Sunday, October 25, 2020

தூக்கமும் துக்கமும் - ஃபஜ்ர் தொழுகை

 #தூக்கமும்_துக்கமும்


10 நிமிடம் ஃபஜ்ர் தொழாமல் உறங்குபவர் - அந்த "10 நிமிட தூக்கம்" நிம்மதியை தரும் என்று நினைக்கின்றனர்.

இந்த பத்து நிமிட தூக்கம் துக்கத்தையே தரும். நிம்மதியைத் தராது.

மாறாக ஒருவர் 10 நிமிட தூக்கத்தை தியாகம் செய்து ஃபஜ்ர் தொழுதால் அந்த நாள் முழுக்க நிம்மதியாக இருப்பார். நல்ல மனநிலையோடு காணப்படுவார்.


உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், "இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)" என்று கூறி ஊதுகிறான். 


அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. 


அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1425.


அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்

தூக்கத்தை விட தொழுகை மேலானது.

Wednesday, October 21, 2020

இஸ்லாமும் குளிர்காலமும்

இஸ்லாமும் குளிர்காலமும்


அல்லாஹ் இந்த உலகத்தை அற்புதமான முறையில் படைத்திருக்கிறான். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமான முறையில் வடிவமைத்திருக்கிறான். அல்லாஹ்வின் படைப்பாற்றலும், வடிவமைக்கும் திறனும் அழகானது. அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.


அவ்வாறு அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள ஒன்றுதான் காலமாற்றங்கள். ஒரு வருடத்தில் இரண்டு விதமான பருவ மாற்றங்கள் ஏற்படும். ஒன்று குளிர் காலம் மற்றொன்று கோடைக்காலம். இவ்விரு கால மாற்றங்களும் மனிதர்களுக்கு பல்வேறு விஷயங்களை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றன. மனிதர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.


இந்த குளிர்காலங்களையும் கோடைகாலங்களையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதை இஸ்லாம் தெளிவான முறையில் நமக்கு கற்று தருகிறது.


இந்த கட்டுரையில் குளிர்காலம் தொடர்பாக இஸ்லாம் சொல்லித் தரும் விஷயங்களைப் பற்றி அறிவோம்.


குளிர்காலம் உருவான வரலாறு :


உடலை உறைய வைக்கும் குளிர்காலத்தை அல்லாஹ் ஏன் ஏற்படுத்தினான்? குளிர்காலம் ஏற்படுவதற்கு காரணம் யார்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையாக நபிகள் நாயகத்தின் ஒரே ஒரு பொன்மாெழி அமைந்துள்ளது.


وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ : يَا رَبِّ، أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ : نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ ".


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 537.

நரகம் என்று சொன்னவுடனே நம்முடைய உள்ளத்தில் தோன்றுவது நெருப்புதான். அல்லாஹ் நரகத்தில் கொடிய நெருப்பை தயாரித்து வைத்திருக்கிறான். ஆனால் நரகம் முழுவதும் ஒரே அளவுடைய வெப்பத்தைக் கொண்ட நெருப்பாக இருக்காது. சில இடங்களில் வெப்பத்தின் அளவு  உச்சக்கட்டமாக இருக்கும். சில இடங்களில் சற்று குறைவாக இருக்கும். ஆனால் இவ்வுலகத்தை விட அதிக வெப்பமுள்ளதாகத்தான் நரகம் இருக்கும். மனிதர்கள் செய்யக்கூடிய தண்டனைக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குண்டான வெப்பத்தின் அளவு அவர்களுக்கு வழங்கப்படும்.


பொதுவாக நெருப்பின் தன்மை என்னவென்றால், அது எதன்மீது இருக்கிறதோ அதை சாப்பிட்டுவிடும். நெருப்பு ஒரு தாளின் மீது இருந்தால் அந்த தாளை நெருப்பு சாப்பிட்டுவிடும். இதுதான் நெருப்பின் தன்மை. அதேபோன்று நரகத்தில் அதிக வெப்பமுடைய பகுதிகள் சற்று குறைவான அளவுடைய பகுதிகளை சாப்பிட்டுவிடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நரகம் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறது. தனது பாதிப்பை தீர்க்குமாறு அல்லாஹ்விடத்தில் கோரிக்கை வைக்கிறது.


அதற்கு அல்லாஹ் நரகத்திடம், ஒரு வருடத்திற்கு இரண்டு முறை மூச்சுவிடுமாறு கட்டளை பிறப்பிக்கின்றான். ஒன்று குளிர்காலத்திலும் மற்றொன்று கோடை காலத்திலுமாக இரண்டு முறை மூச்சை நரகம் விட வேண்டும். அதன் மூலம் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை சாப்பிடுவது தடுக்கப்படும்.


குளிர்காலம் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றைத்தான் மேற்கண்ட நபிமொழி மூலம் நபிகள் நாயகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.


மேற்கண்ட நபிமொழிமூலம் அல்லாஹ்வின் கருணையை நாம் உணர்ந்து கொள்ளலாம். நரகம் தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை இறைவனிடத்தில் முறையிட்டது. அதை இறைவன் நிவர்த்தி செய்து வைத்திருக்கிறான். அதேபோல் நாமும் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை சிரமங்களை இறைவனிடத்தில்தான் முன்வைக்க வேண்டும். அவன் ஒருவனால்தான் நம்முடைய இன்னல்களை தீர்க்க முடியும்.


அதேபோல் மேற்கண்ட நபிமொழிமூலம் அல்லாஹ்வுடைய படைப்பின் நுட்பத்தையும் உணர்ந்து கொள்ளலாம். எப்படியெனில், நரகம் கடும் சூடானது.சூட்டிலிருந்து இன்னொரு சூட்டைத்தான் உருவாக்கலாம். ஆனால் அல்லாஹ் அந்த சூட்டிலிருந்து குளிரை உற்பத்தி செய்ய வைத்திருக்கிறான். நரக வெப்பத்தின் மூச்சுக்காற்றிலிருந்து குளிர்காலத்தை உருவாக்கியிருப்பது இறைவனுடைய படைப்பின் நுட்பத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.


