Saturday, June 1, 2024

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

 இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்






முன்னுரை


உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்கள் வென்றார்கள். நிலத்தை மட்டுமல்ல. அங்கிருந்த கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்களின் மனதையும் வென்றார்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் ஆட்சியை மனதார ஏற்றார்கள். அகமகிழ்ந்தார்கள். உமர் ரலியை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.


அதேபோல் கடந்த 20ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஹிட்லரால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கமுடியாமல் யூதர்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். நிறைய நாடுகள் யூதர்களை வரவேற்கவில்லை. ஆனால் ஃபாலஸ்தீனம் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை வரவேற்றது. அவர்களுக்கு இடமளித்தது.


ஆனால் தங்க இடம் கொடுத்தவர்களையே நாட்டைவிட்டு துரத்தும் நிலைக்கு சியோனிச வாதிகள் வந்திருக்கிறார்கள். எந்த மக்கள் தங்களை அரவணைத்தார்களோ அந்த மக்களை இன்றைக்கு அநாதைகளாக மாற்றிவருகிறார்கள். அண்ட இடம் கொடுத்தவர்களை அகதிகளாக அடித்து விரட்டுகிறார்கள்.


இதுபோன்ற ஒரு கொடுமை உலகில் நடந்ததில்லை. சியோனிசவாதிகளைப் போன்ற கொடூர மனம் படைத்தவர்களும் உலகில் இல்லை. மனித குலத்தின் கேடுகெட்ட மக்களாக அவர்கள் திகழ்கிறார்கள்.


தற்போது ஃபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் சியோனிசவாதிகள் நிகழ்த்திவரும் அநியாயங்களும் அட்டூளியங்களும் கொஞ்சநஞ்சமல்ல. உலகமே அஞ்சி நடுங்கும் அளவிற்கு தங்களது அழிச்சாட்டியத்தை நிகழ்த்தி வருகிறார்கள். இதைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்த புத்தகங்களிலிருந்து தற்போது நீங்கள் வாசிக்கும் இப்புத்தகம் சற்று வித்தியாசமானது.


இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நிகழ்த்திவரும் மனிதவிரோத போக்குகளை பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிச்சம் போட்டு காட்டிவருகின்றன. இவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகிறார்கள். இவர்களுடைய உதவிகளையும் கூட இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிகள் தடுக்கிறார்கள். 


அதுமட்டுமில்லாமல் இந்த பயங்கரவாத இஸ்ரேலுக்கு அயோக்கிய அமெரிக்காவின் ஆதரவு இருந்துவருகிறது. ஆகவே இவர்கள் மீடியாக்களின் வழியாக இஸ்ரேலிய சியோனிய பயங்கரவாதிகளை நல்லவர்களாகவும் ஃபாலஸ்தீனிய அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வந்தனர்.


ஆனால் தற்காலத்தில் அவர்களின் பொய்யான காேரமுகங்கள் கிழிந்து தொங்குகிறது. சமூக ஊடகங்கள் வழியாக உண்மைகள் வெளிப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய பயங்கரவாதிகள் செய்யும் மனிதவிரோத நடவடிக்கைகள் அம்பலப்பட்டு வருகிறது. அதை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.


இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நேரடிய சாட்சியங்களும் அறிக்கைகளும்தான் இந்த புத்தகம்.


இதில் நான்கு நிறுவனங்களில் அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளது.


  • எல்லையற்ற மருத்துவர்களின் அறிக்கைகள். இவர்கள் மருத்துவம் தொடர்பான சியோனிச பயங்கரவாதிகளின் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

  • ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) அமைப்பின் அறிக்கைகள். இவர்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விவகாரங்களில் சியோனிச பயங்கரவாதிகளின் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

  • ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் சுகாதார நிறுவனம் (UNFPA) அறிக்கைகள். இவர்கள் கர்ப்பிணிப் பெண்களின் துயரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகாறார்கள்.

  • ஐக்கிய நாடுகளின் சிறப்பு நடைமுறை நிபுணர்களின் அறிக்கைகள்


மேற்கூறப்பட்ட நான்கு நிறுவனங்களில் அறிக்கைகளைத்தான் இந்த புத்தகத்தில் பார்க்கப்போகிறோம்.
























  1. இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றிய "எல்லைகளற்ற மருத்துவர்களின்" அறிக்கைகள்


மனிதர்கள் அனைவருமே நோய்வாய்ப்படுபவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய நேரத்தில் அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது அவசியமாகிறது. ஆகவேதான் மருத்துவர்கள் சமுதாயத்தில் பெரும் மதிப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள். பலருக்கு அவர்கள்மூலம்தான் வாழ்க்கையளிக்கப்பட்டிருக்கும். மருத்துவம் இல்லாமல் மனித சமுதாயம் நிலைப்பெறமுடியாது. 


ஆரம்பகாலத்தில் மருத்துவர்கள் தங்களது பணிகளை சேவைகளாக செய்துவந்தார்கள். பணம் வாங்கமால் சிகிச்சையளித்தவர்கள் ஏராளம். சிலர் குறைவான பணம் பெற்று சிகிச்சையளித்தார்கள். ஆனால் தற்காலத்தில் கார்ப்பரேட்டுகளின் சதியால் மருத்துவம் என்பது பணம் பார்க்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் மருத்துவ தொழிலை சேவை செய்யக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.


இத்தகைய சூழ்நிலையில்தான் மருத்துவத்தை சேவையாக செய்யும் ‘எல்லையற்ற மருத்துவர்கள்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.


யார் இந்த எல்லைகளற்ற மருத்துவர்கள்?


இந்த அமைப்பு 1971ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 169 நாடுகளைச் சேர்ந்த 68000க்கும் மேறபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சேவை புரிகின்றனர். இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது.


இவர்கள் மதம், இனம், நாடு, மொழி என்ற எந்த எல்லைகளும் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ சேவைகளைச் செய்பவர்கள். இவர்கள் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது மருத்துவ உதவிகளை செய்துவருகின்றனர்.


காஸா பற்றிய அறிக்கைகள்


இவர்கள் தற்போது காஸாவில் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஃபாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். ஆகவே அவர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்து வருகின்றனர். காஸாவில் நடக்கும் மனித விரோத போக்குகளுக்கு அவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


  • அமெரிக்காவிற்கான கண்டனம்


காஸாவில் நடக்கும் மனதிவிரோத நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க ஐநாவின் பொதுச்செயலாளர் கடிதம் அளித்தார். 99வது சட்டப்பிரிவின் அடிப்படையில் காஸாவின் பாதிப்புகள் தீவிரமடைவதைத் தடுக்கவும் இந்த நெருக்கடியான நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் ஐநாவின் பாதுகாப்பு சபைக்கு கடந்த 8ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது. 


ஆனால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது.


எல்லையற்ற மருத்துவர்களின் நிர்வாக இயக்கநர் அவ்ரில் பெனாயத் அவர்கள் கூறியதாவது :


“ஃபாலஸ்தீனிய குடிமக்கள் மீது குண்டுகள் தொடர்ந்து பொழியப்பட்டு வருகிறது. இதனால் மிகப்பெரும் அழிவை காஸா சந்தித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட முயற்சியை அமெரிக்கா மீண்டும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை வீட்டோ மூலம் அமெரிக்கா தடுத்திருக்கிறது. இது மனித குலத்திற்கு எதிராக வாக்களிப்பதில் அமெரிக்கா தனித்து நிற்கிறது என்பதை காட்டுகிறது.”


அமெரிக்க வீட்டோ மனிதநேயத்தை நிலைநிறுத்துவதாகக் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க கூறியது. ஆனால் தற்போது அது செய்திருக்கும் செயல்கள் மனிதநேயத்திற்கு முரணாக உள்ளது. காஸாவில் நடந்து வரும் அட்டூழியங்களுக்கு இராஜதந்திர ஆதரவை மறைவான முறையில் அது தொடர்ந்து வழங்குகிறது. இதற்காக சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைத் தேர்ந்தெடுத்து (தவறாகப்) பயன்படுத்தலாம் என்றும் சிலரின் உயிர்கள் (ஃபாலஸ்தீனிய மக்கள்) மற்றவர்களின் உயிரைக் (இஸ்ரேலிய சியோனிசவாதிகள்) காட்டிலும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அமெரிக்கா மறைமுகமாக சட்டிக்காட்டுகிறது.


