்று கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 5395.
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்கள் :
இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவேஇ (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார்.
இப்னு உமர்(ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5393.
மேலே நாம் கூறிய இரண்டு செய்திகளும் நபிகளார் கூறிய பொன்மாெழிகள். இங்கே இடம்பெற்றிருக்கும் இரண்டு சம்பவங்களும் ஒரு சாதாரண முஸ்லிம் கூறிய வார்த்தைகள். அவரது ஈமானை அல்லாஹ்வே நன்கறிவான். ஒரு முஸ்லிமின் வார்த்தையை வைத்து நபிகளாரின் வார்த்தையை விடமுடியாது.
அதுமட்டுமில்லாமல் அந்த முஸ்லிம் கூறியதை விதிவிலக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதை விதியாக எடுத்துக் கொள்ளமுடியாது.
பொதுவிதியானது ஒரு முஃமின் ஏழு குடலில் சாப்பிடமாட்டான் என்பதுதான்
அதிகமாக உண்ண வைத்து ஷைத்தான் வழிகெடுப்பான்
வயிறு நிரம்ப உண்ணக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக ஆதம்நபியின் வரலாறு அமைந்துள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்துஇ தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
-ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
வயிறைப் பொறுத்தவரை முழுவதுமாக அதை நிரப்புவது வெறுக்கத்தக்கது. ஆனாலும் அவ்வாறு நிரப்புமாறு ஷைத்தான் துண்டிவிடுவான். அதிலிருந்து மீள்வது சற்று சிரமம் என்பதை மேற்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது.
அதிகமாக உண்டதால் தோல்வி
அதேபோல் அதிகமாக உண்பது பலவீனத்தை ஏற்படுத்தும். கோழைத்தனத்தை கொண்டுவரும்.
இதற்கு சான்றாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீல் வழித்தோன்றல்களின் தலைவர்களை நீர் அறியவில்லையா? அவர்கள் தமது நபியிடம்இ “எங்களுக்கு ஒரு மன்னரை நியமிப்பீராக! நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று கூறியபோதுஇ “உங்கள்மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்துவிடக் கூடும் அல்லவா?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள்இ “எங்கள் வீடுகளையும்இ எங்கள் பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கூறினர். அவர்கள்மீது போர் விதிக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர். அல்லாஹ்இ அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
அவர்களிடம்இ “அல்லாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை மன்னராக அனுப்பியுள்ளான்” என்று அவர்களுடைய நபி கூறினார். அதற்கவர்கள்இ “நாங்களே அவரைவிட ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் தகுதியானவர்களாக இருக்கும் நிலையில்இ எங்கள்மீது அவருக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும்? மேலும் அவருக்குச் செல்வ வளமும் அளிக்கப்படவில்லையே!” என்று கூறினர். உங்களைவிட அவரையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் வாரி வழங்கியுள்ளான். அல்லாஹ்இ தான் நாடியோருக்குத் தன்னிடமிருந்து ஆட்சியை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
“ஒரு பெட்டகம் உங்களிடம் வருவதே அவருடைய ஆட்சிக்கான சான்றாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து அமைதியும்இ மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனின் குடும்பத்தார் விட்டுச் சென்றவற்றில் மீதமிருப்பவையும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்றுள்ளது” என அவர்களிடம் அவர்களுடைய நபி கூறினார்.
தாலூத்இ படைகளுடன் புறப்பட்டபோதுஇ “ஓர் ஆற்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். யார் அதிலிருந்து பருகினாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. தனது கையால் ஒரு தடவை அள்ளியோரைத் தவிர அதை யார் அருந்தவில்லையோ அவரே என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார். அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும்இ அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது “இன்று ஜாலூத்துடனும்இ அவனது படையுடனும் (மோதுவதற்கு) எங்களிடம் சக்தியில்லை” என்று (ஆற்றில் அதிகமாக நீரருந்தியோர்) கூறினர். அல்லாஹ்வைச் சந்திக்கவிருக்கிறோம் என்று யார் உறுதியாக நம்பினார்களோ அத்தகையவர்கள்இ “எத்தனையோ சின்னஞ்சிறு படைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி பெரும்படைகளை வெற்றி கொண்டுள்ளன. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினர்.
அவர்கள் ஜாலூத்தையும்இ அவனது படைகளையும் எதிர்கொண்டபோதுஇ “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினர்.
அவர்கள்இ ஜாலூத்தின் படைகளை அல்லாஹ்வின் நாட்டப்படித் தோற்கடித்தனர். (தாலூத் படையிலிருந்த) தாவூத்இ ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் வழங்கிஇ தான் நாடியதை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா விட்டால் இவ்வுலகம் சீரழிந்து விடும். எனினும் அகிலத்தார்மீது அல்லாஹ் அருளுடையவன்.