குளிரை தாங்கும் கம்பளி


இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். அது என்னவெனில், நரகத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தனது பிரச்சனையை நரகம் அல்லாஹ்விடத்தில் முறையிட்டது. அல்லாஹ் அதை தீர்த்து வைத்தான். ஆனால் அதற்காக மனிதர்கள் பாதிக்கப்படலாமா? நரகத்தை பாதுகாத்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?


இதுபோன்ற சந்தேகம் எழுந்தால் நீங்கள் அல்லாஹ்வை சரியாக அறியவில்லை என்று அர்த்தம். ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மீது அளப்பெறும் அருள் புரியக்கூடியவனாகவும், கருணைக்காட்டக்கூடியவனாகவும் இருக்கிறான். அப்படியிருக்கையில் நரகத்திற்கு மட்டும் நன்மை செய்து மனிதர்களுக்கு மட்டும் எப்படி தீமை புரிவான்? இறைவன் நிச்சயமாக இதபோன்று நடந்து கொள்ளமாட்டான்.


சரி, அப்படியென்றால் குளிர்காலத்தில் ஏற்படும் கடும் குளிர் மனிதர்களுக்கு பாதிப்பில்லையா? உடலை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் அளவு கூடுவது மனிதர்களுக்கு தீங்காகத்தானே இருக்கிறது! இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்தால் நீங்கள் திருமறைக்குர்ஆனில் படிக்க வேண்டிய வசனம் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 5வது வசனம்.


(அல்லாஹ் கூறுகிறான்) கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16:5)


இந்த வசனத்தில் இறைவனின் கருணை தெளிவாக வெளிப்படுகிறது. எவ்வாறெனில்,  நரகம் விடக்கூடிய மூச்சுக்காற்றினால் பூமியில் கடும் குளிர் ஏற்படுகிறது. அந்த குளிரை மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே மனிதர்களுக்கு குளிரைத் தாங்கிக் கொள்ள ஏதாவதொன்றை வழங்க வேண்டும். ஆகவே இறைவன் கால்நடைகளை படைக்கிறான்.


மேற்குறிப்பிட்ட வசனத்தில், கால்நடைகள் வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை. மனிதர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மனித இனம் குளிரைத் தாங்கிக் காெள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் படைத்திருக்கிறான் என்பதை உணர்த்துகின்றன. குளிரைத் தாங்கிக் காெள்வதற்காகவே ஒரு புதிய படைப்பை இறைவன் உருவாக்கியிருக்கிறான் என்றால் இறைவனின் கருணைதான் எவ்வளவு மகத்தானது.


ஆகவேதான் நாம் குளிர்காலங்களில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் கம்பளியால் நெய்யப்பட்ட ஆடைகளையும் போர்வைகளையும் பயன்படுத்துகிறோம். இவைகள் குளிருக்கு இதமாகவும், கடும் குளிரிலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியவனாகவும் அமைந்திருக்கின்றன.


மகிழ்ச்சி தரும் குளிர்காலம்


இறைவனின் கருணை அளப்பெரியதல்லவா. ஆகவே இறைவனின் கருணை இத்தோடு நின்றுவிடவில்லை. இன்னும் தொடர்கிறது.


ஆகவே, குளிர் என்றாலே மனிதர்களுக்கு தீங்குதான். மனிதனுடைய உடலுக்கு பாதிப்புத்தான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. குளிரை மனிதர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கால்நடைகளைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் குளிரில் இன்னும் சில நன்மைகளையும் இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.


இதை இறைவன் அல் குரைஷ் என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.


குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். (அல்குர்ஆன் 106:1-4)


இறைவன் மக்கத்து குறைஷிகளுக்கு ஏகப்பட்ட சிறப்புகளை வழங்கியிருந்தான். அவர்களை கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், மக்கா பிரதேசத்தின் தலைவர்களாகவும் இறைவன் ஆக்கியிருந்தான். இது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்தது.


அதேபாேல் குறைஷிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மற்றொரு விஷயம்தான் கோடை, குளிர் கால பயணங்கள். குளிர்காலத்தில் பயணம் மேற்கொள்வது குறைஷிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இறைவன் ஆக்கியிருந்தான். இன்றும் அரபு மக்கள் குளிர்காலங்களில் பயணம் செய்யக்கூடியவர்களாகவே உள்ளனர்.


நாம்கூட குளிர்காலம் வந்துவிட்டால் ஏதாவததொரு சுற்றலா தளத்திற்கு செல்லத் துவங்கிவிடுவோம். பள்ளி, கல்லூரிகளும் குளிர்காலத்திற்கென விடுமுறைகளை அறிவித்திருக்கும். காரணம் குளிர்காலம் வந்துவிட்டால் சுற்றுலா செல்ல வேண்டும். அதன்மூலம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.


ஆகவே இறைவன் குளிர்காலத்தை மனித உள்ளத்துக்கு மகிழ்ச்சிதரக்கூடியதாகவே மாற்றியிருக்கிறான்.


குளிர்காலத்தில் வணக்கவழிபாடுகள்


மனிதர்கள் குளிரைத் தாங்குவதற்காக கால்நடைகளைப் படைத்து, குளிர்காலப் பயணத்தை மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இறைவன் ஆக்கியிருக்கிறான். இவ்வாறு இறைவன் புரிந்த இந்த அருட்கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும்.
திருக்குர்ஆன்[106:3]


குளிர்கால பயணத்தின் மூலம் நாம் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்டதற்காக இறைவனை நாம் வணங்க வேண்டும். அதுதான் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடியதாக அமையும்.  அதைத்தான் இறைவன் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.