பொதுமக்கள் மீதும் அவர்களின் குடியிருப்பு கட்டமைப்புகளின்மீதும் கண்மூடித்தனத் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. காஸாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கூட்டுத் தண்டனையை வழங்கும் ஒரு மோசமான தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. இதனால் ஏராளமான மக்கள் இடம்பெயய்ந்து அகதிகளாக மாறுகிறார்கள். மேலும் முக்கிய மருத்துவ பராமரிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை அவர்களுக்கு செய்யவிடாமல் இஸ்ரேல் தடுக்கிறது.  


லட்சக்கணக்கில் வாழும் பொதுமக்கள் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் செய்துவருகிறது. இத்தகைய தாக்குதல்களுக்கு அரசியல் மற்றும் நிதி உதவியை​​ அமெரிக்கா தொடர்ந்து வழங்குகிறது.  மனிதாபிமானிகள் அனைவரும் இப்போது போர் நிறுத்தம் தேவை என்று அறிவிக்கின்றனர்.


அமெரிக்க வீட்டோ காசாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு உடந்தையாக உள்ளது."


இஸ்ரேலிற்கு உடந்தையாக இருக்கும் அமெரிக்காவை கடுமையாக சாடி மேற்கண்ட அறிக்கையை எல்லையற்ற மருத்துவர்கள் குழு வழங்கியது. இதைத் தொடர்ந்து ஐநா பொதுச்சபை இஸ்ரேலிற்கு எதிரான தீர்மானித்தை நிறைவேற்றியது.


  • அமெரிக்காவிற்கு செருப்படி கொடுத்த ஐநா பொதுச்சபை


கடந்த டிசம்பர் 12 அன்று காஸாவில் நடைபெற்றுவரும் அத்துமீறலுக்கு எதிரான மனிதாபிமான போர்நிறுத்தத்தைக் கோருவதற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதிகளவில் வாக்களித்தது. சிறப்பு அவசர அமர்வில், 153 நாடுகள் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன மற்றும் 10 நாடுகள் மட்டுமே எதிராக வாக்களித்தன. அதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளடங்கும். மேலும் 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.


சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கும் விஷயங்களில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) ஒருமித்த கருத்து இல்லாதிருந்தால், பொதுச் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் தீர்மானம் 377ஐ எகிப்து மற்றும் மொரிட்டானியா கோரியது. இதன் பின்னர் அவசரக் கூட்டம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் UNSC தீர்மானத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா வீட்டோவைத் தொடர்ந்து 377 வது தீர்மானம் கோரப்பட்டது.


இதுபற்றி எல்லையற்ற மருத்துவர்களின் நிர்வாக இயக்கநர் அவ்ரில் பெனாயத் அவர்கள் கூறியதாவது :


"இன்று உலகின் பெரும்பான்மையானவர்கள் காஸாவில் நடைபெறும் இரத்தக்களரி மற்றும் துன்பங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கோரியுள்ளனர். காஸாவில் பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர அனுமதிக்க அமெரிக்கா மீண்டும் வாக்களித்துள்ளது. இன்று அமெரிக்கா கருணை அல்லது நீதியான தலைமைத்துவத்தைக் காட்டத் தவறிவிட்டது. உணவு, தண்ணீர், தங்குமிடம் அல்லது சரியான மருத்துவ வசதியின்றி காஸாவில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு நடந்துவருகிறது.


போர் நெறிமுறைகளை மீறி அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு உறுதியான ஆதரவை அமெரிக்கா வழங்கிவருகிறது. இதனால் உலக நாடுகளால் அமெரிக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஹமாஸை வேரறுப்பதில் கவனம் செலுத்துவதற்காகத்தான் இந்த போர் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அது அதிக எண்ணிக்கையிலான ஃபாலஸ்தீனிய குடிமக்களை, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்கிறது.


"ஆகவே மனிதாபிமானிகளான நாங்கள் தற்போது பாேர் நிறுத்தத்தை காேருகிறோம்."


இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறினார்.


மனிதாபிமான அடிப்படையில் நாடு, மதம், இனம் மற்றும் மொழிகள் கடந்து சேவை செய்யும் எல்லைகளற்ற மருத்துவர்கள் கொண்ட அமைப்பிற்கு இஸ்ரேலின்மீதும் அமெரிக்காவின் மீதும் ஏன் இவ்வளவு கோபம்? 


இதற்கான காரணத்தை அறிய ஒரு சிறிய உதாரணம் உங்களுக்குத் தரப்படுகிறது.

 

  • காஸாவில் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் நிலைமை


எல்லையற்ற மருத்துவர்கள் குழுவின் மருத்துவரான ரூபா அவர்கள் கூறியிருப்பதாவது : 


காஸாவின் நிலத்தில் நம்பிக்கையற்ற நிலை உள்ளது. இங்கு "ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் நான் இங்குள்ள குழந்தைகளின் உயிருக்காகவும், என் உயிருக்காகவும் பயப்படுகிறேன்."


காஸாவின் பாதுகாப்பான பகுதி என்று கூறப்படும் பள்ளத்தாக்கிலிருந்து நாங்கள் தெற்கே இடம்பெயர்ந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நாளும், வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இஸ்ரேலிய ராணுவத்தினர் குடிமக்கள் அனைவரையும் குறிவைத்து தாக்குகிறார்கள். இங்கு யாரும் பாதுகாப்பாக இல்லை.


இஸ்ரேலிய தாக்குதலினால் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு வகையான காயங்கள் உள்ளன. பல்வேறு வகையான தீக்காயங்களை நாங்கள் பார்த்தோம். எலும்பு முறிவுகளைப் பார்த்தோம். மேலும், கை துண்டிக்கப்பட்ட குழந்தைகளும் இங்கு அதிகமாக உள்ளனர்.


 எங்களிடம் பாராசிட்டமால் (காய்ச்சல் மாத்திரை), இப்யூபுரூஃபன் (வலி மருந்து) மற்றும் காயங்களுக்கு கட்டுப்போடக்கூடிய உபகரணங்கள் ஆகிய முதன்மை மருத்துவ பொருட்கள் மட்டுமே உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, எங்கள் கிளினிக்கை மக்களால் அணுக  முடியவில்லை. ஏனெனில் இஸ்ரேலிய இராணுவம் சாலையை துண்டித்துவிட்டது.


ஆறு வயது பெண் குழந்தைக்கு சிகிச்சை அளித்தோம். அவள் மோசமாக காயமடைந்திருந்தாள். [ஒரு] வெளிப்புற ஃபிக்ஸேட்டர் [உடைந்த எலும்புகள் உள்ள இடத்தில் வைத்திருக்கும் கருவி] அவளுக்கு பொறுத்தினோம். அவள் அழுது கத்தினாள். அந்த சிறுமி கையை அசைக்க முடியாமல் கடும் வலியில் துடித்துவிட்டால். வலிநிவாரணிகள் செலுத்துமாறு அவள் கெஞ்சினாள். ஆனால் எங்களிடத்தில் வலி நிவாரணிகள் இல்லை.


அங்குள்ள பெரும்பாலான தங்குமிடங்களில் அருவருப்பான சிறிய உண்ணி பூச்சிகள் உள்ளது. அனைத்து வகையான தோல் நோய்களையும், அனைத்து வகையான இரைப்பை குடல் நோய் அறிகுறிகளையும் அங்குள்ள மக்களிடத்தில் நாங்கள் கண்டோம். நான் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்தில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் மக்களிடையே பரவுகிறது.


எங்களிடம் தேவையான மருந்துகள் கிடைக்காததால் அவர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. அங்குள்ள மக்களிடத்தில் தண்ணீர் மற்றும் உணவு சுத்தமாக இல்லை. மக்கள் இப்போது தங்களுக்குக் கிடைத்த பொருட்களைச் சாப்பிடுகிறார்கள். இங்கு பட்டினியால் கிடக்கும் மக்கள் அதிகம். 


இந்த அவலநிலைகள் மாறும் என்று நான் நம்பவில்லை. அந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. எனது ஒரே செய்தி என்னவென்றால், ஃபாலஸ்தீனியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இப்பூமியில் வாழ உரிமை உண்டு.  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் நான் இங்குள்ள குழந்தைகளின் உயிரை நினைத்தும் என் உயிரை நினைத்தும் பயப்படுகிறேன்.


இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன். கடந்த 60 நாட்களாக போர் நடைபெற்றுவருகிறது. நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். மேலும் போர் ஆரம்பித்த முதல் சில நாட்களில் இறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் சொல்கிறேன். காரணம் கடந்த இரண்டு மாதங்கள் இங்கே நிலவிய பயங்கரமான பகலையும் இரவையும் அவர்கள் காணவில்லை.  என் மக்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த உலகம் நியாயமாக நடக்கக்கூடிய உலகம் அல்ல.


