Saturday, August 9, 2025

இஸ்லாமும் வக்ஃபும்

 இஸ்லாமும் வக்ஃபும்





புத்தகம் டவுன்லோடு செய்ய

இஸ்லாமும் வக்ஃபும்

செய்தது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம்











பாகம் 1 - வக்ஃப் என்றால் என்ன?


வக்ஃப் என்பது ஒரு அறபு வார்த்தை. ஆகவே அதற்கு மொழியியல் ரீதியாக என்ன அர்த்தம் உள்ளது என்பதையும் மார்க்கத்தில் அதற்கான அர்த்தம் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


மொழியியல் ரீதியான அர்த்தம்


வக்ஃப் என்ற அறபு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு தொடர்புடையதாக உள்ளது.


அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


நிறுத்து


வக்ஃபு என்பது கிஃப் என்ற அரபிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். 'கிஃப்' என்றால் 'நிறுத்து' என்று பொருள்படும். 


அதாவது ஓடக்கூடிய ஒன்றை நிறுத்துவதை கிஃப் என்ற வார்த்தை குறிக்கும்.


சாலைகளில் நில்இ கவனிஇ செல் என்று மூன்று வண்ணங்களில் சிக்னல் வைத்திருப்பார்கள். 


அறபு தேசங்களில் நில் குறிக்கும் சிகப்பு நிறத்திற்கு கஃப் என்று எழுதி வைத்திருப்பார்கள். அதாவது ஓடக்கூடிய வாகனத்தை நிறுத்துவது அதற்கு அர்த்தமாகும்.


அல்லாஹ்வும் இந்த அர்த்தத்தை தனது திருமறையில் பயன்படுத்தியிருக்கிறான்.


மஹ்ஷர் பெருவெளியில் நடைபெறும் அமளிதுமளிக்கு மத்தியில் விசாரணை நடத்துவதற்காக மனிதர்களை ஓரிடத்தில் நிறுத்தி வைக்குமாறு அல்லாஹ் மஹ்ஷர் பெருவெளியில் கட்டளையிடுவான். அதுபற்றி அவன் கூறும் போதுஇ


وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ⭘ 


அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்”. (என்று கூறுவான்)


அல் குர்ஆன் - 37 : 21இ22இ23இ24


கிஃப் என்ற மூலத்திலிருந்து பிறந்த வகிஃபூ (நிறுத்தி வையுங்கள்) என்ற வார்த்தையைத்தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.


அதைப்போல் விசாரணை முடிந்த பின் நரகத்திற்குரியவர்கள் நரகத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள். அவர்களைக் குறித்து இறைவன் கூறும்போதுஇ


மற்றும் بِـَٔايَـٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ⭘ 


நரகத்தின் முன்பு அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்த்தால்இ “நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! பொய்யெனக் கூறாமல் இறைநம்பிக்கையாளர்களாக ஆவோமே!” என்று கூறுவார்கள்.


அல் குர்ஆன் - 6 : 27


நரகவாசிகள் நரகத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு உகிஃபூ என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதுவும் கிஃப் என்ற வேர்ச்சொல்லிவிருந்து பிறந்ததுதான்.


ஆக இதிலிருந்து வக்ஃப் என்பதற்கு நிறுத்தி வைத்தல் என்ற பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


சொத்தைப் பொறுத்தவரை அது பல நபர்களிடம் கைமாறும் உள்ளது. அந்த கைமாறுதலைத் நிறுத்துவதைத்தான் வக்ஃப் என்ற சொல் குறிக்கிறது. 


வக்ஃப் என்ற சொல்லிற்கு 'நிலைக்குக் கொண்டு வருதல்' என்ற பொருளும் உண்டு. 


அதாவது கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து அந்த பயனை மக்களுக்குக் காலகாலமும் தரும் ஒரு நடைமுறைதான் 'வக்ஃபு' ஆகும்.


வக்ஃப் என்பதன் நேரடிப்பொருளில் ஒன்று 'தடுத்து வைத்தல்' என்பதாகும்.


