இந்திய சுதந்திர போரில் இஸ்லாமும் இஸ்லாமியர்களும்
புத்தகம் டவுன்லோடு செய்ய
இந்திய சுதந்திர போரில் இஸ்லாமும் இஸ்லாமியர்களும்
செய்யது காமித்
இஸ்தப்ரக் பதிப்பகம்
6381653548
பாகம் 1 - இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த இஸ்லாமிய மார்க்கம்
இந்திய சுதந்திர போராட்டத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள்.
எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களும் போராட்டக் களத்தில் நின்றார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இதில் நாம் உணர்ந்து கொள்ளாத இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால்இ மனிதர்கள் சுதந்திரத்திற்காக போராடியது போன்று ஒரு மார்க்கமும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது. அதுதான் இஸ்லாமிய மார்க்கமாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்று வேறு எந்த மார்க்கமும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. அநனத அளவிற்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் இந்திய விடுதலைக்காக தனது பெரும் பங்கை செலுத்தியுள்ளது.
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
ஜும்ஆ தொழுகை
இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதை அடைந்த ஆண்கள் மீது ஜும்ஆ தொழுகையை கடமையாக்கியிருக்கிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிமான ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு வந்து குழும வேண்டும்.
அங்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகள் நிகழும். அந்த உரையை கட்டாயமாக முஸ்லிம்கள் கேட்க வேண்டும். இது இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியமான வழிமுறையாகும்.
முஸ்லிம்கள் இஸ்லாம் கடமையாக்கிய இந்த ஜும்ஆ தொழுகையை சுதந்திர விடுதலைக்காக பயன்படுத்தினார்கள்.
அன்றைய தினத்தில் இந்தியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் மக்களை பல விதங்களில் திசை திருப்புகின்றனர் திருப்பினார்கள். சுதந்திரத்தைப் பற்றி மக்களை யோசிக்க விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வரிகளை விதித்தார்கள்.
ஆங்கிலேயர்களின் இந்தச் சதிகளை முறியடித்து மக்கள் மனதில் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டே இருப்பது அன்றைக்கு மிகுந்த தேவையாக இருந்தது. அப்போது மிகவும் உதவி செய்த ஒரு காரியம் தான் ஜும்ஆ பிரசங்கம்.
அன்றைய தினத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ஜும்ஆ பிரசங்கத்தில் உலமாக்கள் அனைவரும் இந்திய சுதந்திரத்தைப் பற்றிதான் பேசினார்கள். சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் ஜும்ஆ சொற்பொழிவின் மூலம் ஊட்டினார்கள். இது ஆங்கிலேயர்களுக்கு பெரிய குடைச்சலாக இருந்தது.
அந்த வகையில் ஒருமுறை டெல்லியிலுள்ள ஜும்ஆ மசூதியில் அங்குள்ள உலமா ஒருவர் சுதந்திரத்தைப் பற்றி பிரசங்கம் நிகழ்த்தினார். மக்களெல்லாம் ஆர்வமாக அந்த உரையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அனைவருடைய கண்களிலும் சுதந்திர வெறி அனலாக எரிந்து கொண்டிருந்தது. இதைப் பாெறுக்க முடியாத ஆங்கிலேய அரசு பள்ளிவாசலுக்குள் அத்துமீறி துப்பாக்கிகளைக் கொண்டு முஸ்லிம்களை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது.
இதில் ஏராளமான முஸ்லிம்கள் வீர மரணமடைந்தனர்.
முஸ்லிம்களின் உடலிலிருந்து தெரித்த ரத்தங்கள் அந்த பள்ளிவாசலின் சுவர்களில் ஒட்டிக்கொண்டன.
இன்றும் அந்த ரத்தக்கறையை நாம் காணலாம்.
அதனால்தான் அந்த பள்ளிவாசலுக்கு இரத்தக் கறை படிந்த (கூனி) பள்ளிவாசல் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப் போரில் ஜும்ஆ பிரசங்கத்தின் பங்களிப்பு அளப்பறியது என்பதை இந்த சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
ஜிஹாத்
ஜிஹாத் என்பது அநியாயத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிராக நடத்தப்படும் போராகும். இந்த ஜிஹாதிற்கு இஸ்லாம் மிகப்பெரும் அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. அநியாயத்திற்கு எதிராக போராடுவதை இஸ்லாம் முஸ்லிமின் மீது கடமையாக்கியிருக்கிறது.
அந்த வகையில் அநியாயக்கார பாவிகளான ஆங்கிலேயர்களை விரட்டுவதில் இந்த ஜிஹாதும் முக்கிய பங்கை வகுத்திருக்கிறது.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்கள் அன்றைய தினத்தில் 'ஆங்கிலேயர்களை எதிர்ப்பது ஜிஹாத்' என்று முழங்கினர்.
ஜும்ஆக்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜிஹாதில் பங்கெடுக்குமாறு முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனர்.
இந்த ஜிஹாத் என்ற வார்த்தை கொடுத்த உத்வேகம்தான் முஸ்லிம்களை சாரைசாரையாக சுதந்திர போரில் பங்கெடுக்க செய்தது.