இவ்வாறு மருத்துவர் ரூபா கூறியிருக்கிறார். அவர் அங்கு மக்கள் படும் கஷ்டத்தை நேரடியாக கண்டுவருகிறார். இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவம் செய்வதைகூட அனுமதிக்க மறுக்கிறார்கள். இஸ்ரேலிய பயங்கரவாதிகள் எவ்வளவு கல் நெஞ்சம் கொண்ட மோசமானவர்கள் என்பதை இவை சுட்டிக்காட்டுகிறது.


எல்லையற்ற மருத்துவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்திகள்


14/12/2024 அன்று பதியப்பட்டவை :


புதிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை 2 நாட்களாக நடந்து வருவதால், மருத்துவமனைகளை அணுக முடியாமல் மக்கள் இறந்து வருகின்றனர். நேற்று ஒரு நபர் தனது 13 வயது குழந்தையை கால் நடையாக தூக்கிக்கொண்டு கலீல் சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். இஸ்ரேலிய இராணுவத்தினர்

ஆம்புலன்ஸ்களை தடுத்தனர். அதனால் வரும் வழியிலேயே அந்த குழந்தை இறந்து விட்டது.


இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனை மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசின.  கண்ணீர்ப்புகையினால் ஏற்பட்ட சுவாச கோளாறிற்கு மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு மருத்துவ ஊழியரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் மருத்துவ ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


இன்று, ஒரு நோயாளி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றது.  இருப்பினும், ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேலியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதே நோயாளி துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் மீண்டும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீதான தாக்குதல்களால் பல உயிர்கள் கொல்லப்படுகின்றன.


12/12/2023 அன்று பதியப்பட்டவை :


இன்று வடக்கு காஸாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்குள் (இஸ்ரேலிய பயங்கரவாதிகள்) துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மருத்துவமனைக்குள் சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ஒரு MSF அறுவை சிகிச்சை நிபுணர் காயமடைந்தார்.  எங்கள் சகாக்கள் மருத்துவமனையைச் சூழ்ந்துள்ள ஸ்னைப்பர்கள், உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கின்றனர்.  அல்-அவ்தா டிசம்பர் 5 முதல் இஸ்ரேலியப் படைகளின் முழு முற்றுகையின் கீழ் உள்ளது.


 "அல்-அவ்தா மருத்துவமனையில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் வேதனையளிக்கின்றன. உள்ளே இருக்கும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்" என்று MSF மிஷன் தலைவர் ரென்சோ ஃப்ரிக் கூறுகிறார்.


 “அல் அவ்தா மருத்துவ ஊழியர்கள் மற்றும் பல நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் மருத்துவமனை உள்ளது. மருத்துவப் பணியாளர்கள் தங்கள் நோயாளிகளைப் பராமரிக்கும் போது அவர்களைக் குறிவைப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. முற்றிலும் மனிதாபிமானமற்றது.”


அல்-அவ்தா மருத்துவமனை அக்டோபர் 7 முதல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த தாக்குதல்களில் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு MSF மருத்துவர்கள் உட்பட குறைந்தது 5 மருத்துவமனை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


மருத்துவமனை கட்டிடம் குண்டுவெடிப்பு மற்றும் சண்டையில் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளது.


காஸாவின் நிலைமைகளை நேரில் கண்ட டாக்டர் ரூபா மற்றும் அவர்களது சக ஊழியர்களின் சாட்சியங்கள்தான் இவைகள். இது அங்குள்ள நிலைமைகளின் கொடூரத்தின் சில பகுதிகள்தான். இன்னும் அதிகமான கொடுமைகளை ஃபாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆகவேதான் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு இஸ்ரேலிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எதிராகவும் தங்களது கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.


பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் அப்பாவி முஸ்லிம்கள். இஸ்ரேலிய பயங்கரவாதிகள் ஹமாஸை எதிர்த்து பாேர் புரியாமல் அப்பாவி மக்களை தாக்கிவருகிறார்கள். இது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் மிகப்பெரும் கோழைகள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. 


நமதூர்களில் ஆம்புலன்ஸ்கள் சென்றால் வழிவிடுவோம். அதுமனிதாபிமானம்.


ஆனால் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் ஆம்புலன்ஸை தாக்குகிறார்கள். இவர்கள் கொடிய மிருகத்தைவிட கேடுகெட்டவர்கள் என்பதற்கு இதுவே சான்று.


மருத்துவமனைகளை தாக்கி மருத்துவர்களை கொல்லும் இவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்ல.














  1. உணவு மற்றும் ஊட்டச்சத்தில் வன்முறையை கையாண்ட இஸ்ரேல்


ஐநாவின் ஆதரவு பெற்ற "ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு" (UN-backed Integrated Food Security Phase Classification) காஸா பற்றிய அதிர்ச்சியளிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை உலகம் எதிர்கொள்ளாத வகையில் உணவு பாதுகாப்பற்ற விகிதம் காஸாவில் உயர்ந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) அறிமுகம்


இது உலகிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கங்கள், அமெரிக்க முகவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் நடிகர்கள் போன்ற அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு குழுவாகும். 


இவை 2004ம் ஆண்டில் முதன்முதலாக சோமாலியாவினால் உருவாக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் பசியாலும் பட்டிணியாலும் செத்து மடிந்தார்கள். அந்த சூழ்நிலையில் இவை தொடங்கப்பட்டது. 


ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் தீவிரம் மற்றும் அவற்றின் அளவை வகைப்படுத்துவதற்கான பொதுவான அளவை வழங்குகிறது.


IPC பகுப்பாய்வு ஆறு கேள்விகளுக்கு பதிலளிக்க முயல்கிறது:


எந்த இடத்தில் உணவுப் பற்றாக்குறை அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறதோ அங்கு


1. நிலைமை எவ்வளவு கடுமையானதாக இருக்கிறது?


2. மக்கள் எப்போது பாதிக்கப்படுவார்கள்?


3. அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே இருக்கிறார்கள்?


4. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?


5. ஏன் நடக்கிறது?


6. யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?


இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, IPC மூன்று அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது: 


  • கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அளவுகோல்

  • நாள்பட்ட உணவுப் பாதுகாப்பின்மை அளவுகோல் 

  • கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அளவுகோல்.


மேலும் பாதிப்பின் நிலைமையை தெளிவாக புரிந்து கொள்வதற்காக ஐந்து நிலைகளை (IPC நிலை 1 - IPC நிலை 5) ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


உணவுப் பாதுகாப்பற்ற நிலையின் பல்வேறு கட்டங்களும் அதன் விளக்கமும்


IPC நிலை 1 (பிரச்சனையற்ற நிலை): எவ்வித பிரச்சனையுமில்லாமல் மக்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை. அதாவது பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்கு உணவுத் தேவை பூர்த்தி செய்வதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அவர்கள் உணவை இலகுவாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.


IPC நிலை 2 (அழுத்தம்): தங்களது குடும்பங்களுக்கான உணவுகளைப் பெறுவதற்கு சில அழுத்தங்களை சந்திக்க வேண்டிவரும். ஆனால் அந்த அழுத்தங்களை சமாளித்து உணவைப் பெற்றுக் கொள்ள முடியும்.


IPC நிலை 3 (நெருக்கடி): குடும்பங்களுக்கான உணவைப் பெறுவதற்கு சிரமங்கள் ஏற்படும். அவ்வாறு பெறும் உணவினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். நல்ல ஆரோக்கியமான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். அல்லது குறைந்தபட்ச உணவுத் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அத்தியாவசிய வாழ்வாதார சொத்துக்களை குறைப்பதன் மூலம் அல்லது நெருக்கடியை சமாளிக்கும் உத்திகள் மூலம் மட்டுமே இவற்றை நிறைவேற்ற முடியும்.


IPC நிலை 4 (ஆபத்தான கட்டம்): குடும்பங்கள் உணவு பெறுவதற்கு திண்டாடும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படும். இறப்புகளும் ஏற்படும். அனைத்து சொத்துக்களையும் இழந்தால்தான் உணவைப் பெற முடியும் என்ற நிலை.


IPC நிலை 5 (பேரழிவு/பஞ்சம்): இந்த நிலைதான் மிகவும் மோசமானது. இதில் பஞ்சங்களும் பட்டினிகளும் உச்சக்கட்டத்தில் இருக்கும். இதனால் கொத்துகொத்தாக மக்கள் இறப்பார்கள். இது பேரழிவு கட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது.