அதாவது வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களை பிறருக்கு விற்கவோ அல்லது நன்கொடையாக வழங்கவோ முடியாது. இவ்வாறு ஒரு சொத்தை பிறர் உடமையாக்குவதை தடுத்து வைப்பதால் இதற்கு வக்ஃப் என்ற பெயர்.


இதற்கு 'தங்குதல்' என்ற பொருளும் உண்டு


இதுபற்றி இந்தியாவின் வக்ஃப் வாரியத் தலைவராக செயல்பட்ட ஜாவீத் அகமது கூறினார்" வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தை. இதன் பொருள் தங்குதல் என்பதாகும். அல்லாஹ்வின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் செய்யப்படும்போதுஅது என்றென்றும் அல்லாஹ்வின் பெயரிலேயே தங்கி இருக்கும். பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது."


இந்திய உச்சநீதிமன்றம் 1998 ஜனவரியில் வழங்கப்பட்டது அதன் தீர்ப்பில் 'ஒரு சொத்து வக்ஃப் ஆனவுடன்இ அது என்றென்றும் வக்ஃபாகவே இருக்கும்' கூறியது. 


ஆகவே வக்ஃப் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அல்லது யாருக்கும் மாற்றவோ முடியாது என்பதை இந்திய உச்சநிதிமன்றமும் உறுதி செய்துள்ளது.


மார்க்க அடிப்படையில் வக்ஃப் என்பதற்கான வரைவிலக்கணம்


வக்ஃப் என்பதற்கு பல்வேறு மார்க்க அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளார்கள். அவற்றில் சிறந்ததாக இமாம் அபூஸஹ்ரா கூறியது அமைந்துள்ளது.


இமாம் அபூ ஸஹ்ரா (அல்லாஹ் அவர்கள் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் வக்ஃபிற்கான வரையறை: ஒரு சொத்தை (பிறருக்கு விற்க முடியாதவாறும்இ) நன்கொடை வழங்க முடியாதவாறும்இ வாரிசுரிமையாக மாற்ற முடியாதவாறும்) நிறுத்தி வைத்து அதன் பலன்களைப் பகிர்ந்தளிப்பதுஇ அல்லது ஒரு சொத்தின் வருவாயிலிருந்து பெறப்படுவதை தர்மம் செய்வதற்காக அந்த சொத்தை நிறுத்தி வைத்தல்" என்று கூறியுள்ளனர்.


இந்த வரையறையின் சாராம்சமாவது : 


விற்பனை செய்தல்இ அடைமானம் வைத்தல் அல்லது நன்கொடை மூலம் மற்றும் பரம்பரை மூலம் மாற்ற முடியாத வகையில் நிறுத்தி வைக்கப்படும் சொத்துதான் வக்ஃப் ஆகும். இதன் மூலம் பெறப்படும் நன்மையைப் பொறுத்தவரையில் நன்கொடையாளர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப அறக்கட்டளை நிறுவனங்களுக்கு செலவிடப்படுகிறது.


மற்ற வரையறைகளைவிட இந்த வரையறை சிறந்ததாக உள்ளது. இதற்கு ஆதாரமாக உமர் ரலி தொடர்பான சம்பவம் அமைந்துள்ளது. (பார்க்க புகாரி 2737)


ஆகவே இஸ்லாமிய மார்க்கத்தில் வக்ஃப் என்பது அல்லாஹ்வின் பெயரால் அல்லது மார்க்க நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகள் அனைத்தையும் குறிப்பனவாகும்.


அந்தவகையில் வக்ஃபு ஏற்படுத்துபவர் முதன் முதலில் அச்சத்தில் தன் உரிமையை முழுமையாக இழந்து விடுகிறார். அதன் பின்னர் அச்சொத்துரிமை அல்லாஹ்வுக்கு அளிக்கப்படுகிறது. அச்சோத்தின் பயன் மனித சமுதாயத்திற்காகவும்இ மார்க்க சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


இதிலிருந்து வக்ஃபு செய்யப்பட்ட சொத்தின் உரிமை மாற்றமும் சொத்துரிமை பாத்தியமும் தடுக்கப்பட்டுஇ வக்ஃபு சொத்து அல்லாஹ்வுக்குரியதாக அர்ப்பணிக்கப்பட்டது காலந்தொறும் மக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்வுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட சொத்தைஇ அதனை அளித்தவர் திரும்பப் பெறமுடியாது.


