Monday, August 4, 2025

முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களும் வெற்றி பெறும் வழிகளும்




 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...


முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களும் வெற்றி பெறும் வழிகளும்





புத்தகம் டவுன்லோட் செய்ய - 

முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்கும் வெற்றிகான வழிகளும்

செய்யது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம்




முன்னுரை


வெற்றியோ தோல்வியோ அதை வழங்குபவன் அல்லாஹ்தான். அவன் நாடுபவருக்கு அவன் வெற்றியை வழங்குவான். அவன் நாடுபவருக்கு அவன் தோல்வியை வழங்குவான்.


அவன் யாருக்கு வெற்றியை வழங்குகிறானோ அவர்களை யாராலும் தோல்வியுறச் செய்ய முடியாது.


அவன் யாருக்கு தோல்வியை வழங்குகிறானோ அவர்களை யாராலும் வெற்றி பெறச் செய்ய முடியாது.


வெற்றியும் தோல்வியும் இறைவனின் கைகளிலேயே உள்ளது.


ஆகவே நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் இறைவனை நோக்கித் திரும்ப வேண்டும். அவன் காட்டிய வழயில் நடக்க வேண்டும்.


நாம் தோல்வியிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றாலும் இறைவனை நோக்கித்தான் திரும்ப வேண்டும். அவன் காட்டிய வழியில் நடக்க வேண்டும். அதுதான் நம்மை பாதுகாக்கும்.


பாகம் 1 - முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்


மக்காஇ மதீனா எனும் சிறிய பகுதிகளை ஆட்சி செய்த நபித்தோழர்கள் ரோம் மற்றும் பாரசீகம் ஆகிய இரு பெரும் பேரரசுகளை வென்றார்கள்.


ரோம பாரசீகத்தின் பெயரைக் கேட்டால் உலகின் பிற பகுதிகள் அஞ்சி நடுங்கின. அதேநேரத்தில் ரோமும் பாரசீகமும் முஸ்லிம்கள் என்ற பெயரைக் கேட்டு அஞ்சி நடுங்கின.


அன்று முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள். கண்ணியத்தோடு திகழ்ந்தார்கள்.


ஆனால் இன்று முஸ்லிம்கள் நிலையோ வேதனை தரத்தக்கதாக உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். தங்களது கண்ணியத்தை இழந்து தவிக்கின்றனர்.


இதற்கு காரணம் என்ன?


நாம் நமது கண்ணியத்தை மீட்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?


இதற்காக பலரும் பலவித கருத்துக்களை முன்மொழிகிறார்கள்.


அவற்றில் பெரும்பாலானவைஇ நாம் எப்படியெல்லாம் வீழ்ச்சியடைகிறோம்? என்பதில் கவனம் செலுத்துவதாகவே அமைந்துள்ளது. ஆனால் இது நம்மை தோல்வியிலிருந்து மீளச் செய்வற்கான வழி அல்ல.


மாறாகஇ நாம் ஏன் வீழ்ச்சியை சந்திக்கிறோம்? என்பதை ஆய்வு செய்வதுதான் நம்மை தோல்வியிலிருந்து பாதுகாக்கும் சரியான பாதையாக இருக்கும்.


ஆகவே நாம் தோல்வியுறுதவற்கான காரணங்கள் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 


இதை அல்லாஹ் தனது திருமறையில் நமக்குத் தெரிவிக்கிறான்.


1) நமக்கு ஏற்படும் துன்பத்திற்கு நாமே காரணம்


‘நமக்கு ஏற்படும் அனைத்து துன்பத்திற்கும் நாம்தான் காரணம்’ என்பதை நாம் புரிய வேண்டும். அதுதான் தோல்வியிலிருந்து மீள்வதற்கான முதல் அடிப்படை.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَآ أَصَـٰبَكُم مِّن مُّصِيبَةٍۢ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍۢ⭘ 

உங்களுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அது) உங்களது கைகள் செய்த (தீ)வினைகளால் ஏற்பட்டதாகும். அவன் பெரும்பாலானவற்றை மன்னித்து விடுகிறான்.


அல் குர்ஆன் -   42 : 30


أَوَلَمَّآ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌۭ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَـٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ⭘ 


(உஹதில்) உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டபோதுஇ இதைப் போன்று இரு மடங்கு துன்பத்தை நீங்கள் (பத்ரில் அவர்களுக்கு) ஏற்படுத்தியிருந்தும் “இது எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டீர்கள். “இது உங்களால்தான் ஏற்பட்டது” என்று கூறுவீராக! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன். 


அல் குர்ஆன் -   3 : 165


மேற்கூறிய இரண்டு வசனங்களும் நமக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும் அதற்கு நாம்தான் காரணமாக இருப்போம் என்பதைத் தெரிவிக்கிறது.


2) பணிந்து நடக்கவில்லையென்றால் துன்பம் ஏற்படும்


‘அல்லாஹ்விற்கு பணிந்து அவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்பதற்காகவே இறைவன் நம்மை படைத்தான். 


ஆகவே நாம் இறைவனுக்கு பணிந்து நடக்கவில்லையென்றால் நாம் தோல்வியை தழுவுவோம். இதுதான் இறைநியதி.


அல்லாஹ் கூறுகிறான் :


وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍۢ مِّن قَبْلِكَ فَأَخَذْنَـٰهُم بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ⭘ 


உமக்கு முன்னிருந்த சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். மேலும் அ(ச்சமுதாயத்த)வர்கள் பணிவதற்காக வறுமையாலும் நோயாலும் அவர்களைப் பிடித்தோம்.


அல் குர்ஆன் -   6 : 42


فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَـٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ⭘ 


அவர்களிடம் நமது வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்கக் கூடாதா? மாறாகஇ அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைஇ அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான்.


அல் குர்ஆன் -   6 : 43


மேற்கூறிய இரு வசனங்களும் நமக்கு சொல்லும் செய்திகள்இ ‘நமக்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் அதற்கு நாம் செய்த பாவம்தான் காரணமாக இருக்கும். அல்லது நாம் தவறவிட்ட கடமையான வணக்க வழிபாடுகள் காரணமாக இருக்கும்’ என்பதாகும்.


இவைதான் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைபவை.


 ஆகவே நமக்குத் துன்பம் நேரும் போது நாம் என்ன பாவத்தை செய்தோம்? அல்லது எந்த கடமையை செய்யாமல் விட்டுவிட்டோம்? என்பதை யோசிக்க வேண்டும். 


அவ்வாறு யோசித்து நாம் செய்யும் பாவத்திலிருந்து மீள வேண்டும். அல்லது தவறவிட்ட கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.


3) நபிவழியை புறக்கணித்தல்


நமது தோல்விக்கான முக்கிய காரணம் நபிவழியை புறக்கணித்தலாகும். நபிவழியை புறக்கணித்துவிட்டு வெற்றியை சுவைக்க முடியாது.


இதற்கு உஹது போரில் நடைபெற்ற சம்பவம் சிறந்த சான்றாகும்.


பராஉ (ரலி) அறிவிக்கிறார்கள்கள் :


இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். 


நபி(ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களைத் தலைவராக நியமித்துஇ '(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்' என்று கூறினார்கள். 


நாங்கள் (எதிரிகளான) அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். 


பெண்களெல்லாம் (தம் கால்களில் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். 


அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள்இ '(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம்இ வாருங்கள்)' என்று கூறலாயினர். 


அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) (தம் சகாக்களை நோக்கி)இ 'என்னிடம் நபி(ஸல்) அவர்கள்இ 'இந்த இடத்தைவிட்டும் (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறினார்கள். (எனவேஇ போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நரக வேண்டாம்) என்று கூறினார்கள். 


ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர். 


ஸஹீஹ் புகாரி : 4043. 


ஆரம்பத்தில் வெற்றியைத் தழுதவிய போரின் நிலைமை நபிவழியைப் புறக்கணித்ததால் தலைகீழாக மாறியது. எழுபது சஹாபாக்கள் ஷஹீதாக மரணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அல்லாஹ் கூறுகையில்இ


أَوَلَمَّآ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌۭ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَـٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ⭘ 


(உஹதில்) உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டபோதுஇ இதைப் போன்று இரு மடங்கு துன்பத்தை நீங்கள் (பத்ரில் அவர்களுக்கு) ஏற்படுத்தியிருந்தும் “இது எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டீர்கள். “இது உங்களால்தான் ஏற்பட்டது” என்று கூறுவீராக! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன். 


அல் குர்ஆன் -   3 : 165


ஆக நபிவழியை நாம் புறக்கணித்தால் நமக்குத் தோல்வி ஏற்படும்.


4) நபிவழியை புறக்கணித்தால் ஆற்றல் குறையும்


நபிவழிதான் நமது வலிமை கூட்டக்கூடியது. நபிவழியைப் புறக்கணித்தால் நமது வலிமை குறைந்துவிடும். நாம் பலவீனர்களாக மாறிவிடுவோம். அதனால் நமக்குத் தோல்வி ஏற்படும்.


இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.


ஜாலூத் எனும் கொடுங்கோலன் முஸ்லிம்களுக்குத் தீங்கிழைத்தான். அவர்களை நாட்டைவிட்டுத் துரத்தினான். 


அதனால் முஸ்லிம்கள் தங்களுக்கு ஒரு அரசரை நியமிக்குமாறு நபியிடம் வேண்டினர். ஆகவே அல்லாஹ் தாலூத் என்பவரை அவர்களுக்கு அரசராக நியமித்தான்.


தாலூத் தலைமையில் முஸ்லிம்கள் படை திரட்டி ஜாலூத்தை எதிர்க்க சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கிறான்.


فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍۢ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ ۚ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًۭا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ ۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍۢ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةًۭ كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ⭘ 


தாலூத்இ படைகளுடன் புறப்பட்டபோதுஇ “ஓர் ஆற்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். யார் அதிலிருந்து பருகினாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. தனது கையால் ஒரு தடவை அள்ளியோரைத் தவிர அதை யார் அருந்தவில்லையோ அவரே என்னைச் சார்ந்தவர்” என்று (நபி) கூறினார். 


அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினர். 


பின்னர் அவரும்இ அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது “இன்று ஜாலூத்துடனும்இ அவனது படையுடனும் (மோதுவதற்கு) எங்களிடம் சக்தியில்லை” என்று (ஆற்றில் அதிகமாக நீரருந்தியோர்) கூறினர். 


அல்லாஹ்வைச் சந்திக்கவிருக்கிறோம் என்று யார் உறுதியாக நம்பினார்களோ அத்தகையவர்கள்இ “எத்தனையோ சின்னஞ்சிறு படைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி பெரும்படைகளை வெற்றி கொண்டுள்ளன. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினர். 


அல் குர்ஆன் -   2 : 249


நபியின் கட்டளையை மீறியதால் அவர்கள் பலம் இழந்தனர். போர் செய்யும் தைரியத்தை இழந்து கோழைகளாயினர். ஆக நபிவழிதான் நமக்கு பலத்தைத் தரும். நபிவழியைப் புறக்கணிப்பது பலவீனத்தை ஏற்படுத்தும். அதுவே நமது தோல்விக்கு காரணமாக அமையும்.

5) இறை அறிவுரையை புறக்கணித்தல்


திருமறையில் இறைவன் கூறும் அறிவுரையை நாம் ஏற்று செயல்பட வேண்டும். திருமறையை நாம் புறக்கணித்தால் நமக்குத் தோல்வி ஏற்படும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِى فَإِنَّ لَهُۥ مَعِيشَةًۭ ضَنكًۭا وَنَحْشُرُهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ أَعْمَىٰ⭘ 


எனது அறிவுரையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மறுமை நாளில் அவனைக் குருடனாக எழுப்புவோம். 


அல் குர்ஆன் -   20 : 124


இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை ஏற்படும் என்று அல்லாஹ் விதியாக்கிவிட்டான். ஆகவே இது நடந்தே தீரும். 


எனவே நாம் இறைவனின் கட்டளையை புறக்கணித்தால் நமக்குத் தோல்விதான் ஏற்படும்.

6) அல்லாஹ்வை மறத்தல்


நமக்கு எந்த நன்மைகள் நடந்தாலும் அதற்கு அல்லாஹ்தான் காரணம் என்று உறுதியாக நம்ப வேண்டும். நமக்கு வெற்றியைத் தருபவன் அல்லாஹ்தான் என்பதை உறுதியாக ஏற்க வேண்டும்.


மாறாக அல்லாஹ்வை மறந்துவிட்டு உலகப்பொருள்களின் மீது நம்பிக்கை வைத்தால் அதன் மூலமும் நமக்குத் தோல்வி ஏற்படும்.


அல்லாஹ் கூறுகிறான் :


لَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ فِى مَوَاطِنَ كَثِيرَةٍۢ ۙ وَيَوْمَ حُنَيْنٍ ۙ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْـًۭٔا وَضَاقَتْ عَلَيْكُمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ⭘ 


அதிகமான களங்களிலும்இ ஹுனைன் போர் (நடந்த) அன்றும் அல்லாஹ் உங்களுக்கு உதவியுள்ளான். (ஹுனைனில்) உங்களது அதிக எண்ணிக்கை உங்களுக்குப் பெருமிதத்தை அளித்தபோதுஇ அது உங்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை. பூமிஇ விரிந்து பரந்ததாக இருந்தும் அது உங்களுக்கு நெருக்கடியானது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்கள். 


அல் குர்ஆன் -   9 : 25


ஹுனைன் என்ற போரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை காஃபிர்களைவிட அதிகமாக இருந்தது. 


இந்த எண்ணிக்கை முஸ்லிம்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அல்லாஹ்வை மறந்து பெரும் எண்ணிக்கை வெற்றியைத் தரும் என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களுக்கு அல்லாஹ் சோதனையை ஏற்படுத்தினான்.


எனவே அல்லாஹ்வை மறந்து உலகப் பொருளின் மீது நம்பிக்கை வைப்பதும் நமது தோல்விக்குக் காரணமாக அமையும்.

7) துரோகம் இழைத்தல்


அல்லாஹ்விற்கு துரோகம் இழைக்கக்கூடாது. அவ்வாறு துரோகம் இழைப்பதும் தோல்விக்கு வழிவகுக்கும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ⭘ 


அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நினைத்தால்இ இதற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்வுக்கும் துரோகம் செய்துள்ளனர். எனவே அவர்கள்மீது (உமக்கு) அதிகாரமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன். 

அல் குர்ஆன் -   8 : 71


அல்லாஹ்விற்கு துரோகம் இழைத்தல் என்றால் என்ன?