IPC யின் காஸா பற்றிய அறிக்கை பின்வருமாறு :


"காஸா பகுதியில் உள்ள நான்கு குடும்பங்களில் ஒரு குடும்பம் (கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்கள்) பேரழிவுகரமான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலைமைகளை (IPC கட்டம் 5 - பேரழிவு) அடைந்துள்ளது. இது தீவிர உணவு பற்றாக்குறையையும் அவர்களின் வாழ்வாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதையும் குறிக்கிறது" 


காஸா பகுதியில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 80% பேர் அவசரநிலையைக் குறிக்கும் IPC கட்டம் 4 அல்லது பேரழிவு நிலையைக் குறிக்கும் IPC கட்டம் 5ல் உள்ளனர். அதாவது அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காஸா மக்கள் பேரழிவை சந்திக்கும் நிலையில் உள்ளார்கள்.


வடக்கு காஸா பகுதியில் நடைபெறும் பாேரினால் அங்குள்ள கட்டிடங்கள் 56 முதல் 68 சதவீதம் வரை சேதமடைந்துள்ளது. மேலும் சாலைகள் மற்றும் பிற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.


தற்போதைய நிலைமை தொடர்ந்தால் காஸாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.


பஞ்சத்தின் ஆபத்தை அகற்றுவதற்கான வழி அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்குதல், ஊட்டச்சத்தான உணவயைும் பாதுகாப்பான உணவுகளையும் வழங்குதல், சுகாதாரம் செய்து கொடுத்தல் மற்றும் போரை நிறுத்தி மனிதாபிமான முறையில் அவர்களுக்கான இடத்தை வழங்குவதாகும். இவைதான் பஞ்சத்தை நீக்குவதற்கான இன்றியமையாத முதல் படிகள் ஆகும்."


காஸாவின் வடக்கு மாகாணங்களின் நிலமைகள்


ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள்


இஸ்ரேலிய ராணுவம் ஃபாலஸ்தீனத்தின் காஸாவை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்து வருகிறது. இஸ்ரேல் தனது அபகரிப்பை  தொடங்கிய தினத்திலிருந்தே காஸாவிலுள்ள வடக்கு மாகாணங்களுக்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருகின்றது. தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகள் தற்போதும் தொடர்ந்து நடக்கிறது. இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பினால் WASH (water, sanitation and hygiene) எனப்படும் சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கிருமிநாஷினிகளை வழங்கும் அலுவலகம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அலுவலகம் உட்பட அனைத்து கட்டிடங்களும் 56 முதல் 68 சதவீதம் வரை சேதமடைந்துள்ளது. இதில் சில கட்டிடம் முழுவதுமாக அழிந்துள்ளது. மேலும் சாலைகள் மற்றும் பிற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் மக்கள் தொகையின் மதிப்பீடுகள் சில பத்தாயிரங்களில் இருந்து 500,000 பேர் வரை இருக்கலாம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஃபாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனமான UNRWA ல் பாதி பேர் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். வடமாகாண பகுதிகளில் தற்போது எத்தனை பேர் இடம்பெயர்ந்துள்ளனர்? எத்தனை பேர் அவர்களது வீடுகளில் தங்கியுள்ளனர்? என்பதற்கான தெளிவான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் மீதமுள்ள குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது பாதி பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். வடக்கு காஸா பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர் பயணம் செய்ய முடியாதவர்கள். அவர்களின் குடும்பத்தில் ஒருவர் பயணிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்களில் மிகவும் பயந்தவர்களும், இடம்பெயர்வதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். அந்தப் பகுதி இன்னும் தீவிரமான சண்டையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவாரம் போர் நிறுத்தம் நடைபெற்றது. அப்போது சில ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தெற்குப் பகுதிக்கு செல்லவில்லை.


உணவு இருப்பு


ஒட்டுமொத்தமான உணவு இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இருப்பிலுள்ள உணவுகள் பெரும்பாலும் வீடுகள், முறைசாரா சந்தைகள், செயல்படும் சில கடைகள் மற்றும் சேதமடைந்த கட்டிடங்களில் மட்டுமே உள்ளது. மனிதாபிமான போர் இடைநிறுத்தத்தின் போது சில மறுசீரமைப்புகளை மேற்கொள்வது சாத்தியமானதாக இருந்தது. அப்போது 33 உணவு லாரிகள் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்தன.  இதன் விளைவாக சுமார் 4,850 மெட்ரிக் டன் கலப்பு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் ஒரு நபருக்கு சுமார் 10 கிலோ வீதம் விநியோகம் செய்யப்பட்டது.  மனிதாபிமான போர் இடைநிறுத்தம் நடைமுறையில் இருந்த அக்டோபர் 7ம் தேதி வரை சில டிரக்குகள் உள்ளே நுழைந்தாலும், அதன் பிறகு யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. வடக்கு காஸா மாகாணத்திலுள்ள விவசாய நிலங்கள், குறுகிய காலத்தில், 22% முதல் 35% வரை சேதம் அடைந்துள்ளன. பாசனத்திற்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாததால் வணிக விவசாய உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் வசதிகள் அழிக்கப்பட்டன. நகர்ப்புற விவசாயம் தரைவழித் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விலங்குகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. அல்லது தீவனம் இல்லாததால் இறந்துள்ளன"


உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைகள்


தற்போது உணவின் முக்கிய ஆதாரங்களின் சமூக வலைப்பின்னல்கள் பின்வருமாறு : சுமார் 40% உணவுகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் பெறப்படுகிறது. பிறரது உதவிகள் மூலம் 32% மற்றும் சந்தைகள் வழியாக 20% பெறப்படுகிறது. இதனால் மாவு விலை 50 சதவீதமும், காய்கறிகள் விலை 200 சதவீதமும், அரிசி விலை 45 சதவீதமும், எரிபொருளின் விலை 500 சதவீதமும் அதிகரித்தது. சந்தையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 500 சதவீதம் அதிகரித்துள்ளன.  மனிதாபிமான உணவுப் பாதுகாப்பு உதவியின் மூலம் வடக்கு மாகாணங்களில் ஓரளவு உணவு கிடைப்பது கண்டறியப்பட்டது.  நவம்பர் 8, 2023 நிலவரப்படி, வடக்கு மாகாணங்களில் பேக்கரிகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் கோதுமை மாவின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.



சமையல் நிலைமை


“சமையலுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1.8 லிட்டர் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றன. இது மிகவும் குறைவான அளவைக் குறிக்கிறது.  அங்குள்ள நான்கு வீடுகளில் மூன்று வீடுகள் விறகு மற்றும் மர எச்சங்களை எரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மீதமுள்ள விடுகள் திடக்கழிவுகளைப் பயன்படுத்துகின்றன."


மோசமான நிலைமையில் காஸா


நிலைமை மிகவும் கொந்தளிப்பாகவும் மோசமாகவும் உள்ளது. குண்டுவீச்சு மற்றும் தரைப்படை நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் வடக்கு மாகாணத்தில் எந்த விதமான மனிதாபிமான உதவியும் செய்யப்படுவது இல்லை. அங்குள்ள குடும்பங்கள் உணவு மற்றும் அடிப்படை தேவைகளைப் பெறுவது சாத்தியமில்லாமல் உள்ளது.


உணவு நுகர்வு: உலக உணவுத் திட்டத்தின் (WFP) உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, கணக்கெடுக்கப்பட்ட குடும்பங்களில் 80% க்கும் அதிகமானோர் மோசமான உணவு நுகர்வு மதிப்பெண்ணை (FCS) கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 50% பேர் கடுமையான (9%) அல்லது மிகக் கடுமையான (40%) அளவிலான பசியை அனுபவிக்கின்றனர். [குடும்ப பசி அளவுகோல் (HHS) மூலம் இது அளவிடப்படுகிறது].  குறிகாட்டிகள் பேரழிவு நிலையான IPC கட்டம் 5 ல் உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. அவை 20% (கடுமையானது) முதல் 40% (HHS மிகவும் கடுமையானது) வரை இருக்கலாம்.  