இந்தச் சொத்து அமைப்பு இஸ்லாமிய சமூகத்தின் நன்மைக்காக இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது இஸ்லாமிய சமூகத்தின் ஓர் அங்கமாக திகழும். 


பாகம் 2 - வக்ஃபின் வகைகள்


பொறுப்பாளர் அடிப்படையிலான வகைகள்


வக்ஃப் சொத்துக்கான பொறுப்பாளர் யார்? இதை பொறுத்து வக்ஃப் இருவகைப்படும். 


1) குடும்ப வக்ஃப்


அதாவது தனது ஒரு சொத்திலிருந்து வரும் வருமானம் முழுக்க அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் வழங்கப்படும் என்றும் அந்த சொத்து தனது பெயரிலும் தனது மரணத்திற்குப் பிறகு தனது பிள்ளைகளின் பெயரிலும் இருக்கும் என்றும் வக்ஃப் செய்கிறார். இந்த சொத்தின் உரிமை அவரது சந்ததிகளின் பெயரிலும் இருக்கும். ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும்.


இந்த வக்ஃப் சொத்திற்கு அல்லாஹ்வை தவிர வேறு யாரும் உரிமையாளராக இருக்க முடியாது. வக்ஃப் செய்தவரும் அவரது வாரிசுகளும் அதற்கு காப்பாளர்களாக இருக்கமுடியுமே ஒழிய அதன் உரிமையாளராக இருக்கமுடியாது


2) பொதுவான வக்ஃப் 


ஒருவர் ஒரு பொருளை அல்லாஹ்வின் பாதைக்காக முழுமையாக வழங்குகிறார். அவர்களின் உரிமை தன்னிடம்தான் இருக்கும் என்று அவர் நிபந்தனை விதிக்கவில்லை. அப்படிப்பட்ட வக்ஃப் பொதுவான வக்ஃப் ஆகும்.


அந்த பொருள் அவரது பெயரிலோ அல்லது அவரது சந்ததிகளின் பெயரிலோ இருக்காது. அது வக்ஃப் நிறுவனத்தின் உரிமையின் கீழ் வரும். அல்லது இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் வரும்.


பயன்பாட்டு அடிப்படையிலான வகைகள்


சொத்து பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து வக்ஃபை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.



1) நிர்ணயிக்கப்பட்ட வக்ஃப்


ஒரு சொத்தை வக்ஃப் செய்பவர் அதை இந்த நோக்கத்திற்காக நான் வக்ஃப் செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தால் அது நிர்ணயிக்கப்பட்ட வக்ஃப் ஆகும்.


உதாரணம்இ ஒருவர் தனது நிலத்தை பள்ளிவாசலுக்காக வக்ஃப் செய்தால் அது பள்ளிவாசலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.


2) நிர்ணயிக்கப்படாத வக்ஃப்


எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடி வக்ஃப் செய்கிறேன் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டால் அது நிர்ணயிக்கப்படாது வக்ஃப் ஆகும். அந்த வக்ஃப் சொத்தை ஏழைகள்இ கல்வி நிலையங்கள்இ பள்ளிவாசல்கள்…. போன்ற நன்மையான காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும்.



பாகம் 3 - வக்ஃபில் இடம்பெறும் அம்சங்கள்


வக்ஃபில் நான்கு அம்சங்கள் இடம்பெறும்


வக்ஃப் செய்யும் நபர் (வாகிஃப்)இ

வக்ஃப் செய்யப்படும் சொத்துஇ

என்ன நோக்கத்திற்காக வக்ஃப் செய்யப்படுகிறது 

வக்ஃப் செய்யும் வாசகம்.


