ஏக இறைவனின் திருப்பெயரால்....
இஸ்லாமும் இளைமைப் பருவமும்
புத்தகம் டவுன்லோடு செய்ய
இளமைப் பருவம் இன்றியமையா பருவம்
இளமை பருவம் வாழ்வின் முக்கியமான பருவமாகும். நம் வாழ்வின் எதிர்காலம் இளமையைப் பொறுத்தே அமையும்.
நமது சொந்த வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு நமது இளமை அவசியம். அதை சரியாகப் பயன்படுத்தினால் நமது வாழ்வு ஔிமயமாகும்.
நமது இளமைப்பருவத்தில் நம்மிடமுள்ள அறிவைஇ ஆற்றலைஇ திறமையைஇ வீரத்தைஇ அன்பை சரியாகப் பயன்படுத்தினால் நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
இளமைப்பருவத்திலுள்ள நமது அறிவை நாம் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாம் முட்டாள்களாகிவிடுவோம்.
இளமைப்பருவத்திலுள்ள நமது ஆற்றலைப் சரியாகப் பயன்படுத்தி உழைக்காவிட்டால் நாம் ஏழைகளாக மாறிவிடுவோம்.
இளமைப்பருவத்திலுள்ள நமது திறமையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாம் ஏமாளிகளாக மாறிவிடுவோம்.
இளமைப்பருவத்திலுள்ள நமது அன்பை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் உறவுகளற்ற அநாதைகளாக மாறிவிடுவோம்.
இளமைப்பருவத்திலுள்ள நமது வீரத்தை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாம் கோழைகளாக மாறிவிடுவோம்.
மொத்தத்தில் நாம் நமது இளமையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் முதுமையில் புலம்புக்கூடியவர்களாக மாறிவிடுவோம்.
இளமைப்பருவத்தின் வயது எல்லை
இளமைப்பருவத்தின் ஆரம்பம் என்பது பருவ வயதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். நீங்கள் இளமைப் பருவத்தை அடைவதற்காக (உங்களை வளரச் செய்கிறோம்.) உங்களில் (குறைந்த ஆயுளில்) கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் விபரம் தெரிந்த பின்பு (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர்.
அல்குர்ஆன் 22 : 5
பருவ வயதுதான் இளமைப்பருவத்தின் ஆரம்பம் என்பதை பெரும்பாலானவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். அதேசமயம் இளமைப்பருவத்தில் முடிவு எது என்பதில் கருத்து முரண்பாடு உள்ளது.
நாற்பது வயதும் இளமைப்பருவத்திற்குரிய வயதுதான் என்பதை கீழ்க்கண்ட வசனத்தில் இறைவன் தெரிவிக்கிறான்.
وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ إِحْسَـٰنًا ۖ حَمَلَتْهُ أُمُّهُۥ كُرْهًۭا وَوَضَعَتْهُ كُرْهًۭا ۖ وَحَمْلُهُۥ وَفِصَـٰلُهُۥ ثَلَـٰثُونَ شَهْرًا ۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةًۭ قَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓ ۖ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ⭘
தன் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனது தாய் சிரமத்துடன் அவனைச் சுமந்துஇ சிரமத்துடன் அவனைப் பெற்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும்இ பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது இளமைப் பருவத்தை அடைந்துஇ நாற்பது வயதை அடைந்ததும்இ “என் இறைவனே! எனக்கும்இ என் பெற்றோருக்கும் நீ வழங்கிய அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்இ நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! எனது பிள்ளைகளை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் உன்னை நோக்கித் திரும்பி விட்டேன். நான் முஸ்லிம்களில் உள்ளவன்” எனக் கூறுகிறான்.
அல் குர்ஆன் - 46 : 15
இளமைப் பருவம் என்பது நாற்பதைத் தாண்டியும் இருக்கும் என்பதை பின்வரும் சம்பவம் தெரிவிக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஆறாவது வானத்திலிருந்த மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள்இ 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்இ 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3207.
நபியவர்கள் தனது ஐம்பது வயதிற்குப் பிறகே மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் செய்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்த மூஸா நபி அவர்களை இளைஞர் என்று கூறினார்கள். இதிலிருந்து ஐம்பது வயதும் இளமைப்பருவம்தான் என்று தெரிகிறது.
ஆக இதிலிருந்து இளமைப்பருவத்தின எல்லையை பருவ வயதிலிருந்து தோராயமாக 50 வயது வரை என்று எடுத்துக் கொள்ளலாம்.
சமூகத்தின் வளர்ச்சிக்கு இளமை அவசியம்
அதைப்போல் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அதன் பாதுகாப்பிற்கும் இளமைப்பருவம் இன்றியமையாததாகும்.
இளைஞர்கள்தான் சமுதாயத்தின் தூண்களாக செயல்படுகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சி இளைஞர்களைப் பொறுத்தே அமையும். அதனால்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்இ ‘இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது’ என்று கூறினார்.
இளைஞர்களைப் பொறுத்தே ஒரு சமுதாயத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும் கட்டமைக்கப்படுகின்றன.
இளமையை வைத்தே சமூகத்தின் வெற்றியை தீர்மானிக்கலாம்.
சமூகத்தின் சவால்களை இளைஞர்கள் இல்லாமல் சமாளிப்பது சாத்தியமற்றது.
ஆக நாம் நமது இளமையை சரியாகப் பயன்படுத்தினால்தான் நாமும் நன்றாக இருப்போம் நமது சமூகமும் நன்றாக இருக்கும். அந்த அளவிற்கு இளமை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
பலம் வாய்ந்த பருவம்
அதுமட்டுமில்லாமல் இளமைப் பருவம் என்பதே இறைவன் நமக்கு வழங்கிய மிகப்பெரும் அருட்காெடையாகும்.
ஏனெனில் இளமை பருவம்தான் பலம்வாய்ந்த பருவமாக உள்ளது.
இறைவன் மனித வாழ்வை மூன்று பருவங்களாக அமைத்து தந்திருக்கிறான்.
குழந்தை பருவம்
இளமைப் பருவம்
முதிய பருவம்
குழந்தை பருவம் என்பது பிறப்பு முதல் பருவ வயதை அடையும் வரையிலுள்ள காலகட்டத்தைக் குறிக்கும். இந்த குழந்தைப் பருவத்தில் மனிதன் பலவீனனாகவே இருப்பான்.
இளமைப் பருவம் என்பது பருவ வயதை அடைந்ததிலிருந்து முதிய வயதை அடையும் வயைிலுள்ள காலகட்டத்தைக் குறிக்கும். இந்த இளமைப்பருவம் ஏறத்தாழ 40 முதல் 45 வயது வரையிலும் தொடரும்.
முதிய பருவம் என்பது 45 முதல் மரணிக்கும் வரையிலுள்ள கால கட்டத்தைக் குறிக்கும். நமது சமூகத்தின் தோராய வயது 60 - 70 க்கு உட்பட்டதாகும் என நபிகளார் கூறியுள்ளார்கள். அந்த வகையில் முதிய வயது 45 முதல் 20 வரையில் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதில் குழந்தை பருவம் என்பது பலவீனமான பருவமாகும்.
இளமைப்பருவத்தில் மனிதன் பலம்வாய்ந்தவனாக மாறிவிடுகிறான்.
முதிய பருவத்தில் மீண்டும் பலவீனமாக மாறிவிடுகிறான்.
மனிதன் தனது வாழ்வில் இருமுறை பலவீனத்தையும் ஒரே ஒரு முறை பலத்தையும் பெறுகிறான்.
ஆக மனிதன் பலத்தை பெறும் ஒரே பருவமாக இளமைப்பருவம் உள்ளது.
இதை அல்லாஹ் தனது திருமறையில் அழகுற விவரிக்கிறான்.
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُم مِّن ضَعْفٍۢ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍۢ قُوَّةًۭ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍۢ ضَعْفًۭا وَشَيْبَةًۭ ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۖ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْقَدِيرُ⭘
அல்லாஹ்வே உங்களைப் பலவீனமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும்இ வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன்இ தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
அல் குர்ஆன் - 30 : 54
மனித வாழ்வு பலவீனத்தில் ஆரம்பித்து பலவீனத்திலேயே முடிகிறது. இடையில் மட்டுமே அவன் பலம் அடைகிறான். அவன் பலத்தை பெறும் பருவத்தை நாம் இளமைப்பருவம் என்று அழைக்கிறோம்.
வளர்ச்சியின் பருவம்
அதேபோல் இளமைப்பருவம்தான் வளர்ச்சியின் பருவமாகவும் உள்ளது.
ஏனெனில் குழந்தை பருவத்தில் நமது உடல் ஆரோக்கியமும் அறிவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையும். அப்போது நமது ஆரோக்கியத்திலும் அறிவிலும் ஒரு ஸ்திரத்தின்மை இருக்காது.
அதைப்போல் நாம் முதுமை பருவத்தை அடைந்தால் நமது அறிவும் ஆற்றலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கும். இறுதியில் ஒன்றும் இல்லாமல் ஆகும்.
ஆனால் இளமைப்பருவத்திலோ அறிவும் ஆரோக்கியமும் ஸ்திரத்தன்மையைப் பெற்று நன்கு வலுப்பெறும்.
இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :
وَٱللَّهُ أَخْرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَـٰتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْـًۭٔا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ⭘
உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்துஇ நீங்கள் எதையும் விளங்காமல் இருந்த நிலையில் அல்லாஹ் உங்களை வெளிப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களுக்குச் செவிப் புலனையும்இ பார்வைகளையும்இ உள்ளங்களையும் ஏற்படுத்தினான்.
அல் குர்ஆன் - 16 : 78
நாம் பிறக்கும் போது ஒன்றும் அறியாதவர்களாகவே பிறந்தோம். வாலிபப் பருவத்தில்தான் நமது அறிவு ஸ்திரத்தன்மை பெற்று நன்கு வளர்ச்சி பெறும் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறும்போதுஇ
உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். நீங்கள் இளமைப் பருவத்தை அடைவதற்காக (உங்களை வளரச் செய்கிறோம்.) உங்களில் (குறைந்த ஆயுளில்) கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் விபரம் தெரிந்த பின்பு (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர்.
அல்குர்ஆன் 22 : 5
وَٱللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّىٰكُمْ ۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍۢ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۭ قَدِيرٌۭ⭘
அல்லாஹ் உங்களைப் படைத்தான். பின்னர் அவன் உங்களைக் கைப்பற்றுவான். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாகஇ அவர்கள் விபரம் தெரிந்த பின்னர் (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர். அல்லாஹ் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
அல் குர்ஆன் - 16 : 70
وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى ٱلْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ⭘
யாருக்கு நாம் நீண்ட ஆயுளை வழங்கினோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக ஆக்குகிறோம். (இதை) அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
அல் குர்ஆன் - 36 : 68
குழந்தைப் பருவத்திலும் இளமைப்பருவத்திலும் நாம் அறியாதவர்களாக இருப்போம். இளமைப்பருவத்தில்தான் நமது அறிவும் ஆற்றலும் வளர்ச்சியுறும் என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் இறைவன் தெரியப்படுத்துகிறான்.
நீண்ட பருவம்
அதுமட்டுமில்லாமல் மனித வாழ்வின் நீண்ட பருவமாகவும் இளமைப் பருவம்தான் உள்ளது.
குழந்தை பருவம் 1 முதல் 15 வயது வரை இருக்கும்.
இளமைப்பருவம் 15 முதல் 50 வயது வரை இருக்கும்.
முதுமைப்பருவம் 50 முதல் 65 வயது வரை இருக்கும்.
குழந்தை பருவமும் முதிய பருவமும் தலா 15 வருடங்களைத் தான் அனுபவிக்கிறது. இளமைப்பருவம் மட்டும்தான் 35 வருடங்களை அனுபவிக்கிறது. ஆக ஒரு மனிதனின் பாதி வாழ்க்கை இளமைப்பருவத்தில்தான் கழிகிறது. அப்படித்தான் மனிதர்களை அல்லாஹ் படைத்திருக்கிறான்.
இளமைக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்
ஆகவேதான் இஸ்லாம் இளமைப்பருவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது.