காஸாவின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலை


ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள்: 


தற்போதைய பகுப்பாய்வின் போது (2023ம் ஆண்டின் நவம்பர் கடைசி வாரம் மற்றும் டிசம்பர் முதல் வாரம்) வடக்கு மாகாணங்களை விட குறுகிய காலத்திற்கு, தெற்கு மாகாணங்கள் (தெய்ர் அல் ஃபலாஹ், கான் யூனிஸ், ரஃபா) கடுமையான மோதலை சந்தித்துள்ளன. 4 டிசம்பர் 2023 அன்று தெற்கு மாகாணத்திலுள்ள வீடுகள், குடிமக்கள் உள்கட்டமைப்பு (பள்ளிகள், தங்குமிடங்கள்), உணவு தொடர்பான உள்கட்டமைப்பு (பேக்கரிகள், ஆலைகள் போன்றவை) மற்றும் ஐநாவின் சேவை மையங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களும் 12-18 சதவீதம் வரை சேதமடைந்ததாகவோ அல்லது அழிக்கப்பட்டதாகவோ கூறப்படுகிறது.  UXO எனப்படும் வெடிக்காத ஆயுதத்தினால் ஏற்படும் காற்று மாசுபாடு கவலைக்குரியதாக உள்ளது.  மேலும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது புதிய பகுதிகளுக்கு விரிவடைந்து தாக்குதல் அதிகரிக்கிறது. வடக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் UNRWA தங்குமிடங்களில் வசிக்கின்றனர். இந்த தங்குமிடங்களில் உள்ள கொள்ளவைவிட நான்கு மடங்கு அதிகான மக்கள் வந்து தக்கியிருக்கின்றனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.


உணவு கிடைக்கும் தன்மை: தென் மாகாணங்களில் விவசாயச் சொத்துக்களுக்குப் பரவலான சேதம் ஏற்பட்டிருப்பதால் குறைந்தபட்ச விவசாய உற்பத்தி கிடைப்பது கூட சாத்தியமற்ற நிலையில் உள்ளது. மேலும் தீவிர மோதல்களாலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளின் விளைவாகவும் மக்கள் விவசாய சொத்துக்களை அடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களால் கால்நடைகளை இடம்பெயர்ந்த பாதைகளில் கொண்டு செல்ல முடியவில்லை. கால்நடைகளுக்கும் தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளது. போர் நடவடிக்கையினால் 14 நவம்பர் 2023 தேதி வரையிலும் 55% கடைகள் மட்டுமே செயல்பட்டன. மிதமுள்ள 45% கடைகள் முதன்மையாக சேதம், மோசமான பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் (பயங்கரவாத இஸ்ரேலிய ராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட) சாலைத் தடைகள் காரணமாக மூடப்பட்டன. இந்த நேரத்தில், கோதுமை மாவின் சந்தைப் பங்குகள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என மதிப்பிடப்பட்டது. மேலும் காஸா பகுதியில் உள்ள உலக உணவுத் திட்டத்தினால் (WFP) ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐந்து ஆலைகளில் நான்கு ஆலைகள் செயல்படாமல் இருப்பதால், இது கோதுமையின் கணிசமான அளவு கிடைக்காமல் போக வழிவகுத்தது.  அக்டோபர் 7, 2023 வரையில் கிட்டத்தட்ட பதினொரு பேக்கரிகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. WFPயின்-ஒப்பந்தம் பெற்ற பேக்கரிகளில் ஒன்றும், தெற்கு மாகாணம் மற்றும் தெய்ர் அல் ஃபலாஹ் பகுதியில் (மத்தியப் பகுதி) உள்ள எட்டு பேக்கரிகளும் சேர்ந்து, மொத்தம் ஒன்பது பேக்கரிகள் மட்டுமே இடையிடையே வேலை செய்கின்றது. இதைக்கொண்டு அவ்வப்போது தங்குமிடங்களுக்கு ரொட்டியை வழங்க முடியும். மாவு மற்றும் எரிபொருளின் கிடைக்கும் தன்மை, உணவுப் பற்றாக்குறை மற்றும் சந்தை இடையூறுகளின் தீவிரம் தெற்கு மாகாணங்களுக்குள் மாறுபடுகிறது. தெய்ர் அல் ஃபலாஹ் மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகள் மற்ற பகுதிஙளை விட அதிக பாதிப்புகளை பெற்றுள்ளன.


அணுகல்: உணவுப் பற்றாக்குறை, அதிக உணவு விலைகள் மற்றும் சமையல் எண்ணெய்கள், எரிபொருள் மற்றும் தண்ணீரின் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் வாழ்வாதார இழப்புகள் காரணமாக தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவது கடினமாக உள்ளது. விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான அணுகல் இடம்பெயர்ந்த மக்களின் இடப்பெயர்வு மற்றும் அதன் விளைவாக சொத்துக்கள் கைவிடப்பட்டதன் விளைவாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. சிறிய புவியியல் பகுதிகளில் ஒரே இடத்தில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து குவிந்துள்ளனர். மேலும் இடம்பெயர்ந்த மக்கள்தொகை IDP அளவை விட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவைகள் கிடைக்கக்கூடிய சந்தை மற்றும் தங்குமிட திறன்களை விஞ்சுகிறது. குறிப்பாக பொது தங்குமிடங்களில் இல்லாதவர்களுக்கு மனிதாபிமான உதவியை அணுகுவது ஒரு சவாலாகவே உள்ளது. தற்போதைய முக்கிய உணவு ஆதாரம் மக்கள் தொகையில் பாதி பேருக்கு (50%) தொண்டு நிறுவனங்களின் உதவி மூலமாகவும், அதைத் தொடர்ந்து சந்தையின் மூலம் 28% மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் 20% கிடைக்கிறது. 


பயன்பாடு: உணவு சமைக்க எரிபொருள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் உணவு சமைப்பதற்கான எரிபொருளிற்கு விறகு, மர எச்சங்கள் மற்றும் திடக்கழிவுகளை அவர்கள் தேடுகிறார்கள். சுத்தமான, பாதுகாப்பான நீர் கிடைப்பது போதுமானதாக இல்லை. ஒரு குடும்பங்களிலுள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நிலைத்தன்மை: கடுமையான சண்டையினால் தெற்கு மாகாணங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. நோய்கள் அதிகரித்துள்ளது. அடிப்படை தேவைகளை பெறுவதற்கு உறுதியற்ற தன்மை நிலவுகிறது. இது குடும்பத்தின் திறனை பலவீனப்படுத்துகிறது.


ஊட்டச்சத்து நிலைமை (மாகாணங்களினால் பிரிக்கப்படாத தகவல்)


தற்போதைய போர் தொடங்குவதற்கு முன்பு, காஸாவிற்குள் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் குறைவாக இருந்தது.  2021 இல் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உலகளாவிய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு (GAM) 0.8% இருந்தது. நாம் அறிந்த வரையில், 7 அக்டோபர் 2023 முதல் காசா பகுதிக்குள் மானுடவியல் தரவு சேகரிப்பு இல்லை. எனவே இந்த அறிக்கையை தொகுக்கும் நேரத்தில் மக்களின் ஊட்டச்சத்து நிலைமை குறித்த நேரடி தரவு எதுவும் கிடைக்கவில்லை.  


ஊட்டச்சத்து குறைபாடு தனியாகவோ அல்லது நோய்த்தொற்றுகள் அல்லது நாட்பட்ட நோய்களுடன் இணைந்து போதிய உணவு உட்கொள்ளல் காரணமாக ஏற்படலாம். நோய் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்கும் பொது சுகாதார அமைப்பின் திறன், தற்போதைய காலகட்டத்திலும், ஆபத்துக்காகப் பயன்படுத்தப்படும் கணிப்புக் காலத்திலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் பரவலை மதிப்பிடுவதில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணியாகும். உணவுப் பாதுகாப்பு நிலைமை குறித்த சான்றுகள் மேலே விவரிக்கப்பட்டுள்ளன.  ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தின் மற்ற இரண்டு முக்கிய இயக்கிகளான உடல்நலம் மற்றும் வாஷ் பற்றிய கிடைக்கக்கூடிய ஆதாரங்களை கீழே தொகுத்துள்ளோம்.


சுகாதார நிலை மற்றும் சுகாதார சேவைகள்


மோதலின் போது காஸா பகுதியில் உள்ள சுகாதார அமைப்பு தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 7 அக்டோபர் 2023 முதல் நவம்பர் 28, 2023 வரை, உலக சுகாதார அமைப்பு (WHO) மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்புக்காவல் ஆகியவற்றில் 203 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது.  எல்லையற்ற மருத்துவர்கள் (MSF) அதன் சுகாதார வசதிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளதை அறிவித்துள்ளது. 18 நவம்பர் 2023 அன்று அதன் பாதுகாப்பு வாகனம் மீது ஒரு பயங்கரமான தாக்குதல் நடந்துள்ளது. 21 நவம்பர் 2023 அன்று அல்-அவ்தா மருத்துவமனையில் நடந்த வான்வழித் தாக்குதலில் அதன் இரண்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் 12 டிசம்பர் 2023 அன்று துப்பாக்கிச் சூட்டில் அறுவை சிகிச்சை நிபுணருக்கு காயம் ஏற்பட்டது. 7 டிசம்பர் 2023 அன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் 7 அக்டோபர் 2023 முதல் சுகாதார சேவைகள் மீது குறைந்தது 364 தாக்குதல்கள் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக  குறைந்தது 553 இறப்புகள் மற்றும் 50 சுகாதார வசதிகள் மற்றும் 190 ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.