நாம் அல்லாஹ்வுடன் உடன்படிக்கை செய்துள்ளோம். அவனுக்கு இணைவைக்கமாட்டோம் என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். 


இஸ்லாத்தை ஏற்று கலீமாவை முன்மொழிந்ததன் மூலம்இ அல்லாஹ்வை மட்டுமே வணங்குவேன் என்றும் நபிகளார் காட்டித்தந்த வழியில் வணங்குவேன் என்றும் உறுதிமொழி எடுத்துள்ளோம். 


கடமைகளை நிறைவேற்றி ஹாராத்திலிருந்து விலகியிருப்போம் என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். 


இந்த ஒப்பந்தத்திற்கு மாற்றமாக நடப்பது அல்லாஹ்விற்கு செய்யும் துரோகமாகும். அவ்வாறு துரோகம் இழைத்தாலும் நமக்குத் தோல்வி ஏற்படும்.


8) உலகத்தை விரும்புதல்


நமக்கு மறுமையைவிட உலகத்தின் மீதான நேசம் அதிகமாக இருந்தாலும் தோல்வி ஏற்படும்.



அல்லாஹ் கூறுகிறான் :


وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ⭘ 


அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்களை நீங்கள் வேரறுத்தபோது தன் வாக்குறுதியை உங்களுக்கு அவன் உண்மைப்படுத்தினான். இறுதியில் நீங்கள் தைரியமிழந்துஇ இவ்விஷயத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறுசெய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புவோரும் உள்ளனர். பிறகு உங்களைச் சோதிப்பதற்காக அவர்களை (வெற்றி பெறுவதை) விட்டும் உங்களைத் திருப்பினான். எனினும் உங்களை மன்னித்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன். 


அல் குர்ஆன் -   3 : 152


நபித்தோழர்களில் சிலர் இவ்வுலகை விரும்பிய காரணத்தால் அவர்களுக்கு சில காலங்கள் வெற்றியை வழங்காமல் அல்லாஹ் தடுத்ததாக தெரிவிக்கிறான். ஆக உலக மோகமும் தோல்விக்கான காரணமாக அமையும் என்பது இதிலிருந்து தெரிகிறது.


இதை நபியவர்களும் விளக்கியிருக்கிறார்கள்.


‘பசியோடு இருக்கும் மிருகங்கள் உணவுத் தட்டை நோக்கிப் பாய்ந்து செல்வதைப் போன்றுஇ (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயற்பட முற்படுவார்கள்.

அப்போது ஒருவர்இ ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘இல்லைஇ அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும்இ உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டுஇ உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்கஇ ‘உலகத்தை நேசிப்பதும்இ மரணத்தை வெறுப்பதும்இ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’


அறி : ஸவ்பான் (ரலி)இ


நூல் : அபூதாவூத்-4297 (4288)


உலகத்தின் மீதான மோகம் நமக்குத் தோல்வியைத் தரும் என்பதை மேற்கண்ட நபிமாெழியின் மூலம் நபியவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.


9) பிறருக்கு எடுத்துரைத்தல்


நாம் சரியாக நடந்து மற்றவர்கள் தவறிழைத்தாலும் நாம் தோல்வியைத் தழுவுவோம். ஆகவே நாம் தோற்கக்கூடாது என்றால் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்க வேண்டும். அதுதான் நம்மைத் தோல்விகளிலிருந்து பாதுகாக்கும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَٱتَّقُوا۟ فِتْنَةًۭ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنكُمْ خَآصَّةًۭ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ⭘ 


வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள்! அது உங்களில் அநியாயக்காரர்களை மட்டுமே தாக்கும் என்பதில்லை! தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!


அல் குர்ஆன் -   8 : 25


இறைவனின் வேதனை அநியாயக்காரர்களை மட்டும் தாக்காது. நல்லவர்களையும் சேர்ந்து தாக்கும். ஆகவே இறைவனின் வேதனையிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் மற்றவர்களை தவறு செய்யவிடாமல் தடுக்க வேண்டும். அதுதான் நம்மை தோல்வியிருந்து பாதுகாக்கும்.


10) செய்தி பரப்புவதில் கவனக்குறைவு


தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் தோல்விகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றுஇ செய்தியைப் பரப்புவதில் தவறான வழிமுறை.


பேஸ்புக்இ வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கண்டமேனிக்கு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறோம்.


எது உண்மை? எது பொய்? அறைகுறையான செய்தி எது? செய்தியின் முழுத் தகவல் என்ன? என்று எதையும் அறியாமல் சர்வசாதாரணமாகப் பரப்பி வருகிறோம். இதுவும் நமது தோல்விக்கான முக்கிய காரணமாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَإِذَا جَآءَهُمْ أَمْرٌۭ مِّنَ ٱلْأَمْنِ أَوِ ٱلْخَوْفِ أَذَاعُوا۟ بِهِۦ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسْتَنۢبِطُونَهُۥ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَٱتَّبَعْتُمُ ٱلشَّيْطَـٰنَ إِلَّا قَلِيلًۭا⭘ 


(சமூக) அமைதி அல்லது அச்சம் குறித்த ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை (ஆராயாமல்) பரப்பி விடுகின்றனர். அதை இத்தூதரிடமும்இ தங்களில் அதிகாரமுடையவர்களிடமும் கொண்டு சென்றிருந்தால்இ அவர்களில் ஆராய்ந்து முடிவெடுப்போர் அதை நன்கறிந்து கொள்வர். அல்லாஹ்வின் அருளும் கருணையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் குறைவானவர்களைத் தவிர நீங்கள் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.


அல் குர்ஆன் -   4 : 83


நம்மிடத்தில் ஒரு செய்தி வந்தால் அதை தீர விசாரிக்க வேண்டும். அதிகாரமுடையவர்களிடம் அதைத் தெரிவித்து அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். இதுதான் சரியான வழிமுறை.


தான்தோன்றித்தனமாக செய்திகளை பரப்புவது அழிவுக்கே வழிவகுக்கும்.

11) நம்மை மாற்றிக் கொள்ளாதவரை


முத்தாய்பாக இறைவன் சொல்லும் செய்தி இதுதான். நாம் தொல்வியைத் தழுவுகிறோம் என்றால் நம்மிடத்தில் மிகப்பெரும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். 


ஆகவே நம்மை நாம் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றினால்தான் தோல்வியிலிருந்து மீள்வோம்.


ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًۭا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ⭘ 


எந்த ஒரு சமுதாயத்தினரும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை அவன் மாற்றுபவனாக இல்லை என்பதுதான் இதன் காரணம். அல்லாஹ் செவியேற்பவன்இ நன்கறிந்தவன்.


அல் குர்ஆன் -   8 : 53


நாம் தோல்வியைத் தழுவினால் நம்மிடம் மாற்றப்பட வேண்டிய பண்புகள் உள்ளது என்று அரத்தம். 


எனவே நாம் 

இறைவனுக்கு பணிந்து நடக்கிறோமா?

இறைவனின் கட்டளைகளை சரிவர பின்பற்றுகிறோமா?

அவனது அறிவுரைகளை மதித்து நடக்கிறோமா?

அல்லாஹ்விற்கு துரோகம் இழைக்காமல் இருக்கிறோமா?

நபிவழியை பின்பற்றி நடக்கிறோமா?

பாவத்தைவிட்டும் விலகி இருக்கிறோமா?

கடமையான வணக்க வழிபாடுகளை முறையாக கடைபிடிக்கிறோமா?

உலகத்தை நேசிக்கிறோமா?