சொர்க்கத்தில் நுழைபவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள்
இளமைப் பருவதின் சிறப்பை உணர்த்தும் விதமாக சொர்க்கத்தில் நுழையக்கூடிய அனைவரையும் இறைவன் இளைஞர்களாகவே நுழைவிப்பான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர் மலக்குகளைச் சேர்ந்த) பொது அறிவிப்பாளர் ஒருவர் வந்துஇ
"(சொர்க்கத்தில்) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள். ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள்.
நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள். ஒருபோதும் இறக்கமாட்டீர்கள்.
இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள்.
நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5457.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார். அங்கு துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5456.
சொர்க்கவாசிகளை இளைஞர்களாக ஆக்கி அவர்களின் இளமையை அழிந்துபோகாத வகையில் அமைத்ததிலிருந்து இளைமைப்பருவத்திற்கு இறைவன் வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
சொர்க்கத்தில் சேவகம் புரிபவர்கள் இளைஞர்கள்
அதைப்போல் சொர்க்கவாதிகளை மகிழ்விப்பதற்காக இறைவன் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாக இளைஞர்களை நியமித்திருப்பான்
وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًۭا مَّنثُورًۭا⭘
என்றும் நிலைத்திருக்கும் (இளமையின் ஆரம்பநிலையிலுள்ள) சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அ(ச்சிறு)வர்களை நீர் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துகள் என்றே எண்ணுவீர்!
அல் குர்ஆன் - 76 : 19
இளமைப் பருவம் ஆரம்பிக்கும் நிலையிலுள்ளவர்களை சொர்க்கத்தில் சேவகம் செய்பவர்களாக இறைவன் நியமிப்பான் என்பதிலிருந்து இளமையின் சிறப்பை இறைவன் தெரிவிக்கிறான்.
எதிரிகள் இளைஞர்களுக்கு வழங்கும் முக்கியத்துவம்
இந்துத்துவாவும் தீவிரவாதமும்
இன்று இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வாலிபர்களை குறிவைத்தே இயங்குகிறார்கள். அப்பாவி இந்து வாலிபர்களின் உள்ளத்தில் முஸ்லிம் வெறுப்பு நஞ்சை விதைப்பதில் மும்முரம் காட்டுகின்றனர்.
ஆர்எஸ்எஸ் ன் போன்ஸாலே
இதற்காகவே அவர்கள் போன்ஸாலே போன்ற இந்து இராணுவ பள்ளிகளை இயக்கி வருகின்றனர்.
இதில் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த பள்ளியில் தீவிரவாதிகளாக மாற்றப்படுபவர்களுக்கான தகுதிகள்
வயது மற்றும் வகுப்பு பிரிவு:
பிரிவு
வகுப்புகள்
மாணவர் வயது
ளுரடி-துரnழைச னுiஎளைழைn
5ஆம் வகுப்பு – 7ஆம் வகுப்பு
10 – 13 வயது
துரnழைச னுiஎளைழைn
8ஆம் வகுப்பு – 10ஆம் வகுப்பு
13 – 16 வயது
ளுநnழைச னுiஎளைழைn
11ஆம் வகுப்பு – 12ஆம் வகுப்பு
16 – 18 வயது
இதில் பயிற்சி பெறுபவர்கள் ராணுவம்இ காவல் துறைஇ ளுளுடீஇ Nனுயு போன்ற துறைகளில் சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் இத்துறைகளின் மூலம் இந்துத்துவ பயங்கரவாத சித்திந்தங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர்.
இந்த தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
2008 செப்டம்பர் மாதத்தில் மாலேகானில் பயங்கர குண்டுவெடித்தது. இந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரியாக கர்னல் புரோஹித் என்பவர் செயல்பட்டார். இந்த குண்டுவெடிப்பின் மையமாக செயல்பட்டது இந்த போன்சாலே இந்து இராணுவப்பள்ளிதான். இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிலர் வெடிப்பை நிகழ்த்துவதற்கு முன்னர் போன்ஸாலே பயிற்சி வளாகத்தில் சந்தித்தனர் என்று யுவுளு விசாரணையில் காணப்பட்டுள்ளது. அதே குழு போன்ஸாலேவில் நடந்த நிறுவன நேர்முகக் கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நான்தேடு மற்றும் மாலேகான் வெடிக்கான பயிற்சி முகாம்
2001–2006 காலங்கள் இடையே சுளுளுஃடீயதசயபெ னுயட‑இன் பயிற்சி முகாம்கள் போன்ஸாலேவில் நடத்தப்பட்டது. அங்கு ஆயுத மற்றும் குண்டு தயாரிக்கும் பயிற்சி கொடுப்பதாக கூறப்படுகிறது .
ஏகப்பட்ட உறுப்பினர்கள் இந்த பயிற்சி முகாம்களில் பங்கேற்று மாலேகான் மற்றும் நான்தேடு வெடிகளில் தொடர்புற்றனர்.
இதுபோன்ற பல சம்பவங்கள் இதன்மூலம் நடத்தப்பட்டது.
ஏபிவிபி
ஏபிவிபி என்பது மாணவர் போர்வையில் இடம்பெரும் இந்துத்துவாவின் தீவிரவாதப் படைகள். இவர்கள் நடத்திய அட்டூளியங்கள் ஒன்றிரண்டல்ல. ஏராளமான அட்டூளியங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
தற்காலத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனைகளை இவர்கள்தான் எழுப்பி வருகிறார்கள்.
பஜ்ரங் தளம்
இதுவும் இந்துத்துவாவின் இளைஞர் அமைப்புதான். இந்த பெயரைக் கேட்டால் இந்துக்களும் நடுங்குவார்கள். அந்த அளவிற்கு இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு இளைஞர்களைக் கொண்டு இந்திய இஸ்லாமியர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
ஸியோனிஸமும் இளைஞர்களும்
ஸியோனிசம் என்பது 19ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட யூத தேசியவாத இயக்கம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் பயங்கரவாதத்தின் மூலம் பாலஸ்தீனியர்களை அகற்றி யூத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இதற்காக அவர்கள் இளைஞர்களைத் தயார்படுத்தினார்கள். இளைஞர்களை மையப்படுத்தி பல இயக்கங்களை உருவாக்கினார்கள். அதில் சிலவற்றை பார்ப்போம்.
வுயபடவை-டீசைவாசiபாவ ஐளசயநட (பிறப்புரிமை இஸ்ரேல் பயணத்திட்டம்)
இந்த தீவிரவாத இயக்கம் 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஐரோப்பாஇ அமெரிக்காஇ கனடாஇ ஆஸ்திரேலியாஇ தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள யூத இளைஞர்களை மையமாக வைத்து இயங்கியது.
இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் 18 – 32 வயதிற்குட்படவர்களாகவே இருப்பர்.
இவர்களின் நோக்கம்:
உலகெங்கும் உள்ள யூத இளைஞர்களுக்கு இஸ்ரேலுடன் உணர்ச்சி பிணைப்பு ஏற்படுத்துதல்.
மேலும் யூத இளைஞர்களுக்கு இஸ்ரேல் நாட்டின் வரலாறுஇ அதன் கலாச்சாரம்இ அதன் மக்கள்இ இஸ்ரேல் நடத்திவரும் யுத்தங்கள் (பயங்கரவாதம்) போன்றவற்றை நேரில் அறியச் செய்தல் போன்றவற்றை மையமாக கொண்டு இயங்குகிறது.
இவர்களின் செயல்திட்டம் :
10 நாட்கள் முழுமையான இலவச சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வார்கள். இதற்கான விமானம்இ உணவுஇ தங்குமிடம் எல்லாம் இலவசம்.
அவர்களின் புனித இடங்கள் (ஜெருசலேம்இ மஸாடாஇ சாக்கடல்இ ஹோலோகாஸ்ட் மியூஸியம்) போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஐனுகு (இஸ்ரேல் ராணுவம்) இளைஞர்களுடனான கலந்துரையாடல்கள் நிகழ்த்துவார்கள். இங்கு போலி நாட்டுப்பற்றும் தீவிரவாதத் தன்மையும் போதிக்கப்படுகிறது.
ஆயளய ஐளசயநட துழரசநெல (இஸ்ரேல் பயண அனுபவத் திட்டம்)
இந்த இயக்கம் 2004 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஆயளய ஐளசயநட துழரசநெல என்றது இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் துநறiளா யுபநnஉல ஒன்றாக இயக்கும் ஒரு கல்வி மற்றும் கலாசார திட்டமாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள யூத இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம்இ இஸ்ரேலின் கலாசாரம்இ சமூகம் மற்றும் வாழ்க்கை முறையை நேரடியாக அனுபவிக்க வாய்ப்பு வழங்குவதாகும்.
மேலும் இது யூத இளைஞர்களுக்காக கல்விஇ தொழில்இ சமூக சேவை வாய்ப்புகள் ஆகியவற்றையும் அளிக்கிறது.
இதில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட யூத இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். இதில் இணையும் இளைஞர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்படும். கலாசார மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இதன் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன
இதன் இலட்சியம்:
இஸ்ரேலை "யூத இளைஞர்களின் இரண்டாம் இல்லமாக மாற்றுவது".
இந்த இயக்கம்தான் யுடலையா (இஸ்ரேலுக்கு குடியேறல்) செய்வதற்கான முதலாவது படியாக இருந்தது.
லுழரவா யுடலையா ஆழஎநஅநவெ (இளைஞர் அலியாஹ் இயக்கம்)
இது 1933ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம்இ ஹிட்லர் தலைமையிலான நாசி ஜெர்மனியிலிருந்து யூதர்களை பத்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டு வருதல்.
வரலாற்றுப் பின்னணி:
இந்த இயக்கம் எக்ஸோடஸ் (நுஒழனரள) எனப்படும் யூத அகதிகள் வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.
2ம் உலகப் போரின் போது மனிதாபிமான செயல்பாடாக பெரிதும் பாராட்டப்பட்டது.
இதன் பங்கு:
நாசிகளிடமிருந்து தப்பிய 30இ000 யூத இளைஞர்களை 1930கள்–40களில் இஸ்ரேலுக்குள் அழைத்துவரப்பட்டனர்.
இஸ்ரேலில் பள்ளிஇ தங்குமிடம்இ வேலை வாய்ப்புஇ மற்றும் சமூக வாழ்வின் முழுமையான ஒருங்கிணைப்பும் வழங்கப்பட்டது.
இவ்வாறு உலக முழுக்க இயங்கிவரும் இஸ்லாமிய எதிரிகள் அனைவரும் இளைஞர்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.
உலக முஸ்லிம்களின் எதிரி தஜ்ஜால்
ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரியாக வரவிருக்கக்கூடியவன் தஜ்ஜால். தஜ்ஜாலைப் பற்றிக் கேள்விபடாதவர்களோ அவனை நினைத்து அஞ்சாதவர்களோ முஸ்லிம் உம்மத்தில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவன் நமக்கு எதிரி. அந்த தஜ்ஜாலும் இளைஞனாகத்தான் இருப்பான் என்பதை நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும்இ (சில சமயம்) உயர்த்தவும் செய்தார்கள். இறுதியில் அவன்இ (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.
அப்போது நபியவர்கள்இ “தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.
உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்துஇ வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்; அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5629.
மேற்கூறிய நபிமாெழியால் முஸ்லிம்களுக்கு எதிரியாக வரவிருக்கும் தஜ்ஜால் இளைஞனாகவே இருப்பான் என்று நபியவர்கள் கூறியதிலிருந்து இளைஞர்களாக உள்ள எதிரிகளின் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
எதிரி இளைஞர்களின் எதிர்ப்பை முறியடிக்கவேண்டும் என்றால் இஸ்லாமிய இளைஞர்கள் இஸ்லாத்தின் பால் ஈடுபாடு கொண்டவர்களாக மாற வேண்டும். இஸ்லாத்தின்மீதான தன் பற்றை அதிகப்படுத்த வேண்டும்.
உண்மையான முஸ்லிம் இளைஞர்களால்தான் எதிரி இளைஞர்களை முறியடிக்க முடியும் என்பதை நபியவர்கள் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவேஇ (மதீனாவுக்கு வெளியே)இ மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்.
அவனை நோக்கி மக்களில் சிறந்த இளைஞர் ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம்இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!' என்பார்.
அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி)இ 'நான் இவனைக் கொன்றுஇ பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!' என்பார்கள்.