இந்த ஜிஹாதில் மரணித்தால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்று உலமாக்கள் கூறினார்கள். ஷஹீத் என்றால் எவ்வித கேள்வி கணக்குகளும் இல்லாமல் நேரடியாக சொர்க்கம் செல்வதை குறிக்கும். முஸ்லிம்கள் மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தாேடு வாழ்பவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெறம் சுதந்திர போரில் வீரமரணமடைந்தால் அவர் நேரடியாக சொர்க்கம் செல்வார் என்று கூறப்பட்டதும் ஏராளமான முஸ்லிம்கள் இந்திய விடுதலைக்காக தனது உயிரை காெடுக்க முன்வந்தனர்.
இந்திய சுதந்திர போரில் தங்களது சதவீதத்தை விட அதிகமாக பங்கெடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களில் இந்த அளப்பெரிய தியாகத்திற்கு முக்கிய காரணம் ஜிஹாத் என்ற இஸ்லாமிய வழிமுறைதான்.
ஃபத்வா ஏற்படுத்திய பயம்
இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு ஃபத்வா என்று சொல்லப்படும்.
ஃபத்வாக்கள் சட்டங்களுக்கு மூலமாக இருக்கும்.
மார்க்கத்தை நன்கு கற்றுஇ மார்க்க சட்ட விதிமுறைகளை பயின்றுஇ நிபுணத்துவம் பெற்ற உலமாக்கள்தான் ஃபத்வா வழங்குவார்கள். அதற்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
இந்த ஃபத்வாக்கள் சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக மிக முக்கிய பங்காற்றியது.
முஸ்லிம் உலமாக்கள் ஃபத்வா வெளியிட்டிருக்கிறார்கள் என்று ஆங்கிலேயர்கள் கேள்விபட்டால் உடனே அது அவர்களின் வயிற்றில் புளியை கறைக்க ஆரம்பித்துவிடும். ஃபத்வாவை வாசிப்பதற்கு முன்னே பயம் அவர்களை கவ்விக்கொள்ளும். அந்த அளவிற்கு ஃபத்வாவைக் கண்டு பதறுபவர்களாக அன்றைய ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.
ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஃபத்வா வெளிவரும்போது அது முஸ்லிம்களிடம் சுதந்திர உணர்ச்சியை மிகப்பெரிய அளவில் தூண்டிவிட்டது.
இதனால் முஸ்லிம்கள் மிகவும் உக்கிரமாக போர் புரிய தொடங்கிவிடுவார்கள். இதுதான் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்திருந்தது.
ஆகவே சுதந்திர போருக்கு வித்திட்டஇ அதை உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஃபத்வாக்களில் சிலவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.
முதல் பத்வா
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களது காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காக வந்தபோது அவர்களை எதிர்த்து முதன்முதலில் மிகப்பெரும் போரை நடத்தியவர் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா. இந்த போர் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் (1756-1763) நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயர்கள் சில சதித்திட்டங்களை தீட்டி சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி தங்களது காலனியாதிக்கத்தை இந்தியாவில் வலுவாக்கினர்.
அதன்பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்து மிகப்பெரும் எதிர்ப்பை காட்டியவர் முதல் விடுதலைப் புலி திப்பு சுல்தான்.
திப்பு சுல்தானின் இந்திய படைகளுக்கும் ஆஙகிலேயர்களுக்கும் இடையில் மைசூர் யுத்தம் நடைபெற்றது. நான்கு மைசூர் யுத்தங்கள் நடைபெற்றன. இதில் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் சேதத்தையும் உள்ளத்தில் மிகப்பெரும் பயத்தையும் திப்பு ஏற்படுத்தினார். இறுதியில் நான்காவது மைசூர் போரில் சில சதிச்செயல்களால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு 1799ல் வீரமரணமடைந்தார்.
திப்புவின் மரணத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் நாம் நிம்மதியாக இருக்கலாம். நாம் மிகப்பெரும் எதிர்ப்பை இனிமேல் சந்திக்கப் போவதில்லை. சிறு சிறு எதிர்ப்புகள்தான் கிளம்பும். அதை எளிமையாக அடக்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் தங்களது காலனியாதிக்கத்தை இந்தியாவில் விரிவாக்கினர். அதன்பிறகு 1803ல் டில்லியை கைப்பற்றினார்.
அப்போதுதான் ஆங்கிலேயர்களின் நிம்மதியை கெடுக்கும் ஒரு காரியம் நடந்தது. அவர்களுக்கு தலைவலியை மட்டுமல்ல அவர்களது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது வலியை ஏற்படுத்தியது.
‘இனிமேல் மிகப்பெரும் எதிர்ப்பை சந்திக்கமாட்டோம்’ என்று நினைத்தவர்களுக்கு மிகப்பெரும் பேரிடியாக அந்த காரியம் அமைந்திருந்தது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்களால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்கள்.