மறுமையை விட உலகத்தை விரும்புகிறோமா?

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காமல் உலகப்பொருளின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமா?

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கிறோமா?


இது போன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால் நம்முடைய தோல்விகளிலிருந்து நாம் மீளலாம்.



















பாகம் 2 - காஃபிர்கள் வெற்றி பெறுவது ஏன்?


முஸ்லிம்கள் ஏன் தோல்வியைத் தழுவுகிறார்கள்? என்பதைப் பற்றி மேலே பார்த்தோம். 


முஸ்லிம்கள் தோற்கிறார்கள் என்றால் காஃபிர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று அர்த்தம். அதாவது தற்காலிக வெற்றி பெறுகிறார்கள் என்று அர்த்தம். இம்மையின் அற்ப விஷயங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்று அர்த்தம்.


இச்சூழலில் இறைவன் காஃபிர்களை ஏன் வெற்றி பெறச் செய்கிறான்? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • இணைவைப்பாளர்கள் நன்றாக இருப்பது அவர்களின் பாவத்தை அதிகரிக்கவே


இணைவைப்பாளர்களுக்கு அல்லாஹ் சில நேரங்களில் வெற்றியை வழங்குவான். அப்போது நாம் மனம் துவண்டு விடக்கூடாது. 


அந்நேரத்தில் அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஏனெனில் அல்லாஹ் இணைவைப்பாளர்களை அழிப்பதற்குத்தான் அவர்களுக்கு வெற்றியை வழங்குவான்.


 அல்லாஹ் கூறுகிறான் :


وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌۭ لِّأَنفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًۭا ۚ وَلَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ⭘ 


இறைமறுப்பாளர்களுக்கு நாம் அவகாசமளிப்பதுஇ தமக்கு நல்லது என அவர்கள் நினைக்க வேண்டாம். அவர்கள் பாவத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறோம். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உள்ளது.  


அல் குர்ஆன் -   3 : 178


இணைவைப்பளார்கள் தங்களது பாவத்தை மேலும் அதிகரித்து மிகப்பெரும் இழிவை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவர்களுக்கு தற்காலிக வெற்றியை வழங்குவான்.


அவர்களுக்கு அதிக தண்டனையை வழங்க வேண்டும் என்பதற்கான அல்லாஹ்வின் ஏற்பாடே இது. ஆகவே இதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


பாகம் 3 - வெற்றிக்கான வழிகள்


அல்லாஹ்வால் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரமுடியும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவன் வெற்றியை வழங்க வேண்டுமானால்இ அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் அவன் வெற்றியை வழங்குவான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ⭘ 


(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்இ “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவேஇ அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டுஇ என்னையே நம்பட்டும்” (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)


அல் குர்ஆன் -   2 : 186


அல்லாஹ் அருகில்தான் இருக்கிறான். அருகில் இருக்கிறான் என்பதற்காக அவன் நமக்கு வேண்டிய அனைத்தையும் தரமாட்டான். மாறாக நாம் அவனை அழைத்தால்தான் அவன் நமக்குப் பதிலளிப்பான். நாம் அவனிடம் பிரார்த்தித்தால்தான் அந்த பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பான்.


அதுபோலத்தான் வெற்றியும். இறைவன் நினைத்தால் அவனால் நமக்கு வெற்றியை வழங்க முடியும். இருந்தபோதிலும் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் நம்மிடத்திலிருந்து சில விஷயங்கள் வெளிப்பட வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.


அந்த விஷயங்களைத்தான் இதில் பார்க்க விருக்கிறோம்.


  1. அல்லாஹ் வழங்கிய சோதனையை அல்லாஹ்வால்தான் நீக்க முடியும்


முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்இ அல்லாஹ்வால் மட்டும்தான் நமக்கு வெற்றியைத் தரமுடியும் என்பதாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍۢ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦ ۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ⭘ 


அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.


அல் குர்ஆன் -   10 : 107


நாம் தோல்வியைத் தழுவினால் அதை நீக்கக்கூடியவன் அல்லாஹ்மட்டும்தான். 


அதைப் போல் நாம் வெற்றிப் பெற வேண்டுமென்றால் அதற்கும் அவனது நாட்டம் வேண்டும். அவனது நாட்டம் இல்லாமல் நம்மால் வெற்றிபெற முடியாது. 


ஆகவே அல்லாஹ்வால் மட்டும்தான் நமக்கு வெற்றியைத் தர முடியும் என்று முழுமையாகவும் உறுதியாகவும் நம்ப வேண்டும். இதுதான் வெற்றிக்கான முதற்படியாகும்


2. ஈமானும் நல்லமலும்


அடுத்ததாக நமது ஈமானையும் அமலையும் அதிகப்படுத்த வேண்டும். 


இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகும்.


ஈமான் கூடினால் அமல் கூடும். அமல் கூடினால் ஈமான் கூடும்.


ஈமானும் அமலும் கூடும் போது நமது பலமும் கூடும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًۭا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًۭٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ⭘ 


உங்களில் இறைநம்பிக்கை கொண்டுஇ நற்செயல் செய்வோருக்குஇ அவர்களின் முன்னோரிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கியது போல் அவர்களுக்கும் பூமியில் ஆட்சியதிகாரம் வழங்குவதாகவும்இ அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாகவும்இ அவர்களின் அச்சத்திற்குப் பின் (அதை) அவர்களுக்குப் பாதுகாப்பு நிலையாக மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எதையும் இணையாக்காமல் என்னையே வணங்குவார்கள். இதன்பிறகு (என்னை) யார் மறுக்கிறார்களோ அவர்களே பாவிகள்.


அல் குர்ஆன் -   24 : 55


மேற்கூறிய வசனத்தில் இறைநம்பிக்கையும் நற்செயலும் உள்ளவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்குவதாகத் தெரிவிக்கிறான். 


முன்னர் வாழ்ந்த ஆட்சியாளர்களுக்கு ஈமானும் நல்லமல்களும் இருந்ததால்தான் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்று இறைவன் தெரிவிக்கிறான். இதுதான் இறைவனின் நியதியாகும். 


ஆகவே நம்மிடத்தில் இவ்விரண்டும் இருந்தால் அல்லாஹ்வால் ஆட்சியதிகாரம் வழங்கப்படும். 


இவ்விஷயத்தை மேலும் சில இடங்களில் இறைவன் தெளிவுபடுத்தியுள்ளான்.


  • இறைநம்பிக்கைக்காக ஆட்சியதிகாரம் வழங்கப்படும்


இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கியிருக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ ٱلْمُؤْمِنِينَ⭘


இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நமது கடமையாகி விட்டது.

அல்குர்ஆன் 30 :47


அல்லாஹ்விற்கு யாரும் கடமைகளை விதிக்கமுடியாது. அல்லாஹ்தான் படைப்பினங்களுக்கு கடமைகளை விதியாக்குவான். இருந்தபோதிலும் மனிதர்கள் மீது அல்லாஹ் கொண்ட கருணையின் காரணத்தால் அவன் இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதைத் தன்மீது கடமையாக்கியிருக்கிறான். 


அல்லாஹ் தன்மீது கடமையாக்கியதை செய்யாமல் விடமாட்டான்.


அந்த அடிப்படையில் நம்மிடத்தில் இறைநம்பிக்கை வலுவாக இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்.