உடனேஇ அவன் அவரைக் கொன்றுஇ பின்னர் உயிர்ப்பிப்பான்.
அப்போதுஇ (இளைஞரான) அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும்இ 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!' என்று கூறுவார். தஜ்ஜால் 'நான் இவரைக் கொல்வேன்!' என்பான். ஆனால்இ அவனால் அவரைக் கொல்ல முடியாது!'
என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1882.
தஜ்ஜால் செய்யும் சில செயல்களைப் பார்த்து மக்கள் குழம்பி நிற்பார்கள். அப்போது அந்த இளைஞர் மேற்கொள்ளும் துணிச்சலான செயல்கள் மக்களை குழப்பத்திலிருந்து விடுவிக்கும். ஆகவே இஸ்லாமிய இளைஞர்கள் மார்க்கத்தின் மீது உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் எதிரிகளை வீழ்த்த முடியும்.
இதை முஹம்மது நபி நபித்துவ பட்டம் பெற்ற உடனையே வரக்கா இப்னு நவ்பல் என்பவர் முஹம்மது நபியவர்களிடத்தில் தெரிவிக்கிறார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :
வரக்காஇ நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 6982.
எதிரிகளின் எதிர்ப்பிலிருந்து இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் காப்பதற்கு இளைஞர்கள் அவசியம். பிற்காலத்தில் இதை நபித்தோழர்கள் உணர்த்தவும் செய்தார்கள்.
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்கள் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா சமாதான உடன் படிக்கையின் படி ஹிஜ்ரீ 7-ம் ஆண்டு) உம்ரா செய்தபோதுஇ நபி(ஸல்) அவர்களைத் (தாக்கித்) துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்களை இணைவைப்போரிடமிருந்தும் அவர்களின் இளைஞர்களிடமிருந்தும் நாங்கள் (பாதுகாப்பு வளையம் அமைத்து) மறைத்துக் கொண்டோம்.
ஸஹீஹ் புகாரி : 4255.
நபியவர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இளைஞர்கள் ஈடுபட்டார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் உணர்த்துகிறது.
ஆக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கும் இளமை அவசியம்.
இதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இளமையும் அறிவும்
நமது இளைஞர்களுக்கு சரியான கல்வி வழங்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். ‘இளைஞர்கள் என்பவர்கள் குயவனின் கையிலுள்ள மண்பாண்டம் போன்றவர்கள்’ என்று தமிழிலே ஒரு பழமொழி உள்ளது. நேர்த்தியான குயவன் தயாரிக்கும் மண்பாண்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். அது போல நாம் நமது இளைஞர்களை சரியாக வார்த்தெடுத்தால் அவர்கள் சமுதாயத்தின் பலமாக செயல்படுவார்கள்.
அதேபோல் இளைஞர்களும் கல்வி கற்க முன்வர வேண்டும். ‘இளமையில் கல்’ என்று கூறுவார்கள். இளமையில் கற்கப்படும் கல்வி இன்றியமையாததாக இருக்கிறது. ஆகவே இளைஞர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுபற்றி இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது.
வாலிபத்தை பள்ளிவாசலில் கழிக்க வேண்டும்
"" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:
நீதிமிக்க அரசன்.
அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
அல்லாஹ்வுக்காகவே நேசித்துஇ அவனுக்காகவே ஒன்றிணைந்துஇ அவனுக்காகவே பிரிந்த இருவர்.
அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன்.
தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்இ
தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1423.
இளைஞர்களாக இருப்பவர்கள் பள்ளிவாசலோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அங்கு அமர்ந்து மார்க்க கல்வியும் அவசியமான உலகக் கல்வியையும் கற்க வேண்டும். அதுதான் இம்மை மறுமை வெற்றிக்கு உதவும்.
அதைப்போல் இளைஞர்களாக இருப்பவர்கள் வணக்கவழிபாட்டிலும் மூழ்கித் திளைக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளிவாசலோடு தொடர்புடையவராகவும் வணக்க வழிபாட்டில் மூழ்கியவராகவும் இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்கு மஹ்ஸர் பெருவெளியில் அர்ஷின் நிழல் கிடைக்கும்.
நபியின் காலத்தில்….
நபியின் காலத்தில் மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் விஷயத்தில் இளைஞர்களான நபித்தோழர்கள் பேரார்வத்தோடு இருந்தார்கள்.
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்கள் :
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்' என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
ஸஹீஹ் புகாரி : 631.
நபியவர்களின் காலத்தில் கல்வி கற்பதில் இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருந்தது? என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
இதற்கு இன்னொரு சான்றையும் ஆதாரமாகப் பார்க்கலாம்.
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்கள் :
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)இ 'அவர் எத்தகைய மனிதரென்றால்இ இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்இ அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம்இ உபை இப்னு கஅப்இ முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3758.
நபியவர்கள் நான்கு பேரிடமிருந்து குர்ஆனைக் கற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் இளைஞர்கள்தான். அவர்களில் ஒருவர்கூட முதியவர் இல்லை.
இதில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியை நேசிப்பதாகக் கூறும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியும் இளைஞர்தான்.
அதைப்போல் இளைஞர்களின் அறிவுத்திறனிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு அனஸ் இப்னு மாலிக் ரலி.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது நான் பத்து வயதுடைய (சிறு)வனாய் இருந்தேன்.
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணிவிடைகள் செய்தேன்.
நான் இருபது வயதுடையவனாய் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.
'பர்தா' தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5166இ ஸஹீஹ் முஸ்லிம் : 4889.
அனஸ் இப்னு மாலிக் ரலி தனது இளமைப் பருவத்தின் ஆரம்பத்தை நபிகளாருடன் கழித்தார்கள். ஆகவேதான் அவர்கள் மிகப்பெரும் மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார்கள்.
அனஸ் ரலி சுமார் 2286 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை வகிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அனஸ் ரலி பஸராவின் மிகப்பெரும் மார்க்க அறிஞராக திகழ்ந்தார்கள்.
அனஸ் ரலி மதினாவிற்கு வந்தால் அவர்களை சந்தித்து நபிமொழிகளைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு அவர்கள் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார்கள்.
இவ்வாறு நபியின் காலத்தில் இளைஞர்கள் மார்க்கத்தைக் கற்று அவற்றைத் தங்களது சமூகத்திற்கு கற்பிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களிலுள்ள இளைஞிகளும் மார்க்கத்தைக் கற்ற அறிவாளிகளாக இருந்துள்ளார்கள்.
மார்க்க அறிவை வளர்த்துக் கொண்ட இளம்பெண்மணிக்கு உதாரணமாக அன்னை ஆயிஷா ரலியைப் பார்க்கலாம்.
அன்னை ஆயிஷா ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5133.
அன்னை ஆயிஷா ரலி ஒன்பதாவது வயதில் வாலிப பருவத்தை அடைந்துவிட்டார்கள். அதிலிருந்து ஏறத்தாள ஒன்பது ஆண்டுகள் நபிகளாருடன் வாழ்ந்து மார்க்கக்கல்வியைக் கற்றுக் கொண்டு மிகப்பெரும் மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார்கள்.
நபிமொழிகளை அதிகமாக அறிவித்தவர் பட்டியலில் ஆயிஷா ரலி நான்காவது இடத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அவற்றில் ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம்களில் மட்டும் 297 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அளவிற்கு அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளார்கள்.
நபித்தோழர்களின் மரணத்திற்குப் பிறகு மார்க்கம் சம்பந்தமான விவகாரங்கள் குறித்து அன்னை ஆயிஷா ரலியிடமே கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. அந்த அளவிற்கு அவர்கள் அறிவுஜீவியாகத் திகழ்ந்தார்கள்.
இதேபோன்ற நடவடிக்கையைத்தான் நபித்தோழர்களின் காலத்திலும் தாபிஈன்களைச் சேர்ந்த இளைஞர்கள் கடைபிடித்தார்கள்.
நபித்தோழர்களின் காலத்தில்…
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்கள் :
நாங்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப்(ரலி) வந்துஇ 'அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓதமுடியுமா?' என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு மஸ்வூத்(ரலி)இ 'நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக் காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன்' என்று கூறினார்கள்.
அதற்கு கப்பாப்(ரலி)இ 'சரி! (ஓதிக் காட்டச் சொல்லுங்கள்)' என்று கூறினார்கள்.
இப்னு மஸ்வூத்(ரலி) (என்னிடம்)இ 'அல்கமா! நீங்கள் ஓதுங்கள்' என்று கூறஇ ஸியாத் இப்னு ஹுதைர்(ரஹ்) அவர்களின் சகோதரர் ஸைத் இப்னு ஹுதைர்(ரஹ்)இ 'அல்கமாஇ எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்கஇ அவரையா ஓதச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
உடனே இப்னு மஸ்ஊத்(ரலி)இ 'நீங்கள் விரும்பினால் நபி(ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும்இ அல்கமாவுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன்' என்று கூறினார்கள்.
அப்போது நான் (குர்ஆனின் 19வது) அத்தியாயம் மர்யமிலிருந்து ஐம்பது வசனங்களை ஓதினேன்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) (கப்பாப்(ரலி) அவர்களை நோக்கி)இ '(இவரின் ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு அவர்கள்இ 'நன்றாக ஓதினார்' என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)இ 'நான் எதை ஓதினாலும் அதை இருவரும் ஓதி விடுவார்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4391.
இப்னு மஸ்வூத் ரலி மிகப்பெரும் மார்க்க அறிஞராக திகழ்ந்தார்கள். ஃபத்வா வழங்குவதில் சிறந்தவராகத் திகழ்ந்தா்கள். அவர்களைச் சுற்றி அமர்ந்து மார்க்கத்தை கற்றுக் காெள்பவர்களாக அதிகமான இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கிறது.
திருக்குர்ஆனைத் தொகுத்த இளைஞர்கள்
இளைஞர்களின் அறிவு மிகப்பெரும் ஆயுதம் என்பதை கீழ்க்கண்ட சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.
ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்கள் :
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்கர்(ரலி)இ எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.)
அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள் :
உமர்(ரலி) என்னிடம் வந்துஇ 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டுஇ அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவேஇ) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென கூறினார்.
அதற்கு நான்இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு உமர் அவர்கள்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்.
இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன்.
(இதை அபூபக்கர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)
(பிறகு) அபூபக்கர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவேஇ நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான்இ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
அதற்கு அபூபக்கர்(ரலி)இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான்.
(குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.)
எனவேஇ (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரிச்ச மட்டைகள்இ ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன்.
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்இ அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.
ஸஹீஹ் புகாரி : 4986.
குர்ஆனைத் திரட்டுவது என்பது மகத்தான பணி. காலங்காலத்திற்கும் நிற்கும் பணி. நிரந்தர நன்மைகளைப் பெற்றுத்தரும் பணி.
அதுமட்டுமில்லாமால் இது மிக மிக கவனமாக மேற்காெள்ள வேண்டிய பணி. சிறு தவறு நேர்ந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பணி.
இத்தகைய பணியை ஒரு இளைஞர் சிறப்பாக முடித்திருக்கிறார். இதில் இன்றைய இளைஞர்களுக்கு பெரும் படிப்பினை உள்ளது.
நபித்தோழர்களில் இளைஞராக இருந்தவர் குர்ஆனைத் தொகுத்திருக்கிறார். ஆனால் இன்றைய இளைஞர்களோ திருக்குர்ஆனை பார்த்து ஓதுவதற்குக் கூட முன்வராதவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே நமது நிலை மாற வேண்டும். இன்றைய இளைஞர்கள் திருக்குர்ஆனோடு நம்மை ஒன்றிணைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளால்தான் நபித்தோழர்களும் தாபிஈன்களும் எதிரிகளை வென்றார்கள். உலகை வென்றார்கள்.
வணக்க வழிபாடும் இளைஞர்களும்
வெறும் அறிவை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. வெற்று அறிவிற்கு எவ்வித மகத்துவமும் இல்லை. அது வெறும் உடலைப் போன்றதுதான். நம் அறிவை வைத்து நாம் செய்யும் செயல்கள்தான் அந்த அறிவிற்கு உயிரை அளிக்கும். அதற்கு மகத்துவத்தை வழங்கும்.