வக்ஃப் செய்யப்படுவதற்கு இந்த நான்கு அம்சங்களும் அவசியமாகும்..


வக்ஃப் செய்யும் நபர் :



வக்ஃபை ஏற்படுத்துபவர் வாகிஃப் ஆவார். 


 வாகிஃபாக இருப்பவர் பருவ வயதை அடைந்தவராகவும்இ புத்தி சுவாதீனமுடையவராகவும்இ சுதந்திரமானவராகவும்இ வக்ஃப் வழங்கவிருக்கும் சொத்திற்கு உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அவர் சுய விருப்பத்துடன் அந்த சொத்தை வழங்குபவராக இருக்க வேண்டும்.


ஆகவே சிறுவர்கள்இ பைத்தியக்காரர்களால் வக்ஃப் செய்ய முடியாது.



தனக்கு சொந்தமில்லாத சொத்தை வக்ஃப் செய்ய முடியாது.


வற்புறுத்துதலின் பெயரில் செய்யப்படும் வக்ஃபும் செல்லாததாகிவிடும்.


வக்ஃப் செய்யப்படும் சொத்து

இல்லாதோருக்கும் ஏழை எளியோருக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பயன்தர வேண்டும் என்பதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம்தான் வக்ஃபாகும். அது தர்மத்தின் ஒரு பகுதியாகும். 

ஆகவே வக்ஃப் செய்யப்படும் சொத்துக்கள் பயன்தரத்தக்கதாகவும் இஸ்லாம் அனுமதித்ததாகவும் இருக்க வேண்டும். 

அதுபோல் அது நீண்ட காலத்திற்கு பயன்தரத்தக்கதாகவும் அழிந்து போகாததாகவும் இருக்க வேண்டும்.


ஆகவே இஸ்லாம் தடை செய்தவற்றை வக்ஃபாக வழங்கக்கூடாது.


உதாரணம் போர்க்களத்திற்கு பயன்பட வேண்டும் என்பதற்காக குதிரைகளை வக்ஃப் செய்யலாம். 


அதைப்போல் இசைக்கருவிகளை வக்ஃபாக வழங்கமுடியாது. ஏனெனில் இசைக்கருவிகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.



என்ன நோக்கத்திற்காக வக்ஃப் செய்யப்படுகிறது


வக்ஃப் செய்பவர் பயன்பாட்டு நோக்கம் குறித்து தெரிவித்திருந்தால் அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


உதாரணம்இ ஒருவர் ஒரு சொத்தை கல்வி நிலையம் அமைப்பதற்காக வழங்குகிறார் வேண்டும்.


வக்ஃப் செய்பவர் பயன்பாட்டு நோக்கத்தை குறிப்பிடவில்லையென்றால் அவற்றை நன்மையான காரியங்களில் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.


உதாரணம்இ ஒருவர் ஒரு சொத்தை வழங்குகிறார்கள். அதை இந்த காரியத்திற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை. ஆகவே அந்த சொத்தை சிறந்த நற்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். பள்ளிவாசல் தேவைப்பட்டால் பள்ளிவாசல் எழுப்பலாம். அநாதை இல்லம்இ கல்வி நிலையம்இ வருமானம் தரத்தக்க வாடகைக் கடைகள் போன்றவற்றில் எது சிறந்ததோ அவற்றிற்கு அந்த சொத்தை பயன்படுத்த வேண்டும்.


அதைப்போல் ஒரு பாவமான நோக்கத்திற்காகவோஇ இஸ்லாம் தடை செய்த காரியங்களுக்கோ வக்ஃப் செய்யக்கூடாது. அவ்வாறு ஒரு வாக்கிஃப் தனது சொத்தை பாவமான காரியத்தில் ஈடுபடுத்துமாறு வக்ஃப் செய்திருந்தால் அதை நிறைவேற்றக் கூடாது.


உதாரணம் ஒருவர் தனது சொந்த தியேட்டர் கட்டுவதற்காக வழங்கினால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. அவற்றை வேறு நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும்.