அல்குர்ஆன் 2 : 246 - 251
வயிறு நிரம்ப நீர் அருந்தியவர் தங்களது பலத்தை இழந்தனர். கோழைகளாக மாறினர் என்பதை மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கிறது.
உமர் ரலியின் அறிவுரை
இவ்விஷயத்தில் நபிகளாரின் அறிவுறுத்தல்கள் தெளிவாக இருப்பதனால்தான் நபித்தோழர்களும் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.
ஒருமுறை உமர் (ரலி) அபூமூஸாவுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: யார் குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறாரோ அவரே மக்களில் சிறந்தவர். யார் குடிமக்களுக்குச் சிரமம் கொடுக்கிறாரோ அவரே மோசமானவர். சுகபோக வாழ்வு குறித்து உம்மை நான் எச்சரிக்கிறேன். நீர் அவ்வாறு வாழ முற்பட்டால் உமது பணியாளர்களும் அவ்வாறே வாழ நினைப்பார்கள். அவ்வாறெனில்இ நிலத்தில் பச்சைப் புல்லைக் கண்ட கால்நடைகளைப் போன்று உமது நிலையும் ஆகிவிடும். கொழுப்பதை மட்டுமே அவை விரும்பும். கொழுப்பு அதிகரித்தால் அவற்றுக்கு இறுதி நாள்கள் நெருங்கிவிடும்.
(அல்விலாயத் அலல் புல்தான்)
சித்த மருத்துவம் கூறுவது என்ன?
பொதுவாகஇ காலை உணவை அரசன்போலச் சாப்பிட வேண்டும்; மதிய வேளையில் சாமான்யனைப்போலச் சாப்பிட வேண்டும்;
இரவு நேரத்தில் பிச்சைக்காரனைப்போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
காலை வேளையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும். ஏனெனில்இ இரவு எட்டு மணிக்கோ அல்லது ஒன்பது மணிக்கோ நாம் இரவு உணவை முடித்துக்கொள்கிறோம். மறுபடி அடுத்த நாள் காலை எட்டு அல்லது எட்டரை மணிக்குத்தான் சாப்பிடுவோம்.
இடைப்பட்ட காலகட்டத்தில்இ நாம் ஒன்றுமே சாப்பிடுவதில்லை என்பதால் உடலில் சக்தி பெருமளவு குறைந்திருக்கும். அதோடுஇ காலையில் சுறுசுறுப்பாக உடல் ஏகப்பட்ட வேலைகளைக் கவனிக்கவேண்டி இருக்கிறது. அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றால்இ அதற்கு அதிகப்படியான சக்தி தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில்இ நம் காலை உணவு அமைய வேண்டும்.
காலை உணவைவிடஇ மதிய உணவைக் குறைவாக உண்ண வேண்டும். இரவில் எந்த வேலையும் செய்யப்போவதில்லை. ஓய்வுதான் எடுக்கப்போகிறோம் என்பதால்இ மிகக் குறைந்த அளவு உணவே போதுமானது. அதாவதுஇ நாம் தூங்கினாலும் உடலுக்குள் நடைபெறும் சுவாசம்இ ரத்த ஓட்டம்இ தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரித்தல் போன்ற அடிப்படை வேலைகளுக்கான சக்தி கிடைக்கும் வகையில் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
அதிக உணவு நோய்க்கு இடமளிக்கும்
மீதூண் விரும்பேல் என்று ஔவையார் கூறியுள்ளார்.
இதற்கு அதிகமான உணவை விரும்பாதே என்று அர்த்தமாகும.
மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும் உணவைப் பற்றியே சொல்கிறார்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.
ஆக அனைத்து ஆதாரங்களும் வயிறு நிரம்ப உண்பதை எச்சரிக்கை செய்கிறது.
மாற்று வாதமும் பதிலும்
முதல் வாதம்
இப்ராஹீமிடம் நமது தூதர்கள் நற்செய்தியைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஸலாம் கூறினர். அவரும் ஸலாம் கூறினார். அவர் சற்றும் தாமதிக்காமல்இ பொறித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
அல் குர்ஆன் - 11 : 69
இருவருக்காக ஒரு பொறித்த காளைக்கன்றையே இப்றாஹிம் நபி காெண்டு வந்துள்ளார்கள். ஆகவே இது வயிறு முட்ட உண்பதையே குறிக்கும்.
இரண்டாவது வாதம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குஇ "பசிதான் (காரணம்)இ அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டுஇ "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும்இ "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம்இ "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்இ "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டுஇ (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர்இ "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டுஇ (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம்இ "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4143.
மேற்கூறிய நபிமொழியில் நபி (ஸல்)இ அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி ஆகிய மூவரும் வயிறுமுட்ட உண்டார்கள் என்பது தெரிகிறது. ஆகவே நாம் வயிறுமுட்ட உண்ணலாம்.