அதுமட்டுமில்லாமல் குளிர்காலம் சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு தோதுவான காலமாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் பகல் சுருங்கிவிடும். இரவு நீண்டுவிடும். பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் காணப்படும். ஆகவே நாம் அதிகமாக நோன்பு நோற்கலாம். வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், பகலின் நேரம் சுருக்கமாக இருப்பதாலும் நோன்பு நோற்பதற்கு ஏற்ற காலமாக குளிர்காலம் அமைந்துள்ளது.


அதேபோல், இரவு நேரம் நீளமாக இருப்பதால் அதிக நேரம் நின்று வணக்க வழிபாடுகள் புரியலாம். இரவுத் தொழுகையை நீண்ட நேரம் நின்று வணங்குவதற்கு ஏற்ற காலமாகவும் குளிர்காலம் அமைந்துள்ளது.


குளிர்கால வணக்கவழிபாட்டிற்கு அதிக கூலி


குளிர்காலத்தை உங்களது மகிழ்ச்சிக்குரியதாக நான் ஆக்கியிருக்கிறேன். ஆகவே நீங்கள் என்னை வழிபடுங்கள். எனக்கு நன்றி செலுத்துங்கள் என்று இறைவன் கூறியுள்ளான். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தை வணக்க வழிபாடுகள் புரிவதற்கு ஏற்ற காலமாகவும் மாற்றியிருக்கிறான்.


இத்தோடு நின்றுவிடாமல் குளிர்காலத்தில் நாம் புரியும் வணக்க வழிபாடுகளுக்கு இறைவன் அதிக கூலியையும் தருவதாக இறைவன் கூறுகிறான்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்து தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 421.


கோடைகாலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். நம் மனம் தண்ணீரைத் தேடும். ஆனால் குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். ஆகவே மனம் தண்ணீரைக் கண்டால் வெருண்டுஓடும். தண்ணீரைத் தொடுவதே பெரும்பாடாக இருக்கும். அப்படிப்பட்ட சிரமமான சூழ்நிலையில், முழுமையான முறையில் உளூ செய்தால் இறைவன் நம்முடைய பாவங்களை மன்னிப்பான். அல்லது நம்முடைய தகுதிகளை உயர்த்துவான்.


சாதாரண காலங்களில் உளூ செய்வதைவிட குளிர்காலங்களில் உளூ செய்வது அதிக நன்மையைப் பெற்றுத்தரும். நம்முடைய பாவங்கள அழியும் அல்லது தகுதிகள் உயரும். இரண்டில் ஒன்று கண்டிப்பாக கிடைத்தே தீரும். எவ்வளவு பெரிய சிறப்பு. எவ்வளவு பெரிய வாய்ப்பு.


அதேபோன்று குளிர் நேரத் தொழுகைக்கும் இஸ்லாம் சிறப்பு அந்தஸ்து வழங்கியிருக்கிறது.


இஸ்லாம் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கட்டாயமாக தொழவேண்டும் என்று கட்டளையிடுகிறது. ஃபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய ஐந்து தொழுகைகளை பருவமடைந்த ஆணும் பெண்ணும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.


இதில் சூரியன் உதிப்பதற்கு முன் தொழப்படும் தொழுகையாக ஃபஜ்ர் தொழுகையும், சூரியன் மறைவதற்கு முன்னதாக தொழப்படும் தொழுகையாக அஸ்ர் தொழுகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டு நேரமும் குளிர்ந்த நேரங்கள். ஆகவே இவ்விரண்டு தொழுகையை இஸ்லாம் குளிர்நேரத் தொழுகை என்று அழைக்கிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத்தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1117.

கோடைகாலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் ஃபஜ்ர் நேரமும் அஸ்ர் நேரமும் இதமான நேரமாக இருக்கும். இவ்விரு நேரங்களும் குளிர்ச்சியான நேரங்கள். ஆகவே இந்நேரங்களில் தொழுதால் கட்டாயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


ஏனெனில் இவ்விரு நேரங்களில் தொழுகைக்காக செல்வது சற்று சிரமமாக இருக்கும். இவ்விரு நேரங்களிலும் ஷைத்தான் நம்மை பலவீனப்படுத்த முயற்சிப்பான். நாம் அதை முறியடித்து குளிர்நேரத் தொழுகையை சரியாக நிறைவேற்றினால் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம்.


சாதாரண காலங்களில் குளிர்நேரத் தொழுகையை தொழுதாலே இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதென்றால், குளிர்காலத்தில் தாெழப்படும் தொழுகைக்கு எவ்வளவு சிறப்புகள் இருக்கும்!


ஆகவே குளிர்காலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அதிக கூலிகள் கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுவதை நினைவில் நிறுத்திஅதிகமதிகம் அமல்கள் புரிய வேண்டும்.


குளிர்காலத்தில் இலகுவாக்கப்படும் வணக்கங்கள்


இறைவன் குளிர்காலத்தை தாங்கிக் கொள்வதற்காக கால்நடைகளை தயாரித்து அதிலிருந்து கம்பளியை வெளிப்படுத்தினான். மேலும் குளிர் கால பயணத்தை மகிழ்ச்சிக்குறியதாக ஆக்கினான். குளிர்காலத்தை வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ஏற்றதாக ஆக்கினான். குளிர்காலத்தில் செயய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அதிக கூலியையும் தரக்காத்திருக்கிறான்.


அத்தோடு குளிர்காலத்தில் நம்முடைய வணக்க வழிபாடுகளை இலகுாகவும் இஸ்லாம் மாற்றியிருக்கிறது.


நாஃபிவு கூறினார்:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றார்கள். 'குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்' என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 666.


குளிர்காலத்தில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு அதிக கூலிகள் உண்டு. ஆனால் குளிரான இரவுகளில் வீடுகளிலிருந்து கிளம்பி பள்ளிக்கு வந்தால் உடல்நிலை கெட்டுப் போக வாய்ப்புள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதினால் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.


ஆகவே கருணையாளனாகிய அல்லாஹ், மனிதர்களின் சிரமத்தை நீக்குவதற்கு சில சலுகைகளை வழங்கியுள்ளான். குளிரும் காற்றும் இருக்கும் இரவுகளில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிக்கு வர அவசியமில்லை. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தாெழுதுகொள்ளலாம் என்று நபிகள் நாயகம் தெரிவிக்கிறார்கள்.