ஆங்கிலேயர்கள் டில்லியை கைப்பற்றிய அதே 1803ல் மௌலவி ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி அவர்கள் ஒரு ஃபத்வாவை வெளியிட்டார்கள். அந்த ஃபத்வாவில்இ
"டெல்லியில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அமர்ந்தது இந்தியாவை அசுத்தப்படுத்திவிட்டது. எனவே வெள்ளையர்களுக்கு எதிராக ஒவ்வொரு முஸ்லிமும் ஜிஹாது செய்ய வேண்டும். இல்லையெனில் ஹிஜ்ரத் செய்து நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இது முஸ்லிம்களின் மீது கடமை"
இந்த ஃபத்வா ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக முஸ்லிம்களை எவ்வாறு செயல்பட வைத்தது?
இதைப் பற்றி அமரேஸ் மிஸ்ரா என்ற எழுத்தாளர் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது : திருக்குர்ஆனை முதன்முதலாக உருதுமொழியில் மொழியாக்கம் செய்தவர் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. இவர்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை பெரும் மக்கள் திரள் போராட்டமாக மாற்றியமைத்தார். இதனை அவர் எப்படி செய்தார்? அவர் வெளியிட்ட தாருல் ஹர்ப் (விரோத பூமி) என்ற ஃபத்வாதான் இதற்கு காரணமாக அமைந்திருந்தது. எவ்வித மாச்சரியமுமின்றி ஆய்வு செய்தால் 1799ல் நிகழ்ந்த திப்பு சுல்தானின் வீரமரணம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சமஸ்தானங்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவந்ததென்றால் "ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி வெளியிட்ட ஃபத்வா காலனியாதிக்கத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டத்தை தொடங்கி வைத்தது" என்று உறுதியாக கூறலாம்.
பெரும் மக்கள் திரள் போராட்டத்திற்கு காரணமாக அமைந்ததே ஃபத்வாவினால்தான் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
சிப்பாய் கலகத்திற்கு காரணமான ஃபத்வா
தாருல் உலூம் தேவ்பந்தை நிறுவிய மவ்லானா முஹம்மது காசிம் நானூத்தவிஇ மவ்லானா ரஷீத் அஹமது கங்கோஹிஇ ஹாபிழ் ஜமீன் சஹீத் போன்ற 34 இஸ்லாமிய உலமாக்கள் சேர்ந்து கையொப்பமிட்டு 1857ம் ஆண்டு ஒரு ஃபத்வாவை வெளியிட்டனர்.
இதில் அவர்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போர் புரிவதை வலியுறுத்தி எழுதியிருந்தனர். இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியது. இதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரும் புரட்சி உக்கிரமாக நடைபெற்றது.
போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலும் உலமாக்கள் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக நிறைய கட்டுரைகளை எழுதினர்.
மவ்லவி பக்கர் அவர்கள் 'டெல்லி உருது அக்பார்' என்ற தனது இதழில்இ 'மாபெரும் அரசர்களான அலக்ஸாண்டர்இ செங்கிஸ்கான்இ ஹலாகு மற்றும் நாதிர் ஷா முதலியோர் காணாமல் போனதுபோல் ஒரு நாள் ஆங்கிலேயர்களும் காணாமல் போவார்கள்' என்று எழுதினார். இது வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வரவழைத்தது.
சிப்பாய்கலகத்தைப் பற்றி ஆங்கிலேய கேப்டன் ஜி.ஹக்கின்சன் குறிப்பிடுவதாவதுஇ
"ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்புக்குரல் மதத்தூண்டுதல் (பத்வா) மூலமாக பைஸாபாத்தில் மவ்லவி ஒருவரால் எழுப்பப்பட்டது. ஆயுதம் தாங்கிய தமது ஆதரவாளர்களுடன் அந்த மவ்லவி நகரத்தில் நுழைந்தார். இந்த அஹமது அலி ஷா தாம் சென்ற இடங்களிலெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யும்படி மக்களைத் தூண்டினார்."
இந்த ஃபத்வாதான் சிப்பாய் கலகத்தை ஆரம்பித்தது என்பதை ஆங்கிலேய அதிகாரி தெரியப்படுத்துகிறார். இந்த சிப்பாய் கலகத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதில் 51இ200 பேர் உலமாக்கள். இதன்மூலம் உலமாக்கள் வெறுமனே ஃபத்வாவின் மூலமாக மக்களைத் தூண்டுவதோடு நில்லாமல் களத்தில் இறங்கி போரும் புரிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஒத்துழையாமை இயக்கத்திற்கு அடித்தளமிட்ட ஃபத்வா
1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லட்காமணபுரியிலுள்ள பரங்கி மஹல்லா மற்றும் தேவ்பந்த் மதரஸா முதலிய மதரஸாக்களில் பணிபுரிந்து ஐந்நூறு உலமாக்கள் கையொப்பமிட்டு ஒரு ஃபத்வாவை வெளியிட்டனர். அதில்இ
'ஆங்கிலேய அரசாங்களுடன் ஒத்துழைப்பதும். அவர்களுடன் நேசம் கொள்வதும் ஹராம் (தடைசெய்யப்பட்டது). (அவர் நடத்தும்) பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை (பர்ளு அய்ன்). வக்கீல் தொழிலை நடத்துவது தடுக்கப்பட்டவை. கொளரவ பட்டங்களை ஏற்றுக்கொள்வது காபிர்களின் செயல். கிலாபத் இயக்கத்தில் சேராதவர்கள் போர்க்களத்திலிருந்து புறங்காட்டி ஒடுபவர்களுக்கு சமமாக கருதப்படுவார்கள். மேலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிராலும் பொருளாலும் போராடுவது மார்க்கத்தின் அடையாளம் ஆகும்'.