இரண்டு வாதத்திற்குமான பதில்
மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் விருந்து தொடர்பானது. இந்த ஹதீஸ்களை வைத்து விருந்தில் வயிறுமுட்ட உண்ணலாம் என்றுதான் சட்டம் எடுக்க வேண்டும். ஏனெனில் மேலே நாம் கூறிய ஏராளமான ஆதாரங்கள் வயிறுமுட்ட உண்பதை எச்சரிக்கை செய்தது.
ஆகவே வயிறுமுட்ட உண்ணக்கூடாது என்பது பொதுவிதி.
விருந்தில் வயிறுமுட்ட உண்ணலாம் என்பது விதிவிலக்கு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சந்தோஷ தினங்களில் தஃப் அடிப்பதற்கு அனுமதி இருப்பது போல் விருந்து தருணங்களில் வயிறுமுட்ட உண்பதற்கு அனுமதி உண்டு என்பதையே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் காட்டுகிறது.
மூன்றாவது வாதம்
“ஆதமே! இச்சொர்க்கத்தில் நீரும்இ உமது மனைவியும் வசியுங்கள். அங்கு நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். இம்மரத்தை நெருங்காதீர்கள். (மீறினால்) நீங்கள் அநியாயக்காரர்களில் ஆகி விடுவீர்கள்” என்று கூறினோம்.
அல்குர்ஆன் 2 : 35
விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள் என்று இறைவன் கூறியுள்ளான். இதில் ரகதன் என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இது வயிறுமுட்ட உண்பதைக் குறிக்கும்.
பதில்
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று ஆதம் நபியிடம் இறைவன் கூறியது சொர்க்கத்தில் வைத்துத்தான்.
சொர்க்கத்திற்கு ஒரு சட்டம். உலகத்திற்கு வேறு சட்டம்.
சொர்க்கத்தில் நாம் விரும்பியவாறு உண்ணலாம். அதில் அவ்வித தடையும் இருக்காது. சொர்க்கத்தில் கூறியதை உலக வாழ்க்கைக்கு பொறுத்தக்கூடாது.
நான்காவது வாதம்
“இந்த ஊருக்குள் நுழையுங்கள். அதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். (அதன்) நுழைவாயிலில் பணிந்தவர்களாகச் செல்லுங்கள். ‘ஹித்ததுன்’ (மன்னிப்பாயாக!) என்று கூறுங்கள். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு(க் கூலியை) அதிகப்படுத்துவோம்” என்று நாம் கூறியதை நினைத்துப் பாருங்கள்!
அல் குர்ஆன் - 2 : 58
இதிலும் ரகதன் என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இது வயிறுமுட்ட உண்பதையே குறிக்கும்.
பதில்
பனூ இஸ்ரவேலர்களுக்கு கூறியது தனிச்சட்டம். அவர்களுக்குரிய சட்டம் வேறு. நமக்குரிய சட்டம் வேறு. அவர்களுக்குரிய அனைத்து சட்டங்களும் நமக்குப் பொருந்தாது.
அதுமட்டுமல்லாமல் இது மேலே குறிப்பிடப்பட்ட ஊருக்கு இறைவன் வழங்கிய தனி அந்தஸ்தாகும். ஆகவேதான் அந்த ஊர்களில் நுழையும்போது ஹித்ததுன் என்று கூறுங்கள் என்றும் வயிறுமுட்ட உண்ணுங்கள் என்றும் இறைவன் கூறினான். இது அவ்வூருக்கான தனி அனுமதியாகும்.
இந்த வசனத்தை வைத்துக் கொண்டு வயிறு முட்ட சாப்பிடலாம் என்று கூறினால் அனைத்து ஊர்களுக்குள் நுழையும் போது ஹித்ததுன் என்று கூறிக்கொண்டு நுழைய வேண்டும் என்று கூற வேண்டும். ஆக இது தனிச்சட்டம் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
அதுமட்டுமல்லாமல்இ அந்த ஊர்களில் வைத்து வயிறுமுட்ட உண்ணுங்கள் என்றுதான் இறைவன் அந்த வசனத்தில் கூறியுள்ளான். அனைத்து ஊர்களிலும் வயிறுமுட்ட உண்ணுங்கள் என்று இறைவன் கூறவில்லை.
ஆக இதிலிருந்து அது பனு இஸ்ரவேலர்களுக்கும் அந்த ஊருக்கும் வழங்கப்பட்ட தனிச்சட்டம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
மேற்கூறிய அனைத்து ஆதாரங்களையும் கவனிக்கும் போதுஇ விருந்தைத் தவிர மற்ற நேரங்களில் வயிறு முட்ட சாப்பிடுவது கூடாது என்பதை விளங்கிக்கொள்ளலாம.
No comments:
Post a Comment