இன்னொரு வசனத்திலும் இதை அல்லாஹ் தெரியப்படுத்துகிறான் :


فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَـٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَـٰهُمْ إِلَىٰ حِينٍۢ⭘ 


(வேதனை வரும் முன்) இறைநம்பிக்கை கொண்டுஇ அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பயனளித்த (யூனுஸின் சமுதாயத்தைப் போல்) எந்த ஊராவது இருந்திருக்கக் கூடாதா? எனினும்இ யூனுஸின் சமுதாயத்தினர் இறைநம்பிக்கை கொண்டபோதுஇ இவ்வுலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் அகற்றினோம். குறிப்பிட்ட காலம்வரை அவர்களைச் சுகம் அனுபவிக்கச் செய்தோம்.


அல் குர்ஆன் -   10 : 98


யூனுஸ் நபியின் சமூகம் ஆரம்பத்தில் நபியின் அழைப்பைப் புறக்கணித்தது. அப்போது அவர்களை அழிப்பதற்காக அல்லாஹ் சில அத்தாட்சிகளை ஏற்படுத்தினான். அதைப் பார்த்த மக்கள் அச்சம் கொண்டு ஈமான் கொண்டார்கள். 


ஆகவே அவர்களுக்கு வழங்கவிருந்த வேதனையை இறைவன் நீக்கினான். அவர்களுக்கு சுகமான வாழ்க்கையை இறைவன் வழங்கினான்.


ஆகவே நாம் ஈமானில் உறுதியாக மாறும்போது நமக்கு இறைவன் இன்பமான வாழ்க்கையை வழங்குவான்.


3) ஈமான் கூட வலிமையும் கூடும்


அதைப்போல் நம்மிடத்தில் ஈமான் கூடக்கூட உலக வலிமை அதிகரிக்கும். பலம் அதிகரிக்கும்.


அல்லாஹ் கூறுகிறான் :


يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَـٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفًۭا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ⭘ 


நபியே! இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வ மூட்டுவீராக! உங்களில் பொறுமையுடைய இருபது பேர் இருந்தால்இ இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். அவர்கள் விளங்கிக் கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.


அல் குர்ஆன் -   8 : 65


ٱلْـَٔـٰنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًۭا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌۭ صَابِرَةٌۭ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌۭ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ⭘ 


உங்களிடம் பலவீனம் இருப்பதை அறிந்துஇ இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களில் பொறுமையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி இரண்டாயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.


அல் குர்ஆன் -   8 : 66


மேற்கூறிய இரண்டு வசனங்களின் மூலம் ஈமானின் வலிமையை இறைவன் தெரியப்படுத்துகிறான்.


நம்மிடத்திலுள்ள ஈமானிற்குத் தக்கவாறு நமது பலம் அதிகரிக்கும்.


நம்மிடத்தில் உயர்ந்த ஈமான் இருந்தால் நம் ஒருவரால் பத்து பேரை வீழ்த்தமுடியும்.


நம்மிடத்திலுள்ள ஈமானில் பலவீனம் இருந்தால் நம் ஒருவரால் இருவரைத் தான் வெல்ல முடியும்.


ஆகவே நம்மிடத்திலுள்ள ஈமான்தான் நமது பலத்தை அதிகரிக்கும் என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் இறைவன் தெரிவிக்கிறான்.


இவ்விஷயத்தை உமர் ரலி அவர்களும் அழகாக விளக்கினார்கள்.


உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் அற்பர்களாக இருந்தோம். அல்லாஹ் இஸ்லாத்தின் மூலம் எங்களை மேன்மைப்படுத்தினான். நாங்கள் மேன்மையை வேறு ஒன்றில் தேடினால் மீண்டும் அல்லாஹ் எங்களை அற்பர்களாக ஆக்கிவிடுவான்."


4) அல்லாஹ்வுக்கு உதவுதல்


நாம் அல்லாஹ்விற்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ⭘


தனக்கு உதவுவோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.


அல்குர்ஆன் 22:40


அல்லாஹ்விற்கு உதவுதல் என்றால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுதல் என்று பொருள்.


எவரொருவர் தனது சொல்இ செயல்இ பணம்இ நேரம் போன்றவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பாடுபடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்விற்கு உதவிகளை செய்தவர் ஆவார். இவ்வாறு நாம் நடந்தால் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்.


அவ்வாறு அல்லாஹ் நமக்கு உதவி செய்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.



அல்லாஹ் கூறுகிறான் :


إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ⭘ 


உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவுபவர் யார்? எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும்.


அல் குர்ஆன் -   3 : 160


ஆகவே நாம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவி செய்வதும் நமது வெற்றிக்கான வழிகளில் முக்கியமானதாகும்.

5) பொறுமையும் தக்வாவும்


வெற்றிக்கான வழிமுறைகளில் மிகமிக முக்கியமானது பொறுமையும் தக்வாவுமாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :


بَلَىٰٓ ۚ إِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَـٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ ءَالَـٰفٍۢ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُسَوِّمِينَ⭘ 


மேலும்இ நீங்கள் பொறுமையை மேற்கொண்டுஇ இறையச்சத்துடன் இருந்தால் அவர்கள் இப்போது திடீரென உங்களிடம் வந்தாலும்இ அடையாளமிடப்பட்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.


அல் குர்ஆன் -   3 : 125


பொறுமையும் இறையச்சமும் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான் என்பதையும் தேவைப்பட்டால் அதற்காக மலக்குகளைக் கூட இறைவன் பயன்படுத்துவான் என்பதையும் மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் தெரிவிக்கிறான்.


மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுவதாவது :


إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌۭ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌۭ يَفْرَحُوا۟ بِهَا ۖ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌۭ⭘ 


உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலை தருகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் பொறுமையை மேற்கொண்டுஇ இறையச்சத்துடன் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவன்.


அல் குர்ஆன் -   3 : 120


நம்மிடத்தில் பொறுமையும் இறையச்சமும் இருந்தால் காஃபிர்களின் சூழ்ச்சிகளும் சதித்திட்டங்களும் நம்மை பாதிக்காது என்பதை இறைவன் தெரியப்படுத்துகிறான். 


அதாவது நம்மிடத்தில் பொறுமையும் இறையச்சமும் இருந்தால் காஃபிர்களால் நம்மை வீழ்ச்சியுறச் செய்யமுடியாது என்று இறைவன் தெரியப்படுத்துகிறான்.


மேலும் அல்லாஹ் கூறுகிறான்.


ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ⭘ 


பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.


அல் குர்ஆன் -   8 : 46


பொறுமையை மேற்கொள்வோர்களுடன் அல்லாஹ் இருப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். ஆகவே அல்லாஹ் நம்முடன் இருந்தால் நமக்கு தோல்வி ஏற்படாது என்பது தெரிந்த ஒன்றுதான்.


பொறுமையாளர்களுக்கு வெற்றி வழங்கப்படும் என்பதை மற்றொரு வசனத்திலும் இறைவன் தெரிவிக்கிறான்.



يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ⭘ 


இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமை கொள்வதில் (எதிரிகளை) மிகைத்து விடுங்கள்! உறுதியுடன் இருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.


அல் குர்ஆன் -   3 : 200


பொறுமையில் மற்ற அனைவரையும் நாம் மிஞ்சினால் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என்று இறைவன் தெரிவிக்கிறான். ஆகவே பொறுமை வெற்றிக்கு மிக மிக அவசியமாகும்.