இந்த ஃபத்வா வெளிவந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் தங்களது அரசாங்க பதவிகளை துறந்தனர். பலர் தங்களது படிப்புகளை பாதியிலேயே நிறுத்தினர். பலர் தங்களது கவுரவ பட்டங்களை ஆங்கிலேயரிடமே திருப்பி காெடுத்தனர். ஒத்துழையாமை இயக்கத்தை ஒழுங்காக கடைபித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று கூறுமளவுக்கு முஸ்லிம்கள் இதை சிறப்பாக செய்து காட்டினர்கள்.
இது ஆங்கிலேயர்களுக்கு பெரிய குடைச்சலாக அமைந்தது. ஆகவே ஆங்கிலேய அரசு இந்த ஃபத்வா வெளியிட்ட உலமாக்களை கைது செய்தது. ஏராளமான முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தின் ஜும்ஆத் தொழுகைஇ ஜிஹாத் மற்றும் ஃபத்வா போன்ற வணக்க வழிபாடுகள் சுதந்திர போராட்டத்தை மும்முரமாக முன்னின்று நடத்தியது.
இதிலிருந்து இஸ்லாமிய மார்க்கம் சுதந்திர போரில் எந்த அளவிற்கு பங்கெடுத்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பாகம் 2 - சுதந்திர போரில் இஸ்லாமியர்கள்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் முண்ணனியில் நின்றார்கள். அவர்கள் தங்களது சதவீதத்தைவிட அதிகமாகவே சுதந்திரத்திற்காக உழைத்திருக்கிறார்கள்.
எவ்விதமான அடக்குமுறையோஇ ஆசைவார்த்தைகளோ அவர்களை போராட்டங்களிலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை.
சிறுவர் முதல் பெரியவர் வரைஇ சாதாரணமானவர்கள் முதல் மவுலானாக்கள் வரை அனைவரும் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
ஆங்கிலேய நீதிமன்றத்தில் முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் விடுதலை முழக்கம்…
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இஸ்லாமியர்களின் தியாகங்கள் குறித்து எண்ணற்றப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
எக்கச்செக்கமான இஸ்லாமியர்கள் இந்திய மண்ணிற்காக தங்களது இன்னுயிரை ஈந்தார்கள்.
அத்தகைய தியாகச் சீலர்களில் இருவர் நீதிமன்றங்களில் மொழிந்த சுதந்திர முழக்கத்தை இப்பகுதியில் காண்போம்.
மவுலானா முஹம்மது அலி
மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரராக மவுலானா முஹம்மது அலி அவர்கள் திகழ்ந்தார்கள்.
அதனால்தான் காந்தியடிகள்இ முஹம்மது அலியை சிங்கம் என்று வர்ணித்தார்கள்.
'எனது தோளின் மீது இரண்டு சிங்கங்கள் (மவுலானா முஹம்மது அலிஇ மவுலானா சவுக்கத் அலி) இருக்கின்றன' என்ற காந்தியின் கூற்று மவுலானா முஹம்மது அலியின் புகழை பறை சாற்ற போதுமான ஆதாரமாகும்.
முஹம்மது அலி பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவராக எதற்கும் துணிந்தவராக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றார்கள்.
1921 ஜீலை 8 அன்று கராய்ச்சியிலுள்ள ஈத்காஹ் மைதானத்தில் (ஒருங்கிணைந்த இந்தியா) மவுலானா முஹம்மது அலி தலைமையில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது.
21-07-1921 அன்று அம்மாநாட்டில் பேசிய மவுலானா முஹம்மது அலியின் வீரவேசப் பேச்சுக்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வெள்ளையர்களை வெலவெலக்கச் செய்தது. ஏனெனில் அம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் நாவுகளிலிருந்தும் ஒத்துழையாமைஇ அகிம்சை என்ற கீதங்கள் வெளிவந்துகொண்டிருந்தது. இது பிரிட்டிஷாரின் உள்ளங்களை பிணி கொள்ளச் செய்தது. இந்த மாநாட்டின் மூலம் அலி சகோதரர்களின் புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் மவுலானா முஹம்மது அலியை கைதுசெய்தனர். 1921 அக்டோபர் 26ல் இவ்வழக்கு கராச்சி மாஜிஸ்ரேட்டில் விசாரணைக்கு வந்தது. கோர்ட் ஹாலைச் சுற்றிலும் முள் கம்பி வேலி போடப்பட்டது. நான்கு பக்கங்களிலும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் மற்றும் இராணுவ சிப்பாய்கள் நின்றிருந்தனர். கோர்ட் வளாகத்திற்குள் 250 இந்திய சிப்பாய்களும் 250 ஆங்கில சிப்பாய்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையம் அமைக்கும் அளவிற்கு மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரராக அவர் விளங்கினார்.