வக்ஃப் செய்யும் வாசகம்.


ஒருவர் ஒரு சொத்தை வக்ஃப் செய்தால் 'நான் இந்த பொருளை வக்ஃப் செய்திருக்கிறேன்' என்பது போன்ற வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும். 


தற்காலத்திய அரசு நிர்வாகத்திற்கு ஏற்ற வகையில் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அதுதான் நல்லது. 


 





















பாகம் 4 - இஸ்லாமும் வக்ஃபும்


இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வக்ஃப் எனும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அற்புதமான திட்டமாகும்.


ஏனெனில் வக்ஃப் என்பது இறைவனிடம் நெருங்கிச் செல்வதற்கும்இ ஏழைகளிடம் கருணை காட்டுவதற்கும்இ நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வகையான தொண்டு ஆகும்.


தொண்டு செய்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சமாகும்


இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளைக் கற்றுத் தருவதைப் போல பிற மனிதர்களுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தியுள்ளது.


இது எந்தளவிற்கு இஸ்லாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றால் ஐந்து கடமைகளில் தொழுகை நோன்பு என்ற வணக்க வழிபாடுகள் இருப்பதுபோல் பிற மனிதர்களுக்கு சேவை செய்யும் ஜகாத் என்ற கடமையும் இடம்பெற்றுள்ளது.


அதுமட்டுமில்லாமல் நோன்பு என்ற வணக்கவழிபாட்டில் கூட இறுதியாக ஸகாத்துல் ஃபித்ர் என்ற கடமையை இஸ்லாம் ஏற்படுத்தியது. நோன்பு பெருநாளுக்கு முன்பாக ஏழை எளியோருக்கு உணவு வழக்க வேண்டும் என்று ஸகாத்துல் ஃபித்ரை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்.


மேலும் ஹஜ் பெருநாளில் குர்பானி பிராணியை அறுக்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது. அந்த குர்பானிக் கறியை ஏழைகளுக்கும் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. (அல்குர்ஆன் 22:36)


இவ்வாறு ஐம்பெரும் கடமைகளிலும் பிறருக்கு உதவி செய்யும் நற்காரியத்தை இறைவன் ஏற்படுத்தினான்.


அதைப்போல் ஒரு மனிதன் தவறு செய்தால் அதற்கு பரிகாரமாக இஸ்லாம் கூறியிருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதாகத்தான் அமைந்திருக்கும்.


உதாரணமாக ஒருவர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டால் அதற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது.


சத்தியத்தை முறித்தால் பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 5 : 89)


இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடினால் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 5:95)


மனைவியை தாயுடன் ஒப்பிட்டுக் கூறியதற்குப் பகரமாக அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 58 : 4)


இவ்வாறு இறைவன் பாவமிட்சிக்குரிய ஒரு காரியமாக உணவளித்தலை ஆக்கியுள்ளான். இவையனைத்தும் தொண்டு செய்தல் இஸ்லாத்தின் முக்கிய அம்சம் என்பதை நிரூபிக்கிறது.


தர்மம் தலை காக்கும்


இஸ்லாமிய மார்க்கம் பிறருக்கு சேவை செய்வதை சில வணக்க வழிபாடுகள் மூலம் கடமையாக்கியிருப்பது போல் பொதுவான நேரங்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1445)


(தர்மம் கொடுக்கும்) உயர்ந்த கை (அதை வாங்கும்) தாழ்ந்த கையை விடச் சிறந்தது. ஸஹீஹ் புகாரி : 1427 1428. 


உங்களுக்கு ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) "என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்துஇ நல்லோர்களில் ஆகிவிடுவேனே!" என்று அப்போது அவன் கூறுவான்.


அல் குர்ஆன் - 63 : 10


இவ்வாறு தர்மம் கொடுப்பதை வலியுறுத்தி ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபிமாெழிகளும் வந்துள்ளன.