Sunday, May 10, 2020

அபூஉபைதா பின் அல்ஜர;ராஹ்


பெயரும் குலமும் :

இவருடைய பெயர; ஆமிர; பின் அப்துல்லாஹ் பின் அல்ஜர;ராஹ் என்பதாகும். ஆனால் இவர;கள் அபூஉபைதா பின் அல்ஜர;ராஹ் என்ற பெயரால் பிரபலமானார;கள்.

இவர;கள் குறைஸி கோத்திரத்தில் பனு ஹாரிஸ் இப்னு ஃபிஹ்ர; குலத்தை சேர;ந்தவர;கள்.

பெற்றோர;:

இவருடைய தந்தையின் பெயர; அப்துல்லாஹ் இப்னு ஜர;ராஹ்.
தாயின் பெயர; உமைமா பின்த் ஙனம் பின் ஜாபிர; பின் அப்துல் உஸ்ஸா

மனைவி மற்றும் பிள்ளைகள்:


இவர; இரண்டு திருமணங்களை முடித்திருந்தார;. இவருடைய மனைவிகள் ஹிந்த் பின்த் ஜாபர; மற்றும் வர;ஜா ஆகியோராவார;கள்.
இவருக்கு யஸீத்இ உபைதாஎன்ற இரண்டு பிள்ளைகள் ஹிந்த் பின்த் ஜாபர; மூலம் கிடைத்தது. உமைர; என்ற பிள்ளை  வர;ஜா அவர;கள் மூலம் கிடைத்தது. அபூஉபைதா ரலிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இருந்தன. உபைதா என்ற பிள்ளையைக் கொண்டுதான் இவர; அபூஉபைதா என்று அழைக்கப்படுகிறார;. ஆனால் மூன்று குழந்தைகளும் சிறிய வயதிலேயே இறந்து விட்டன.

 
சமுதாயத்தின் நம்பிக்கையாளர;:

               நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் சில ஸஹாபாக்களுக்கு மட்டும் சில பிரத்தியோக பெயர;களை சு+ட்டினார;கள். உதாரணத்திற்கு அபு+பக்கர; ரலியவர;கள் இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் ஆரம்ப காலத்திலேயே உண்மைப்படுத்தியதால் அவர;களுக்கு அஸ்ஸித்தீக் (உண்மையாளர;) என்ற பெயரை சு+ட்டி அழைத்தார;கள்.அதேபோல் தான் அபு+உபைதா இப்னுல் ஜர;ராஹ் ரலிக்கும் நம்பிக்கையாளர;(அமீன்) என்ற பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் சு+ட்டினார;கள்.

ஹுதைஃபா பின் யமான் (-) அவர்கள் கூறியதாவது:
ஆகிப், சையித் எனும் ச்ல்ஜ்ல்ன;ஓற் ஞ்ட்த்ல்ன்ல்ச்ள்ட்க் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம், "முபாஹலா ஸ்உந்; சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், "நீ  அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து, நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின் வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்படமாட்டார்கள்'' என்று சொன்னார்.
(பிறகு) இருவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்கüடம், "நீங்கள் எங்கüடம் கேட்கின்றவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்றோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்ப வேண்டாம்'' என்று சொன்னார்கள்.
 நபி (ஸல்) அவர்கள், "நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை  நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று சொன்னார்கள். அப்போது மக்களில் பலர் (அந்த "அமீன்' எனும் பெயருடன் அழைப்பாளராய்ச் செல்லும் சிறப்பு தமக்குக் ச்ல்ண்ப்ச்;ச்ட்த்ட் என) தலையை உயர்த்தி (பேரார்வம்) காட்டினார்கள்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள், "அபூ உபைதா பின் ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று சொன்னார்கள். அவர் எழுந்து நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் அவர்கள் தாம்'' என்று சொன்னார்கள். (புகாரி : 3744 3745 4380 -4382 7254 7255) (முஸ்லிம் : 4799 -4801)

ஸஹாபாக்கள் தன்னை நபியவர;கள் நம்பிக்கையாளர; என்று சொல்லமாட்டார;களா? என்று எதிர;பார;த்து தங்;களது தலையை உயர;த்தி காட்டியிருக்கிறார;கள். அப்படியென்றால் அமீன் என்ற இந்த பெயர; எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் மக்களால் அன்போடு அல்அமீன் என்று அழைக்கப்பட்டவர;கள். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் காஃபிர;கள் கூட அல் அமீன் என்றுதான் அவர;களை அழைத்தார;கள். இந்த அளவிற்கு உண்மையின் சிகரமான நபிகள் நாயகம் (ஸல்) அவர;களாலேயே அல் அமீன் என்று அழைக்கப்பட்டால் அது எவ்வளவு சிறப்பிற்குரியது. அந்த சிறப்பை அபு+உபைhதா இப்னுல் ஜர;ராஹ் பெற்றிருக்கிறார;கள்.

நபியவர;கள் மீதான பாசம் :

அபூஉபைதா அப்னு ஜர;ராஹ் ரலியவர;கள் நபிகள் நாயகத்தின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார;கள். அந்த பாசத்திற்கு ஆதாரமாக உஹது யுத்தத்தில் நடைபெற்ற சம்பவம் இருக்கிறது. அந்த சம்பவத்தைப் பற்றி உண்மையாளராகிய அபூபக்கர; ரலிஇ சமுதாயத்தின் நம்பிக்கையாளரான அபூஉபைதா ரலியைப் பற்றி சொல்வதை கேளுங்கள்.
உஹது யுத்தத்தில் நபியவர;களின் முகம் தாக்கப்பட்டிருந்ததால் அவர;களது முகக்கவசத்தின் இரண்டு ஆணிகள் கண்ணுக்குக் கீழ்பகுதியில் புகுந்து விட்டன. நான் அதை எடுக்க விரும்பினேன். அப்போது அபூ உபைதா(ரழி) 'அபூபக்கரே! அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். அதை நான்தான் எடுப்பேன்என்றுகூறினார;கள்.