காவல் துறையினர் மவுலானா முஹம்மது அலியையும் அவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் போலிஸ் வாகனத்தில் வைத்து கொண்டு வந்தனர். போலிஸ் வாகனம் சாலையில் வந்த போது வழிநெடுக நின்றுகொண்டிருந்த மக்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்கினர். அந்த முழக்கம் விண்ணைப் பிளந்தது. மவுலானா முஹம்மது அலி மிகப்பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரும் ஆதாரம்.
மவுலானா ஒரு கையில் திருக்குர்ஆனையும் மறு கையில் பேனாவையும் ஏந்திக்கொண்டு சிங்கம் போன்று கம்பீரமாக நீதிமன்றதிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் அமரும் வரை நீதிமன்றத்திந்குள் இருப்பவர்கள் யாரும் அமரவில்லை. அவர்கள் தனது ஆசனத்தில் அமர்ந்ததற்குப் பிறகே மற்றவர்கள் அமர்ந்தார்கள். இது மவுலானா மீது மற்றவர்களுக்கு இருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது.
பிறகு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அதில் மவுலானா பேசிய வீரமிகு பேச்சுக்களில் சிலஇ
“கனவான்களேஇ நீதிபதி எங்களுக்கு ஆயள் தண்டனையோஇ தூக்கு தண்டனையோ அல்லது சிறை தண்டனையோ இவற்றில் ஏதாவதொன்றை அளிப்பார். நான் எனக்காகவும் எனது நண்பர்களுக்காகவும் எதிர் வழக்காடி இவைகளிலிருந்து தப்ப முயற்சித்தால் அது அறவே மன்னிக்க முடியாததாகவே இருக்கும்.
“எங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைத்தாலும்இ உங்களது தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் தண்டனை வழங்கப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை. உங்களது தண்டனை சட்டத்தின் பிரிவுகளுக்குத்தான் குறைச்சலில்லையே. 234இ 235இ 236இ 239இ 123யுஇ 131இ 109இ 505இ 117 ஆகிய ஏராளமான பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகள் எல்லாத்தையும் சேர்த்து எனக்கு எத்தனை வருடங்கள் தண்டனை கிடைக்கும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த ஆயுள் ஒன்றுதான் உள்ளது. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின்படி எனக்கு தண்டனை கிடைத்தால் அத்தனை வருடங்களுக்கும் என் ஆயுள் போதுமா? என்பது எனக்கு விளங்கவில்லை.
மேலும் மவுலானா நீதிமன்றத்தில் பேசும் போதுஇ எனக்கு தரவிருக்கும் தண்டனையை விலக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு சிறைச்சாலைதான் வாசற்படியாகும். பிரிட்டிஷாருக்கு எதிராக யுத்தம் புரிந்ததற்காக நான் தூக்கிலிடப்பட்டால்இ (அந்நியருக்கு எதிராக போரிடுவதுதான்) எனது சட்டம். அதுதான் என் உரிமை என்று நான் சொல்வேன். தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் என் பிரேதம்கூட அதையே கூறுமென நான் நம்புகிறேன். ஆகவே கனவான்களே ஆயள் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்க எண்ணம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு இறைவன்மீது நம்பிக்கை இருக்குமானால் உங்களது மனசாட்சிப்படி தீர்ப்பளியுங்கள்.
மேற்கண்ட வாதங்களின் மூலம் மவுலானா முஹம்மது அலி மிகப் பெரும் வீரர் என்பதை அறிந்து கொள்ளலாம். நீதிமன்றங்களின் சட்டங்களை நீதிமன்றத்தில் வைத்தே தைரியமாக கேலி செய்கிறார். அவர்கள் உருவாக்கிய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளை அவர்கள் முன்னிலையிலேயே எள்ளி நகையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்திய சுதந்திரத்திற்காக தனது உயிரை துச்சமாக கருதியிருக்கிறார். அதனால்தான் தனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள்? என்று அறைகூவல் விடுக்கிறார். இந்திய சுதந்திரத்தின் வாசற்படியே சிறைச்சாலைதான். அதனால் என்னை விடுதலை செய்யாதீர்கள் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் என்றால் அவரது உள்ளத்தில் சுதந்திர வேட்கை எந்தளவிற்கு ஊறிப்போயிருக்கும்.