அல்லாஹ் சில நேரங்களில் காஃபிர்களுக்கு தற்காலிக வெற்றியை வழங்குவான். அதை மேலே குறிப்பிட்டுள்ளோம். அந்நேரத்தில் நாம் பொறுமையை இழந்துவிடக்கூடாது. அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அந்த பொறுமையே நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.


6) பாவமன்னிப்பு


நாம் செய்யும் பாவங்கள்தான் நமது தோல்விக்குக் காரணமாக அமையும் என்பதை மேலே நாம் கண்டோம். அவ்வாறு நாம் தோல்வியுறும்போது நமது பாவத்தை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரினால் நமது தோல்வியை அல்லாஹ் நீக்குவான். நமக்கு வெற்றியை வழங்குவான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَـٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَـٰتِ أَن لَّآ إِلَـٰهَ إِلَّآ أَنتَ سُبْحَـٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ⭘ 

فَٱسْتَجَبْنَا لَهُۥ وَنَجَّيْنَـٰهُ مِنَ ٱلْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُـۨجِى ٱلْمُؤْمِنِينَ⭘ 


(யூனுஸ் நபியான) மீனுடையவரையும் (நினைவுகூர்வீராக!) அவர் கோபமாக வெளியேறியபோதுஇ அவரை நெருக்கடிக்குள்ளாக்க மாட்டோம் என எண்ணிக் கொண்டார். “உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார். எனவே நாம் அவருக்குப் பதிலளித்துஇ அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம். இவ்வாறே இறைநம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவோம்.


அல் குர்ஆன் -   21 : 87இ 88


யூனுஸ் நபியவர்கள் செய்த தவறான காரியத்தால் அவர்களை இறைவன் தண்டித்தான். அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்தித்தார்கள். ஆகவே அவர்களை இறைவன் அவர்களின் துன்பத்திலிருந்து காப்பாற்றினான்.


எனவே இறைநம்பிக்கையாளர்கள்இ தான் செய்யும் பாவத்தை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்றாடினால் இறைவன் நமது தோல்விகளை இல்லாமலாக்குவான். நமக்கு வெற்றியை வழங்குவான்.


7) ஒடுக்கப்பட்டோருக்கு அல்லாஹ் உதவுவான்


அல்லாஹ் சில நியதிகளை தனக்குத் தானே ஏற்படுத்தி வைத்திருப்பான்.


 அந்த நியதிகளில் ஒன்றுதான் அநியாயத்திற்கு ஆளானோருக்கு உதவுதல்.


அல்லாஹ் கூறுகிறான் :


أُذِنَ لِلَّذِينَ يُقَـٰتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا۟ ۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ⭘ 


போர் தொடுக்கப்பட்டோர் அநியாயத்திற்கு ஆளானதால் (எதிரிகளைத் திருப்பித் தாக்க) அவர்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வே அவர்களுக்கு உதவும் ஆற்றலுடையவன்.


அல் குர்ஆன் -   22 : 39


ذَٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌۭ⭘ 


இதுவே (அவர்களுக்குரிய கூலி)! ஒருவர்இ தான் துன்புறுத்தப்பட்ட அளவிற்குப் பழிவாங்கிய பிறகு அவருக்குக் கொடுமை இழைக்கப்பட்டால் அவருக்கு அல்லாஹ் உதவுவான். அல்லாஹ் பிழை பொறுப்பவன்; மன்னிப்புமிக்கவன்.


அல் குர்ஆன் -   22 : 60


மேற்கூறிய இரண்டு வசனங்களிலும் அநியாயத்திற்கு ஆளானோருக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். 


ஆகவே நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் அநியாயத்தை மேற்காெள்ளக்கூடாது. நியாயமாக நடக்க வேண்டும். நியாயமாக நடப்பதும் வெற்றிக்கான ஒரு வழிமுறையாகும்.


8) வேறுபாடும் பிரிவினையும்


வெற்றிக்கான அடுத்த முக்கியமான வழிமுறை ஒற்றுமையாக இருப்பது. ஒற்றுமைதான் பலத்தைத் தரும்.




அல்லாஹ் கூறுகிறான் :


وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَـٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ⭘ 


அல்லாஹ்வுக்கும்இ அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! கருத்துவேறுபாடு கொள்ளாதீர்கள்! அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள்! உங்கள் பலம் குன்றிவிடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.


அல் குர்ஆன் -   8 : 46


மேற்கூறிய வசனத்தில் ஒற்றுமையோடு இருக்குமாறு அல்லாஹ் நம்மை வலியுறுத்தியுள்ளான். 


நாம் பிரிந்து கிடந்தால் நம்முடைய பலம் குறைந்துவிடும் என்றும் தைரியம் இழந்துவிடுவோம் என்றும் தெரிவிக்கிறான்.


ஆகவே முஸ்லிம்களான நாம் அல்லாஹ்வின் கயிறாகிய குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பற்றிப்பிடித்து ஒற்றுமையாக ஓரணியில் நிற்க வேண்டும். அதுதான் வெற்றியைப் பெற்றுத்தரும்.


9) எதிரிகளுக்கு எதிராக தயாராதல்


உலகத்தில் வெற்றியைப் பெறுவதற்கு சில உலக காரியங்களையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍۢ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ⭘ 


உங்களுக்கு முடிந்த அளவு வலிமையையும்இ தயார் நிலையிலுள்ள குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் திரட்டிக் கொள்ளுங்கள்! இதனால் அல்லாஹ்வின் எதிரியையும்இ உங்களுடைய எதிரியையும்இ இவர்களல்லாத (நயவஞ்சகர்களான) மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அல்லாஹ்தான் அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அது உங்களுக்கே நிறைவாக வழங்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.


அல் குர்ஆன் -   8 : 60


மேற்கூறிய வசனத்தில் போர்க்களத்திற்கு தேவையான ஆயுதங்களையும் வாகனங்களையும் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு இறைவன் தெரிவிக்கிறான். 


இது காலத்திற்கு தகுந்தாற்போல் மாறும்.


தற்காலத்தில் வெற்றி பெருவதற்கு என்னென்ன உலகப்பொருள்கள் தேவைப்படுமோ அதை நாம் திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 


அதுவும் வெற்றிக்கு மிக அவசியமாகும்.


10) எச்சரிக்கையோடு இருத்தல்


அதைப்போல் நாம் வெற்றியடைவதற்கு எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமாகும். எதிரிகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ خُذُوا۟ حِذْرَكُمْ فَٱنفِرُوا۟ ثُبَاتٍ أَوِ ٱنفِرُوا۟ جَمِيعًۭا⭘ 


இறைநம்பிக்கை கொண்டோரே! (போரின்போது) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! பல்வேறு பிரிவுகளாகப் புறப்படுங்கள்! அல்லது மொத்தமாகப் புறப்படுங்கள்!


அல் குர்ஆன் -   4 : 71


وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌۭ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًۭى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا⭘ 


(நபியே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருக்கும்போது அவர்களுக்கு நீர் தொழுகை நடத்தினால்இ அவர்களில் ஒரு பிரிவினர் உம்முடன் (தொழுகையில்) நிற்கட்டும்! அவர்கள் தமது ஆயுதங்களை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் ஸஜ்தா செய்து விட்டால் உங்களுக்குப் பின்னால் சென்று விடட்டும்! தொழாத மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்! அவர்களும் தமது ஆயுதங்களுடன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளட்டும்! உங்கள் ஆயுதங்கள் மற்றும் உடைமைகளில் நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள்மீது ஒரேயடியாக தாக்கி விடலாம் என இறைமறுப்பாளர்கள் விரும்புகின்றனர். மழையால் உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள்மீது குற்றமில்லை. எச்சரிக்கையாக இருங்கள்! இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான்.