 பின்பு அபூ உபைதா (ரழி) நபியவர;களுக்கு வலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வாயால் அதை மிக மென்மையாக எடுக்க முயற்சித்தார;. பிறகு, அதைநபியவர;களின் முகத்திலிருந்து பல்லால் கடித்து எடுத்தார;. அதனால் அவரது முன் பல்விழுந்து விட்டது. இரண்டாவது ஆணியை அகற்ற நான் விரும்பினேன். அப்போதும் அபூஉபைதா (ரழி) 'அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். நான்தான் அதையும் எடுப்பேன்என்று கூறி, முன்பு செய்தது போன்றே மிக மெதுவாக எடுத்தபோது அபூ உபைதாவின்இன்னொரு பல்லும் விழுந்துவிட்டது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிப்பான்)

அபூஉபைதா ரலிக்கு நபிகள் நாயகத்தின் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்கிறது. தன்னுடைய இரண்டு பற்களை கொடுத்து நபிகள் நாயகத்தின் வலிகளை போக்க முனைந்திருக்கிறார;கள்.

 
சகோதரத்துவ உறவு :

மக்காவிலுள்ள முஸ்லிம்கள் தன்னுடைய சொந்த பந்தங்ளைஇ சொத்துக்களை விட்டுவிட்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தனர;. அப்படி வந்தவர;களை மதினாவாசிகளுடன் சகோதரத்துவ உறவை நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் ஏற்படுத்தி தந்தார;கள். அபு+உபைதா ரலியவர;களை அபு+தல்ஹா ரலியுடன் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார;கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஹாஜிரான) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரஹ்ல்லி) அவர்களுக்கும் (அன்சாரியான) அபூதல்ஹா (ரஹ்ல்லி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.               (அறிவிப்பவர; : அனஸ் பின் மாலிக் ரலி. நூல் : முஸ்லிம் 4949)

இஸ்லாமிய கட்டளைக்கு உடனே கட்டுப்படுதல் :

இஸ்லாமிய சட்டங்கள் சிறிது சிறிதாக காலத்திற்கு ஏற்ப அருளப்பட்டது. ஆரம்பத்தில் மது அருந்துவதற்கு இஸ்லாம் தடைவிதிக்கவில்லை. சிறிது சிறிதாக மது அருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. மதுவிற்கு தடை விதிக்கப்பட்டவுடன் நடந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

அனஸ் பின் மா-லிக் (-லி) அவர்கள்  கூறியதாவது:

அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (-), அபூதல்ஹா (-) மற்றும் உபை பின் கஅப் (-) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, "மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்.
உடனே அபூதல்ஹா (-) அவர்கள், "அனஸே! எழுந்து இந்தப் பாத்திரங்களை உடைத்து கொட்டிவிடு'' என்று சொன்னார்கள். அவ்வாறே நான் (மது ஊற்றிவைக்கும்) எங்களது கல் பாத்திரம் ஒன்றை நோக்கி எழுந்து, அதன் அடிப் பாகத்தில் அடித்தேன். அது உடைந்துவிட்டது. (புகாரி : 5582 7253.முஸ்லிம் :4012)

காலங்காலமாக மது குடித்து வந்த சமுதாயம். மதுவில் திளைத்த சமுதாயம். அல்லாஹ்வுடைய கட்டளை வந்த மாத்திரத்தில் உடனே தவறிலிருந்து தன்னைத் திருந்திக் கொள்கிறார;கள். மது குடித்துக் கொண்டிருக்கும் போதுமது தடைஎன்ற செய்தி கிடைக்கிறது உடனே தான் வைத்திருந்த அனைத்து மதுவையும் கொட்டிவிடுகிறார;கள்.
இதிலே நாம் படிப்பினை பெறுவதற்கு மிக முக்கியமான விஷயம் இருக்கிறது. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் மதுவை தடை செய்து 1400 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னும் மதுவிலிருந்து விலக முடியாமல் இருக்கும் நாம் எங்கே? தடை செய்யப்பட்ட உடனே அவற்றை உடைத்து அழித்த ஸஹாபாக்கள் எங்கே? இன்னும் இது போன்ற ஏராளமான தடுக்கப்பட்ட விஷயங்கள் குர;ஆனில் சொல்லப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து விலக முடியாமல் நாம் இருக்கிறNhம்.

வரி வசு+லிப்பவர;:


வரி வசு+லிக்கும் பொறுப்பு என்பது மிக முக்கியமான பொறுப்பு. இந்த பொறுப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் சமுதாயத்தின் நம்பிக்கையாரான அபு+உபைதா ரலியிடம் கொடுத்தார;கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (-) அவர்களை பஹ்ரைனி-ருந்து ஜிஸ்யா வரியை வசூ-த்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (-) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (-) அவர்கள் பஹ்ரைனி-ருந்து  நிதியுடன் வந்தார்கள்.
அபூ உபைதா (-)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்கüடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்கüடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, " "அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்' என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், "ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலüத்தார்கள்.
 "ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 3158 4015 முஸ்லிம்5668)

”ºமு×p வுலழ' (டுPவடுûறுúôறுட) úவுôழபடைத்தளபதி :

குணத்தில் சிறந்தவர;களான அபு+உபைதா ரலியவர;கள் வீரத்திலும் மிகச்சிறந்தவர;களாக விளங்கினார;கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் சில படைப்பிரிவிற்கு அபு+உபைதா ரலியவர;களை படைத்தளபதியாக நியமித்து அனுப்பியிருக்கிறார;கள். அது சம்பந்தமான சில சம்பவங்களைப் பார;க்கலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள்.அந்தப் படையினருக்கு அபூ உபைதா பின் ஜர்ராஹ் (-) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்கüல் நானும் ஒருவனாயிருந்தேன்.

 நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா (-) அவர்கள் ("இனி அறுக்க வேண்டாம்'' என்று) அவரைத் தடுத்து விட்டார்கள்.

அபூ உபைதா (-) அவர்கள் அந்தப் படையின் (கைவசமிருந்த) கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள்.  அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (-) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் உண்ணக் கொடுத்து வந்தார்கள்.  இறுதியில், அவையும் தீர்ந்து போய் விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தான் கிடைத்து வந்தது.

இதை ஜாபிர் (-) அவர்கள் சொன்ன போது, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைஸான் (ரஹ்) அவர்கள், "ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்?'' என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (-) அவர்கள், "அதுவும் தீர்ந்து போன பின்பு தான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்'' குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலி-லி-ருந்து இரவுவரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும். என்று பதிலüத்தார்கள்...

பிறகு நாங்கள் கடல் வரை வந்து சேர்ந்து விட்டோம். நாங்கள் குறைஷிகüன் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம். ஆகவே அந்தப்படைப் பிரிவு "கருவேல இலைப்படைப் பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது.

அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற "அல் அம்பர்' எனப்படும் (திமிங்கல வகை) மீன் ஒன்று எங்களுக்காக கிடைத்தது. (அதற்கு முன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. (தளபதி) அபூஉபைதா (ரலி-லி) அவர்கள் "செத்ததாயிற்றே?'' என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை), "உண்ணுங்கள்'' என்று சொன்னார்கள்.

அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலி-லிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (-லி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள்.

பிறகு அபூஉபைதா (-) அவர்கள்  அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகü-ருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டு வைக்கும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப்பட்டன. பிறகு, "ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக்கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டுக்)க்குக் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்புகüன் கீழே சென்றது. ஆனால், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெüயே) சென்று விட்டது. (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம்.

நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்கüடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி அவர்கள், "அல்லாஹ் (கட--ருந்து) வெüப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள்'' என்று சொன்னார்கள்.  உடனே, அவர்கüல் சிலர், நபி (ஸல்) அவர்கüடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.         (புகாரி : 4360 - 4362 5493 5494 முஸ்லிம் :3915- 3917)

இந்த செய்தியிலிருந்து அபு+உபைதா ரலியின் திறமைகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

  • சாதாரணமாக சென்ற படைப்பிரிவு பல நாட்களாக தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. கையிலிருந்த உணவுகள் தீர;ந்து போய்விட்டன. அப்போது படையிலிருந்த ஒருவர; மூன்று ஒட்டகங்களை அறுக்கிறார;. அது தீர;ந்துபோகவே மீண்டும் மூன்று ஒட்டகங்களை அறுக்கிறார;. அதுவும் தீர;ந்து போக மறுபடியும் மூன்று ஒட்டகங்களை அறுக்கிறார;. அதுவும் தீர;ந்து போகிறது. ஏனென்றால் அவர;கள் 318 பேர;. பல நாட்களாக தங்கியிருக்கிறார;கள். உடனே அந்த ஸஹாபி மறுபடியும் ஒட்டகங்களை அறுக்க முனையும் போது அபு+உபைதா ரலி அறுக்க வேண்டாமென தடுக்கிறா;கள். ஏன் தடுத்தார;களென்றால் ஒட்டகங்களை அறுத்து அனைத்து ஒட்டகங்களும் தீர;ந்து போய்விட்டால் பயணம் செய்வதற்கு கடினமாக மாறிவிடும். இதை கருத்தில் கொண்டு அவர;கள் தடுத்தார;கள். இது அபூஉபைதா ரலி சிறந்த தலைவர; என்பதற்கான அடையாளமாக இருக்கிறது.

  • அடுத்ததாகஇ படையிலிருந்த அனைவரிடமும் அவரவர;கள் வைத்திருந்த உணவை வாங்கி மொத்தமாக ஓரிடத்தில் சேர;க்கிறார;கள். ஏனென்றால் சிலரிடம் உணவு அதிகமாக இருக்கும். சிலரிடம் குறைவாக இருக்கும். சிலரிடம் உணவு முழுவதும் தீர;ந்து போயிருக்கும். பயணத்தில் எதிர;பார;த்த நாட்களை விட அதிக நாட்கள் பிடித்துவிட்டதால் உணவின் தேவையை கருதி இவ்வாறு அனைவரிடமும் வாங்குகிறார;கள். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ஒரு உணவு வீதம் கொடுத்து வருகிறார;கள். இப்படிக் கொடுத்தால் தான் உணவு இன்னும் சில நாட்களுக் தாக்குப்பிடிக்கும். இல்லையென்றால் உடனே தீர;ந்து போய்விடும். இதுவும் ஆளுமைத் திறனை குறிக்கிறது.

  • பிறகு அதுவும் தீர;ந்து போக மரத்தின் இலைகளை பறித்து உண்ண ஆரம்பித்தனர;.

  • பிறகு அல்லாஹ் கடலிலிருந்து மிகப் பெரிய திமிங்கல மீனை வெளியே கொண்டுவந்தான். அது செத்திருந்தது. உடனே அபு+உபைதா மீனை சாப்பிடுவதற்கு கட்டளையிட்டார;கள். ஏனென்றால் ஸஹாபாக்கள் அனைவரும் கடுமையான பசியில் இருக்கிறார;கள். பல நாள் சாப்பிடாமல் இருக்கிறார;கள். இந்த நிலை நிர;பந்தத்திற்குரிய நிலை என்பதை உணர;ந்து அவற்றை சாப்பிடுவதற்கு அனுமதியளிக்கிறார;கள். அவர;கள் அனுமதியளிக்காமல் தடைசெய்திருந்தால் சில உயிரிழப்புகள் நடைபெறுவதற்கு காரணமாக ஆகியிருக்கலாம். சரியான முடிவை எடுத்திருக்கிறர;கள். அது மட்டுமில்லாமல் கடலில் இறந்தவை நமக்கு அனுமதிதான். அவற்றை நாம் சாப்பிடலாம்.