கைர் முஹம்மது
ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து மாகாணத்தில் மக்கள் கூடும் ஒரு தெருமுனையில் சிறுவன் ஒருவன் வீரமாக பேசிக்கொண்டிருந்தான். அந்த சிறுவனின் வயது பதினொன்று. பெயர் கைர் முஹம்மது. வயதோ சிறியதுஇ ஆனால் அவனது உரையைக் கேட்க கூடிய கூட்டடேமா மிகப்பெரிது. அவனது பேச்சு மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை பொங்கியெழச் செய்தது. நாடி நரம்புகள் புடைக்க அவன் பேசுவதை மக்கள் நகராமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சிறுவன்தானேஇ இவன் என்ன செய்துவிடப் போகிறான் என்றெண்ணிய ஆங்கிலேயர்கள் அவனது பேச்சினால் மக்கள் எழுச்சியுறுவதை கண்டதும் சீறிப்பாய்ந்தார்கள். சிறுவனின் கையில் விலங்கினைப் பூட்டி அவனைக் கைது செய்தார்கள்.
இந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. வழக்கு கூண்டில் சிறுவன் கைர் முஹம்மது கொண்டு வந்து நிறுத்தப்படுகிறான். கைர் முஹம்மதைவிட வழக்குக் கூண்டு பெரிதாக இருந்தது. வழக்குக் கூண்டிற்குள் எட்டிப்பார்த்தால்தான் கைர் முஹம்மதுவின் தலை தெரியும். அந்த அளவிற்கு சிறியவனாக கைர் முஹம்மது இருக்கிறான். அங்கு நடந்ந உரையாடல் இதோஇ
நீதிபதி : உன் பெயர் என்ன?
கைர் முஹம்மது : என் பெயர் ஆசாத்.
(நீதிபதி வழக்கு விவரங்கள் அடங்கிய அறிக்கையை உற்றுப்பார்க்கிறார். அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் கைர் முஹம்மது என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் கூண்டுக்குள் இருக்கும் சிறுவனோ தனது பெயர் ஆசாத் என்று கூறுகிறான். நீதிபதிக்கு பலத்த சந்தேகம். ஒருவேளை ஆளை மாற்றி கொண்டு வந்துவிட்டார்களோ என்ற குழப்பத்தோடு அடுத்த கேள்வியை கேட்கிறார்.
நீதிபதி : குற்றப்பத்திரிக்கையில் உனது பெயர் கைர் முஹம்மது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே!.
கைர் முஹம்மது : கைர் முஹம்மது என்பது இந்த உலகம் எனக்கு வழங்கிய பெயர். ஆனால் ஆசாத் என்பது என் உணர்வின் பெயர்.
(ஆசாத் என்றால் விடுதலை என்று அர்த்தம். இந்தியா விடுதலைப் பெற வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுவதால் தனது பெயரை ஆசாத் (விடுதலை) என்று நீதிமன்றத்தில் கைர் முஹம்மது முழுங்குகிறான். எவ்வளவு துணிச்சல் பாருங்கள். இச்சிறுவனுக்கு இந்திய விடுதலையின் மீது எவ்வளவு பெரிய வேட்கை இருந்திருந்தால் யாருக்கும் பயப்படாமல் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருப்பான்?)
நீதிபதி : உன் தந்தையின் பெயர் என்ன?
கைர் முஹம்மது : (வழக்கு கூண்டின் இரு முனைகளையும் இறுக்கிப் பிடித்து கம்பீரமாக நின்றுகொண்டு) இஸ்லாம்.
நீதிபதி : (எரிச்சலுடன்) நீ எந்த ஜாதியை சேர்ந்தவன்.
கைர் முஹம்மது : நான் ஒத்துழையாமை ஜாதியை சேர்ந்தவன்.
(இச்சிறுவன் ஒத்துழையாமை இயக்கத்தை வெறும் வாயளவில் சொல்லவில்லை. அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான். ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்பதை நீதிமன்றத்திலேயே தனது எடுக்குமடக்கான பதிலின் மூலம் செய்துகாட்டியிருக்கிறான். இதனால் நீதிபதி கடுமையாக கோபமுறுகிறார். என்னடா இது! கேட்ட எல்லா கேள்விகளுக்கும் எடுக்குமடக்காகவே இச்சிறுவன் பதிலளிக்கிறானே என்று சினம் கொள்கிறார்)
நீதிபதி : நீ என்ன வேலை செய்கிறாய்? உன் தொழில் என்ன?
கைர் முஹம்மது : எனது நாட்டில் புகுந்து எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் அந்நியர்களை விரட்டும் தொழிலை செய்கிறேன். அதை புரட்சி என்று கூட சொல்லலாம்.
நீதிபதி : நீ செய்யும் தொழில் குற்றத்திற்குரியது என்பது உனக்குத் தெரியுமா?
கைர் முஹம்மது : நான் எனது நாட்டில் புகுந்துள்ள அந்நியரை விரட்ட முயல்கிறேன். இது எப்படி குற்றமாகும்? இதை குற்றமாக நான் கருதவில்லை.
நீதிபதி : உனக்கு பிணைத்தொகை தந்து உன்னை வீடுதலை செய்வதற்கு யாராவது தயாராக இருக்கிறார்களா?
கைர் முஹம்மது : ஆம் இருக்கிறார்கள்.