தொடர்ந்து நன்மையை பெற்றுத்தரும் நல்லமல்


இந்த தர்மத்தின் இன்னொரு வடிவம்தான் நிரந்தர நன்மைகளைப் பெற்றுத்தரும் காரியங்கள். இவைகளைத்தான் நாம் வக்ஃப்கள் என்கிறோம்.


இதை வலியுறுத்தி நபிகளார் கூறியுள்ளார்கள்.


ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. 

அவை 

1. நிரந்தர தர்மம். 

2 .பயன் தரும் கல்வி

 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). 

நூல் : முஸ்லிம் (3084)


மேற்கூறிய மூன்று நற்காரியங்களும் காலம்காலமாக பயன்தரத்தக்கவை. 


இம்மூன்றில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிரந்தர தர்மம் என்பது வக்ஃபாகும். இதை இஸ்லாம் அதிக நன்மைக்குரிய காரியமாக கூறியுள்ளது.


அன்னவகையில் பள்ளிவாசல் கட்டுதல்இ நூலகம் அமைத்தல்இ கல்வி நிலையங்கள் ஏற்படுத்துதல்இ அணைகள் கட்டுதல்இ குளம் வெட்டுதல் போன்றவை நிரந்தர தர்மத்திற்குரிய காரியங்களாகும்.


வக்ஃபையில் அந்த ஏழைகளுக்கு மட்டும் பயன்தருபவையல்ல. மாறாக அது பணக்காரர்களுக்கு பயன்தருபவையாகவும் இருக்கலாம். உதாரணம் பள்ளிவாசல். பள்ளிவாசலில் ஏழைகளும் பணக்காரர்களும் வந்து செல்வர்.


வக்ஃபின் பல வகைகள்


வக்ஃப் செய்யப்பட்டவைகள் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.

மரியம் என்ற மனித வக்ஃப்


இம்ரான் (அலை) அவர்களின் மனைவி தனது வயிற்றில் ஒரு கருவை சமந்தார்கள். வயிற்றிலுள்ள குழந்தையை அவர்கள் வக்ஃப் செய்தார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّاّۡ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ⭘ 


“என் இறைவனே!என் வயிற்றில் இருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன்.என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! செவியேற்பவன்இ நன்கறிந்தவன்” என இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!


அல் குர்ஆன் - 3 : 35


மனிதர்களை வக்ஃப் செய்ததற்கு இந்த குர்ஆன் வசனம் ஆதாரமாகும். இருந்தபோதிலும் பள்ளிவாசலுக்காக மனிதர்களை வக்ஃப் செய்வது முந்தைய சமுதாயத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. நமது சமூகத்தில் இப்படிப்பட்ட வழிமுறையை நபிகளார் காட்டித்தரவில்லை.


வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிவாசல்


அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் 'உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். 


அதற்கு அவர்கள் இந்த விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றனர். 


(அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 428. 


இது குபா என்ற பள்ளிவாசலில் கட்டப்பட்ட மஸ்ஜிதைக் குறிக்கும். இந்த மஸ்ஜிதை பனூ நஜ்ஜார் குலத்தினர் கட்டி அதை வக்ஃபாக ஆக்கினர்.


அதன்பிறகு மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதைப்பற்றிய செய்தி வருமாறு.


நபிகளார் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்குள் வந்ததும் முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள) இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்து ஸஹ்ல்இ சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர) வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்' என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும்இ 'இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.


ஸஹீஹ் புகாரி : 3906. 


நபிகளார் (ஸல்) தனது சொந்த பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்கி அதில் பள்ளிவாசலைக் கட்டி அதை வக்தாக ஆக்கியிருக்கிறார்கள்.