  • பிறகு மக்கள் அந்த மீனிலிருந்து எண்ணெய்யையும் எடுத்துக் கொண்டார;கள். உணவு கிடைக்காமல் அவர;களுடைய உடல் மெலிந்து போயிருந்தது. பிறகு அல்லாஹ்வின் அருளால் திமிங்கலத்தைப் பெற்று அவர;களுடைய உடல் நன்றாக மாறக்கூடிய அளவிற்கு அதிலிருந்து சாப்பிட்டிருக்கிறார;கள். நாம் அல்லாஹ்விற்காக சில தியாகங்களை செய்தால் அல்லாஹ் நமக்கு மிகப் பெரிய கூலியைத் தருவான்.


தாதுஸ்ஸலாசில் படைப் பிhpவு


ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர;களின் நிலைப்பாட்டை நபி (ஸல்)அவர;கள் முஅத்தா யுத்தத்தின் மூலம் நன்கு விளங்கிக் கொண்டார;கள். ஏனெனில்,இவர;களெல்லாம் ரோமர;களுடன் சேர;ந்து கொண்டு; முஅத்தா போரில் முஸ்லிம்களைத் தாக்கினர;.எனவே, ரோமர;களை விட்டு இவர;களைப் பிhpத்து முஸ்லிம்களோடு இணக்கமாக்கவேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர;ப்பதற்கு இது போன்றபெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார;கள்.இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர;வு செய்தார;கள்.ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் பலிய்கிளையினரைச்சேர;ந்தவராவார;. எனவே, அவர;களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத்தேர;ந்தெடுத்து முஃதா போர; முடிந்தவுடனேயே ஹிஜ்hp 8, ஜமாத்துல் ஆகிராவில் நபி (ஸல்)அனுப்பி வைத்தார;கள்.

இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது: குழாஆகிளையினர; முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தஒன்று திரள்கின்றனர; என்ற செய்தி ஒற்றர;கள் மூலம் நபியவர;களுக்குத் தொpயவர,அவர;களை எதிர;ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார;கள். ஒரு வேலைஇரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர;கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.

அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர;களுக்கு நபி (ஸல்) வௌ;ளை நிறத்தில் ஒரு பொpயகொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கியவீரர;களுடன் அனுப்பினார;கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாகஅப்படையினர; சென்றனர;. எதிhp கூட்டத்தினர; தங்கியிருக்கும் இடத்தை நெருங்கியபோது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிhpகள் இருக்கிறார;கள் என்ற செய்திஅம்ருக்கு தொpயவந்தது. உடனே அவர; ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரைநபியவர;களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார;.

நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒருகொடியைக் கொடுத்து 200 தோழர;களுடன் அனுப்பினார;கள். இத்தோழர;களில் அபூபக்ர;,உமர; (ரழி) மற்றும் முஹாஜிர;, அன்சாhpகளில் கீர;த்திமிக்க தோழர;கள் இடம்பெற்றிருந்தனர;. அம்ர; (ரழி) அவர;களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர;ந்துகொண்டார;கள். தொழுகை நேரம் வந்த போது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழவைக்க நாடினார;. 'நான்தான் அமீர; (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர;எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர;” என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூஉபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார;கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகைநடத்தி வந்தார;கள்.

அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு குழாஆகோத்திரத்தினர;வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார;கள்.இறுதியில், முஸ்லிம்களை எதிர;க்கத் தயாராக இருந்த எதிhpகளின் ஒரு கூட்டத்தினரைக்கண்ட போது அவர;கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர;களைச் சிதறடித்தனர;.எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்றமகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர;க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர;களிடம்கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி)அனுப்பினார;கள். தாத்துஸ் ஸலாசில்என்பது வாதில் குராஎன்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும்.அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர; வசிக்கும் இடத்திலுள்ளஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர;. அக்கிணற்றின் பெயர; ஸல்சல்என்பதால் இப்படைக்கு பெயர; தாத்துஸ் ஸலாசில்என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

மக்கா வெற்றிப் படைக்கு தளபதி :


அபு+உபைதா ரலியின் ஆளுமைத்திறனைப் பார;த்தோம். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் மக்கா வெற்றிப் படையின் தளபதிகளில் ஒருவராக அபு+உபைதா ரலியையும் நியமித்தார;கள்.

மக்கா வெற்றி நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கா-லித் பின் அல்வலீத் (-லி) அவர்களை வலப் பக்க அணியினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்; ஸுபைர் பின் அல்அவ்வாம் (-லி) அவர்களை இடப் பக்க அணியினருக்கும் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (-லி) அவர்களை (நிராயுதபாணிகளாயிருந்த) காலாட் படையினர் மற்றும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இருந்தோர் ஆகியோருக்கும் தளபதியாக நியமித்தார்கள் பத்னுல் வாதி வழியாக மக்காவுக்குள் நுழையுமாறு அவருக்கு ஆணையிட்டார;கள்.                               (முஸ்லிம் 3647இ 3649)

அபு+உபைதா ரலியவர;களை படையின் காலாட்படைக்கும் மையப்பகுதிக்கும் தளபதியாக நபிகள் நாயகம் (ஸல்) நியமித்திருக்கிறார;கள். படையின் மையப்பகுதியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர;களும் இருந்திருக்கிறார;கள்.

தலைவர; பதவிக்கு அபூஉபைதா ரலியை முன்னிறுத்துதல்:


நபிகள் நாயகம் (ஸல்) இறந்த போது அடுத்த ஆட்சியாளர; யார;? என்ற கேள்வி எழுந்தது. அப்போது நடந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர;கள் இறந்த போது அன்சாரிகள் (தமது) "பனூ சாஇதா' சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி (தம் தலைவர்) சஅத் பின் உபாதா (ர-) அவர்கüடம், " "எங்கüல் ஒரு தலைவர்; உங்கüல் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்' என்று முஹாஜிர்கüடம் சொல்வோம்)'' என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போது அபூபக்ர், உமர் பின் கத்தாப், அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ர-) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகüடம் வந்தனர். உமர் (ர-) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ர-) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்- விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன்'' என்று கூறி வந்தார்கள்.