UNRWA தனது 22 சுகாதார மையங்களில் தற்போது எட்டு மட்டுமே செயல்படுவதாக தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணங்களில் UNRWA சுகாதார மையங்கள் எதுவும் செயல்படவில்லை. 17 டிசம்பர் 2023 அன்று, WHO இன் நிர்வாக இயக்குநர், வடக்கு மாகாணங்களில் கடைசியாக எஞ்சியிருக்கும் சுகாதார வசதிகளில் ஒன்றான கமல் அத்வான் மருத்துவமனை பல நாட்களாகத் தாக்கப்பட்டதாக அறிவித்தார். இந்த தாக்குதலினால் எட்டு நோயாளிகள் மரணமடைந்தார்கள். மக்கள்தொகையின் தற்போதைய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சுகாதார அமைப்பின் திறன் கடுமையாக சீரழிந்துள்ளன.



இதிலும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களை UNFPA அமைப்பு வழங்குகிறது. அவற்றைப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன.












பாலஸ்தீன கர்ப்பிணி பெண்களின் நிலைமைகள் பற்றிய UNFPA அறிக்கை


அறிமுகம்


UNFPA (United Nations sexual and reproductive health agency) என்பது ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் சுகாதார நிறுவனம் ஆகும். 


தற்காலத்தில் மக்கள் கர்ப்பமடைவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையை மாற்ற வேண்டும். ஆகவேதான் ஒவ்வொரு கர்ப்பமும் விரும்பப்படக்கூடியதாகவும், ஒவ்வொரு பிரசவமும் பாதுகாப்பானதாகவும் மற்றும் ஒவ்வொரு இளைஞனின் திறனையும் பூர்த்தி செய்யும் உலகத்தை வழங்குவதே இவர்களின் நோக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.


மேலும் இவர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் உடல்கள் மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழியை காட்டுகிறார்கள். இவர்கள் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து பரந்த அளவிலான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குகிறார்கள்.


 2030க்குள் குடும்பக் கட்டுப்பாடு, தடுக்கக்கூடிய தாய்வழி இறப்பு, பாலின அடிப்படையிலான வன்முறை, குழந்தைத் திருமணம் மற்றும் பெண் பிறப்புறுப்பைச் சிதைப்பது உள்ளிட்ட தீங்கான நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதே இவர்களின் குறிக்கோள் ஆகும்.


ஃபாலஸ்தீனத்தைப் பற்றி UNFPA அறிக்கை


UNFPA நிர்வாக இயக்குநர் டாக்டர் நடாலியா கனெம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்குக் தெரிவித்த கருத்தாவது :


"உயிர்களைக் காப்பாற்றவும், மனித துன்பங்களைத் தடுக்கவும் காசாவில் கூடுதல் உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. மனிதாபிமானப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வித தடையில்லாமல் அணுகுவது மிகவும் அவசியமாக உள்ளன. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான பொருட்கள் உட்பட நிறைய பொருட்கள் அங்கு தேவையாக உள்ளது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வா சாவா என்ற பிரச்சினையாகும்."


காசாவின், 540,000 மக்களில் நான்கில் ஒருவர் பருவ வயதுடைய பெண்களாவர். அடுத்த 30 நாட்களுக்குள் (இது நவம்பர் 29ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கை) 5,500 பெண்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. அவர்கள் தங்களது பிரசவ காலத்தை நெருங்கிவிட்டனர். இதன் விளைவாக இனிவரும் ஒவ்வொரு நாளும் 180 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  இவர்களில் 840 பெண்கள் கர்ப்பம் அல்லது பிறப்பு தொடர்பான சிக்கல்களை அனுபவிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 


மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் நிரம்பி வழியும் அபாயமுள்ளது. மேலும் அத்தியாவசிய எரிபொருள், மருந்துகள் மற்றும் அடிப்படை பொருட்கள் இல்லாததால், பலர் தங்களது பிரசவத்தில் பாதுகாப்பை இழப்பார்கள். ஆபத்தான பிரசவத்தை சந்திப்பார்கள்.


UNFPA ஆனது உயிர் காக்கும் இனப்பெருக்க சுகாதார பொருட்களை காசாவிற்குள் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறது. இதுவரை அறுவை சிகிச்சைப் பிரிவின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உட்பட, அவசரகால மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்புக்கான மருந்துகள், உபகரணங்கள், இன்னபிறபொருட்கள் அடங்கிய இனப்பெருக்க சுகாதார கருவிகளை ஐந்து வாகனங்களில் வைத்து வழங்கியுள்ளது.  


UNFPA ஆனது பிறப்புகளுக்கான சுகாதாரமான நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுத்தமான பிரசவ கருவிகளை விநியோகிக்கிறது. அவை எங்கு தேவைப்பட்டாலும் இதுபோன்ற கருவிகளை வழங்கும். அதே போல் சமீபத்தில் காசாவில் பிரசவித்த பெண்களுக்கான கருவிகளையும் விநியோகித்திருக்கிறது.


காசாவில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையின் அபாயம் அதிவேகமாக அதிகரித்துள்ளது.


வன்முறை பரவி வரும் காசாவின் மேற்குக் கரையில், சுமார் 73,000 பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். அடுத்த மாதத்தில் 8,100 க்கும் அதிகமானோருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேற்குக் கரையில் உள்ள சுகாதார அமைச்சகம் பிரசவம் பார்க்கும் பெண்களை மருத்துவமனைகளில் இருந்து UNFPA ஆல் ஆதரிக்கப்படும் பாதுகாப்பான தாய்மை அவசர மையங்களுக்கு கொண்டுவந்து மீண்டும் பணியமர்த்தியுள்ளது. இது ஒவ்வொரு சமூகத்திலும் மருத்துவச்சிகள் அணுகப்படுவதை உறுதி செய்கிறது.  அதே நேரத்தில் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க இனப்பெருக்க சுகாதார கருவிகள் சுகாதார அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளன.


UNFPA ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் நடக்கும் வன்முறைகளை கண்டிக்கிறது. மேலும் முழு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கான ஐ.நா பொதுச்செயலாளரின் அழைப்பை வழிமொழிகிறது. 


காசாவில் உள்ள 50,000 கர்ப்பிணி பெண்கள் சுகாதார சேவைகளை அணுக முடியாத நிலையில் உள்ளனர். சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை பின்பற்ற அனைத்து நாடுகளையும் UNFPA வலியுறுத்துகிறது.


காஸாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு தேவை உள்ளது. அவற்றை உடனே நிவர்த்தி செய்வது அவசியம்.


அவர்களுக்கான நீர் மற்றும் கலோரி உட்கொள்ளல் தேவைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே நாம் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்!


காசா மருத்துவமனையின் நிலைமைகள்


“எங்கள் மருத்துவமனையில் பணி நிலைமைகள் பேரழிவு தரக்கூடியவையாக உள்ளது. எங்களிடம் அடிப்படை தேவைகளுக்கான உபகரணங்கள் இல்லை. நாங்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடுகிறோம்.” என்று காசாவின் மிகப்பெரிய மருத்துவ வசதி காெண்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவச்சி யாஸ்மின் அகமது கூறினார்.

தற்போது அதிகரித்துவரும் இஸ்ரேலின் மனித விரோத போக்கிற்குப் பிறகு, காஸாவில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. எரிபொருள், மருந்து மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள் தீயில் சிக்கியதால், காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வது கூட ஆபத்தானதாக உள்ளது.

அக்டோபர் 7 முதல் சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மீது 235க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், காசாவின் 35 மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகளும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சுகாதார கிளினிக்குகளும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள செயல்பாட்டு வசதிகள் அவற்றின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களைக் கொண்டுள்ளன.

ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு எரிபொருள் இல்லாததால், நவம்பர் 8 ஆம் தேதி காசா நகரத்தில் உள்ள அல் குட்ஸ் மருத்துவமனை முக்கிய சேவைகளை நிறுத்தியது. மேலும் வடக்கு காசாவில் உள்ள மகப்பேறு சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமான அல் அவ்தா மருத்துவமனை உடனடி மூடல் குறித்து எச்சரித்தது.