பள்ளிக்கூடம்


நபிகளார் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் திண்ணைப் பகுதிகள் ஒரு பல்கலைக்கழகமாக செயல்பட்டது. அதை அரபியில் சுஃப்ஃபா என்று சொல்வார்கள். அந்த பகுதியில் ஏழைஎளியோர்களும் தேவையற்றவர்களும் வசித்து வந்தனர். அது ஆதரவற்றோர் இல்லமாக செயல்பட்டது. அதேசமயம் அது ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தது. அங்குள்ளவர்கள் மார்க்கத்தைக் கற்று மார்க்கக் கல்வியில் சிறந்தவர்களாக மாறினர். இவர்கள் அஸ்ஹாபுஸ் சுஃப்பா திண்ணைத் தோழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


இது நபிகளாரால் வக்ஃப் செய்யப்பட்ட பள்ளிக்கூடமாகவும் ஆதரவற்றோர் இல்லமாகவும் செயல்பட்டது.


வக்ஃப் செய்யப்பட்ட கிணறு


அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார்கள் :


(கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து)இ 'அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். 'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறஇ நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியில் இருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூறினேன். தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர். 


ஸஹீஹ் புகாரி : 2778. 


இமாம் பகவி அவர்களுடைய அறிவிப்பில் இவ்வாறு வந்துள்ளது: கிஃபார் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவரிடம் சொந்தமாக ஒரு நீரூற்று இருந்தது. அதன் பெயர் ரூமா என்பதாகும். அவர் அதிலிருந்து ஒரு முத் அளவு தானியத்துக்குப் பகரமாக ஒரு தோல் பாத்திரம் தண்ணீர் என்ற அடிப்படையில் தண்ணீரை விற்பனை செய்துவந்தார்.


அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "சுவனத்தில் ஓர் ஊற்றுக்குப் பகரமாக இதை எனக்கு நீர் விற்கின்றீரா?"


அவர் கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் குடும்பத்திற்கும் இதைத் தவிர வேறு எதுவும் (சொந்தமாக) இல்லை." இந்தச் செய்தி உஸ்மான் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் அந்த ஊற்றை அவரிடமிருந்து 35000 திர்ஹம் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குத் தருவதாக தாங்கள் அளித்த வாக்கை எனக்குத் தருவீர்களா?" நபி (ஸல்) அவர்கள்இ "ஆம்" என்று கூறினார்கள்.


உஸ்மான் (ரலி): " அவ்வாறெனில் அந்த ஊற்றை நான் முஸ்லிம்களுக்கு தானம் செய்துவிட்டேன்."


இந்த சம்பவங்கள் கிணறை வக்ஃபாக செய்யலாம் என்பதற்கு சான்றாகும். ஏனெனில் கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் காலகாலத்திற்கு பயன்படும். அது நிரந்தர தர்மமாக இருக்கும். ஆகவே அதை வக்ஃப் செய்வது நிறைய நன்மைகளைப் பெற்றுத்தரும்.


தற்போது கிணற்றின் தேவை குறைந்து வருகிறது. இந்நிலையில் நாம் குளத்தை வெட்டலாம். குளத்தை தூர்வாறலாம். நற்காரியங்களில் ஈடுபடலாம்.

நிலத்தை வக்ஃப் செய்தல்


இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் :


(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கைபரில் ('ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அந்த விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவேஇ அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்களா?' என்று கேட்டார்கள். 


நபி(ஸல்) அவர்கள்இ 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதன் விலையை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். 


அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கப்பட்டது. 


அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும்இ உறவினர்களுக்கும்இ அடிமைகளை விடுதலை செய்வதற்கும்இ அல்லாஹ்வின் பாதையிலும்இ வழிப் போக்கர்களுக்கும் விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். 


அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர் அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல்இ படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.) 

ஸஹீஹ் புகாரி : 2737. 


உமர்(ரலி) வக்ஃபு செய்தபோதுஇ 'இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை' என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆகஇ (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. 


ஸஹீஹ் புகாரி : 2778. 


இஸ்லாத்தில் செய்யப்பட்ட முதல் வக்ஃப்பாக (அறக்கொடை) இதையே பெரும்பாலோர் குறிப்பிடுகின்றனர்.


உமர் ரலி விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில்தான் வக்ஃபின் நிபந்தனைகளை நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்.