ஆகவே இளைஞர்கள் மார்க்க அறிவைப் பெற்று அதனடிப்படையில் இறைவணக்கத்தில் ஈடுபடக்கூடியவர்களாக திகழ வேண்டும்.
நபியின் காலத்தில்…
நபித்தோழர்களிலுள்ள இளைஞர்கள் வணக்க வழிபாட்டில் மும்முரமாக ஈடுபடக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். அதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. ஒரு சில ஆதாரங்களை மட்டும் பார்ப்போம்.
இளைஞராக இருந்த இப்னு உமர்(ரலி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் (என்னைக் குறித்து) 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று கூறினார்கள்.
அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
ஸஹீஹ் புகாரி : 1121 1122.
இரவில் நின்று வணங்குவதற்கு அதிக நன்மைகள் உண்டு. அது மனிதனை சிறந்தவனாக மாற்றும். ஆகவேதான் ‘இரவில் தொழக்கூடியவராக மாறுங்கள்’ என்று இப்னு உமர் ரலி குறித்து நபியவர்கள் அறிவுரை கூறினார்கள்.
நபியவர்களின் அறிவுரைக்கு ஏற்ப அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் இரவில் அதிக நேரம் நின்று வணங்கக்கூடியவராக மாறினார்கள்.
இப்னு உமர் ரலியின் இந்த செயல்பாட்டில் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த படிப்பினைகள் உண்டு.
ஆனால் இன்றைய இளைஞர்களோ கடமையான தொழுகையைக் கூட தொழாதவர்களாக உள்ளார்கள். இது வேதனை தரத்தக்க விஷயம். நாம் இப்னு உமர் ரலியிடத்திலிருந்து பாடங்கள் பெற வேண்டும்.
வணக்க வழிபாட்டில் இளைய சஹாபாக்கள் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு இருந்தார்கள் என்பதற்கு இன்னொரு சான்றும் உள்ளது.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்கள் :
பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள்.
(என் தந்தை) அமர்(ரலி) தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.
அப்போது அவள்இ 'அவர் நல்ல மனிதர் தாம்; (ஆனால்இ) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை' என்று சொல்வாள்.
இதே நிலை நீடித்தபோதுஇ (என் தந்தை) அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள்.
அப்போதுஇ 'என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள்இ 'நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?' என்று கேட்டார்கள். நான்இ 'தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்' என்று சொன்னேன்.
('குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்' என்று கேட்டார்கள்.
நான்இ 'ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)' என்று சொன்னேன்.
அவர்கள்இ 'மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்' என்று கூறினார்கள்.
'நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்திபெற்றுள்ளேன்' என்று கூறினேன். 'இரண்டு நாள்கள் நோன்பைவிட்டுவிட்டுஇ ஒரு நாள் நோற்றுக்கொள்!' என்று கூறினார்கள்.
நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள்இ '(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படிஇ ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும்இ ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்' என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.
ஸஹீஹ் புகாரி : 5052.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி இளம்வயது நபித்தோழர். அவர் அப்போதுதான் திருமணம் முடித்திருந்தார். புதுமாப்பிள்ளையாக தனது மனைவியை சுற்றி வரக்கூடிய நிலையில் அவரது உள்ளமோ இறைவழிபாட்டை சுற்றி வந்தது.
அவர் இரவில் நின்று வணங்குபவராகவும் அதிகம் நோன்பு நோற்பவராகவும் திகழ்ந்தார்கள்.
இதில் இளைஞர்களுக்கு பெரும்படிப்பினை உள்ளது.
ஏனெனில் அவர் தனது இளமையின் பலத்தை வணக்க வழிபாட்டில் கழிக்க நினைத்தார். ஆனால் நாமோ நமது இளமையை வீணிலும் விளையாட்டிலும் கழித்து கொண்டிருக்கிறோம்.
தற்காலத்திய இளைஞர்கள் இப்னு உமர் மற்றும் இப்னு அம்ர் ஆகிய வாலிப நபித்தோழர்களிடமிருந்து படிப்பினைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள் காலத்தில்
வாலிப சஹாபாக்கள் மட்டுமல்ல தாபிஈன்களைச் சேர்ந்த வாலிபர்களும் வணக்க வழிபாட்டில் மூழ்கித் திளைக்கக்கூடியவர்களிக இருந்துள்ளார்கள்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் சம்பவத்தை காணலாம்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர் தனது தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவரை யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள்.
அப்போது ஒரு மனிதர் “நான் (அறிவேன்)” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும்இ ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன்.
ஏனென்றால் “ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும்இ ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்” என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிப்பான்-1734 இ பாகம்: 5 பக்கம்: 26
தாபிஈன்களைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொழுகையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததை மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கிறது. அவர் நீண்ட நேரம் தொழ வேண்டும் என்று விரும்பி தொழுகையில் நிலையில் நிற்பதை அதிகப்படுத்தினார்.
ஆகவேதான் அவருக்கு அதிக நன்மை பயக்கும் விஷயத்தை கற்றுக் கொடுக்கும் விதமாக ருகூவையும் ஸஜ்தாவையும் அதிகப்படுத்துமாறு இப்னு உமர் ரலி அவருக்கு அறிவுரை கூறுமாறு தெரிவிக்கிறார்கள்.
இந்த அனைத்து செய்திகளும் நபியின் காலத்திலும் அதற்கு அடுத்த தலைமுறையிலும் இளைஞர்கள் வணக்க வழிபாட்டில் மூழ்கித் திளைத்ததை தெரிவிக்கிறது.
இளமையும் வீரமும்
இளமையின் முக்கிய சிறப்பம்சம் அதன் வீரமாகும். ஏனெனில் இளைய ரத்தம் சூடாக இருக்கும். துடிப்பாக இருக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் இளமைக்கு உண்டு.
ஆகவே இந்த வீரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
இளமை இஸ்லாத்தை ஏற்கும்
இளமையின் வீரத்திற்கு சிறந்த சான்று குகைவாசிகள் ஆவர். இவர்களைப் பற்றி இறைவன் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.
ஒரு சமுதாயத்தில் சில இளைஞர்கள் வசித்தார்கள். அவர்களைத் தவிர மற்ற அனைவரும் காஃபிர்களாக இருந்தார்கள். அந்த ஊரின் அரசரும் காஃபிராக இருந்தார்கள்.
அந்நேரத்தில் அவர்கள் மட்டும் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்பதை விளங்கி ஏற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆகவே அவர்கள் தங்களது ஈமானையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களது ஊரைவிட்டு ஒதுங்கி ஒரு குகையில் தஞ்சம் அடைந்தார்கள்.
இவ்வாறு ஈமானிற்காக தங்களது சொந்த ஊரைவிட்டு வெளியேறி நிறைய நபிமார்கள் ஜிஹாத் செய்திருக்கிறார்கள்.
இப்றாஹிம் நபி தனது ஊரைவிட்டு வெளியேறி ஜிஹாத் செய்திருக்கிறார்கள்.
மூஸா நபி ஜிஹாத் செய்திருக்கிறார்கள்
முஹம்மது நபி ஜிஹாத் செய்திருக்கிறார்கள்.
அந்தவரிசையில்தான் மேற்கூறிய குகைவாசிகளும் ஜிஹாத் செய்தார்கள்.
அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனையை இறைவன் தெரியப்படுத்துகிறான்.
إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةًۭ وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًۭا⭘
அந்த இளைஞர்கள் குகையில் தஞ்சமடைந்தபோது “எங்கள் இறைவனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்குத் தருவாயாக! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நேர்வழியை எளிதாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தனர்.
அல் குர்ஆன் - 18 : 10
அந்த இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அதைக் கடைபிடிப்பதில் உறுதியாக நின்றார்கள். ஒட்டுமொத்த ஊரே எதிர்த்து நின்றாலும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. இதை நாம் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளம்வயது சஹாபிய பெண்மணியின் வீரம்
நபியின் காலத்தில் வாழ்ந்த இளம் வயது சஹாபிய பெண்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கடைபிடிப்பதில் வீரமாக்கவராகத் திகழ்ந்தார்கள்
சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில்இ 'எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் - அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி - அவரைத் திருப்பியனுப்பிஇ எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்' என்பதும் ஒன்றாக இருந்தது.
இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள்.
ஆனால்இ இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார்.
நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள்.
(அதன்பிறகு) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள்.
(நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார்.
அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள்.
எனவேஇ அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால்இ நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ்இ 'விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்' (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.
ஸஹீஹ் புகாரி : 2711 2712.
நபியின் காலத்தில் நபித்தோழிகளில் இளைஞிகளாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்று அதைக் கடைபிடிப்பதற்காக சாெந்த ஊரை தியாகம் செய்து மதினா வந்தார்கள். ஆனால் இன்றைய பெண்களோ அற்பமான காதலுக்காக சொந்தங்களை விட்டுவிட்டு ஓடுகிறார்கள்.
நம்காலத்து பெண்கள் நபித்தோழியர்களிடத்திலிருந்து மேற்கூறிய படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இளமை உயிரைத் தியாகம் செய்ய முன்வரும்
தியாகத்திலேயே மிகப்பெரும் தியாகம் உயிரைத் தியாகம் செய்வதுதான். இளமைப் பருவத்திலுள்ள நமது வேகத்தை இஸ்லாத்திற்காக பயன்படுத்தக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இதிலன இஸாமாயில் நபியின் வரலாறு சிறந்த உதாரணமாகும்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَـٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ⭘
அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
அல் குர்ஆன் - 37 : 102
இஸ்மாயில் நபி தனது வாலிப பருவத்தை அடைகிறார்கள். அப்போது அவரை பலிகொடுக்க வேண்டும் என்று இப்றாகிம் நபிக்கு இறைக்கட்டளை வருகிறது. அதைக் கேள்விப்பட்டதும் எவ்வித மறுப்பும் கூறாமல் அதற்கு உடன்படுகிறார்கள். தனது உயிரை இழக்க முன்வருகிறார்கள். இவ்வாறுதான் நாமும் நமது இளமைப்பருவத்தை பயன்படுத்த வேண்டும்.
இளமை நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் தைரியத்தை தரும்
அடுத்ததாக இளைஞர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதில் வீரமானவராக இருக்க வேண்டும். இதில் இப்ராகிம் நபியிடத்தில் முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இப்றாகிம் நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது இளைஞராகவே இருந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவர்களுக்குப் பின்னால் நூறுஇ ஆயிரம் பேர் என்று கூட்டம் கிடையாது. தனியாளாக நி்ன்று பிரச்சாரம் செய்தார்கள். ஒட்டுமொத்த சமுதாயதிற்கு எதிராக ஒற்றையாளாக நின்று பிரச்சாரம் செய்தார்கள். அந்த தைரியத்தையும்இ துணிவையும் வாலிப பருவத்தின் மூலம் இறைவன் வழங்கினான்.
இப்றாகிம் நபியின் தந்தை கூட இஸ்லாத்தை ஏற்றுக்காெள்ளவில்லை. கல்லால் அடித்து காென்றுவிடுவதாக தந்தை மிரட்டுகிறார். ஆனால் அம்மிரட்டல்கள் இளைஞரான இப்ராகிம் நபியை பயமுறுத்தவில்லை. துணிவோடு அத்தனையையும் எதிர் காெண்டார்கள்.
எந்தளவிற்கு இப்ராகிம் நபியின் துணிச்சல் இருந்ததென்றால் ஊரில் உள்ள கோயில் சிலைகள் அத்தனையையும் தனியாளாக நின்று உடைக்கும் அளவிற்கு தைரியமும் தெம்பும் மிக்கவர்களாக இப்றாகிம் நபி திகழ்ந்தார்கள்.
இச்சம்பவத்தில் இப்றாகிம் நபியின் தைரியம் மட்டுமில்லாமல் மதிநுட்பமும் வெளிப்பட்டது.
ஒரு நாள்இ இப்ராகிம் நபியின் ஊரார் அனைவரும் திருவிழாவிற்காக வெளியூர் சென்ற சமயத்தில் ஊரிலுள்ள அத்தனை சிறிய சிலைகளையும் இப்ராகிம் நபி உடைத்தெரிந்தார்கள். உடைத்த ஆயுதத்தை பெரிய சிலையின் கையில் வைத்துவிட்டார்கள். விழா முடிந்து அனைவரும் ஊருக்கு வருகிறார்கள். வந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. சிலைகள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. யார் இதை செய்திருப்பார்கள்? என்ற கேள்வி அங்கே எழுகிறது. அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் கூறிய பதிலை அல்லாஹ் தனது திருமறையில் பதிவு செய்கிறான்.
قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗۤ اِبْرٰهِيْمُ
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் (சிலைகளைப்) பற்றி (இவை வணக்கத்திற்குரியவை அல்ல. இவை வெறும் சிலைகள்தான் என்று) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்இ அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 21:60)
அதன் பிறகு இப்ராகிம் நபி அனைவரின் முன்பும் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறார்கள். கூடத்தார் இப்ராகிம் நபியைப் பார்த்து 'இநத சிலைகளையெல்லாம் உடைத்தது நீர்தானா? என்று கேட்டார்கள்.
அதற்கு இப்ராகிம் நபி மதிநுட்பமாக பதிலளித்தார்கள். சிலைகளை உடைத்த ஆயுதம் பெரிய சிலையிடம்தான் உள்ளது. ஆகவே அத்தனை சிலைகளையும் உடைத்தது பெரிய சிலையாகத்தான் இருக்கும். சிலைகளை உடைத்தது யார்? என்று பெரிய சிலையிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
உடனே கூட்டத்தார்கள் பதில்கூறமுடியாதவாறு தவித்தார்கள். தங்கள் தவறை உணர்ந்தார்கள். வெட்கத்தால் தங்களது தலைகளை கீழே தொங்கப்போட்டார்கள்.
பிறகு இப்றாகிம் நபியிடம் இப்றாகிமே (சிலை எப்படி பேசும்? சிலையிடம் நாங்கள் எப்படி கேட்பது? சிலையால் பதில் கூறமுடியாதே?) இவற்றால் பேசமுடியாது என்பது உங்களுக்கு தெரியும்தானே! என்று கூறினார்கள்.
உடனே இப்றாகிம் நபி
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـٴًـــا وَّلَا يَضُرُّكُمْ
“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
(அல்குர்ஆன் : 21:66)
اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَفَلَا تَعْقِلُوْنَ
“சீச்சீ! உங்களுக்கும்இ நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
(அல்குர்ஆன் : 21:67)
இம்மாபெரும் செயலை இப்ராகிம் நபி செய்யும்போது இளைஞராக இருந்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த சம்பவத்தில் இன்றைய இளைஞர்களுக்கு நிறைய படிப்பினைகள் இருக்கிறது. இரண்டு முக்கிய படிப்பினையை இங்கே குறிப்பிடுகிறேன்
துணிவு
மதிநுட்பம்.
இவ்விரண்டு முக்கிய பண்புகள் இப்றாகிம் நபியிடம் காணப்பட்டன. துணிவு மட்டும் இருந்து மதிநுட்பம் இல்லையென்றால் நமது செயல் பெரிய வெற்றியைப்பெறாது. மதிநுட்பம் இருந்து துணிவு இல்லையானால் நம்மால் சத்தியத்தை எடுத்து சொல்லமுடியாது. இளைஞர்களிடம் இவ்விரு பண்புகளும் ஒருசேர அமைய வேண்டும்.
மதிநுட்பம் இல்லாமல் வெறும் துணிவு மட்டும் இளைஞர்களிடத்தில் இருந்தால் அவர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடுவார்கள்.
துணிவுள்ளவன் எதிரிகளை கொலைசெய்வதிலேயே மும்முரமாக செயல்படுவான். ஆனால் அவர்களை திருத்துவதில் ஈடுபடமாட்டான். இவர்களைப் போன்றவர்களால் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் கெட்டப்பெயர்தான் விளையும்.
மதிநுட்பமும் துணிவும் உள்ள இளைஞன் எதிரிகளை வென்று அவனையும் இஸ்லாத்தில் அங்கமாக்கி இஸ்லாத்தின் வலிமையை கூட்டுவதில் மும்முரமாக செயல்படுவான்.
உமர் ரலியவர்கள் வாலிபராக இருந்த ஆரம்பத்தில் இஸ்லாத்தை எதிர்த்தார்கள். இஸ்லாமியர்களை காெடுமைபடுத்தினார்கள். அவர்களை கொன்றிருந்தால் ஒரு எதிரி அழிந்திருப்பார் அவ்வளவுதான். பெரிய பலன்கள் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்காது. ஆனால் உமர் ரலியவர்கள் இஸ்லாத்ததை ஏற்றதனால் முஸ்லிம்கள் அடைந்த பயன்கள்தான் எத்தனை எத்தனை.
இன்றுவரையிலும் உமர்ரலியவர்களை முஸ்லிமல்லாதவர்களும் புகழ்கிறார்களே! இஸ்லாமியர்களுக்கு உமர் ரலியினால் ஏராளமான புகழ்கள் கிடைத்தது. ஆகவே இதை இன்றைய இளைஞர்கள் தங்களது கவனத்தில் எடுக்க வேண்டும். ஒருவரை அழிப்பதைவிட அவரை ஆக்க சக்தியாக மாற்றுவதற்கு முயற்சிகாட்ட வேண்டும்.
நம்காலத்தில் கூட இதற்கு முன்மாதரி உள்ளது. பாபர் மஸ்ஜித் பள்ளியை இடித்தவரில் பல்பீர் சிங்கும் ஒருவர். ஆனால் பிறகு அவர் இஸ்லாத்தை ஏற்றார். தனது தவறை உணர்ந்தார். ஒரு பள்ளியை இடித்ததற்கு பகரமாக பல பளிவாசல்களை கட்டினார். அவரை நாம் கொன்றிருந்தால் பல பள்ளிவாசல்கள் வந்திருக்காது. அங்கு பல மக்கள் தொழுகையை நிறைவேற்றியிருக்கமாட்டார்கள். அவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்காெண்டதனால்தான் இப்பயன்கள் நமக்கு கிடைத்து.
இப்ராகிம் நபி இளைஞராக இருந்தபோது செய்த சாதனைகள் இதுமட்டுமல்ல. இதைத் தொடர்ந்து இன்னும் சில துணிவுமிக்க ஞானமிக்க காரியங்களை செய்திருக்கிறார்கள். தைரியம் என்றால் சாதாரண தைரியம் இல்லை. உச்சகட்ட தைரியும். அலாதியான துணிச்சல் மிக்கவர்களாக இளைஞர் இப்ராகிம் திகழ்ந்திருக்கிறார்கள்.
இப்றாகிம் நபியின் துணிச்சலையும்இ அறிவுக்கூர்மையையும் சமாளிக்க மூடியாமல் தத்தளித்த ஊர்மக்கள் இறுதியாக நாட்டின் அரசனிடத்தில் இப்ராகிம் நபியை ஒப்படைத்து விட்டனர். ஊர் மக்களுக்கு பயப்படாதவன் அரசனுக்கு பயந்துதான் ஆகவேண்டம். அரசருக்கு அச்சப்பட்டு இப்ராகிம் நம் வழிக்கு வந்துவிடுவார். மகத்தான அரசர் அல்லாஹ் தான் என இனி கூற மாட்டார் என எண்ணி ஊரார் அரசரிடத்தில் இப்ராகிம் நபியை ஒப்படைத்தார்கள்.
ஆனால் இப்ராகிம் நபியின் துணிச்சல் அரசரைப் பார்த்ததும் கூடியதேயொழிய குறையவில்லை. அந்த சம்பவத்தை அல்லாஹ் தனது திருமறையில் பதிவு செய்திருக்கிறான்.
இப்ராஹீம் நபி : “எவன் உயிர் கொடுக்கவும்இ மரணம் அடையும்படியும் செய்கிறானோஇ அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)”
அரசன் : இ “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்;
(தப்சீர் ஆசிரியர்கள் இதற்கு விளக்கம் சொல்லும்போதுஇ அரசன் சிறைக்கைதி இருவரை அழைத்துவரச் செய்தான். அதில் ஒருவனை வெட்டி கொலை செய்தான். மற்றொருவனை 'பிழைத்துப் போ' என்று விடுதலை செய்தான். இதை இப்ராகிம் நபியிடம் சுட்டிக்காட்டிஇ பார்ததாயா! நான் ஒருவனை வெட்டினேன். அவனது உயிரை எடுத்துவிட்டேன். மற்றொருவனுக்க உயிர்பிச்சை கொடுத்து விடுவித்துவிட்டேன். நானும் உயிர் எடுக்கக்கூடியவனாகஇ உயிர் கொடுக்கக்கூடிவனாக இருக்கிறேன் என்று தர்க்கம் செய்தான். அவனது இந்த பைத்தியக்காரத்தனமா வாதத்திற்கு முடிவு கட்ட இப்ராகிம் நபி விரும்பினார்கள். அவனால் பதிலே சொல்ல முடியாத கேள்வியை கேட்க வேண்டும் என்று யோசித்து அடுத்த கேள்வியை கேட்டார்கள்)
இப்ராஹீம்நபி : “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!”
(அல்லாஹ்வை) நிராகரித்த அவன்இ திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிரஇ அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:258)
இப்ராகிம் நபியின் துணிச்சல்மட்டுமின்றி அறிவுக்கூர்மையும் இதில் வெளிப்பட்டு நிற்கிறது. தனக்கு முன்னால் இருப்பவர் அரசர். பெரிய படைபலம் கொண்டவர். அவரை பகைத்தால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றெல்லாம் அவர்கள் பயப்படவில்லை.
இவன் என்ன அரசன்? உண்மையான அரசன். மகத்தான அரசன். அரசருக்கெல்லாம் அரசன் அல்லாஹ்தானே. அந்த அல்லாஹ்வே தன்னுடன் இருக்கும் போதுஇ ஒரு ஊரை ஆட்சி செய்யும் அரசருக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்? மாபெரும் ஆட்சியாளன் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய சொல்லியிருக்கிறான். ஆகவே நான் யாருக்கும் பயப்படாமல் பிரச்சாரம் செய்வேன் என்ற துணிச்சலோடு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அதுவும் அரசனே வாயடைத்துப் போகின்ற அமைப்பில் தனது வாதத்தை முன் வைத்திருககிறார்கள். இந்த துணிச்சல்தான் இன்றைய இஸ்லாமியர்களுக்கு தேவை.
ஆகவே இன்றைய இளைஞர்கள் துணிவுடன் மதிநுட்பத்துடன் நடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இப்ராகிம் நபியைப் போல் நம்முடைய இளைஞர்கள் அறிவுடன் துணிவு மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
யுத்த களத்தில்…
அதைப்போல் இளைஞர்கள் தங்களது வீரத்தை இஸ்லாத்தை எதிர்க்கும் எதிரிக்கு எதிராகவும் பயன்படுத்த வேண்டும். இஸ்லாம் கூறும் ஜிஹாத் நடந்தால் அவற்றில் முழு வீரத்துடன் ஈடுபட வேண்டும். இதில் நபித்தோழர்களிடத்தில் முன்மாதிரி உள்ளது.
முஹம்மது நபி செய்து முதல் பெரிய யுத்தம் பத்ரு யுத்தம். இந்த யுத்தம்தான் மக்கத்து காஃபிர்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த முதல் முக்கிய யுத்தம்.
இதில் மக்கத்து காஃபிர்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களில் அபூஜஹல் என்பவன் முக்கியமானவன். இவன்தான் இஸ்லாத்திற்கு பெரிய எதிரியாக திகழ்ந்தான்.
அவ்வளவு முக்கியமான அபூஜஹலை பத்ரு யுத்தத்தில் வீழ்த்தியவர்கள் இளைஞர்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்கள் :
நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன்.
(நான் வலதும் இடதும்) திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.
(அவ்விருவரும் இளவயது இளைஞர்களாக இருந்ததால்) அந்த இருவர் (என் அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன்.
அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம்இ 'என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்' என்று கூறினார்.
அப்போது நான்இ 'என் சகோதரரின் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவர்இ 'அவனை நான் கண்டால் (எனது வாளால் வெட்டி) அவனை நான் கொலை செய்வேன். அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்றார்.
அப்போது மற்றொருவரும் தம் தோழரிடமிருந்து மறைவாகஇ முதலமாவர் கூறியதைப் போன்றே கூறினார்.
அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவேஇ அவ்விருவருக்கும்இ அபூ ஜஹ்லை நோக்கி சைகை செய்து காட்டினேன்.
அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத்இ முஅவ்வித்) ஆவர்.
ஸஹீஹ் புகாரி : 3988.
அபூஜஹ்ல் முக்கியமான படைத்தளபதி. இஸ்லாத்தின் மிகப்பெரும் எதிரி. அதுமட்டுமில்லாமல் அவன் வீரனும் கூட. பெரியவர்கள் கூட அவனுடன் சண்டையிட தயங்குவர். அவ்வாறிருக்கையில் அவனை கொலை செய்ய வேண்டும் என்ற சபதத்தோடு கிளம்பி அதை நிறைவேற்றவும் செய்ததற்கு அந்த இளைஞர்களின் தைரியம் முக்கிய காரணமாக அமைந்தது.
முஸ்லிம்களில் உள்ள தீயவர்களைத் தடுக்க
நபியவர்கள் தீமை செய்பவர்களைத் தடுப்பதற்காக இளைஞர்களைத்தான் பயன்படுத்த முன்வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: விறகுக் கட்டுகளைத் திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்விதக் காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தி விட நான் எண்ணியதுண்டு.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ நூல்: அபூதாவுத் (462)
இவ்வாறு இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது இளமையை இஸ்லாத்தை ஏற்று அதில் உறுதியாக இருப்பதற்கும்இ இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கும்இ எதிரிகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
இளமையும் ஒழுக்கமும்
இளைஞர்களுக்கு மிகவும் சவாலான விஷயம் ஒழுக்கமாகும். இளமை துடிப்போடு இருப்பதால் அது ஒழுக்க சீர்கேட்டில் உடனே விழுந்துவிடுகிறது. பெரும்பாலான சீர்கேடுகள் இளைஞர்களை மையமாக வைத்தே இயக்கப்படுகிறது. உதாரணம் சினிமா.
சினிமாவில் பெரும்பாலும் ஒழுக்கக்கேடுகள்தான் நிறைந்திருக்கிறது. அவைகள் இளைஞர்களை கவர்வதில்தான் முதல் முன்னுரிமை வழங்குகிறது.
ஆகவே இஸ்லாமிய இளைஞர்கள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒழுக்கம் மிகுந்தவர்களாக இன்றைய இளைஞர்கள் பரிணமிக்க வேண்டும்.
யூசுப் நபியும் ஒழுக்கமும்
இளைஞர்களின் ஒழுக்கத்துக்கு மிகப்பெரும் முன்னுதாரணம் யூசுப் நபியாகும்.
யூசுப் நபி பேரழகானவர்கள். மனிதர்களின் ஒட்டுமொத்த அழகில் பாதி அழகு யூசுப் நபிக்கு வழங்கப்பட்டிருந்தது.
யூசுப் நபியின் குழந்தை பருவத்தில் அவர்களது சகோதரர்கள் அவர்மீது காெண்ட பொறாமையினால் அவரை ஒரு பாழுங்கிணற்றில் தூக்கி எறிந்தார்கள்.
அதன்பிறகு யூசுப் நபியை ஒரு வியாபாரக்கூட்டம் எடுத்துச் சென்று எகிப்து நாட்டு அமைச்சரிடம் விற்றது.
அமைச்சர் யூசுப் நபியை வாங்கி தனது வீட்டில் கண்ணியமாக வளரச்செய்தார்.
யூசுப் நபி வளர்ந்து வாலிபரான சமயத்தில் அமைச்சரின் மனைவியின் உள்ளத்தில் சபலம் ஏற்பட்டது. அவள் யூசுப் நபியை விபச்சாரத்திற்கு அழைத்தாள். வீட்டின் அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிட்டு தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினாள். ஆனால் யூசுப் நபி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
இருந்தும் அவள் விடவில்லை. யூசுப் நபியை துரத்திச் சென்றாள். யூசுப் நபி தப்பித்து ஓடினார்கள். இறுதியில் அவர்கள் கதவைத் திறப்பதற்காக கதவின் அருகில் செல்ல அவள் அவரது சட்டையைப் பிடித்துக் கிழித்தாள்.
அந்நேரத்தில் கதவு திறக்கப்பட்டதும் அங்கு அமைச்சர் நின்று கொண்டிருந்தார். அவர் இந்த காட்சியைக் கண்டார்.
யூசுப் நபியின் சட்டை பின்புறமாக கிழிக்கப்பட்டதைக் கண்ட அமைச்சர் தனது மனைவிதான் தவறிழைத்திருக்கிறாள் என்று அறிந்து கொண்டார்.
அதன்பிறகு இந்த சம்பவம் எகிப்திலுள்ள சில பெண்களுக்கு தெரிகிறது. அவர்கள் கூறியதாக இறைவன் தெரிவிக்கிறான்.
وَقَالَ نِسْوَةٌۭ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَـٰلٍۢ مُّبِينٍۢ⭘
“அமைச்சரின் மனைவிஇ தன்வசமுள்ள ஓர் இளைஞரை அடைய முயற்சித்தாள். காதல் அவளைக் கவர்ந்து விட்டது. அவள் பகிரங்கமான தவறில் இருப்பதாகவே நாங்கள் எண்ணுகிறோம்” என்று அந்நகரிலுள்ள பெண்கள் பேசிக் கொண்டனர்.
அல் குர்ஆன் - 12 : 30
யூசுப் நபி இளைஞராக இருந்தபோதும்இ தவறிழைப்பதற்கு தோதுவான வசதிவாய்ப்புகள் இருந்தபோதிலும் அவர்கள் தவறிழைக்கவில்லை. விபச்சாரத்திலிருந்து விரண்டோடியிருக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியிருக்கிறார்கள்.
இது இத்தோடு நிற்கவில்லை. அதன்பிறகும் சில நாட்கள் கழித்து அமைச்சரின் மனைவி யூசுப் நபியை விபச்சாரத்திற்கு அழைத்தாள். அப்போதும் யூசுப் நபி மறுத்தார்கள். அதற்கு அவள்இ ‘விபச்சாரத்திற்கு இணங்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவதாக’ மிரட்டினாள்.
அப்போது யூசுப் நபி கூறியதை இறைவன் தெரிவிக்கிறான்.
قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَـٰهِلِينَ⭘
“என் இறைவனே! இவர்கள் எதை நோக்கி என்னை அழைக்கிறார்களோஇ அதைவிட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களது சூழ்ச்சியிலிருந்து என்னை நீ திருப்பா விட்டால் நான் இவர்களின் பக்கம் சாய்ந்துஇ அறிவீனர்களில் ஆகி விடுவேன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
அல் குர்ஆன் - 12 : 33
விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று மறுத்ததற்காக பல ஆண்டுகள் யூசுப் நபி சிறையில் வாடினார்கள்.
இதில் இளைஞர்களுக்கு வலுவான படிப்பினைகள் உள்ளது. ஒழுக்கம் விஷயத்தில் நாம் யூசுப் நபியை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களின் நிலையோ இவ்விஷயத்தில் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் பெண்கள் பின்னால் சுற்றுவதை ஒரு பெருமையாக நினைத்து செய்து வருகிறார்கள்.
வலுக்கட்டாயமாக தன்னை விபச்சாரத்திற்கு அழைத்த போதும் அதற்கு உடன்படாத யூசுப் நபி எங்கே? இன்றைய இளைஞர்களின் நிலை எங்கே? நம் இளைஞர்களின் இன்றைய நிலைகள் மாற்றப்பட்டு யூசுப் நபி போல் ஒழுக்கச் சீலர்களாக மாற வேண்டும்.
பெற்றோர்களின் பொறுப்பு
இவ்விஷயத்தில் பெற்றோர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். நமது பிள்ளைகளின் இளமைப் பருவத்தை சரியாகக் கண்காணித்து அவர்களை சீர்படுத்த வேண்டும்.
இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் :
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1513.
(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ” அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ”ஒரு இளைஞனையும்இ இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள்.
நூல் : திர்மிதீ-885
நபியவர்கள் தனது சிறிய தந்தையின் மகனை நேர்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். இதுபோன்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட வேண்டும்.
இளைஞிகளுக்கான உதாரணம்
ஒழுக்கம் விஷயத்தில் இளைஞிகளுக்கான உதாரணங்களும் குர்ஆன் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
நபியவர்கள்இ முற்காலத்தில் நடந்த குகைவாசிகள் பற்றிய சம்பவத்தை தெரிவிக்கிறார்கள்.
மூன்று மனிதர்கள் காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றார்கள். அப்போது பெருமழை வந்தது. அம்மூவரும் ஒரு குகையில் ஒதுங்கினார்கள். அப்போது ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது.
அதனால் மூவரும் இறைவனிடம் பிரார்த்திப்பதாக ஒருமனதாக முடிவெடுத்தனர். ஒவ்வொருவரும் தான் செய்த நல்லறங்களை குறிப்பிட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அதில் ஒருவர்இ இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய்.
நான் அவளை அடைய விரும்பினேன். (ஆனால்) அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள்.
அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்.
அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள்.
நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் (கஷ்டப்பட்டு) உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன்.
பின்னர் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.
நான் அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்வதற்காகஇ அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோதுஇ ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! (திருமணம் எனும்) உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!’ (திருமணம் செய்யாமல் எனது முத்திரையை) உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!'என்று அவள் கூறினாள்.
உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன்.
அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன்.
இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
ஸஹீஹ் புகாரி : 2215இ 2272.
இந்த வரலாற்றில் அந்த இளம்பெண்ணின் ஒழுக்கத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தனது இக்கட்டான நேரத்திலும் அவள் இறையச்சத்தை போதிக்கக்கூடியவளாக இருந்திருக்கிறாள். விபச்சாரத்தை விட்டும் தவிர்ந்திருப்பவளாக இருந்திருக்கிறாள்.
ஆண்களுடன் கலக்காதிருத்தல்
ஆணும் பெண்ணும் ஒன்றாக கலப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆணும் பெண்ணும் பேசும்போதுஇ குழைந்து பேசக்கூடாதுஇ திரையில்லாமல் பேசக்கூடாதுஇ தனித்து பேசக்கூடாது என்று மார்க்கம் தடை செய்திருக்கிறது. இவ்விஷயத்திற்கு முன்மாதிரியாக மூஸா நபியின் மனைவி இருக்கிறார்கள்.
மூஸா நபி எகிப்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். அவர்கள் வாலிபரான பிறகு ஒருநாள் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மற்றொருவரை மூஸா நபி குத்தினார்கள். அதனால் அவன் இறந்துவிட்டான். உடனே மூஸா நபி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள்.
இச்சம்பவம் பிர்அவ்னின் சபையினருக்கு தெரிந்தது. அவர்கள் மூஸா நபியை கொல்லத் திட்டமிட்டார்கள். இதையறிந்த மூஸா நநி அங்கிருந்து தப்பித்து மத்யன் என்ற நகருக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் ஒரு குகையின் நிழலில் ஒதுங்கினார்கள். அப்போது சற்று தொலைவில் ஒரு குட்டையில் ஆடு மேய்ப்பாளர்கள் குட்டையில் தண்ணீர் பிடித்துக் காெண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து விலகி இரு பெண்கள் தனித்து நின்றார்கள்.
அவர்களிடம் மூஸா நபி சென்றுஇ நீங்கள் ஏன் தனியாக நிற்கிறீர்கள்? என்று கேட்க அதற்கு அவர்கள் அளித்த பதிலை இறைவன் தெரிவிக்கிறான்.
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةًۭ مِّنَ ٱلنَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِى حَتَّىٰ يُصْدِرَ ٱلرِّعَآءُ ۖ وَأَبُونَا شَيْخٌۭ كَبِيرٌۭ⭘
மத்யன் நகரிலுள்ள நீர்நிலைக்கு அவர் வந்தபோது அங்கு மக்களில் ஒரு கூட்டத்தினர் (கால்நடைகளுக்கு) நீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு அப்பால் பெண்களிருவர் (தமது கால்நடைகளைத்) தடுத்து வைத்திருப்பதையும் கண்டார். “உங்கள் இருவரின் விஷயம் என்ன?” என்று அவர் கேட்டார். “மேய்ப்பர்கள் திரும்பிச் செல்லும் வரை எங்களால் நீர்புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ மிக வயதானவர்” என அவ்விருவரும் கூறினர்.