அல் குர்ஆன் -   4 : 102


மேற்கூறிய இரண்டு வசனங்களும் எச்சரிக்கையோடு இருக்குமாறு வலியுறுத்துகிறது. போர்க்களத் தொழுகையில் கூட எச்சரிக்கையோடு இருக்குமாறு அல்லாஹ் வலியுறுத்தியுள்ளான். ஆகவே எச்சரிக்கையுணர்வும் வெற்றிக்கான முக்கிய வழிமுறையாகும்.


11) ஈமான், அமல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் மற்றும் பொறுமை


முஸ்லிம்கள் வெற்றிபெறுவதற்கான முக்கியமான வழிமுறைகள் இந்த நான்குமாகும். இந்த நான்கும் இருந்தால்தான் இறைவன் வெற்றியை வழங்குவான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَٱلْعَصْرِ⭘ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ⭘ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ⭘


காலத்தின்மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான். இறைநம்பிக்கை கொண்டுஇ நற்செயல்கள் செய்துஇ உண்மையைக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் அறிவுறுத்திஇ பொறுமையை மேற்கொள்ளுமாறும் அறுவுறுத்திக் கொள்வோரைத் தவிர!


அல்குர்ஆன் 103 : 1 - 3


மேற்கூறிய நான்கு விஷயங்கள் இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் நஷ்டத்திலேயே இருப்பார்கள் என்று இறைவன் தெரிவிக்கிறான். இதன்மூலம் இந்த நான்கும்தான் வெற்றிக்கான வழிமுறை என்பதை இறைவன் தெரிவிக்கிறான் 


ஆகவே மேற்கூறிய வெற்றிக்கான வழிமுறைகளை நாம் கடைபிடித்தால் நிச்சயம் வெற்றியடையலாம். ஏனெனில் இது இறைவனின் வாக்குறுதியாகும். அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்


அல்லாஹ் கூறுகிறான் :


وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ⭘


(இது) அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதிக்கு அல்லாஹ் மாறுசெய்ய மாட்டான்.


அல்குர்ஆன் 39:20




பாகம் 4 - இயற்கையின் உதவிகள்


மேலே குறிப்பிடப்பட்ட வெற்றிக்கான வழிமுறைகளை நாம் கையாண்டால் இறைவனின் உதவிகள் பல விதங்களில் நமக்குக் கிடைக்கும்.


அவற்றிற்கு உதாரணம்இ இறைவன் இயற்கையான பிற படைப்புகளை வைத்து மனிதர்களுக்கு உதவி செய்வான் என்பதாகும். அதைப்பற்றி பார்ப்போம்.

1) மழை மூலம் உதவி


மழை என்பது இறைவனின் அருளாகும். அது மனிதர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காகவும் புற்பூண்டுகளும் செடிகொடிகளும் வளர்வதற்காகவும் விண்ணிலிருந்து இறைவனால் இறக்கிவைக்கப்படும் ஒரு படைப்பாகும்.


இது முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் பொதுவான அருளாகும்.


இருந்தபோதிலும் இது இறைநம்பிக்கையாளர்களை வலுப்படுத்தும் விதமாக இறைவனால் அனுப்பி வைக்கப்படும்.


அல்லாஹ் கூறுகிறான் :


إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةًۭ مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءًۭ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَـٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ⭘ 


(நீங்கள்) நிம்மதி பெறுவதற்காகத் தன்னிடமிருந்து சிறு தூக்கத்தை உங்களுக்கு அவன் தழுவச் செய்ததை நினைத்துப் பாருங்கள்! மேலும் அவன் வானிலிருந்து உங்கள்மீது மழை பொழியச் செய்தான். அதன்மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தவும்இ ஷைத்தானின் அசுத்தத்தை உங்களை விட்டு நீக்கவும்இ உங்கள் உள்ளங்களை வலுப்படுத்தவும்இ அதன்மூலம் பாதங்களை உறுதிப்படுத்தவும் (இவ்வாறு செய்தான்.)


அல் குர்ஆன் -   8 : 11


மேற்கூறிய வசனத்தில் பத்ர் போரைப் பற்றி இறைவன் தெரிவிக்கிறான். பத்ருப் போரில் முஸ்லிம்கள் முன்னூற்றுக்கு சற்று அதிகமாகவும் காஃபிர்கள் ஆயிரத்திற்கு நெருக்கமாகவும் இருந்தார்கள்.


அந்நேரத்தில் இறைவன் மழையை இறக்கினான். அந்த மழை முஸ்லிம்களை தூய்மைப்படுத்தி அவர்களை வலுப்படுத்தியது. அவர்களின் பாதங்களை உறுதியாக்கியது. இதன்மூலம் அவர்கள் பத்ருப் போரில் மிகப்பெரும் வெற்றியைத் தழுவினார்கள்.


அதைப்போல் இதற்கு நூஹ் நபியின் வரலாறும் ஒரு சான்றாகும்.


நூஹ் நபி 950 வருடங்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும் அவர்களின் சமூகத்தில் ஒருசிலர்தான் இஸ்லாத்தை ஏற்றார்கள். பெரும்பாலானவர்கள் அதை புறக்கணித்தார்கள். அப்போது அல்லாஹ் நூஹ் நபிக்கு கப்பலை செய்யுமாறு கட்டளையிட்டான். ஆகவே நூஹ் நபி கப்பல் செய்து முடித்தார்கள்.


அப்போது அல்லாஹ் வானிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். பூமியிலிருந்து நீரூற்றுக்களைப் பொங்கியெழச் செய்தான்.


நூஹ் நபியும் முஸ்லிம்களும் கப்பலில் ஏறித் தப்பித்தார்கள். காஃபிர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு இறந்தார்கள். (திருக்குர்ஆன் 11 : 36 - 45)


இதன்மூலம் இறைவன் நினைத்தால் மழையைக் காெண்டு முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்குவான் என்பது தெளிவாகிறது.

2) காற்று மூலம் உதவி


காற்று என்பது சுவாசத்திற்குரியது. காற்று இல்லாமல் மனிதர்களால் உயிர்வாழ முடியாது. இது முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் பாெதுவான அருளாகும்.


இருந்தபோதிலும் இந்த காற்றை வைத்து இறைவன் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்குவான். காஃபிர்களுக்கு தோல்வியை வழங்குவான் 


அல்லாஹ் கூறுகிறான் :


يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَآءَتْكُمْ جُنُودٌۭ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا وَجُنُودًۭا لَّمْ تَرَوْهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا⭘ 


இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்! (எதிரிப்) படைகள் உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக ஒரு காற்றையும்இ உங்களால் பார்க்க முடியாத படைகளையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான். 


அல் குர்ஆன் -   33 : 9


இந்த குர்ஆன் வசனம் அகழ்ப்போர் குறித்து அருளப்பட்டது.


முஸ்லிம்களின் தலைமை இடமாக விளங்கிய மதீனாவையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த எதிரிகளும் படைதிரட்டி வந்தனர். அவர்களை எதிர்கொள்வதற்காக மதினாவைச் சுற்றிலும் அகழ் தோண்டப்பட்டது.