இதேபோல் அலீ (ரலி) தமது வாழ்வில் பல அறக் கொடைகளை (வக்ஃப்) வழங்கினார். யன்புவு என்ற இடத்தில் இருந்த தமது நிலையை அறக்கொடையாக வழங்கும்போது இப்படி எழுதினார்: "இந்தச் சொத்து தொடர்பாக அலீ இப்னு அபூதாலிபின் அறிவுறுத்தலும் தீர்மானமும் இதுவாகும் : யன்புவுஇ வாதில் குராஇ அல் உதைனாஇ ரஹ் முதலிய நிலங்களை அல்லாஹ்வுக்காக அருகிலும் தூரத்திலும் உள்ள உறவினர்களுக்கு அறக்கொடையாக வழங்குகிறேன். நான் உயிருடன் இருக்கும்போதும் இறந்த பிறகும் யாரும் அவருக்கு வாரிசுரிமை கோரவோ தனியுரிமை கோரவோ இயலாது.'


(துராஸுல் குலஃபாவுர் ராஷிதீன்) அலீ ரலி அலீ முஹம்மது அஸ்ஸல்லாபி 234


தமது ஈகையைப் பற்றிக் குறிப்பிடும்போது அலீ (ரலி)இ ''பசியின் காரணத்தால் நான் வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டபோது எனது அறக்கொடைகளின் மதிப்பு நான்காயிரம் திர்ஹம்களை எட்டியிருந்தது" என்றார்.


(உஸ்துல் காபா)


குதிரையை வக்ஃப் செய்தல்


அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக குதிரைகளையும் வக்ஃப் செய்யலாம். இதற்கான ஆதாரம் 


'அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவரிடம் போடுகிற தீனிஇ புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம்இ சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 2853. 


தற்காலத்தில் குதிரையில் போர் செய்யப்படுவது இல்லை. இப்போது விமானங்கள் மற்றும் கப்பல்களில் போர் செய்யப்படுகிறது. இதற்காக போர்விமானம் போர்க்கப்பல்கள் போன்றவற்றை வக்ஃப் செய்யலாம்.


போர்க்கருவிகளை வக்ஃப் செய்தல்


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல்இ காலித் இப்னு வலீத்இ அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனேஇ நபி(ஸல்) அவர்கள்இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஸகாத் தர மறுத்துள்ளார். காலிதை(ரலி)ப் பொருத்தவரைஇ நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரேஇ அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி)இ அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் சகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1468. 


காலித் பின் வலித் ரலி அல்லாஹ்வின் போர்வாள் ஆவார்கள். அவர்கள் தங்களது போர் ஆயுதங்களை வக்தாக வழங்கியுள்ளனர். 


தற்காலத்தில் போர் ஆயுதங்களாக எண்ணற்ற கருவிகள் வந்துள்ளன. அவற்றை நாம் அல்லாஹ்வுடைய பாதையில் வழங்கலாம்.


இவையெல்லாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நமக்குகம கிடைத்த ஆதாரங்கள். இவற்றைமட்டும்தான் வக்ஃப் செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக வக்ஃபின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் நாம் பிற பொருட்களையும் வக்ஃப் செய்யலாம்.



மரண வேளையில் செய்யப்படும் நோயாளியின் வக்ஃப்


மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவர் தனது சொந்த சொத்தை வக்ஃப் செய்தால்இ அதனை மரண வசியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மரண வஸிய்யத்தைப் பொறுத்தவரையில் அவர் இறந்ததற்குப் பிறகே அதை நிறைவேற்ற வேண்டும். அதுபற்றிய ஆதாரம் இதோ…


ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். 


இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவேஇ என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ 'வேண்டாம்' என்றார்கள். பின்னர் நான் 'பாதியைக் கொடுக்கட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள்இ 'வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில்இ உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1295. 


மேற்கூறிய நபிமொழியின் மூலம் வஸிய்யத்தாக செய்யப்படும்  வக்ஃப் சொத்துக்கள் அவர் இறந்ததற்குப் பிறகு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவரது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகிறது.


No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...