(இப்போது நீதிபதியின் முகத்தில் நிம்மதி பெருமூச்சு. நல்லவேளை இந்த கேள்விக்காவது ஒழுங்காக பதிலளித்தானே என்று ஆசுவாசப்படுகிறார். சிறுவன் யாரை கூறுவான் என்று ஆவலோடு அவனைப் பார்க்கிறார்)
கைர் முஹம்மது : அது என்னைப் படைத்த அல்லாஹ்தான். அவன்தான் எனக்கு பிணைத் தொகை தருவான்.
(நீதிபதி கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்)
நீதிபதி : நீ உன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டால் உன்னை விடுதலைச் செய்ய சொல்லி உத்தரவிடுவேன். மன்னிப்புக் கேட்கிறாயா?
கைர் முஹம்மது : குற்றமே செய்யாத நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் செய்தது எனது உரிமையை நிலைநாட்டும் கடமையை. நான் என் கடமையைத்தான் செய்தேன். நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.
இதன் பின்னர் கைர் முஹம்மதை வெளியே விட்டால் தங்களது அரசிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு பதினோரு வயதான சிறுவனிற்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது.
ஒரே ஒரு வார்த்தைதான். மன்னிப்பு என்று மட்டும் கேட்டால் போதும். சிறைச்சாலை கிடையாது. வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரியலாம். சொந்தபந்தங்களோடு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் கைர் முஹம்மது மன்னிப்பு கேட்கவில்லை. தன்னுடைய சுதந்திரத்தைவிட நாட்டின் சுதந்திரம்தான் முக்கியம் என்று அவன் நினைத்தான். தான் சிறையில் வாடிப்போனாலும் நம் நாடு நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். இந்திய சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை அடைமானம் வைத்தான் அச்சிறுவன். அச்சிறுவனை நினைவு கூர்வது ஒவ்வொரு இந்தியனின் மீது கடமையாக உள்ளது.
பாகம் 3 - தற்காலத்திய இஸ்லாமியர்களின் நிலை
இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து இந்தியாவை சுதந்திரமடையச் செய்வதற்காக தங்களது சதவீதத்தையும்விட அதிகமாக போராடியவர்கள் இஸ்லாமியர்கள்.
பறிக்கப்படும் சுதந்திரம்
இன்று இந்தியா சதந்திரமாக இருக்கிறது. ஆனால் சுதந்திரத்திற்காக போராடிய இஸ்லாமியர்களின் சுதந்திரமோ கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது.
எங்கே ஆடை சுதந்திரம்?
தற்போதைய பாஜக ஆட்சியில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு தாங்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்வதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மற்ற மதத்தினர் தங்களது மத அடையாளமான பொட்டுஇ கயிறுஇ விபூதி போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அவர்களது மத அடையாளங்களுடன் செயல்பட சதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்லாமியர்களுக்கு இத்தகைய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை தடுக்கிறார்கள். அவர்களது ஆடை சுதந்திரத்தை பறிக்கிறார்கள்.
எங்கே உணவு சுதந்திரம்?
ஒவ்வொரு மதத்தினரும் தாங்கள் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை.
மாட்டுக்கறியை உண்பதற்குண்டான சுதந்திரம் சில நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அஹ்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவர் வைத்திருந்தது மாட்டுக்கறி இல்லை என்பது தனி விஷயம்.
காந்தி ஜெயந்தி அன்று மாட்டுக்கறி விற்பதற்கு தடை செய்யப்படுகிறது. இவ்வாறு இஸ்லாமியர்களின் உணவு விஷயத்தில் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது.
எங்கே இருப்பிடத்திற்கான சுதந்திரம்?
இஸ்லாமியர்களின் இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக சிஏஏஇ என்ஆர்சிஇ என்பிஆர் போன்ற சட்டங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
என்ஆர்சியில் சில கடினமாக கேள்விகளை ஏற்படுத்தி குடியுரிமையை நிரூபிக்க சொல்கிறார்கள். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும். அதில் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதமாக சிஏஏ என்ற சட்டம் உள்ளது.
ஆக இதிலிருந்து இஸ்லாமியர்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களது இருப்பிடத்திற்கான சுதந்திரம் இதன்மூலம் பறிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உபியில் யோகி அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து இடித்துவருகிறது.
வீடு கட்டுவதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்படுவது மிகுந்த கவலைக்குரியது.
இவ்வாறு மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவுஇ உடைஇ இருப்பிடம் ஆகிய மூன்றின் சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய சுதந்திரத்தை பறிகாெடுக்கத்தான் எமது முன்னோர்கள் உயிரையும் உடமையையும் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்களா? என்ற கேள்வி சுதந்திர தினத்தில் மக்கள் உள்ளத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
வரலாற்று சோகம்
‘இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தர வேண்டும்’ என்பதற்காக போராடி தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களை கவனிப்பது இந்தியாவின் கடமையாகும். ஆனால் இன்று நிலை அப்படி இல்லை.
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டு இரண்டு மகான்களின் மகன்கள் கேட்பாரற்று விடப்பட்டுள்ளார்கள். அவர்கள் குறித்து இராமகிருஷ்ணன் தனது மனக் கவலையை வெளிப்படுத்துகிறார்.