ஒரு கர்ப்பிணி பெண்ணின் குமுறல்


செபா ஃபயாஸ் அபூ ஸலமி என்ற 28 வயதான கர்ப்பிணிப் பெண் கூறியிருப்பதாவது : 


எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு 9 வயதும் மற்றொரு குழந்தைக்கு 2 வயதும் ஆகிறது. தற்போது நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன். தற்போதைய மோசமான சூழலில் கர்ப்பிணியாக இருப்பது மிகவும் பாதிப்பாக உள்ளது. எனது இரண்டு குழந்தைகளும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 


இங்குள்ள குளியலறையை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் அவைகள் மிகவும் மோசமான நிலையில் அருவருப்பாக உள்ளது. மேலும் இங்கு தண்ணீரும் இல்லை.


நாங்கள் போருக்கு முன்பு நன்றாக வாழ்ந்தோம். தற்போது மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். நான் எப்படி குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன் என்றே தெரியவில்லை? எனது சிறிய குழந்தைகளுக்கு நான் எவ்வாறு ஆறுதல் கூறுவேன்?. இங்கு என்னோடு யார் இருக்கிறார்கள்? எனது குழந்தைகளை பராமரிப்பதற்கு யாரும் இல்லை. 


எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதுவும் இல்லை. எந்த அடிப்படையான விஷயமும் இல்லை. அந்த குழந்தையை வைப்பதற்கு போர்வைகள் இல்லை. துடைப்பதற்கு துணிகள் இல்லை. மருத்துவ உபகரணங்கள் இல்லை. எதுவும் இல்லை. 


என் வயிற்றிலுள்ள குழந்தை இறக்கக்கூடும். நிச்சயமாக அது இறக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் அனைவரும் இறக்கத்தான் போகிறோம். உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல. இங்கு எதுவுமே இல்லை. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். நிச்சயமாக நாங்கள் இறக்கத்தான் போகிறோம்.


கருச்சிதைவு சம்பவம்


மற்றொரு கர்ப்பிணிப் பெண் கூறுகிறாள். நாங்கள் போர் நடந்த இடத்தில் வசித்தோம். அப்போது நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தேன். குண்டுவெடிப்பில் எனது வீடு தரைமட்டமாகியது. நான் கடுமையான அச்சத்திற்கு ஆளானேன். அப்போது அவசரம் அவசரமாக கிழே இறங்கி ஒடினேன். நான் வெகு நேரம் ஓடினேன். பயந்துகொண்டே ஓடினேன். அதன் பிறகு நான் மருத்துமனைக்கு சென்றேன். ஏனெனில் நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். நான் எதுவும் சாப்பிடவில்லை. 


அப்போது மருத்துவர் என்னிடம் கருவுக்கு நாடித்துடிப்பு இல்லை. கரு இறந்துவிட்டது என்று கூறினார். மேலும் கருப்பையை உடனே அகற்றுவது அவசியம் என்றும் கூறினார். நான் கருப்பையை அகற்றுவதற்கு மிகவும் பயந்தேன். என் முழு உடலும் பயந்தது. அவர்கள் கருவை வெளியே எடுத்தார்கள். 


குறைபிரசவங்கள் அதிகரிப்பு

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் ‘பிறக்கும் குழந்தை பராமரிப்பு’ வார்டுகளின் தலைவரான டாக்டர். நாசர் ஃபுவாத் புல்புல் கூறினார் : “மக்களின் வீடுகளில் குண்டுவீச்சு மூலம் குறைப்பிரசவங்கள் அதிகரிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். தாய் இறந்து கிடக்கும் போது நாங்கள் முன்கூட்டியே பிரசவம் செய்ய வேண்டியிருந்தது.

"மேலும் போருக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் பலர் அனாதைகளாக உள்ளனர்"

மகப்பேறு வார்டுகள் அதிகரிப்பு

26 வயதான சோண்டோஸ், வெடிவிபத்தில் சிக்கியபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இடிபாடுகளில் இருந்து இழுக்கப்பட்ட அவர், காஸாவின் அல்-ஹிலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஒரு புற்றுநோய்க்கான வார்டு மகப்பேறு வார்டாக மாற்றப்பட்டது.

“எனது கால் எலும்புகள் நொறுங்கிப் போனதால் என் கால்களுக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்ஞிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே நான் அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டேன். இறைவனைக்கு நன்றி. அதன் பிறகு, நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். ஆனால் அதே நாளில் என்னுடைய சகோதரியான ஹபீபா குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டாள். ஆகவே நான் எனது குழந்தைக்கு ஹபீபா என்று பெயரிட்டேன்.”என்று அவர் UNFPAவிடம் கூறினார். இதைக் கூறும் நேரத்தில், தீவிர சிகிச்சையில் இருந்த தனது குழந்தையை சோண்டோஸ் இன்னும் பார்க்கவில்லை.

கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றிப் பேசுகையில், அரபு நாடுகளுக்கான UNFPA பிராந்திய இயக்குநர் லைலா பேக்கர் கூறுகையில் :

“அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு கர்ப்பிணி பெண்ணிடம் கூறியதாவது : 'என்னிடம் மயக்க மருந்து இல்லை. எனக்கு தண்ணீர் இல்லை. என் கைகளைக் கழுவ சோப்பு இல்லை. எதுவும் இல்லை.  ஆனால் நான் முயற்சி செய்து உன் உயிரைக் காப்பாற்றப் போகிறேன்.”

"அவள் உயிர் பிழைத்தாலும், அவளுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள்" என்று திருமதி பேக்கர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுவதாவது :“அதிக நெரிசல் மிகுந்த மையங்களிலும், சுகாதாரம் மிகக் குறைவாக இருக்கும் இளம் பெண்களையும் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நாங்கள் பணிபுரியும் ஒரு மையத்தில், ஆயிரம் பேருக்கு ஒரு குளியலறை வசதிதான் உள்ளது.



கவலைக்கிடமாகும் காசா பெண்களின் நிலைமைகள் - ஐநாவின் அறிக்கைகள்


ஐநா சிறப்பு நடைமுறைகள் நிபுணர்களின் அறிக்கை


14 டிசம்பர் 2023


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் இஸ்ரேல்: பெண்களும் சிறுமிகளும் தீவிரமான வன்முறை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் அவர்களின் எதிர்காலம் அவர்களின் கண்களுக்கு முன்பாக அழிக்கப்படுவதைக் காண்கிறது.


இடைவிடாத போர், இழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்திலும் இஸ்ரேலிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிரமான வன்முறை, சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். நிரந்தர போர் நிறுத்தம், கட்டாய இடப்பெயர்வை நிறுத்துதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க உடனடி போதுமான மனிதாபிமான தலையீட்டிற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும் இஸ்ரேலிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இந்த மோதலின் சோகமான விளைவுகள் தலைமுறை தலைமுறையாக பெண்கள் மற்றும் சிறுமிகளால் விகிதாசாரமின்றி சுமக்கப்படும்.


7 அக்டோபர் 2023 முதல், காசா மீது இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சு கிட்டத்தட்ட 12,000 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 2,784 பெண்கள் விதவைகளாகவும் புதிய குடும்பத் தலைவர்களாகவும் மாறியுள்ளனர். மொத்தத்தில், 11 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உணவு, தங்குமிடம், தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் மின்சார விநியோகங்களில் குறுக்கீடு ஆகியவை இந்த முக்கியமான சேவைகளுக்கான அணுகலை கிட்டத்தட்ட அழித்துவிட்டன. நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மனிதாபிமான செயல்பாட்டாளர்களுக்கும் சுகாதாரம் உட்பட போதுமான ஆதரவை வழங்குவதற்கு உடனடி அணுகல் வழங்கப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.


மோதலினால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியத்தில் ஏற்படும் குறைபாடுகளைக் குறித்த எங்கள் கவலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பை மீறி, தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவையைப் பெறுவதற்காக கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து போராடி வருவதைப் பற்றி நாங்கள் கவலையடைகிறோம். கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற குறைபாடுகள் உள்ளவர்கள் - தொற்றக்கூடிய நோய்களாலும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இறப்பு ஆகியவற்றினாலும் அதிக ஆபத்தில் உள்ளனர். இவை அனைத்தும் காசா குடிமக்களின் உள்கட்டமைப்பு வீழ்ச்சியடைவதால் இன்னும் அதிகரிப்பதற்கு சாத்தியமுள்ளது.


திருமணம் ஆகாக பெணகளும் திருமணம் ஆன பெண்களுன் பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உள்ளனர். வயது முதிர்ந்த பெண்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்கள் போன்றவர்கள் கற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில் வாழ்கின்றனர். வயதான பெண்கள் நாள்பட்ட நோய்களாலும், கவனிப்பில் தங்கியிருப்பதாலும், வயதானதால் ஏற்படும் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தாலும் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகள், அணுகக்கூடிய உடல் மற்றும் தகவல் உள்கட்டமைப்பு மற்றும் உதவி சாதனங்கள், மருந்துகள் மற்றும் பிற தேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றின் மொத்த முறிவு ஏற்பட்டுள்ளதால், குறைபாடுகள் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகிறது. சுதந்திரமாக வாழ்வதற்கும், கேட்கப்படுவதற்கும் அவர்களுக்கு இருந்த அனைத்து வாய்ப்பும் சிதைந்துவிட்டது.


பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை எதிர்மறையாக பாதிக்கும் வகையில் குடும்பத்தில் பாரம்பரிய பாலின பாத்திரங்கள் மற்றும் ஒரேமாதிரியான நெருக்கடிகளை வலுப்படுத்தியுள்ளது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். பெண்கள் இப்போது தங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்வதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். மேலும் எல்லா வயதினரும் பெண்களும் ஊதியமில்லாத பராமரிப்புப் பணியின் சுமையைத் தொடர்ந்து சுமக்கிறார்கள். பாதிப்புகளோடு சேர்ந்து இந்த சுமைகளும் அனைத்து வயது மற்றும் சிறுமிகளின் மன ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கிறது. அவர்களின் நீண்டகால உணர்ச்சி மற்றும் உளவியல் அதிர்ச்சியை கணிசமாக அதிகரிக்கிறது.


தீங்குகள் குறிப்பாக இளம் பெண்களை அதிகம் பாதிக்கின்றன. காசாவில் பெண்களுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால வாய்ப்புகள் குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பள்ளிக் கல்வியின் சீர்குலைவு, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் சரிவு, குடியிருப்புகள் பெருமளவில் அழிக்கப்படுவது, நெரிசலான தங்குமிடங்கள், உடல் மற்றும் சமூக கட்டமைப்புகளின் பொதுவான சீர்குலைவு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை பெண்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை அவர்களின் அனைத்து அம்சங்களிலும் பாதிக்கும். மோதலால் உயிர்கள் இழக்கப்படுகிறது. மேலும் மோதலால் அல்லது பிரிந்து / இடம்பெயர்ந்தவர்கள் அன்தைகளாக இருக்கிறார்கள். வன்முறை போன்ற தற்போதைய நெருக்கடியின் தீங்கான விளைவுகள் எதிர்கால சந்ததி பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். பாலஸ்தீனிய பெண்கள் தங்கள் எதிர்காலத்தைப் நினைத்துப் பார்த்து கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே 56 வருட இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு அவர்களின் கண்களுக்கு முன்னால் அழிக்கப்பட்ட பின்னர் அவர்களின் எதிர்காலம் பலவீனமாக உள்ளது.


மேலும் நீடித்த இடப்பெயர்வு அல்லது பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வது இந்த பல தீங்குகளை மோசமாக்கும். இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 9,51,490 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குடும்பப் பிரிவினையை அதிகளவில் எதிர்கொள்கின்றனர் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் கடத்தல் அபாயத்தில் உள்ளனர்.


இடப்பெயர்வின் மூலம் கல்வி, வருமானம், ஓய்வூதியம், குடும்ப பராமரிப்பு, ஆதரவு மற்றும் மன, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நீண்டகால எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்கங்களைத் தணிக்க, ஐ.நா.வின் உள்நாட்டு இடப்பெயர்ச்சிக்கான வழிகாட்டுதல் கோட்பாடுகள், அனைத்து சர்வதேச நடிகர்களும் இணைந்து வயதான பெண்கள், குறைபாடுகள் உள்ள பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கருத்தில் கொண்டு, உள் இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் நிலைமைகளைத் தடுக்கவும் தவிர்க்கவும் வேண்டும் என்று கூறுகிறது. இஸ்ரேல் தனது படைப் பிரயோகம் பொதுமக்களின் பாரிய இடப்பெயர்வுக்கு வழிவகுக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் தெளிவான சட்டப் பொறுப்பு உள்ளது. இந்த அடிப்படைக் கடமைகளை நிறைவேற்ற இஸ்ரேல் அரசுக்கு அழைப்பு விடுக்கிறோம்.


கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்தும் நாங்கள் கவலையுடன் இருக்கிறோம். அவர்கள் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் குடியேறியவர்களின் பாகுபாடு, துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் மற்றும் பிற தாக்குதல்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் குடும்ப ஒற்றுமை மற்றும் நடமாடும் சுதந்திரத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.  மேலும், அவர்கள் குடியேற்றவாசிகளின் வன்முறை மற்றும் தன்னிச்சையான கைது மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் தடுத்து வைக்கப்படுவதற்கான தொடர்ச்சியான ஆபத்தில் உள்ளனர். ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கும் இஸ்ரேலை, தன்னிச்சையான தடுப்புக்காவல், பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து தடுக்கவும், பெண் மனித உரிமைப் பாதுகாவலர்கள் உட்பட பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதற்கும், பொறுப்பானவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தனது கடமையை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.


இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஹமாஸ் பணயக் கைதிகளாகக் கைப்பற்றுவது குறித்தும் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். ஆகவே அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக, நிபந்தனையற்ற மற்றும் பாதுகாப்பான விடுதலையை உறுதி செய்யுமாறு ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


பெண்களும் சிறுமிகளும் மோதலின் போது, ​​பாலியல் வன்முறை உட்பட பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றில் வேரூன்றிய வன்முறையின் தனித்துவமான, அழிவுகரமான வடிவங்களை அடிக்கடி அனுபவிக்கின்றனர். போர் ஆயுதமாக திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டது. 7 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலில் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் நடத்தப்படும் பாலியல் வன்முறை பற்றிய அறிக்கைகள் அதிகரித்து வருவதையும், அன்றிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறை அச்சுறுத்தல்கள் குறித்தும் நாங்கள் பீதியடைந்துள்ளோம். இந்த அறிக்கைகள் விசாரிக்கப்பட வேண்டும், மேலும் பொறுப்பானவர்கள் ஒரு சுயாதீனமான செயல்முறை மூலம் பொறுப்புக்கூற வேண்டும்.


எவ்வாறாயினும், எந்தவொரு சர்வதேச குற்றமும் மற்றொன்றின் குற்றத்தை நியாயப்படுத்தாது என்பதை சர்வதேச சமூகத்திற்கு சந்தேகத்திற்கு இடமின்றி நினைவுபடுத்த விரும்புகிறோம். காசா மீதான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீனியர்களை பெருமளவில் இடம்பெயர்வதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி, ஆதரவு மற்றும் முழுமையான இழப்பீடுகளை உறுதி செய்வதற்கான பாரபட்சமற்ற செயல்முறைகள் மற்றும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.


நிரந்தர போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை நாங்கள் எதிரொலிக்கிறோம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் குரல்கள் வெளிப்படையாக இல்லாததை வலியுறுத்துகிறோம். பாரபட்சமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1325ஐ உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்க, மோதல் தீர்வு மற்றும் மீட்பு செயல்முறையில் பெண்களை அர்த்தமுள்ள வகையில் சேர்ப்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல.


மோதல் மற்றும் ஆக்கிரமிப்பு காலங்களில் கூட சர்வதேச மனித உரிமைகள் சட்டம் பொருந்தும் என்பதையும், போரினால் ஏற்படும் அழிவுகள் பல தலைமுறைகளாகும் என்பதையும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் பிற நடிகர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மீதான மொத்த மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரும் அனைத்து வழிகளையும் அவசரமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்யத் தவறினால் அழிவினால் நீடித்த தாக்கம் ஏற்படும்.





மேற்கூறப்பட்ட நான்கு அறிக்கைகளை இன்னுமொருமுறை படித்துப்பாருங்கள். இத்தகைய சூழலில் நாம் வாழ்வதாக கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நம்முடைய உடல் பயத்தினால் அஞ்சி நடுங்கிவிடும். அந்த அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் காஸா பகுதி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


சாப்பிடுவதற்கு உணவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. தங்குவதற்கு இடமில்லை. மருத்துவமனைகள் இல்லை. ஆம்புலன்ஸ்கள் இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. சுத்தமான கழிவறைகள் இல்லை. ஒன்றுமே இல்லை. 


எதுவுமே இல்லாமல் தங்களது உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். அத்தகைய நிலமைக்கு இஸ்ரேலிய பயங்கரவாதிகள் அவர்களை கொண்டுவந்திருக்கின்றனர்.


இந்த நிலமைகள் மாற வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். அவர்களுக்கு இறைவன் தனது உதவிகளை வழங்குவானாக. அநியாயக்காரர்களை அழிப்பானாக.

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...