அல் குர்ஆன் - 28 : 23
ஆடு மேய்ப்பாளர்கள் ஆண்களாக இருந்தார்கள். அவ்விரு பெண்களும் இளைஞிகளாக இருந்தார்கள்.
ஆடு மேய்ப்பாளர்கள் நின்றதால் அவ்விடத்துக்கு அவ்விரு பெண்களும் செல்லவில்லை. சற்று தள்ளியே நின்றார்கள். ஏனெனில் ஆண்களுடன் கலப்பதை அவர்கள் விரும்பவில்லை. இதுதான் ஒழுக்கத்தின் உச்சம்.
அதன்பிறகுஇ அவ்விரு பெண்களுக்கும் மூஸா நபி உதவி செய்தார்கள். பின்னர் அதே குகையில் வந்து அமர்ந்தார்கள்.
சற்று நேரம் கழிந்ததும் அவ்விரு பெண்களுள் ஒரு பெண் மூஸா நபியிடம் வந்தாள். அதைப்பற்றி இறைவன் கூறும்போதுஇ
فَجَآءَتْهُ إِحْدَىٰهُمَا تَمْشِى عَلَى ٱسْتِحْيَآءٍۢ قَالَتْ إِنَّ أَبِى يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيْهِ ٱلْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ⭘
அவ்விருவரில் ஒரு பெண் அவரிடம் வெட்கத்துடன் நடந்து வந்துஇ “நீர் எங்களுக்காகத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை வழங்குவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்” என்று கூறினாள். அவரிடம் வந்துஇ நடந்த நிகழ்வுகளை அவர் எடுத்துரைத்தபோது “பயப்படாதீர்! அநியாயக்காரக் கூட்டத்தை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று கூறினார்.
அல் குர்ஆன் - 28 : 25
அப்பெண் மூஸா நபியை சந்திக்கும்போது வெட்கத்துடன் நடந்து வந்திருக்கிறார். வெட்கம் ஈமானின் ஒரு அங்கம். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம்.
இவ்வாறு அவ்விரு பெண்களும் ஆண்களுடன் பழகும் விஷயத்தில் ஒழுக்கத்தை பேணுபவர்களாக இருந்தார்கள். ஆகவேதான் அவர்களிர் ஒருத்திக்கு மூஸா நபிக்கு மனைவியாகும் பாக்கியத்தை இறைவன் வழங்கினான். இது இறைவன் வழங்கிய பரிசாகும். நாமும் ஒழுக்கத்துடன் நடந்தால் நமக்கும் இறைவன் பரிசுகளை வழங்குவான்.
தவறான சிந்தனை கொண்ட ஆண்களுக்கெதிராக பிரார்த்தித்தல்
இக்காலத்தில் சில ஆண்கள் மோசமானவர்களாக இருப்பார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சிக்க நேர்ந்தால் அவனுக்கெதிராக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
இதற்கு இப்றாஹிம் நபியின் மனைவியிடத்தில் சிறந்த முன்மாதிரி உள்ளது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தம் சொந்த நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
(செல்லும் வழியில்) 'மன்னன் ஒருவன்' அல்லது கொடுங்கோலன் ஒருவன்' இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இச்செய்தியறிந்த) அவன் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் ஆளனுப்பி '(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை' என்று கூறினான்.
(இப்ராஹீம்(அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்துஇ தொழுதுவிட்டுஇ 'அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே' என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவள் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்துக் கொண்டான்.
ஸஹீஹ் புகாரி : 6950.
சாரா அம்மையார் அவர்கள் தன்னிடம் தவறாக நடக்க முனைந்த அரசனுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்தான். இன்றைய இளைஞிகள் இதிலிருந்து பாடங்கள் பெற வேண்டும்.
அதைப்போல் இவ்விஷயத்திற்கு இன்னொரு சான்றும் உள்ளது.
அல்லாஹ் மர்யம் அலை அவர்களின் வரலாற்றை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًۭا شَرْقِيًّۭا⭘ فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًۭا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًۭا سَوِيًّۭا⭘
قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَـٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّۭا⭘
இவ்வேதத்தில் மர்யமையும் நினைவுகூர்வீராக! அவர் தமது குடும்பத்தாரை விட்டும் விலகி கிழக்குப் பகுதியிலுள்ள ஓரிடத்தில் தனித்திருந்தபோதுஇ அவர்களை விட்டும் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது அவரிடம் (ஜிப்ரீல் எனும்) நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழு மனிதராக அவருக்குக் காட்சியளித்தார்.
(அப்போது அவர் திடுக்குற்றவராக) “உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னை நெருங்காதீர்!)” என்று கூறினார்.
அல் குர்ஆன் - 19 : 16 - 18
மர்யம் அலை குளிப்பதற்காக ஒதுங்குகிறார்கள். அப்போது ஜுப்ரீல் அலை மனித உருவத்தில் அவர்களிடம் வருகிறார்கள். வந்திருப்பது மலக்குதான் என்பதை அறியாத மர்யம் அலை தன்னிடத்தில் நெருக்கக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சுமாறு கூறுகிறார்கள். இச்சம்பவம் மர்யம் இளைஞியாக இருக்கும்போது நடந்தது. ஆகவே இன்றைய இளைஞிகளுக்கு இதில் சிறந்த முன்னுதாரணம் உள்ளது.
ஒழுக்க விஷயத்தை பாதுகாப்பதற்காக நபியவர்கள் வழங்கிய அறிவுரை
இளைஞர்கள் தங்களது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக நபியவர்கள் வழங்கிய அறிவுரைகள் அற்புதமானது. அவற்றை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும்.
அவற்றில் முக்கியமானது திருமணமாகும். திருமணம் முடிக்கத் தகுதி வந்துவிட்டால் முடிந்த அளவிற்கு விரைவாக திருமணம் முடித்து விட வேண்டும். அது நம்மை ஒழுக்கக் கேட்டிலிருந்து பாதுகாக்கும்.
அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்கள் :
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில்இ அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5066.
திருமணம் முடிக்கத் தகுதியிருந்து பொருளாதாரம் இல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும். பொருளாதாரம் பெற்றவர்கள் திருமணம் முடிக்க வேண்டும். திருமணமும் நோன்பும் நமது கற்பைப் பாதுகாக்கும் அற்புத செயலாகும்.
அதைப்போல் விபச்சாரம் செய்யும் மனப்பக்குவத்திலிருந்து விலகுவதற்கும் நபியவர்கள் அழகிய அறிவுரையை வழங்கியுள்ளார்கள்.
ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ ‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்துஇ ‘‘நிறுத்து நிறுத்து’’ என அவரைத் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நெருங்கி வா என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார்.
அப்போது நபியவர்கள்இ ‘‘இதை உன் தாய்க்கு விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோஇ ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாகஇ நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்கஇ ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாகஇ நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போதுஇ ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாகஇ நான் அவ்வாறு விரும்ப மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போதுஇ ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாகஇ நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாகஇ அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்துஇ ‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: அஹ்மத்-22211 (22265)
நபியவர்கள் கூறியதை மனதில் நினைத்துக் கொண்டாலே எந்த மனிதருக்கும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழாது. இவற்றை இளைஞர்கள் தங்களது மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
இளமையும் நற்பண்புகளும்
இளமையில் நற்பண்புகளோடு நடப்பது மிகவும் சிரமம். ஏனெனில் அவர்களைச் சுற்றித்தான் தீயபண்புகள் அனைத்தும் வலைவிரித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அவற்றை முறியடித்து இஸ்லாமிய இளைஞர்கள் நற்பண்புகள் மிக்கவர்களாக திகழ வேண்டும்.
முஹம்மது நபியும் நற்பண்புகளும்
முஹம்மது நபி தனது இளமைப்பருவத்தில் நற்பண்புகள் மிக்கவர்களாக திகழ்ந்தார்கள். அவர்களை அவ்வாறே அல்லாஹ் ஆக்கியிருந்தான். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
முதன்முதலாக நபியவர்களுக்கு வஹிச் செய்தி அருளப்பட்டதும் நபியவர்கள் பயந்தார்கள். தனக்கு ஏதேனும் ஏற்படுமோ என்று பயந்தார்கள். அப்போது அவர்களுக்கு வயது 40. இளைஞர்களாக இருந்தார்கள்.
அந்நேரத்தில் அவர்களின் துணைவியார் கதீஜா ரலி 'நபி(ஸல்) அவர்களிடத்தில்இ அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3.
நபியவர்கள் தனது இளமைப்பருவத்தில் மேற்கூறிய அனைத்து நற்பண்புகளையும் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.
அதைப்போல் முஹம்மது நபியின் இளமைக் காலத்தில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஒன்றை குறைஷிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தில் மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர்.
இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன். (இப்னு ஹிஷாம்)
நபியவர்கள் தங்களது இளமைக்காலத்தில் நற்பண்புகள் நிறைந்தவர்களாக திகழ்ந்ததைப் போன்று நாமும் நற்பண்புகள் நிறைந்தவர்களாக திகழ வேண்டும்.
இளமையும் குடும்பப் பாெறுப்புணர்வும்
குடும்பப் பொறுப்புணர்வு இளைஞர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும். ஏனெனில் குடும்பத்தின் எதிர்காலம் இளைஞர்களைப் பொறுத்துத்தான் அமையும். இவ்விஷயத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.
இதற்கு முன்மாதிரியாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் என்ற வாலிப நபித்தோழரின் வரலாறு சான்றாக உள்ளது
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள் :
(நாங்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தோம்.)
அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம்இ 'இறைத்தூதர் அவர்களே! நான் புது மாப்பிள்ளை' என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம்இ 'நீ கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?' என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு நான்இ 'வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன்' என்று பதில் கூறினேன்.
அதற்கு அவர்கள்இ 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே' என்று கூறினார்கள்.
நான்இ 'இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் ஒன்பது பேர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்துவிட்டார்கள். அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.
எனவேஇ அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோஇ அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறுவயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவேஇ அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்தேன்' என்று பதிலளித்தேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் செய்தது சரிதான்! அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2967இ 2309. 4052இ 5367.
இந்த சம்பவம் இளைஞர்களாக இருப்பவர்கள் குடும்பப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி வாலிபராக இருக்கிறார்கள். திருமணம் முடிக்கும் வயதை எட்டியிருந்தார்கள். திருமணம் பற்றி ஒவ்வாெருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்.
ஆனால் ஜாபிர் ரலி தனது குடும்ப சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு தனது வாலிப கனவை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். தனது ஒன்பது சகோதரிகளைக் கவனித்துக் கொள்வதற்காக விதவைப் பெண்ணைத் திருமணம் முடித்திருக்கிறார்கள்.
ஜாபிர் ரலியின் இந்த செயலை அங்கீகரிக்கும் விதமாக நபியவர்கள் நீங்கள் செய்தது சரிதான் என்று கூறி அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்திருக்கிறார்கள்.
ஆக இளைஞர்களாக இருப்பவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு நடக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இளமையும் சமூகப் பொறுப்புணர்வும்
இளைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு மிக மிக அவசியம். இளைஞர்களின் கைகளில்தான் சமூகத்தின் எதிர்காலமே அமைந்துள்ளது.
ஆகவேதான் நபிகளார் சமூக பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக இளைய வயது சஹாபாக்களை பயிற்றுவித்தார்கள்.
அதற்கு சான்றுதான் ஸைத் இப்னு ஸாபித் ரலியின் வரலாறு.
மதீனாவில் முஸ்லிம்களுடன் யூதர்களும் வசித்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தகளை செய்தார்கள்.
அப்போது யூதர்கள் தங்களுக்கான ஒப்பந்தங்களை ஹீப்ரு அல்லது சிரியாக் மொழியில் எழுதுவார்கள். அவற்றை அவர்கள் முஸ்லிம்களிடத்தில் வாசித்துக் காட்டுவார்கள். ஏனெனில் அந்நேரத்தில் முஸ்லிம்களுக்கு யூத மொழிகளைப் பேசத் தெரியும். ஆனால் வாசிக்கத் தெரியாது.