அந்த போரில் எதிரிகளை வீழ்த்துவதற்காக அல்லாஹ் காற்றை அனுப்பினான். அந்தக் காற்றைக் கொண்டு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.


இதுபற்றி நபிகளார் கூறியுள்ளார்கள்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார் :


நான் (அகழ்ப்போரின்போது) கீழைக் காற்றினால் ('ஸபா') வெற்றியளிக்கப்பட்டேன். 'அத்' சமுதாயத்தார் மேலைக் காற்றினால் ('தபூர்') அழிக்கப்பட்டனர். 


என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 3343. 


காற்றைக் கொண்டு அல்லாஹ் உதவி செய்வான் என்பதற்கு சுலைமான் நபியின் வரலாற்றிலும் சான்று உள்ளது.


அல்லாஹ் கூறுகிறான் :


وَلِسُلَيْمَـٰنَ ٱلرِّيحَ عَاصِفَةًۭ تَجْرِى بِأَمْرِهِۦٓ إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عَـٰلِمِينَ⭘ 


வேகமாக வீசும் காற்றையும் சுலைமானுக்கு (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அதுஇ நாம் அருள் வளம் செய்த பூமியை நோக்கி அவரது ஆணைப்படி வீசியது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.


அல் குர்ஆன் -   21 : 81


வேகமாக வீசும் காற்றை அல்லாஹ் சுலைமான் நபிக்கு வசப்படுத்தி தந்தான். அதை வைத்து அவர்கள் வெற்றி பெற்று சிறந்த ஆட்சி புரிந்தார்கள்.


எதிரிகளை காற்றைக் கொண்டு அல்லாஹ் அழிப்பான் என்பதற்கு ஆது சமுதாயத்திடம் சான்று உள்ளது.


அல்லாஹ் கூறுகிறான் :


وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ⭘ مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ⭘ 


ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை உள்ளது). அவர்களுக்கு எதிராக மலட்டுக் காற்றை நாம் அனுப்பியபோதுஇ அது எந்தவொரு பொருளின்மீது பட்டாலும் அதை மக்கியதைப் போல் ஆக்கி விடும்.


அல் குர்ஆன் -   51 : 41இ42


ஆக எதிரிகளுக்கு எதிராக காற்றை அனுப்பி அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்வான் என்பதை மேற்கூறிய அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கின்றன.


3) சூரியன் மூலம் உதவி


சூரியன் என்பது பகலில் உழைப்பதற்கான வலுவைத் தரும். வெளிச்சத்தைத் தரும். உடலிற்கு வைட்டமின் டி என்ற சத்தை வழங்கும். எலும்பை உறுதிப்படுத்தும்.


இது முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் இறைவனால் வழங்கப்படும் பொதுவான அருளாகும்.


இருந்தபோதிலும் இந்த சூரியனை வைத்து இறைவன் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்குவான்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஃ பின் நூன்) புனிதப் போருக்குச் சென்றார். 


அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம்இ 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்துஇ அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோஇ பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டுஇ அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்' என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். 


ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். 


(சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்கஇ சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கிஇ 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்' என்று கூறிவிட்டுஇ 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு' என்று பிரார்த்தித்தார். 


எனவேஇ அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. 


(வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். 


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 3124.  ஸஹீஹ் முஸ்லிம் : 3595. 


மேற்கூறிய வசனத்தில் முஸ்லிம்களின் வெற்றிக்கு சூரியன் உதவி செய்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.


4) கடல் மூலம் உதவி


கடல் என்பது இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்று. அதில் நாம் பயணம் செய்யலாம். அதிலுள்ளவைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


இது முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் இறைவனால் வழங்கப்பட்ட பொதுவான அருட்கொடையாகும்.


இருந்தபோதிலும் இந்த கடலை வைத்து அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்குவான். இதற்கு மூஸா நபியின் வரலாறு சிறந்த சான்றாகும்.


மூஸா நபியும் பனூஇஸ்ரவேலர்களும் ஃபிர்அவ்னிற்குத் தெரியாமல் எகிப்து நாட்டைவிட்டு வெளியேற முனைந்தார்கள். அப்போது இதை அறிந்து கொண்ட ஃபிர்அவ்ன் ததைு படைகளோடு அவர்களைத் துரத்தினான். அதிகாலையில் இரண்டே படையும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. அந்நேரத்தில் மூஸா நபியின் கைத்தடியைக் கொண்டு கடலில் அடிக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதன்படி மூஸா நபி கடலில் அடிக்க கடல் இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. அந்த வழியாக மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும் தப்பித்துச் சென்றார்கள்.


ஃபிர்அவ்னும் அவனது படையினரும் நடுக்கடலில் வரும்போது கடல் மூடி அவர்களை அழித்தது.


இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :


وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَـٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ⭘ 


நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்துஇ உங்களைக் காப்பாற்றியதையும்இ நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நாம் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்ததையும் நினைத்துப் பாருங்கள். 


அல் குர்ஆன் -   2 : 50


ஆக கடலைக் கொண்டும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்வான் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.


இவ்வாறு இயற்கையான பிற படைப்புகளை வைத்து அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்குவான். அதற்கு முஸ்லிம்கள் வெற்றிக்குரிய வழிகளை மேற்கொள்ள வேண்டும்.


















பாகம் 5 - நாம் வெற்றி பெற்றால்….


அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்இ வெற்றிக்குப் பிறகு என்ன வெய்ய வேண்டும்? என்பதுதான்.


இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :


إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ⭘  وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا⭘  فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا⭘


(நபியே!) அல்லாஹ்வின் உதவியும்இ வெற்றியும் வரும்போதுஇ மக்கள் கூட்டங் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் பார்க்கும்போதுஇ உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக! அவனிடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அவன் மன்னிப்புமிக்கவனாக இருக்கிறான்.


அல்குர்ஆன் 110 : 1 -3


அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்கினால்இ நாம் அல்லாஹ்வைப் புகழ வேண்டும். அவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். இதுதான் வெற்றியாளர்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும்.


மாறாக நம்மிடத்தில் ஆணவமோஇ அகம்பாவமோஇ கர்வமோஇ பெருமையோ வந்துவிடக்கூடாது. இவை நம்முடைய வெற்றியை இழக்கச் செய்யும். நம்மை தோல்வியுறச் செய்யும்.


ஆக நாம் நமது வெற்றியைத் தக்க வைக்க வேண்டுமானால் இறைவனைப் புகழக்கூடியவர்களாகவும் அவனை வணங்கி நடப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


ٱلَّذِينَ إِن مَّكَّنَّـٰهُمْ فِى ٱلْأَرْضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلْمَعْرُوفِ وَنَهَوْا۟ عَنِ ٱلْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَـٰقِبَةُ ٱلْأُمُورِ


பூமியில் நாம் அவர்களுக்கு அதிகாரத்தை அளித்தால் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; ஸகாத்தைக் கொடுப்பார்கள். நன்மையை ஏவிஇ தீமையைத் தடுப்பார்கள். செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.


அல்குர்ஆன் 22:41


அல்லாஹ் நமக்கு ஆட்சியை வழங்கினால் தொழுகையை நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தை வழங்க வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.


அதாவது கடமையான வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். பிற மக்களையும் நன்மை செய்யுமாறு ஏவி தீமையைவைிட்டும் அவர்களைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆட்சி நம்மை விட்டும் அகலாமல் இருக்கும்.


No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...