இராமக்கிருஷ்ணன் எழுதியதாவது :
வரலாற்று சோகம் என்ற வார்த்தையை இன்று நாம் எளிதாக பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல் மட்டுமே. ஆனால்இ தன்னை பலி காெடுத்து வரலாற்று சோகத்திற்கு ஆளானவர்கள் பற்றி நாம் அதிகம் அக்கறை காெள்வது இல்லை.
அந்த வகையில் இரண்டு சம்பவங்கள் என் மனதில் அழியாச் சுடரென எரிந்து காெண்டே இருக்கின்றன.
ஒன்று.... மருது சகோதரர்கள் கொல்லப்பட்டுஇ வெள்ளைக்காரர்களால் பினாங்கு நாடு கடத்தப்பட்ட சின்னமருதுவின் மகன் துரைச்சாமியின் வாழ்க்கை.
இரண்டு... 3.3 கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரைஇ பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை....
திப்புவின் மரணத்திற்கு பிறகு அவரது பிள்ளைகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள்.
இன்று திப்புவின் சந்ததிகளில் ஒருவர் கல்கத்தாவில் ஆட்டோமொபைல் ஷாப் நடத்துகிறார் என்ற செயதியை ஒருமுறை பத்திரிக்கையில் வாசித்தேன்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீழ்ந்த திப்புவின் வாரிசுகள் அடையாளம் அற்றவர்களாக ஆக்கப்பட்டு காலத்தில் கரைந்து போய்விட்டார்கள்.
ஆதாரம் : "எனது இந்தியா" - எஸ் ராமகிருஷ்ணன்.
திப்புவின் சந்ததிகள் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவிக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் திப்பு சுல்தானையே அடையாளமற்றவராக மாற்ற முயற்சி செய்கிறது பாஜக அரசு.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திப்பு சுல்தான் நினைவு தினம் கொண்டாட்டத்தை ரத்து செய்தது.
அதேபோல்இ சுதந்திர போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைப் புரிந்த வீர தீரர்களின் சாகசங்கள் நம் பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதுதான் அடுத்த தலைமுறையினருக்கு நம் நாட்டின்மீதான பற்றை கொடுக்கும். ஆனால் இந்த நடைமுறையிலும் மோசமான நடவடிக்கையை மேற்கொள்கிறது பாஜக. சுதந்திர போராட்டத்தில் புலியாக செயல்பட்ட திப்பு சுல்தானின் வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு முயன்று வருகிறது கர்நாடக பாஜக அரசு.
ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கு பெறுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அலங்கார ஊர்திகள் ஒன்றிய அரசிற்கு அனுப்பப்படும். தற்போதுள்ள பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடுஇ கேரளாஇ மேற்குவங்கம் போன்ற மாநிலத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்து கர்நாடக ஊர்தியை மட்டும் அங்கீகரித்திருக்கிறது.
கர்நாடக அலங்கார ஊர்தியில் மைசூர் மாவீரன் திப்பு சுல்தான் இடம்பெறவில்லை. மைசூருக்கு பெருமை சேர்த்தவர் திப்பு சுல்தான். இந்திய சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்தவர். ஆங்கிலேயரை ஓடஓட விரட்டிய மாவீரன். மக்களிடத்தில் கருணையோடு நடந்த கண்ணியவான். கர்நாடக அரசு அலங்கார ஊர்தியில் அவரை புறக்கணித்திருப்பது நன்றியற்ற செயல்.
அரசான பாஜக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கருக்கு ஒன்றிய மரியாதையைக்கூட ஆங்கிலேயரிடம் மண்டியட மறுத்த மாவீரன் திப்பு சுல்தானிற்கு வழங்காதது இந்தியாவிற்கு மாபெரும் இழுக்கு.
"திப்புவின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றிருந்தால் இந்தியா என்றைக்கோ விடுதலை பெற்றிருக்கும்" - காந்திஜி யாங் இந்தியா. திப்பு சுல்தானின் பெருமையை பறைசாற்றுவதற்கு காந்திஜியின் இந்த ஒரு வாக்கியமே போதுமானதாகும்.
இவ்வளவு முக்கியமான ஒருவரை வரலாற்றில் இருந்து எடுக்க நினைப்பது வரலாற்று சோகம் மட்டுமல்ல வரலாற்று துரோகமும் கூட. அப்படிப்பட்ட துரோகத்தைதான் பாஜக செய்து வருகிறது.
உதவி நூல்கள் :
விடுதலைப் போரில் வீரமிகு உலமாக்கள் - பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லாஹ்.
கிலாஃபத் இயக்கம் - செ. திவான்
உதவி நூல்கள் : இந்திய சுதந்திர போரில் இரு சகோதரர்கள் - வரலாற்றாய்வாளர் செ.திவான்
மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட உண்மைகள் - அதிரை. இப்ராஹீம் அன்சாரி ஆ. ஊழஅ
No comments:
Post a Comment