பிறகு, அபூபக்ர் (ர-) அவர்கள் பேசினார்கள். மக்கüலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், "(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்'' என்று சொன்னார்கள்.
உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ர-) அவர்கள், "இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்கüடையேயிருந்து ஒரு தலைவரும் உங்கüடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ர-) அவர்கள், "இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகüல் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்'' என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ர-) அவர்கள், "இல்லை; நாங்கள் உங்கüடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்கüல் சிறந்தவர்; எங்கüடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்'' என்று சொல்-விட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்கüடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ர-) அவர்கüடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், "சஅத் பின் உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரது கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்'' என்று சொன்னார். அதற்கு உமர் (ர-) அவர்கள், "அல்லாஹ் தான் அவரைக் கொன்று விட்டான்'' என்று பதில் சொன்னார்கள்.          (புகாரி : 3668)

ஆபூபக்கர; ரலியவர;கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர;களுக்குப் பிறகு ஆட்சி செய்வதற்கு தகுதியானவர;களாக இருவரைத் தேர;ந்தெடுக்கிறார;கள். அவர;களில் உமர; ரலி ஒருவர; மற்றொருவர; அபூபைதா பின் ஜர;ராஹ் ரலியவர;கள். அப்படியென்றால் அபூஉபைதா ரலிக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்த மதிப்பு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். அவர;களுடைய பெயரைக் கூடத் தெரியாத அளவில் தான் இன்று ஏராளமான முஸ்லிம்கள் இருக்கின்றனர;. இவர;களுடைய வரலாற்றைப் படித்து அதுபோல் நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்து கொள்ள வேண்டும்.

அதுபோல் அபூஉபைதா ரலியின் ஆளுமைத் திறமைக்கு ஆயிஷா ரலி அறிவிக்கும் ஒரு செய்தியும் ஆதாரமாகும்.

ஒருமுறை ஆயிஷா (ர-லி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி-) அவர்கள், "அபூபக்ர் (ர-லி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)'' என்று பதிலளித்தார்கள். "அபூபக்ருக்குப் பிறகு யாரை?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "உமர் (ர-லி) அவர்களை'' என்று பதிலளித்தார்கள். "உமருக்குப் பிறகு யாரை?'' என்று கேட்கப் பட்டபோது, "ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ர-லி) அவர்களை'' என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக்கொண்டார்கள். . (முஸ்லிம் : 4755)

உமர; ரலி அபு+உபைதா ரலியின் மீது வைத்திருந்த பாசம் :


சிறந்த பண்பும் வீரமும் பெற்றிருந்த அபூஉபைதா ரலியவர;களை உமர; ரலியவர;கள் மிகவும் நேசித்தார;கள். அந்த செய்தியைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (-) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (-) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கி (மக்கüன் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். "சர்ஃக்'  எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (-) அவர்களும் அவர்கüன் நண்பர்களும் உமர் (-) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

அதற்கு உமர் (-) அவர்கள் "ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று சொல்ல அவர்களை நான் உமர் (-) அவர்களிடம் அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்கüடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவர்கüல் சிலர், "நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதி-ருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை'' என்று சொன்னார்கள். வேறு சிலர், "உங்களுடன் மற்ற மக்களும் நபித் தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளை நோயில் தள்ü விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை'' என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (-) அவர்கள், "நீங்கள் போகலாம்'' என்று சொல்-விட்டுப் பிறகு, "என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்'' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்கüடம் உமர் (-) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்கüன் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபாடு கொண்டார்கள்.

அப்போதும் உமர் (-) அவர்கள், "நீங்கள் போகலாம்'' என்று சொல்-விட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்கüல் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்கüல் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), "மக்களுடன் நீங்கள் திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்üவிடக் கூடாது எனக் கருதுகின்றோம்'' என்றனர்.

ஆகவே, உமர் (-) அவர்கள் மக்கüடையே "நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்'' என்று அறிவிப்புச் செய்தார்கள். அப்போது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (-) அவர்கள், "அல்லாஹ்வின் விதியி-ருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?'' என்று கேட்க, உமர் (-) அவர்கள், "அபூஉபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்-யிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியி-ருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகின்றோம். உங்கüடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்ட தாகவும் உள்ள இரு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப் படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?'' என்று கேட்டார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெüயே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(-) அவர்கள் (அங்கு) வந்தார்கள். அவர்கள், "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச்செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதி-ருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெüயேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று சொன்னார்கள்.உடனே உமர் (-) அவர்கள், தமது முடிவு நபி (ஸல்) அவர்கüன் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காகன அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.          (நூல் : புகாரி 5729 5730 6973)

அபு+உபைதா ரலியவர;கள் உமர; ரலியைப் பார;த்து அல்லாஹ்வின் விதியிலிருந்து விரண்டு ஓடுகிறீர;களா? என்று கேட்ட போது உமர; ரலியவர;கள்இ அபூஉபைதா ரலியிடம் உங்களைத் தவிர வேறு யாரேனும் இந்த  கேள்ளவியை கேட்டிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் கேட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார;கள். ஏனெனில் அபூஉபைதா ரலியவர;கள் கேட்ட கேள்வி தவறான கேள்வி. மற்றவர;கள் தவறாக கேட்டால் எனக்கு ஆச்சரியமாக இருக்காது. ஆனால் நீங்கள் தவறாக கேட்டதுதான் எனக்கு ஆச்சரியம் என்று சொல்வதிலிருந்து அபூஉபைதா ரலியின் மீது உமர; ரலியவர;கள் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார;கள் என்பது விளங்குகிறது.

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...