ஆகவேதான் நபியவர்கள் ஸைத் இப்னு ஸாபித் என்ற இளைஞரிடம் யூத மொழியை எழுதக் கற்குமாறு கட்டளையிட்டார்கள்.
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்கள் :
நபி(ஸல்) அவர்கள்இ யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டுஇ நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.
ஸஹீஹ் புகாரி : 7195.
யூதர்கள் இயல்பாகவே குரூர புத்திக் கொண்டவர்கள். அவர்கள் நம்பிக்கைத்தன்மையற்றவர்கள். அவர்களை நம்ப முடியாது.
அவர்கள் எழுத்தில் ஒன்று எழுதி அதை வாசிக்கும் போது சூழ்ச்சி செய்து வேறுவிதமாக வாசித்து விடுவார்கள் என்பதற்காக நபியவர்கள் ஸைத் ரலியிடம் ஹீப்ரு மொழியைக் கற்குமாறு கட்டளையிட்டார்கள்.
நபியின் கட்டளையை ஏற்று ஸைத் இப்னு ஸாபித் ரலியும் ஹீப்ரு மொழியை 17 நாட்களில் எழுதக்கற்றுக் கொண்டார்கள். (முஸ்தத்ரக் ஹாகிம் 3ஃ270)
சமுதாய நலனை பாதுகாக்கும் ஒரு முயற்சிதான் யூதர்களின் எழுத்து வடிவத்தைக் கற்பது. நபியவர்கள் அதை ஒரு இளைஞரின் கையில் ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த இளைஞரும் கொடுத்த பணியை கணக்கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஆக இளைஞர்களாக இருப்பவர்கள் சமூக பொறுப்புணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
அந்தஅடிப்படையில் நமது சமூகத்திற்கு மாவட்ட அதிகாரி (கலெக்டர்)இ ஐபிஎஸ்இ நீதிபதி போன்ற உயர்பதவிகளை வகிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். தற்காலத்திய இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனைப் பயன்படுத்தி மேற்கூறிய துறைகளில் நுழையக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அதைப்போல் இளைஞர்கள் சமுதாயத்தை ஒன்றிணைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதற்கு நபிகளாரின் வழியில் சிறந்த முன்மாதிரி அமைந்துள்ளது.
நபியவர்களுக்கு 35வது வயதாக இருக்கும்போது மக்கத்து மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கஅபாவை புணர்நிர்மானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அவ்வாறு அவர்கள் கஅபாவைக் கட்டத்தொடங்கினர். கஅபாவின் பெரும்பகுதி கட்டிமுடிக்கப்பட்டது.
இறுதியில் ஹஜ்ருல் அஸ்வத் கல் வைக்கும் இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது.
அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது.
அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம்இ “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர்.
அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூறஇ அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது. (இப்னு ஹிஷாம்இ ரஹீக் அல் மக்தூம்)
நபியவர்கள் தனது இளம்வயதில் தனது சமூகத்தை ஒன்றிணைக்கும் விதமாக அழகான தீர்வு கூறியிருக்கிறார்கள். இவ்வாறுதான் இளைஞர்கள் இருக்க வேண்டும். அவர்கள் சமூகத்தை ஒன்றிணைக்கும் வேலையில் ஈடுபட வேண்டும்.
இளமையும் மறுமை சிந்தனையும்
இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மறுமை சிந்தனை அவசியம். ஏனெனில் இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. சிறிது காலம்தான் இவ்வுலகில் வாழப்போகிறோம் நிரந்தர வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். எனவே நாம் மறுமை வாழ்க்கையில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் மறுமை சிந்தனையோடு வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நபித்தோழர்களிலுள்ள இளைஞர்கள் மறுமை சிந்தனையைத்தான் உயரத்தில் வைத்திருந்தார்கள். அதற்கு சான்றுதான் ரபீஆ ரலி.
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான்இ சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள்இ அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக! என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 843.
ரபிஆ பின் கஅப் ரலி ஒரு வாலிபர். அவரது வயது 20 - 35 வயதிற்குள்தான் இருக்கும். இந்த வாலிப வயதில் ஒவ்வொருவருக்கும் பலவித தேவைகள் இருக்கும். அதை மனதில் வைத்து அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்று அவரிடம் நபிகளார் கேட்டார்கள்.
அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல்இ ‘சொர்க்கத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்’ என்று பதிலளித்திருக்கிறார்கள்.
இது வாலிப நபித்தோழர்கள் மறுமை சிந்தனையோடு வாழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ஆக நாமும் இதுபோல் மறுமை சிந்தனையோடு வாழ வேண்டும்.
இளைஞர்கள் செய்யக்கூடாதவை
இளமை வந்துவிட்டால்…
இளமை வருகின்ற வரையிலும் நாம் செய்யும் தவறுகள் நம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இளமை வந்துவிட்டால் நாம் செய்யும் அனைத்திற்கும் நாமே பொறுப்பாளிகளாவோம்.
‘சிறுவர் பருவ வயதை அடையும் வரைஇ பைத்தியக் காரர் புத்தி தெளியும் வரை (செய்யும் தவறுகளைப்)பதிவதை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: அஹ்மத் 24694
ஆக நமது இளமைப்பருவத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும்.
மார்க்கத்திற்கு புறம்பான செய்களில் ஈடுபடாதீர்கள்
இளைஞர்கள் மார்க்கத்திற்கு புறம்பான செயரல்களை அறிந்து கொண்டு அவற்றில் ஈடுபடாமல் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்கள் :
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் 'இளைஞர்கள் சிலரை அல்லது 'மக்கள் சிலரைக்' கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியேவிட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். இப்னு உமர்(ரலி)இ 'இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்' என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) கூறினார் :
பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5515.
மார்க்கம் தடுத்த இது போன்ற செயல்களை செய்வது இளைஞர்களுக்கு விருப்பமானதாக இருக்கும். ஆனால் ஒரு இஸ்லாமிய இளைஞன் அவ்வாறு இருக்கக்கூடாது.
உதாரணத்திற்கு பைக்கில் வேகமாக சென்று சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பெருமையாக இருக்கும். ஆனால் இது ஆபத்தான ஒரு செயல். இது உண்மையான வீரம் அல்ல. இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
இளமைப்பருவம் உணர்ச்சிக்கு உடனே பலியாகக்கூடிய பருவம். இப்பருவத்தில் நமது உணர்ச்சிகளை கட்டுக்கோப்பாக கையாள வேண்டும். இல்லையெனில் விபரீதங்கள் ஏற்படும்.
நபித்தோழர்களில் சில இளைஞர்கள் தங்களது நிதானத்தை இழந்ததினால் தவறான செயல்களை செய்தார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது "அந்த முஹாஜிர்" அல்லது "முஹாஜிர்கள்"இ "முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த அன்சாரிஇ "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்துஇ "என்ன இதுஇ அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்இ "இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால்இ (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால்இ அவருக்கு உதவி செய்யட்டும்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5040.
அன்சாரிகளும் முஹாஜிர்களும் வேறு வேறுவானவர்கள் அல்ல. இருவருமே முஸ்லிம்கள்தான். அவ்விரு சாராருக்குமிடையில் நபியவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி வைத்தார்கள். உலகில் யாருமே செய்திராத மாபெரும் புரட்சி அது.
அத்தகைய புரட்சியை உடைக்கும் வேலையில் தான் சில இளைஞர்கள் அறியாமையினால் ஈடுபட்டனர். காரணம் அவர்கள் தங்களது நிதானத்தை இழந்தனர். உணர்ச்சியை கட்டுப்படுத்தத் தவறினர்.
இதற்கு இன்னொரு சான்றும் உள்ளது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள் :
ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ்இ தன்னுடைய தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷிகளில் சிலருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள்.
உடனே அன்சாரிகளில் சிலர்இ 'தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டு விடுகிறாரோ' என்று பேசிக் கொண்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது.
உடனே நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச் சொல்லி அவர்களை முழுதாகப் பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை.
அவர்கள் ஒன்று திரண்டுவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துஇ 'உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ளதேஇ அச்செய்தி என்ன?' என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள்இ 'எங்களில் யோசனையுடையவர்கள் எதுவும் சொல்லவில்லைஇ இறைத்தூதர் அவர்களே! ஆயினும்இ எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள்இ 'தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் ஹவாஸின் குலத்தாருடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார். ஆனால்இ நம்மைவிட்டு விடுகிறாரே' என்று பேசிக் கொண்டார்கள்' என்று பதில் கூறினர்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'நிராகரிப்பைக் கைவிட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு கொடுக்கிறேன். மக்கள்இ செல்வங்களை எடுத்துச் செல்லஇ உங்கள் வசிப்பிடத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்) கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்பவற்றை விட நீங்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்' என்றார்கள். உடனே அன்சாரிகள்இ 'இறைத்தூதர் அவர்களே! ஆம்; நாங்கள் (தாங்களே எங்களுக்குப் போதுமென்று) திருப்தியடைந்தோம்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3147.
மூத்தவர்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்குஇ இளைஞர்கள் தங்களது உணர்ச்சி பெருக்கினால் நபியவர்கள்மீதே குற்றம் சுமத்தும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
ஆகவே இளைஞர்கள் எந்நிலையிலும் தங்களது நிதானத்தை தவறவிடக்கூடாது. உணர்ச்சிகளை அலைபாய விடக்கூடாது.
அழிவுகளை ஏற்படுத்தாதீர்கள்
ஸயீத் அல் உமவி(ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அபூ ஹுரைரா(ரலி)இ உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான நபி(ஸல்) அவர்கள் 'குறைஷிகளில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால் தான் என்னுடைய (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு' எனக் கூறக்கேட்டேன்' என்றார்கள்.
உடனே மர்வான்இ அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம்இ 'இளைஞர்களா?' என்று கேட்கஇ அபூ ஹுரைரா(ரலி) அவர்களைஇ 'இன்னாரின் சந்ததிகள்இ இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3605.
நபியவர்கள் இளைஞர்களால்தான் அழிவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறெனில் நாம் நமது இளமையை சரியாக வழிநடத்த வேண்டும். இல்லையெனில் அதுவே நமது இழப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.
முதிர்ச்சியற்ற அறிவு ஆபத்தானது
இளைஞர்களாக இருப்பவர்கள் அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான படிப்பினைகளை முன்னர் பார்த்தோம்.
நாம் நன்கு கற்கும் வரை அவசரப்படக்கூடாது. அறைகுறையாக கற்று அவசரப்பட்டால் அதுவே அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.
அலீ(ரலி) அறிவித்தார்கள் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள்.
முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள்.
பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள்.
அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில்இ அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3611.
பாவத்தின் அருகில் செல்லாமல் இருத்தல்
இளமைப்பருவம் சூடான பருவமாக இருப்பதால் இறைவன் வகுத்த எல்லையின் அருகில் கூட செல்லாமல் இருப்பது சிறந்தது.
நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும்இ அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2039
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மனைவியை கட்டிப்பிடிப்பது தவறில்லை.
முதியவர்கள் தங்களது மனைவியை கட்டியணைத்தால் அவர்கள் தங்களது உணர்ச்சிகளை எளிதில் கட்டுப்படித்திவிடுவார்கள். அனால் இளம் வயதோ அப்படிப்பட்டதல்ல. அதன் உணர்ச்சிகளை அடக்குவது சிரமம். ஆகவேதான் நபியவர்கள் இளைஞர்களுக்கு அதை தடை செய்தார்கள். எனவே இளைஞர்கள் முடிந்த அளவிற்கு மார்க்க எல்லையின் அருகில்கூட செல்லாமல் இருக்க வேண்டும்.
நபியின் உபதேசம்
“இளைஞனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
“நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.
அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.
நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான்.
கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது.
அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2440
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் உஃபைர் என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள்இ முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்னஇ மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று (என்னிடம்) கேட்டார்கள். நான்இ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள்இ மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால்இ அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும்இ அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும்.
அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமைஇ அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும் என்று பதில் கூறினார்கள். நான்இ அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்இ அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி)இ
நூல் : புகாரி-2856
இவைகள் இளைஞர்களுக்கு நபிகளார் அளித்த அறிவுரைகள். இவ்வறிவுரைகளை இளைஞர்கள் கட்டாயம் மனதிலா இருத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment