Tuesday, August 19, 2025

திருமணம் பற்றிய இப்னுல் ஜவ்ஸியின் அறிவுரைகள்

 



ஏக இறைவனின் திருப்பெயரால்…








இமாம் இப்னுல் ஜவ்ஸியின்
 சைதுல் காதிர் (சிந்தனைக் குவியல்)


புத்தகம் டவுன்லோடு செய்ய

திருமணம் பற்றிய இப்னுல் ஜவ்ஸியின் அறிவுரைகள்

தமிழில் 

செய்தது காமித்

இஸ்தப்ரக் பதிப்பகம்

6381653548









அத்தியாயம் 28 - திருமணத்தின் ஞானமும் பண்பாடும்


சந்ததிகளைப் பெருக்குதல்


திருமணம் (நிகாஹ்) என்பதன் அர்த்தங்கள்இ அதன் இயல்புகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்தபோது அதன் இருப்புக்கான முக்கியம் காரணம் 'சந்ததிகளைப் பெறுவதே' என்பதைக் கண்டறிந்தேன்.


ஏனெனில் இயற்கையாகவே உயிரினங்கள் தொடர்ந்து சிதைவடையும் செயல்முறைக்கு உட்படுகின்றன. அதில் இருந்து ஒரு பகுதி ஊட்டச்சத்துக்களாக மாறுகிறது. பின்விளைவுகள் முடிவுக்கு வருகின்றன. 


இந்த உலக வாழ்க்கை (கியாத் நாள் வரையிலும்) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும் வகையில் (இறைவனால்) அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வுலகில் வாழும் மனித உடல்கள் மரணமடையக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இறைவன் சந்ததிகளைக் கொண்டு மூலத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக உயிரினங்களை அமைந்திருக்கிறான். ஜஅதாவது சந்ததியைப் பெருக்குதல் மூலம் மனித வாழ்க்கையின் தொடர்ச்சி கியாமத் நாள்வரையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


காமத்தைத் தணித்தல்


உடலுறவு கொள்ளுதல் மற்றும் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருத்தல்இ மறைவான உடல் உறுப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவை மனித இயல்பின்படி வெட்கப்படத்தக்கவையாகக் கருதப்படும் செயல்களைச் சேர்ந்தவை. மனிதனின் கண்ணியமான இயல்பு இவற்றைத் தவிர்க்க விரும்புவதால்இ இப்படிப்பட்ட செயல்களை மனிதன் ஏற்றுக்கொள்ளவும்இ அனுசரிக்கவும் அல்லாஹ் மனிதருக்குள் காமத்தை (விருப்பத்தை) உருவாக்கினான். இதன் மூலம் தான் திருமணத்தின் இலக்கை அவர்கள் அடைய முடிகிறது.


விந்து வெளியேற்றமும் அதன் முக்கியத்துவமும்


திருமணத்தின் முக்கிய நோக்கத்தைத் தவிரஇ உடலுறவு கொள்வதால் ஏற்படும் மற்றொரு பயன்களையும் நான் கவனித்தேன். அது ஜஆண் உறுப்பிலிருந்துஸ விந்தணுவை வெளியேற்றுவதாகும். ஏனெனில் அது நீண்ட நேரம் உடலுக்குள் தேங்கி நின்றால் தீங்கு விளைவிக்கும்.


விந்து எனும் இந்திரியத்துளியானது செரிமானத்தின் நான்காவது கட்டத்திலிருந்து அனுப்பப்படுகிறது. எனவே அந்த சாராம்சம் மிகவும் சத்தானதாகவும் தரத்தில் உயர்ந்ததாகவும் உள்ளது. பின்னர் அது சேகரிக்கப்பட்டு அதிகமாக குவிகிறது. 


ஏனெனில் உடலானது இரத்தம்இ விந்து மற்றும் உமிழ்நீரை சேமிக்கிறது. இது உடலின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இது உடலின் வலிமையையும் உயிர்வாழ்வையும் பராமரிக்கிறது. 


விந்து சாதாரண அளவை விட அதிகமாக குவியும் போது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் அதிகமாக உடலில் தேங்கினால் அது பாதிப்பை ஏற்படுத்துவது போலவே விந்துவும் அதிக அளவில் தங்குவதால் உடலை தொந்தரவு செய்யும். 


விந்து அதிகப்படியானால் ஏற்படும் எதிர்மறை விளைவானது சிறுநீர் அதிகரிப்பதினால் ஏற்படும் உறுதியான விளைவை விட மிகவும் தொந்தரவாக இருக்கும். 


விந்து தேங்குதல் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் கடுமையான நோய்களுக்கு. மேலும் அது நச்சுத்தன்மையுடனும் இருக்கலாம்.


ஒருவர் ஆரோக்கியமான உடல் உறுப்புகளைப் பெற்றிருந்தால்இ அவரது உடலில் சிறுநீர் சேரும் போதெல்லாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது போலவேஇ விந்து வெளியேற வேண்டும் என்ற உந்துதலையும் உடல் இயல்பாகவே தூண்டும். 


இருப்பினும்இ பாலியல் உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ரீதியிலான ஆசைகள் என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் ஜஅதாவது சிலருக்கு விந்து செறிவு குறைவாக இருக்கலாம். எனவே அதை வெளியிடுவதற்கான உந்துதல் குறைவாக இருக்கும்). இதில் மக்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள் 


இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போது ஆரோக்கியமான பாலியல் உறுப்புகள் உள்ளவர்களிடம் நான் பேசுகிறேன் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


நான் முன்பு விளக்கியது போல்இ உடலில் விந்து சேரும்போது அந்த தேக்கம் நோய்களை (அம்ராத்) ஏற்படுத்திஇ அசுத்தமான கருத்துக்களை (அஃப்கார்) மனதில் கொண்டு வரும். அதே போல் தீவிரமான காம வேட்கையைத் தூண்டிவிட்டு மறைமுகமான கிசுகிசுப்புகளையும் (வஸ்வாசா) உருவாக்குகிறது.


அதிக இச்சைக் கொண்டவர்கள்


மறுபுறம்இ ஆரோக்கியமான பாலியல் உறுப்புகளும் பாலியல் ரீதியலான அதிக ஆசைகளும் (னுநளசைந) கொண்டிருக்கும் ஒருவர் விந்துவை வெளியேற்றிய பிறகு காம இச்சையோடு இருப்பதைக் காணலாம். அப்போது அவர் உணவு உண்டும் ஒருபோதும் வயிறு நிரப்பப்படாத ஒரு நபரைப் போல ஆகிவிடுகிறார்.


இந்த நிலைக்கான காரணங்களை நான் ஆராய்ந்து பார்த்தேன். அத்தகைய சூழ்நிலையில்இ யாருடன் அவர் உடலுறவு கொள்கிறார்களோ அவர்களிடமே பிரச்சனை உள்ளது என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஜஅதாவது அவரது அழகின்மைஇ தோற்றத்தில் அருவறுப்புஇ உடல் குறைபாடு அல்லது விருப்பமின்றி இருப்பது..ஸஇ இதற்குக் காரணம் இது விந்தணுவின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிடுகிறது. முழு விந்துவும் வெளியேறுவதில்லை.


நான்கூறும் இவ்விஷயத்தை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் நேசிக்கும் ஒருவரிடத்தில் இருக்கும்போது வெளியிடப்படும் விந்தணுவின் அளவையும்இ நேசிக்காத ஒருவரிடத்தில் வெளியிடும் விந்தணுவின் அளவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 


உதாரணமாகஇ உண்மையான உடலுறவின் மூலம் வெளியேற்றப்படும் விந்துவின் அளவையும் உடலுறவு கொள்ளாமல் வெளியேறும் விந்துவின் அளவையும் வித்தியாசப்படுத்திப் பாருங்கள். அதைப்போல் கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கும் கன்னி கழிந்த பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். (அப்போது நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்)


சரியான துணையை தேர்வு செய்வதின் முக்கியத்துவம்


ஆகவே சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது திரட்டப்பட்ட அனைத்து விந்துக்களையும் வெளியிடுவதை உறுதி செய்யும். அதன்மூலம் முழுமையான இன்பம் கிடைக்கும். (இதன்மூலம் விந்து வெளியேற்றிய பிறகு காம இச்சைகள் தனியும்)


(முழுமையான விந்து வெளியேறாமல் இருக்கும்) இந்தப் பிரச்சினை ஒரு நபரின் சந்ததியினரின் தரத்தையும் பாதிக்கலாம். (சுய இன்பம் மூலம் தவறான முறையில் விந்துவை வெளியேற்றாமல்) திருமணத்திற்காக தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களிடமிருந்து பிறக்கும் குழந்தை மற்றவர்களின் குழந்தைகளை விட வலிமையானதாக இருக்கும். குறிப்பாக அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களை விட கட்டுப்படுத்திக் கொண்டவர்களின் குழந்தைகள் வலிமையானவையாக இருக்கும்.


உறவினர்களை திருமணம் செய்வது விரும்பத்தக்கதல்ல


 இந்தக் காரணத்திற்காகஇ உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் உறவினரை திருமணம் செய்வது ஒருவர் தன்னுடைய ஒரு பகுதிக்குள் கலப்பது போன்ற உணர்வைத் தருவதால் அது காம விருப்பத்தைத் துண்டுவதில்லை. அது கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. ஏனெனில் அந்த நபருக்கு அவர் தனது ஒரு பகுதியுடன் தொடர்பு கொள்ளும் உணர்வைத் தருகிறது. எனவேஇ இரத்தம் இல்லாத பெண்களை திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது.


இந்தக் உறவுக் கலையின் மூலம்இ ஒருவர் தனது சொந்தக் கூடுதல் விந்துவின் தீங்கை ரத்தமல்லாத இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் தவிர்க்கலாம். 


புதிய துணை கண்ணுக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும் கூடஇது சாதாரணமாக கிடைக்காத பலன்களைத் தரக்கூடும். 


இதற்கு உதாரணம்இ வயிறு முட்டை சாப்பிட்டவராகும். அவர் ரொட்டி மற்றும் இறைச்சியை வயிறு நிரம்ப சாப்பிட்டுள்ளார். இனிமேல் ஒரு ரொட்டித் துண்டோ அல்லது இறைச்சியோ சாப்பிடுவதற்கு அவரது வயிற்றில் இடமில்லை. அந்நிலையில் அவருக்கு ஒரு பாலாடைக்கட்டி பரிமாறப்பட்டாலும்இ அவர் அதிலிருந்து சாப்பிடுவார். புதிய பொருட்கள் வழங்கப்பட்டாலும் அவர் அவற்றிலிருந்தும் சாப்பிடுவார்.


(அதாவது வயிறு நிரம்ப பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதற்குமேல் ஒரு கவள பிரியாணியைக் கூட அவரால் உண்ணமுடியவில்லை. இந்நிலையில் ஒருவர் அவரிடத்தில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டால் அவர் அவற்றைப் பருகுவார். அதுபோலத்தான் அறிமுகமற்றத் துணையை திருமணம் செய்வது.)


இதற்குக் காரணம்இ புதியதை விரும்புவது'' என்ற கருத்து கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. 


அதாவது மனிதன் தான் பழகியவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. மாறாக அவனது உள்ளம் அனுபவிக்காததையே தேடுகிறது. அதிலிருந்து ஒரு புதிய மகிழ்ச்சி கிடைக்கும் என்று கருதுகிறது. 


மேலும்இ :மனித மனம்' புதிய பொருளிலிருந்து தான் தேடும் இன்பத்தைப் பெறவில்லை என்றால், அத்தகைய தூய இன்பம் வேறு எங்கோ உள்ளது என எண்ணி வேறொருவர் பொருளில் அதைத் தேடும். அதுதான் மனிதன் புதிதாகத் தேடப்படும் ஒவ்வொரு பொருளிலும் கற்பனை செய்யும் ஒன்றாகும்.


மறுமைக்கான சான்று


இந்தப் புரிதலின் அடிப்படையில்இ 'மறுமை எனும் உயிர்த்தெழுதல்' இருப்பதற்கான மறைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களை மிக உயர்ந்த இன்பத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியுடனும் ஆசைகளுடனும் படைத்துவிட்டுஇ அத்தகைய இன்பம் இந்த வாழ்க்கையில் இல்லையெனில் அது பயனற்றதாகவும் வீணானதாகவும் இருக்கும். எனவே இந்த அர்த்தத்தைக் கவனியுங்கள்!


இந்த உலக வாழ்க்கையில் தான் அனுபவிக்கும் விஷயங்களில் குறைகளையும் குறைபாடுகளையும் 'மனித உள்ளம்' கண்டுபிடிக்கும் வரைஇ அது சிறந்த சரியானஸ புதியதைத் தேடிக்கொண்டே இருக்கும். 


(அதாவது இந்த உலகத்திலுள்ள இன்பங்களில் சில குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய மனம் ஆவல் கொள்ளும். அந்த குறைகளை நிவர்த்தி செய்யும். செய்யும் விதமாகத்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை அமைத்துள்ளான். இவ்வுறுமையை நோக்கிய உந்துதல் திருமணத்தில் அமைந்துள்ளது)


குறைகளை கண்டுகொள்ளாமல் இருத்தல்


இதன் காரணமாகவே முன்பே அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர் :


 'அதீத அன்பு என்பது நீங்கள் நேசிப்பவரின் குறைகளையும் குறைபாடுகளையும் காண முடியாத அளவுக்கு குருடராக இருப்பதாகும். மேலும் தனது சொந்த குறைபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வவருக்கு மற்றவர்களிடம் குறைபாடுகளைக் கண்டுபிடிக்க நேரம் இருக்காது' 


அளவோடு உடலுறவு கொள்ளல்


இந்தக் காரணத்தினால்இ மனைவி தன் கணவனை அவன் மறக்கும் அளவுக்குத் தன்னிடமிருந்து விலக்கி வைக்கக் கூடாது. அல்லது அவன் அவளிடம் சலிப்படையச் செய்யும் அளவுக்கு அவனைத் தன்னிடம் நெருங்கி இழுக்கக் கூடாது.


இது கணவனுக்கும் பொருந்தும். கணவன் அவளுடன் அதிகமாக உடலுறவில் ஈடுபட்டு சோர்வடைந்து விடக்கூடாது. அதைப்போல் அவளது குறைபாடுகளின் விவரங்கள் அறியாதபடி இருக்க வேண்டும். 


உடலுறவில் கவனிக்க வேண்டியவை


மேலும்இ மனைவி தன் கணவன் தன் பிறப்புறுப்புகளைப் பார்க்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் (எப்போதாவது தவிர). 


அவன் தனக்கு அருகில் இருக்கும்போது நறுமணமாயிருக்க வேண்டும். தன்னிடமிருந்து நல்ல வாசனை வருவதை உறுதி செய்ய வேண்டும். 


அறிவுள்ள பெண்கள் ஜதங்கள் கணவன்மார்களைக் கவரவும் ஈர்க்கவும் மற்றும் அவரது கவனத்தை தன் மீது தக்க வைத்துக் கொள்ளவும் செய்யும் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். 


பெண்கள் இயற்கையாகவே இதுபோன்ற முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். 


மேலும் அவர்கள் அதைப் பற்றி எந்த ஆலோசனையோ அல்லது கல்வியோ பெறத் தேவையில்லை.


இந்த விவரங்களுக்கு கவனம் செலுத்தாத அறியாமையுள்ள பெண்களைப் பொறுத்தவரைஇ அவர்களின் கணவர்கள் விரைவில்இ மற்ற பெண்களைத் தேடத் தொடங்கிஇ அவர்களிடமிருந்து விலகிச் செல்வார்கள்.


மனைவியை தேர்வு செய்வதில் கவனம்


ஒரு நபர் புத்திசாலித்தனமான மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற விரும்பினால், அதே நேரத்தில் தன்னையும் மகிழ்விக்க வேண்டும் உறவை ஏற்படுத்த அனுமதிக்கும் பெண்ணை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 


பெண் பார்த்தல்


அவர் ஒரு மனைவியைத் தேடினால்அவரைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இடையே ஒரு ஈர்ப்பு இருப்பதாக உணர்ந்தால் அவர் திருமணத்தைத் தொடரலாம்.


அதுமட்டுமல்லஇ அவள் தன் மீது ஏற்படுத்தும் விளைவை அவன் கண்டுபிடிக்க வேண்டும். 


ஏனெனில் 'உச்ச அன்பின் அடையாளம்' என்னவென்றால்இ அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து தன் கண்களைப் பிரிக்க முடியாமல் அவள் தன் கண்களில் இருந்து மறைந்துவிட்டால்இ அவளை மீண்டும் காணும் வரை மனம் கலங்கியும் வருத்தமுற்றும் இருப்பதுமே ஆகும். அதுவே அன்பின் உச்ச நிலை. இதற்குக் கீழே பல நிலைகள் உள்ளன; ஒவ்வொரு நிலையும் வித்தியாசமான விளைவுகளையும் தாக்கங்களையும் உண்டாக்கும்.


ஒருவர் ஒரு பெண் அடிமையை வாங்கவிரும்பினால் அவளை (சுதந்திரமான பெண்ணை) சாதாரணமாகப் பார்ப்பதைவிட அதிகமாகப் பார்ப்பது அவசியம்! 


பெண்ணிடம் பேசுதல்


மேலும்இ ஒருவர் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணுடன் பேச முடிந்தால் அல்லது அவள் எப்படிப் பேசுகிறாள் என்பது பற்றிய யோசனையைப் பெறும் வகையில் அவளைப் பேச ஊக்குவிக்க முடிந்தால்இ அவர் அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் அவள் ஜமுகத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெண்களின் அழகு அவர்களின் கண்களிலும் வாயிலும் (பேச்சில்) இருக்கிறது.


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்ய முன்மொழியும் ஆண் அவளை அவள் முகத்தை விட அதிகமாக பார்ப்பது அனுமதிக்கப்படுகிறது என்று கூறினார்கள்.


சில காலம் காத்திருத்தல்


இருப்பினும்இ ஒருவர் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்குமுன்இ அல்லது பெண் அடிமையை வாங்குவதற்குமுன்இ தனது இதயம் அவளுக்காக ஏங்குகிறதா என்பதை சோதிப்பதற்காக சில காலம் காத்திருக்க முடிந்தால் அது சிறந்ததாகும். ஏனென்றால்இ ஒவ்வொரு அறிவாளியும் அறிந்தது போலஇ நப்ஸ் (மனம்) ஒன்றை விரும்பி அதை அடைய ஏக்கம் கொள்வதற்குக் காரணம்இ அதை இன்னும் அனுபவிக்காததாலோ அல்லது அதன் மீதுள்ள உண்மையான அன்பினாலோ தான். அது அன்பின் காரணமாக இருந்தால்இ அவளை நேசிப்பதாலேயே தனது ஏக்கம் ஏற்பட்டது என்பதை உறுதியாக உணர்ந்த பின் அவர் திருமணம் செய்வதற்கு முன்னேறலாம்.


'காதல் இல்லாத திருமணம் நியாயத்தீர்ப்பு நாள் வரை வருத்தமும் துயரமும் நிறைந்தது என்று தோராவில் எழுதப்பட்டுள்ளது' என்று அதா அல்-கராசானி கூறினார்.


குணத்தை ஆராய்தல்


திருமணத்தின் இரண்டாவது நிலைஇ திருமணம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் குணத்தை (அக்லாக்) ஆராய்வதாகும். ஏனெனில் நற்குணம் என்பது ஒருவரின் மறைந்த அம்சமாகும். 


அவள் நல்ல குணத்தைக் கொண்டிருந்தால் அவளுடைய அழகை அதிகரிக்கும். 


மேலும் 'நல்ல முறையில் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது' திருமணத்தின் ஒரு நோக்கமாக இருப்பதால்இ குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறவரின் நல்ல குணம் அவசியமாகும்.


திருமணத்தின் மூலம் இதயமும் மனமும் சுத்தமாகும்


இதயத்தையும் மனதையும் (தவறான எண்ணங்களின் மூலமாக ஏற்படும்) கவனச்சிதறல்களிலிருந்து விடுவிப்பதற்காக ஒருவரின் (பாலியல்) விருப்பங்களை ஜசட்டப்பூர்வமாக நிறைவேற்றுவது ஒரு முக்கிய தூணாகும். ஏனெனில் இது ஒருவரின் இதயத்தை மற்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு அர்ப்பணிக்கும். ஒருவர் அடுத்தடுத்த பக்க வேலைகளை முடித்தவுடன் அவர் தனது அசல் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியும்.


இதனால்தான் நபி (ஸல்) அவர்கள்இ "ஒரு நீதிபதி கோபமாக இருக்கும்போது இரண்டு நபர்களிடையே ஒருபோதும் தீர்ப்பு வழங்கக்கூடாது" (புகாரி 7158) என்றும்இ "இஷா தொழுகையின் போது இரவு உணவு பரிமாறப்படும்போது முதலில் உங்கள் இரவு உணவை உண்ணுங்கள்" (புகாரி 673) என்று கூறினார். 


கணவன் கடைபிடிக்க வேண்டியவை


ஆகவேஇ ஒருவன் நல்ல குணத்தையும் அழகான தோற்றத்தையும் கொண்ட ஒரு பெண்ணைப் பெற்றால் (அதாவது நன்னடத்தை உடையஇன்பமான தோற்றமுள்ள பெண்) அவளின் பிற குறைகளையும் அவன் கவனிக்காமல் விட வேண்டும். 


மனைவியின் செயல்பாடுகள்


அதைப்போல் அவள் அவனை மகிழ்விப்பதற்காக முழு முயற்சியும் செய்ய வேண்டும். அதேசமயம்இ அவனுக்கு மறந்து விடும் அளவுக்கு மிக அதிகமாக விலகிவிடாமல் அவன் சலிப்பையும் அளவுக்கு அதிகமாகவும் இல்லாமல் அவனைக் கவர்வதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.


மேலும்இ அவள் தனது கணவன் விரும்பும் விதத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்; இதனால் இருவரின் பாலியல் தேவைகளும் பூர்த்தியாகும். அதன் விளைவாக அவள் கர்ப்பம் தரித்துஇ ஒரு குழந்தையைப் பெறுவாள்.


நான் முன்பு குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் அத்தகைய உறவுகள் நீடிக்கும். மேலும் ஒவ்வொரு துணையும் வேறு வழிகளைத் தேட வேண்டிய அவசியமின்றி போதுமானதாக இருக்கும். 


பலதாரமணம்


இருப்பினும்இ ஒரு ஆண் வேறொரு பெண்ணை ஜசட்டபூர்வ முறையில் திருமணம் செய்து கொள்ளும் திறன் பெற்றிருந்தால்இ மேலும் அது இதயத்தை அனைத்து கவனச்சிதறல்களிலிருந்தும் விடுவித்துஇ அவரது மற்ற கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த உதவும் சூழ்நிலையில் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்வது அவருக்கு நல்லது.


ஆனால்இ இரண்டு பெண்களுக்கிடையில் பொறாமை ஏற்பட்டு அவன் இதயம் மேலும் சிதறிவிடும் அபாயம் இருந்தால் — நாம் மிகுந்த அக்கறையுடன் காக்க விரும்பும் அந்த இதயத்தின் கவனம் குலையும் சூழல் ஏற்பட்டால் — அல்லது புதிய பெண் அவனை மறுமையை நினைவுகூர்வதில் இருந்து திசைதிருப்புவதாக அமைந்தால்இ அல்லது அவனுடைய இறையச்சத்தை சமரசம் செய்ய வேண்டிய நிலை உண்டாக்குவதாகவும் அவன் அஞ்சினால்இ அவன் ஒரே மனைவியிலே திருப்தியடைய வேண்டும்.


நான் மேலும் அறிவுறுத்த விரும்பும் விஷயங்களில் ஒன்றுஇ ஒரு மனிதன் புரிந்துகொள்ள வேண்டும் — இனிமையான அழகைக் கொண்ட பெண்களில் கற்பு ('அஃபஃப்) இயல்பாக இருப்பது அரிது என்பதே. ஆகையால்இ ஒருவர் இப்படிப்பட்ட பெண்ணை நேசித்திருந்தால்இ அவளைப் பாதுகாத்துஇ அவளின் கற்பை மிகுந்த கவனத்துடன் காக்க வேண்டும்.

ஆனால்இ அவளின் குணத்தில் தனக்கு விருப்பமில்லாததை அவர் கண்டால்இ அவளை மாற்றுவதில் தாமதிக்கக்கூடாது; இல்லையெனில் அவளிடம் பிணைந்துபோய்இ அவளுக்கான உணர்ச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த முடியாமல் சிதறலுக்குள் இழுத்துச் செல்லப்படுவார். மேலும்இ ஒரே பெண்ணில் திருப்தியடைய முடிந்தால்இ அதுவே சிறந்ததாகும். ஒருவர் அவளால் திருப்தியடையக்கூடியவரானால்இ அவர் மனநிறைவுடன் இருப்பார்; இல்லையேல் அவர் அவளை விவாகரத்து செய்து மற்றொருத்தியைத் தேடலாம்.


ஒருவர் தான் நேசிக்கும் ஒரு பெண்ணை மணக்கும்போது அது அவரது திரட்டப்பட்ட விந்து முழுவதையும் இறுதியில் வெளியிடச் செய்யும். இது குழந்தையின் பிரகாசத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதோடுஇ பாலியல் தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்கிறது. 


(பலதாரமணம் புரிந்து) மனைவிகளின் பொறாமைக்கு பயப்படுபவர்கள்இ அடிமைப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் அவர் மீது குறைவான பொறாமை இருக்கும். மேலும் அவர்களை மகிழ்விப்பது மனைவிகளை மகிழ்விப்பதை விட எளிதானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதற்கு முன்பு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் திருமணம் செய்திருந்த பலர் இருந்தனர். அப்பெண்கள் பொறுமையாக (சபீரா) இருந்து சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாண்டனர். உதாரணமாக நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நூறு பெண்கள் இருந்தனர். நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஆயிரம் பெண்கள் இருந்தனர். மேலும் நமது நபி (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் நபித்தோழர்களுக்கு பல பெண்கள் இருந்தனர். மேலும் விசுவாசிகளின் தலைவர்; அலீ இப்னு அபி தாலிப் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நான்கு மனைவிகளும் பதினெழு அடிமைகளும் இருந்தனர். மேலும் அவரது மகன் அல்-ஹசன் நானூறு பெண்களை மணந்தார்.


மேலே நான் குறிப்பிட்டவற்றை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டால்இ அல்லாஹ்வின் அனுமதியால் நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள்.



அத்தியாயம் 361 - திருமண வாழ்க்கை காதலை கொண்டது.


திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தல்

அறிவாளிகளாக இருப்பவர்கள் திருமணம் செய்வதற்கு நல்ல நடத்தை கொண்டஇ நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும். அவள் ஓரளவு ஏழையாக இருக்க வேண்டும். இதனால் அவளது தேவைகளை அவனாலேயே பூர்த்தி செய்ய இயலும். அவளது வயது அவனுடைய வயதுக்கு அருகில் இருக்க வேண்டும்.

அதிக வயது வித்தியாசமிருந்தால்…

முதிர்ந்த வயதுடைய ஆண் ஒருவர் மிகவும் இளமையான பெண்ணை மணந்தால்இ அது அவளுக்கு தீங்காக அமையலாம். அதனால் அவள் விபச்சாரம் செய்யலாம் அல்லது அவனது உயிருக்கு எதிராக அவள் சதி செய்யலாம். அவன் அவளை விவாகரத்து செய்ய கட்டாயப்படுத்தப்படலாம். அவன் அவள் மீது வலுவான காதல் கொண்டிருந்தாள்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்

ஒருவர் தனது சொந்த குறைபாடுகளை நல்ல நடத்தைகளாலும்இ நாகரிகமான செலவினங்களாலும் பூர்த்தி செய்ய வேண்டும். (அதன்மூலம் தனது மனைவியை திருப்திப்படுத்த வேண்டும்) 

நெருக்கத்தின் எல்லை

மனைவிஇ கணவனுடன் அளவுக்கு மீறி நெருக்கமாக இருந்துவிடக் கூடாது; அது அவனுக்கு விருப்பச்சோர்வை ஏற்படுத்தும். அதேவேளையில்இ அவள் மிகவும் நீண்டகாலம் பிரிந்து விடக்கூடாது; அப்படி நடந்தால் அவன் அவளை மறந்து விடும் ஆபத்து உண்டு.

அவன் அருகில் இருக்கும்போதுஇ அவள் முழுமையாக அழகுபடுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட வேண்டும். அவன் அவளது அந்தரங்க உறுப்புகளையோ அல்லது அவளது முழு உடலையோ பார்ப்பதை அவள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மனித உடல் (பெரும்பாலானவர்களுக்கு) விரும்பத்தக்கது அல்ல. மேலும்இ அவனும் அவளுக்கு தனது உடலைக் காட்டக்கூடாது. ஏனெனில் உடலுறவு என்பது படுக்கையில் நடைபெற வேண்டியது.

ஒருமுறை ஈரானின் சாசானிய மன்னனான கிஸ்ரா விலங்கல்கள் எவ்வாறு கொல்லப்பட்டு சமைக்கப்படுகின்றன என்பதைப் பார்த்தார். அதைக் கண்டு அவருடைய வயிற்றில் வெறுப்பு எழுந்தது. அதன்பின் அவர் இறைச்சி சாப்பிடாமல் விட்டுவிட்டார். இதை அவர் தமது அமைச்சரிடம் கூறியபோதுஇ அமைச்சர்: “அரசே! உணவு மேசையில் உள்ளது. பெண் படுக்கையில் உள்ளார்.” அதாவதுஇ “அதற்கு அப்பாற்பட்டு ஆராய வேண்டாம்” என்பதே பொருள்.

ஆயிஷா (ரலி) அவர்கள்இ 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்த்ததில்லை. அவரும் என்னுடையதைப் பார்க்கவில்லை. அவர்கள் ஒரு இரவு நிர்வாணமாக எழுந்தார்கள். அதற்கு முன்பு நான் அவர்களுடைய உடலைப் பார்த்ததில்லை' என்று கூறினார்கள். (இப்னு மஜா 662) இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது.

இது அறிவுடையோர் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்றாகும். ஏனெனில் இதுஇ ஆண் தனது மனைவியின் குறைகளைத் தேடுவதிலிருந்து தடுக்கிறது. 

அதைப்போல் இருவரும் தனித்தனி படுக்கையில் உறங்க வேண்டும்; பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் (உடலுறவுக்காக) சந்திக்கும் போது முழுமையான அழகு மற்றும் தயாரிப்புடன் இருக்க வேண்டும். சிலர் இதை அலட்சியமாக எடுத்துக்கொள்வதால்இ தங்கள் மனைவிகளை சுவாரஸ்யமற்றவர்களாக நினைக்கிறார்கள்; இறுதியில் தாமும் சுவையற்றவர்களாகிவிடுகிறார்கள். ஒருவர் மற்றவரிடம் விரும்பப்படாத விஷயங்களை அறிந்து விடுகிறார்கள்; இதனால் இதயம் வெறுத்துஇ தம்பதிய வாழ்க்கை மஹப்பத் (அன்பு) இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நல்லொழுக்கம் ஒரு சிறந்த ஒழுக்கம் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு அதைப் பயன்படுத்த வேண்டும்.





அத்தியாயம் 209 - எந்தப் பெண்ணும் குறையற்றவள் அல்ல. எனவே அல்லாஹ் உனக்குக் கொடுத்ததில் திருப்தி அடைந்து கொள்


பெண்கள் உடல் ரீதியாக கவர்வதில் மிகவும் வலிமையானவர்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை முழுமையாக உடையணிந்து பார்த்தாலும்இ அவள் தன் மனைவியை விட அழகாக இருப்பதாக நினைக்கலாம்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணின் நல்ல குணங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான். ஆனால் அவளை மணந்த பிறகுஇ அல்லது அவளை ஒரு துணைவியாக எடுத்துக் கொண்ட பிறகுஇ அவளுடைய தவறுகளைப் பற்றி அவன் தொடர்ந்து சிந்திக்கிறான். கடந்த காலத்தில் அவன் அந்தக் குறைகளைப் பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை. இதனால் அவனுக்கு அந்தப் பெண்ணுடன் சலிப்பு ஏற்பட்டு வேறு ஒரு பெண்ணைத் தேடுகிறான்.

இரண்டாம் மனைவியைப் பெறுவதால் பல கஷ்டங்களை அவர் அதிகம் உணரவில்லை. இரண்டாம் தரமாக கட்டவிருக்கும் மனைவி மார்க்கப் பற்றில் குறைவுடையவளாகஇ அறிவு ('அக்ல்') குறைவுடையவளாகஇ நல்ல குணங்கள் (ததிரிப்) இல்லாமை அன்பு (மஹப்பஹ்) இல்லாமை போன்றவைகளைக் கொண்டவளாக இருக்கலாம். இதனால் அவர் பெறும் பயன்களை விட இழக்க வேண்டியவை அதிகமாக இருக்கலாம்.
 
இதனால்தான் விபச்சாரக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் அனைத்து தவறுகளும் மறைக்கப்பட்டிருக்கும்போது அவளுடைய அனைத்து அழகுகளும் வெளிப்படையாகத் தெரியும்போதும் அவளுடன் தொடர்பு கொள்கிறாள் கொள்கிறார்கள். அவர்கள் அந்த தருணத்திற்காக அவளை அனுபவித்துவிட்டுஇ பின்னர் வேறொரு பெண்ணிடம் செல்கிறார்கள். 

எனவே ஒரு அறிவாளி தான் விரும்பும் அனைத்தையும் ஒருபோதும் பெற முடியாது என்பதை உணர வேண்டும்:

وَلَسْتُم بِتَاخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ

"நீங்கள் கண்களை மூடிக்கொண்டு அதைப் பொறுத்துக்கொண்டால் தவிர அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்."

அல்குர்ஆன் 2 : 267

உண்மையில்இந்த உலகப் பெண்கள் இந்த வசனத்தைத் தவிர வேறு எதனாலும் கண்டிக்கப்படவில்லை:

وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ

அவர்களுக்கு (சொர்க்கமாகிய) அங்குத் தூய துணைகளும் உள்ளனர்.

அல்குர்ஆன் 2 : 25

ஒரு கண்ணியத்திற்குரிய நபர் அழுக்கு பார்வையிலிருந்து இந்த கெட்ட பழக்கவழக்கங்கள் பற்றிய எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

எனவே அவர் மார்க்க விழுமியங்களின் அடிப்படையில் உள்ளே இருப்பவற்றில் திருப்தி அடைய வேண்டும். மேலும் வெளியில் இருக்கும் புறா அழகையும் போதுமானதாக ஏற்று திருப்தியுடன் இருக்க வேண்டும். இதனால் அவர் உள் திருப்தியுடனும் தூய்மையான இதயத்துடன் வாழ்வார்.

அதிகமாகப் தேடுவது அவரது இதயத்தை மேலும் அசுத்தமாக்கிவிடும். மேலும் அவரது மார்க்கப்பற்று வீரியம் குறைந்துவிடும்.



அத்தியாயம் 317 - மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்வு செய்யுங்கள் அல்லது துன்பப்படுங்கள்


ஒரு ஆணுக்கு ஏற்படும் தீங்கிற்கான முக்கிய காரணம் அதிகமான பெண்கள் ஆகும்.

அவனுடைய கவனம் பெரும்பாலும் அவர்களுடைய அன்புஇ வஞ்சகம்இ பொறாமை மற்றும் செலவுகளில் பிளவுபட்டு விடும். மேலும்இ அவர்களில் ஒருத்தியின் மீதான அவரது விருப்பம் குறையலாம்இ வேறு ஒருத்தியை அவர் விரும்பலாம்இ அல்லது ஒருத்தியைத் தவிர்க்க முடியாமல் போகலாம். இந்த பல்வேறு நிலைகளை அவரால் உறுதியாக சொல்ல முடியாது.

அவனால் அதையெல்லாம் தவிர்க்க முடிந்தால்இ அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்று தருவதை அவனால் உறுதி செய்ய முடியாது. அதைச் செய்தாலும்இ அவர்களில் சிலர் அல்லது அனைவரும் கூட அவனை வெறுத்து அழுது போவதை அவனால் தடுக்க முடியாது. அப்பொழுதுஇ அவன் தனது மனைவிமார்களிடம் அடைய முடியாததை மற்ற பெண்களிடம் அடைய விரும்புவான். பாக்தாத்திலுள்ள எல்லா பெண்களும் அவனுக்குக் கிடைத்திருந்தாலும்இ ஒரு அந்நியப் பெண் தோன்றினால்இ மற்றவர்களிடம் இல்லாததுதான் அவளிடம் இருக்கிறது அவன் நினைப்பான்.

'புதியது' இன்பத்தைத் தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருவேளை மறைந்திருப்பது (குறைகள்) பின்னர் வெளிப்படும். அதனால்தான் அதனுடன் வரும் எல்லா தீங்குகளையும் தவிர்க்க அவன் முயற்சி செய்யும்போதுஅவனது உடல் சோர்வடைகிறது. 

உண்மையில்இ அவன் இன்பத்தை விரும்பும் ஆசையே அந்த இன்பம் நீடிக்காமல் தடுக்கும். ஒரு துண்டு கறி மற்ற துண்டுகளைத் தடுக்கலாம்; அதுபோல்இ ஒரு இன்பம் மற்ற இன்பங்களை நிறுத்திவிடக்கூடும்."

புத்திசாலி மனிதன்இ அவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப நடப்பவளாக ஒருத்தியோடு மட்டும் தன்னை போதுமாக்கிக்கொள்பவனாக இருக்க வேண்டும். அவளிடம்இ மற்றவர்களிடம் இல்லாத சில அம்சங்கள் இருக்க வேண்டும்; ஆனால் அதில் முக்கியமானதுஇ மேலோங்கி நிற்கும் நற்குணமே. நல்ல பண்புகள்இ குறைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவையாகும்.

ஒரு பெண்ணின் அழகுக்கு முன்பாக அவளது மார்க்கப்பற்றுதான் பெரிதாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில்இ ஒரு பெண்ணிடம் மார்க்கம் குறைந்திருந்தால்இ ஒரு கண்ணியமான ஆணுக்கு அவள் எந்தப் பயனும் அளிக்கமாட்டாள்.

உடலுறவு என்பது ஒரு மனிதனை நாசமாக்கும் விஷயங்களில் ஒன்றாகும். அவனது வலிமையாலும்இ அவன் உணரும் இன்பத்தாலும் அவன் மயங்கிவிடக் கூடாது. ஏனெனில் அது திரும்பக் கிடைக்காத அவனுடைய வலிமையை எடுத்துக்கொள்கிறது. ஒரு சந்திப்பினால் அவன் கவரப்பட்டுவிடக் கூடாது. அவன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பினால்இ பெண்களைத் தவிர்த்தே ஆக வேண்டும்.


அத்தியாயம் 237 - வயது முதிர்ந்த ஆணும் இளைய வயது பெண்ணும்


ஒரு வயதான மனிதர் என்னிடம் புகார் கூறினார். 'நான் வயதாகிஇ பலவீனமாகிவிட்டேன் ஆனால் ஒரு இளம் மனைவியைப் பெற ஆர்வமாக உள்ளேன். அவர்கள் நிறைய உடலுறவு கொள்ள விரும்புபவர்கள்இ அதை என்னால் வழங்க முடியாது என்பது எனக்குத் தெரியும். என் மனைவி வயதாகிவிட்டாள். நான் அவளிடம் திருப்தி அடையவில்லை.'

நான் அவரிடத்தில் சொன்னேன் : இவ்விஷயத்தில் என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளன. அவை

முதல் பொதுவான பதில்: ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கவலைப்படுவதற்கு பதிலாகஇ மரணத்தை நினைவில் கொள்வதில் மும்முரமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களால் அவளைப் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. அவள் உங்களைப் பிடிக்காமல் இருப்பாள். மேலும் நீங்கள் அதிக முயற்சி செய்தால்உங்கள் சொந்த மரணத்தை விரைவுபடுத்துவீர்கள்.'

“மேலும்இ அவள் ஒருபோதும் ஒரு முதியவரை விரும்ப மாட்டாளென்பதும் உண்மை.”

முஹம்மது அத்தமீமி ஒரு கவிதையில் கூறினார் :

“என் இதயமே!

நீ, உன்னல்லாத வேறொருவருடன் இதயம் பிணைந்திருக்கும் ஒரு பெண்ணைச் சார்ந்திருக்கிறாய்; ஆகவே நீ நிலைபெறாத ஒன்றோடு பிணைந்துள்ளாய்.

நீ (அவளுக்கு) கட்டுப்பட்டவனாகி விட்டாய். ஆனால் அவள் சுதந்திரமாக இருக்கிறாள்; கட்டுப்பட்டவன் ஒருவன் மற்றும் சுதந்திரமாக இருப்பவள் — இவர்களுக்கிடையே என்ன வித்தியாசம்!”


“அவள் உன் இறப்புக்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்துகொள்; மேலும்இ உன் செல்வத்தை வேறு ஒருவருடன் இணையத் தயாராகவே இருக்கிறாள்.”

அவள் உன்னை கொலை செய்வதற்கே துணியக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இரு. பாதுகாப்பு என்பது (ஆபத்தை) தவிர்ப்பதிலும்இ வாழ்க்கை உனக்குக் கொண்டுவந்தவற்றில் திருப்தியடைவதிலும் உள்ளது.

இரண்டாவது பதில்: 

சில நேரங்களில் நீ பாலியல் உறவில் ஈடுபட வல்லவனாக இருப்பாய் அல்லது சில நேரங்களில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவனாக இருப்பாய். 

உடலுறவில் ஈடுபடுவதற்கு நீ வல்லவனாக இல்லைஇ நீ அதிலிருந்து தவிர்த்துக்கொள்வதே உனக்கு சிறந்தது.

ஒருவேளை நீ அவளைப் பணத்தாலும் நல்ல நடத்தை மூலமும் ஈடு செய்யக்கூடும்; ஆனால் அதுவும் ஒரு ஆபத்தே.

நீ சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவதற்கு வல்லவனாக இருந்தால்இ இளம் பெண்ணைத் திருமணம் செய்; ஏனெனில்இ அவர்கள் பாலியல் விஷயங்களை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பணமும் நன்னடத்தையும் வழங்கிஇ அவர்களைப் பிற பெண்களுடன் கலப்பதிலிருந்து தடுத்திடு.”

பெண் உச்சக்கட்டத்தை அடையும் வரை நீ விந்து வெளியிடாமல் இருக்க முயற்சி செய்! மேலும்இ அவளுக்கு மறுமை குறித்து அறிவுரை கூறு. பாலியல் தொடர்பற்ற கதைகளைச் சொல்லிக் கொடு. சாலிஹீன்கள் (நல்லோர்) குறித்து அவளுக்கு நினைவூட்டு.

நீ நல்ல நறுமணத்தையும் அழகான உடையும் பயன்படுத்திக் கொள். அவளுக்காக அதிகம் செலவழி; இதுவே அந்தக் காப்பகத்தை (வாழ்க்கைப் பயணத்தை) பாதுகாப்பாக முன்னெடுத்து செல்ல உதவும்.


No comments:

Post a Comment

இஸ்லாம் பரிபூரணமானது

 இஸ்லாம் பரிபூரணமானது நமது தேவைக்குப் போதுமான பணம் நம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறரிடம் கடன் வாங்குவதில்லை. நமது நாட்டிற்கு போதும...